• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

10. திவ்யதுர்ஷி - உண்மை காதல்

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
499
113
Tirupur
உண்மைக் காதல்

வானத்தில் ஓட்டை விழுந்து விட்டதோ என்று எண்ணும் அளவிற்கு மழை பெய்து கொண்டிருந்தது….. வீதியில் இருந்த அனைவரும் மழைக்கி ஒதுங்கி நின்க ஒரு பெண்ணவள் மட்டும் அந்த மழையில் நனைந்து கொண்டு நடந்தபடி இருந்தாள்… அவள் விழிகளிலிருந்து வடியும் நீரும் மழை நீருடன் சேர்ந்தது…

அவ்வாறு நடந்து கொண்டிருந்தவளை அருகிலிருந்த நிழற்குடையின் கீழ் இழுத்து வந்தாள் மிது பஸ்ஸில் ஊருக்கு சென்றுகொண்டிருந்த மிது மழையில் நனைந்து கொண்டு வருபவளை பார்த்தவள் உடனே பஸ்ஸில் இருந்து இறங்கி அவளருகில் வந்தாள்.

"மித்ரா… இங்க பாருடி" என்று அவள் அசைத்தும் மித்ரா எதுவும் பேசவில்லை. ஆனால் கண்ணீர் மட்டும் வடிந்து கொண்டிருந்தது. மித்ராவை நினைவுக்கு கொண்டுவருவதற்காக அவளை அறைந்தாள் மிது.. அதன் பின்னரே மித்ரா நினைவுக்கு வந்தாள்.. தனக்கு முன்னால் நின்ற தனது உயிர் தோழியை பார்த்தவள் அவளை அணைத்து அழுதாள்… நடப்பது என்னவென்று புரியாவிட்டாலும் மித்ராவின் அழுகை குறையும் வரை அவளை அணைத்துக்கொண்டாள்…

"மித்து… இங்க பாரு என்னாச்சி உனக்கு ஏன் இப்படி அழுற?"

"மிது என்னை எங்கையாவது கூட்டிட்டு போ பிளீஸ்.." என மறுபடியும் அதிகமாக அழத் தொடங்கினாள்…

"சரி நான் கூட்டிட்டு போறேன். மித்து நான் இப்போ ஊட்டிக்கு போறேன். நீயும் வர்றியா"

"சரி மிது போலாம்"

மித்துவுடன் அவள் வீட்டிற்கு வந்து அவளது பொருட்களையும் எடுத்துக்கொண்டு வந்து பஸ் ஏறினர் இருவரும்..

மிதுவுக்கு மித்ரா ஏன் இப்படி அழுறாள் என்ன நடந்திருக்கும் என்று யோசித்தவாறு இருந்தாள். மித்ரா அழுதபடி இருந்தவள் அப்படியே தூங்கிப்போனாள்..

மித்ரா யாரு மிது யாருனு பார்க்கலாம் வாங்க….

யசோதா ஆச்சிரமம்… இங்கதான் மித்ராவும் மிதுவும் இணைந்து வளர்ந்தனர்.. மித்ரா மிகவும் சாதுவானவள்… மிதுவுக்கு பயமில்லை… இருவரும் ஒன்றாக படித்து நர்சாக K. N hospital இல் பணியாற்றி வந்தனர்.. மித்ரா அங்கே பணியாற்ற மிது ஊட்டியிலுள்ள ஒரு Hospitaluku மாற்றலாகினாள். அவள் அங்கே போய்க்கொண்டு இருக்கும் போதுதான் மித்ராவை பார்த்து இதோ அவளுடன் அழைத்துச் செல்கிறாள்..

அவர்கள் பயணம் தொடரட்டும்……

பணக்காரர்கள் மட்டுமே உள்ளே சென்று கேளிக்கைகளில் ஈடுபடும் பப்பில் ஆறடி உயரத்தில் பெண்களை கவரும் வண்ணம் வசீகரத்துடன் இருந்தான் நம்ம ஹீரோ கவின்ரேயன்.போன் வித் கோல்ட் இவன்.. தப்பு செய்தால் தட்டிக் கேட்க பெற்றோர் இல்லை..ஆனால் ஒரே ஒரு உயிர் நண்பன் ரிஷி இருக்கிறான். ரிஷியும் ஆச்சிரமத்தில்தான் வளர்ந்தவன்..அவன் அருகில் அவனது பணத்திற்காகவே அவனுடன் சுற்றும் நண்பர்கள் சேர்ந்து பேசிக்கொண்டும் வாயில் சரக்கை ஊற்றிக்கொண்டும் இருந்தனர்…

அவர்களில் ஒருவனான ராஜ் "கவின் நீ உண்மையிலேயே பெரிய ஆள்தான்டா… போட்ட சவால்ல ஜெயிச்சிட்ட"
 
Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
499
113
Tirupur
"கவின்… மூணே வாரத்தில யாருக்கும் பிடிகொடுக்காத ஒரு பொண்ணை உன்ன லவ் பண்ண வச்சிருக்க… that's great da" என்றவன் வாயிலேயே குத்தினான் ரிஷி.

"ஏய் ரிஷி என்ன பண்ற நீ" என்று சத்தம் போட்டவர்களை தன் பார்வையிலேயே அடக்கியவன் கவினை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.

