• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மேதினி -15

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam

அத்தியாயம் - 15


தீட்சன்யாவும், ஆதர்ஷும் வீட்டிற்குள் நுழைய…


"அங்கேயே நில்லுங்க… என்ற சௌந்தரத்தின் குரல் ஒலித்தது‌.


தீட்சண்யா பயத்துடன் விழித்தாள். மாமியார் ஒரு வேளை கோபமாக இருக்கிறாரோ… ' ரொம்ப நாளாக ஊருக்கு வர சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் ஆதர்ஷ் தான் பிடிக்கொடுக்கவில்லை. ' என்று தனக்குள் எண்ணி குழம்பிக் கொண்டிருக்க.


" என்ன மா?" என்று ஆதர்ஷ் எரிச்சல்பட்டான்.


" இரு டா… வந்துட்டேன்…"

என்று சௌந்தரம் குரல் கொடுத்துக் கொண்டே வந்தார். கையில் ஆரத்தி இருந்தது.


" கொஞ்சம் பொறுமையா இரு டா. கல்யாணமாகி ஊருக்கு போய்ட்டு, இப்ப தான் முதல் முதல்ல திரும்பி வீட்டுக்கு வர்றீங்க. ஆரத்தி எடுக்க வேண்டாமா." என்றுக் கேட்டுக் கொண்டே ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார்.


புன்னகையுடன் சௌந்தரத்தின் பின்னே சுற்றினாள் தீட்சண்யா.


" காலையில சாப்பிட்டீங்களா மா."


" ம் வழியில சாப்பிட்டோம் அத்தை."


" இந்தா ஜுஸ் குடி மா. ஆமாம் வர வழியில காஃபி, டீ எல்லாம் வாங்கிக் கொடுத்தானா? அங்கே சென்னையில் எப்படி பார்த்துக்குறான்?" இப்படி அவளிடம் கேட்பதற்கு சௌந்தரத்திற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்க…


இருவரும் சுவாரசியமாக பேசிக் கொண்டே இருந்தனர்.


சற்று நேரம் பொறுத்து பார்த்த ஆதர்ஷ்,"மா… உங்க மருமகளோட வந்த என்னையும் கொஞ்சம் கவனிங்க மா."என்று கிச்சனுக்குள் வந்து நின்றான்.


" அதான் நீயே வந்துட்டியே… இந்த ஜூஸை எடுத்துக்கிட்டு அந்த பக்கம் போ. நானும், என் மருமகளும் பேசும் போது தொந்தரவு பண்ணாத." என்று அடிக்காத குறையாக தன் மகனை விரட்டி விட்டார் சௌந்தரம்.


' பேசாமல் சென்னையிலே இருந்திருக்கலாம் போல…' என்று எண்ணியபடி ஹாலில் வந்து அமர்ந்தான்.


" டூ லேட்… இதை இங்க வரதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கணும்." என்றார் வேதாசலம்.


" என்ன?" என்று ஆதர்ஷ் அதிர்ந்தான்.


" மைண்ட் வாய்ஸுனு நினைச்சுட்டு சத்தமா பேசிட்டே மகனே." என்ற வேதாசலம் மகனை நக்கலாக பார்த்து சிரித்தார்.


" ரொம்ப சிரிக்காதீங்க பா. நல்லவேளை நாளைக்கு மறு வீட்டுக்குப் போயிடுவேன். இல்லைன்னா என் பாடு திண்டாட்டம் தான்."


" பரவாயில்லை ஆதி… நீ பொழைச்சுப்ப…" என்று கூறி சிரிக்க. ஆதர்ஷும் சிரித்தான்.


மனிதன் நினைப்பதெல்லாம் நடந்து விடுமா?


அங்கே தீட்சண்யாவின் வீட்டில் பேசுவதென்ன, அவளை கண்ணால் பார்க்கக் கூட முடியவில்லை.


ராமநாதன், மல்லிகா தம்பதியினர் இவர்கள் சென்னையிலிருந்து வந்த மறுநாள் காலையிலேயே மறுவீட்டுக்கு அழைப்பதற்காக வந்தனர்.


