• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

2. காண்டீப(னின்) காதலி

kkp4

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 25, 2023
Messages
27
eiM14D188534.jpg

அத்தியாயம் 2

“உங்க பொண்ணை கடத்துனவன் காண்டீபன்.” என்று மதுசூதனன் சொல்ல, வாசுதேவனின் முகத்தில் குழப்பமும் அதிர்ச்சியும் சரிவிகிதத்தில் கலந்து தெரிந்தது.

“அவன் எதுக்கு என் பொண்ணை கடத்தணும்?” என்று வாசுதேவன் மெல்லிய குரலில் கூற, “அது விசாரிச்சா தான் தெரியும் சார்.” என்று மதுசூதனன் சாதாரணமாக கூறினார்.

“ப்ச், அதை செய்யாம இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? என் பொண்ணை சீக்கிரம் கண்டுபிடிங்க.” என்று கோபத்தில் தான் தான் ஆணையரை அழைத்தது என்பதை மறந்து விட்டு கத்தினார் வாசுதேவன்.

அதற்கும் அலட்டிக் கொள்ளாமல், “இதுவரை பல கேஸ் அவன் மேல இருக்கு சார். ஒருமுறை கூட அவனைப் பத்தி எந்த தகவலும் கிடைக்கல.” என்ற மதுசூதனன் சற்று இடைவெளி விட, இந்த இடைவெளி, ‘இப்போ மட்டும் கிடைச்சுடுமா?’ என்ற கேள்விக்கானது தான் என்பது வாசுதேவனுக்கும் புரிந்தே இருந்தது.

“மினிஸ்டர் பொண்ணை கடத்தி இருக்கான், நீங்க இவ்ளோ சாதாரணமா அந்த கல்ப்ரிட்டுக்கு ஆதரவா பேசிட்டு இருக்கீங்க.” என்று வாசுதேவன் மேலும் கோபத்தில் பொங்க, “மினிஸ்டர் பொண்ணோ, காமன் மேனோட பொண்ணோ, ரெண்டு பேரும் எங்களுக்கு ஒன்னு தான் சார். ஏதாவது தகவல் கிடைச்சா நாங்களே சொல்றோம்.” என்று பட்டுக்கத்தரித்தார் போல பேசிவிட்டு சென்று விட்டார் மதுசூதனன்.

“சார், நீங்க கொஞ்சம் பொறுமையா பேசியிருக்கலாம்.” என்று வாசுதேவனின் பி.ஏ வேலாயுதம் சொல்ல, “என் பொண்ணை கடத்தினவனை பத்தி என்கிட்டயே பெருமையா பேசிட்டு இருக்காரு அந்த மனுஷன்! எப்படி பொறுமை பேச சொல்ற வேலு?” என்று கத்திய வாசுதேவன், “தாயில்லா பொண்ணு! அங்க அந்த காட்டுமிராண்டி கிட்ட என்னவெல்லாம் கஷ்டப்படுறாளோ?” என்று மெல்லிய குரலில் புலம்பினார்.

*****

‘திறக்க மாட்டேன்’ என்று அவளைப் போலவே சண்டித்தனம் செய்யும் இமைகளை மிகவும் சிரமப்பட்டு பிரித்தாள்.

கண்விழித்ததும் தான் முதலில் காணும் வெண்நிற கூரை இல்லாமல், பிஸ்தா பச்சை நிற கூரை இருப்பதைக் கண்டவள், விழிக்கும் போது சுருங்கிய புருவம் இன்னும் சுருங்க யோசித்தாள்.

அப்போது தான் இரவு நடந்தவை கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வர, அடித்துப் பிடித்து எழுந்தாள் யாதவி வாசுதேவன்.

அவளது அறையை ஒப்பிடும்போது சிறியதாக இருந்தாலும், அது ஓரளவுக்கு பெரிய அறை தான். அதன் நடுவே மரக்கட்டிலும், அதனருகே ஒரு முக்காலியில் குவளையுடன் குடுவையும் இருந்தது.

அவளுடன் சேர்த்து அந்த அறையில் இருந்தன அவ்வளவே!

