• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

26. இதயம் பகிர்ந்திட வா

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
704
சரி... இப்போ நான் உங்கள புரிஞ்சு கொண்டதாவே இருக்கட்டும் சந்ரூ... இதனால மாற்றம் ஏதாவது வந்திட பேகுதா...? இல்லல்ல.. அப்புறம் எதுக்கு இதெல்லாம் என்கிட்ட சொல்லி நிரூபிக்கணும்?" சரியாகத் தானே கேட்டாள். அவன் தவறு செய்யாதவனாகவே இருக்கட்டுமே! இதை அவளிடம் நிரூபித்து என்ன பயன். நடந்தது இல்லை என்று ஆகிவிடுமா? இல்லை அதை மாற்றத் தான் முடியுமா.?

"உண்மை தான் பாரதி... ஆனா நல்லா யோசிச்சு பாருங்க. இஷ்டமில்லாத பொண்ணுகூட கட்டாயத்தின் பேரில வாழ முடியுமா? மனசில உங்கள வைச்சிட்டு, அவகூட வாழ்ந்தேன்னா, ரெண்டு பேருக்குமே நான் உண்மையானவனா இருக்க முடியாது. அதுவுமில்லாம, நீங்க இல்லன்னா நான் செத்துடுவேன் பாரதி. எனக்கு நீங்க வேணும்." இந்த செய்தியை பார்த்ததும் ஆத்திரம் தான் வந்தது பாரதிக்கு. உடனே அழைப்பினை தொடுத்து விட்டு காத்திருந்தவளின் அழைப்பானது நிக்கும் தருவாயிலேயே எடுக்கப்பட்டது.



"பாரதி... பாரதி... நா நான் என்ன செய்யட்டும் பாரதி. என் மே...மேல தப்பில்ல பாரதி... என்னை ந.. நம்புங்க பாரதி.. நீங்களே என்... என்னை நம்பலன்னா வேற யாருமே என்னை நம்ப மாட்டாங்க பாரதி.." இதுவரை நாவில் தண்ணீர் என்பதே பாடாதவன் போல், திக்கித் திணறி பேசியவன் பேச்சு உண்மையாே என்றிருந்தது அவளுக்கு.


"ஓகே சந்ரூ.. நீங்க சொல்லுறது உண்மையாவே இருக்கட்டும். மெசேஜ்ல கேட்ட கேள்விய தான் இப்பவும் கேட்கிறன். என்கிட்ட இதை வந்து சொல்லுறதனால எந்தப் பயனும் இல்ல.. ஏன்னா உங்களுக்கு கல்யாணம் ஆகிடிச்சு."

"கல்யாணமா..? எது கல்யாணம் பாரதி..? எவனோ ஒருதனாேட பிள்ளைக்கு எப்பிடி என்னால அப்பாவ இருக்க முடியும்? அத்தை பொண்ணு தானேன்னு அதை செய்ய நான் தயார் தான், ஆனா என் மனசு பூராவும் நீங்க இருக்கிங்க பாரதி.. நீங்க இருந்த மனச இன்னொருத்திக்கு எப்பிடி பங்கு போட முடியும்.?"

"ஏன்...? ஏற்கனவே அவங்க இருந்த மனசு தானே அது. புதுசா குடி அமர்த்த போறவரு போல பேசுறீங்க." என்றாள் நக்கலாக.

"பாரதி... நீங்க என்னை வேண்டாம் என்கிற முடிவோட பேசுறீங்க... அதனால தான் வார்த்தைக்கு வார்த்தை என்னை மடக்க பார்க்கிறீங்க. ஏற்கனவே அவளை நினைச்சது உண்மை தான், ஆனா அது வெறும் ஈர்ப்பு. அதை உங்கள பிரிஞ்ச இந்த மூணு நாள்ல தான் புரிஞ்சிது. ஆறு மாதமா அவளை வேண்டாம்ன்னு இருக்க முடிஞ்ச என்னால, மூணு நாள் உங்கள பிரிஞ்சு இருக்க முடியல. அப்பவே தெரியலையா? என் அன்போட ஆழத்தை" என்றான் அழும் குரலில்.
பெண்கள் அழுதாலே பார்க முடியாது.. இதில் ஆண் அழுதால்?

