• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
இதழ்:- 7



ஏதேதோ எண்ணங்களில் மூழ்கியபடி நிலவன் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் பூவினி.





.ஹே ... வினிக்கா உன் ஆளை சைட் அடிக்க கிளம்பிட்டியா??? என்று திடீரென்று காதருகில் தாரணியின் குரல் கேட்கவும் திடுக்கிட்டு திரும்பினாள் பூவினி.............



தாரணி ஒரு குறும்புச் சிரிப்புடன் நின்றிருந்தாள்.



ஏய் குரங்கு.. உனக்கு வேற வேலையே இல்லையா??



என் அருமை தமக்காய் !!!!!!! இப்போதைக்கு உன்னை கண்காணிப்பதை தவிர வேறு வேலையே இல்லை.



என் எருமை தங்கையே நீ என்னை கண்காணிப்பது இருக்கட்டும்.முதலில் உன் படிப்பையும் சற்று கண்காணியுமம்மா.என்றாள் பூவினி சற்று கடுப்புடன்.







அதையெல்லாம் தாரணி கண்டு கொள்பவளா என்ன.!!!!!

அதெல்லாம் நான் நல்லா படித்துக்கொண்டுதான் இருக்கேன்.என்று உதட்டை சுளித்தவள்.

ஹே .. என்ன வினிக்கா நீ இவ்ளோ அழகா சும்மா தேவதை மாதிரி இருக்கிற என்னைப் பார்த்து எருமைன்னு சொல்லுற??? என்றாள் குறும்பாக.



இதோடா .....இந்த விடயம் தேவதைக்கு தெரியுமா??? தெரிஞ்சா பாவம் தற்கொலை பண்ணிக்க போகுது.



போ வினிக்கா நா உன்னை விட அழகா இருக்கேன் என்று உனக்கு பொறாமை.



ஆமாமா.... பொறாமை பட்டுட்டாலும்.... என்று சிரித்தாள் பூவினி.



என்னதான் சரிக்குசரி தாரணியுடன் வாயடித்தாலும் என் தங்கை அழகு தான் என்று மனதுக்குள் மகிழ்ந்தாள் பூவினி.



தாரணி அழகு தான்.அவளின் சின்ன இதழ்களும் யாருடன் என்றாலும் சரிக்கு சரி வாயடிக்கும் பேச்சும்.பளீர் சிரிப்பும் யாரையும் சட்டென வசீகரித்து விடும்.



இருவரும் பேசியபடியே நடந்த போது திடீரென்று தாரணி கேட்டாள். எப்போ வினிக்கா நீ உன்னோட லவ்ஸ் ஐ அத்தானிடம் சொல்லப் போகிறாய்.இப்படியே சும்மா சைட் அடிச்சுட்டே இருக்க போகிறாயா??



ஏய் குரங்கு.. ஏண்டி உனக்கு இந்த தேவையில்லாத கேள்வி???



ஹலோ எது தேவை இல்லாத கேள்வி??? இவங்க காதலிப்பாங்களாம் பார்வையாலையே ஆளை விழுங்குவாங்களாம்.ஆனா தன்னோட காதலை மட்டும் சொல்ல மாட்டாங்களாம்.அதை பற்றி நாங்க கேட்டா மட்டும் எங்களை திட்டுவாங்களாம். இல்ல தெரியாமல் தான் கேட்கிறேன் இது எந்த ஊரு நியாயம் ஹா ?? என்றாள் முறைப்புடன் தாரணி.



ஏய் தரு எதுக்குடி இப்போ என் கூட சண்டை போடுற?? நான் அத்தான காதலிக்கிறேன் தான்.ஆனா அதற்காக அதை அவரிடம் சொல்லித் தான் ஆகவேண்டும் என்று இல்லையே.என் காதல் உண்மையா இருந்தா அது நான் சொல்லாமலே அவருக்கு புரியும்.சின்ன வயசில் இருந்தே என் மனசில என்ன நினைக்கிறேன் என்று அத்தான் என் கண்களைப்பார்த்தே கண்டுபிடிச்சுடுவார். பார்க்கலாம் என் காதலையும் நான் சொல்லாமலே கண்டு பிடிக்கிறாரா என்று.



