• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

15. இதயம் பகிர்ந்திட வா

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
684
மறு நாள் காலை சனிக்கிழமை. சாதாரணமான பள்ளியின் விடுமுறை நாள். ஏனோ உடல் சோர்வு போல் இருக்க, எங்கும் செல்லப் பிடிக்காது, விரல்களுக்கு நடுவே விரல்களை கோர்த்து விளையாடியவள் சிந்தையோ எங்கெங்கோ சென்று கொண்டிருந்தது.


எத்தனை நேரம், அதே தியாணத்தில் இருந்திருப்பாளோ! அவளது தியாணத்தை கெடுப்பது போல், அந்த குட்டி செல் போனானது தன் இயக்கத்தை மேசை மீதிருந்து அதிர்வாய் வெளிப்படுத்த, திடுக்கிட்டு திரும்பியவள், செல்போன் என்றதும் நிதானமாகி, மெதுவாக சென்று அதை இயக்கினாள்.


"ஹாலோ"
எதிர் திசையில் பதிலில்லை அமைதியே சிறு நொடி நீடிக்க.

"ஹாலோ.... நான் பேசுறது கேட்குதா...?" என்றாள் எங்கே தன் குரல் தான், அங்கிருப்பவர்களுக்கு கேட்கவில்லை என்று நினைத்து.

"கேட்குது கேட்குது....." அதுவரை கேட்காத காற்றில் பறக்கும் சத்தமானது, அவன் பேசுதற்கு இரு நொடி முன்னதாகவே இரைய ஆரம்பித்தது.

அதை கேட்டதும் சட்டென காதிலிருந்து செல்லினை இழுத்து அணைத்து வைத்த மறுநொடி, எங்கிருந்தோ உருண்டோடி வந்த வியர்வை முத்தொன்று நெற்றியை வருடி கன்னம் நனைப்பதற்குள், அதை அழுந்த தேய்த்து எடுத்தவள் இதயத் துடிப்பானது, அவளது நொஞ்சை பிளந்து கொண்டு வருவது போல் இருந்தது.
கை கொண்டு அழுத்திப் பிடித்து அதை அடக்க விளைந்தவள் மனமோ,


"இவன் அடங்கவே மாட்டானா...? இப்போ இவனுக்கு என்ன வேணும்.? செய்யிற எல்லாத்தையும் செய்திட்டு, கொஞ்சம் கூட சங்கடம் இல்லாம எப்பிடி இந்த மாதிரி எல்லாம் நடந்துக்கிறான்" அர்ச்சித்தவள் அர்ச்சனை அவனுக்கு கேட்டதோ என்னமோ, மீண்டும் அதே இலக்கத்திலிருந்து அழைப்பு.

அதை அணைத்து விட்டு இருந்தவளை அவனும் விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் அழைப்பினை தொடுத்தவாறே இருந்தான். அதுவே ஒரு கட்டத்தில் எரிச்சலை தர, சினந்தவாறு ஆன் சொய்து "ஹாலோ" என்றாள்.


"பேசிட்டு இருக்கிறப்பவே கட் பண்றியே டார்லிங்க்... இது அழகாவா இருக்கு?"

"ஆமாடா உனக்கு அந்த மரியாதையே அதிகம். நானும் பேசக் கூடாது பேசக் கூடதுன்னு அமைதியா போனா, உன்னை பார்த்து பயந்து ஓடுறேன்னு நினைச்சிட்டிருக்கியா...?"


"பார்றா... என் செல்லத்துக்கு தைரியம் எல்லாம் வந்திடிச்சு.. ஆமா இந்த திடீர் தைரியத்துக்கு யாரு காரணம்... எப்பவுமே உன் பின்னாடி சுத்திட்டு இருக்கானே அவன் தானே...?"
புரியவில்லை அவளுக்கு அவன் யாரை சொல்கிறான் என்று. இருந்தும்,

"ஆமாடா அவன் தான் அதுக்கு இப்போ என்ன..?" என்றாள் தெனாவட்டாக.

"பார்த்தேன் பார்த்தேன். எங்க போனாலும் உன் பின்னாடியே சுத்துறான். இதில பர்த்டேவுக்கு கேக் வெட்டி பெரிய செலிப்ரேஷன் வேற.. ஆமா எத்தனை நாளைக்கு உன் பின்னாடியே சுத்துவானாம்?." என்றான் நக்கலாக.

