நண்பகல் நேரம்! கதிரோன் நடுவானில் நின்று உஷ்ணம் பரப்பி, அவனியை சூடேற்றிக் கொண்டிருந்தான்.
தங்க நிறத்தில் நெற்கதிர்கள் மின்னிக் கொண்டிருந்த வயகாட்டின் வரப்புகள் மத்தியில், சுள்ளென்றடித்த வெயில் முகத்தில் படாதவாறு கையை சூரியனுக்கு நேராக தூக்கிப் பிடித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான் பழனிவேல்.
நிதானமாக காலடி எடுத்து வைத்து முன்னேறும் அவனின் சீரான நடையும், முறுக்கி விட்ட மீசையும், தூக்கிக் கட்டியிருந்த வெள்ளை வேட்டியும் அவனுக்கு அழகை வாரி வாரி இறைத்தது.
அவனைக் கண்டதும் கையிலிருந்ததை எல்லாம் ஒரு ஓரமாக தூக்கிப் போட்டு விட்டு வேகமாய் அவனருகில் ஓடி வந்த ரங்கராஜ், "தம்பி ஒரு எட்டு வூட்டுக்கு போயிட்டு வந்திடறேன்டா. உங்கண்ணி சோறு, தண்ணி வாயில வைக்காம நான் வர வரைக்கும் காத்துண்டு இருப்பா.." வியர்வை வழிந்த முகத்தை தோளில் தொங்க போட்டிருந்த துண்டால் துடைத்தபடி கூற,
"என்னண்ணே நீ.. எப்போவும் சொல்லனுமா? நேரத்துக்க வூட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு வந்திடுங்கோ.. இல்லாட்டி, வாயும் வயிறுமா இருக்கிற நினைப்பே இல்லாம அண்ணி உங்களுக்காக காத்துண்டு கிடப்பா.. போய் வாண்ணே.." என்று கூறிய பழனி, தன் தோளில் தொங்கிய துண்டை எடுத்து அண்ணனின் முகத்தை துடைத்து விட்டான். அண்ணன் என்றால் உயிர் அவனுக்கு!
"இங்க ஒருத்தன் கூட ஒழுங்கா வேல செய்ய மாட்டேங்கறான் பழனி.. தொண்டைல தண்ணி வத்தற வரைக்கும் மாடு மாதிரி கத்தணும். நான் கையசைக்கலன்னா அவனுகளும் அக்காடான்னு இருந்திடுவானுக.. நான் எப்போ இங்கிட்ட இருந்து நகருவேன்னு பாத்திட்டு கிடக்கானுக.. நீ வர வரைக்கும் தான் இருந்தேன். அவனுகள ஒரு கண்ண வைச்சு பாத்துக்கடா.. நான் வரேன்.."
பழனியிடம் கூறி விட்டு அங்கிருந்து வேகமாக ஓட்டமெடுத்தான் ரங்கராஜ். அவனைப் பார்த்து வரிசைப் பற்கள் தெரியும் படியாக அழகாய் சிரித்த பழனி, தன் வேலையை கவனிப்பதற்காக அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
பழனிவேலும் ரங்கராஜும் ஒரே தாய் வயிற்றில் பிறந்த சரகோதரர்கள். ஒரு விபத்தில் சிறு வயதிலே தாய் தந்தையை இழந்து விட்டவர்களுக்கு துணை, அவர்கள் இருவரும் மட்டுமே! தம்பியின் ஒவ்வொரு ஆசைகளையும் தேடியறிந்து தன்னால் முடியும் போதெல்லாம் அதை நனவாக்கிக் கொடுத்து மகிழ்வான் ரங்கராஜ். தம்பியின் புன்னகையில் தான் அவனின் வாழ்வு உட்சாகமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது என்று கூட கூறலாம்.
