- Joined
- Jul 23, 2021
- Messages
- 857
21.கானல் நீரும் காதல் நதியானதே
வித்யா கங்காதுரை
வித்யா கங்காதுரை
இரவு நேரத்தில் நங்கை ஒருத்தி கண்ணீருடன் மண்டபத்தின் பின்பக்க வாயிலாக தன் அலங்காரங்களை கலைத்தப்படியே
யாரும் அறியா வண்ணம் வேகமாக வெளியேறினாள்... அவளின் கண்களும், மனமும் கலங்கி இருந்தது...
சாலையில் வந்த ஆட்டோவில் ஏறியவள்... யாருக்கோ போன் செய்து தன் வரவை தெரிவித்தாள்...
"கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போங்கண்ணா..." என்று ஓட்டுனரிடம் சொல்ல
அரை மணி நேரத்தில் ஆட்டோவும் போய் சேர்ந்தது... தன் கையிலிருந்த பணத்தை கொடுத்தவளோ மீதம் வாங்கும் மனநிலை கூட இல்லாமல் பேருந்தில் ஏறி ஜன்னலோரமாக இருந்த இருக்கையில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றாள்... அவளையும் மீறி கண்ணீர் பெருக்கெடுக்க... தன் கரங்கள் அவள் வயிற்றை தடவி கொடுத்தது... மூன்று மாத சிசுவை இப்போது சுமந்து கொண்டிருக்கின்றவள் பெயர் காவ்யா...
அவள் பக்கத்து வீட்டில் வசிக்கும் அமர்நாத் ரேணுகா தேவி தம்பதியரும் காவ்யாவின் பெற்றோர்களும் குடும்ப நண்பர்களாக வசித்து வந்தனர்… அவர்களுக்கு இரண்டு மகன்கள் பெரியவன் அதிதேவ், இளையவன் சூரியதேவ் …
பொதுவாகவே சிறுவயதில் இருந்தே உயிர் நண்பர்களாக பழகி வருபவர்கள்… சூரிய தேவ்வும், காவ்யாவும் பீச், சினிமா, பூங்கா... என்று சுற்றித் திரிவார்கள்... அந்த ஏரியாவில் உள்ள பிள்ளைகளுடன் கிரிக்கெட் மற்றும் சைக்கிள் போட்டிகள் என எப்பொழுதும் ரகளை செய்து சுற்றி திரிந்து அந்த ஏரியாவில் அனைவருக்கும் தெரிந்த முகங்களாக வலம் வந்தனர்… காவ்யா வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் அதிகமாக கண்டிக்க முடியாமல் விக்கிரமனும், மலர்வழியும் விழி பிதுங்கி போவார்கள்... சூரிய தேவ்தான் காவ்யாவின் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அவளை சற்று அதட்டலுடன் தன் பாதுகாப்பிலே வைத்துக் கொண்டான்...
சூரியா வீட்டில் எப்பொழுதும் திருமணங்கள் மற்றும் தொழில் முறை பார்ட்டிகள் என நடந்த படியே இருக்கும்... சூர்யா, காவ்யாவை தன் வீட்டு விசேஷங்களில் தவிர்க்க மாட்டான்... ஆனால், தன் அண்ணன் வைக்கும் தொழில் முறை பார்ட்டிகளில் கண்டிப்பாக காவ்யாவை அனுமதிக்க மாட்டான்... ஏனென்றால், அந்த பார்ட்டியில் மது முதல் மாது வரை வரைமுறையின்றி கெஸ்ட் ஹவுஸில் நடக்கும் அந்த கூத்துக்களை கண்டு அவனே சில நேரங்களில் முகம் சுளிக்கும் படியாக இருக்கும்… அவன் அண்ணன் தொழில்முறையில் இதெல்லாம் வாடிக்கை என்பதால் அவற்றில் தலையிட மாட்டான்...
ஒருமுறை தொலைக்காட்சியிலும், செய்தித்தாளிலும் அதிகமாகவும் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட பட்ட ஒருவன் தான் வருண் மித்ரன்... அவன் ஒரு வளர்ந்து வரும் இளம் தொழிலதிபன்... அவனின் கவர்ச்சிகரமான சிரிப்பும், அவனின் வசீகரத் தோற்றமே அனைவரையும் ஈர்க்கும்..அவன் தந்தையின் தொழில்களை இளம் வயதிலேயே தன் வசப்படுத்தி இருந்தான்... எம்.வீ.எம் என்ற பெயரில் மிகவும் புகழ்ந்த வாழ்ந்த ஸ்தாபனமாக உயர்த்தியிருந்தான்...
மித்ரன் தொழிலும் கெட்டிக்காரன்..அதேசமயம் வாழ்க்கை வாழ்வதற்கே... அதை தன் விருப்பம் போல வாழ்பவன்... அதில் மது முதல் மங்கையர் வரை உண்டு... அவனின் ஆளுமை, கவர்ச்சியான அழகு, பேச்சு வசீகரத்தில் தானாக வரும் பெண்களையும்,அமையும் வாய்ப்புகளையும் அழகாக பயன்படுத்திக் கொள்வான்...
இவனும், அதிதேவ்வும் தொழில் முறையில் தான் நண்பர்களாக கைகுலுக்கி கொண்டார்கள்... இருவரின் உதவிகளும் இருவருக்குமே தேவைப்பட, ஒரே வயதினர் என்பதால் மிகவும் எளிதிலேயே நண்பர்களாக மாறினார்கள்... இப்படி அடிக்கடி அதிதேவ்வின் வீட்டு பார்ட்டிகளில் கலந்துகொள்ள வரும் வருண் மித்ரன் தான் காவ்யாவின் வாழ்க்கையிலும் அவனுக்கே தெரியாமல் பாதித்தான்… அப்பொழுது காவ்யா கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள்...
முதலில் கிரஷ் என்று ஆரம்பித்து அதுவே காதலாக மாறியது... அவள் அறையில் எங்கும் அவனை பற்றிய புகைப்படங்கள், நேர்காணல் தொகுப்புகள், அட்டைப்படம் நிரம்பிய மேகசின்ஸ் புத்தகங்கள், அவனின் போட்டோக்கள்... என தன்னறையை அலங்கரித்திருந்தாள்...
ஒரு முறை சூரியா போன் பிரச்சினையாகி விட காவ்யாவின் போனை திறந்த பொழுது அதில் வருண் மித்ரன் கவர்ச்சிகரமாக சிரித்துக் கொண்டிருந்தான்... எஅவளைப் பார்த்து முறைத்தவன்...
"எதுக்கு, இவன் போட்டோ எல்லாம் வைச்சியிருக்க காவ்யா..."
"சூர்யா, என்ன நீ அவன் இவன் சொல்ற...ஐ லவ் ஹிம் எ லாட்..." என்று கண்கள் மூடி கிறக்கமாக கூறியவளை வினோதமாக பார்த்தவன்…
இளம் வயதில் வரக்கூடிய இனக்கவர்ச்சி தான் என்று விட்டுவிட்டான்... வருண் மித்ரன் அங்கு வரும்பொழுதெல்லாம் காவ்யாவும் அங்கே பிரசன்னமாகிட அதை கண்டு சூரியதேவ்வே கடுப்பாகி விடுவான்...
"ப்ளீஸ், தூரத்தில் இருந்து பார்த்துட்டு போயிடுறேன் சூர்யா..."
"ப்ளீஸ், ஒரே ஒரு ஆட்டோகிராப் வாங்கிக்கிறேனே..." என்று அவள் வருண் மித்ரனை நெருங்க முயற்சி செய்யும் பொழுதெல்லாம் சூரியா தான் அவளுக்கு அரணாக இருந்து அவளை பாதுகாத்தான்... அவன் வந்தாலே நிறைய பேர் அவனை சூழ்ந்து கொள்ள அதில் காவ்யா அவன் கவனத்தில் பதியாமல் போனது...