ஹ்ம்ம்... இது தேறாத கேஸ்.சைட் அடிச்சோமா.காதல சொன்னோமா ....... திருட்டுத்தனமா நாலு கிஸ் அடிச்சோமா............. என்று மேலும் ஏதோ சொல்ல போன தாரணியின் வாயை பொத்திய பூவினி



ஏய் குரங்கு என்ன பேச்சு பேசுற நீ. கொஞ்சமாவது வயசுக்கு ஏத்த மாதிரி பேசுடி.ஒரு தங்கை அக்காவிடம் பேசுற மாதிரியா பேசுற.என்று திட்டி தீர்த்தாள்.



தாரணிக்கும் தன் பேச்சு சற்று அதிகப்படி என்று தோன்றியதோ என்னவோ அதற்கு மேல் எதுவும் பேசாது மௌனமாக நடந்தாள்.



இருவரும் நிலவன் வீட்டை நெருங்கும் போது வாசலிலேயே தமிழ் அமர்ந்து கையில் இருந்த குலோப் ஜாமுனை காலி செய்து கொண்டிருந்தாள்.அவள் அருகிலேயே புஜ்ஜியும் தன்னுடைய சிவந்த நாக்கை சப்புக்கொட்டியபடி அதன் அருகில் ஒரு சிறிய தட்டில் இருந்த குலோப்ஜாமூனை சுவைத்துக் கொண்டு இருந்தது.



இவளைக் கண்டதும் ஹாய் ... வினிக்கா என்று உற்சாக குரல் எழுப்பிய தமிழ் இவள் பின்னால் நுழைந்த தாரணியைக் கண்டதும் அய்யய்யோ ......... என் வில்லி... என்று அலறிய படியே வீட்டினுள் எடுத்தாள் ஓட்டம்.அதைக்கண்ட தாரணி விடுவாளா என்ன ஏய் குண்டூஸ் நில்லுடி... என்ற படி அவளை துரத்தியபடியே உள்ளே ஓடினாள்.



அவர்கள் இருவருக்குள்ளும் இது ஒரு விளையாட்டு யாராவது ஒருவர் ஏதாவது உண்டு கொண்டிருக்கும் போது அடுத்தவர் கண்டு விட்டால் சரி உடனே ஓடிச்சென்று அவ் உணவைப் பறித்து ஒருவாய் வைக்காமல் விட மாட்டார்கள். அது சோறு என்றாலும் சரி தான்.பனிக்கூழ் (ஐஸ்கிரீம்) என்றாலும் சரி தான்.அந்த ஒருவாயை எடுக்க விடாமல் அடுத்தவர் கொண்டு ஓடுவதும் மற்றவர் துரத்தி பறிப்பதும் அவர்கள் இருவருக்குள்ளும் எப்போதும் நடப்பது தான். அந்த விளையாட்டில் இருவருக்குள்ளும் ஓர் அன்னியோன்னியம் பாசம் இருக்கும்.அந்த ஒருவாயை ஒருத்தி எடுக்கும் வரை தான் இந்த ஓட்டம்.அதன் பிறகு இரண்டும் ஒரு மெத்திருக்கையில் அருகருகே அமர்ந்து ஒரு தட்டிலேயே ஒன்றாக உண்ணுவார்கள்.





