• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மஞ்சள் நிலவே ,மையல் அழகியே !!!!

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
1705580502449.jpeg



அத்தியாயம் 3

தடக் தடக் தடக் என்ற நகரும் ரயிலின் ஓசை அவளின் இதயத்துடிப்பை சற்று கூட்ட மெல்ல நகர்ந்த வண்டி பின்னர் வேகமெடுக்க சகானாவின் கை விரல்கள் சற்று நடுங்க கைகளை இறுக்க மூடியபடி அந்த ஜன்னலின் வெளியே அவள் பார்வை நிலைத்திருந்தது.

அப்போது அவள் கைகளை மற்றொரு கை இறுக்க பிடிக்க வேகமாக நிமிர்ந்து பார்த்தவள் எதிரில் நிற்பவனை கண்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

“சாரி சகானா ....கடைக்காரன் இந்த தண்ணீர் பாட்டில் எடுத்து கொடுக்க லேட் பண்ணிட்டான்” என்றவன் அவளிடம் பாட்டிலை கொடுத்து விட்டு அவள் எதிரில் அமர்ந்தான் சபரீஷ்.

அவளோ சிறிய புன்னகையுடன் பரவாயில்லை என்பது போல் இமைகளை மூடி திறந்தவள் அப்போது தான் தன் கைகளை இன்னும் விடாமல் பற்றி இருக்கும் அவனது செயலில் கண்ணீர் துளிர்த்தது. இந்த பற்றுதல் இப்போது ஆரம்பித்தது அல்லவே ..... ஐந்து வருடத்திற்கு முன்பு உற்றாரும் சுற்றாரும் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க, புதிதாய் சேர்ந்திருந்த உறவோ தெரியாதவர்கள் போல் விலகி போக, திக்கு தெரியாமல் தெருவில் நின்றிருந்த நேரத்தில் பாஞ்சாலிக்கு கண்ணனாய் சகானாவின் குடும்பத்திற்கு ஆதரவாய் நின்ற ஒரே ஜீவன் இவன் தானே. இப்போது வரை அது தொடர்கிறது.

நினைவுகள் எங்கோ செல்ல அவன் முகத்தை பார்த்தபடியே அவள் அமர்ந்திருந்தாள்.

“என்ன சகானா மறுபடியும் பழைய நினைவுகளா..” என்றவன் நானும் உன்கிட்ட பலமுறை சொல்லிட்டேன். அதை ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்திடு”.... என சற்று சிடுசிடுக்க

உடனே “இல்லை சபரீஷ் ...நான் அதை எல்லாம் நினைக்கலை” என அவள் சொல்லும்போதே அவள் வார்த்தை உள்ளே செல்ல

“இங்க பாரு சகானா இப்போ நீ சாதாரண பொண்ணு இல்லை.. ஆண்கள் மட்டுமே இருக்கிற ஒரு தொழில்ல ஒரு பொண்ணு நுழைஞ்சு அதிலும் இந்த குறுகிய காலத்தில நல்ல நிலைமைக்கு வந்து அதும் தமிழ்நாட்டின் சிறந்த பெண் தொழில் முனைவோராக தேர்ந்தெடுக்க பட்டிருக்க ....சகானா சர்வீஸ் ஸ்டேஷன் திருப்பூர் நகரத்தோட சிறந்த நிறுவனமா தேர்ந்தெடுக்க பட்டிருக்கு. இதெல்லாம் உன்னோட திறமைக்கும் உழைப்புக்கும் கிடைச்ச பரிசு... அதை சந்தோஷமா அனுபவிக்கிறத விட்டுட்டு இப்படி எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்தா என்ன அர்த்தம்? “ என அவன் கோபமாக சொல்ல முயன்று இறுதியில் வருத்தத்துடன் முடித்தான்.


அவன் பேசும்வரை அவன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தவள் அவன் முடித்ததும் மெதுவாக அவன் கைகளில் இருந்து தனது விரல்களை உருவி கொண்டவள் நிமிர்ந்து அமர்ந்து “நாளைக்கு எத்தனை மணிக்கு பங்க்ஷன்” என்றாள்.