இம்முறை புரிந்து போயிற்று அவளுக்கு, யாரை இவன் கூறுகிறான் என்று. அவனை தன்னுடன் இணைத்து பேசுவது அமைதியுடன், சிறு சங்கடத்தையும் கொடுத்தது. இருக்கும் தானே!
அவளுடன் அவன் எப்போதுமே ஏட்டிக்குப் போட்டி நிற்பான் தான், ஆனால் இவனை போல் பொறுக்கி இல்லையே!

"ஏன்டா எல்லாரையும் உன்னை போல நினைச்சியா... பொறுக்கிட்டு திரிய... மனசளவில கூட கெடுதல் நினைக்காதவனை போய்...."


"புருஷன் ஆச்சே... விட்டு குடுப்பியா...? அப்பிடி தான் பேசுவ.. அஞ்சு வருஷம் ஆயிட்டா அவனும் என்னை போல தான் சலிச்சுப் போயிடும்." அவள் கூறி முடிப்பதற்கு முன், முந்தியவன் பேச்சில் அத்தனை எக்காளம். அது அவளுள் கோபத்தை விதைத்திருந்தது.

"ஆமாடா... ஒரு நல்ல மனுஷனோட அழகே கட்டின பொண்டாட்டியையோ, புருஷனையோ யாருக்காகவும் எந்த இடத்திலயும் விட்டுக் கொடுக்காதது தான்.. உன்னை போல இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை நாசம் பண்ணுறதுக்காக, உன்னையே நம்பி வந்தவளைப் பத்தி என்னெல்லம் பேசியிருப்ப... நீ தத்துவம் பேசுறியா?
இதை பாரு! உன்கூட பேச எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்ல.. இருந்தும் இன்னைக்கு ஏன் இவ்ளோ நேரம் பேசுறேன் தெரியுமா...? இன்னொரு தடவை என் நம்பரை கண்டு புடிச்சு கால் பண்ணுறதும், என் பின்னாடி சுத்துறதுன்னு இருந்தேன்னு வையி.. அப்புறம் என்னை நீ இத்தனை நாள் ஒழிஞ்சு திரிஞ்சிட்டிருந்த பிரியாவா பார்க்க மாட்ட... எங்க உன்னை காணுறேனோ அந்த இடத்தில செருப்பால அடிச்சே போலீஸ்ட ஒப்படைப்பேன். பொறுக்கி நாயே! வைடா போனை." மூச்சுக்கு இடம் கொடாது போசியவள், அவன் வைப்பதற்கு முன்னர் செல்லினை அனைத்து மெத்தை மேல் எறிந்த மறு கணம் தான் மூச்சினையே வெளி விட்டாள்.

இதயமோ இருந்ததை விட பலமடங்கு வேகமாக இயங்கியது. கால்களில் தொய்வு ஏற்பட்டதைப் போல் ஒரு பிரம்மை தோன்ற, தானும் மெத்தை மேல் தொம் என்று அமர்ந்தாள். இதுவரை இத்தனை கோபமாக அவள் யாரிடமும் நடந்து கொண்டதில்லை. இந்த தைரியமும் எங்கிருந்து வந்ததென்று அவள் அறியாள்.


உண்மை தான், அவள் வாழ்வை சிறு காலப் பகுதிக்குள் புயலென மாற்றிப் போட்ட அவன் மீது கூட அப்போது கோபப் படவில்லை. எல்லாமே தன் முன் ஜென்ம வினையென நினைத்து, தன்னை தானே நொந்து கொண்டாளே அன்றி, அவனுடன் மல்லுக்குச் செல்லவில்லை.

ஆனால் சம்மந்தமே அற்ற ஒருவனை தன்னுடன் இணைத்து பேசியதும் அல்லாது, அவனை தரம் தாழ்த்திப் பேசும் தகுதி இவனுக்கு யார் கொடுத்தது. அவனை பற்றி இவன் அறிவானா..? அவள் இதுவரை கண்ட ஆண்களில், தந்தைக்கு அடுத்து, உயர்ந்த குணமும், பண்பும் கொண்டவனாய் அவனை அவ்லவா காண்கிறாள்.