அவர்கள் இருவரையும் பார்த்து முறுவலித்தபடியே படியேறியவள் அப்போது தான் புஜ்ஜியை கவனித்தாள். வெகு மும்முரமாக குலாப்ஜாமூனை சுவைத்துக்கொண்டிருந்த புஜ்ஜியும் அப்போது அசைவை உணர்ந்து தலை நிமிர்த்திப் பார்த்தது. தமிழும் தாரணியும் நிலம் அதிர அதை உரசிக்கொண்டு ஓடும் போது கூட சற்றும் அசராது குலாப்ஜாமூனை சுவைத்துக் கொண்டிருந்த புஜ்ஜி பூவினியை கண்ட மறுகணம் விழிகளை உருட்டி அவளை நன்றாக ஒருகணம் பார்த்தது அவ்வளவு தான் மறுகணம் அது அங்கே இருந்தால் தானே.



புஜ்ஜி என்பது ஒரு பூனை.வெள்ளை நிறத்தில் அடர்த்தியான ரோமங்களுடன் புஸ் புஸ் என்றிருக்கும். அதைக்கண்டாலே பூவினிக்கு அப்படி ஒரு ஆசை.அதை கையில் தூக்கினால் அதை அணைத்து முத்தமிட்டே ஒரு வழியாக்கி விடுவாள்.இவள் கையை விட்டு அதை இறக்கவே மாட்டாள்.அப்படிப்பட்டவளிடம் சிக்கி இம்சைப்பட அது முட்டாள் பூனையா என்ன??



தன்னைக்கண்டதும் தலை தெறிக்க ஓடும் புஜ்ஜியை கண்டதும் இவளுக்கு சிரிப்புத்தான் வந்தது.கூடவே அதை துரத்தி பிடிக்கும் ஆசையும் தோன்ற அதை துரத்திக் கொண்டே அதன் பின்னால் ஓடினாள்.



அப்போது தான் தன்னை இடித்து விட்டு ஓடும் தமிழையும் தாரணியையும் கண்டு செல்ல முறைப்புடன் ஒதுங்கி வந்த சாந்தாவின் கால்களை உரசிக்கொண்டு புஜ்ஜி ஓட அதை துரத்திக்கொண்டு தன்னை மோதுவது போல வந்த பூவினியை கண்டு திடுக்கிட்டு விலகியவர்.



ஒரு விரிந்த முறுவலுடன் ஏய் இன்னைக்கு உங்களுக்கு எல்லாம் என்னதான் ஆச்சு??? கார்டூன் சானல்ல வாறதுகள் மாதிரி அங்கேயும் இங்கேயும் ஓடிட்டே இருக்கீங்கள். பாவம் வினிம்மா புஜ்ஜி அதை எதுக்கு இந்த விரட்டு விரட்டுறாய்.





யாரு இதா அத்தை பாவம்.இது என்ன பண்ணிச்சு தெரியுமா?? நான் வரும் போது வாசல்கிட்ட உட்கார்ந்து குலாப்ஜாமூன் சாப்பிட்டு இருந்திச்சு. பேசாம சாப்பிட வேண்டியது தான?? என்னை கண்டதும் சாப்பிட்ட குலாப்ஜாமூனையும் விட்டுட்டு தலை தெறிக்க ஓடுது அத்தை.என்ன பாத்தா என்ன அவ்ளோ மோசமாவா இருக்கு??



பூவினியின் பேச்சை கேட்டு கலகலவென சிரித்த சாந்தா பின்னே நீ அதைப்படுத்துற பாட்டுக்கு அது உன்னைக் கண்டு ஓடாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.என்றார்.



போங்கத்தை நான் அதை என்ன அடிகிறனா? எவ்ளோ ஆசையா தூக்கி அணைத்து முத்தம் தான கொடுக்கிறேன். அது என்னவோ வில்லனை கண்ட கதாநாயகி மாதிரி இந்த ஓட்டம் ஓடுது.இன்னைக்கு என்ன நடந்தாலும் சரி இந்த புஜ்ஜியை தூக்கி முத்தம் கொடுக்காமல் விடவே மாட்டேன்.என்றவள் மீண்டும் புஜ்ஜியை துரத்திக்கொண்டு ஓடினாள்.
 