"சரி சந்ரூ. உங்க காதல் பொய் இல்லை... உண்மை தான்.. ஆனா அதனால என்ன பயன். நான் ஒத்துக்கிறதனால எதாவது மாறிட போகுதா? இல்லல்ல... அப்புறம் ஏன் என் நேரத்தையும் வீணடிக்கிறீங்க?"

"மாறும்... பாரதி.. நீங்க மனசு வைச்சா மாறும்"

"என்ன சொல்லுறிங்க? நான் மனசு வைச்சா மாறுமா? எப்பிடி? "

"ஆமா பாரதி.. நாம எங்கயாவது போயிடாம்.. யாரும் நமக்கு வேண்டாம்." என்றான் மீண்டும் புரியாத மொழி பேசுபவனைப் போல.

"யாரும் வேண்டாம்ன்னா. புரியல.."

"நீங்களும் என்னை உண்மையா விரும்புறீங்கல்ல பாரதி. நான் உங்கள நல்லா வைச்சுப்பேன்னு நம்பிக்கையும் உங்களுக்கு இருக்குல்ல... அப்பிடின்னா வாங்க நாம யாருக்கும் தெரியாம இந்த ஊரை விட்டு, யார் கண்ணும் படாத தூரமா போயிடலாம்."

"தூரமாவா.. என்ன உலர்றிங்க... நான் ஏன் ஊரை விட்டு வரணும்.? இல் ல சந்ரூ.. நடக்கிற விஷயமா பேசுறதுன்னா பேசுங்க.. சும்மா போதையில உலர்றது போல உலராதிங்க. உங்க கூட நான் வந்துட்டா என் குடும்பத்தோட மானம் மரியாதை என்னாகிறது?
இது சரி வராது சந்ரூ.. உங்க அம்மாவுக்கு என்னை பிடிக்கலன்னா பிடிக்காதது போலவே இருக்கட்டும். நீங்களும் என்னை மறந்துட்டு, வந்த வாழ்க்கைய சரியா வாழ பாருங்க. என்...."

"செத்திடுவேன் பாரதி.. நீங்க இல்லன்னா செத்தடுவேன்." அவள் தெளிவாக தன் பக்கத்து விளக்கத்தை கூறுவதற்கு முன்னர் முந்திக் கொண்டான்.

"இப்ப கூட கையில விஷத்தை வைச்சிட்டு தான் உங்களுக்கு மெசேஜ் பண்ணேன். நம்பலன்னா உங்க வாட்ஸ்ஆப் பாருங்க." இருட்டில் போட்டோ பிடித்து அனுப்பியவன், லைன்னில் நிற்கும் போதே பார்த்தளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

"நீங்க ரிப்ளை பண்ணலன்னா இதை குடிச்சிட்டு செத்திடலாம்ன்னு தான் வாங்கி வந்தேன். நீங்களே என்னை வெறுக்கிறப்போ, இந்த உயிர வைச்சு நான் என்ன பண்ண போறேன்" மூக்கினை உறிஞ்சி உறிஞ்சி அழுதவன் பேச்சனை கேட்டவளுக்கு, இத்தனை காதலை தன் மேல் வைத்திருப்பவன், பொய் சொல்ல வாய்ப்பில்லை என்பது தெளிவாக.

"சந்ரூ... அவசரப் படாதிங்க. நான் சொல்லுறத கேளுங்க. உங்கள நம்பி ரெண்டு உயிர் வந்திருக்கு. அவங்க எதிர்காலத்தை கொஞ்சம் நினைச்சு பாருங்க."

"இல்ல பாரதி.. என்னை பத்தி யோசிக்காத யாரை பத்தியும் எனக்கு கவலை இல்ல. நீங்க கிடைக்கலன்னா நான் செத்.."


