அகானா – 93
“மாமா உங்க டைமை வேஸ்ட் பண்றேனா?” என்ற மனைவியின் குரலில், அவளை முறைத்துப் பார்த்தான் ஆகன்.
காரில் ஏறியதிலிருந்து பத்தாவது முறையாக கேட்டிருப்பாள் அகானா. கனலியின் அழைப்பில் வேறு வழியில்லாமல் ஆகனோடு சென்று கொண்டிருக்கிறாள், அவர்களது ஃபங்சனுக்கு.
“அம்மு.. இந்த மாதிரி பார்டிஸ், ஃபங்க்ஷன்ஸ் எல்லாம் இனிமேல் நம்மளால அவாய்ட் பண்ண முடியாதுடா. அதுக்கு ஆப்டா எப்படி டைம் செட்யூல் பண்ணனுமோ பண்ணிக்கனுமே தவிர, இப்படி புலம்பிட்டே இருக்கக்கூடாது, புரியுதா.?” என கண்டிப்புடன் கூற,
“எனக்கும் புரியுது தான். ஆனா உங்களுக்கும் இப்போ அப்பாய்ன்ட்மென்ட்ஸ் இருந்தது தானே மாமா..” என்றாள்.
“ம்ம்.. எமெர்ஜென்சி கேஸ் இருந்திருந்தா நானே வர முடியாதுனு சொல்லிருப்பேன் அம்மு. மேனேஜபிள் கேசஸ்தான். என் ஜூனியர் பார்த்துப்பாங்க. சோ உன் மூளையை சூடாக்காம, கொஞ்சம் ரிலாக்ஸா வா..” என்றான் அவனும்.
“ஹ்ம்ம்..” என்றவள் இன்னும் நெருங்கி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
மெல்லிய ஒலியில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல்கள் வேறு அவளை வேறு உலகிற்கு அழைத்துச் சென்றது.
மனைவியின் நெருக்கத்தை ரசித்தவாறெ “மேடம்.. உங்க மேக்கப்ஸ், சாரீ எல்லாம் கலைஞ்சிட போகுது..” என மனைவியை சீண்ட,
“ஹாஹா.. அப்படி கலைஞ்சாலும் ஓகேதான்..” என்று மனைவியும் அவனுக்கு பதில் கொடுக்க,
“அது மாமாவா கலைக்கனும் மேடம்.. மாமா கலைக்கிறதுல நீங்க களைச்சு போகணும் மேடம். இப்படி நீங்களா கலைச்சா?” என விசமமாக கூற,
“மாமாவுக்கு இப்போ எல்லாம் கலைக்கிறதுக்கு டைமே இல்லையாம்?” என அவளும் அவனை சீண்ட
“ஆஹான்.. ஒன் வீக்கா பொண்டாட்டியை பாடா படுத்திட்டோமோ, கொஞ்சம் ரெஸ்ட் கொடுப்போம்னு நினைச்சது தப்பா போச்சு..” என பொய்யாக சலிக்க,
“எது எதுக்கெல்லாம் ரெஸ்ட் கொடுக்கனும்னு மாமாவுக்கு இன்னும் தெரியல.. இதுல பெத்த டாக்டருனு ஊருக்குள்ள சொல்லிக்கிறாங்க..” என்றாள் மீண்டும் அவனை சீண்டும் விதமாக.
“அடிப்பாவி..” என்றவன், சட்டென காரை ஓரமாக நிறுத்திவிட்டான்.
கார் திடீரென நின்றதில் அவன் மார்பில் முட்டி முட்டி நிமிர்ந்தவள் “மாமா உங்களோட..” என சிரித்தபடியே முறைக்க,
“கிளம்பும் போதெல்லாம் என்னடி பண்ண? இந்த டைலாக்சை அப்ப சொல்லிருக்கனும், மாமாவோட வேலை என்னனு தெரிஞ்சிருக்கும்..” என கடுப்பாக கேட்க, கணவனின் கடுப்பில், கலகலவென சிரித்துவிட்டாள் அகானா.
மனைவியின் சிரிப்பையே விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான் கணவன்.
இப்போதெல்லாம் அடிக்கடி இப்படி சிரிக்கிறாள். சிரிக்க வைக்கிறான் அவளின் கணவன்.
இப்படியே எந்த கவலையும் அவளை அண்டாமல், கடைசி வரை காத்துவிட வேண்டும் என்று மனதுக்குள் வேகமாக கடவுளிடம் பிரார்த்தனை வைத்துக் கொண்டான்.
ஆனியன் கலரில் ஆர்கன்சா புடவை, அதே கலரில் சில்க் காட்டன் பிளவுஸ், அவளின் முதுகை முழுதாக காட்டியிருந்தது.
