• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வலி - அத்தியாயம் 4

MK1

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 22, 2023
85
67
18
Thanavur
'சந்திர பவனம்' என வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்த அவ் உயர் நடுத்தர வர்க்க வீட்டின் கேட்டை திறந்து விட்ட வாட்ச்மென்னுக்கு மென் புன்னகையுடன் தலையசைத்து விட்டு காரை வீட்டு வாயிலில் நிறுத்தினான் துஷ்யந்த்.

துஷ்யந்த் சகுந்தலாவின் வீட்டில் இருக்கும் போது கைப்பேசியில் அழைத்த அவனின் தாய் பரிமளம் உடனே அவனை வீட்டுக்கு வரக் கூறவும் என்னவோ ஏதோவென வந்து சேர்ந்தான் துஷ்யந்த்.

வெளியுலகத்துக்கு பிரபல மருத்துவனாக இருந்தாலும் தாய்க்கு பிள்ளை தானே. அதனால் தான் அவரின் பேச்சைத் தட்டாது உடனே கிளம்பி வந்தான்.

முகத்தில் என்றும் இருக்கும் புன்னகையுடன் வீட்டினுள் நுழைந்த துஷ்யந்த் ஹால் சோஃபாவில் அமர்ந்து இவன் வருகைக்காக காத்திருந்த பெற்றோரை குழப்பமாக நோக்கினான்.

"அம்மா... அவசரமா வர சொன்னீங்க. என்ன விஷயம்?" எனக் கேட்டான் துஷ்யந்த்.

துஷ்யந்த்தின் தந்தை, டாக்டர் சந்திரசேகரன், தனையனின் ரோல் மாடல், பிரபல நரம்பியல் நிபுணர்.

தாய் பரிமளம். ஒரு பெரிய ‌NGO வைத்து நடாத்தி வருகிறார்.

சந்திரசேகரன் துஷ்யந்த்தையே வெறிக்க, "நான் ஒரு பொண்ணு ஃபோட்டோ, பயோ டேட்டா அன்ட் கான்டாக்ட் நம்பர் அனுப்பி இருந்தேனே துஷ்யந்த். அந்தப் பொண்ணு கூட பேசினியா?" எனக் கேட்டார் பரிமளம்

"ஷிட்..." என துஷ்யந்த் தலையில் அடித்துக்கொள்ள, அவனின் செய்கையே அவன் தான் சொன்ன காரியத்தை செய்யவில்லை என பரிமளத்துக்கு எடுத்துரைத்தது.

"சாரி மா... மறந்துட்டேன். கொஞ்சம் இமர்ஜென்சி கேஸ்ல மாட்டிக்கிட்டேன்." என்றான் துஷ்யந்த் தயக்கமாக.

"எது? ஊரே வேடிக்கை பார்க்க எவனோ பெத்த பிள்ளைக்கு டாய்ஸ் வாங்கி கொடுக்குறதும் அந்தப் பிள்ளையோட அம்மாவுக்கு பாடிகார்ட் வேலை பார்க்குறதும் தான் சாரோட இமர்ஜென்சி கேஸா?" எனக் கேட்டார் சந்திரசேகரன் நக்கலாக.

"வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு திரும்ப வில்லை அடைய முடியாது. அது போல தான் ஒரு தடவை விட்ட வார்த்தைய திரும்ப பெற முடியாது ப்பா." என்றான் துஷ்யந்த் அமைதியாக ஆனால் அழுத்தமான குரலில்.

"பின்ன இதுக்கு என்ன டா சொல்ல போற?" எனக் கோபமாகக் கேட்டவாறு எழுந்த சந்திரசேகரன் தன் கைப்பேசியை எடுத்து துஷ்யந்த்திடம் காட்ட, அதனை வாங்கிப் பார்த்த துஷ்யந்த்திற்கு முதலில் தோன்றியது, 'எவ்வளவு அழகான ஃபேமிலி ஃபோட்டோ.' என்பது தான்.