"ரிஷி நீ எப்படா வந்த?"

"இப்பதான் வந்தன்… உன் மேல கொலவெறியில இருக்கன் பேசாம வாடா" என்றவன் அவனை இழுத்துச் சென்று காரில் ஏற்றி அவனது வீட்டிற்கு கூட்டிச் சென்று அறையில் விட்டான்.

ஆதவன் அவனியினரை துயிலெழுப்பியபடி எழுந்து வந்தான்…

மிது "மித்து எழுந்திரு ஊட்டி வந்திருச்சி" என்ற எழுப்ப மித்ராவும் எழுந்து கொண்டாள்..

இருவரும் பஸ்ஸில் இருந்து இறங்கி ஊட்டி மண்ணில் காலெடுத்து வைத்தாள்.. பின் அங்கிருந்த ஆட்டோக்காரரிடம் "அண்ணா இங்க T. S hospitalku எங்களை கூட்டிட்டு போக முடியுமா??"

"ஊருக்கு புதுசாமா நீங்க? "

" ஆமா அண்ணா".

" சரி வாங்கம்மா நான் கூட்டிட்டு போறேன்"

"சரிங்கண்ணா" என்றவர் அவர்களை அழைத்துச் சென்றார்… அழகிய சூழல் ஆனால் இருவராலும் ரசிக்க முடியவில்லை.. அவரவர் சிந்தனையில் இருந்தவர்களை கலைத்தது ஆட்டோகாரரின் குரல்..

" ஏம்மா தங்கச்சி நீங்க சொன்ன hospital இதுதான் "

"ரொம்ப நன்றிங்க அண்ணா. " என்றவள் பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு மித்ராவுடன் Hospitaluku சென்றாள்.. அங்கே hospital Dean உடன் பேசினாள்.
"hello sir"

"hello ma உக்காருங்க"

"sir.. நான் மிது இது என்னோட பிரண்ட் மித்ரா… நாங்க ரெண்டு பேரும் K. ண் hospitala நர்சாக வேலை செய்தம்… என்ன இங்க எங்க hospital dean வேலை செய்ய அனுப்பி வைச்சாங்க… இவ என்கூட வந்திட்டா sir… இவளுக்கும் இங்க வேலை போட்டுக் குடுக்க முடியுமா sir "

" கண்டிப்பா மா… இந்த hospital ஆரம்பிச்சி ஒரு எட்டு மாதம்தான் இருக்கும்… அதுதான் கொஞ்சம் அனுபவமுள்ளவங்க இங்க இருந்தா நல்லாருக்கும் என்று உங்க டீன்கிட்ட சொன்னேன்.. நீங்க ரெண்டு பேரும் வந்தது ரொம்ப சந்தோசம்… உங்களுக்கு தங்கிறதுக்கு குவாட்டஸ் இருக்கு நீங்க அங்க இருக்கலாம்… நாளைக்கே வந்து join பண்ணிக்கங்க"

" ok sir… ரொம்ப நன்றி sir.. "

" பரவாயில்லைமா நீங்க போயிட்டு வாங்க"

" சரி sir" என்ற இருவரும் குவாட்டஸ்க்கு வந்தனர்… அது மிகவும் சுத்தமாக இருந்தது.. அதனால் வந்ததும் இருவரும் களைப்பு தீர குளித்தனர்.. வரும்போதே சாப்பாடு வாங்கி வந்ததால் சாப்பிட்டனர்..

மிது மெதுவாக மித்ராவிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள்..

"மித்து உனக்கு என்னாச்சி ஏன் இப்படி இருக்க… நான் கேம்ப் போய் வார இந்த மூணு வாரத்தில என்னாச்சிடி?"

"மிது என் வாழ்க்கையே முடிஞ்சிருச்சிடி"

"ஏய் என்னடி சொல்லிட்டிருக்க…"

"நீ இங்க இருந்து போனதுக்கு அப்புறம் என்ன நடந்திச்சினு தெரியுமா டி" என்றவள் தனது கதையை கூற ஆரம்பித்தாள்……

அன்று மிது கேம்ப்க்கு போனதால் தனியாக வேலைக்கு சென்றுகொண்டிருந்தாள் மித்ரா… அப்போது அவள் வரும் வழியில் நின்றிருந்த கவினின் நண்பர்கள் மித்ராவைப் பார்த்து கமெண்ட் அடித்தனர். மித்ராவுக்கு அதைக் கேட்டு கோபமும் அழுகையும் வந்தது… இருந்தாலும் பேசாமல் போக அவள் பின்னால் வந்த ராஜ் மித்ராவின் கையை பிடித்து இழுக்க பயத்திலும் பதட்டத்திலும் அவனை அறைந்து விட்டு சென்று விட்டாள்.. ராஜை ஏனைய நண்பர்கள் கேலி செய்தனர்..