தான் விரும்பிய பெண்ணையே திருமணம் செய்து கொண்ட ரங்கராஜ், தம்பியின் ஆசை அறிந்து, மேல் கல்வி கற்பதற்காக பட்டிணம் அனுப்பி வைத்தான். பிறகு, தன் உழைப்பினால் வாங்கிப் போட்ட நிலத்தை இரண்டாகப் பிரித்து, அதில் ஒரு பகுதியை குத்தகைக்கு விட்டு, மீதிப் பகுதியில் பயிர் விளைத்து மனைவியை கவனித்துக் கொண்டான்.
படிப்பதற்காக பட்டிணம் சென்ற பழனிவேல், படிப்பு முடித்து இங்கே வந்து ஒரு வாரம் தான் ஆகி விட்டிருந்தது. இத்தனைக்கும் அவனின் வயது வெறும் 26 தான்.
காலில் செருப்பை மாட்டிக் கொள்ளக் கூட நேரமின்றி அங்கிருந்து ஓட்டம் பிடித்த ரங்கராஜ், மூச்சிறைக்க வந்து நின்றது தன் வீட்டுக்கு முன் தான். இரண்டு அறைகளும், சிறிய ஹாலும், சமையலறையும் கொண்ட சிறிய வீடு தான் என்றாலும், அதுவே அவர்களுக்கு போதுமானதாய் இருந்தது.
குனிந்து, முழங்காலில் கை ஊன்றி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியவன், மனைவியைக் காணப் போகும் ஆர்வத்தில் கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைய, கேட் திறக்கப்படும் சத்தத்தில் வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்தாள் கண்மணி.
நிறை மாதக் கர்ப்பிணியாக இருந்தவளைத் தன் கண்களுக்குள் நிரப்பிக் கொண்ட ரங்கராஜ், "இப்பிடி தான் ஓடி வருவியா புள்ள.. கொஞ்சம் கூட கவனம் வேணாமா.." சிறு கண்டிப்புடன் கேட்டபடி அவளை ஈரெட்டில் நெருங்கி தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.
மான் விழிகளை சிமிட்டிச் சிமிட்டி அவனை ஏறிட்டவள், "மாமா.." என்றழைத்தாள்.
அவளின் அழைப்பில் தன் மொத்த களைப்பும் பறந்து விட்டதைப் போல் உணர்ந்தவன், அவளின் கண்களில் சொட்டிய எதிர்பார்ப்பை வீணாக்க எண்ணமின்றி, அவளின் பிறை நெற்றியில் சிறு முத்தம் பதித்தான்.
மனம் நிறைந்து விட்ட திருப்தியில், அவனின் திறந்திருந்த சட்டைக்குள் தெரிந்த வெற்று நெஞ்சில் சிறு முத்தமொன்றைப் பதித்தவள், "சாப்பிடலாம். சமைச்சதை சூடு காட்டி வைக்கிறேன்.. கை கால் அலம்பிட்டு உள்ள வாங்க மாமா.." என்று கூறி அவனை விட்டு விலகி நிற்க, சரியென்று தலை அசைத்து விட்டு கொள்ளைப் புறமாக நடந்தான் ரங்கராஜ்.
ஐந்து நிமிடங்களில் கை கால் அலம்பி விட்டு வீட்டுக்குள் நுழையும் போது, சீமெந்து பூசப்பட்டிருந்த நிலத்தில் பாயை விரித்து கிண்ணத்தில் கஞ்சியையும், வாழையிலையில் சாதத்தையும் பரிமாறி அவனுக்காகக் காத்திருந்தாள் கண்மணி.
"கண்மணி.."
ரங்கராஜின் அழைப்பில் உடல் சிலிர்த்தவள் வேகமாக எழுந்திருக்க முயல,
"எதுக்கு தடமாறுற? பேசாம உக்காரு புள்ள.." அவளின் தோளில் அழுத்தி மீண்டும் அவளை அமர வைத்து விட்டு அவளருகில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டான்.
வாழையிலையில் இருந்த சாதத்தில் பருப்பையும் குழம்பையும் ஊற்றிப் பிசைந்து முதலில் அவளுக்கு ஊட்டி விட்டவன், அதே கையால் தானும் உணவை வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டான்.
அவனின் கைப்படப் பிசைந்து ஊட்டி விடும் உணவை விட்டுக் கொடுக்க மனமில்லா விட்டாலும், தன்னை விட தன்னவன் தான் முதலில் பசியாற வேண்டும் என்ற எண்ணத்தில், "முதல்ல நீங்க சாப்பிடுங்க மாமா.." என மென் குரலில் கூறினாள் கண்மணி.
"என்னை வுடு புள்ள.. என் உசுரை சுமந்துட்டு இருக்கற நீதான் முதல்ல சாப்பிடணுமாக்கும்.. பேசாம சாப்பிடு.." என்று கூறி அவளின் வாயருகே உணவை நீட்ட, தாமதியாமல் உணவை வாங்கிக் கொண்டவள்
"உங்க உசுருக்காக தான் எனக்கு ஊட்டி விடறீங்களா?" சிறு பிள்ளைக் கோபத்துடன் முகத்தை சுருக்கியபடி கேட்டாள்.
"ஏன் புள்ள இந்த அனாவசியக் கேள்வி? எப்போவும் என் முத கொழந்த நீதான் கண்மணி.."
அவனின் பதிலில் மனம் நிறைந்தவள் கன்னத்தில் பூத்த சிவப்பு ரோஜாக்களை மறக்க எண்ணி அவனின் முறுக்கேறிய தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.
கண்கள் சுருங்கச் சிரித்தவன், "பழனி சாப்பிட்டுட்டு தான் போனானா புள்ள?" என்று கேட்க, ஆமென்று தலை அசைத்தாளே தவிர, தலை தூக்கி அவனைப் பார்க்கவில்லை அவள்.
"வெட்கப்படறியா கண்மணி.. எங்கே மாமனுக்கு உன் அழகு முகத்தை காட்டு பாப்போம்.." இடது கையால் அவளின் முகத்தைத் தூக்கி விட்டவன், "நம்ம குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் புள்ள?" என்று ஆர்வமாக கேட்டான்.
"நம்ம குழந்தைக்கு பழனி தான் பெயர் வைப்பானாம்.." தலை குனிந்தபடி பூரிப்புடன் பதிலளித்தாள் கண்மணி.
"ஹாஹா, யாரு அவன்தான் சொன்னானா?"
"ஹூம்! நீங்க எதையும் சொல்லிடாதீக மாமா.. பாவம். சின்னப் பையன்.. ஏதோ ஆசைப்படறான். அவனே வைக்கட்டும்.."
"நான் என்னத்த சொல்ல போறேன் புள்ள.. நம்ம குழந்தையை முதல்ல நாந்தான் ஏந்தனும், பெயரு தேடி, நானே அவ காதுல, அவ பெயரை சொல்லணும்னு நிறைய ஆசை அவனுக்கு! அவனே பெயரு வைக்கட்டும்னு தான் நானும் நினைச்சேன். அப்பாம்மா இல்லாத பையன். என்னால முடிஞ்சதை எல்லாம் பண்ணி கொடுத்துட்டேன்.. ஆனா இன்னும் கண்ணாலம் கட்டிக்க பிடி குடுக்காம இருக்கான். நானும் எத்தன வாட்டி சொல்லி பாத்துட்டேன்.." தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தான் ரங்கராஜ்.
"வுடுங்க மாமா. குழந்தை பிறந்ததும் நானே பழனிக்கிட்ட நயமா பேசி, அவனுக்கு நல்ல பொண்ணா பாத்திடறேன். நான் சொன்னா அவன் முடியாதுன்னு மறுக்கப் போறதுல்ல மாமா.. நீங்க வருத்தப் படாதீக.." ரங்கராஜின் கைகளை ஆறுதலாகப் பற்றியபடி பேச, அமைதியாக உணவை அள்ளி வாய்க்குள் போட்டுக் கொண்டான் அவன்.