ஆம் உண்மை தான். அவளிடம் எரிந்து விழுவான் தான்.. அவன் ஏன் அப்படி தன்னுடன் மட்டும் நடந்து கொள்கிறான் என்ற காரணமும் அவளுக்கு தெரியாது தான். அது அவளுக்கு அனாவசியமும் கூட, ஆனால் அவள் பார்த்தவரை வேறு யாரிடமும், அது போல் நடந்து கொள்ளவில்லையே! சொல்லப் போனால் தன்னைப் போல் தான் மற்றவர்களையும் சுயநலம் இல்லாமல் காண்கிறான். அப்படிப் பட்டவனை எந்த தகுதியும் இல்லாத இவன் எப்படி கேவலமாக பேசலாம். தன்னால் அவனுக்கு அவப் பெயரை தேடித் தந்து விட்டோமே என்ற குற்ற உணர்வு அவளை ஆக்கிரமித்தது.


மெல்ல எழுந்து ஜன்னல் அருகே வந்தவள், திரைச் சீலையினை விலக்கி அவன் வீட்டினை நோக்கி விழிகளை மேய விட்டாள். அதே நேரம் அந்த இடத்தில் ஆயரானவனுக்கு என்ன குதூகலமோ!
முயல் குட்டி போல் கேட்டின் படிகளில் தாவித்தாவி குதித்து இறங்கியவன் விழிகளும் அவளிடம் தான் பதிந்திருந்தது. புதிதாய் அவளை நோக்கி புன்னகை ஒன்றினை வீசியவன் வலது கையோ, சலூட் அடிப்பதைப் போல், வணக்கம் வைத்ததை கண்டவளுக்கு அவனது அந்த தீடீர் மாற்றத்தின் காரணம் புரியவில்லை.


அவன் சாதாரணமாக இருக்கையில், தான் முறைப்பது நாகரீகாக இருக்காதே, பதிலுங்கு புன்னகைத்தவள் சிந்தையில், சற்று முன் பேசியவனது பேச்சானது வந்து போக, மாறிய முகத்துடன் சட்டென முகத்தினை உள்ளிழுத்து, திரைச் சீலையிைனையும் இழுத்து விட்டவளுக்கு, மீண்டும் தன்னால் அவனுக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்ற எண்ணமே தோன்றியது.


பின்னே கண் கொத்திப் பாம்பாக அவளையே ஒருவன் சுற்றிக் கொண்டு திரிகையில், அவன் பார்வைக்கு எல்லாமே தவறாகத் தானே தெரியும்.
'வேண்டாம்... யாரும் புதுசா என்கூட நட்பு பாராட்ட வேண்டாம். இதுவரைக்கும் கேட்ட நல்ல பெயர் எல்லாம் போதும்' தன்னை தானே எச்சரித்த அதே நேரம், வாசல் கதவானது தட்டுப்பட்டது.


"இப்பல்லாம் இந்த தொல்லை தாங்க முடியல.." ஸ்ரீ தான் எப்போதும் போல் தட்டுகிறாள் என்ற எண்ணத்ததோடு தான் முணுமுணுத்தவாறு கதவினை திறந்தாள். ஆனால் அங்கு நின்றது ஸ்ரீ இல்லை சத்தியன்.
ஒரு நொடி அதிர்ந்து நின்றவள், மறு கணமே அதை மறைத்தவாறு,


"ஏதாவது தேவையா...?" என்றாள் வாசலை மறித்தவாறு.

"இல்லையே... முந்தா நேத்து வரை எதிரியா இருந்தோம்.. நேற்றோட நல்ல நண்பர்கள் ஆகிட்டோமே! அதான் வீடு வரைக்கு வந்து, அந்த நட்பை வலுப்படுத்தலாமேன்னு முயற்சிக்கிறேன்." தோள்களை குழுக்கி ஈஸியாக அவன் கூறி விட்டான். ஆனால் பிரியாவுக்கு நட்பே வேண்டாம் என்றிருந்து.

"ஓ..." யோசனையோடே இழுத்தவள்,

"ஆனா நான் வெளிய போகப் போறேனே" என்றாள் எப்படியாவது அவனை அங்கிருந்து துரத்தி விடும் எண்ணத்தில்.