ஆனால் அதை வாய் விட்டுக் கூறி யார் அவனின் பெற்றோரிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது?

ஏனெனில் அப் புகைப்படத்தில் இருந்தது துஷ்யந்த்தின் இடுப்பில் இருந்த பரத் அவன் வாங்கித் தந்த விளையாட்டுப் பொருளை வைத்து சிரித்துக் கொண்டிருக்க, கூடவே முகத்தில் பெரிய புன்னகையுடன் பரத்தின் கன்னத்தைக் கிள்ளிக் கொண்டிருந்தாள் சகுந்தலா.

சில நொடிகள் கழித்து தான் துஷ்யந்த்தின் எண்ணம் அவன் மண்டையில் உரைக்க, தன் பெற்றோரின் மனநிலை புரிந்தது.

சம்பந்தப்பட்ட தானே அவ்வாறு எண்ணும் போது யாராக இருந்தாலும் அவ்வாறு தானே எண்ணி இருப்பார்கள். இதில் அவர்களது தவறு என்ன இருக்கிறது?

போதாக்குறைக்கு முன் கோபக்காரரான அவனின் தந்தையிடம் இப் புகைப்படத்தை எடுத்து அனுப்பியவர் என்னென்ன கதை கட்டினாரோ?

சந்திரசேகரனிடம் கைப்பேசியை திரும்ப ஒப்படைத்த துஷ்யந்த் நீண்ட பெருமூச்சுடன் கணவனுக்கு குறையாத கோபத்துடன் அமர்ந்திருந்த பரிமளத்தின் அருகே அமர்ந்து, "இதுக்கு தான் ரெண்டு பேரும் இவ்வளவு ரியாக்ட் பண்ணுறீங்களா?" எனக் கேட்டான்.

கணவன் மனைவி இருவரிடமும் பதில் இல்லை. ஆனால் துஷ்யந்த்தின் பதிலை எதிர்ப்பார்த்துக் காத்திருக்க, "நிஜமாவே இன்னைக்கு மார்னிங்ல இருந்து மூணு இமர்ஜென்சி கேஸஸ்." என்கவும், "அப்போ இந்த ஃபோட்டோ மாஃபிங்னு சொல்ல வரியா?" எனக் கேட்டார் பரிமளம் எரிச்சலாக.

"இல்ல." என்றான் துஷ்யந்த் புன்னகையுடன்.

துஷ்யந்த்தின் பதிலாலும் அவனின் முகத்தில் இருந்த புன்னகையினாலும் அவனது பெற்றோரின் இரத்த அழுத்தம் எகிற தொடங்க, "ஷீ இஸ் மை ஸ்கூல்மேட். சகுந்தலா." என்றான் துஷ்யந்த்.

அதன் பின் தான் அவனின் பெற்றோரின் முகத்தில் இருந்த இறுக்கம் லேசாகத் தளர்ந்தது.

"அவ பையன் தான் பரத். அப்பா... நீங்க ஒரு டாக்டர். NDCM டிசீஸ் பத்தி கண்டிப்பா கேள்விப்பட்டு இருப்பீங்க. பரத் இஸ் அ ஹார்ட் பேஷன்ட். என் ஃப்ரெண்டோட பையன் அவன்." என்றவன் சகுந்தலாவைப் பற்றியும் அவளை சந்தித்த நிகழ்வையும் பரத்தின் உடல்நிலையையும் தெளிவாக விபரித்து விட்டு, "ஒரு டாக்டரா நான் பரத்துக்கு கண்டிப்பா தேவை. அதை விட ஒரு வெல்விஷரா அவனோட மென்ட்டல் ஹெல்த்தையும் நான் பார்க்கணும். டாக்டர்னா மனிதாபிமானத்தோட இருக்குறது முக்கியம். சகுந்தலா என்னோட ஃப்ரெண்ட். ஒரு சிங்கிள் மதரா தெரியாத ஒரு ஊர்ல ஹார்ட் பேஷன்ட் மகனோட தனியா வந்து இருக்குற ஒரு பொண்ணுக்கு, என் ஃப்ரெண்டுக்கு என்னால முடிஞ்ச ஒரு சின்ன உதவி. அது தப்பா? சொல்லுங்க அப்பா. சொல்லுங்க அம்மா. பார்க்குறவங்க என்ன நினைக்கிறாங்கன்னு எனக்கு முக்கியம் இல்ல. ஆனா என்னோட பேரன்ட்ஸ் என்ன நினைக்கிறாங்கன்னுறது எனக்கு முக்கியம் தான்." என்றான் துஷ்யந்த்.