நல்ல நேரத்தில் புகுந்த வீட்டிலிருந்து, பிறந்த வீட்டிற்கு சென்றாள் தீட்சண்யா. பல நாட்களுக்குப் பிறகு பிறந்து வீட்டிற்கு சென்றவள், ஒவ்வொரு இடத்தையும் ஆவலாக பார்த்துக் கொண்டிருக்க.


" என்ன மச,மசன்னு நிக்கிற? மாப்பிள்ளை வந்து எவ்வளவு நேரம் ஆகுது ? அவருக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வா." என்று ராமநாதன் மகளை கடிந்துக் கொள்ள.


"பரவாயில்லை மாமா… அவளும் இப்ப தானே என்னோட வர்றா… வா… இங்கே வந்து உட்காரு தியா‌." என்று அவளை தன் அருகே அமர வைத்துக் கொண்டான்.


அவரோ மகளை முறைத்துக் கொண்டே, மாப்பிள்ளையிடம் பேசி சிரித்தார்.


மல்லிகா இருவருக்கும் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்து விட்டு மகளிடம், " தீட்ஷு மா… மாப்பிள்ளையை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ. கொஞ்சம் நேரம் ஓய்வெடுங்க." என்று சொன்னார்.


' அப்பாடா!' என்று மனதிற்குள் அம்மாவிற்கு நன்றி சொல்லி விட்டு, ஆதர்ஷை மாடிக்கு அழைத்துச் சென்றாள்.


சற்று நேரம் இருவரும் ஃப்ரீயா பேசிக்கொண்டிருக்க… அதற்குள் கீழே இருந்து ராமநாதனின் குரல், " தீட்சண்யா… " என்று ஒலித்தது.


"ஐயோ! அப்பா கூப்பிடுறாரு…" என்ற வேகமாக கீழே இறங்கினாள்.


" ஹேய் பார்த்து…" என்ற ஆதர்ஷின் குரல், அவள் செவியை சென்று அடையவில்லை.


" அப்பா…"என்றாள் தீட்சண்யா.


" என்ன நீ மட்டும் வந்திருக்க? டைம் ஆயிடுச்சு. மாப்பிள்ளையை சாப்பிட கூப்பிடலையா? இது கூடவா சொல்லித் தரணும்." என்றுக் கடிந்துக் கொள்ள…


"இதோ கூப்பிடுகிறேன் பா. " என்றவள் மீண்டும் மாடிக்குச் சென்று அவனை அழைத்து வந்தாள்.


" தீட்சண்யா… மாப்பிள்ளைக்கு பரிமாறு." என்று ராமநாதன் கூற.


" அவளும் என் கூடவே சாப்பிடட்டும் மாமா." என்று அவரிடம் கூறிய ஆதர்ஷ், அவளை தனதருகே உட்கார சொன்னான்.


அப்பொழுதும் அவளை சாப்பிடவிடாமல், மாப்பிள்ளையை கவனி என்று பார்வையாலே மிரட்டிக் கொண்டிருந்தார்.


தீட்சண்யாவுக்கு, " ஐயோ!" என்று ஆனது. ஒரே நாளில், ' எப்படா ஊருக்கு போவோம்.' என்று எண்ண ஆரம்பித்தாள்.


அவள் மட்டும் அல்ல ஆதர்ஷும் அதையே தான் நினைத்தான்.


சாப்பிட்டு முடித்ததும் ரூமிற்குச் சென்றவன், தீட்சண்யாவிற்காக காத்திருந்தான்.


ஆனால் ராமநாதனோ, " மாப்பிள்ளை தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும். நீ போய் அவரை தொந்தரவு பண்ணாத." என்று கூற.


" சரி பா." என்றவள் தன்னையே நொந்து கொண்டு, அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.


மாலை வரைக்கும் அவள் வருவாள், வருவாள் என்று ஆதர்ஷ் காத்திருந்தான். அவள் வருவதாக தெரியவில்லை என்றதும் கீழே இறங்கி வந்தான்.


