பரத்துக்கு நிறைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சிறுவனோ சில மணி நேத்திலேயே சோர்வுற, சகுந்தலாவுக்கு அதைக் காணும் போது நெஞ்சைக் கசக்கிப் போட்டது.
"மம்மி... போதும்... ஐ வான்ட் டு கோ ஹோம்." என்றான் பரத் சிணுங்கலாக.
சகுந்தலா மகனை சமாதானப்படுத்த முயன்ற சமயம், "ஹேய் சேம்ப்... வாட்சப்?" எனக் கேட்டவாறு அங்கு வந்தான் துஷ்யந்த்.
துஷ்யந்த்தைக் கண்டதும் இவ்வளவு நேரமும் இருந்த சோர்வு நீங்கி, "சாக்லெட் அங்கிள்..." எனக் கத்தியவாறு துஷ்யந்த்தை நோக்கி ஓடினான் பரத்.
சகுந்தலாவுக்கே பரத்தின் நடவடிக்கை ஆச்சர்யமாக இருந்தது.
சிறு வயதில் இருந்தே யாரும் இன்றி, தனித்து, பெற்றோர், குடும்பம் எல்லாம் சகுந்தலாவே ஆகிப் போனதால் அவ்வளவு விரைவில் பரத் யாருடனும் ஒட்ட மாட்டான்.
ஆனால் பார்த்த முதல் நாளில் இருந்தே துஷ்யந்த்துடன் இவ்வளவு நெருக்கமாக பரத் பழகுவது ஒரு பக்கம் தாயாக சகுந்தலாவுக்கு சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சிகிச்சை முடிந்து துஷ்யந்த்தைப் பிரிந்து செல்லும் போது தன் மகனின் மனம் பாதிப்படையுமோ என்ற பயமும் வந்தது.
தன்னை நோக்கி ஓடி வந்த சிறுவனை அள்ளித் தூக்கிய துஷ்யந்த் பரத்தின் கன்னத்தில் அழுத்த முத்தமிட, பரத்தின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.
"சாக்லெட் அங்கிள்... என் ஃப்ரெண்ட்ஸோட டேடீஸும் வர்க் முடிஞ்சு வரும் போது இப்படி தான் என் ஃப்ரெண்ட்ஸ் சீக்ல கிஸ் பண்ணுவாங்க." என பரத் கூறவும் துஷ்யந்த்தும் சகுந்தலாவும் ஒரு சேர அதிர்ந்தனர்.
ஆனால் பரத்தின் ஒரு தந்தைக்கான ஏக்கத்தை இருவராலும் உணர முடிந்தது.
துஷ்யந்த் சகுந்தலாவை நோக்க, சகுந்தலா தன் கலங்கிய விழிகளை மறைப்பதற்காக வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.
பெருமூச்சு விட்ட துஷ்யந்த், "அதுக்கென்ன சேம்ப்? அங்கிளும் இனி பரத்த மீட் பண்ணும் போதெல்லாம் இப்படி டைட்டா ஹக் பண்ணி சீக்ல கிஸ் பண்றேன்." என்றவன் சொன்னபடியே பரத்தின் கன்னத்தில் மீண்டும் அழுத்தமாக முத்தமிட, வயிறு குலுங்கச் சிரித்தான் பாலகன்.
பரத்துடன் சேர்ந்து துஷ்யந்த்தும் சிரிக்க, "அங்கிள்... டேடீஸ் தானே அப்படி கிஸ் பண்ணுவாங்க. அப்போ நீங்க தான் என் டேடியா?" என பரத் திடீரென கேட்கவும் துஷ்யந்த் அதிர, "ஷட்டப் பரத்..." என சத்தமிட்டாள் சகுந்தலா.
தாய் திடீரென அதட்டவும் பயந்த சிறுவன் ஓ என அழத் தொடங்க, "ஸ்டாப் க்ரையிங் பரத்." என மீண்டும் சத்தமிட்டாள் சகுந்தலா.