"நல்லதா போச்சு... நானும் வெளிய தான் போக போறேன். நீ எங்க போகணுமோ சொல்லு, நானே கார்ல விட்டு விடுறேன்." அந்த முகத்தில் ஆரம்பத்தில் இருந்த புன்னகை கொஞ்சம் கூடக் குறையவில்லை.
பிரியாவுக்குத்தான் எனக்குன்னே வருவீங்களாடா என்று ஆனது.


"இல்லை பக்கம் தான், நானே போக்கிறேன்." வெளியே கிளம்பினால் தானே அவனுடன் செல்வதற்கு.


"இன்னும் நல்லதா போச்சு... நான் கூட தூரத்திலயோ, அவசரப் பட்டு வாக்கு குடுத்துட்டேனே! தூர போகணும்ன்னு சொன்னா நான் போற வேலைக்கு லேட் ஆகிடுமே! இப்போ எப்பிடி சமாளிக்கிறதுன்னு பயந்திட்டேன். சரி நீ ரெடியாகிட்டல்ல... வா போகலாம்." கை பிடித்து இழுக்காத குறை ஒன்று தான், விட்டால் அதையும் செய்திடுவான் என்பது போல் இருந்தது அவன் வேகம்.

பாவம் பிரியா தான் முழிக்க ஆரம்பித்தாள்.
"அது... அது.. எனக்கு எந்த அவசரமும் இல்ல... நீங்க உங்க வேலைய முதல்ல முடியுங்க.. நான் நிதானமாவே போய்க்கிறேன்." ஏதோ சமாளித்ததாக எண்ணி கதவடைக்க முயன்றவளுக்கு முன்னர், கதவின் மேல் கை வைத்து தடுப்பது போல் அதையே பற்றி இருந்தவன்,


"அவசரம் இல்லல்ல.. அப்புறம் என்ன...? முதல் முதலா வீட்டுக்கு வந்திருக்கேன். உள்ள கூப்பிட்டு குடிக்க ஏதாவது தரலாமே!

ஸ்ரீ அக்காவுக்கு உடம்பு சரியில்லையாம். அதனால படுக்கையை விட்டு எந்திரிக்கல... எழுந்ததும் காஃபி குடிச்சு பழகிட்டேன் வேற, காஃபி குடிக்காதது ஒரு மாதிரி இருக்கு." பிச்சைக்காரனிலும் கீழ் இறங்கி கெஞ்சியவனை அதற்கு மேல் அடித்தா விரட்ட முடியும்? அரை மனதாக வாசலை விட்டு அவன் உள்ளே வருவதற்கு ஒதுங்கி நின்றவள் விழிகள், வெளியே தம்மை யாராவது காண்கிறார்களா என்றே ஆராய்ந்தது.

உள்ளே வந்தவன் அங்கிருந்த இருக்கை ஒன்றினை தனதாக்கிக் அமர்ந்த மறு நாெடியே வீட்டினை ஆராய்ந்தான்.

"உக்காருங்க.. காஃபி எடுத்துட்டு வரேன்." என கிச்சனுக்குள் ஓடியவளை திரும்பி ஒரு முறை பார்த்தன் விழிகள் மீண்டும் வீட்டின் தோற்றத்தை ஆராய்ந்தது.

ஒரு அறையுடன் கூடிய கிச்சன் சின்னதான ஒரு விறாந்தை இவ்வளவு தான் அவள் வீடு. அவள் ஒருவளுக்கு அதுவே அதிகம் தானே!
தன்னை நோக்கி வந்த கப்பினை, வீட்டினை ரசித்தவாறே வாங்கிக் காெண்டவன்,


"இந்த வீட்டிலயா பிரியா இருக்க...? வீடு சின்னதா இருந்தாலும் சுத்த பத்தமா தான் வைச்சிருக்க." என்றவனுக்கு என்ன சொல்வாள் அவள். எதுவும் பேசவில்லை மௌனமாக தலையினை காவிழ்ந்து கொண்டவள் கால் விரலோ தரையினை நோண்டத் தொடங்கியது.

