ஹாய் ப்ரண்ட்ஸ்..
என் பாசத்திற்கு உரிய செல்ல நட்புகளே, தோழமைகளே, வணக்கம்.
அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
நமக்கான இந்த நாளில் நம் போட்டியின் முடிவை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
“மிட்டாய் கதைகள்-2025 (பத்து நாட்களில், பத்து அதிகாரம்)" என்ற கதைப் போட்டி வைகை தளத்தில் உற்சாகமான கொண்டாட்டத்துடன் களை கட்டியது .
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
போட்டி அறிவித்த தினத்திலிருந்து தொடர்ந்து லைக் போட்டு, கமெண்ட் எழுதி எழுத்தாளர்களை ஆதரிக்கும் அனைத்து அன்பான நட்பு உள்ளங்களுக்கும் என் உளம் கனிந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் பொன்னான நேரங்களை செலவழித்து, எங்கள் வைகை தளத்தோடு தோள் கொடுக்கும் அனைத்து வாசகத் தோழமைகளுக்கும் அன்பு நன்றிகள்.
வாசகர்களாகிய நீங்கள் தரும் உற்சாகமும், ஊக்கமும் எழுத்தாளர்களை இன்னும் சிறப்பாக எழுதும் ஆர்வத்தை கற்றுக்கொடுக்கும்.
அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய, வாசகர்கள் தாங்கள் சுவைத்த மிட்டாய் கதைகளை தங்களது ஓட்டின் மூலம் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தி விட்டனர்.
ஆகவே நமது வைகை தளம் சார்பாக சீருடனும் சிறப்புடனும் நடந்த " மிட்டாய் கதைகள் - 2025" போட்டியின் முடிவுகளை அறிவிக்கும் நேரமிது.

- முதல் பரிசு - இந்துமதி (முதல் மழை என் முதல் பிழை)
- இரண்டாம் பரிசு - ஆண்டாள் வெங்கட்ராமன் (கார்கோள் கொண்ட குமரியாள்)
- மூன்றாம் பரிசு - அதியா (கடல் தாண்டும் பறவை)
வாசகர்களாகிய உங்களுக்கும் பரிசினை அறிவிக்கும் நேரம் இது.
வாசகர்களுக்கான பரிசுகள் பற்றிய அறிவிப்பு
அனைத்து கதைகளையும் படித்து தளத்திலும், முகநூலிலும் விமர்சனங்கள் வழங்கிய வாசகர்கள் கௌரி கார்த்திகேயன் மற்றும் ஷஃப்னா ரங்கராஜன் இருவருக்கும் தலா 500 ரூபாயும், புத்தகங்களும் பரிசாக அளிக்கப்படும்.
பரிசு பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.
வைகை தளத்தின் வளர்ச்சி பாதையில் பங்கேற்ற அனைத்து வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
படைப்புகளின் நிறை குறைகளைக் கூறி, எங்களை ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
என்றும் உங்கள் ஆதரவுடன்,
வதனி.
Last edited: