வைகை சிறுகதை போட்டி 2021 - முடிவுகள்
வணக்கம் நண்பர்களே...!!!
நாம் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்த அந்த நாள் வந்துவிட்டது.
“வைகை சிறுகதை போட்டி 2021” போட்டியின் இறுதிகட்ட அறிவுப்பு. போட்டியின் முடிவுகள் இங்கே அறிவிக்க நாங்களும் மகிழ்வுடன் வந்துவிட்டோம்...!!!
போட்டியின் விதிகளுக்கும் வழிமுறைகளுக்கும் உட்பட்டு மொத்தம் நூற்றியாறு கதை பங்களிப்புகள் நம் கைகளில் பொக்கிசமாக வந்து சேர்ந்தது. அதில் ஒருவர் விலகிவிட, மொத்தம் நூற்றி ஐந்து கதைகள் வாசகர்கள் முன் வைக்கப்பட்டது.
அதில், முதல் கட்ட வடிகட்டலாக,
--> இரண்டு எழுத்தாளர்கள்
--> ஒரு தேர்ந்த வாசகர் என்கிற குழு
மற்றும்
--> பொது வாசகர்கள் படித்தல் மற்றும் கருத்து பகிர்ந்தல் எண்ணிக்கை
இந்த அடிப்படையில், இறுதிச் சுற்றிற்குத் தேர்வான முதல் முப்பது கதைகள் சென்ற ஆகஸ்ட் பதினேழாம் தேதி தளத்தில் அறிவித்து இருந்தோம்.
***
மீண்டுமாக, அந்த முப்பது கதைகளில் இருந்து இரண்டாம் கட்ட வடிகட்டலில் தேர்வான முதல் பத்து கதைகளைக் கீழே, அகர வரிசை முறைப்படி குறிப்பிட்டு உள்ளோம்.
வாசக மக்கள் மத்தியில் புகழ்க்கொண்ட இரண்டு எழுத்தாளர்களின் அதி கவனமிக்க வாசிப்பால் விளைந்த மதிப்பெண்களின் அடிப்படையில் சிறந்த முதல் பத்து கதைகளாகத் தேர்வு செய்யப்பட்ட கதைகள்...
எழுத்தாளர் பெயர்கள் | கதை பெயர்கள் |
அம்மு இளையாள் | முதியோர் காதல் |
அருணா கதிர் | விருந்தோம்பல் |
ஆரூர் சரவணா | தீபாவளி விருந்து |
சுசு ஸ்டோரி | சீமந்தம் |
நந்தினி ஆறுமுகம் | கனவு |
நந்தினி சுகுமாரன் | இரண்டாம் வாழ்வு |
பாண்டியன்மாதேவி | இதை விடுத்து என்ன? |
பெண்ணாகடம் பா. பிரதாப் | பரிகாரம் |
ப்ரணா | தன்னிலை தாழாமை |
விஜி ரவி | நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை |
முதல் பத்து கதைகளாகத் தேர்வாகிய கதைகளின் ஆசிரியர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
***
இப்போது... நாம் அனைவருமே மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்த போட்டியின் வெற்றியாளர்களைப் பற்றி அறிவிக்கும் நேரம் நெருங்கிவிட்டது...!!!
முதல் பரிசு: சு.வெங்கடேஷன் அவர்களின் – வேள்பாரி –
இதனை வென்ற கதை “இரண்டாவது வாழ்வு.” எழுத்தாளர். நந்தினி சுகுமாரன்
இரண்டாம் பரிசு: அ.வெண்ணிலா அவர்களின் – கங்காபுரம்
இதனை வென்ற கதை “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை.” எழுத்தாளர். விஜி ரவி.
மூன்றாம் பரிசு: பத்மா அவர்களின் - நயனவல்லியின் காதல்
இதனை வென்ற கதை “தன்னிலை தாழாமை” எழுத்தாளர். ப்ரணா
தங்களின் எழுத்து திறமையால் கதையின் போட்டியில் முன்னிலை பெற்று, போட்டியின் வெற்றி வாகையைச் சூடி, பரிசுகளை வென்ற ஆசிரியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
***
அடுத்ததாக, இந்தப் போட்டியின் முக்கியத் தூண்களாக விளங்கிய வாசகர்களில் சிறந்து விளங்கிய ஒருவருக்குச் சிறப்புப் பரிசை அறிவித்து இருந்தோம்! ஒரு மாத கிண்டில் சந்தா கொடுப்பதாக!
அதற்க்கு தேர்வான நபர் – ஸ்ரீராஜ் அவர்கள் ஆவர்! உங்களுக்கு எங்கள் தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
***
போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும், போட்டியை பற்றி மக்கள் மத்தியில் பரப்ப உதவி புரிந்த அனைவருக்கும், மேலும் முக்கியப் பொக்கிஷமான வாசக பெருமக்களுக்கும், வைகை சார்பாக எங்களின் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
குறிப்பு: வெற்றிப்பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் வாசகர், வதனி பிரபு என்ற என் முகபுத்தகப் பக்கத்தில் தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.
மேலும், போட்டியின் அறிவிப்பில் கூறியிருந்தபடி, போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் வரும் வாரத்தில் மின்னசல் வழி மின் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி.
வைகை குழு.