"கௌதமி.. கௌதம்.. பெயரு நல்லாருக்கா மாமா?"
"பழனியோட தெரிவா? அவனோட தெரிவு எப்போவும் நல்லாத் தான் இருக்கும், அவனைப் போலவே!"
"திண்ணைல பாய் விரிச்சு உக்காந்துக்கிட்டு விடிஞ்சுதுல இருந்து, யோசிக்கிறேன் அண்ணின்னு சொல்லி என் உசுரை வாங்கிட்டான் மாமா.. ரொம்ப நேரமா யோசிச்சி, இந்த சுற்று வட்டாரத்துல இல்லாத பெயரா தேடிப் பிடிச்சுட்டேன்னு ஒரே அமர்க்களம். கௌதமி.. கௌதம்னு, இன்னுமே பிறக்காத புள்ளய கூப்பிட்டு என்னை பாடாப் படுத்திட்டான். பொண்ணு பிறந்தா கௌதமினு வைப்பானாம். பையன் பிறந்தா கௌதம்னு வைப்பானாம். குழந்தையை அவனே வளர்ப்பானாம்.. ஷ்ஷப்பா.. அவனுக்கு எத்தன ஆசைனு பாருங்களேன்.."
போலிக் கோபத்துடன் அலுத்துக் கொண்டவளைப் பார்த்து சத்தமாக சிரித்த ரங்கராஜ், அவளை தன் தோளோடு சாய்த்து தலை வருடி விட்டான்.
அடுத்து வந்த இரண்டு நாட்களில், கொள்ளைப் புறத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்த கண்மணி, வழுக்கி விழுந்து அவளுக்கு பிரசவ வலி கண்டது. அவளின் அலறலில் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த பழனி ஓடி வந்தான்.
உயிர் போகும் வலியுடன், தலையில் இரத்தம் பீறிட அலறிக் கொண்டிருந்த தன் இரண்டாம் தாயானவளைக் கண்டதும் மயக்கம் வருவது போலிருந்தது அவனுக்கு.
"அ.. அண்ணி.." உயிர் போகும் வலியுடன் அழைத்தவன் ஓடிச் சென்று அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொள்ள
"மா.. மாமாவுக்கு.. மாமாவுக்கு வர சொல்லு பழனி.." திக்கித் திக்கி கூறிய கண்மணி, வயிற்றைப் பிடித்துக் கொண்டாள். தன் ஆசை மாமாவைப் பார்க்கும் முன்பே இறந்து விடுவேனோ என்ற அச்சத்துடன் வின்வின்னென்று வலித்த தலையை மற்றொரு கையால் பற்றினாள்.
கீழே விழுந்து தலையில் அடிபட்டதால் எழுந்த வலி ஒரு புறம், பிரசவ வலி ஒரு புறமென துடித்துக் கொண்டிருந்தவளைக் கண்டு கண்ணீர் வடித்தவன், கண்மணியின் அலறலில் பக்கத்து வீட்டிலிருந்து எட்டிப் பார்த்த ராசாத்தி என்ற பெண்ணிடம்
"அண்ணன் வந்ததும், அண்ணியை கூட்டிண்டு ஆஸ்பத்திரி போயிட்டேன்னு சொல்லிடுங்கத்தே.. என் கையில ஃபோனு இருக்கு. ஆனா அண்ணன் கைல இல்ல.. மறக்காம சொல்லிடுங்க.." என்று கூறிவிட்டு, வேகமாக அவளைத் தூக்கிக் கொண்டு ஓடினான். அவன் கூறியதை அந்தப் பெண் சற்றும் கண்டு கொள்ளவில்லை என்பது புரிந்தது அவனுக்கு.