தன் தோளில் முகம் புதைத்து அழும் சிறுவனின் கண்ணீர் துஷ்யந்த்தின் மனதை வாட்ட, "ஜஸ்ட் ஸ்டாப் இட் சகுந்தலா. சின்ன பையன் சொல்றதுக்கு எல்லாம் எதுக்கு இவ்வளவு பெரிசா ரியாக்ட் பண்ணுற? பரத்தோட கண்டிஷன் என்னன்னு உனக்கு நல்லாவே தெரியும். அப்படி இருந்தும் பாரு குழந்தைக்கு என்ன பண்ணி வெச்சிருக்கன்னு." என்றான் துஷ்யந்த் கோபமாக.
அப்போது தான் தன்னிலை அடைந்த சகுந்தலாவுக்கு அவளின் தவறு புரிந்தது.
"துஷ்யந்த் நான்..." என சகுந்தலா ஏதோ கூற வர, அவன் பார்த்த பார்வையில் கப்சிப் என வாயை மூடிக் கொண்டாள் சகுந்தலா.
"சேம்ப்... இட்ஸ் ஓக்கே கண்ணா. மம்மி தானே திட்டினாங்க. அதுக்கு போய் அழலாமா? பரத் குட் பாய் தானே. சூப்பர் ஹீரோஸ் போல ப்ரேவ்வா இருப்பீங்கன்னு அங்கிள் கிட்ட சொன்னீங்க தானே. என்னாச்சு என் சூப்பர் ஹீரோவுக்கு?" என பரத்தை சமாதானப்படுத்தியவாறு துஷ்யந்த் அங்கிருந்து வெளியேற, தொப்பென அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள் சகுந்தலா.
தன்னை நினைத்தே அவளுக்கு வெறுப்பாக இருந்தது.
சில மணித்துளிகள் கடந்து இருக்கையில் கண் மூடி சாய்ந்திருந்த சகுந்தலா தன் அருகே அரவம் கேட்டு விழி திறந்து பார்க்க, அவள் முன்னே ஒரு காஃபி கப்பை நீட்டினான் துஷ்யந்த்.
அச் சமயம் அவளுக்கு அக் காஃபி தேவையாக இருக்க, நன்றி கூறி வாங்கிக் கொண்ட சகுந்தலா ஒரு மிடர் பருகி விட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அவள் பரத்தைத் தேடுவதை உணர்ந்த துஷ்யந்த், "பரத் ரேணு ஆன்ட்டி கூட இருக்காங்க. சீஃப் நர்ஸ் அவங்க. சின்ன குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்கும்." என்றான்.
சரி எனத் தலையசைத்த சகுந்தலா காஃபியை மெது மெதுவாகப் பருக, சகுந்தலா காஃபியைப் பருகி முடிக்கும் வரை காத்திருந்த துஷ்யந்த் காலி கப்பை வாங்கி குப்பைக் கூடையில் போட்டு விட்டு வந்து சகுந்தலாவின் அருகே அமர்ந்தான்.
சற்று நேரத்திற்கு முன் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு வேண்ட சகுந்தலா, "சாரி..." என வாய் திறக்க, அதே சமயம் துஷ்யந்த்தும், "சாரி..." என்றான்.
இருவரின் முகத்திலும் புன்னகை.
"சாரி சகுந்தலா. நான் அப்போ உன்ன அப்படி திட்டி இருக்கக் கூடாது. எனக்கு அதுக்கு எந்த ரைட்ஸும் இல்ல." என மன்னிப்புக் கேட்டான் துஷ்யந்த்.
மறுப்பாகத் தலையசைத்த சகுந்தலா, "இல்ல துஷ்யந்த். இதுல எதுக்கு ரைட்ஸ் எல்லாம்? உங்க தப்பு எதுவும் இல்ல. பரத்தோட நல்லதுக்காக தானே சொன்னீங்க. அதுவும் இல்லாம நானும் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன்." என்றாள் சகுந்தலா.
"ம்ம்ம்... ஓக்கே... பாஸ்ட் இஸ் பாஸ்ட். இனி அதைப் பத்தி பேசி பிரயோஜனம் இல்ல. இனிமே கேர்ஃபுல்லா நடந்தா சரி. பரத்தோட ஹார்ட் கண்டிஷன் உனக்கு ரொம்ப நல்லா தெரியும். அதனால அதுக்கேத்த மாதிரி பார்த்து நடந்துக்கணும். பரத்துக்கு இப்போ தான் ஐந்து வயசு. அந்த வயசுக்கு ஏத்தது போல தான் அவன் நடந்துப்பான். தான் ஒரு பேஷன்ட்டுன்னு நினைக்காம குழந்தை குழந்தைத்தனத்தோட இருக்குறது தான் பரத்தோட மென்ட்டல் ஹெல்த்துக்கு நல்லது. புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அதனால தான் நீ பையன திட்டவும் கொஞ்சம் கோவமா பேசிட்டேன். வன்ஸ் அகைன் சாரி." என்றான் துஷ்யந்த்.