அவளது செய்கையில் சிரிப்பு வர “மாலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கிறாங்க .எப்போ முடியும்னு தெரியலை...விழா முடிந்ததும் பரிசு வாங்கினவங்க எல்லார்க்கும் ஒரு பார்ட்டி இருக்கு. அதில நம்ம கலந்துக்கனும்.... அதனால் ரிட்டன் டிக்கெட் அடுத்த நாள் இரவு தான் போட்டு இருக்கேன்” என விபரம் சொன்னான்.



“என்னது பார்ட்டியா!!!!” என அதிர்ந்தவள் “நான் அங்க எல்லாம் வரமாட்டேன்...நீ வேணா போ” என வேகமாக சொன்னாள்.



“முட்டாள்தனமா பேசாத சகானா ....பரிசு உனக்கு தான் கொடுக்கிறாங்க.... நீ தான் அதில கலந்துக்கனும்... ரோஷமும் திறமையும் மட்டும் இருந்தா பத்தாது.... பிஸினஸ் உலகத்தில ஜெயிக்கணும்னா கொஞ்சம் புத்திசாலித்தனமும் இருக்கணும்....உன்னோட கனவு, லட்சியத்தை அடையறதுக்கு இது நல்ல வாய்ப்பு ...நீ பயன்படுத்திகோ....நம்ம தொழில் சம்பந்தமா நிறையா பேர் வருவாங்க...அவங்க அறிமுகம் எல்லாம் நமக்கு அவசியம் தேவை சகானா ...என்ன நான் சொல்லவறது உனக்கு புரியுதா?” என அவளது பேச்சில் எரிச்சல் வர சற்று கடுமையாக அவன் பேசவும்


“ம்ம்ம....”. என தலையை மட்டும் ஆட்டியவள் வேகமாக கைப்பையில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து பிரித்து படிக்க ஆரம்பித்து விட்டாள்.



“ஒருத்தன் இவளோ பேசறேன்....பதில் சொல்றாளான்னு பாரு” என வாய்க்குள் முனக
அவன் மனமோ அவளை பற்றி தெரிந்திருந்தும் நீயும் இப்படி பேசலாமா என அவனை சாடியது.
அப்படியே இருக்கையில் சாய்ந்தவன் உண்மைதான்....அவள் வளர்ந்த விதம் என்ன? ...இப்போது அவள் வாழ்கிற வாழ்க்கை என்ன? என நினைக்கும்போதே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் அல்லவா அது.


தனது கிராமத்தில் பத்தாம் வகுப்பு முடித்து தொழிற்கல்வி படிப்பிற்காக சென்னை வந்தான் சபரீஷ். அப்போது அவன் உறவினர் ஒருவர் எனது நண்பர் சென்னையில் இருக்கிறார்.... நல்ல மனிதர் ....உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வார் என சகனாவின் தந்தை ரகுபதியின் முகவரி கொடுத்து இருந்தார். அப்படிதான் சகானா குடும்பத்தின் அறிமுகம் அவனுக்கு ஏற்பட்டது.


கல்லூரியில் கார்டியனாக சகனாவின் அப்பா பெயர் இருந்ததால் அவன் வீட்டிற்கு செல்லும்போது எல்லாம் அவர் வந்து கையப்பமிடவேண்டும். அந்த நேரத்தில் அவனையும் தன் வீட்டிற்கு அழைத்து வந்து சாப்பிட வைத்து தான் அனுப்புவர். மிகவும் எளிமையான அதே நேரத்தில் தனது கடமையில் இருந்து தவறாத மனிதர். அவர் நான்கு சக்கர வாகனங்களை பழுதுபார்க்கும் SS சர்வீஸ் ஸ்டேஷன் நடத்தி வந்தார். நகரத்தின் மைய பகுதியில் இருந்ததாலும், அவரது திறமை மற்றும் நேர்மையான வேலை காரணமாக அவருக்கு அதிக வாடிக்கையாளர்களும், நற்பெயரும் இருந்தது.