கூந்தலை ஃப்ரெஞ்ச் ஃப்லாட் போட்டு, நெருக்கி கட்டியிருந்த மல்லிப்பூவை இரண்டு பக்கமும் விட்டிருந்தாள்.
மனைவியின் மிதமான அலங்காரத்திலும், அவளின் மீதிருந்து வந்த யார்ட்லி லாவென்டர் பெர்ஃபியூமின் வாசமும், மல்லிப்பூவின் மனமும் அவனை நிலையிழைக்கச் செய்தது.
“அம்மு.. இப்படியே வீட்டுக்கு கிளம்பிடுவோமா?” என அவளின் நெற்றியில் முத்தமிட்டு, மோகம் முற்றிப் போன குரலில் கேட்க, பெண்ணவளின் உடலே சிவந்து போனது.
“மாமா..” என்றவள் அவன் மார்பில் சாய்ந்து “ம்ச் போலாம்.. கனலி மேம் வெய்ட் பண்ணுவாங்க..” என முணுமுணுக்க,
அதில் கடுப்பானவன் “உன்னை முதல்ல வெளுக்கனும்டி.. சும்மா இருந்தவனை உசுப்பேத்திவிட்டுட்டு..” என கடுகடுக்க,
“ம்ம்.. நான் என்ன செய்ய.?” என அவன் மார்பில் உதடுரச பேச, ஆகனின் திடம் கொஞ்சம் கொஞ்சமாக உடைய ஆரம்பித்தது.
மனைவியின் இடையை ஒரு கை அழுத்த, மற்றொரு கையோ அவளின் முதுகை அழுத்தமாக வருட, உதடோ அவளின் கழுத்து வளைவை உரச, திடிரென்ற தாக்குதலில் பெண்ணவளின் உடல் நடுங்கத் தொடங்கியது.
அப்போது
இவள் ரதியினம் உடல் மலர்வனம்
இதழ் மரகதம் அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம்
இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய்
ஓ பிரம்ம தேவனே
என்ற பாடல் அந்த அமைதியில் சத்தமாக கேட்க, ஆகனின் கைகள் தன் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்துவிட்டது.
“அம்மு.. அம்மு…” என்றவனின் உதடுகள் ஓயாமல், மனைவியின் பெயரை முணுமுணுத்து, அவளின் இதழை வதம் செய்ய,
பெண்ணவளோ “வேண்டாம் மாமா, போலாம் மாமா.. போதும் மாமா.. ப்ளீஸ் மாமா” என கிடைக்கும் இடைவெளியில் அவனைத் தடுத்து, தவித்துப் பின் அவனிடமே சரணடைய, நீண்ட நெடிய முத்தத்திற்குப் பிறகும் அவளை விடாமல் இடை வளைத்து தன்னோடே வைத்துக்கொண்டான்.
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்.’ என பாடல் ஒலித்து முடிய, அவனிடமிருந்து தள்ளி அமர்ந்தவளுக்கு மீண்டும் அவனை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.
“மாமா ப்ளீஸ்.. டைம் ஆச்சு” என தன் புடவையை சரி செய்வது போல் குனிந்தபடியே கூற, மனைவியின் வெக்கத்தில் வெடித்து சிரித்தான் கணவன்.
“அம்மு.. இன்னைக்கு கண்டிப்பா உண்டு.. டயர்டா இருக்கு, மார்னிங்க் ஃபீல்டுக்கு போகனும் அது இதுன்னு ஏதாச்சும் சாக்கு சொன்ன ராஸ்கல், கும்பி பாகம் தாண்டி உனக்கு..” என இப்போதே அவளிடம் சம்மதம் வாங்கிவிட்டுத்தான், காரை எடுத்தான்.
தேனியிலிருந்து வருசநாடு போகும் வழியில் அமைந்துள்ள கடமலைக்குண்டு தான் கனலியின் ஊர்.
ஒருவழியாக இருவரும் வந்து சேரவே மாலை ஆறை நெருங்கியிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணம்.
“மாமா.. நம்ம ஊர்ல இருந்து இங்க ஷார்ட் ரூட் இருக்குனு கண்ணன் அங்கிள் சொன்னாரே..” என்றாள் காரைவிட்டு இறங்கியபடியே..
“ஆமாம்.. அதோட நாம ஊருக்குப் போய் இங்க வர்ரதும், இப்படியே வர்ரதும் சேம் டைமிங்க் தான் ஆகும்..” என காரை நிறுத்திவிட்டு அவனும் இறங்கினான்.
கனலிக்கு வாங்கிய கிஃப்ட் மற்றும் மலர்க்கொத்தோடு அகானா நடக்க, அவளோடு இனைந்து நடந்த ஆகனின் பார்வை அங்கு இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த ரவியின் மேல் விழுந்தது.