சகுந்தலா புரிந்ததாகத் தலையசைத்த நேரம், "மம்மி..." எனக் கத்திக் கொண்டு ஓடி வந்த பரத், "சாரி மம்மி. சாரி அங்கிள். இனி அப்படி பேச மாட்டேன்." என்கவும் அவனை வாரி அணைத்த சகுந்தலா, "மம்மியும் சாரி டா கண்ணா." என்றாள் கண் கலங்க.
சில நொடிகள் அப்படியே மௌனமாய் கழிய, "இனாஃப்... இனாஃப்... க்ரையிங் சீன்ஸ் எல்லாம் முடிஞ்சதுன்னா நாம கொஞ்சம் ஹேப்பி மூடுக்கு போகலாமா?" என துஷ்யந்த் கேட்கவும் தனையனும் தாயும் ஒரு சேர துஷ்யந்த்தைக் குழப்பமாக நோக்கினர்.
உடனே தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சாவியை வெளியே எடுத்து இருவருக்கும் காட்டிய துஷ்யந்த், "உங்க ரெண்டு பேருக்கும் ஸ்டே பண்ண வீடு பார்த்துட்டேன்." என்றான் புன்னகையுடன்.
"ஹே... ஜாலி..." என பரத் துள்ளிக் குதிக்க, சகுந்தலாவின் முகத்திலும் புன்னகை.
"தேங்க்ஸ் துஷ்யந்த். முன்ன பின்ன தெரியாத இடத்துக்கு வந்து சின்னப் பையன வெச்சிக்கிட்டு எப்படி சமாளிக்க போறேனோன்னு யோசனையா இருந்தது. அந்தக் கடவுளா பார்த்து உங்கள அனுப்பி வெச்சிருக்கார். எனக்காகவும் என் பையனுக்காகவும் நீங்க நிறைய பண்ணுறீங்க. இதுக்கெல்லாம் நான் எப்படி கைம்மாறு பண்ண போறேனோ தெரியல." என சகுந்தலா கூறவும், "ஒருத்தொருக்கொருத்தர் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம ஹெல்ப் பண்ணுறது தான் ஃப்ரெண்ட்ஷிப். அதுவும் இல்லாம உனக்கு கண்டிப்பா ஏதாவது பண்ணி தான் ஆகணும்னா அது ஒன்னும் அவ்வளவு பெரிய கஷ்டம் இல்ல. இன்னைக்கு உன்னோட புது வீட்டுல உன் கையால் எனக்கு வயிறு நிறைய சமைச்சி போட்டாலே போதும்." எனத் தோளைக் குலுக்கினான் துஷ்யந்த்.
துஷ்யந்த் அவ்வாறு கூறி விட்டு குறும்புப் பார்வை பார்க்க, சட்டென வாய் விட்டுச் சிரித்தாள் சகுந்தலா.
"வாவ் மம்மி. சாக்லெட் அங்கிள் நம்ம கூட வராரா? சூப்பர்." எனக் கத்தினான் பரத்.
"ஆமா சேம்ப். நாம முதல்ல போய் ஹோட்டல்ல இருந்து உங்க திங்க்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு புது வீட்டுக்கு போகலாம்." என்ற துஷ்யந்த் பரத்துடன் முன்னே நடக்க, முகம் கொள்ளாப் புன்னகையுடன் அவர்களைப் பின் தொடர்ந்தாள் சகுந்தலா.
முதலில் ஹோட்டலுக்கு சென்று இருவரின் பொருட்களையும் எடுத்தவர்கள் பின் ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்று வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கினர்.
அவற்றுக்கான செலவை துஷ்யந்த் ஏற்பதாக எவ்வளவோ கூறியும் உறுதியாக மறுத்து விட்டாள் சகுந்தலா.