மீண்டும் தடபுடலாக காஃபியுடன் சிற்றுண்டி ஏற்பாடு செய்திருக்க…அதை சாப்பிட்டவன், " தியா… வா வெளியில போயிட்டு வரலாம்." என்று அழைத்தான்.


" சரி." என்று தலையசைத்தவள் தயாராகுவதற்காக மாடிக்குச் செல்ல அவள் பின்னே வந்தான் ஆதர்ஷ்.


" எங்க ஆதி போறோம்."


" உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு வந்தேன். உங்க வீட்ல அதுக்கு வாய்ப்பே இல்லை. சரி எங்கேயாவது போகலாம்னா இங்கே என்ன பீச்சா இருக்கு. கோவில், குளம்னு தான் போகணும். ம்… எல்லாம் என் நேரம்." என்று அவன் முனுமுனுக்க.


கண்ணாடி முன்பு நின்று தலைவாரிக் கொண்டிருந்த தீட்சண்யா, கண்ணாடி வழியே அவனைப் பார்த்து சிரித்தாள்.


"என்ன கிண்டலா?" என்று ஆதர்ஷ் வினவ.


" அதெல்லாம் ஒன்னும் இல்லை. ரொம்ப ஃபீல் பண்ண வேண்டாம். தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவிலுக்கு போகலாம். முதல் முதலா வெளியில போறோம். சாமி கும்பிட்ட மாதிரியும் இருக்கும், அப்புறம் அங்க பார்க்ல உட்கார்ந்து ரிலாக்ஸா இருக்கலாம்."


"தாராசுரம் கோவில்ல பார்க் இருக்கா?" என்று வியப்புடன் வினவினான்.


"நீங்க கும்பகோணம் தானே. இங்க வர்றதே கிடையாதா? கோவிலுக்கு வெளியே புல்வெளி இருக்கும். அங்கே காத்தாட உட்காரலாம்.சென்னை மெரினா பீச் தோத்துடும். நிறைய லவ்வர்ஸோட மீட்டிங் ஸ்பாட்டே அங்க தான். சுண்டல், கடலை எல்லாமே விற்கும். நல்லா டைம் பாஸ் ஆகும்." என்றுக் கூறி கண் சிமிட்டி சிரித்தாள்.


"அப்போ அங்கேயே போகலாம்."என்ற ஆதர்ஷ், தீட்சண்யாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றான்.


தீட்சண்யாவோட நீண்ட நாள் ஆசை அன்று நிறைவேறியது. கோவிலின் கோபுரத்தை பார்த்துக் கொண்டு, தன் கணவனிடம் அந்த ஆகாயத்துக்கு அடியில் இந்த பூமியில் நடக்கும் எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசினாள்.


இருவரும் மட்டுமான அந்த உலகில் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ள முயற்சித்தனர். முதல் அடியாக இருவரும் நண்பர்களானார்கள்.


இரண்டு நாட்கள் மட்டுமே அம்மா வீட்டில் இருந்தாள். அதற்குப் பிறகு மாமியார் வீட்டுக்கு சென்று விட. மீதி இருந்த நாட்கள் அவளுக்கு சொர்க்கத்திலிருந்தது போல இருந்தது‌.


ஒரு வாரம் நிமிஷமாக ஓடி விட… இருவரும் உற்சாகத்துடனே சென்னைக்கு சென்றனர்.


கும்பகோணத்திற்கு போய்விட்டு வந்ததன் பலனாக ஆதர்ஷும், தீட்சண்யாவும் மனம் விட்டு பேச ஆரம்பித்திருந்தனர்.


ஆதர்ஷும் ஆஃபிஸிலிருந்து வீட்டிற்கு வந்து விட்டால் ஃபோன் யூஸ் பண்ண மாட்டான். தீட்சண்யாவுடன் பேசிக் கொண்டே அவளுக்கு உதவி செய்வான். நாட்களும் வேகமாக ஓடியது.


மூன்று மாதங்களுக்குப் பிறகு…


" என்னோட டைரியை நீங்க எப்படி என்கிட்ட கேட்காமல் எடுக்கலாம்?" என்று சண்டைக்கு நின்றாள் தீட்சண்யா.