கூட்டு குடும்பமாக இருந்ததால் எல்லா பொறுப்புகளும் ரகுபதியிடம் இருந்தன. அவரது தம்பி ராஜேந்திரன் கொஞ்சம் சோம்பேறி...ஆனால் நல்ல மனிதர். வீடு , கடை இதை தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது.. வாடிகையாளர்களிடம் கூட அதிகம் பேச மாட்டார். அதனால் ரகுபதி தான் எல்லாவற்றையும் பார்த்து வந்தார். எப்போதும் எதிலும் கவனமாக இருக்கும் ரகுபதி எப்படி இந்த மாதிரி ஏமாந்தார் என்பது இப்போது வரை சபரீஷ்க்கு ஆச்சரியம் தான். யானைக்கும் அடிசறுக்கும் என்பது இது தானா...என அவன் மனதில் பல கேள்விகள் சுழன்று கொண்டிருந்தது.



அப்போது “ஹே சபரீஷ் என்னை சொல்லிட்டு நீ தூங்கிட்டு இருக்க....ஸ்டேஷன் வந்திடுச்சு ...” என சகானா அவனை உலுக்கவும் நினைவுகளின் சுழலில் தன்னை மறந்து தூங்கியவன் திடுக்கிட்டு எழுந்தான்.



“சாரி.....சாரி சகானா” என்றபடி வேகமாக எழுந்தவன் தனது பொருட்களை எடுத்து கொண்டு இருவரும் கீழே இறங்கினார். பின்னர் டாக்ஸி பிடித்து தங்கும் இடத்திற்கு சென்றனர். இருவருக்கும் தனி தனி அறை கொடுக்க பட்டிருந்தது. அறைக்குள் நுழைந்ததும் சுற்றும் முற்றும் பார்த்த சகானா மனதில் மெல்ல ஒரு பயம் சூழ அங்கிருந்த படுக்கையில் அமர்ந்தாள்..


இது போன்ற தனிமை அவளுக்கு புதிது. இரண்டு அறைகள் என்றதும் சகானா முதலில் மறுக்க சபரீஷ் தான் அவளிடம் பேசி சம்மதிக்க வைத்தான். தொழில் எத்தனை போட்டிகள் வந்தாலும் சமாளித்து விடும் அவள் இது போன்ற வெளியிடங்களில் தன்னை சுருக்கி கொள்வாள்.அவளை சொல்லி தப்பில்லை.அவளின் வளர்ப்பு அப்படி..



பூக்களை விட மென்மையாக தன் பெண்ணை வளர்த்து இருந்தார் ரகுபதி. அவள் கேட்டது எல்லாம் வீடு தேடி வரும்.ஒரு சிறு வேலை கூட அவளை செய்ய விடமாட்டார். ஒரு முறை அவள் வீட்டில் ஏதோ பொருளை எடுத்து துடைத்து கொண்டிருந்தவள் தூசி மூக்கில் ஏற அவள் தும்மிவிட அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்த ரகுபதி “சகானா ...உனக்கு தான் தூசி அலர்ஜினா நீ எதுக்கு இந்த வேலை எல்லாம் செய்யற” என்றவர் மனைவியை அழைத்து இனி அவள் இது போல் எந்த வேலையும் கொடுக்க கூடாது என திட்டிவிட்டு சென்றார்.




ஒருமுறை சகுந்தாலா கூட தனது கணவரிடம் “சகானா இன்னொரு வீட்டிற்கு திருமணம் ஆகி செல்லும் பெண். எல்லா வேலைகளையும் கத்துக்கணும்.....இவ்ளோ செல்லம் கொடுக்காதீங்க...அப்புறம் அங்கு போய் ரொம்ப கஷ்டபடுவா” என சொல்லவும்


“என் மகள் எதற்கு வேலை செய்யணும்.....அவளுக்கு பத்து பேர் வேலை செய்யற மாதிரி வீட்டுக்கு தான் என் மகளை திருமணம் செய்து கொடுப்பேன்” என்பார் அவர்.