‘மாமா இங்க எப்படி? யாரைத் தெரியும்? அம்மு பார்த்தா என்னாகும்?’ என நொடியில் பதட்டமாகிவிட்டான் ஆகன்.
ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை அகானா. அவள் காரை விட்டு இறங்கும்போதே கவனித்துவிட்டார் கனலி.
அதனால் அவரே வேகமாக வந்து வரவேற்க, சுற்றம் இருக்கும் ஆட்களை கவனிக்காமல் அவருடன் நடந்தாள் அகானா.
“யு லுக் சோ ப்ரெட்டிமா..” என மனதார பாராட்டிய கனலிக்கு, “மேம்..” என சினுங்கி சிறு புன்னகையை மட்டுமே கொடுத்தாள் பெண்.
“கனி..” என வந்த நிலவனிடம் “பாவா நான் சொன்னேன்ல அகானா.. கலெக்டர் அகானா..” என அறிமுகப்படுத்த,
“நீங்கதானாமா அது.. உங்களைப்பத்தியே தான் மேடம் பேசிட்டே இருப்பாங்க. அவங்க பேசி நான் கேட்டு, உங்களைப் பார்த்தே ஆகனும்னு முடிவே பண்ணிட்டேன், அதனாலத்தான் இன்னைக்கு இன்வைட் பண்ண சொன்னேன்..” என நிலவன் கூற, அகானாவுக்கு கூச்சமாக இருந்தது.
‘எங்கே போனான்.?’ என அப்போதுதான் ஆகனைத் தேட, அதற்குள் அவனும் அவர்களிடம் வந்துவிட்டான்.
“ஸாரி மா..” என மனைவியிடம் மெல்ல முணுமுணுத்தவன், மற்றவர்களைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தான்.
“டாக்டர் ஆகன்.. நல்லாவே சிரிக்கலாம். நாங்க தப்பா எல்லாம் எடுத்துக்க மாட்டோம்..” என்ற நிலவனைப் பார்த்து “ஸார்..” என சத்தமாக சிரித்துவிட்டான் ஆகன்.
“இவர் நிலவன், இப்போ சென்னைல சட்டம் ஒழுங்கு டிபார்ட்மெண்ட்ல எஸ்பியா இருக்கார். ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கம் இருக்க வேண்டிய சூழல்..” என்ற கனலியிடம் “குட்டீஸ்.” என்றாள் அகானா.
“ட்வின்ஸ்.. அங்க இருக்காங்க…’ என தன் பாட்டியை ட்ரில் வாங்கிக் கொண்டிருந்த குழந்தைகளைக் காட்டினாள் கனலி.
“இன்னைக்கு எங்க அனிவர்சரி. இந்த ட்வெல் யேர்ஸ்ல ரெண்டு பேரும் ஒன்னா இருந்த ஒரே வெட்டிங்க் அனிவர்சரி இதுதான். வீட்டுல எல்லாரும் கொஞ்சம் கிரான்டா பண்ணலாம்னு சொன்னாங்க. அதனாலத்தான் ஃப்ரன்ட்ஸ் எல்லாரையும் அழைச்சோம்..” என கனலி நீண்ட விளக்கம் கொடுக்க, ‘நிஜமாவா?’ என்பது போல் பார்த்தாள் அகானா.
“ஸீரியசா தான் மா..” என்றான் நிலவன். அவன் குரலே உண்மை என்று சொல்ல, அடுத்து எதுவும் கேட்கவில்லை அவள்.
அதற்குள் அனைவரையும் சாப்பிட அழைக்க, “இப்பவே வேண்டாம் மேம்.. கொஞ்சம் டைம் போகட்டும்..” என ஆகன் மறுக்க,
“அப்போ இருங்க..” என்றவள், யாரையோ அழைத்து பேசிவிட்டு அவர்களோடு அமர்ந்து கொண்டாள்.
நிலவனும் மனைவியின் அருகில் அமர, ஏதோ மிக முக்கியமாக பேச போகிறார்கள் என்று மட்டும் அகானாவுக்கு புரிந்து போக, அதுவரை இருந்த இளக்கம் மறந்து, உடல் சட்டென இறுக்கம் கொண்டது.
மனைவியின் மாற்றம் அருகில் இருந்த கணவனுக்கு புரியாமல் போகுமா? அவள் கைகளை எடுத்து தனக்குள் வைத்து அழுத்திக் கொண்டான்.
“ஹேய்.. நீங்க பயப்படுற மாதிரி எல்லாம் ஒன்னும் பேசப்போறதில்ல.. கலெக்டர் மூலமா எங்களுக்கு ஒரு ஹெல்ப் வேணும். அதை ப்ரஃபசனலா டீல் பண்ண முடியாது. நாங்களே பண்ணலாம், பட் நிறைய கொஸ்டீன்ஸ் வரும். அது எங்களோட பதவிக்கு தேவையில்லாத பிரச்சினையைக் கொடுக்கும்..” என நிலவன் கூற, கனலியும் ‘ஆம்’ என்பது போல் தலையாட்டினாள்.