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
அவளின் குறும்புத்தனமான பேச்சையும் விளையாட்டையும் ரசித்த முறுவலுடன் சமையலறை நோக்கி சென்றார் சாந்தா.





புஜ்ஜி மாடியேறி நிலவனின் அறைக்குள் புகுந்தது. கூடவே தானும் புகுந்த பூவினி ஹேய்ய்...... புஜ்ஜிக்கண்ணா இங்க உன்னைக் காப்பாத்த இப்போ யாருமே இல்ல. நீ வசமா என்கிட்ட மாட்டிக்கிட்டடா. இப்போ நீயா வாரியா?? இல்ல நான் அங்க வரட்டுமா?? நீயாவே வந்தின்னா உனக்கு நல்லது. ஹ ஹ ஹ... என்று வில்லத்தனமாக வசனம் பேசிக்கொண்டு புஜ்ஜியை நெருங்கினாள்.





அது மேலும் பதுங்கிப் பதுங்கி பின்னடைய ஏய் .... இப்போ வரப் போறியா இல்லையா...... என்றபடி அதை பிடிக்க ஓர் எட்டு வைத்தவள்.குளியலறைக் கதவு திறக்கும் ஒலியில் திடுக்கிட்டு திரும்பினாள்.



தலைவலி என்று அன்று சற்று சீக்கிரமே வீடு வந்திருந்த நிலவன் குளித்துவிட்டு ஒரு துவாலையுடன் வெளியே வந்தவன். சத்தியமாக பூவினியை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பது அவனின் அதிர்ந்த முகத்திலேயே தெரிந்தது.



பூவினியும் அதிர்ந்து விட்டாள்.நிலவன் இன்னும் வீடு வந்திருக்க மாட்டான் என்ற எண்ணத்தில் தான் துணிந்து அவன் அறைக்குள் இவள் நுழைந்ததே.இப்போது திடீரென்று அதுவும் இப்படி ஒரு கோலத்தில் அவன் வந்து நிற்கவும் அவள் இதயம் ஒருகணம் உறைந்தது.



சும்மா சாதாரண தோற்றத்தில் அவனைக் கண்டாலே ஒருவாரத்திற்கு அவளால் எதுவும் செய்ய முடியாது.இப்போது இப்படி ஒரு கோலத்தில் குளித்துவிட்டு உடலில் நீர் முத்துக்கள் அங்கங்கே பதிந்திருக்க வெற்று மார்புடன்..... கடவுளே அவளுக்கு மூச்செடுக்க கூட சிரமமாக இருக்க முகம் முழுவதும் சிவந்துவிட சட்டென வெளியே ஓடி விட்டாள்.



தன்னை துரத்தி வந்தவள் இப்போது தானே எதுக்கு தலைதெறிக்க ஓடுகிறாள் என்று புஜ்ஜி எண்ணியதோ?? நிலவனை நிமிர்ந்து நோக்கி மியாவ் ... என்றது.அதன் சத்தத்தில் அப்போது தான் சுயவுணர்வு பெற்ற நிலவனின் இதழ்களில் சட்டென ஒரு குறும்பு புன்னகை தவழ உடைமாற்றும் அறை நோக்கி நடந்தான்.



மேலே புஜ்ஜியை துரத்திக்கொண்டு என்ன வேகத்தில் ஓடினாளோ அதைவிட இருமடங்கு வேகத்தில் கீழே இறங்கிய பூவினியை ஆச்சரியத்துடன் பார்த்தாள் தாரணி.அவள் முகத்தில் இருந்த சிவப்பும் பதட்டமும் தாரணியின் பார்வையில் இருந்து தப்பவில்லை



கீழே வந்த பூவினிக்கு இன்னும் இயல்பு நிலைக்கு வர முடியவில்லை.அதைவிட தன்னையே ஒரு ஆராய்ச்சி பார்வையுடன் நோக்கிக் கொண்டிருக்கும் தாரணியை எதிர்கொள்ள முடியாமல் பாட்டியின் அறைக்கு சென்றாள்.அங்கே பாட்டி ஓய்வெடுத்துக் கொண்டிருக்க அவளுக்கு வேண்டிய தனிமை கிடைக்க ஓர் இருக்கையில் அப்பாடா என்று அமர்ந்தவள் தன்னை சமன் படுத்திக் கொள்ள முயன்றாள்.