அவருக்கு தெரியுமா சிறு துரும்பை கூட அசைத்திடாத இதே சகானா இன்னும் சில வருடங்களில் கையில் ஸ்பேனரும் , எண்ணெய் பிசுக்கும், கிரசும் நிறைந்த அதிக எடை கொண்ட கனரக வாகனத்தை பழுது பார்த்து சுத்தபடுத்தி தரும் தன்னுடைய தொழிலுக்கு வருவாள் என்றும் ...அதற்கு அவரே காரணமாக இருப்பார் என்று அவர் அறிந்திருக்க மாட்டார். அவரின் இந்த கண்மூடித்தனமான பாசம் தான் அவளின் இந்த நிலைக்கு காரணமோ என சில நேரங்களில் சகானா நினைப்பதுண்டு.


அப்போது அலைபேசி ஒலிக்க எடுத்தவள் “நான் தான் சகானா...மாலை ஆறு மணிக்கு விழா ஆரம்பிக்கும் இடத்திற்கு போகணும்...கொஞ்சம் நேரம் தூங்கு ...பின்பு நாம் கிளம்ப சரியாக இருக்கும்” என்றான்.


“ம்ம் சரி சபரீஷ்” என்றவள் அப்புறம்..... என இழுக்க

“என்ன சொல்லு” என அவன் கேட்க

“இல்ல நான் அந்த நைட் டின்னர்க்கு அவசியம் இருக்கனுமா?” என அவள் கெஞ்சுவது போல்கேட்கவும்

எதிர்முனையில் இருந்து எந்த பதிலும் வராமல் போக அதில் இருந்தே அவன் மனநிலையை புரிந்து கொண்ட சகானா “சரி சரி நம்ம எல்லாம் முடிச்சுட்டு தான் கிளம்பறோம்” என வேகமாக சொல்லிவிட்டு அலைபேசியை அனைத்தாள். அதற்கு மேல் ஒரு நிமிடம் அவள் பேசி இருந்தாலும் பின்னர் சபரீஷ்டம் வாங்கும் திட்டில் அவள் காதில் ரத்தம் வந்து விடும் என்பதையும் அவள் அறிவாள்.



மாலை தங்கை ஆசையாக கொடுத்த சுடிதாரை விழாவிற்கு போட எடுத்தவள் சிறிது யோசனைக்கு பின் அதை வைத்து விட்டு பல நாட்களாக மறந்திருந்த அம்மாவின் வற்புறுத்தலால் எடுத்து வந்த எளிமையான காட்டன் புடவையை கட்டிகொண்டாள். அதற்கு ஏற்றார் போல் அணிகலன்களை அணிந்தவள் கண்ணாடி முன் வந்து நிற்க அதில் தெரிந்த அவளின் உருவம் அப்போது மனதிற்குள் தோன்றிய அந்த உணர்வு அதை அவள் உணர அதில் சற்று திகைத்தும் போனாள்.


ஐந்து வருடங்களில் மறைந்து போய்விட்டது இல்லை மரத்து போய்விட்டது என நினைத்த அந்த உணர்வுகள் மனதில் மெல்ல எட்டி பார்ப்பது போல தோன்ற அதை மனம் உணர்ந்த அந்த நொடி விகிர்த்து நின்றாள்.



இது போன்று எத்தனை புடவைகளை கண்ணாடி முன் கட்டி அழகு பார்த்திருப்பாள். ரகம் வாரியாக புடவைகளை கொண்டு வந்து குவித்திருந்தார் அவளின் தந்தை. கண்களில் கனவு மின்ன, முகத்தில் திருமணகளை நிறைந்திருக்க, வெட்கத்தோடும்,ஆசையோடும் தங்கள் மகள் புடவை ,நகைகள் என அணிந்து பார்த்து தேர்ந்தெடுப்பதை பெற்றவர்கள் பெருமிதத்தோடு அல்லவா பார்த்து கொண்டு இருந்தனர். பழைய நினைவுகள் பொங்கி எழ அதன் அழுத்தம் தாங்க முடியாமல் அவள் வேகமாக தனது உடையை மாற்ற முயலும்போது “சகானா உள்ள வரலாமா” என்ற சபரீஷ் வார்த்தையில் சற்று நிதானமானாள்.