அங்கு நடக்கும் இசை நிகழ்ச்சிகளை அவள் வீட்டு மொட்டை மாடியிலிருந்து நிறைய முறை பார்த்திருக்கின்றாள்... சிலமுறை அவன் இவளை திரும்பி பார்ப்பது போல் இவளுக்கு தோன்றும்... ஆனால், அது எல்லாம் மாயை என்று நினைத்து அவள் தனக்குள்ளே அழுது கரைவாள்...
அவன் மீதான காதல் வளர்ந்துக் கொண்டே போனது...அவன் நினைவிலேயே தான் வாழ்ந்து மடிந்து விடலாம் என்று அவளுக்கு அடிக்கடி தோன்றி மறையும் எண்ணங்களுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாது விழிப்பாள்...
ஒரு முறை இருவருமே மோதி கொண்டார்கள்... ஆனால், அவனுக்கு இவளை யார் என்றே தெரியாது "சாரி"என்ற ஒற்றை வார்த்தையில் அவளை விலகி சென்றிட, அதில் பெண்ணவள் மனம் துடிதுடித்து போவாள்...
ஒருமுறை சூரியாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது... அவன் பெற்றோர் காசி யாத்திரைக்கு சென்றிருக்க... அதிதேவ் வீட்டில் பெரியவர்கள் யாருமில்லையென்று கெஸ்ட் ஹவுஸில் வைக்க வேண்டிய பார்ட்டியை அவன் வீட்டிலேயே வைத்து விட்டான்...நிறைய பேர் வந்திருக்க... அதில் வருண் மித்ரனும் அடக்கம்...அவனின் காரைக் கண்டதுமே காவ்யா மனம் குதுகளித்தது... ஆனால், தன் நண்பனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், சூர்யாவுக்கு சிறிதளவு ரசம் சாதம், சுடு தண்ணீர் மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு அவன் வீட்டின் பின்பக்க வழியாக மாடி அறைக்கு சென்றாள்... அங்கு சூர்யா மிகவும் களைப்புடன் படுத்திருக்க...அவனருகே சென்று "சூர்யா சூர்யா"... என்று அழைக்க...
கண் விழித்தவன் ...
"காவ்யா இங்கே ஏன் வந்தே..."
"ஏய், என்ன இப்படி கேட்குற… என் ப்ரெண்டுக்கு பீவர் நான் வராமா யார் வருவாங்க..."
"காவ்யா அண்ணா, பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கான்... சோ, ப்ளீஸ் நீ சீக்கிரம் கிளம்பு..."
"இல்ல சூர்யா, உனக்கு ரொம்ப முடியலையின்னு அம்மா தான் ரசம் கொடுத்துட்டு வர சொன்னாங்க... ப்ளீஸ் இதை சாப்பிட்டு நீ டேப்லெட் மட்டும் போட்டுக்க... நீ சாப்பிட்டதும்... நான் கிளம்பிடுறேன்..."
"ம்ம்ம், ஓகே கண்டிப்பா சீக்கிரமா வீட்டுக்கு போயீடு... நிறைய கெஸ்ட்டுங்க வருவாங்க... நீ வேடிக்கை பார்த்துட்டு நிற்க கூடாது சரியா..."
"ம்ம்ம், நான் போறேன்... நீ முதல்ல சாப்பிட்டுட்டு டேப்லெட் போட்டுக்கோ..." என்று டிபன் பாக்ஸ் திறந்து ஸ்பூனை போட்டு கொடுக்க...அவளின் அக்கறையில் சூர்யாவின் கண்களும், மனமும் நெகிழ்ந்து போயீன...