மறு நொடியே அவனை அணைத்துக் கொண்ட பரிமளம், "சாரி டா கண்ணா. அப்பாவும் அம்மாவும் உன்ன அப்படி பேசி இருக்கக் கூடாது. அப்பாவோட ஃப்ரெண்ட் ராகவ் தான் மால்ல உங்கள பார்த்துட்டு ஃபோட்டோ எடுத்து அப்பாவுக்கு அனுப்பி ஏதேதோ சொல்லிட்டார். பையனுக்கு கல்யாணம் ஆகி இவ்வளவு பெரிய பையன் இருந்தும் யாருக்கும் தெரியாம மறைக்கிறோமாம் அது இதுன்னு பேசவும் தான் அப்பாவுக்கும் கோவம். ஒன்னும் தப்பா எடுத்துக்க வேணாம் கண்ணா." என்கவும் புன்னகைத்த துஷ்யந்த், "அம்மா... நான் எவ்வளவு பெரிய ஆளா வளர்ந்தாலும் உங்க ரெண்டு பேருக்கும் நான் பையன் தான். என்னைத் திட்டவும் கண்டிக்கவும் உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. சரி இப்போ சொல்லுங்க. சகுந்தலாவுக்கும் பரத்துக்கும் நான் ஹெல்ப் பண்ணணுமா? வேணாமா?" எனக் கேட்டான் புருவம் உயர்த்தி.

பரிமளம் தன் கணவனை நோக்க, துஷ்யந்த்தின் தோளில் தட்டிக் கொடுத்த சந்திரசேகரன், "ஐம் சாரி மை சன். உனக்கு தான் என் கோவம் பத்தி தெரியுமே. அந்தப் பையனுக்கு நீ தான் ட்ரீட்மெண்ட் பண்ணி ஆகணும். அது உன்னோட கடமை. அந்த ப்ளேடி ராகவோட நம்பர முதல்ல ப்ளாக் பண்ணணும். சும்மா கண்டதையும் பேசி என் பீ.பி ஏத்திட்டான்." என்றார் எரிச்சலாக.

சந்திரசேகரன் அவ்வாறு கூறவும் துஷ்யந்த்தும் பரிமளமும் பக்கென சிரிக்க, சந்திரசேகரனின் முகத்திலும் புன்னகை.

"சரி சரி... போதும் சிரிச்சது. துஷ்யந்த்... போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா. அம்மா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்." என்று விட்டு பரிமளம் எழுந்து செல்ல, மனைவியைத் தொடர்ந்து எழுந்த சந்திரசேகரன், "துஷ்யந்த்... ஒரு டாக்டருக்கு மனிதாபிமானம் ரொம்ப முக்கியம் தான். இல்லன்னு சொல்லல. அதுவும் அந்தப் பொண்ணு உன்னோட ஃப்ரெண்ட். நீ தாராளமா என்ன உதவி வேணாலும் செய்யலாம். ஆனா உன்னோட மனிதாபிமானமும் இரக்க குணமும் ஒரு லிமிட்டோட இருக்குறது நல்லது. நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்." என்றவர் துஷ்யந்த்தின் தோளை அழுத்தி விட்டு கிளம்பினார்.

என்ன இருந்தாலும் பெற்றவர் அல்லவா?

தந்தை சொன்னதைக் கேட்ட துஷ்யந்த்தின் முகத்தில் ஒரு கசந்த புன்னகை.

