• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

யாத்திசை - 03

kkp 52

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 7, 2023
46
27
18
Tamilnadu
பெருந்தோட்ட தொழிலுக்காக நாடு கடந்து வந்த மக்களை தங்கவைப்பதற்காக வெள்ளையன் பெரிய மனதுடன் குடியிருப்புக்களை அமைத்துக் கொடுத்தான்.

காற்றும் வெளிச்சமும் மூலைமுடுக்குகளையும் போய்ச்சேரும் அகன்ற ஜன்னல்கள் , பெரிய கதவுகள், இரண்டு மூன்று அறைகள், குழந்தைகள் ஓடி விளையாட முற்றம் என்று சொல்லுமளவிற்கு வசதி வீடுகளாய் இல்லையென்றாலும் சமைப்பதற்கும் உறங்குவதற்கும் ஏற்ற விதத்தில்தான் வீடுகளை அமைத்திருந்தான்.

ஒரு பக்க லயம், இருபக்க லயம், இரண்டு காமரா வீடு என மூன்று விதங்களில் வீடுகள் அமைக்கப்பட்டன.

ஒரு நீண்ட வரிசையில் ஏழெட்டு வீடுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பக்கம் மாத்திரம் நுழைவாயில்கள் இருந்தால் அது ஒருபக்க லயம்.

ஒரே வரிசையில் இரு புறமும் இரண்டு குடும்பங்கள் வாழும் விதமாக இரண்டு பக்கங்களும் நுழைவாயில் வைத்து இருபுறமும் பத்து பதினைந்து வீடுகள் இருந்தால் அது இரு பக்க லயம்.

தனியான ஓரிடத்தில் இரு குடும்பங்கள் மாத்திரம் வாழ்வதற்காக இரு பக்கம் இரண்டு வாயில்களோடு இரண்டு வீடுகளாக பிரிக்கபட்டிருந்தால் அது இரண்டு காமரா வீடு.

அப்படியானதொரு இரண்டு காமரா வீட்டில் தான் இலங்கோவின் நண்பன் சதாசிவம் வாழ்கிறார்.

இலங்கோ வந்த திசையிலிருந்து ஒரு பக்க லயமொன்றைக் கடந்துதான் சாதாசிவத்தின் வீட்டை அடையவேண்டும்.

போகிற வழியில் கண்ணில் தென்படும் எல்லோரிடமும் நலம் விசாரித்தபடியும், ஏதேனும் நகைச்சுவையாய் பேசி சிலரை உசுப்பேற்றியபடியும் சென்றவன்,

" என்ன அம்மாயி.... வீட்ல யாரையுமே காணம்...? புது மாப்பிளயயும் காணம்? "
ஸ்தோப்பில் (விராந்தை) அமர்ந்திருந்த ஒரு பாட்டியிடம் கதை கொடுத்தான்.

"யாரு..... ? இலங்கோவா...? "
குரலில் அடையாளம் கண்டுகொண்ட பாட்டி, கண்களைச் சுருக்கிக்கொண்டு தளதளத்த குரலில் பேசினாள்.

"ஆமா அம்மாயி..... இலங்கோவேதான்..." இலங்கோவும் பாட்டியின் தாளத்திற்கே பேசினான்.

"அவரு வெறகுக்கு போய்ருக்காரு அண்ணே. " என்று சொன்னப்படி வெளியே வந்தாள் அந்த வீட்டுக்கு புதிதாய் வந்த மருமகள்.

பாட்டியின் அருகிற்கு வந்து ,
"அம்மாயி.... எனக்காக ஒரு பாட்டு பாடே , கேட்போ. "

"நானாப்பா..? பாட்டாப்பா..? " கிழவி குழந்தை போல உதட்டை சப்பி சப்பி பேசியது இலங்கோவின் மனதை இரசிக்கச் செய்தது.

"ஆமா , அம்மாயி... நீதான் பாடனும்..."

"சரிப்பா என்ன பாட்டு பாடனும் , சொல்லு பாட்றென்..." குஷி வந்து உற்சாகமானாள் கிழவி.