தன்னை சுற்றி பார்வையை சுழற்றியவளுக்கு குழப்பம் ஏற்பட்டாலும், புதிய இடம் என்ற பயமோ பதற்றமோ இல்லை. அது, தன்னைக் கடத்தியவன் யாரென்று தெரிந்ததாலோ என்னவோ!

ஆம், காண்டீபன் – அவள் அடிக்கடி இணையத்தில் தேடும் ஒரு பெயர்!

அது அவன் வில்லாற்றலை கண்ட மயக்கத்தினாலா, இல்லை அவன் வில்லின் மேல் உண்டான காதலினாலா என்று அவளே அறிய மாட்டாள்.

ஆனால், அவனைப் பற்றி தெரிந்து கொள்வதில் தான் அவளுக்கு எத்தனை ஆர்வம்?

அனைத்தும் கொட்டிக் கிடக்கும் இணையத்தில் கூட, அவனைப் பற்றிய தகவல்கள் இல்லை. இதுவரை, காவல்துறை கண்டு பிடித்திருந்த அவனது குற்ற செயல்கள் பற்றிய செய்திகள் மட்டுமே இருந்தன.

பல கடத்தல்கள், சில கொள்ளை சம்பவங்கள், சிற்சில கொலைகளும் அதில் அடக்கம்!

அதற்கு பின்னர் பல சமூக காரணங்களும், அரசியல் காரணங்களும் இருப்பதாக ஒரு சாராரும், இவை அனைத்தும் காண்டீபனின் சுயநலம் என்று மற்றொரு சாராரும் விவாதித்து கொண்டிருப்பதை எல்லாம் அவள் கண்டு கொண்டால் தானே!

அவளின் எண்ணமெல்லாம், அவன் வைத்திருக்கும் வில்லையும் அம்புகளையும் பற்றியதாக தான் இருக்கும். அது சம்பந்தமான செய்திகளையும் புகைப்படங்களையுமே அவள் அதிகம் பார்ப்பாள்.

எனினும், அவள் கேள்விப்பட்டது வரையில், காண்டீபன் பெண்களுக்கு எதிராக எவ்வித குற்றமும் இதுவரை செய்ததில்லை. அந்த நம்பிக்கை தான் அவளின் இந்த பயமின்மைக்கு காரணமாக இருக்கலாம். இல்லை, அவள் ரகசியமாக பிரமிக்கும் ஒருவனை நேரில் கண்டதால் உண்டான பரபரப்பின் காரணமாக கூட இருக்கலாம்.

அவள் எண்ணங்களை தடை செய்வது போல, அந்த அறையில் கதவு திறந்து கொள்ள, உள்ளே நுழைந்தது மத்திம வயதில் இருக்கக்கூடிய பெண்.

“நீங்க எழுந்துட்டா, கீழ வர சொல்லி தம்பி சொன்னாருங்கமா.” என்று அந்த பெண் கூற, “ஓஹ், யாரு உங்க தம்பி?” என்று சாதாரணமாக வினவினாள் யாதவி.

அவளின் பேச்சு சாதாரணமாக இருந்தாலும், விழிகள் எதிரில் நிற்பவரை ஆராய்ந்து கொண்டு தான் இருந்தன.

அந்த பெண்ணுக்கோ யாதவியின் கேள்வியை காட்டிலும் பதற்றமட்ட நிலை ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்க, அதை உடல்மொழியிலும் வெளிப்படுத்திய படியே, “த்…தீபன் தம்பி மா.” என்றார் அவர்.

“தீபனா? யாரு அது புது கேரக்டர்?” என்றபடி எழுந்தவள், உடலை முறுக்கி சோர்வை வெளியேற்ற, அதையும் வாயை பிளந்தபடி பார்த்தார் அந்த பெண்.

“ஒரு பொண்ணு எழுறதை இதுவரை பார்க்காத மாதிரியே பார்த்துட்டு இருக்கீங்க?” என்று கேலியில் இறங்கியவள், “என்னால இப்படியே உங்க தம்பியை பார்க்க வர முடியாதுன்னும், எனக்கு பிரஷ், பேஸ்ட், சோப், டவல், டிரெஸ் எல்லாம் கேட்டதாவும் சொல்லுங்க.” என்றாள் யாதவி.

தன்னை பேசியது வரை அமைதியாக நின்ற அந்த பெண், அவரின் தம்பியை கேலி செய்வது போல பேசியதும் லேசாக கோபம் எட்டிப் பார்க்க, “உங்களை கீழ தான் வர சொன்னாங்க. தம்பியை பார்க்க வர சொல்லல.” என்று நக்கலாக கூற, தான் மூக்குடைப்பட்டது வெளியே தெரியாமல் இருக்க, “ரெண்டும் ஒன்னு தான். நீங்க இப்படி சொல்றீங்க, நான் அப்படி சொன்னேன்.” என்று இட்டுக்கட்டி சமாளித்தவள், “சரி சரி, நான் கேட்டது என்னாச்சு?” என்று வினவினாள்.

“க்கும், கொண்டு வரேன்.” என்று அறையிலிருந்து வெளியேறினார் அவர்.

‘பார்றா! என்னையே நோஸ் கட் பண்றீங்களா? அப்படி என்ன பெரிய அப்பாட்டக்கரா உங்க தொம்பி? அப்படின்னா, ஏன் யாருக்கும் தெரியாம மறைச்சு வைக்கணும்!’ என்று உள்ளுக்குள் கூறிக் கொண்டாள் யாதவி.

சில நிமிடங்களில் அவள் கேட்ட பொருட்களுடன் உள்ளே நுழைந்தார் அந்த பெண்.

அவற்றை வாங்கி சரி பார்த்துக் கொண்டே, “ஆமா, நான் எப்படி உங்களை கூப்பிடனும்?” என்று அவள் வினவ, அந்த பெண்ணோ இப்போதும் அவளை ஆச்சரியமாக தான் பார்த்தார்.

கடத்தப்பட்டு கூட்டி வந்த பெண்ணை போல யாதவி நடந்து கொள்ளவே இல்லை என்பது தான் அப்பெண்ணின் ஆச்சரியத்திற்கு காரணம் என்று கூறவும் வேண்டுமா?

சில நொடிகளில் தன்னை சமாளித்துக் கொண்டவர், “நீங்க எதுக்கு என்னை கூப்பிடனும்?” என்று வினவ, அதுவரை கையிலிருந்த பொருட்களை பார்வையிட்டவள், இப்போது நேராக அவரைப் பார்த்து, “ஹான், எனக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா, கத்தி கூப்பிடனும்ல.” என்றாள்.

அதைக் கேட்டதும் பதறியவராக, “அட என்னம்மா நீங்க, இப்படி அபசகுணமா பேசுறீங்க?” என்று வினவ, “க்கும், கடத்திட்டு வந்துட்டு பரிதாபமும் படுறீங்களா?” என்றாள் அவள்.

அதில் சுதாரித்தவர், “தீபன் தம்பி எது செஞ்சாலும் நல்லதுக்கா தான் இருக்கும்.” என்க, “ஹ்ம்ம், யாரோட நல்லதுக்கோ?” என்றவள், “உங்க தீபன் தம்பியை விடுங்க, என்னை இங்க தூக்கிட்டு வந்த மிஸ்டர். காண்டை எங்க? அவரைக் கூட்டிட்டு வாங்க, அதுக்குள்ள நான் ஃபிரெஷாகிட்டு வரேன்.” என்று குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் கூறிச்சென்ற ‘காண்டு’ யாரென்று முதலில் புரியாமல் யோசித்தவர், புரிந்த பின், ‘சேட்டைக்காரியா இருக்கே இந்த பொண்ணு! இந்த பொண்ணை எதுக்கு கடத்தி இங்க கூட்டிட்டு வரணும்?’ என்று எண்ணிக் கொண்டே அடுத்த வேலையை பார்க்கச் சென்றார்.

*****

சிறிது நேரத்திற்கு பிறகு அந்த அறைக்குள் குளம்பியுடன் அவர் நுழைய, “ஹப்பாடா, சாப்பாடு போடாம கொடுமை படுத்துவீங்களோன்னு நினைச்சேன்.” என்ற யாதவி அவர் எடுத்துக் கொள்ளுமாறு கூறுவதற்குள், கோப்பையை எடுத்து மடக்கென்று குடிக்க ஆரம்பித்திருந்தாள்.