" எதுவா இருந்தாலும் வந்து பேசிக்கலாம் தியா. டைம் ஆயிடுச்சு. இன்னைக்கு உனக்கு அவார்ட் தர்றாங்க. நாமளே லேட்டா போகலாமா?" என்று சமாதானமாக பேசினான் ஆதர்ஷ்.


" சரி… வந்து உங்களை வச்சுக்கிறேன்."


" தாராளமா தியா…" என்றவன், அவளை ஆழ்ந்து பார்க்க.


அவளது முகமோ சிவந்தது.


சிரித்தப் படியே விழா நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்தான்.


சென்னையில் பெரிய கதை எழுதும் போட்டி நடந்தது. தமிழ், ஆங்கிலம், இந்தி என பல மொழிகளில் நடக்க… அதற்கு தீட்சண்யா எழுதிய கதையை ஆதர்ஷ் அனுப்பிருந்தான்.


ஆங்கில பிரிவில் தீட்சண்யாவின் கதைக்கு தான் முதல் பரிசு. அதற்காகத்தான் தீட்சண்யாவும், ஆதர்ஷும் வந்திருந்தனர்.


எல்லா மொழியிலும் வெற்றி பெற்றவர்களை அழைத்து இரு வார்த்தை பேச சொல்லி விட்டு, அவர்களுக்கான பரிசுத்தொகையையும், அவார்டையும் தொடுத்தனர்.


தீட்சண்யாவின் முறையும் வந்தது. அங்கு ஹோஸ்ட் செய்து கொண்டிருந்த பெண் தீட்சண்யாவிடம், " சொல்லுங்க மிஸஸ் தீட்சண்யா… நீங்க எழுதிய மெட்டாவர்ஸில் காவ்யா உண்மையிலே நிதர்சனத்தை புரிய வைக்கிறது. அதை எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள். நீங்க உங்க ரீடர்ஸுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? " என்று வினவ.


" ம்… என்ன சொல்றது? நான் சொல்லணும் நினைச்சதெல்லாம் இந்த கதையில எழுதி இருக்கேன். மெட்டாவர்ஸால வருங்கால உலகம் எப்படி இருக்கும் என்பதை கொஞ்சம் உண்மை, கொஞ்சம் கற்பனை கலந்து சொல்லியிருக்கேன். இன்னைக்கு இந்த விஷயம் நடக்காமல் இருக்கலாம். ஆனால் நாளைக்கு நடக்க வாய்ப்பு இருக்கு. நாம தான் நம்மளை காப்பாத்திக்கணும் அவ்வளவு தான்‌. அப்புறம் எழுத்து என்பது ஒரு வரம். அது மூலமா நம்ம மக்களுக்கு என்ன சொல்லணுமோ அதை சொன்னா, அவங்க மனசுல நன்றாக பதியும். நாம் வாய் வார்த்தையா பண்ற அட்வைஸ்ஸ விட இது ஈஸியா மக்களோட மனசுல பதியும். சோ நல்லதை விதைங்க. அது விருட்சமாகும்." என்றாள்.


அரங்கமே அதிர்ந்தது.


அவளுக்கான அவார்டை கொடுக்க…


அதை வாங்கியவள், "இந்த அவார்டை நான் என் ஹஸ்பெண்டுக்கு டெடிகேட் பண்றேன். ஒவ்வொரு பெண்ணோட வெற்றிக்கும் பின்னாடி ஒரு அப்பாவோ, அண்ணனோ, தம்பியோ யாரோ ஒரு ஆள் இருப்பாங்க. என்னோட இந்த வெற்றிக்கு பின்னால என் ஹஸ்பண்ட் தான் இருக்காரு. நான் டைரியில எழுதி வச்சிருந்த இந்த கதையை, அவர் தான் இந்த காம்பெடிஷன் அனுப்பினார்." என்று கூறியவள், அந்த அவார்டை ஆதர்ஷ் இருக்கும் பக்கம் காட்டினாள்.


*******************

அவள் பேசுவதை கும்பகோணத்தில் இருவரின் வீட்டிலும் தனித்தனியே பார்த்துக் கொண்டிருந்தனர். சௌந்தரமும், வேதாசலமும் மருமகளை பெருமை பொங்க பார்த்தனர்.