"தேங்க்ஸ் மா"... என்று சொல்லியபடியே அவன் உண்டு முடிக்க... அவனுக்கு மாத்திரையை கொடுத்துவிட்டு அவனை படுக்க வைத்தவள் எடுத்து வந்த பொருட்களுடன் மாடியிலிருந்து வேகமாக கீழே இறங்கி வரவும்... அப்பொழுது கீழே சில உணவுப் பொருள்கள் சிதறியிருந்தை கவனிக்காமல் வைத்ததில் கால் வழுக்கி தரையில் விழுந்தாள்...
இசையின் இரைச்சலில் அவளை யாரும் கவனிக்கவில்லை... ஆடையில் உணவுப் பொருள்களும்,பழ துணுக்குகளும் ஒட்டிக் கொள்ள... அதை சுத்தம் செய்வதற்கென்று கீழேயிருந்த ஒரு அறையினுள் சென்றாள்... அங்கிருந்த பாத்ரூமுக்குள் தன் ஆடைகளை சுத்தம் செய்துவிட்டு வெளியே வர... அப்பொழுதென்று தள்ளாடியப்படியே ஒரு உருவம் அந்த அறைக்குள் வரவும் சரியாக இருந்தது...
"ஹாய், ஸ்வீட்டி நீ இங்கதான் இருக்கியா... நான் உன்னை தான் தேடிட்டு வந்தேன் பேபி..." என்று இவளை நோக்கி வர காவ்யா அதிர்ந்து நின்று விட்டாள்...
அந்த தள்ளாடிய உருவம் வேறு யாருமில்லை வருண் மித்ரனே ... அவனின் அருகாமையில் அவள் உள்ளம் தடுமாறினாலும், அவன் மீது வந்த மது வாடையில் அவள் முகம் சுணங்கி போனது... அவள் உடல் மனமும் பதர ஆரம்பித்தது... தனிமை சூழல் வேறு எப்படி இங்கிருந்து தப்பித்துச் செல்ல வேண்டுமென்ற அவள் பெண்மை விழித்து கொள்ள சட்டென்று அவனை விட்டு நகர...
"ஏய், எங்கே போற ஸ்வீட்டி, டுடே யூ ஆர் மைன் நா..." என்று அவளை இழுத்து அணைத்து அவள் கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான்... அவளுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது... ஆனால், அதை எல்லாம் அவன் கவனிக்கும் பொருட்டில் இல்லை... அவளை கட்டிலில் தன்னுடனேயே அணைத்தபடி தொப்பென்று விழவும்...
"அம்மா"... என்று முதலில் அலறியவள்...
"ப்ளீஸ் வரு ப்ளீஸ்... ஐ வாண்ட் டு கோ ப்ளீஸ் வரு..."
"வாவ், யுவர் வாய்ஸ் இஸ் வெரி ரொமான்டிக் ஸ்வீட்டி..." என்று அவளின் கதறலை ரசித்து கூறுபவனை எப்படி தடுப்பது என்று புரியாமல் அவனை விட்டு விலக முயன்றாள்...
"வரு ப்ளீஸ்"
"மை ஸ்வீட்டி"... என்று அவள் முகம் எல்லாம் முத்தங்கள் பதித்து இறுதியில் அவளின் இதழிலும் தஞ்சம் புகுந்து விட்டான்... அவனை ஆழ்மனதில் ரசித்தவள் இன்று வெறுக்கவும் முடியாமல், ரசிக்க முடியாமல் அவள் இரண்டாம் கட்ட மன நிலைக்கு தள்ளப்பட்டாள்...அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது… அவளின் ஆடைகளை கலைப்பதில் அவன் வேகம் கொள்ள...
"வரு வேண்டாம்..." என்று அவள் தடுத்து தாக்கியது எதுவும் அவனுக்கு போதையின் உச்சத்தில் இருந்தவனுக்கு உரைக்கவில்லை...