உள்ளே நுழைந்தவன் சகானவை பார்த்ததும் ஹே வாட் எ சர்ப்ரைஸ்....ஹப்பா இப்போதான் எனக்கு பழைய சகானவை பார்த்த மாதிரி இருக்கு...ரொம்ப நல்லா இருக்கு....எனக்கு பிடிச்சிருக்கு” என அவன் மனதார பாராட்ட


“இல்லை இல்லை இது வேண்டாம்...நான் சுடிதார் மாத்திக்கிறேன்” என அவள் வேறு உடை மாற்ற செல்ல


“ஹே சகானா....இது நல்லாத்தான் இருக்கு.....புடவை சிம்பிளா இருந்தாலும் உனக்கு அழகா இருக்கு.... எதுவும் மாத்தவேண்டாம் ...நேரமாச்சு வா போகலாம்” என அவளின் கையை பிடித்து இழுத்து சென்றான் சபரீஷ்.


அந்த பெங்களூர் சாலையின் நெரிசல்களை கடந்து அவர்கள் விழா அரங்கிற்கு செல்வதற்குள் சற்று தாமதமாகிவிட்டது. இவர்கள் உள்ளே நுழையவும் விழா தொடங்கவும் சரியாக இருந்தது. இவர்களை பார்த்ததும் வேகமாக இவர்களின் அருகில் வந்த விழா ஒருங்கிணைப்பாளர் “ அவர்களை வரவேற்று பின்னர் “என்ன சார் கொஞ்சம் முன்னாடியே வந்து இருக்கா கூடாதா?” என்றவர் “உள்ளே சென்று அமருங்கள்” என்றார்.


விழா அரங்கு பாதிக்கு மேல் நிரம்பி இருந்ததால் கிடைத்த இடத்தில் அமர்ந்தனர். “ சபரிஷ் என்ன இவ்ளோ கூட்டம் இருக்கு” என அவள் ஆச்சரியமாக கேட்க


“என்ன சகானா இப்படி கேட்கிற.... சவுத் ஜோனர்ல இருக்க எல்லா நிறுவனமும் வந்து இருக்காங்க....இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை தான் இந்த அவார்டு கொடுப்பாங்க....அதனால யாரும் இந்த வாய்ப்பை தவற விடமாட்டாங்க” என்றவன் அவள் அங்கும் இங்கும் சுற்றி வேடிக்கை பார்ப்பதை பார்த்ததும் ...



“இங்க பாரு சகானா....இப்படி பேந்த பேந்த முழிச்சுகிட்டு இருக்காம நான் சொல்றத கவனமா கேளு…...... இப்போ இங்க நீயும் இவங்களை மாதிரிதான்..... இப்படி எல்லாம் சிறுபிள்ளை போல நடந்துக்காத என சலித்து கொண்டவன் .......இங்க டாட்டா மோட்டார்ஸ், மாருதி நிறுவனம்,மகேந்திரா மோட்டார்ஸ் ,இன்னும் எல்லா கார் நிறுவனங்களும் வந்து இருக்காங்க.... விழா மேடையில அங்க பாரு அந்த ப்ளூ ஷர்ட் இருக்காருல்ல அவர்தான் ஹோண்டா கம்பெனியோட சவுத் ஜோனார்ல் ஹெட் சாகித் இப்ராகிம் என்றவன் அவர் பக்கத்தில் இருப்பவர் “ என அவன் சொல்லி கொண்டு இருக்க


“ம்ம் அவர் எனக்கு தெரியுமே” என வேகமாக சொன்னவள் பக்கத்தில் இருப்பவர் “MR நாராயானரெட்டி டோயோட்டோ நிறுவனத்தோட சவுத் ஹெட் என்றவள் அதற்கு பக்கத்தில இருக்கிறது MKS மோட்டார்ஸ் நிறுவனர் சந்திர சேகர்” என அங்கு அமர்ந்திருபவர்களை பற்றிய எல்லா தகவல்களையும் அவள் வரிசையாக சொல்லி கொண்டிருந்தாள்.