அவளின் வேகத்தைக் கண்டு புன்னகைத்தவர், “அட, மெதுவா குடிங்க. யாரும் பங்குக்கு வர மாட்டாங்க.” என்று கேலி செய்ய, முழுவதுமாக குடித்து விட்டே நிமிர்ந்தவள், “ஹ்ம்ம், எல்லாம் சரி, இன்னும் உங்க பேரை சொல்லவே இல்ல.” என்றாள்.

அவரும் சிரித்துக் கொண்டே, “என் பேரு ரெங்கநாயகி.” என்றார்.

“ரெங்கநாயகியா? ரொம்ப பழைய பேரா இருக்கே.” என்று அவள் கூற,”ஓல்ட் இஸ் கோல்ட்னு நீங்க கேள்விப்பட்டது இல்லையா?” என்றார் அவர்.

“பார்றா, பழமொழி எல்லாம் சொல்றீங்க.” என்று பேசிக் கொண்டே சாப்பிடும் அறைக்கு வந்திருந்தனர்.

அங்கு அவளுக்கு மட்டும் அவர் பரிமாற, அவள் அந்த வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டே, “யாரும் இல்லையா?” என்று வினவினாள்.

அவளின் கேள்வி ரெங்கநாயகியிடம் இருந்தாலும், விழிகள் வீட்டை தான் அங்குலம் அங்குலமாக அளந்து கொண்டிருந்தன.

“எல்லாரும் ஏற்கனவே சாப்பிட்டு வெளிய கிளம்பிட்டாங்க.” என்று அவர் பொதுவாக தான் கூறினார்.

‘ப்ச், என்ன இது?’ என்று உள்ளுக்குள் சலித்துக் கொண்ட யாதவி, “இந்த வீட்டுல யாரெல்லாம் இருக்காங்க?” என்று மேலும் கேட்க, “சாப்பிடும்போது பேசக்கூடாதுன்னு தீபன் தம்பி சொல்லியிருக்காரு.” என்று பேச்சையே கத்தரித்து விட்டார் ரெங்கநாயகி.

‘அடச்சை! ஏதாவது தகவல் கரக்கலாம்னு பார்த்தா, ஒன்னும் தேற மாட்டிங்குதே! இதுல வரிக்கு ஒருமுறை ‘தீபன் தொம்பி’ன்னு பெருமை ஒன்னு தான் கேடு.’ என்று மனதிற்குள் திட்டித் தீர்த்தாள் அந்த தீபனை!

*****

தூரத்தில் தெரிந்த ஆர்ப்பரிக்கும் கடலலைகளில் கண்களை பதித்தபடி நின்றவன் சட்டென்று இறும, அந்த இடத்திலிருந்து அமைதி கலைந்தது.

அவன் இறுமியதில் நிகழ்வுக்கு வந்தவன் போல, “டேய் தீபா, நம்ம பிளான்லேயே இல்லாத இந்த கடத்தல் இப்போ அவசியமா? இதனால என்னென்ன பிரச்சனை வரப்போகுதோ?” என்றான் அந்த தீபனின் நண்பனான தயாளன்.

“என்ன வந்தாலும் நான் பார்த்துப்பேன் தயா.” என்ற தீபனின் குரல் உறுதியுடன் வெளிவந்தது.

“க்கும், என்ன பார்த்துப்பியோ? மினிஸ்டர் பொண்ணு டா…” என்ற தயாளன் சிறு இடைவெளி விட்டு, “அப்படி என்ன தான் அந்த பொண்ணு மேல…” என்று கூறியபடி தீபனை பார்க்க, அவன் செந்நிற கண்களைப் பார்த்து பேச்சை பாதியிலேயே நிறுத்தினான்.

“உன் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா, என்ன பண்ணியிருப்பேன்னு உனக்கே தெரியும்.” என்ற தீபன் மீண்டும் கடலலைகளின் புறம் பார்வையை திருப்பிக் கொண்டான்.

அப்போது அறையை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார் ரெங்கநாயகி.

“தம்பி, கேட்குறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. அந்த பொண்ணை எதுக்கு கடத்தி இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க?” என்று ரெங்கநாயகி வினவ, “அப்படி கேளுங்க நாயகிக்கா, என்கிட்ட தான் சொல்லல. உங்க கிட்டயாவது சொல்றானான்னு பார்ப்போம்.” என்றான் தயாளன்.

