• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

1. துரை. கோவிந்தராஜ் - அந்த 3 நிமிடங்கள்

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
920
481
93
Tirupur
தலைப்பு : அந்த 3 நிமிடங்கள்..
அழகுபுரம் இயற்கை அன்னையின் செல்லப்பிள்ளை. அந்த கிராமத்தில் எல்லாமே அழகுதான். ஓடும் ஆறு, ஒரே இடத்தில் இருக்கும் குளம், பறக்கும் பறவைகள், வயல்வெளிகள், அவ்வளவு ஏன் அந்த மண்ணில் முளைக்கும் முட்செடி கூட அழகுதான். ஆனால் அந்த கிராமத்தின் சாபக்கேடு அங்கு பிறக்கும் பெண் பிள்ளைகள் மட்டும் கறுப்பாக, ஒல்லியாக அவலட்சணமாக இருப்பார்கள். தங்களது பெண் பிள்ளைகள் தான் அழகாக இல்லை அவர்களுக்கு வைக்கும் பெயரிலாவது அழகு இருக்கட்டும் என்று அழகான பெயர்களை தங்களது பெண் பிள்ளைகளுக்கு சூட்டுவார்கள். அப்படி தனது தோற்றத்துக்கும் பெயருக்கும் பொருத்தமில்லாதவள் தான் அந்த பிரசிடெண்ட் மகள் அபிராமி. தங்களது தோற்றத்தை மற்றவர்கள் கிண்டல் செய்கிறார்கள் என்ற காரணத்தினால் அந்த ஊர் பெண்கள் யாரும் பட்டப்படிப்பு செல்ல கல்லூரி செல்வதில்லை. ஆனால் அபிராமிக்கு அந்த கிராமத்தில் முடங்கிக்கிடக்க விருப்பமில்லை. அதனால் சென்னையில் ஹாஸ்டலில் தங்கி பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறாள். சென்னைக்கு சென்றால் இங்கு இருப்பவர்களை விட அங்குள்ளவர்கள் செய்யும் அவமானங்களை உன்னால் தாங்க முடியாது என்று அவளது தந்தை எடுத்துச்சொல்லியும் அபிராமி தான் கொண்ட வைராக்யத்தால் சென்னை வருகிறாள். அபிராமியின் தந்தையின் நண்பர் சதாசிவத்தின் மகள் காவ்யா ஹாஸ்டலில் தங்கி படிப்பதால் அந்த ஹாஸ்டலுக்கு அபிராமியை அனுப்பி வைக்கிறார்.
காவ்யா பிரம்மன் செய்த ஒரு அழகுப்பதுமை என்று சொல்லும் அளவுக்கு அழகானவள். நவீன நாகரீக கலாசாரத்தில் மூழ்கியவள். தான் வெட்டி போடும் நகத்தின் துண்டு கூட அழகாக இருக்கவேண்டும் என்று எண்ணுபவள். இந்த உலகத்திலே அவள்தான் அழகு என்று நினைப்பவள். தானும் அழகு அதனால் தன்னைச்சுற்றி இருப்பவர்களும் தன்னை சுற்றி இருக்கும் பொருட்களும் அழகாக இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பவள். அப்படிப்பட்ட காவ்யாவுடன் ஒரே அறையில் தங்க வரும் அபிராமியை பார்த்து காவ்யா கோபம் கொண்டு தனது தந்தையை திட்டுகிறாள். பின்பு வேறு வழி இல்லாமல் அபிராமியை தன்னுடன் தங்க வைக்கிறாள். காவ்யாவின் தோழிகள் அவளை கிண்டல் செய்கிறாள். இதனால் மிகவும் நொந்து போன காவ்யா அபிராமியிடம் அவள் இவளுடன் சேர்ந்து வரக்கூடாது என்றும் , அவள் காவ்யாவின் ரூம்மேட் என்று யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லிவிடுகிறாள். அழகாக இல்லாவிட்டால் ஒரு பெண்ணுக்கு கூட இன்னொரு பெண்ணை பிடிப்பதில்லை என்பதை நினைத்து மிகவும் வருந்துகிறாள் அபிராமி.