இப்போது திரு திருவென முழிப்பது அவனது முறையாகி போனது. இமைக்காமல் அவள் சொல்வதையே கேட்டு கொண்டிருக்க

அவளோ அவனது செயலில் பேச்சை நிறுத்தி விட்டு என்ன என்பது போல் புருவத்தை உயர்த்த

ஒன்றும் இல்லை என தலை அசைத்தவன் “உன்னை பற்றி ஓரளவு தெரிந்திருந்தும் நான் கொஞ்சம் அட்வான்டேஜ் எடுத்தது தப்புதான்” என்றான்.

“அச்சோ அப்படி எல்லாம் இல்லை சபரீஷ்.... இதுவும் நீ கத்து கொடுத்தது தான்.... நம்ம எந்த வேலை செய்தாலும் அந்த வேலையில முழு ஈடுபாடு இருக்கணும்.....அதை நம்ம நேசிக்கணும்.... அப்படி இருக்கணும்னா அந்த தொழில்ல நம்ம அப்டேட்டா இருக்கணும்னு நீ தான சொல்வ...அதனால இதெல்லாம் நான் தெரிஞ்சு வச்சிருக்கேன்” என சாதரனமாக சொல்ல


அவளை மெச்சுதல் பார்வை பார்த்தவன் .... “சாரி சாகனா ....உன்னோட பயத்தை பார்த்ததும் எங்க பழைய சாகனா வந்திட்டாலோனு பயந்திட்டேன்...இந்த ஸ்ப்ரிட் தான் உன்னோட பலம். இப்படிதான்னு யாரும் உன்னை எடை போட முடியாது....உனக்கு இந்த அவார்டு மிகவும் பொருத்தம்” அவன் பாராட்ட


அவளோ அதற்கு ஒரு புன்னகை மட்டும் பதிலாக கொடுக்க அதற்குள் விழா தொடங்க இருவரின் கவனமும் அதில் திரும்பியது. அப்போது ஒரு அலைபேசி அழைப்பு வர சபரீஷ் எழுந்து வெளியே சென்றான்.

அப்போது விழா மேடையின் முன் வரிசையில் சற்று சலசலப்பு எழ அனைவரின் கவனமும் அங்கு திரும்ப அங்கு ஆறடி உயரத்தில் ஆண் மகன் ஒருவன் நின்று இருக்க அவனை சுற்றி கார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பலர் நின்று இருந்தனர். அவனிடம் விழா ஏற்பாட்டாளர் மிக பணிவாக ஏதோ சொல்லி கொண்டே இருந்தார்..

அவனருகில் அதிக கும்பல் இருந்ததால் சகானவால் அவனை பார்க்க முடியவில்லை..அதற்குள் அவன் முன் இருக்கையில் அமர்ந்துவிட்டான். அதன் பின்னர் சிறப்பு விருந்தினரின் உரை ஆரம்பிக்க சகானாவிற்கு தூக்கம் வர ஆரம்பித்தது. ஆம் படிக்கிற காலத்தில் இருந்தே சகானவிற்கு கூட்டம் , பேச்சு என்றாலே தூங்கி விடுவாள்.