அவள் நிச்சயமாக நிலவன் வீட்டில் நிற்பான் என எதிர்பார்க்கவில்லை. தெரிந்திருந்தால் நிச்சயம் அவன் அறைக்குள் நுழைந்திருக்கவே மாட்டாள்.ச்சே...... எல்லாம் இந்த புஜ்ஜியால் வந்தது. கடவுளே..... இனி எப்படி அத்தானின் முகத்தை பார்ப்பது.... என்று ஒரு மனம் என்னென்னவோ எண்ணினாலும் இன்னொரு மனம் அவனின் கம்பீரத்தை ரகசியமாக ரசிக்காமலும் இல்லை.





ஒருவழியாக இயல்பு நிலைக்கு திரும்பியவள் அவன் கீழே வருவதற்குள் வீட்டிற்கு சென்றுவிடலாம் என்று எண்ணி கூடத்திற்கு வரும் பொழுது சரியாக நிலவனும் மாடியில் இருந்து இறங்கி கொண்டிருந்தான்.வேறு வழியின்றி அவனை நிமிர்ந்து நோக்கி புன்னகைத்தவளால் அவன் முகத்தை பார்க்க முடியவில்லை.தானாகவே முகம் சிவந்தது.அவள் நிலை நிலவனுக்கும் புரிந்ததோ.கண்களில் தோன்றிய விஷமச் சிரிப்பு உதட்டை எட்டாமல் தடுத்தவன் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு எதுவுமே நடக்காதது போல



எங்கே பூவினி மேடம் உங்களைப் பார்க்கவே முடியவில்லை என்றான்.

அவன் இயல்பாக பேசவும் பூவினியின் தயக்கமும் சற்று மறைந்தது.அவளும் இயல்பாகவே பேச முயன்றாள்.





நான் அப்பப்போ தாத்தா பாட்டியை பார்க்க இங்கே வந்துகொண்டு தான் இருக்கேன்.உங்களைத்தான் காணோம்.



நான் தொழிற்சாலைக்கு போகும் நேரம் பார்த்து நீ வந்தால் நான் என்ன செய்வதாம் என அவன் கேட்கவும் பூவினிக்கு திக் என்றது இவன் தான் அவனைப் பார்ப்பதை தவிர்ப்பதை தெரிந்து தான் கேட்கின்றானா என்று..



அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அத்தான்.கல்லூரி இறுதியாண்டு பரீட்சை நெருங்குகிறது அல்லவா அதனால் அதிகளவு நேரம் படிப்பிலேயே செலவிட வேண்டி உள்ளது.அப்பப்போ கிடைக்கும் நேரத்தில் வந்து அவர்களைப் பார்த்துவிட்டு செல்கிறேன்.



ஒ...நல்லது. எப்போ உன் பரீட்சைகள் எல்லாம் ஆரம்பிக்கிறது??



இன்னும் நான்கு மாதங்கள் இருக்கிறது.



ஒ ...

அதுசரி முன்னே எல்லாம் நிறைய சந்தேகங்கள் வந்து கேட்பாய். இப்போ உனக்கு பாடத்தில் சந்தேகம் எல்லாம் வருவதில்லையா?? அல்லது இப்போது சந்தேகமே இல்லாமல் படிக்கும் அளவுக்கு நீ அதிபுத்திசாலி ஆகிவிட்டாயா வினி?? என்றான் கேலிக்குரலில்.