"நான் சும்ம ஃப்ரண்லியாத்தான் வந்தேன் பிரியா.." என்றவன் விழிகளில் திடீரென எங்கிருந்து தான் தீவிரத் தன்மை வந்ததோ!


"அதான் வரும் போதே சொல்லிட்டிங்களே! அப்புறம் எதுக்கு திரும்ப..?" புருவங்கள் வளைய கேட்டவளுக்கு அவனது பேச்சும் அதிலிருந்த தீவிரமும் எதற்கு என்று புரியவில்லை.


"ஓ... நினைவில இருக்கா.. நான் கூட நீ இந்த மாதிரி தரையை பெருவிரலால நோண்டிட்டே நெளியவும், பொண்ணு பார்க்கத் தான் வந்தேன்னு நினைச்சியோன்னு நினைச்சேன். ஏன்னா காஃப்பிய தந்திட்டு, இதை தானே சினிமாவில
பாெண்ணுங்க செய்வாங்க."


"ஓ... அதுவா..." ஏதோ சிந்தையில் அவனுக்கு ஒத்தூதுவது போல் இழுத்தவளுக்கு, வார்த்தையை விட்டதன் பின்னர் தான், மூளை அவன் கூறியதை உள் வாங்கியது போல.

"என்னது...!" என்றாள் அவனை முறைத்து. அதில் பட்டென சிரித்தவன், "சும்மா விளையாடினேன். பை த பைய்.. காஃபி சூப்பர்..." என அவளை பாராட்டி கப்பினை தரையில் வைக்க, அதை எடுத்துக் கொண்டவள்,

"எங்கேயோ அவசரமா கிளம்பினீங்களே..." வெளியே போ என்பதை நாகரீகமாகக் கூறினாள்.

"ஆமாமா..." என மனமே இல்லாது எழுந்து கொண்டவன்,

"அப்போ நான் கிளம்புறேன்." என வெளியே செல்ல தயாராக,

"ஒரு நிமிஷம்" என்றாள் அவனை தடுப்பது போல், அவளது அந்த ஒரு நிமிஷம் என்ற சொல்லில்.

"சொல்லு பிரியா" என்றான் ஆர்வமாய் அவள் புறம் திரும்பி.

"அது... அது... முதல் தடவையா வீடு தேடி வந்தவங்க கிட்ட இப்பிடி சொல்லலாமா தெரியல.. பட் சொல்லித்தான் ஆகணும். அது.. இ... இனி... இனிமே என் வீட்டுக்குள்ள வராதிங்க." என்றாள் முகத்தில் அறைதைப்போல்.
அதை கேட்டதும் சத்தியன் முகம் வெளிறிப் போனது.

அவளையே கேள்வியாக நோக்கியவன் ஒன்றை புருவமானது விரிய,
"காரணம் தெரிஞ்சுக்கலாமா...?" என்றான் மரத்துப் போன குரலில்.

"காரணம்... அது... இது ஆம்பள இல்லாத வீடு... நாளை பின்ன தப்பாகிட கூடாதுல்ல" முண்டி விழுங்கி சொன்னவள் விழிகள் அவனை பார்க்க சஞ்சலம் கொண்டது.

"தப்பா...? என்ன தப்பு...?" உயர்ந்த புருவமும் அவளை நோக்கிய பார்வையும் மாறவில்லை.

"ஆமா... தப்புத்தான்.. நான் உங்க கூட பழகுறத வைச்சு தப்பா வதந்தி பரவுது. இதெல்லாம் வேண்டாமே!" அவனது விடாத கேள்வியில் கூற வேண்டிய சூழல்.

"அப்பிடி யாரு சொன்னாங்க?" அவனும் விடுவாக இல்லை.

"யாரு சொன்னா என்ன...? ஒருதன் பேச ஆரம்பிச்சிட்டாலே ஊர் முழுக்க பேசும்." சொன்னால் கேட்க வேண்டியது தானே என்ற கோபத்தில் சீற ஆரம்பித்தாள்.



"பேசிட்டு போகட்டும்... எனக்கு ஓகே தான்." சாதாரணமாக தோளினை குழுக்கினான் அவன்.

"உனக்கு ஓகேன்னா... என்ன அர்த்தம்.?" கோபமாய் பன்மையிலிருந்து ஒருமைக்கு மாறி கேட்டவளது புருவங்கள் விரிந்தது.