அதற்குள் அலைபேசியில் பேசி முடித்துவிட்டு உள்ள வந்த சபரீஷ் அவள் தனது முகத்திற்கு கைகளையே தூணாக கொண்டு சாய்ந்து உறங்கி கொண்டு இருப்பதை பார்த்தவன், அந்த குழந்தைத்தனமான முகம் கண்டு மனதிற்குள் ஒரு இதம் பரவ, அருகே அமர்ந்தவன் “இங்க எந்த மாதிரி நிகழ்ச்சி நடந்துகிட்டு இருக்கு.....தமிழ்நாட்டின் சிறந்த பெண் தொழிற்முனைவோர் விருது இவளுக்கு கிடைச்சிருக்கு. அந்தபங்சனுக்கு வந்திட்டு இவ கொறட்டை விட்டு தூங்கிட்டு இருக்கா? இவளை என்னதான் பண்றது? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?” என முனகியபடி சகானா , சகானா என அழைக்க .


அவனது சத்தத்தில் திடுக்கிட்டு முழித்தவள் ம்ம் என்றபடி அவனை பார்த்ததும் “எங்க போயிருந்த சபரீஷ்.....மொக்க போடறாங்க.....என்னால உட்காரவே முடியல” .... என சிடுசிடுக்க


“ஒரு போன் கால்...உங்கிட்ட சொல்லிட்டு தான போனேன்” என பேசிக்கொண்டு இருக்கும்போதே
அடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த மோட்டார் சர்வீஸ் நிறுவனத்திற்கான விருது என்ற அறிவிப்பு வர அடுத்து அடுத்து விருதும் வழங்கப்பட்டது.
இப்போது திருப்பூர் நகரத்தின் சிறந்த நிறுவனமாக சகானா சர்வீஸ் ஸ்டேஷன் நிறுவனம் தேர்தெடுக்கப்பட்டுள்ளது என்றவர்கள் அந்த நிறுவனத்தை பற்றி புகழ்ந்து பேசி அதன் நிறுவனர் மிஸ் சகானா ஸ்ரீ அவர்களை அன்புடன் அழைக்கிறோம் என அறிவிப்பு வரவும்,


உடனே சபரீஷ் “உன்னை தான் கூப்பிட்றாங்க.....போ சகானா” என அவளை கிளப்ப

அவளோ “எனக்கு பயமா இருக்கு சபரி...நீயும் வா” என அவன் கைகளை இறுக்கமாக பிடிக்க அதில் தெரிந்த அந்த நடுக்கம் அவளது மனநிலையை நன்கு உணர்த்தியது.

அவனோ “சகானா இது உனக்கான வெற்றி....உன்னோட உழைப்புக்கு கிடச்ச பரிசு......நீ தான் வாங்கணும்” என்றவன் அதற்குள் “மிஸ் சகானா “ என மேடையில் இருந்து மீண்டும் அறிவிப்பு வர

“ இங்க பாரு சகானா எல்லாரும் உனக்காக பார்த்துகிட்டு இருக்காங்க...சீக்கிரம் எழுந்து போ...இது உங்க அப்பாவோட கனவு “என அவன் சொல்லி முடிக்கும் முன்பே

வேகமாக இருக்கையில் இருந்து எழுந்தவள் மிடுக்கான நடையோடு மேடைக்கு செல்ல அவளது நடையில் சபரீயே அசந்து போனான்.

அவளை பார்த்ததும் மேடையில் இருப்பவர்கள் இன்முகத்துடன் கைகுலுக்கி வாழ்த்து சொல்ல கீழே அமர்ந்திருந்தவனின் கண்களிலோ
அதிர்ச்சியும் ஆத்திரமும் நிறைந்து இருந்தது.

அதற்கு அடுத்து வந்த அறிவிப்பில் வெற்றியின் களிப்பு மறந்து கோபத்தில் வெகுண்டெழுந்தாள் சகானா.



ஏமாற்ற கடலில் எதிர் நீச்சலிட்டு
விடா முயற்சியில் தன்னை தொலைத்து
வெற்றி கனியை கையில் ஏந்தி நிற்கையில்
மகிழ்ந்திருக்க வேண்டிய மனம்

வெகுண்டெழுந்தது ஏனோ ???

நிலவு தொடரும் .......
 

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
சூப்பர் எபி. சகானா, சாண்டியும் நேரடியாக மோதிக்க போறாங்களா