" ஓ எம்.ஜி. ஆர் பாட்டே பாடு"
எம்.ஜி.ஆர் என்றதுமே கிழவிக்கு ஆர்வம் கூடி புன்னகையோடு பாட்டைத் தொடங்கினாள்.

*** *** ***

"ஒருவர் மீதுஒருவர் சாய்ந்து
ஓடம் போலே
ஆடலாம் ஆடலாம்
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்

ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்

ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்

சொட்டு தேனை போல் சொல்லும் வார்த்தைகள் பட்டுபூவை போல் பார்க்கும் பார்வைகள் சொர்கம் தேடி செல்லட்டும் ஆசை எண்ணங்கள்அங்கெல்லாம் பொங்கட்டும்
காதல் வெள்ளங்கள்

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்

சொல்லி தாருங்கள் பள்ளி பாடங்கள்
இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள்
தங்க பாவை அங்கங்கள்
உங்கள் சொந்தங்கள்
தத்தை போல் மெத்தை மேல்ஏந்தி கொள்ளுங்கள்

ஒருவர் சொல்லஒருவர் கேட்டுபாடல் நூறுபாடலாம் பாடலாம்

கட்டு காவல்கள்விட்டு செல்லட்டும்
கன்னி பெண் என்னை பின்னி கொள்ளட்டும்
மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு மையல் பாதி என்னோடுமீதம்
உன்னோடு மஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்துஓடம் போலேஆடலாம் ஆடலாம்...."

*** *** ***
இரசித்து சுவைத்து ஒரு வரி பிழைக்காது பாடி முடித்தாள் கிழவி. கவனம் சிதறாது கேட்டு லயந்தார்கள் இலங்கோவும் புதுப்பொண்ணும்... அந்த வர வரிசை வாசலில் நின்றிருந்த இன்னும் சிலரும்.

"என்ன அம்மாயி.... ஓ புருஷன் நினைப்பு வந்துடுச்சோ ....?"

பாட்டி வெட்கத்தில் வலிந்து குழைந்தாள்.

செருப்பு சத்தம் காதில் கேட்க,

"அம்மாடி...., நீ எங்க ஆயி போற? "
கண் பார்வை குறைவென்றாலும் சத்தத்தையும் சத்தம் வரும் திசையையும் வைத்து அனைத்தையும் கண்டுபிடித்துவிடுவாள் இந்த எண்பது வயது கிழவி. உற்றுப்பார்த்தால் பார்வையிலும் பெரிதாய் குறையில்லை .

"அவருக்கு... தேதன்னி எடுத்துகிட்டு போறே அம்மாயி..." என கிழவிக்கே ஏற்ற தோரணையில் அழகாய் இராகமாய் பதில் சொன்னாள் புதுப்பெண்.

பாட்டி பொக்கை வாயுடன் சத்தமாகவே சிரித்தாள். பாட்டி ஏன் சிரித்தாள் என்று அந்த இளம் பெண்ணுக்கு புரியவில்லை. ஆனால் இலங்கோ புரிந்துக்கொண்டான்.

முன்பெல்லாம்... அக்கா தங்கை அண்ணன் தம்பியென எல்லோரும் அந்த இரண்டு அறை வீட்டுக்குள்தான் ஒன்றாய் வாழ்ந்தார்கள். இப்போதும் சில லயங்களில் இப்படித்தான். புதிதாய் திருமணமானவர்கள் தனித்து சுதந்திரமாக இருப்பதற்கு இடவசதி போதாததால் சந்தோசமாக இருப்பதற்காக இப்பிடித்தான் விறக்குக்குச் செல்வதாக கூறிவிட்டு கணவன் மனைவி இருவரும் காட்டிற்குச் சென்றுவிடுவார்கள். புதிய தம்பதிகள் விறகிற்கு சென்றால் அன்றைய நாளில் அந்த லயத்திலிருந்து வேறு யாரும் அந்த பக்கமே செல்லமாட்டார்கள். அந்த நினைப்பில்தான் பொக்கை வாயிலும் பாட்டிக்கு சிரிப்பு ததும்பிவிட்டது.

" அம்மாயி... போய்ட்டு வாறேன். " என புதுப்பெண் செல்ல, அவளது கொழுசு சத்தம் முழு லயமும் ஒலித்தோய்ந்தது.