அவனை பொய்யாக முறைத்தவள்.இப்போது சந்தேகங்கள் வந்தால் நான் என் தோழிகளுடனேயே கலந்து ஆலோசித்து தீர்த்துக்கொள்கிறேன் அத்தான்.



ஒ.... பூவினி உன்னிடம் ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறது அது என்ன வினி என்றான் ஓர் குறுகுறுப்புடன்.



லேசாக அதிர்ந்தாலும் மாற்றமா?? என்னிடமா?? என்னத்தான் அது நான் எப்போதும் போல ஒரு மூக்கு ரெண்டு கண் ரெண்டு கை ரெண்டு கால் என்று அப்படியே தானே இருக்கிறேன்.இன்று காலையில் கூட கண்ணாடி பார்த்தேனே!!!!!!!!!!!! என்று குறும்பாக கூறி பேச்சை மாற்றினாள்.



அவளின் பேச்சில் நிலவனின் முகத்திலும் முறுவல் விரிந்தது.எட்டி அவள் தலையில் செல்லமாக கொட்டியவன்.



ஏய்.. ஆடுகால் நீ தோற்றத்தில் எப்பவும் போல ஆடுகால் மாதிரியே தான் டி இருக்க.நான் சொன்னது உன் இயல்பில ஏதோ ஒரு மாறுதல் தெரியுது என்று.உன் பேச்சு நடைமுறை எல்லாத்திலும் ஏதோ ஒரு வித்தியாசம் தெரியுது.



அ .. அதெல்லாம் அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே.. நான் எப்பவும் போல தான் இருக்கேன்.



பூவினி நான் உனக்கு முன்பே சொல்லியிருக்கேன்.உன்னோட கண்களைப் பார்த்தே நீ என்ன நினைக்கிறாய். உன் மனதில் என்ன குழப்பம் என்று என்னால் கண்டுபிடிக்க முடியும் என்று.அதனால் தேவை இல்லாது பொய் சொல்லாதே.



ம்க்கும்... ஆ..... ஊ.......என்றா இதை சொல்லிடுவான்.அப்படி என் கண்ணைப் பார்த்து என் மனசில இருக்கிறத தெரிஞ்சுக்க முடியும்னா ஏனாம் என் காதலை மட்டும் இன்னும் தெரிஞ்சுக்க முடியலையாம்.சும்மா இப்படி வசனம் பேசி மிரட்டியே என் வாயால் என் மனசில் இருப்பதை சொல்லவைக்கிற திட்டம்.



“கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில நெய் வடியுமாம்.” போடா டோய்.என்று மனதில் அவனை திட்டியவள்.





வெளியே கண்களை அகல விரித்து அவனை நோக்கி அப்படியா அத்தான்.என் கண்ணைப் பார்த்தே என் மனதை அறிய முடியுமா??? அப்படியென்றால் எங்கே என் கண்களைப் பார்த்து சொல்லுங்கள் பார்ப்போம் நான் என்ன நினைக்கிறேன் என்று.... என்று குறும்பாக கூறி அவனைப் பார்த்து கண்களை சிமிட்டி முறுவலித்தாள் பூவினி.



ஒரு நிமிடம் திகைத்துப் போய் பூவினியை பார்த்தான் நிலவன்.அவன் பூவினியிடம் இருந்து இப்படி ஒரு பேச்சை எதிர்பார்க்கவில்லைப் போலும். ஆனால் மறுகணமே அவன் முகம் மாறியது. முகத்தில் ஒரு மென்மை குடியேற விழிகளில் ஒரு பளபளப்புடன் அவள் அருகில் நெருங்கியவன்.சட்டென விலகினான்.தலையை அழுந்தக் கோதியவன் சொல்வதற்கு ஒரு நேரம் வரும் வினி அப்போது சொல்கிறேன்.அப்போது உனக்கு புரியும் நான் கூறியது சரியா பிழையா என்று.. என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே தாரணியும் தமிழும் வந்து சேர்ந்தனர்.