"என்ன ராஜ் உன்கிட்ட மடியாத பொண்ணுங்களே இல்லைனு சொல்லு.. ஆனா இவ உன்ன அறைஞ்சிட்டு போயிட்டா" என கேலி செய்ய ராஜ்க்கு மித்ரா மீது வன்மம் வந்தது.. உன்னை பழிவாங்காம விடமாட்டன்டி என்றவன் அங்கிருந்து செல்ல அவன் நண்பர்களும் அவனை தொடர்ந்து சென்றனர்…

"கவின் நம்ம ஊட்டி எஸ்டேடல ஏதோ problemடா என்னனு பார்க்கணும்டா"

" ரிஷி இங்க ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கே… வேணும்னா ஒண்ணு பண்ணலாம்… நீ அங்க போய் என்ன பிரச்சனைனு பாரு… நான் இங்க மீட்டிங் முடிஞ்சதும் வர்றன்"

"சரிடா… நீ பார்த்து பத்திரமா இரு என்றுவிட்டு ரிஷி ஊட்டிக்கு சென்றுவிட்டான்..

அன்று இரவு கவினும் மற்றைய பிரண்ட்ஸ்ஸூம் பப்பில் இருந்தனர்.. அப்போது கௌதம் "ஏன் கவின் எங்க ரிஷி?"

"அவன் வேலை விசயமா ஊட்டிக்கு போயிருக்கிறான்"

"அப்டியா… சரி" என்றதும்.. ராஜ்க்கு ஒரு ஐடியா வந்தது.. கவினை வைத்து மித்ரா பழிவாங்க நினைத்தான்.. ரிஷி இல்லாத இந்த நேரத்தை பயன்படுத்த நினைத்தான். ஏனெனில் ரிஷி கவினை தப்பான வழிக்கு செல்ல விடவே மாட்டான்.. அதுதான் ரிஷி இல்லாத நேரத்தை பயன்படுத்த நினைத்தான்.

"என்ன ராஜ் எதுவும் பேசாம அமைதியாக இருக்க?"

"அது என்னனு தெரியுமா கவின் சார் ஒரு பொண்ணுக்கிட்ட செமையா ஒரு அடி வாங்கிட்டாரு " என்று சொல்லி சிரித்தான் கௌதம்.

"அந்த பொண்ணு ஏன்டா உன்ன அடிச்சா?" என கவின் கேட்டான்..

"அதுவந்து அந்த பொண்ணு அழகா இருந்தா அத அவகிட்ட சொன்னேன்.. அப்புறம் உன்ன லவ் பண்றேன்னு சொன்னேன் டா… அதுக்கு அவ எனக்கு லவ் என்றாலே பிடிக்காது என்று சொன்னாள்டா… நான் உன்னை லவ் பண்ண வைப்பன்னு சொன்னேன்… அதுக்கு என்னை லவ் பண்ண வைக்க யாராலையும் முடியாது.. என்று சவால் விட்டா கோபத்தில கைய பிடிக்க அறைஞ்சிட்டா டா" என்று நடந்ததை மாற்றி சொன்னான்..

" அவ்வளவு திமிராடா அவளுக்கு? "

" ஆமா கவின்.. அவளை யாராலையும் லவ் பண்ண வைக்க முடியாதுடா"

" ஏன் ராஜ் உன்னால முடியாதுன்னு சொல்லு யாராலையும் முடியாதுனு சொல்லாத.. நம்ம கவினால முடியாததுனு ஒண்ணுமில்லை.. உனக்கு தெரியும் தானே " என்றான் கௌதம்

"தெரியும்டா.. ஆனால் அது பிஸ்னஸ்ல.. இது லவ் இதில கவினால ஜெயிக்க முடியாதுடா" என ராஜ் கூற..

" முடியும்டா…. இந்த கவினால முடியாததுனு எதுவும் இல்லை… இங்க பாரு எண்ணி மூணே வாரத்தில அவளா என்கிட்ட வந்து என்னை லவ் பண்றேன்னு சொல்லுவா… சொல்ல வைப்பேன்…" என்ற கவின் அங்கிருந்து புறப்பட்டான்…

மறுநாள் வழமை போல தனது வேலைக்கு சென்றாள் மித்ரா…
அவளை எதிர்பார்த்து கவினும் ராஜ்ஜீம் காத்திருந்தனர்..
அப்போது நீல நிற புடவை கட்டி நிலத்திற்கு வலிக்காதளவிற்கு மெதுவாக நடந்து வந்தாள். நடந்து வரும் அவளை பார்த்து ஒரு நிமிடம் தடுமாறி விட்டான் கவின்..

"கவின் இதுதான் நான் சொன்ன பொண்ணு மித்ரா"

"அழகாதான் இருக்கா… நீ போ நான் பார்த்துக்கிறன்" என்று சொன்னான்..

மித்ராவின் அருகில் சென்றான்…

"Excuse me" என்றவனை திரும்பி பார்த்தாள் மித்ரா.

"யாரு நீங்க?"

"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா?"

"நீங்க யாருனு தெரியாது… அப்புறம் எப்பிடி பேசுற?"

" sorry..நான் கவின்… T. P group of company yoda எம்டி…இப்போ பேசலாமா? "

"உங்ககிட்ட பேச எனக்கு என்ன இருக்கு.. எனக்கு வேலைக்கு போக டைம் ஆச்சி.. நான் வர்றன்"

கவிஞனுக்கு அவள் அப்பிடி சொன்னது கோபம் வந்தது.. இருந்தாலும் " ஏங்க ஒரு நிமிசம் சொல்றத கேளுங்க "

"இங்க பாருங்க ரோட்ல நின்னுட்டு கலாட்டா பண்றீங்களா.. "

" அப்பிடி இல்லை…சரி நீங்க வேலைக்கு போங்க ஈவ்னிங் பேசுறன். "

" ஈவ்னிங்கா… என்னங்க நீங்க.. உங்களை முன்ன பின்ன பார்த்ததுகூட இல்லை தொல்லை பண்றீங்க"

"ஒரு ஐந்து நிமிசம் பேசணும் மித்ரா"

" என்… என் பேரு.. எப்படி தெரியும்? "

" வாங்க சொல்றன் என்றவன் அவளை அழைத்துக் கொண்டு காரருகில் வந்தான்.