'ரொம்ப நல்லாவே புரிஞ்சதுப்பா. என் பேரன்ட்ஸ பத்தி எனக்கு தெரியும் பா. அவங்க நல்லவங்க தான். ரொம்பவே நல்லவங்க. ஆனா சொந்த பையன்னு வரும் போது சுயநலமா இருந்தாலும் எனக்கு நல்லதையும் சிறந்ததையும் மட்டும் தான் யோசிப்பீங்க. என்ட் சகுந்தலாவோட சூழ்நிலையையும் நான் நிச்சயமா மிஸ்யூஸ் பண்ண மாட்டேன். நீங்க எல்லாரும் இப்போ இருக்குற இடத்துலயே இருக்குறது தான் எல்லாருக்கும் நல்லது. என்னோட சுயநலத்துக்காக என் பேரன்ட்ஸுக்கு என்னோட ஆசைய மறுத்த கல்நெஞ்சக்காரங்கன்னுற பெயர நிச்சயம் வாங்கி தர மாட்டேன். உங்கள கெட்டவங்களாக்கவும் எனக்கு விருப்பம் இல்ல. காணுற எல்லா கனவுமே நனவாகுறது இல்லயே. அது போலவே ஒரு நிறைவேறாத, நிறைவேறவே முடியாத கை சேரா கனவா போகட்டும் என்னோட காதல்.' என்றான் துஷ்யந்த் மனதுக்குள் விரக்தியாக.

துஷ்யந்த் குளித்து உடை மாற்றி வந்ததும் பரிமளம் மூவருக்கும் உணவைப் பரிமாறினார்.

சில நொடிகள் மௌனமாகக் கழிய, "துஷ்யந்த்... அந்தப் பொண்ணு ஃபோட்டோ பார்த்தியா? எப்படி இருக்கா? அவ கூட டாக்டர் தான்." எனக் கேட்டார் பரிமளம்.

"ம்ம்ம்... பார்த்தேன். நல்லா தான் இருக்காங்க." என்றான் துஷ்யந்த் உணவுத் தட்டை விட்டு தலையை உயர்த்தாமல்.

"அப்போ அம்மா மேற்கொண்டு பேசட்டுமா?" என ஆவலாகக் கேட்ட தாயை புன்னகையுடன் நோக்கிய துஷ்யந்த், "அம்மா... அந்தப் பொண்ணு நல்லா இருக்காங்க. ஆனா எனக்கு சரிப்பட்டு வராது மா." எனக் கூறவும் முகம் வாடினார் பரிமளம்.

துஷ்யந்த், "அம்மா... ஹஸ்பன்ட் அன்ட் வைஃப் ரெண்டு பேருமே டாக்டரா இருக்குறது சரிப்பட்டு வராது மா. அதுக்காக நான் ஒன்னும் பொண்டாட்டி வேலைக்கு போகக் கூடாதுன்னு சொல்ற பிற்போக்குவாதி எல்லாம் கிடையாது. என் பொண்டாட்டிக்கு நிச்சயம் அவளுக்கு பிடிச்ச வேலைய பார்க்க நான் சப்போர்ட்டா இருப்பேன்." என்க, "அப்போ ஏன் இந்தப் பொண்ண வேணாம்ங்குற?" எனக் கேட்டார் சந்திரசேகரன் மகனை எடை போட்டவாறு.

தந்தையின் பார்வையின் பொருளை உணர்ந்த துஷ்யந்த் வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கினான்.