உடனே பேச்சையும் முகபாவனையையும் மாற்றி வா தாரணி.உன் படிப்பெல்லாம் எப்படிப் போகிறது என்று தாரணியிடம் வினவியவன்.மேலும் சற்று நேரம் இயல்பாக உரையாடினான்.பேச்சின் இடையே அவன் பார்வை அவ்வப்போது பூவினியை தீண்டிச் சென்றது.



பூவினி அதை கவனிக்கவில்லை.அவள் மனம் குழப்பத்தில் இருந்தது. அத்தான் என்ன சொல்ல வந்தார்.. ஒருவேளை என் மனம் உண்மையாகவே அவருக்கு புரிந்திருக்குமோ?? என் படிப்பை குழப்பக்கூடாது என்று தான் எதுவும் சொல்லாமல் இருக்கிறாரோ... என்னுடைய பரீட்சைகள் எல்லாம் முடிந்ததும் வந்து தானும் என்னை காதலிப்பதாக சொல்லுவாரோ...என்று என்னென்னவோ எண்ணங்கள் மனத்தில் ஓட அமைதியாகவே அமர்ந்திருந்தாள் பூவினி.





அன்று வீடு திரும்பும் போது தாரணி குறுகுறுவென தன்னையே பார்த்துக் கொண்டு வரவும் ஐயோடா .... இனி இவளின் அறுவைகளுக்கு வேறு பதில் சொல்ல வேண்டுமே என்று இருந்தது பூவினிக்கு.



அவள் எதிர்பார்த்தது போலவே தாரணியும் அவள் கூடவே வந்தவள் வீட்டை நெருங்கியதும் சட்டென அவள் கரத்தை பற்றி இழுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்றாள்.



மேலே சென்றதும் தான் அவள் கரத்தினை விட்டாள்.



ஏய் தரு எதுக்குடி இப்படி இழுத்துட்டு வருகிறாய்?? நான் படிக்க வேண்டும்.நாம் நாளைக்கு பேசலாம்.



ம்ஹும்... எனக்கு இப்பவே இந்த நிமிடமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.



என்ன உண்மை உனக்கு தெரியணும்..



ம்ம்ம்.. அத்தை வீட்டில மாடில உனக்கும் அத்தானுக்கும் இடையில என்ன நடந்தது????



போடி லூசு என்ன நடந்தது.. ஒண்ணுமே நடக்கல..



ஓஹோ ..ஒண்ணுமே நடக்காமல் தான் மேடம் அப்படி முகமெல்லாம் சிவக்க வேர்த்துக் கொட்ட அவ்வளவு வேகமா கீழே ஓடி வந்தீங்களா???



தாரணியின் கேள்வியில் பூவினியின் முகம் மீண்டும் லேசாக சிவந்தது.



அதைக்கண்ட தாரணி ஹேய் வினிக்கா நீங்க இப்படி வெட்கப்படுவதைப் பார்த்தால் மேலே ஏதோ பெருசா நடந்திருக்கும் போலவே... என்ன நீங்க உங்க காதலை அத்தானிடம் சொல்லிட்டீங்களா?? அதைக்கேட்ட அத்தான் உடனே நானும் உன்னை என் உயிராக காதலிக்கிறேன் கண்ணே... என்று கூறி இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கொடுத்துட்டாரா??? என்று கண்சிமிட்டி குறும்பாக வினவினாள்.



அவள் பேசிய பாணியில் பூவினிக்கு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கியபடியே தாரணியின் காதைப்பிடித்து திருகி உன் புத்தி எங்கடி போகுது. நீ நினைப்பது போல ஒண்ணுமே நடக்கல.நீ அதிகமா கற்பனை பண்ணாம ஓடிப்போய் படிக்கிற வழியைப் பார்.என்று திட்டியவள் தொடர்ந்து.