"வயசானாலும் அம்மாயிக்கு குறும்புதான்..." என்றபடி பாட்டியின் கன்னத்தைக் கிள்ளி விட்டு நகர்ந்தான் இலங்கோ.

லயத்தை தாண்டி சதாசிவத்தின் இரண்டு காமரா வீட்டில் கால் பதித்தான் இலங்கோ.

முன்பு இலங்கோ வருகின்ற போதெல்லாம் சதாசிவத்தின் மகள் ஆர்த்திதான் வாசல் வந்து வரவேற்பாள். ஆனால் இன்று அவள் அங்கு இல்லாதிருப்பது ஒரு வெறுமையை உணர்த்தியது.

பெண்பிள்ளை இருக்கும் வரை வீட்டிலொரு அமர்க்களம் இருக்கத்தான் செய்யும். அவள் இருக்கும் வரை அது தெரியாது . என்று அவள் அங்கிருந்து போகிறாளோ அன்று வீட்டுச் சுவர் கூட அவள் அந்த வீட்டில் எப்படியெல்லாம் வாழ்ந்தாள் என்பதை உணரும்.

" வாங்க இளங்கோ தம்பி..."

"ஆர்த்தி இல்லாமல் வீடே வெறுச்சோடி இருக்கு..."

" ஆமா இலங்கோ அவ இல்லாமல் எனக்கு பைத்தியம் பிடிக்குற மாதிரி இருக்கு.."

ஐயோ பெண்ணை நினைவுப்படுத்தி தகப்பனை குழப்பிவிட்டோமோ என்றெண்ணியவன் சட்டென கதையை மாற்றினான்.

"என்னாண்ணே.... ரோடு செய்ததுக்கு தொர ஏதோ பிரச்சன பண்ணிராமே...?"

"அட ஆமா இலங்கோ, இந்த கொஞ்சத்துக்கு கொங்றீட் போட்டதுக்கு ஏதோ தோட்டத்தையே வளச்சி போட்டுகிட்ட மாதிரி கத்துரான்க "

இலங்கோ வந்ததோ லயங்களைத்தாண்டி மேல் பாதை வழியாக. அங்கிருந்து சற்று முன்னாடி நடந்து கீழ்நோக்கி போடப்பட்டிருந்த சற்று அகலமான புதிய கொங்கிறிட் பாதையை காட்டினார் சதாசிவம்.

முன்பிருந்ததென்னவோ வெறும் அடிப்பாதையொன்றுதான். கொஞ்சம் பெரிதாகவேதான் வளைத்து போட்டிருக்கிறார் சதாசிவம். பழைய பாதைக்கு இது கொஞ்சம் கூடுதல் கவர்ச்சியாகத்தான் தெரிந்தது. அதனால் பாதையை பார்த்தும் இலங்கோவிற்கும் திக்காடத்தான் செய்தது.

"ம்.... நீயும் வேலக்காரன்தான்யா... " என புறுவத்தை உயர்த்தி மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண்டவன்,
" இப்ப என்னத்தான் செய்ய சொல்றாங்க? " என்று சாதாரணமாய் கேட்டான்.

"என்னதான் செய்ய, செலவு செஞ்சி போட்ட ரோட்ட உடைக்கவா முடியும்? இவன்ங்க செஞ்சி தரவும் மாட்டான்ங்க. எங்கள செய்துக்கவும் விடமாட்டான்ங்க. இப்படியே எத்தனை நாளைக்கு தான் வாழ்றது? சொல்லு, தோட்டத்துல வேல செய்றம்றத்துக்காக ஒழுங்கான ஒரு ரோடு கூட இல்லாமலா வாழனும்? நாமதான் பழகிடம். நம்ம புள்ளைங்க, பேர புள்ளைங்களும் இப்படியேவா வாழ்வாங்க? " ஆதங்கத்தோடு வார்த்தைகளை அவிழ்த்துவிட்டான்.