பரிமளம் துஷ்யந்த்தின் பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்க, "நானும் அப்பாவும் டாக்டர்ஸ். எங்க வர்க்கிங் டைம் காலைல ஆரம்பிச்சு சாய்ங்காலத்துக்குள்ள முடியிறதுன்னு இல்ல. நீங்களே பார்க்குறீங்க தானே. சம்டைம் நைட் ஷிஃப்ட். இல்லன்னா மிட் நைட்ல கூட இமர்ஜென்சின்னு வந்தா போய் ஆகணும். இது எல்லாம் முடிஞ்சு நான் டயர்டாவோ, ஸ்ட்ரெஸ்ஸாவோ வீட்டுக்கு வரும் போது உங்களுக்கு அடுத்ததா எனக்கு ரிலீஃபா இருக்க போறது என் மனைவி தான். ஆனா என் வைஃப் டாக்டரா இருந்தா என்னைப் போலவே நேரம் காலம் பார்க்காம போய் ஆகணும். நான் ஓவர் டயர்டா வரும் போது அவ வீட்டுல இல்லன்னா கல்யாணம் ஆன புதுசுல வேணா எதுவும் பெரிசா தோணாது. ஆனா கொஞ்சம் நாள் போனா என்னை விட வேலை முக்கியமான்னு ஒரு எண்ணம் எனக்கு வரும். மனுஷ மனசு குரங்கும்மா. அது எப்போ வேணா எப்படி வேணா மாறலாம். அப்புறம் எங்க ரெண்டு பேருக்கும் இடைல ஈகோ அது இதுன்னு சண்டை வந்து கடைசியில டிவோர்ஸ்ல போய் நிற்க வேண்டி வரும். அதனால தான் மா சொல்றேன். எனக்கு வரப் போற மனைவி வேலைக்கு போகலாம். அதுவும் பிடிச்ச வேலைக்கு போகலாம். பட் நான் வேலை விட்டு வரும் போது வீட்டுல இருக்குறது போல, உங்களுக்கு அடுத்ததா இந்த குடும்பத்த எடுத்து நடத்த கூடிய மனைவியா வேணும். அப்படி ஒரு பொண்ணா பாருங்க." என்றான் துஷ்யந்த்.

பரிமளம் துஷ்யந்த் கூறியதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க, "அம்மா... பயப்படாதீங்க. நீங்க தாராளமா பொண்ணு பாருங்க. நீங்க பார்க்குற பொண்ண தான் நான் நிச்சயம் கட்டிப்பேன்." என துஷ்யந்த் பரிமளத்திடம் கூறினாலும் பார்வை என்னவோ சந்திரசேகரனிடம் இருந்தது.
_______________________________________________

மருத்துவமனையில் துஷ்யந்த் தன் அறையில் சில மருத்துவ அறிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, அறைக் கதவு தட்டப்படும் ஓசையில், "கம் இன்." என்றான் தலையை உயர்த்தாமலே.

மறு நொடியே, "சாக்லெட் அங்கிள்..." எனக் கத்திக் கொண்டு உள்ளே வந்தான் பரத். அவனைத் தொடர்ந்து சகுந்தலாவும்.

இருவரையும் கண்டதும் துஷ்யந்த்தின் முகம் பளிச்சிட்டது.

"ஹேய்... சேம்ப்... ஹவ் ஆர் யூ?" எனப் புன்னகையுடன் கேட்டவாறு பரத்தைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டான் துஷ்யந்த்.

"பிஸியா இருந்தீங்களா துஷ்யந்த்?" எனக் கேட்ட சகுந்தலாவுக்கு, "இல்ல சகுந்தலா. பரத்தோட ரிப்போர்ட்ஸ் தான் பார்த்துட்டு இருந்தேன்." எனப் பதிலளித்த துஷ்யந்த், "சேம்ப். என் கப்போர்ட்ல ஸ்கெட்ச் புக் என்ட் பென்சில் இருக்கு. எடுத்து உங்களுக்கு பிடிச்சதா வரைங்க பார்க்கலாம்." என பரத்திடம் கூறவும் துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடினான் சிறுவன்.

பரத் அங்கிருந்து சென்றதும், "ரி...ரிப்போர்ட் எல்லாம் ஓக்கே தானே." எனக் கேட்டாள் சகுந்தலா பயத்துடன்.

"ம்ம்ம்... ஏஸ் யூ ஆல்ரெடி நோ, ஓக்கேன்னு சொல்ல முடியாது. உடனே ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணி ஆகணும். பட் கண்டிப்பா குணப்படுத்தலாம்." என சகுந்தலாவை சமாதானப்படுத்திய துஷ்யந்த்துக்கு பரத்தின் உண்மையான நிலையைக் கூறி அவளை வருத்தப்பட வைக்க முடியவில்லை.