"என் கைய விடுங்க.."

"இங்க பாருங்க மித்ரா… முதல்ல கார்ல உக்காருங்க நான் பேசிட்டு உங்களை விட்டுர்றன் பிளீஸ்"

மித்ராவுக்கு பயமாக இருந்தது.. "பயப்படாதீங்க உங்களை ஒண்ணும் செய்ய மாட்டேன்" என்ற கூற அவனது கண்களில் பொய் தெரியாததனால் அவள் காரினுள் ஏறினாள்..

"இங்க பாருங்க மித்ரா… நான் உங்ககிட்ட சொல்லப்போற விசயம் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்… ஆனால் அதுதான் உண்மை." என்றவன் மித்ரா அருகில் வந்தவன் அவளது கைகளை மெதுவாக பிடித்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.. அவனது கைகளில் இருந்து கைகளை எடுக்க முயன்றாள் மித்ரா.

" இங்க பாரு மிரா. " என்றான் கவின்

" உன்னைத் தான் மிரா. உன்னை நான் பார்த்தப்போ எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சி.… உன்கிட்ட எப்பிடி சொல்றதுனு தெரியாம தவிச்சிட்டு இருந்தன்… இன்னைக்கு சொல்லிடலாம்னு தான் வந்தன் மிரா… எனக்கு அம்மா அப்பா இல்லை… நான் ஒரு அநாதை… என்ன சுற்றி பணம் மட்டும்தான் இருக்கு… பிளீஸ் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு எனக்கு ஒரு உறவாக மட்டுமில்லாம எல்லாமாகவும் நீ இருப்பாய்?? " என்று கண்களில் காதல் பொங்க கேட்வனை கண்ணிமைக்காது பார்த்தாள்..

" மிரா.. என்ன யோசிக்கிற? "

" ஒண்ணுமில்லை… நீங்க திடீர்னு இப்பிடி சொல்றீங்க? "

" நான் சொல்லிட்டேன் என்றதால் நீ இப்பவே சொல்லணும்னு இல்லை… நல்லா யோசிச்சி சொல்லு.. " என்றவன் அவளது போனை வாங்கி தனது நம்பரை சேவ் பண்ணி கொடுத்தான்..

"எதுனாலும் எனக்கு call பண்ணு… "

" நான் போகட்டுமா?? "

"சரி போ"

மித்ரா ஓட்டமும் நடையுமாக வந்தாள் hospitalku… அவள் போகும் வேகத்தை பார்த்த கவினுக்கு புன்னகை பூத்தது..

மதியம் சாப்பிட்டுக் கொண்டு இருந்த மித்ராவுக்கு போன் வந்தது..
"யாரு இது புது நம்பர்?" என்றவள் போனை எடுத்து" ஹலோ… யாரு நீங்க"

" ஹாய் மிரா… நான் கவின்"

"எதுக்கு போன் பண்ணிங்க?"
 
Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
499
113
Tirupur
"சாப்டியா??" என்று கேட்டான்.. மித்ரா ஒருநிமிடம் தடுமாறினாள்.. அவளுக்கு இப்படி அழைத்து சாப்டியானு கேக்கிற ஒரே ஜீவன் மிதுதான்…இப்போது கவின் கேட்டதும் என்ன சொல்றதுனு தெரியவில்லை அவளுக்கு…

" ஹலோ லைன்ல இருக்கிறாயா மிரா? "

" ஆ.. இருக்கிறன்.. சாப்டன்.. நீங்க சாப்டீங்களா??"

"thanks மிரா"

"எதுக்கு?"

"என்னை இதுவரைக்கும் சாப்டியானு கேக்க யாரும் இல்லை…. இப்போ நீ கேட்ட பாரு இது ரொம்ப பெரிய விசயம்… சீக்கிரமா என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லு மிரா" என்றான் உட்சென்ற குரலில்…

மித்ராவுக்கு பாவமாக இருந்தது.. இருந்தாலும் அவனை பற்றி எதுவும் தெரியாமல் எப்படி கல்யாணத்துக்கு சரினு சொல்றது என குழம்பினாள்..

" மிரா என்னடா இவன் திடீர்னு வந்தான்… கல்யாணம் பண்ணிக்கனு சொல்றான்… இவன் எப்படி பட்டவன்னு யோசிக்கிறியா?? என்கூட கொஞ்சநாள் பேசு பழகு உனக்கு பிடிச்சிருந்தா ஒத்துக்க… இல்லைனா பிடிக்கலனு சொல்லு உன்னை கட்டாயப்படுத்த மாட்டன்… ஆனால் உனக்காக காத்திருப்பேன்…" என்றான்.