முதல்நாள் கல்லூரியில் சேர்வதுக்கு செல்வதால் காவ்யா அபிராமியை ஆட்டோவில் அழைத்துச்செல்கிறாள். ஆட்டோ கல்லூரியை நோக்கி சென்று கொண்டு இருக்கும்போது காவ்யா ஒரு அரைகிலோ மீட்டர் முன்பாக அபிராமியை இறக்கிவிட்டு நடந்து வர சொல்கிறாள். அபிராமியும் காவ்யா சென்றவுடன் அந்த ஆட்டோ பின்னே நடந்து வருகிறாள். முதல் நாள் அட்மிஷன் ஆக நிறைய பேர் நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் மத்தியில் அபிராமி கூனிக்குறுகி நின்று கொண்டு இருந்தாள். எல்லாரும் அபிராமியை பார்த்து கிண்டல் செய்தார்கள். காவ்யா அபிராமியை கண்டுகொள்ளாமல் தனது வகுப்பறைக்கு சென்றாள். தனியே நின்று இருந்த அபிராமியை ஒரு குரல் அழைத்தது. அபிராமி மகிழ்ச்சியுடன் திரும்பி பார்த்தாள். அங்கு மாரி நின்று இருந்தான். கறுப்பான உருவம், மிகவும் ஒல்லியான தேகம் , ஊட்டச்சத்து குறைவால் அதிக பவர் கொண்ட மூக்குக்கண்ணாடி, சாதரண உடை அணிந்து இருந்தான். மாரி அபிராமிடம் பேச ஆரம்பித்தான். யாரும் தன்னை நேருக்கு நேர் பார்க்காத நேரத்தில் ஒரு ஆண் தன்னிடம் வந்து பேசுவது அவளுக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. அப்ளிகேஷன் எழுத பேனா கேட்ட மாரி அபிராமிக்கு அந்த கல்லூரியில் கிடைத்த இரு நம்பிக்கை புள்ளியாய் தெரிந்தான். அபிராமியும் மாரியும் காவ்யாவின் வகுப்பறைக்கு ஒன்றாக வருகிறார்கள். அவலட்சணமாக இருக்கும் அபிராமிடம் ஆண்கள் யாரும் பேசுவதில்லை, அதேபோல அழுக்காக இருக்கும் மாரியிடம் பெண்கள் யாரும் பேசுவதில்லை. அதனால் மாரியும் அபிராமியும் அந்த கல்லூரியில் நெருங்கிய நண்பர்களாக சுற்றி வந்தனர். அந்த கல்லூரியே அவர்களை ‘காக்க ஜோடி’ என்று கிண்டல் செய்தது.
அழகு இருந்தாலே காதல் தானாக வந்துவிடும். கல்லூரியில் சேர்ந்த நாள் முதலே வேறு கல்லூரியில் படிக்கும் கெளதமுடன் காவ்யாவுக்கு காதல் ஏற்பட்டது. காரணம் கெளதம் ஹீரோ மாதிரி மிகவும் அழகாக இருப்பான். வசதி படைத்தவன் ஆனால் தாய் தந்தையை இளவயதிலேயே இழந்தவன். அன்புக்காக ஏங்கித்தவிப்பவன். அவனும் ஒரு ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். காவ்யா தான் காதலிக்கும் விஷயம் அபிராமிக்கு மட்டும் தெரியக்கூடாது என்று பார்த்துக்கொண்டாள். கெளதம் காவ்யா காதல் நன்றாக தொடர்ந்து கொண்டு இருந்தாலும் அவ்வவ்போது காவ்யாவுக்கும் கெளதமுக்கும் சிறு சிறு ஈகோ சண்டைகள் வரும். கெளதம் சமாதானம் ஆகிவிடுவான். ஆனால் காவ்யா விட்டுக்கொடுக்க மாட்டாள். ஓரு பார்ட்டியில் கெளதம் ஒரு பெண்ணை காண்பித்து. காவ்யாவை வெறுப்பேற்ற அந்த பெண் காவ்யாவைவிட மிகவும் அழகானவள் என்று விளையாட்டாக சொல்ல அது பெரும் சண்டையாக மாறுகிறது. கெளதம் எவ்வளவு எடுத்துச்சொல்லியும் காவ்யா அவன் பேச்சை கேட்கவில்லை. இன்னோரு பெண்ணுடன் அவளை கம்பேர் பண்ணி என்னை வெறுப்பேத்திட்ட நான் உன்ன என்ன பண்ரேன்னு பாரு, உன்ன எப்படி அவமானப்படுத்தனும்னு எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு செல்கிறாள்.
ஆண்டுகள் ஓடியது. அபிராமிக்கு மாரியின் மீது காதல் ஏற்பட்டது. அபிராமி மாரியிடம் தன் காதலை சொல்ல, மாரி அந்த காதலை ஏற்க மறுத்து அபிராமியிடம் ‘ நம்ம ஜோடியை இந்த காலேஜ் கிண்டல் பண்ணுது, நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த உலகமே கிண்டல் பண்ணும், உனக்கு ஒரு அழகான வாழ்க்கை கிடைக்கும் எனக்கும் ஒரு அழகான வாழ்க்கை கிடைக்கும் அதனால நாம பிரண்ட்ஸ் ஆகவே இருப்போம்’ என்று சொல்கிறான். திருமணம் காதல் என்று வரும்போது அழகு தேவைப்படுகிறது. மாரிக்கு கூட தன்னை திருமணம் செய்து கொள்ள பிடிக்கவில்லை என்று தனது தோற்றத்தை நினைத்து வருந்துகிறாள்.