உண்மையைக் கூறின் பரத்துக்கு சிகிச்சை கொடுக்காமல் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து.

இன்னுமே அவனுக்கு பொருத்தமான இதயம் கிடைக்காததால் குறைந்த பட்சம் மற்ற சிகிச்சைகளையாவது அவசரமாக மேற்கொள்ள வேண்டும்.

துஷ்யந்த் அவ்வாறு கூறவும் சகுந்தலாவின் முகத்தில் மலர்ச்சி.

"நிஜமாவா சொல்றீங்க துஷ்யந்த்? எ...என் பையன் குணமாகுவான்ல." என ஆசையாகக் கேட்ட சகுந்தலாவின் கண்களில் கண்ணீர்.

தன் நெஞ்சம் புகுந்தவளின் கண்ணீரைத் துடைத்து அவளைத் தன் தோளில் சாய்த்து அவளுக்காக தான் இருக்கிறேன் எனக் கூற துஷ்யந்த்தின் கைகள் பரபரத்தாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் சகுந்தலாவிடம் டிஷு பாக்ஸை நகர்த்தி விட்டு, "கண்டிப்பா சகுந்தலா. கடவுள் மேல நம்பிக்கை வை. பரத்துக்கு எதுவும் ஆகாது. இன்னைக்கே நாம ட்ரீட்மென்ட்ஸ் ஸ்டார்ட் பண்ணலாம். பட் ஃபர்ஸ்ட் ஒரு அம்மாவா நீ மென்டலி தயார் ஆகணும். அதுக்கு நீ ஸ்ட்ராங்கா இருக்கணும்." என அறிவுறுத்தவும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு சம்மதமாகத் தலையசைத்தாள் சகுந்தலா.

"குட்... முதல் வேலையா நாம மெடிகேஷன்ஸ் ஆரம்பிக்கலாம். பரத் ஆல்ரெடி யூஸ் பண்ணிட்டு இருக்குற மெடிசின்ஸ் இனி கன்ட்னியூ பண்ண வேணாம். நான் புதுசா எழுதி தரேன். முதல்ல பரத்தோட ப்ளெட் ப்ரஷர நார்மல்ல வெச்சிக்கணும். நெக்ஸ்ட் ஹெல்த்தி டயட் ப்ளேன். NDCM ஆல பாதிக்கப்பட்ட அநேகமான பசங்க சாப்பாட்ட விட்டு கொஞ்சம் தூரமா இருப்பாங்க. பட் நான் பார்த்த வரைக்கும் பரத்துக்கு அந்தப் பிரச்சினை இல்ல. அது போக அவன் இன்னும் சின்ன பையன். சோ அதுக்கேத்தது போல நான் நியூட்ரிஷனிஸ்ட் கிட்ட ரிஃபர் பண்ணிட்டு டயட் ப்ளேன் ரெடி பண்ணி தரேன். முடிஞ்ச அளவுக்கு அதையே ஃபாலோ பண்ணுங்க. இருந்துட்டு நின்னு எக்செப்ஷன் இருக்கலாம். தப்பில்ல. அவன் ஆசைப்பட்டு ஏதாவது கேட்டா, ஐ மீன் ரொம்ப அன்ஹெல்த்தியா இல்லாத ஃபூட் எதுவா இருந்தாலும் பண்ணி கொடுங்க. பிரச்சினை இல்ல. பட் எல்லாத்துக்கும் முன்னாடி ஒரு மைனர் சர்ஜரி பண்ணி ஆகணும்." என்றான் துஷ்யந்த்.

"சர்ஜரியா?" என அதிர்ந்தாள் சகுந்தலா.