வேறு வழியின்றி அமைதியான துஷ்யந்த் அதற்குப் பதிலாக பரத்திற்கு விளையாட்டு சாமான்களை வாங்கிக் குவிக்க, பரத் வானில் பறக்காத குறை.
சகுந்தலாவுக்கோ பரத்தின் முகத்தில் இருந்த புன்னகையைக் கண்ட பின் வேறு எதுவும் மறுத்துக் கூற முடியாத நிலை.
பார்ப்பவர்கள் கண்ணுக்கு இவர்கள் மூவரும் மகிழ்ச்சியான ஒரு குடும்பம் போல் தெரிய, மாலுக்குள் நுழைந்ததில் இருந்தே இவர்களைக் கண்காணித்த ஒரு உருவம் யாருக்கோ கைப்பேசியில் அழைத்து ஏதோ கூறியது.
பின் மூவரும் சேர்ந்து துஷ்யந்த் வாங்கிய வாடகை வீட்டுக்கு கிளம்பினர்.
வீட்டைக் கண்ட சகுந்தலாவின் கண்களில் ஆச்சர்யம் என்றால் பரத்துக்கோ உற்சாகம்.
பெரிய பங்களா போன்றும் இல்லாமல் குடிசை போன்றும் இல்லாமல் பொருத்தமான அளவில் கூடியது மூவருக்கேனும் வசிக்கக் கூடிய அளவில் அழகாக கட்டப்பட்டிருந்தது அவ் வீடு.
ஒவ்வொரு மூலையையும் பார்த்துப் பார்த்து கட்டி இருந்தார்கள்.
"வாவ்... பியூட்டிஃபுல். இனிமே இது தான் நம்ம வீடா மம்மி?" என்ற பரத்தின் குரலில் தன்னிலை அடைந்த சகுந்தலா, "ரொம்ப அழகா இருக்கு வீடு. வாடகை அதிகமோ?" எனக் கேட்டாள் துஷ்யந்த்திடம் தயக்கமாக.
"வாடகை பத்தி எதுவும் கவலைப்பட வேணாம் சகுந்தலா. எனக்கு தெரிஞ்சவர் வீடு தான். அவங்க பையன் ஃபேமிலியோட ஃபாரின்ல இருக்காங்க. கொஞ்சம் நாள் முன்னாடி தான் அவங்க மருமகள் ப்ரெக்னென்ட்டா இருக்காங்கன்னு அங்கயே ஷிஃப்ட் ஆகிட்டாங்க. வாடகை எதுவுமே தேவையில்லைன்னு சொல்லிட்டாங்க. நானும் கேட்டேன். பட் வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டாங்க. சோ எவ்வளவு நாள் வேணாலும் நீங்க இங்க இருக்கலாம்." என்றான் துஷ்யந்த்.
மூவரும் உள்ளே சென்ற மறு நொடியே பரத் துஷ்யந்த் வாங்கித் தந்த விளையாட்டுப் பொருட்களை வைத்து விளையாட ஆரம்பிக்க, துஷ்யந்த்தின் உதவியுடன் வீட்டை தமக்கு ஏற்றபடி மாற்றி வைத்தாள் சகுந்தலா.
சகுந்தலா மூவருக்கும் இரவுணவை சமைக்க தயாரான நேரம் பார்த்து துஷ்யந்த்தின் கைப்பேசி ஒலி எழுப்பியது.
கைப்பேசியை எடுத்துப் பார்க்க, ஏகப்பட்ட தவறிய அழைப்புகள்.
அப்போது தான் துஷ்யந்த்திற்கு அறுவை சிகிச்சையின் போது கைப்பேசியை சைலென்ட் மூடில் போட்டது நினைவு வந்தது.
உடனே அழைப்பை ஏற்க, மறு முனையில் என்ன கூறப்பட்டதோ, "டென் மினிட்ஸ்ல வரேன்." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.
துஷ்யந்த்தின் முகத்தில் இருந்த பதட்டத்தைக் கண்டு கொண்ட சகுந்தலா அவனைக் குழப்பமாக நோக்கினாள்.
"என்னாச்சு துஷ்யந்த்? ஏதாவது இமர்ஜென்சியா?" எனக் கேட்டாள் சகுந்தலா.