சும்மா கண்ட சினிமாவையும் பார்த்து கண்டபடி யோசிக்காம ஒழுங்கா படி தரு. வினிக்கா காதலிக்கிறாள் தானே அதனால் நாமும் காதலித்தால் என்ன என்று எண்ணிவிடாதே.என் நிலை வேறு தரு. என் காதலை பொறுத்தவரையில் எந்த பிரச்சனையும் வரப்போவதில்லை.அத்தோடு நான் அத்தானை காதலித்தாலும் என் காதலை அவரிடம் இதுவரை வெளிப்படுத்தவில்லை.வெளிப்படுத்த விரும்பவும் இல்லை. இப்போது என்னைப் பொறுத்தவரையில் படிப்பு தான் முக்கியம்.முதலில் படிப்பை நல்ல படியாக முடிக்கவேண்டும் என்று தான் நினைக்கிறேன்.

அத்தோடு இன்னொன்று தெரியுமா இப்போது நான் என்னுடைய காதலை அத்தானிடம் வெளிப்படுத்தினாலும் அத்தான் ஏற்றுக் கொள்வார் என்றா நினைக்கிறாய்??? நிச்சயமாக இல்லை படிக்கும் வயதில் என்ன சிந்தனை பூவினி லூசுத்தனமாக உளறாமல் ஒழுங்காக படிக்கும் வழியைப் பார் என்று திட்டித்தான் அனுப்புவார்.



அய்யோ வினிக்கா .............

அது எனக்கும் தெரியும். நீங்க பயப்படவே தேவை இல்லை வினிக்கா.நான் எந்த தவறும் செய்ய மாட்டேன்.எனக்கு இந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் சுத்தமா சரி வராது.எனக்கு எந்த விஷயம் என்றாலும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளனும். காதலிச்சா நிறைய பொய் சொல்லணும்.எதையும் யாரிடமும் சொல்ல முடியாது. அய்யோ நினைக்கவே எனக்கு மூச்சு முட்டுதுப்பா.நானெல்லாம் கல்யாணம் பண்ணிட்டு எனக்கு வாற என்னோட கணவனைத்தான் உரிமையோட எல்லாருக்கும் தெரிஞ்சே ஜாலியா காதலிப்பேனாக்கும்.



ரொம்ப நல்ல விஷயம்.அம்மா தாயே இப்படியே இரும்மா.இந்த கருத்தில இருந்து அணுவளவும் மாறிடாதே.என்றாள் பூவினி நிம்மதியுடன்.





நான் மாறவே மாட்டேன்.அதனால நீங்களும் என்னைப்பற்றி கவலைப்படாதீங்க சரியா. என்று கூறி முறுவலித்தாள் தாரணி.



அப்போது தாரணி உணரவில்லை ஒரு காலத்தில் தன் நெஞ்சிலும் காதல் மலரும் என்று.



ஒரு வழியாக பேச்சை மாற்றி தாரணியின் மனதை திசை திருப்பிய பூவினி. சரி வா தாரணி போகலாம் எனக்கு படிக்க வேண்டும்.நீயும் ஒழுங்காக படி.படிப்பில் ஏதாவது சந்தேகம் என்றால் என்னிடம் வந்து கேள் சொல்லிக்கொடுக்கிறேன் என்று கூறியபடியே அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.



மேலே என்ன நடந்ததுன்னு கடைசிவரை சொல்லவே இல்ல பாத்தீங்களா என்று முணுமுணுத்தாலும் மேலும் எதையும் துருவாது அவளுடன் சென்றாள் தாரணி.



அப்போது பூவினி அறியவில்லை தனக்கும் நிலவனுக்குமான பிரிவை தாங்கள் அப்போது பேசிய பேச்சு உறுதி செய்துவிட்டது என்பதை.
 
Top