"எதுக்கு இவ்வளவு ஷாக் சகுந்தலா? டெக்னாலஜி இப்போ எவ்வளவோ வளர்ந்து இருக்கு. ஒரு சின்ன சர்ஜரி தான். அவ்வளவா வலி கூட இருக்காது. பரத்தோட ஹார்ட் ஆக்டிவிட்டிய மானிட்டர் பண்ணுறதுக்காக ஒரு மினி கார்டியக் மானிட்டர் அவன் செஸ்ட்ல இம்ப்ளான்ட் பண்ணுவோம். அது மூலமா பரத்தோட கண்டிஷன டாக்டர்ஸால உடனுக்குடன் தெரிஞ்சிக்க முடியும்." என்றான் துஷ்யந்த்.

"ம்ம்ம்... எப்போ சர்ஜரி?" எனக் கேட்டாள் சகுந்தலா இரு மனதாக சம்மதித்தபடி.

"மைனர் சர்ஜரி தானே. நாளைக்கே பண்ணலாம்." என்ற துஷ்யந்த் சகுந்தலாவின் முகம் வாடியே இருக்கவும், "சகுந்தலா. இப்பவே இந்த சின்ன சர்ஜரிக்காக ஃபீல் பண்ண ஆரம்பிச்சா எப்படி? பரத்தோட கண்டிஷன் உனக்கு நல்லாவே தெரியும். பரத்துக்கு பொருத்தமான டோனர் கிடைச்சதும் ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்ட் சர்ஜரி பண்ண வேண்டி இருக்கு. நீயே இப்படி அழுது ஃபீல் பண்ணிட்டு இருந்தா பரத் எப்படி சம்மதிப்பான்?" எனக் கேட்டான் துஷ்யந்த்.

"என்ன இருந்தாலும் நான் பெத்தவ இல்லையா? நீங்க டாக்டர். டெய்லி இதை மாதிரி நிறைய சர்ஜரி பண்ணுவீங்க. அதனால இதெல்லாம் பெரிசா தெரியாது. ஆனா எனக்கு அப்படியா? பரத் உங்களுக்கு ஜஸ்ட் பேஷன்ட் தான். ஆனா என்னோட பையன்." என்றாள் சகுந்தலா கண்ணீருடன்.

சகுந்தலாவின் மன அழுத்தம் அவளை அவ்வாறு பேச வைக்கிறது எனப் புரிந்து கொண்ட துஷ்யந்த் எதுவும் கூறாது சகுந்தலாவையே அழுத்தமாக நோக்கினான்.

அதன் பின் தான் சகுந்தலாவுக்கு அவளின் வார்த்தைகளின் வீரியம் புரிந்தது.

"சாரி..." எனத் தயக்கமாக கூறிய சகுந்தலாவிடம், "ஓக்கே கூல். ஐ ப்ராமிஸ் யூ. பரத்த குணப்படுத்த வேண்டியது என் பொறுப்பு. இப்போ போய் இந்த மெடிசின்ஸ வாங்கிட்டு வா. பரத்த நான் பார்த்துக்குறேன்." என அனுப்பி வைத்தான் துஷ்யந்த்.
 
  • Love
Reactions: kkp33

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
பெற்றோருக்கு பிள்ளையாக பிடித்த பெண்ணிற்கு ப்ரென்டாக
பாரபட்சமின்றி பழகும் பாசமான டாக்டர்.....
பாவமும் கூட..... 😭😭😭
 
  • Love
Reactions: MK1

kkp33

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
156
12
43
Tamilnadu
very nice epi.

அவங்க அப்பா அம்மா பேச்சு நல்லா இருக்கு. பரத் சுட்டி

சகுந்தலா பாவம்.
 
  • Love
Reactions: MK1

MK1

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 22, 2023
85
67
18
Thanavur
பெற்றோருக்கு பிள்ளையாக பிடித்த பெண்ணிற்கு ப்ரென்டாக
பாரபட்சமின்றி பழகும் பாசமான டாக்டர்.....
பாவமும் கூட..... 😭😭😭
நன்றி சகி 🤗
 
MK1

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 22, 2023
85
67
18
Thanavur
very nice epi.