"இந்த நேரத்தில யார் கூட பேசிட்டிருக்க சந்ரூ.." தூரத்தே கேட்ட பெண் குரலை தொடர்ந்து அழைப்பும் துண்டிக்கப்பட்டது.
செல்லினையே பார்த்தவாறு இருந்தவளுக்கு மீண்டும் ஆரம்பப்புள்ளியில் இருந்து தொடங்குவதைப் போலொரு பிரம்மை.

என்ன செய்வாள் அவள் ஓடி ஔியும் வாய்ப்புக் கூட அவளுக்கு இல்லை. தான் இல்லை என்றால் இறந்து போகும் அளவுக்கா தன்னை நேசிக்கிறான்? அப்படி அவன் நேசிக்கும் அளவிற்கு என்ன செய்து விட்டேன் தான்? இப்படி உயிராக நேசிப்பவன் தவறு செய்வதற்கான வாய்ப்பே இல்லை. இது ஏன் எனக்கு தாமதமாக புரிந்தது.

ஒரு வேளை அவன் சொன்னது போல், நான் உண்மையாக அவன் பால் அன்பினை வைஙக்கவில்லையாே! அதனால் தான், சட்டென இன்னொருவர் பேச்சை நம்பினேனாே.. அவன் அப்படி செய்திருக்க மாட்டான் என்று உறுதியாக அவன் புறம் நின்றிருக்க வேண்டும். இல்லை.. இனிமேல் யார் என்ன சொன்னாலும், என் சந்ரூவ சந்தேக பட மாட்டேன்.

" தனக்குள் உறுதி கொண்டவள் அறிய வாய்ப்பில்லை. அவனது நடிப்பு எத்தகையது என்பதை.
மறு நாள் காலையில் அழைத்தவன் அழைப்புக்கு காத்திருந்தவள் போல,

"சந்ரூ ... என்னாச்சு ? நேத்து பேசிட்டிருக்கிறப்பாே யார் வந்தா?"

"அது... சுதா தான்." என்றவன், நான் சொன்னது பத்தி யோசிச்சிங்களா பாரதி?" என்றான்.

"சாரி சந்ரூ... உங்க வீட்டக்காரரே தப்பா சொன்னதும் நான் கொஞ்சம் குழம்பீட்டேன்." என வருத்தம் கொள்ள.

"அதை விடுங்க பாரதி.. அது முடிஞ்ச கத... ஊரை விட்டு போற விஷயமா பேசி இருந்தேனே.. ஏதாவது முடிவு பண்ணீங்களா..?"

"அது... நான்..."

"இழுத்து அடிக்காம.. நான் கேட்டதுக்கு சீக்கிரம் பதில சொல்லுங்க பாரதி.. என்ன முடிவு பண்ணிருக்கிங்க" ரயிலுக்கு நேரமானவன் போல் அப்படி ஒரு அவசரம் அவனுக்கு.

"இல்லை சந்ரூ... எனக்கு என் குடும்பம் முக்கியம்.. அவங்க மானத்துக்கு இழுக்கான காரியம் நான் சொய்ய மாட்டன்."

"எனக்கு மட்டும் என் குடும்பம் முக்கியம் இல்லையா பாரதி...? எங்க வீட்டில நான் தான் ஒரே ஒரு பையன். என்மேல எவ்வளவு உயிரா இருப்பாங்க எல்லாரும். எல்லாலையும் விட்டுட்டு நீங்க தான் என் உயிர்ன்னு உங்கள கெஞ்சிட்டு இருக்கிறதனால தானே என்னை சீப்பா நினைக்கிறீங்க.
வேண்டாம் பாரதி.. என்னில உங்க மானம் மரியாதைய விடாதிங்க. ஓகே பைய்." என்று பாேனை கட் பண்ண பாேனவனது பேச்சு ஏடா கூடமாக இருக்க.