"ஏய் கமான், ஸ்வீட்டி என்ஜாய் திஸ் மொமெண்ட்..." என்று அவளின் போராட்டங்கள் அனைத்தையும் அவன் தடுத்திருக்க... இப்பொழுது இயற்கையாய் ஏற்பட்ட உணர்வுகளில் பெண்ணவளும், கட்டுண்டாள்... அவளையும் மீறி, அவள் மனதையும் மீறி அவள் உடல் மட்டும் அவன் வசம் சென்றதை அவளாலேயே தடுக்க முடியவில்லை... அவன் அவளை தன்னோடு அடக்கி அவளுள் அவனை தஞ்சம் புகுந்த தருணத்திலும் "வரு ப்ளீஸ் லீவ் மீ, ஐ டோண்ட் எக்ஸ்பெக்ட் திஸ் பிரம் யூ..." என்று அவள் கதறல்கள் அவன் மனதுக்குள் சென்று சேர்ந்ததை அவனே அறியவில்லை...
அனைத்தும் முடிந்து அவளை விட்டு பிரிந்தவன் களைப்பில் அப்படியே உறங்கி இருக்க... எழுந்தவள் அமர்ந்து தன்னையும், அவனையும் கண்டு இரு கைகளால் வாயை பொத்திக்கொண்டு கண்ணீர் மட்டுமே விட முடிந்தது...
தன் ஆடைகளை அனைத்தும் எடுத்து அணிந்தவள் துப்பட்டாவினால் தன் உடலை போர்த்திக் கொண்டவள் யாருக்கும் தெரியாமல் அந்த அறையை விட்டு ஓடியவள் தன் வீடு சென்று நின்றாள்... தன் அறைக்கு சென்று பாத்ரூமுக்குள் நுழைந்து ஷவரில் நின்றாள்...அவள் உள்ளத்தை ஏற்கனவே பாதித்தவன்... இப்பொழுது உடலாலும் அவளை பாதித்திருந்தான்... அவளால் ஏதும் செய்ய முடியாமல் அழுது களைத்தவள்... பிறகு வேறு உடைய மாற்றிக் கொண்டு அமைதியாய் வெளியே வந்து தாயிடம் தலைவலி என்றவள் அவர் தந்த பாலை மட்டும் அருந்தி விட்டு படுக்கையில் விழுந்து விட்டாள்...
ஒரு முறை சூரியாவுடன் வெளியே சென்று இருந்தாள்...சமீப நாட்களாக அவளின் அமைதி சூரியாவை யோசனையில் ஆழ்த்தியது... அவளை சகஜமாக பொருட்டே பார்க்கிற்கு அழைத்து வந்திருந்தான்...
சிறிது தூரம் நடந்தவள் திடீரென்று மயங்கி சரிந்து விட்டாள்... சூரியா பதறி போய் அருகில் இருக்கும் கிளினிக்குக்கு அவளை அழைத்துச் செல்ல அங்கே அவள் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் கூறவும்... அதிர்ந்தது சூரியா மட்டுமல்ல காவ்யாவும் தான்... அவள் இதை எதிர்பார்க்கவில்லை... அன்றைய நிகழ்வுகள் யாவும் நினைவுக்கு வர... அன்று நடந்தது எதிர்பாராத நிகழ்வா...? விபத்தா...? என்று புரியாமல் உள்ளம் கலங்கி போய் அமைதியாக இருந்தவளை ஏதும் சொல்லாமல் வீட்டிற்கு அழைத்து வந்தவன்... விக்ரமன் மற்றும் மலரிடம் நடந்ததை கூறி விட்டான்... அவர்கள் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்கள்...
"என்னடி, யாருடி காரணம் ...என்ன காரியம் பண்ணி இருக்க..."
சூரியதேவ்வை அவர்கள் சந்தேகமாக பார்க்க...
"அய்யோ, ஆண்ட்டி, அங்கிள் அந்த மாதிரியெல்லாம் கனவுல கூட நினைச்சு பார்த்துடாதீங்க... அவ எனக்கு என்றைக்குமே பிரண்டு மட்டும் தான்..."
தன்னால் தன் உயிர் நண்பனின் உண்மை நட்பை கேள்வி குறியாக்கிவிட்டோமே என்று உள்ளம் கசந்து போனாள்..