" எனக்கு என்ன சொல்றதுனு தெரியல்லை… வேலைக்கு டைம்மாச்சி நான் போனை வைக்கட்டுமா?? "

" சரி பாய்"

இப்படியாக தினமும் அவர்களது உரையாடல் தொடர்ந்தது.. காலைலையும் இரவிலையும் மித்ராவுக்கு போன் பண்ணிடுவான் கவின்.. மித்ராவும் அவனது அழைப்பினை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டாள்…

திடீரென இரண்டு நாட்களாக கவின் மித்ராவுக்கு போன் பண்ணவில்லை.. மித்ரா போனை எடுப்பதும் பார்ப்பதுமாக இருந்தாள்.. "என்ன ரெண்டுநாளா போனே பண்ணல… என்னாச்சி?? ஒருவேளை அவருக்கு நான் சரினு சொல்லாததனால பேசக்கூடாதுனு நினைக்கிறாரோ?? இல்லைனா உடம்பு சரியில்லாம இருக்குமோ??" என யோசித்த மித்ராவுக்கு மனசு வலித்தது.. "உடம்பு சரியில்லைனா அவர பார்த்துக்க யாரும் இல்லைனு சொன்னாரே " என்ற நினைத்த மித்ரா உடனே யோசிக்காமல் கவினுக்கு போன் பண்ணினாள்…

உண்மையாகவே கவின் தனது வீட்டில் காய்ச்சலால் படுத்திருந்தான்.. அவனால் எழக்கூட முடியவில்லை… போன் அடித்தது.. கஸ்ரப்பட்டு எடுத்துப் பார்க்க மித்ரா.. அவன் மித்ராவுக்கு எடுக்க நினைத்தான்.. ஆனால் அவனால் போன் எடுக்க முடியாதளவிற்கு காய்ச்சல்..அவள் போன் பண்ணியதை பார்த்த கவினுக்கு மனசெல்லாம் நிறைந்தது…

"ஹ… லோ…"

"ஹலோ… கவி… உங்களுக்கு ஒண்ணுமில்லைதானே… நல்லா இருக்கிறீங்களா??? ஏன் எனக்கு போன் பண்ணல??" என்று விடாது பேசினாள்…

"மி… ரா"

"என்னாச்சிங்க?? ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க?"

"மி… ரா… ரெண்டு… நா.. ளா.. கா.. ய்.. ச்… ச… ல்"

"ரெண்டு நாளா காய்ச்சலா? ஏன் என்கிட்ட சொல்லல? மருந்து எடுத்தீங்களா?? " என்று கேட்டாள்..

" இ.. ல்… லை.. "

"என்ன நீங்க ரெண்டு நாளா காய்ச்சலோட இருக்கிறீங்க கூட யாரு இருக்கிறா? "

" யா.. ரு… ம்… இ.. ல்… லை"

" தனியாகவா காய்ச்சலோட இருக்கிறீங்க? "

" எ.. ன.. க்… கு… யா.. ரு… இ… ரு… க்… கி… றா? " என்றான்.

உடனே போனை கட் பண்ணிய மித்ரா அவனுக்கு தேவையான மருந்தை எடுத்துக்கொண்டு வேலைக்கு லீவு சொல்லிவிட்டு கவின் வீட்டிற்கு சென்றாள்…

அவனது வீட்டைப் பார்த்தவள்.. மலைத்துவிட்டாள்.. ஆம் அது பெரிய மாளிகையாக இருந்தது.. உண்மையில் இது கவின் வீடுதானா என்று யோசித்தவள்.. அவனது காய்ச்சல் நினைவு வர எதையும் யோசிக்காது வீட்டினுள்ளே சென்றுவிட்டாள்..

வீட்டிற்குள் சென்று விட்டாள்.. ஆனால் அவனது அறை தெரியாதே.. என்று யோசித்தபடி நின்றவள் ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தாள்… கடைசியில் இரண்டாவது தளத்தில் இருந்த அறையை திறந்தாள்.. அங்கே கவின் போர்த்திக் கொண்டு படுத்திருந்தான்.. அவனைப் பார்த்ததும்

"கவி" என்று அழைத்தபடி உள்ளே சென்றாள்.

மெதுவாக அவனது நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.. உடல் நெருப்பாய் கொதித்தது..

அவளது தீண்டலில் கடினப்பட்டு கண்களை திறந்தான் கவின்..

"மி.. ரா"

"என்ன கவி… உடம்பு இப்பிடி கொதிக்குது. இவ்வளவு காய்ச்சலோட எப்பிடி இருக்க முடியும்? மருந்து எடுந்திருக்கலாமே.."

கவினால மித்ரா வந்ததை நம்ப முடியவில்லை "மி.. ரா… நீ…எப்.. படி இங்க…. வந்… த?என்.. னால.. நம்ப…. முடி… யல…"

"முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க கவி"

" எ… ன்… னா… ல… முடியல… மிரா. "
என்றவன் அருகில் வந்து அமர்ந்தவள் தான் கொண்டு வந்த மாத்திரைகளை போட கொடுத்தாள்..

"சா..ப்ப…டல மி…ரா" என்றான்.. சாப்பிடாமல் மாத்திரை போட முடியாதே என்று நினைத்த மிரா" இருங்க கவி" என்றவள் மெதுவாக அவனை பிடித்து கட்டிலில் சாய்ந்து அமர வைத்தவள் தனது கைகளை கழுவிக் கொண்டு வந்து தனது சாப்பாட்டை எடுத்து கவினுக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.