மனம் நொந்த நிலையில் இருக்கும் அபிராமியை கெளதம் சந்திக்கிறாண். அவளிடம் தன் காதலை சொல்கிறான். முதலில் அபிராமி மறுக்கிறாள். கெளதம் அவளை விடாமல் பின் தொடர்கிறான். காவ்யாவை வெறுப்பேற்ற அவள் கல்லூரியில் படிக்கும் ஒரு அவலட்சணமான பெண்ணை காதல் செய்வது போல் நடித்தால் அது காவ்யா காதுக்கு போகும் என்றவாறு கெளதம் நினைத்தான். அதே அந்த விஷயம் காவ்யா காதுக்கு போனது. எல்லாரும் காவ்யாவிடம் ‘ என்னடி உன் ஆளு நீ பக்கத்துல கூட சேத்துக்க விரும்பாத உன் ரூம்மேட் அபிராமி பக்கம் சாஞ்சுட்டாரு, அப்போ அவதான் அழகா” என்றவாறு கேட்க கோபத்தின் உச்சத்துக்கு போன காவ்யா அபிராமியிடம் சண்டை போடுகிறாள். பின்பு மாரியிடம் தன் காதலை சொல்லி கெளதமை வெறுப்பேற்றினாள். காவ்யா மாரியை காதலிப்பது போல நடித்தாள். காவ்யா கெளதம் இடையே ஆன ஈகோ சண்டை அபிராமி மற்றும் மாரியின் வாழ்க்கையை பாதாளத்தில் தள்ள வழி வகுத்தது.

கெளதமுக்கு அபிராமியின் செயல்கள் அவளது நல்ல மனது, அவளது ஊரின் நிலை, எதுக்காக அவள் சென்னை வந்தாள் போன்ற விஷயங்களை தெரிந்து கொள்கிறான். சும்மா ஆரம்பித்த காதல் நாடகம் ஒரு கட்டத்தில் நிஜமானது. கெளதம் எதிர்பார்த்த அன்பும் அரவணைப்பும் அபிராமிடம் இருப்பதை கெளதம் உணர்ந்தான். அதனால் அவளை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தான். அபிராமி முதலில் இதை நம்பவில்லை. பின் கெளதம் அபிராமி வீட்டில் சொல்லி திருமண ஏற்பாடுகளை செய்ய சொல்ல அபிராமியும் சம்மதம் சொன்னாள். அபிராமி தன் தந்தையிடம் விஷயத்தை சொல்லி ஊரில் தடபுடலாக திருமண ஏற்பாடுகளை செய்கின்றனர். இதை அபிராமி மாரியிடம் சொல்ல , மாரி இதை காவ்யாவிடம் சொல்லி அவனும் காவ்யாவை திருமணம் செய்து கொள்ள கேட்டும்போது. காவ்யா கெளதம் பற்றிய விஷயங்களையும், அவள் மாரியை காதலிப்பது போல் நடித்ததையும் சொல்லி அபிராமி கெளதம் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஊருக்கு கிளம்புகின்றனர்.