"உண்மதான் சதாசிவம். ஒன்னு இந்த தோட்டத்த விட்டு போகணும்...." மீதி வார்த்தைகளைப் பேசுவதற்கு முன்,

"என்ன இலங்கோ சொல்ற? அதெப்படி இந்த தோட்டத்தவிட்டு போறது? இருநூறு வருஷமா எங்க வேர்வய, ரெத்தத்த இந்த மண்ணுலதானே சிந்தியிருக்கம். நாம யேன் போகணும். இங்க இருக்க இந்த காத்தும் சுகமும் வேறெங்க கெடுக்கும் சொல்லு. நாம இங்தான்யா வாழணும். ஆனா நாமக்கு தேவையான வசதிகள செய்துகிட்டு வாழணும். நாம இந்த மண்ண விட்டு போனா இந்த மண்ணே நம்மள மன்னிக்காது. நம்ம தாத்தனும் பூட்னும் எத்தன வலியோட இந்த தோட்டத்த உருவாக்கியிருப்பாங்க. அவங்க உழைப்புக்கெல்லாம் ஒரு அர்த்தம் வேணாமா? அவங்க சிந்துன கண்ணீருக்கும் வேர்வைக்கும் இழப்புக்கும் நாமதான் அர்த்தத்த கொடுக்கணும். நாம இங்கருந்து போய்ட்டா அவங்கல அவமானபடுத்துற மாதிரி ஆகிடாதா? அவங்க வலி, ஒழைப்பு எல்லாத்தயும் ஒன்னுமில்லாமல் பண்றமாதிரி ஆகிடாதா? " ஆவேசமாய் பேசி முடித்தவனின் கேள்விக்குறி இலங்கோவை தொற்றி நின்றது.

"ஆமால்ல...? தோட்டத்தவிட்டு போகனும் போகனும்னு யோசிக்கறமே... இது நம்மளோட ஒழைபில்லையா? சம்பளத்துக்கு மேல நாம் இங்க ஒழச்சிருக்கம்னு நமக்குதானே தெரியும். நீங்க சொல்றதும் சரிதான்னண்ணே. "

" பார்ப்பம், தொர வாரேன்னு சொன்னதாம். வரட்டும்னு தான் பாத்துகிட்டுருக்கென்." சதாசிவம் சொல்லி வாய்மூடுவதற்குள் ,

எதிர்பார்த்த மனிதன் காரை வீட்டு வாசலிலேயே கொண்டுவந்து நிறுத்திவிட்டு இறங்கினான்.

காரைக் கண்டு ஒதுங்கி நின்ற இருவரும் இதுவரையிருந்த தைரியம் சற்று குறைய, நெஞ்சை நிமிர்த்தி மீண்டும் அந்த தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அடி எடுத்து வைத்தார்கள்.

... விஞ்ஞானம் தீண்டா கலைகள் தொடரும்...
 
MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43

நைஸ் யூடி ரைட்டர்ஜீ 👍👍
 
  • Like
Reactions: kkp 52

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
பாட்டியின் வெட்கமும்
பாடலை ரசித்து
பாடிய விதம் அருமை.....
🤩💐💐💐💐💐
கூட்டுக் குடும்பத்தில்
கல்யாணத்திற்கு பிறகு
கணவன் மனைவி தனிமை
கண்ணுக்கு தெரியாத
காட்டு பகுதிகள் தானே
காதல் செய்யும் இடம்.... 💕💕💕💕💕.....
 
  • Like
Reactions: kkp 52

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
29
63
Kumbakonam
இலங்கையை பற்றிய தகவல்கள் அருமை சிஸ். கதை சூப்பரா போகுது
 
  • Like
Reactions: kkp 52

kkp 52

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 7, 2023
46
27
18
Tamilnadu
நைஸ் யூடி ரைட்டர்ஜீ 👍👍
நன்்றிிிஜிஜ
பாட்டியின் வெட்கமும்
பாடலை ரசித்து
பாடிய விதம் அருமை.....
🤩💐💐💐💐💐
கூட்டுக் குடும்பத்தில்
கல்யாணத்திற்கு பிறகு
கணவன் மனைவி தனிமை
கண்ணுக்கு தெரியாத
காட்டு பகுதிகள் தானே
காதல் செய்யும் இடம்.... 💕💕💕💕💕.....
மனம் மகிழ நன்றி நவில்கிறேன்....