"என்ன பார்க்கிறீங்க? ஆ.. காட்டுங்க"

"ம்.." என்றவன் கண்களில் நீருடன் உணவை வாங்கிக்கொண்டான்.

" சாப்பாடு காரமா இருக்கா?"

"இ.. ல்.. லை.. எனக்கு… யாரும்… சாப்பாடு.. ஊட்டி விட்டதில்லை…" என்ற கவின் அவளது கைகளில் முத்தமிட்டான்.. மித்ரா தலையை குனிந்து கொண்டாள்.

" sorry மிரா… உணர்ச்சிவசப்பட்டுட்டன்"

"முதல்ல சாப்பிடுங்க" என்றவள் உணவை ஊட்டி விட்டு மாத்திரைகளை கொடுத்தாள்..

" மிரா நான் உன் மடியில படுத்துக்கட்டுமா?? "

" மௌனம்"

" உனக்கு பிடிக்கலனா விட்று"

"இல்லை கவி வாங்க" என்றவள் அவனை தனது மடியில் போட்டு தட்டிக் கொடுத்தாள்… மருந்தின் உபயத்தால் நன்றாக தூங்கினான். சில மணி நேரம் சென்ற பின் கண்விழித்தான்..

அவனை மடியில் தாங்கி அவனது தலையை வருடிக்கொடுத்தபடி இருந்ததைப் பார்த்தான்..

" மிரா" என்றபடி அவளது மடியிலிருந்து எழுந்தான்.

" எழுந்திட்டீங்களா கவி? இப்போ உடம்புக்கு எப்பிடி இருக்கு?"

"இப்போ ok மிரா… thanks"

"எனக்கு எதுக்கு நன்றியெல்லாம்.. நீங்க காய்ச்சல் வரும் போதே மாத்திரை போட்டிருக்கலாமே கவி"

"எனக்கு இவ்வளவு பெரிசா காய்ச்சல் வந்ததில்லை மிரா.."

"அதுக்காக இப்பிடி இருக்காதீங்க.. இப்போ காய்ச்சல் இல்லைதானே" என்றவள் அவனது நெற்றியில் கைவைத்தாள்..சூடு இன்றி காணப்பட்டது..

" நான் சொன்னேன் தானே மிரா காய்ச்சல் சுத்தமா போயிடிச்சினு.. உடம்பு கொஞ்சம் களைப்பாக இருக்கு மிரா. "

" நல்லா ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்.. டைமுக்கு சாப்டு இந்த மாத்திரையை போடுங்க.. நான் போயிட்டு வர்றன்"

"எங்க போற?"

"hostel கு"

"வேணாம் மிரா ரெண்டு நாளைக்கு என் கூட இரு மிரா.."

"முடியாது கவி நான் போகணும்"

"நீ போனா என்ன யாரு மிரா பார்த்துப்பா?? டைமுக்கு யாரு சாப்பாடு தருவா?? மடியில போட்டு யாரு தூங்க வைப்பா.???மிரா இன்னும் என்னோட காதல் உனக்கு புரியல்லையா?" என்றான் கண்களில் காதலோடு..

" புரியுதுங்க.. ஆனா உங்களுக்கு ஏத்தவ நான் இல்லை… நீங்க எவ்ளோ பெரிய ஆள்… நான் சாதாரண நர்ஸ்.. "

" இவ்ளோ பெரிய ஆளா இருந்தும் என்கூட யாரும் இல்லையே மிரா… எனக்கு காய்ச்சல் என்றதும் நீதானே வந்த.. பிளீஸ் மிரா… என் காதல ஏத்துக்க.. நான் உன்ன என் கண்ணுக்குள்ளே வச்சி பார்த்துப்பன்… நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா மிரா பிளீஸ் "

சிறிது யோசித்த மித்ரா" உங்களை நம்புறன்… சரி கல்யாணம் பண்ணிக்கலாம்… என்ன ஏமாத்தி மாட்டீங்களே.. அப்பிடி ஏதும் நடந்திச்சி என்னால தாங்கிக்கவே முடியாதுங்க.. " என்று மிரா சொன்னவுடன் வெளியே இருந்து கைதட்டும் சத்தம் கேட்டது… யாரென பார்க்க அங்கே ராஜ்ஜீம் கௌதமும் நின்றிருந்தனர்..

இவர்களை புரியாது பார்த்தாள் மித்ரா..

" கவின் நீ உண்மையிலேயே பெரிய ஆள்தான்டா.. இவள சொன்ன மாதிரியே மூணு வாரத்தில உன்ன லவ் பண்ண வச்சிட்ட… போட்ட சவால்ல ஜெயிச்சிட்ட மச்சி" என்றான் ராஜ்..

இதைக் கேட்ட மித்ராவுக்கு தனது மனசில் இடி விழுந்து போல இருந்தது..
இருந்தாலும் "நீங்க சொல்றது உண்மையா?" என்றாள்…

" உண்மைதான் உங்கிட்ட எதுக்கு பொய் சொல்லணும்… அன்னைக்கு என்னை அடிச்சியே அதுக்கு பழிவாங்கதான் இப்பிடி பண்ணன்" என்றான் ராஜ்.