ராமநாதனோ, ' நான் தான் எப்பப் பார்த்தாலும் பொம்பளை புள்ளைன்னு மட்டம் தட்டிட்டே இருந்திருக்கிறேன். இன்னும் கொஞ்சம் அவக் கிட்ட பிரியமா இருந்திருக்கலாம். எனக்கு பயந்து, என் பொண்ணு அவ திறமையை வெளிக் காட்டாமல் இருந்திருக்கா. நல்லவேளை மாப்பிள்ளை நல்லவரா இருந்ததால, அவ திறமை வெளி உலகிற்கு தெரிஞ்சிருக்கு. அது வரைக்கும் சந்தோஷம்.' என்று எண்ணினார். கணவரது மாற்றத்தை கண்டு கொள்ளாமல், வைத்த விழி எடுக்காமல் மல்லிகா மகளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரது நெஞ்சம் விம்மியது. மகளை நினைத்து பெருமிதம் அடைந்தார்.


******************

ஒரு வழியாக விழா முடிந்ததும் இருவரும் வீட்டிற்கு வந்தனர்.


வீட்டுக்குள் நுழைந்ததும் அவனை வேகமாக அனைத்த தீட்சண்யா," ஐ லவ் யூ." என்றாள்.


" என்ன உன் கதையை போட்டி அனுப்புனதால காதல் வந்துச்சோ." என்று கிண்டல் செய்தான்.


" அதனாலலாம் ஒன்னும் இல்லை. இருங்க வர்றேன்." என்றவள் அறைக்கு சென்று, அவன் எழுதிய லவ் லெட்டரை எடுத்து வந்து காண்பித்தாள்.


" நான் படிக்காதவனு நினைச்சிட்டு இருந்தப்பவே எனக்கு லவ் லெட்டர் எழுதியிருக்கீங்க. இந்த ஒரு விஷயமே உங்க மேல மரியாதையை தந்தது. அதுவுமில்லாமல் தமிழே தெரியாமல் எனக்காக தமிழ்ல லவ் லெட்டர் எழுதுன உங்களை எப்படி பிடிக்காமல் போகும்."


" ஹேய்… யாருக்கு தமிழ் தெரியாது. எனக்கு நல்லா தெரியும்." என்றான் ஆதர்ஷ்.


" உங்க தமிழோட லட்சணத்தை நீங்க தான் மெச்சிக்கணும். இந்த லவ் லெட்டரை கரெக்ஷன் பண்ணா, ஃபுல்லா சுழிச்சு தான் வைக்கணும். பேனா தாங்க கரெக்ஷன் பண்ணனும்." என்று தீட்சண்யா வம்பு பண்ண.


" தியா… அந்த லவ் லெட்டரை தா."


" தர மாட்டேன்." என்ற தீட்சண்யா ஓட…


" ஹேய் தியா… யாரை கேட்டு லவ் லெட்டரை எடுத்த?"


" யாரை கேட்கணும். நீங்க மட்டும் என் கிட்ட கேட்டா என்னோட கீயை எடுத்து டைரியில் உள்ள கதையை போட்டிக்கு அனுப்புனீங்க. அதே மாதிரி தான்." என்றவள் ஓட.


" தியா… குடுத்துடு… என்றவன், அறைக்குள் சென்றவளை துரத்திக் கொண்டு சென்றான்.



" இப்போ உன்னை என்ன பண்றேன் பார்." என்றவன் அவளை பிடித்து அணைக்க.


இவ்வளவு நேரம் எந்த லெட்டருக்காக ஓடினார்களோ, அந்த லவ் லெட்டர் காற்றில் பறந்து கட்டிலுக்கு அடியே சென்றது.


அதை எடுக்க முயன்ற தீட்சண்யாவை, " அப்புறமா எடுத்துக்கலாம் தியா…" என்றவன், வேறு எதையும் யோசிக்கவிடாமல் அவளை இறுக அணைத்து, வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றான்.


இனி அவர்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி மட்டுமே…


முற்றும்.