தன் முகத்தில் இருந்த பதட்டத்தை மறைத்து வரவழைக்கப்பட்ட புன்னகையுடன், "இமர்ஜென்சி இல்ல. பட் கொஞ்சம் அர்ஜென்ட்டா போய் ஆகணும்." என்றான் துஷ்யந்த்.
அதற்கு சகுந்தலா பதிலளிக்கும் முன்பே தன் விளையாட்டை நிறுத்தி விட்டு ஓடி வந்த பரத், "கிளம்ப போறீங்களா சாக்லெட் அங்கிள்? பரத் கூடவும் மம்மி கூடவும் டின்னர் சாப்பிடுவேன்னு சொன்னீங்க." என துஷ்யந்த்தின் கால்களைக் கட்டிக்கொண்டு சிணுங்கினான்.
பரத்தின் உயரத்துக்கு மண்டியிட்ட துஷ்யந்த, "நீங்க இன்னைக்கு மம்மி கூட சாப்பிடுவீங்களாம். அங்கிள் இன்னொரு நாள் கண்டிப்பா பரத் கூட சேர்ந்து சாப்பிடுவேன்." என சமாதானப்படுத்தினான்.
முகம் வாடிய பரத் மறுப்பாகத் தலையசைக்க, "பரத்... அது தான் அங்கிள் சொல்றார்ல. ஏன் அடம் பிடிக்கிற?" எனக் கேட்டாள் சகுந்தலா.
"பரத்தின் முகமோ களையிழந்து காணப்பட, அவனின் முகத்தை தன் கைகளில் ஏந்திய துஷ்யந்த், "பரத் குட் பாய் தானே. அங்கிள் சொன்னா சேம்ப் கேட்டுப்பீங்க தானே. பரத் மம்மி பேச்ச மீறுவீங்களா?" என துஷ்யந்த் கேட்கவும் உடனே இல்லை எனத் தலையாட்டினான் பரத்.
"குட். அப்போ அங்கிளும் அங்கிளோட மம்மி பேச்சை கேட்கணும்ல. சோ நான் இன்னைக்கு கிளம்புறேன். பட் ஐ ப்ராமிஸ் யூ. கண்டிப்பா இன்னொரு நாளைக்கு அங்கிள் ஃப்ரீயா இருந்தா நாம சேர்ந்து டின்னர் சாப்பிடலாம். இப்போ பரத் குட் பாயா மம்மிக்கு டிஸ்டர்ப் பண்ணாம சாப்பிட்டு தூங்குவீங்களாம். நாம நாளைக்கு மீட் பண்ணலாம்." என்ற துஷ்யந்த் பரத்தின் இரு கன்னங்களிலும் அழுத்தமாக முத்தமிட, சிறுவனின் முகத்தில் லேசான புன்னகை.
அவன் எந்தளவு தந்தைப் பாசத்துக்கு ஏங்குகிறான் எனப் புரிந்து கொண்ட துஷ்யந்த்திற்கு தன்னால் அவனின் வருத்தத்தை நீக்க முடியவில்லையே என்ற எண்ணம் மனதைப் பிசைந்தது.
சகுந்தலா வாசல் வரை சென்று துஷ்யந்தை வழியனுப்பினாள்.
"இன்னைக்கு எடுத்த டெஸ்ட் ரிச்ல்ட்ஸ் எல்லாம் நாளைக்கே வந்துடும் சகுந்தலா. நான் பார்த்துட்டு அடுத்து என்ன பண்ணலாம்னு சொல்றேன்." என்ற துஷ்யந்திடம், "தேங்க்ஸ்." என்றாள் சகுந்தலா.
அவளைப் பார்த்து புன்னகைத்த துஷ்யந்த், "பாய். டேக் கேர். ஏதாவது தேவைன்னா எந்த நேரம்னாலும் கால் பண்ணு." என்றவன் தன் வண்டியில் ஏறிக் கிளம்பிச் சென்றான்.
துஷ்யந்த் சென்றதும் கதவை சாத்தி விட்டு உள்ளே வந்த சகுந்தலாவிற்கு பல நாட்கள் கழித்து மனதில் ஒருவித நிம்மதி.