கவினை இப்பிடி என்னை ஏமாத்திட்டியே என்று ஒரு பார்வை பார்த்தாள் மித்ரா..

"மிரா.."

"நிறுத்துங்க.. என்னோட பெயரை சொல்ற தகுதிய நீங்க எப்பவோ இழந்திட்டீங்க.. உங்கள நான் எவ்ளோ நம்பினேன்… என்னை பார்த்துக்க.. என்மேல அன்பு காட்ட…கஸ்ரம் வந்தா தட்டிக்கொடுக்க.. எனக்காகனு ஒரு உறவு இருக்குனு ரொம்ப சந்தோசம் பட்டன்… ஆனால் நீங்க என்ன ஏமாத்திட்டீங்க… என் மனசை உடைச்சிட்டீங்க… இனிமேல் என் முகத்தில முழிக்காதீங்க… நான் போறேன்… " என்றவள் கவின் கூப்பிடுவதைக் கூட கேட்காமல் சென்றுவிட்டாள்…

அங்கிருந்து நான் வரும்போதுதான் நீ என்ன பார்த்த என்று நடந்ததை சொல்லி முடித்தாள் மித்ரா.. இதைக் கேட்ட மிதுவுக்கு கவின் மீது கோபம் வந்தது…

அதே நேரத்தில் ரிஷி கௌதமிடம் இருந்து நடந்ததை அறிந்து கொண்டு கவின் அறைக்கு வந்தான்

" மித்து உனக்கு ஒரு நிமிடம் கூட அவன் காட்டின அன்பு பொய்னு தோணலையா?"

"இல்லையே மிது… அவர் எங்கிட்ட பேசும் போது அவர் கண்ல எனக்கான காதலை பார்த்தன் டி ஆனால் இப்பிடி என்ன ஏமாத்துவாருனு நினைக்கவே இல்லைடி…"

"சரி நீ அதையே நினைச்சிட்டு இருக்காத சரியா? வா ஊர சுத்தி பார்த்திட்டு வருவம்"

" நான் வரலடி"

" மித்து இங்கையே இருந்தா அதையே யோசிசிட்டு இருப்ப.. வா என்கூட "என்று மித்ராவை அவளுடன் அழைத்துச் சென்றாள்..

ரிஷி கோபத்துடன் கவினின் அறைக்குள் நுழைந்தான். அங்கே கவின் வெளியே செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்தான்.

" என்ன கவின் அடுத்து யார சவாலுக்காக ஏமாத்த போறீங்க? " என்று கேட்டபடி அவன் முன்னால் வந்த ரிஷி கவின் கண்களில் தெரிந்த கண்ணீரைப் பார்த்து பதறிவிட்டான்.
"கவின் என்னாச்சி?"

"நீ கூட என்னை புரிஞ்சிக்கலையே ரிஷி… நான் அப்பிடி பட்டவனா? ஆரம்பத்தில சவாலுக்காகதான் பேச ஆரம்பிச்சேன்.. ஆனால் அவளோட பேசி பழகும் போது என்னை அறியாமலே அவள விரும்ப ஆரம்பிச்சிட்டன் ரிஷி.. இத அவகிட்ட சொல்ல முதல்லேயே அவ போயிட்டா… உண்மையா மனப்பூர்வமா அவளை விரும்பறேன் ரிஷி… எனக்கு என்னோட மிரா வேணும் "என்று அவனிடம் கூறினான் கவின்..

" என்னை மன்னிச்சிடு கவின்.. நானும் தப்பா நினைச்சிட்டன். சரி வா போய் மித்ராவ பார்க்கலாம். "

" அவ இப்போ இங்க இல்லைடா ஊட்டிக்கு போயிட்டா.. அங்க போகத்தான் நானும் ரெடியாகிட்டு இருக்கிறன்"

" நானும் வர்றன் டா "

" சரி வா" என்றவர்கள் மித்ராவை பார்க்க சென்றனர்..

வெளியே சென்று விட்டு வந்த மிதுவும் மித்ராவும் வீட்டுக்கு வந்து இரவு சாப்பாட்டை செய்து கொண்டிருந்தனர்.. அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.. " இந்த நேரத்தில் யாரு? மித்து போய் கதவை திறடி"

" சரி "என்ற மித்ரா போய் கதவை திறந்தாள்.. அங்கே கவினும் ரிஷியும் நின்றிருந்தனர்..

"யாரு நீங்க எதுக்கு வந்தீங்க?"

"உள்ள போய் பேசலாம் மித்ரா" என்றான் ரிஷி.. இரவு நேரத்தில் யாருக்கும் காட்சிப்பொருளாக வேண்டாமென நினைத்த மித்ராவும் அவர்களை உள்ளே அழைத்தாள்..

" யாருடி இது"

"தெரியாது மிது"

"மிரா…"

"நிறுத்துங்க இங்க எதுக்கு வந்தீங்க?? நான் செத்திட்டனானு பார்க்க வந்தீங்களா? " என்று மித்ரா கேட்டதும் கவின் கோவத்தில் அவளை அறைந்து விட்டான்..

"எதுக்காக அவளை அடிச்சீங்க?"

"நீங்க கொஞ்சம் பேசாம இருங்க… அவங்க பேசிக்கட்டும்" என்று ரிஷி மிதுவிடம் கூறினான்.