தன் ஊரில் இருக்கும் பெண்ணுக்கு ஹீரோ மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைத்ததை அந்த ஊரே கொண்டாடியது. மாரி காவ்யா அங்கு வருவதுக்கு முன் கெளதம் அபிராமியின் கழுத்தில் தாலி கட்டி விடுகிறான். காவ்யா தன் வாழ்க்கையே தொலைத்து விட்டதை போல உணர்ந்தாள். அபிராமியும் கெளதமும் முதலிரவு அறைக்குள் சென்றனர். அப்போது கெளதம் அபிராமியிடம் தனது மொபைலை கொடுத்து இதில் தான் பேசி இருப்பதை கேட்டுவிட்டு தங்களது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று சொல்லி வெளியே செல்கிறான். அந்த மொபைல் இப்போ பேச ஆரம்பித்தது. அதில் கெளதமின் குரல் “ என்ன அபிராமி உனக்கு இன்னும் நான் உன்ன லவ் பண்றத நம்ப முடியல தானே, எனக்கு இருக்குற பர்ஸ்னாலிட்டிக்கு உன்ன மாதிரி இருக்குற ஒரு பொண்ண பாக்க கூட மாட்டேன், அப்புறம் உன் பின்னாடி வந்ததுக்கு காரணம் உன் ரூம்மேட் காவ்யா தான். அவளதான் நான் மொதல்ல லவ் பண்னேன். அவ தான் இந்த உலகத்துல பெரிய அழகி மாதிரி என்னை மதிக்காம பெரிய சீன் போட்டா அதான் அவள வெறுப்பேத்த தான் நான் உன்ன லவ் பண்ற மாதிரி நடிச்சேன்” அப்போது 3 நிமிடங்கள் மீதம் இருந்தது அதை கேட்க மனமில்லாமல் துக்கத்தில் உறைந்த அபிராமி ஓடிச்சென்று கதவை சாத்தினாள். பழம் வெட்டுவதற்கு வைத்திருந்த கத்தியில் தன் கையை அறுத்துக்கொண்டு கட்டிலில் சாய்ந்தாள்.

நீண்ட நேரம் ஆகியும் லட்சுமி வெளியே வராததால் கெளதம் கதைவை திறக்க முயல அது உள்பக்கம் சாத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ந்தான். பின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போனான் அங்கு இரத்த வெள்ளத்தைல் அபிராமி பிணமாக கிடந்தாள். அதைப்பார்த்து கதறி அழுதான் கெளதம். உடனே அந்த மொபைலை எடுத்து பார்த்தான், அதில் அபிராமி முதல் 3 நிமிடங்கள் மட்டுமே கேட்டு இந்த விபரீத முடிவு எடுத்துள்ளாள் என்பது கண்டு அதிர்ச்சியுற்று கதறி அழுதான் கெளதம். பின்பு அவள் கேட்காமல் போன மீதி 3 நிமிட அவனுடைய பேச்சை கேட்க மொபைலை ஆன் செய்தான். அந்த மீதி மூன்று நிமிடங்கள் இவ்வாறு ஒலித்தது “ உன்ன லவ் பண்ற மாதிரி நடிச்சேன், ஆனா ரெண்டு மூனு நாள்ல உன் கண்ணுல இருந்த உண்மையான அன்பை என்னால உணர முடிந்தது. இந்த உலகத்துல வாழ அழகு தேவையில்லை நல்ல மனம் மட்டுமே தேவை என்பதை தெரிந்து கொண்டேன். அதுல இருந்து நானும் உண்மையா லவ் பண்ண ஆரம்பிச்சேன். அதனால தான் உன்ன உடனடியா கல்யாணமும் பண்ணிக்கிட்டேன், காவ்யாவை நான் மட்டும்தான் லவ் பண்னேன்.அவன் என்னை மதிக்ககூட இல்லை.இனி நீதான் எனக்கு முக்கியம். உன்கிட்ட எதையும் மறைக்க விரும்பல, அதான் எல்லாத்தையு சொல்லிட்டேன், வா நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்..ஐ லவ் யூ அபிராமி” என்று முடித்திருந்தான் கெளதம். அபிராமியின் வாழ்க்கையில் அந்த மூன்று நிமிடங்கள் அவள் உயிரையும் ஒரு உண்மை காதலையும் கொன்றுவிட்டது. வாழ்க்கையில் நேரம் ரொம்ப முக்கியம் அதைவிட முக்கியம் அந்த நேரத்தில் நாம் எடுக்கும் முடிவுகள்தான். அழகு என்பது நிரந்தரம் இல்லாத ஒன்று அதற்கு நாம் முக்கியத்துவம் தரக்கூடாது.
 
Last edited:

Kanavu Kadhali Ruthitha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Sep 16, 2021
5
6
3
Chennai

எதிர்பாராத முடிவு... அழகான கதை.. சொல்லாடல்கள் இருந்திருந்தா இன்னும் அருமையாக இருந்திருக்கும்... வெற்றிபெற வாழ்த்துகள்...
 
Veera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
57
7
8
Thoothukudi
மூன்று நிமிடத்துக்கு மேல கேட்டிருந்தால் அபிராமி கெளதம் வாழ்க்கை ரொம்ப அழகாக இருந்திருக்கும்..