நண்பனை முறைத்த தீபன், திரும்பி ரெங்கநாயகியை நோக்க, அந்த பார்வையின் அர்த்தம் எதுவென்று ரெங்கநாயகி எடுத்துக் கொண்டாரோ, “நீங்க ஒன்னு செஞ்சா சரியா தான் இருக்கும் தம்பி.” என்றார்.

“இப்படி உடனே பல்டி அடிச்சுட்டீங்களே அக்கா.” என்று தயாளன் கூற, “தயா தம்பிக்கு எப்பவும் கேலி தான்.” என்று அங்கலாய்த்தவர், “நேரமாச்சு. சாப்பிட வாங்க!” என்று இருவரையும் அழைத்தார்.

“அந்த பொண்ணு சாப்பிட்டு ரூமுக்கு போயாச்சா?” என்று தீபன் வினவ, “ஹ்ம்ம், இட்லி, பொங்கல், பூரின்னு எல்லாம் வெளுத்து கட்டிட்டு, கேசரி இருந்துருந்தா நல்லா இருக்கும்னு சொல்லிட்டு, இப்போ தான் ரூமுக்கு போச்சு தம்பி.” என்றார் அவர்.

“எதே! வெளுத்து கட்டுச்சா? என்னடா இது? அந்த பொண்ணை கடத்தி தான கூட்டிட்டு வந்த? இல்ல, ஏதாவது டூர்னு பொய் சொல்லி கூட்டிட்டு வந்தியா?” என்று சந்தேகமாக நண்பனை பார்த்தான் தயாளன்.

“அட நீங்க வேற தம்பி, காலையில புது இடத்தை பார்த்து பதறிடும்னு நினைச்சு ரூமுக்கு போனா, சாவகாசமா எழுந்து உட்கார்ந்து, பேஸ்ட் வேணும், பிரஷ் வேணும், டிரெஸ் வேணும்னு அதிகாரமாக கேட்டு வாங்குது. அதைப் பார்த்து எனக்கு தான் அதிர்ச்சியா இருந்துச்சு.” என்றார் ரெங்கநாயகி.

அதைக் கேட்டு தீபனை தயாளன் நோக்க, “இப்போ எதுக்கு என் மூஞ்சியை வெறிச்சுட்டு இருக்க? வா சாப்பிட போலாம் “ என்று தீபன் முன்னே சென்றுவிட, “க்கும், இவன் தான் ஒரு மார்க்கமா சுத்துறான்னு பார்த்தா, இவன் கூட்டிட்டு வந்த பொண்ணு வேறொரு மார்க்கமா சுத்துது. இதெல்லாம் எங்க கொண்டு போய் நிறுத்தப் போகுதோ?” என்று வாய் விட்டு புலம்பினான் தயாளன்.

“சும்மா சும்மா புலம்பாம வாங்க தம்பி.” என்று ரெங்கநாயகி தான் அவனை சாப்பிடும் அறைக்கு இழுத்துச் சென்றார்.

இருவருக்கும் உணவை பரிமாறியபடி, “தம்பி, அந்த பொண்ணு, வீட்டை சுத்தி பார்க்கணும்னு சொல்லுது.” என்று ரெங்கநாயகி ஆரம்பிக்க, இங்கு தயாளனுக்கு புரையேறி, குடித்துக் கொண்டிருந்த தண்ணீரை தீபனின் மீதே துப்பி விட்டான்.

வாயில் வண்ண வண்ணமாக வார்த்தைகள் வெளிவர துடித்தாலும், அடக்கிக் கொண்டு நண்பன் கொடுத்த மெல்லிழைத்தாளை வாங்கி துடைத்துக் கொண்டான் தீபன்.

“மெதுவா தம்பி.” என்று ரெங்கநாயகி கூற, “யக்கா, இவன் அந்த பொண்ணை கடத்திட்டு வந்துருக்கான்.” என்று கடத்தலில் அழுத்தம் கொடுத்து கூற, “அந்த பொண்ணும் பாவம் தான? எவ்ளோ நேரம் தான் ஒரே ரூமுக்குள்ள அடைஞ்சு கிடக்கும்?” என்றார் அவர்.