“எங்களைப்பத்தி ஓரளவுக்கு தெரிஞ்சுதான் வந்திருப்பீங்க.. இருந்தாலும் நானே எல்லாம் சொல்றதுதான் சரி..” என தங்களைப் பத்தி அனைத்தையும் சொல்ல, அகானாவிற்கு உடல் தளர, சிரிப்பு வந்துவிடும் போல இருந்தது,
{முட்டக்கண்ணி கதை படித்தால், அகானா ஏன் சிரிக்கிறாள் என்று புரியும்}
அவளின் உடல் மொழியே அதைக் காட்ட, “ம்ச் அம்மு..” என மனைவியை கண்ணால் அதட்டிக் கொண்டிருந்தான் ஆகன்.
அப்போது கனலியின் பாட்டி “இந்தாடி நீ பெரிய ஜட்ஜா இருந்தா எனக்கென்ன? உன் புள்ளய தூக்கத்தான் நான் இருக்கேனா? பெத்தா மட்டும் பத்தாது, தூக்கி வளர்க்கனும்.. வயசான காலத்துல ச்சங்கி உட்கார முடியுதா?” என யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் பேச,
“ஏய் கிழவி..” என்ற கனலியும் “உன் பேரன் முழுசா வேணுமா வேண்டாமா?” என பதிலுக்கு கேட்க,
“ளேய் பேராண்டி இந்த ராங்கியை தொலைச்சுக் கட்டுனு எத்தனவாட்டி சொல்றது, பாரு என்ன பேச்சு பேசுறான்னு..” என மூச்சு வாங்க கத்த,
“தாய் கிழவி சத்தமா பேசாத மூச்சு வாங்கும்..” என்று கனலியும் பதிலுக்கு கத்த,
“கனி சும்மா இரு..” என நிலவன் அதட்ட, அதற்குள் கனலியின் பார்வையில் பாட்டியை அள்ளிக்கொண்டு போயினர் அவளின் பாடிகார்ட்ஸ்.
“டேய் எடுபட்ட பயலே, பொம்பளையே எங்கடா தொட்டு தூக்குற” என்ற பாட்டியின் பேச்சில் அகானா இருக்கும் இடம் மறந்து சத்தமாக சிரித்துவிட்டாள்.
ஏனென்றால் தூக்கிச் சென்றது கனலியின் பத்தே வயதான இரு மகன்களும்தான்.
“அம்மு..” என மனைவியை அதட்டிய ஆகனுக்கும் சிரிப்புத்தான் வந்தது.
“ஸாரி ப்பா.. இங்க ஃபார்மலான பார்டி, ஃபங்க்ஷன் எல்லாம் எதிர்பார்க்காதீங்க. இது நம்ம ஃபேமிலி பங்க்ஷன்” என கனலி அசடு வழிய,
“சாரி மேம்.. இங்க வரும் போது கொஞ்சம் பயத்தோடதான் வந்தேன். பட் நீங்க வேற லெவல் மேம்.. சாரும் தான்..” என்றதும்,
“அப்படியும் சொல்ல முடியாதுப்பா.. எல்லா நேரமும் இப்படியேவும் இருக்காதே. அப் அன்ட் டவுண்ஸ் இருக்கிறது தானே லைஃபும்..” என்று விளையாட்டுத்தனம் விட்டு சிரிக்க, அகானாவும் “ஆம்” என்பது போல் தலையாட்டினாள்.
அப்போது இவர்களிடம் சொல்லிக்கொண்டு செல்லலாம் என ரவி வர, அவரை பார்த்ததும் அகானா என்ன சொல்வாளோ என்று பதட்டமாகிவிட்டான்.
ஆனால் அகானாவோ அவரைப் பார்த்துவிட்டு, கனலியிடம் திரும்பிவிட்டாள்.
முகத்தில் பெரிதாக எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை.
அதுவே ஆகனுக்கும் போதுமானதாக இருக்க, ‘ஊப்ஸ்’ என்று மூச்சை வெளியிட்டான்.
“வாங்க டாக்டர்..” என நிலவன் ரவியை அழைக்க, “வாங்க மாமா..” என்றான் ஆகனும்.
கனலியும், நிலவனும் புருவம் சுருக்க, “என் அப்பா மேம்..” என்றாள் அகானா நிறுத்தி நிதானமாக.
1 comment
பரவாயில்லையே.. அப்பான்னு வெளிப்படையா சொல்றா.
😔😔😔
CRVS (or) CRVS 2797