அருமையான கதை... சூப்பர்..
 
  • Like
Reactions: Thani

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
சூப்பர். நேரத்தோட அருமையை சொல்லியிருக்கீங்க. அவசரப்பட்டு எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. அபிராமி பொறுமையாக இருந்திருக்கலாம்.
 
  • Like
Reactions: Thani

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
59
27
18
Deutschland
அழகான கதை சிஸ்❤️
வாழ்த்துக்கள் 💐
காவ்யா படித்தவள் தானே ...அவளுக்கு தெரியாதா..?? அழகு என்பது எது என்பதை ....சில பல நேரங்களில் படித்வர்களும் முட்டாள்கள் தான் 😥 காதல் அழகானது அதை மனதால் உணராமல் போட்டி ,பொறாமையால் வரவைத்தால் எதிர் காலம் .....????இந்த கால சமுதாயம் பக்குவமில்லா காதலால் எத்தனை அழிவுகளை சந்தித்தது கொண்டு இருக்கிறார்கள் .....
அபிராமி தானே தன்னை வளர்த்துக்கொண்டாள் ....தன்னுடைய முயற்சியால் தன்னை மெருகேற்றிக்கொண்டவள்
உடல் அழகு என்னங்க அழகு .....தன்நம்பிக்கை கூடத்தான் அழகு 😀
அபிராமி இந்த அவசர புத்தி காரணமாக தன்னுடைய வாழ்க்கையை தொலைத்து விட்டாளேகூடவே கௌதமின் மகிழ்ச்சியையும் கொண்டு போய் விட்டாள் ....🤧
சூப்பர் ❤️❤️❤️❤️❤️
வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️💐
 
Last edited:

வித்யா வெங்கடேஷ்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 8, 2022
239
209
63
USA
அழகான கதை சிஸ்❤️
வாழ்த்துக்கள் 💐
காவ்யா படித்தவள் தானே ...அவளுக்கு தெரியாதா..?? அழகு என்பது எது என்பதை ....சில பல நேரங்களில் படித்வர்களும் முட்டாள்கள் தான் 😥 காதல் அழகானது அதை மனதால் உணராமல் போட்டி ,பொறாமையால் வரவைத்தால் எதிர் காலம் .....????இந்த கால சமுதாயம் பககுவமில்லா காதலால் எத்தனை அழிவுகளை சந்தித்தது கொண்டு இருக்கிறார்கள் .....
அபிராமி தானே தன்னை வளர்த்துக்கொண்டாள் ....தன்னுடைய முயற்சியால் தன்னை மெருகேற்றிக்கொண்டவள்
உடல் அழகு என்னங்க அழகு .....தன்நம்பிக்கை கூடத்தான் அழகு 😀👏
அபிராமி இந்த அவசர புத்தி காரணமாக தன்னுடைய வாழ்க்கையை தொலைக்க இருந்தாளே ...
இது ரொம்ப ரொம்ப தப்பு தானே .....
நல்ல வேளை கௌதம் வந்து காப்பாற்றி விட்டான்.
கௌதம் தன்னுடைய தப்பை திருத்தி கிட்டது நன்று தான் ஆனால் அபிராமி மேல உண்மையான காதல் வராவிட்டால் அவளின் வாழ்க்கை ..????இப்படி பண்ணிய கௌதமும் தப்பு தான் 😡
கதை முடிவு சூப்பர் 😀
சூப்பர் ❤️❤️❤️❤️❤️
வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️💐
கௌதம் காப்பாற்றிவிட்டானா... அவள் இறந்துவிட்டாள் என்பது போல தானே கதை முடிந்துள்ளது🤔🤔🤔
 
வித்யா வெங்கடேஷ்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 8, 2022
239
209
63
USA
அவசர வாழ்க்கையில் எடுக்கப்படும் அவசரமான முடிவுகளின் பின்விளைவுகளை அழகாகச் சொல்லிட்டீங்க ஆத்தரே!
💕💕💕💕
 
  • Like
Reactions: Thani

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
59
27
18
Deutschland
கௌதம் காப்பாற்றிவிட்டானா... அவள் இறந்துவிட்டாள் என்பது போல தானே கதை முடிந்துள்ளது🤔🤔🤔
ஆமாம் சிஸ்...நல்ல வேளை குறிப்பிட்டு இருந்தீஙக ரொம்ப நன்றி ஜி😍
சரி பண்ணிடுறேன் ......