"சந்ரூ.. கோபப்படாதீங்க... எனக்கு யோசிக்க கொஞ்ச டைம் வேணும்." என்றாள் அவன் கட் பண்ணுவதற்கு முன் அவசரமாக.

"ம்ம்... ஆனா எதுன்னாலும் பத்து நாளைக்குள்ள சொல்லுங்க." என்றவன் மேலே ஒரு நியமிடம் கூட காத்திராது செல்லினை அணைத்தான்.

பாரதிக்கு தான் தான் செய்வது சரியோ தவறோ என்ற புரியவில்லை. அதே சமயம், தனக்காக உயிரையும் விட துணிபவனையும் இன்னொருவளுக்கு விட்டுக் கொடுக்கவும் மனம் இடம் தரவில்லை.

பின்னே இத்தனை நாள் பாரதி பாரதி என்று அவள் பின்னே சுற்றியவன், நாளை இன்னொருதிக்கு சொந்தமாகப் போகிறான் என்றதும், அதை அவளால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் ஓர் முடிவுக்கு வந்தவள், அவன் அழைப்புக்காக காத்திருந்தே பத்து நாட்களில் ஐந்து நாட்களும் ஓடிப் போயிருந்தது.

அதுவும் ஓர் இரவு தான், பலத்த யோசனையின் மத்தியில் கட்டிலில் புரண்டவள் செல்போன் சந்தமிட்டும், அந்த நேரத்தில் அழப்பு வந்தால் யாருடையது என உணர்ந்தவள், அவசரமாய் செல் போனினை தடவி காதில் வைத்தாள்.

"பாரதி... என்ன செய்றங்க? என்ன காணலன்னு தேடினீங்களா?" என்றான் அவன்.

"ம்ம்... ஏன் இத்தனை நாள் கூப்பிடல?"

"அதை ஏன் கேக்கிறீங்க பாரதி... நடக்காத விழாவுக்கு இவங்க பண்ற அலப்பறைக்கு மத்தியில, போன் பேச முடியல.. போனை தூக்கினாலே யாரு என்னன்னு கேள்வி மேல கேள்வி. அதான் சமயம் வரும்ன்னு காத்திருந்தேன். அதை விடுங்க யோசிச்சீங்களா..? என்ன முடிவு பண்ணிருக்கீங்க?"


"அது.... நான் வர தயார் தான் சந்ரூ.. ஆனா அந்த பொண்ணுக்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆச்சே... அப்புறம் எப்பிடி நான்."


"அது கட்டாயத்தினால நடந்தது. வெறும் மஞ்சள் கயிறு மட்டும் தான் அவ கழுத்தில கட்டினேன். சட்டப்படி எனக்கு கல்யாணம் ஆகல. அதனால அந்த கல்யாணம் செல்லாது. நம்ம வேற ஊருக்கு போனதும், எதாவது ரிஜிஸ்டர் ஆஃபீஸா பார்த்து கல்யாணம் பண்ணிப்போம்."


"தப்பில்லையா சந்ரூ... ஒரு பொண்ணோட வாழ்க்கைய அழிச்சு நான் வாழணுமா"



"தப்பா? எது தப்பு...? யார்கிட்டையோ கெட்டு பாேனவளை என் தலையில கட்டி வைக்க நினைக்கிற பெரியவங்க இருக்காங்க.. இன்னொரு அப்பாவிய தேடி பிடிக்க.. நீங்க கவலை படாதிங்க. சரி நான் நாளைக்கு காலேல மெசேஜ் பண்றேன். இங்க சூழ்நிலை எப்பிடி இருக்கேன்னு பார்த்து யார் கண்ணிலயும் விழாம ஓடிடலாம். பைய்." என்று அழைப்பை துண்டித்தான்.
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 31, 2022
Messages
36
நம்பிட்டா... அவன் சொன்ன பொய்யை நம்பிட்டா.. 😬😬
திருந்தாத ஜென்மம்.. 😡
 
Top