"ஆமா... ஊர் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, நாமளே முந்திட்டா யாரு வாய்க்கும் விருந்தாக வேண்டாம்ல." விளையாட்டுத்தனம் ஒட்டிக் கொண்டது.

"என்ன முந்திக்கிறது.?" அவனது பேச்சு புரிந்தும் புரியாதது போல் கேட்டவள் தோறணையே சொன்னது, அந்த பேச்சானது அவளுக்கு எந்தளவிற்கு எரிச்சலை கொடுத்திருக்கிறது என்பதை.


"டீச்சர் என்கிற... இது கூடவா புரியல. சரி நானே புரியுற மாதிரி சொல்லுறேன். எனக்கு உன்னை புடிச்சிருக்கு.. உனக்கும் என்னை புடிச்சிருந்தா சொல்லு, ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிப்போம்." என்றான் படு கூலாக.

"என்ன நக்கலா...? ஒரு பாெண்ணுகிட்ட என்ன பேசணும் என்கிற அறிவில்லை. அதுவும் கல்யாணம் ஆன பொண்ணுக்கிட்ட இந்த மாதிரி பேசிட்டிருக்க.. இது தான் நீ படிச்சு கிழிச்ச லட்சனமா?" இழிவான பார்வை பார்த்தவாறு கேட்டவளை நோக்கி விரைந்து வந்தவன், அவள் ஆசந்த நேரத்தில் கழுத்திலிருந்த தாலியினை அறுத்து எடுத்து,

"இது தாலி... இதனால நான் ஒதுங்கி போகணும்..." உதட்டில் ஏளனப் புன்னகை.

"இதை பாரு பாரதி... இது ஒன்னை காரணம் காட்டி, இந்த ஊரையும், உன் குடும்பத்தையும் நீ ஏமாத்தலாம்... ஆனா என்ன......" என்று ஆட்காட்டி விரலை மட்டும் அசைத்தவனது பேச்சின் தோரணையே முற்றிலும் மாறிப் போயிருந்தது.

"இப்போ சொல்லுறேன் பாரதி.. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு... அதனால தான், உன்கூட கடுமையா நடக்கிறதை விட்டுட்டு, நல்ல முறையில பழகி, என்னோட ஆசைய சொல்ல முயன்றேன். ஆனா உனக்குத்தான் எதையும் நல்ல விதமா சொன்னா மண்டையில ஏறாதே!
உனக்கு இன்னும் பத்து நாள் தான் டைம்... அதுக்குள்ள நீ என்ன காதலை ஏத்துக்கணும்... இல்லன்னா வரப் போற பின் விளைவுகளை சந்திக்க தயாரா இரு!" எச்சரித்தவன், அவள் அதிர்ந்து நின்ற அந்த நொடி கழுத்தினை வளைத்துப் உதட்டை முற்றுகை இட்டவன், நடப்பது என்னவென அவள் உணருவதற்கு முன்னரே அவளை விடுவித்து,


"இதுவரைக்கும் யார்கிட்டையும் இந்த மாதிரி நடந்துக்கிட்டதில்லை. முதல் முதலா உன்னை தொடுறேன்னா, எனக்குள்ள உன்னை பொண்டாட்டியா ஏத்துக்கிட்டேன்னு அர்த்தம்.


என்னை நீ நம்பலன்னா பரவாயில்ல.. நானும் தப்பா எதுவும் நினைக்க மாட்டேன். வேணும்ன்னா இதுவரைக்கும் எங்கெல்லாம் இருந்திருக்கனோ, அங்கெல்லாம் போய், என்னை பத்தி நல்லா விசாரிச்சுக்கோ.

ஏன்னா அவது தான் உனக்கும் பாதுகாப்பு. என்மேலயும் நம்பிக்கை வரும். இதெல்லாம் நான் ஏற்கனவே சொன்னது போல, பத்து நாளைக்குள்ள முடிச்சிட்டு, பத்தாவது நாள், நீயா என்னை தேடி வரணும்." மீண்டும் மிரட்டி விட்டு போனவனை மரத்துப் போய் பார்த்து நின்றவள் கண்களோ கலங்கிப் போனது.
 
Top