வீட்டைக் கடந்து சென்ற ஒரு ஆட்டோவிற்கு கை காட்டி நிறுத்தியவன், "ப்ளீஸ் பொறுத்துக்கோங்க அண்ணி.. இன்னும் பத்து நிமிஷத்துல ஹாஸ்பிடல் போய்டலாம்.." என்று கெஞ்சலாகக் கூற,
"மாமாவை.. வ.. வர சொல்லு பழனி.." பற்களைக் கடித்து வலியை அடக்கிக் கொண்டு கூறினாள். உடனே தன்னவனைப் பார்த்து விட வேண்டுமென்ற தவிப்பு அவளின் குரலில் இருந்தது.
இப்போது, வயலுக்கு சென்று ரங்கராஜிடம் விடயத்தை கூறிவிட்டு வருவதற்குள் நேரம் கடந்து விடும் என அறிந்ததால் கண்மணியின் பேச்சைப் பொருட்படுத்தாமல் ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டவன், அவளை ஆட்டோவின் பின் இருக்கையில் சரிவாக அமர வைத்துக் கொள்ள, ஹாஸ்பிடலை நோக்கி செல்ல தொடங்கியது ஆட்டோ.
கண்மணியின் கண்ணீரை சகித்துக் கொள்ள முடியாமலோ என்னவோ, கருமேகங்கள் சூழ்ந்து ஹோவென்று மழை பொழிய ஆரம்பித்தது. வழமைக்கு மாற்றமாக கண்மணியின் இதயம் பலமடங்கு வேகமாக துடித்து, தன்னவனுக்கு ஏதோ ஆபத்து என்பதை அவளுக்கு உணர்த்த முயன்று கொண்டிருந்தது.
"மாமாவைப் பார்க்கணும் பழனி.. என்னை அங்கே கூட்டிண்டு போ.. " தன்னவனிடம் அழைத்துச் செல்லாத கோபத்தில் பழனியின் தோளில் பலம் கொண்ட மட்டும் அடித்தவள், வலி தாங்க முடியாமல் கதறி அழுதாள்.
"அ.. அண்ணி தயவு செஞ்சு அழாதீங்க அண்ணி.. இப்போ எப்டி நான் வயலுக்குப் போறது? ஆஸ்பத்திரிக்கு போய் உங்களுக்கு குழந்தை பிறந்து, நீங்க கண்ணு திறக்கும் போது, அண்ணா உங்க கண்ணு முன்னாடி நிப்பாரு.. இதுக்கு நான் பொறுப்பு.." கலங்கிய கண்களுடன் அவளை சமாதானம் செய்து விட்டு நிமிரும் போது ஹாஸ்பிடல் வந்து விட்டிருந்தது.
கண்மணியின் தலையிலிருந்து வழிந்த இரத்தத்தின் உதவியுடன் சிவந்து போயிருந்தது அவனின் வெள்ளை சட்டை. சட்டையை உதறி விட்டவன் பாக்கெட்டில் இருந்த பணத்தை கொடுத்து விட்டு, ஆட்டோவை விட்டு இறங்கிக் கொண்டான். நேரம் காலம் தெரியாமல் மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது.
கண்மணியின் சேலைத் தலைப்பை உதறி அவளின் தலையில் போர்த்தி விட்டவன், தாமதியாமல் ஹாஸ்பிடலுக்குள் ஓடினான்.
அரைமயக்க நிலையில் 'மாமா..', 'மாமா'வென்று ஜெபம் செய்து கொண்டிருந்தவளை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்தவன், அவளைப் பிரசவ அறைக்குள் அனுமதித்ததும் அண்ணனிடம் விடயத்தைக் கூறுவதற்காக வயலை நோக்கிப் புறப்பட்டான், அவனின் அண்ணன் ரங்கராஜ் தன் இறுதி மூச்சுக்களை சுவாசித்தபடி அடி வாங்கிய களைப்பில் மயங்கி சரிந்திருப்பதை அறியாமல்..
தொடரும்.
தினமும் யூடி கொடுக்க ட்ரை பண்றேன் தோழமைகளே.. முதல் அத்தியாயம் எப்படி இருக்குனு சொல்லுங்க..