“கிழிஞ்சது!” என்று தலையில் கைவைத்துக் கொண்டான் தயாளன்.

“அக்கா, அதெல்லாம் வேண்டாம்.” என்று தீபன் சொல்லி முடிக்கும் முன், “ஹலோ மிஸ்டர். தம்பி, என்ன வேண்டாம்? நீங்க கடத்திட்டு வந்தா, நான் அடைஞ்சு தான் கிடக்கணுமா? இதெல்லாம் யாரு போட்ட ரூல்ஸ்?” என்றபடி மேலிருந்து கீழே இறங்கி வந்தாள்.

அப்போது வரை அவன் பின்புறத்தை பார்த்தபடியே கீழிறங்கி வந்தவள், அவனுக்கு எதிரே வந்து அவன் முகத்தை பார்க்க, தன்னை மறந்து அவனையே சில நொடிகள் இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதன் பிறகே சுயமடைந்தவள், “நீங்க… உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?” என்று யோசித்தவள், பின் அது தேவையற்றது என்ற முடிவுக்கு வந்தவளாக, “ஆமா, என்னைக் கடத்திட்டு வந்த மிஸ்டர். காண்டு எங்க?” என்று வினவினாள்.

“காண்டா?” என்று அத்தனை நேரம் அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தயாளன் கேட்க, “ப்ச் அதான், நார்த் சைட்ல கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணுங்க முகத்தை மூடியே வச்சுருக்க மாதிரி, முகமூடி போட்டு சுத்துவாரே அந்த காண்டீபனை தான் கேட்டேன்.” என்று விளக்கினாள் யாதவி.

அவள் விளக்கத்தை கேட்டு பக்கென்று சிரித்த தயாளன், தீபனின் முறைப்பில் சிரிப்பை அடக்கிக் கொண்டு, “ஏம்மா, உனக்கு எக்ஸாம்பில்லா சொல்ல வேற உதாரணமே கிடைக்கலையா?” என்றான் தயாளன்.

“ப்ச், உதாரணம் சொன்னா கேட்டு வச்சுக்கணும். அதை விட்டுட்டு ஏன், எதுக்குன்னு கேள்வி கேட்கக்கூடாது. அது சரி, நீங்க யாரு?” என்றாள் யாதவி.

என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தவன், ரெங்கநாயகியை பார்த்து, “நான் நாயகிக்காவோட தம்பி. என் பேரு தயாளன்.” என்றான்.

நம்பாத பார்வை ஒன்றை அவன் மீது செலுத்தி விட்டு, பின்னர் தீபன் புறம் திரும்பியவள், “இன்னுமா வாய்க்குள்ள போன இட்லியை மிழுங்காம இருக்கீங்க? பதிலை சொல்லுங்க மிஸ்டர். தீபன்.” என்றாள்.

“இப்போ எதுக்கு காண்டீபனை தேடுற?” என்று தீபன் வினவ, “அதை காண்டு கிட்ட சொல்லிக்கிறேன். இப்போ நீங்க என்னை காண்டேத்தாம அவரு எங்கன்னு சொல்லுங்க.” என்று சலிப்புடன் கூறினாள் யாதவி.

அவள் பேச்சில் கோபம் உண்டானாலும், தன் அடையாளம் வெளியே தெரியக் கூடாது என்ற காரணத்தினால் பொறுமையை இழுத்துப் பிடித்து, “காண்டீபனை நீ பார்க்க முடியாது.” என்றான்.

“ப்ச், அந்த மாஸ்க் போட்ட மூஞ்சியை பார்க்க எனக்கு மட்டும் ஆசையா என்ன?” என்று முனகியவள், “ப்ச், எனக்கான கண்டிஷன்ஸை பத்தி நான் பேசணும்.” என்று கூறினாள் யாதவி.

தயாளனோ, “ஹலோ மேடம், நாங்க தான் உங்களை கடத்திட்டு வந்துருக்கோம். நீங்க என்னமோ கண்டிஷன்ஸ்னு சொல்லிட்டு இருக்கீங்க.” என்று ஒரு வேகத்தில் சொல்லிவிட, “அட நீங்க தான் காண்டுக்கு பின்னாடி இருக்குறதா? இப்போ உங்க மூஞ்சியை பார்த்துட்டேனே, நாளைக்கு உங்களை பத்தி போலீஸ்ல சொன்னா என்ன பண்ணுவீங்க?” என்றாள் யாதவி.