அவங்க அப்பா அம்மா பேச்சு நல்லா இருக்கு. பரத் சுட்டி

சகுந்தலா பாவம்.
நன்றி சகி 🤗
 
MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54

துஷ்யந்த்தோட அப்பா அம்மாவை போக போக புரிஞ்சிக்கலாம் போல😉😉 சகு என்ன துஷ்யந்த இப்பிடி கேட்டுட்டு 😏😏😏
 
  • Love
Reactions: MK1

MK1

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 22, 2023
85
67
18
Thanavur
துஷ்யந்த்தோட அப்பா அம்மாவை போக போக புரிஞ்சிக்கலாம் போல😉😉 சகு என்ன துஷ்யந்த இப்பிடி கேட்டுட்டு 😏😏😏
நன்றி சகி 🤗
 
k. ஆனந்த ஜோதி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 16, 2023
35
8
28
Chennai
#வாசிப்பு : 3

ஆசிரியர் : kkp 1

படைப்பின் பெயர் : நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா

அத்தியாயம் : 4

தளம் : வைகை தமிழ் நாவல்

போட்டி : கானா காணும் பேனாக்கள் 2023

லிங் :

இதயநோய் நிபுணராக வருகிற துஷ்யந்த், ப்ளஸ் டூ படிக்கும் போது ஒரே வகுப்பில் பயின்ற மாணவியான சகுந்தலாவை பல வருடங்களுக்கு பிறகு பார்த்ததும் காதல் வசப்படுகிறான். அடுத்த சில நிமிடங்களில், ஏற்கனவே அவளுக்கு திருமணமாகி மகன் இருப்பதும் தெரியவருகிறது.

மகனின் சிகிச்சைக்கு வந்திருக்கும் சகுந்தலா, மருத்துவரான அவனிடம் மகனைப் பற்றி சொல்கிறாள். பரத்தை காக்கும் பொறுப்பை கையில் எடுக்கிறான் துஷ்யந்த்.

சகுந்தலாவின் வாழ்க்கையில் நடந்தது என்ன? எதனால் கணவனைப் பிரிந்து வாழ்கிறாள்? துஷ்யந்தின் ஒரு தலை காதல் நிறைவேறுகிறதா? பரத்தின் சிகிச்சை... அவர்களின் குடும்பம் போன்றவற்றை இனி வரும் அத்தியாயங்களில் காண்போம்.

சிறுவன் பரத் படு சுட்டி. துஷ்யந்தை 'சாக்லெட் அங்கிள்' என்று அழைப்பதும், அவனிடம் பாசமாக ஒட்டுவதும், மருத்துவ செவிலியரை கண்டு பயந்து ஓடுவதும், பேசுவதும் ரொம்ப நல்லா இருக்கு. சகுந்தலா அமைதி, அழகு, அடக்கத்துடன் காணப்படுகிறாள்.

ஆசைப்பட்ட சற்று நேரத்தில் அவளுக்கு ஏற்கனவே மணமாகிவிட்ட விசயம் தெரிய வந்ததும், துஷ்யந்த் பாவனை, அவளுக்கு உதவுது, அப்பா, அம்மா கேள்விற்கான பதில், பள்ளிகால நினைவுகள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன.

எழுத்து நடை, கதையோட்டம் அருமையாக இருக்கிறது. அடுத்த பதிவிற்காக ஆவலாக காத்திருக்கிறேன்.

எழுத்தாளருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐
 
அருமையான விமர்சனம் 😍 நன்றி சகி 🤗
 
Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
29
63
Kumbakonam
துஷ்யந்தனை பிடிக்குதே. ரொம்ப பிடிக்குதே. நல்ல பையன். நல்ல நண்பன் நல்ல டாக்டர்
 
  • Love
Reactions: MK1

MK1

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 22, 2023
85
67
18
Thanavur
துஷ்யந்தனை பிடிக்குதே. ரொம்ப பிடிக்குதே. நல்ல பையன். நல்ல நண்பன் நல்ல டாக்டர்
😍😍😍 நன்றி சகி 🤗