"இங்க பாரு மிரா… நான் ஆரம்பத்தில உன்ன காதலிக்கிற மாதிரி நடிச்சேன்.. ஆனால் உங்ககூட பேசி பழகும் போது உண்மையிலே உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சிட்டன் மிரா…என் மனசு முழுதும் நீதான்டி இருக்க… நடந்ததை உங்கிட்ட சொல்லலாம்னு நினைக்கும் போதுதான் அவன் வந்து சொல்லிட்டேன்… மிரா நான் உன் கால்ல விழுந்துகூட மன்னிப்பு கேட்கிறேன் மிரா… எனக்கு நீ வேணும் என்னை அன்பா பார்த்துக்க நீ வேணும் மிரா… என்னை நம்பு மிரா… என் காதல் உனக்கு புரியலையா மிரா.. "

" எதுக்காக திரும்ப வந்து நடிக்கிறீங்க? இப்படி பேசினா நான் நம்பிருவன்னு நினைக்கிறீங்களா.. "

" மிரா நீ நம்பணும்னா நான் என்ன பண்ணட்டும்.. அந்த பள்ளத்தில குதிக்கட்டுமா?? இல்லை வேற என்ன பண்ணட்டும்"

" எங்க அந்த பள்ளத்தில் குதிங்க பார்ப்பம்" என்றாள் உடனே கவின் வீட்டிலிருந்து வெளியே வந்து பள்ளத்தில் பாய சென்றான்.. ரிஷி மிது தடுத்தும் கேட்காமல் சென்றான்.. ஒரு முடிவுடன் மித்ராவை திரும்பி பார்த்தவன்" இந்த உலகத்தில நான் ரொம்ப சந்தோசமா இருந்த நாட்கள் உன்னோட பழகின நாட்கள்தான் மிரா.. லவ் யூ சோ மச் மிரா" என்றவன் பள்ளத்தில் குதிக்க முயற்சிக்க அவனை பின்னிருந்து அணைத்துக் கொண்டு அழுதாள் மித்ரா…

"மிரா"

"உங்களை நம்புறன் கவி… உங்க கண்கள்ல எனக்கான காதலை பார்த்திருக்கேன்… உங்க மேல கோவம் வந்திச்சே தவிர வெறுப்பு வரல…நான் இங்க வந்ததும் உடனே நீங்களும் இங்க வந்தீங்களே இதுதான் உண்மையான காதல்…ரொம்ப ரொம்ப சந்தோசம் கவி… பிளீஸ் இனிமேல் இப்பிடி விளையாட்டுகூட பண்ணாதீங்க.. லவ் யூ சோ மச் கவி" என்றவள் முகத்தை தனது கைகளில் ஏந்திய கவின் முத்தமழை பொழிந்தான்…

" இவங்க காதல் உண்மையான காதல் அதுதான் ரெண்டு பேரும் சேர்ந்திட்டாங்க" என்றான் ரிஷி
" உண்மைதான் "என்று கூறி சிரித்தாள் மிது…

உண்மைக் காதல் இணைந்தது…

❤️❤️காதல் நிறைவுற்றது❤️❤️

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் அன்புத்தோழி
✒️✒️திவ்யதுர்ஷி✒️✒️
 
Hilma Thawoos

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
163
27
28
Hambantota, SriLanka

அருமையா இருந்துச்சு சகி ♥️♥️ போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்..
 
Vimala Ashokan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2021
330
93
43
Tanjur
மிகவும் அருமை மா
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
 
Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
14
43
SriLanka
Semmayah irunchu ka.. First kavin mela kovam vanchu..epdum avanda love unmaya irukum nu nenachan.. awesome
 
Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
88
27
18
Deutschland
போட்ட சவாலில் ஜெயிக்க காதலிப்பது போல் நடிச்சிருந்தாலும் ......கவினின் மனது உண்மையான பாசத்துக்காக ஏங்கியபடியால் நிஜமா காதலிக்க ஆரம்பித்து விட்டான் .....அவளுக்கு புரிய வைத்தும் ஜெயித்து விட்டான்
கவினின் நண்பர்கள் போல் நாலு பேர் இருந்தால் வாழ்க்கையை தொலைக்க தான் வேணும் .....நண்பர்கள் உற்ற தோழனா இருக்கணும் ....இவங்கள போல் உள்ள ண்பர்களை பக்கத்துல வைத்திருக்கும் கூடாது ...
சூப்பர் ❤️
 
திவ்யதுர்ஷி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 28, 2022
461
14
43
Sri Lanka
போட்ட சவாலில் ஜெயிக்க காதலிப்பது போல் நடிச்சிருந்தாலும் ......கவினின் மனது உண்மையான பாசத்துக்காக ஏங்கியபடியால் நிஜமா காதலிக்க ஆரம்பித்து விட்டான் .....அவளுக்கு புரிய வைத்தும் ஜெயித்து விட்டான்
கவினின் நண்பர்கள் போல் நாலு பேர் இருந்தால் வாழ்க்கையை தொலைக்க தான் வேணும் .....நண்பர்கள் உற்ற தோழனா இருக்கணும் ....இவங்கள போல் உள்ள ண்பர்களை பக்கத்துல வைத்திருக்கும் கூடாது ...
சூப்பர் ❤️
நன்றி சகி😍😍
 
  • Love
Reactions: Thani