அதைக் கேட்டதும், ‘பரவாலையே, இந்த பொண்ணுக்கு மூளை நல்லா வேலை செய்யுது.’ என்று நினைத்த தயாளன் தீபனை பார்க்க, அவனோ நண்பனை கண்டு கொள்ளாமல், “என்ன கண்டிஷன்ஸ்?” என்று யாதவியிடம் வினவினான்.

“யாருக்கிட்ட சொன்னா என்ன? எனக்கு என் கண்டிஷன்ஸ் நிறைவேறனும்!” என்றவள், “இன்னும் ரெண்டு வாரத்துல ஸ்டேட் லெவல் ஆர்ச்சரி காம்பட்டிஷன் இருக்கு. இதுல வின் பண்ணிட்டா நேஷனல் லெவலுக்கு போலாம். அப்பறம் என்ன ஏசியன் கேம்ஸ், காமன்வெல்த், ஒலிம்பிக்னு அடுத்தடுத்து போயிட்டே இருக்கலாம்.” என்று கண்களில் கனவுகள் மின்ன கூறினாள்.

“அதுக்கு?” என்று தயாளன் இடைவெட்ட, “அதுக்கு… என்னை டிரெயின் பண்ணனும். அதுவும், மிஸ்டர். காண்டு தான் என்னை டிரெயின் பண்ணனும்.” என்று யாதவி கூற, மற்ற மூவரும் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தபடி இருந்தனர்.

“ஆக, அவ இவன்கிட்ட மாட்டல. இவன் தான் அவகிட்ட மாட்டிக்கிட்டான்.” என்று ரெங்கநாயகிக்கு மட்டும் கேட்கும் குரலில் தயாளன் கூற, அதை அவரும் ஆமோதிப்பது போல அமைதியாக இருந்தார்.

தொடரும்...

ஹாய் மக்களே. கதைக்கான உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
 
Ruby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
96
😂😂😂😂😂 adippaavi athana iva yaen shock aaga Avan than aaganum kooda nanvalhm
 
kkp33

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2023
Messages
156
பாவம்டா காண்டு நீ. உன் நிலைமை இப்படியா ஆகணும்? ஆனாலும் நல்லா தான் இருக்கு. என்ஜாய்
 
kkp4

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 25, 2023
Messages
27
பாவம்டா காண்டு நீ. உன் நிலைமை இப்படியா ஆகணும்? ஆனாலும் நல்லா தான் இருக்கு. என்ஜாய்
ஹிஹி இனிமே அவ தான் அவனுக்கு என்டர்டெயின்மெண்ட் 🤪😂
 
Indhumathy

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 8, 2021
Messages
73
இதென்னடா கடத்தல்காரனுக்கு வந்த சோதனை.... 🤣🤣🤣🤣🤣 நல்லா சிக்குனான்... 🤭🤭🤭
நம்ம ஹீரோயின் கெத்து தான்... 😎😎😎😎
 
kkp4

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 25, 2023
Messages
27
இதென்னடா கடத்தல்காரனுக்கு வந்த சோதனை.... 🤣🤣🤣🤣🤣 நல்லா சிக்குனான்... 🤭🤭🤭
நம்ம ஹீரோயின் கெத்து தான்... 😎😎😎😎
ஆமா சிஸ் கடத்தல்காரனுக்கே பாவம் பார்க்க வச்சுடுவா இவ 🤣😀
அப்படிங்குறீங்க 😂🤣
 
kkp17

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2023
Messages
14
View attachment 1035

டெரரா போலிஸ் கிட்ட சிக்காமல் இருந்த காண்டு.. இப்படி சில்வண்டுட்ட சிக்கிட்டே 😂😂😂😂
 
Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
324
ஹாஹா. நான் ஃபர்ஸ்ட் எபியிலே யாதவிதான் அவங்களை வச்சு செய்வான்னு நினைச்சேன் அதே மாதிரி நடக்குதே. சூப்பர் 💕
 
Top