அகானா – 90
“எதுக்குடி இந்த அழுகை.?” என மனைவியின் தலையில் முட்டியபடி கேட்டவனுக்கு பதில் கிடைக்கவில்லை.
மகிழினியின் அழுகை கூடியதே தவிர குறையவில்லை.
“நீ இப்படி அழுதா நான் என்னனு நினைக்க குட்டிம்மா? தேவையில்லாம உன்னையும் இந்த பிரச்சினைல இழுத்து விட்டுட்டேனோன்னு இப்போ எல்லாம் எனக்கு அடிக்கடி தோணுது இனிமா?” என்றான் அவளின் அழுகையைப் பார்த்த வருத்தத்தோடு.
“அது.. அப்படி இல்லை.. எனக்கு கொஞ்சம் பயம் அவ்ளோதான். இங்க இருந்து போறோம். நீங்களும் என்கிட்ட சரியா பேசல.. என்ன செய்யப்போறோம், அங்க எப்படி? எதுவுமே தெரியாம.. இப்படி நிறைய குழப்பம், பயம்..” என்றாள் அழுகையோடே.
“ஊப்ஸ்.. இதை நீ என் சட்டையைப் பிடிச்சி கேட்டிருக்கலாமே குட்டிம்மா.. நான் என்னென்னமோ நினைச்சி ரொம்ப பயந்துட்டேன்.. ஓ காட்..” என்றான் இழுத்துப் பிடித்த மூச்சை வெளியிட்டு.
“ஆகனும் இல்ல. மாமாவும் இப்போ ஹாஸ்பிடல் வர்ரது இல்ல. வினோ மாமாவும் பார்மசியை பார்க்கிறது இல்ல. எல்லாமே நீங்கதான் பார்க்குறீங்கனு தெரியும். ஹாஸ்பிடல்ல ஏதாவது ஒரு பிரச்சினை நடந்திருக்கும். அதனால ஆகன் பல நாள் ரொம்பவே ஸ்ட்ரெஸ்ல வருவான். அவன்கிட்ட பேசவே பயமா இருக்கும்.. நீங்களும் அவனை மாதிரியே வந்தீங்க.. சோ..” என்று இழுக்க,
அழுத விழிகள் பளபளக்க, அழுததில் முகமெல்லாம் சிவந்திருக்க, அவள் கண்களையும், முகத்தையும் அழுத்தமாக துடைத்துவிட்டு, “என்ன குட்டிம்மா நீ? உண்மையைச் சொல்லனும்னா, எனக்கு இது ரொம்ப புதுசு இல்லையா? அங்க நான் ஹாஸ்பிடல் போவேன், ஓபி பார்ப்பேன். சர்ஜரி பண்ணுவேன்.. ட்ரீட்மென்டோட என்னோட வேலை முடிஞ்சிடும். இந்த மேனேஜ்மென்ட் பார்க்கிறது எனக்கு பழக்கமே இல்ல. அதோட இது என்னோட ஹாஸ்பிடலும் இல்லை. என்னை நம்பி விட்டுட்டு போயிருக்காங்க. அதை கவனமா பார்த்து, அவங்ககிட்ட திருப்பி கொடுக்கனும்ல, அந்த டென்சன். மத்தபடி, அகியை நினைச்சோ, உங்க அம்மா, அத்தையை நினைச்சோ எனக்கு எந்த சங்கடமும், வருத்தமும் இல்ல குட்டிம்மா. நீ இந்த தாலியைக் கட்டிக்கிற வரை ரெண்டு மனசுல இருந்தேன். நீ வேணுமா? வேண்டாமானு ரொம்ப குழப்பம். இதனால அகியோட லைஃப் பாதிக்கப்படுமோனு கூட பயந்தேன். ஆனா நீ உங்க அம்மா முன்னாடி அப்படி வந்து நிக்கவும், என்ன ஆனாலும் பரவாயில்லை நீதான்னு முடிவு பண்ணிட்டேன். அப்பவே உனக்காக இவங்களையும் ஏத்துக்கனும்னு தான் நினைச்சேன். அதனால உங்க குடும்பத்தையும், நம்மளையும் நினைச்சு, கண்டதையும் யோசிச்சு மனசை குழப்பிக்காத.” என்றான் ஆறுதலாக.
“ம்ம்… எனக்கு முன்னாடி அந்த பயம் இருந்தது.. ஆனா இப்போ அத்தை நம்ம குடும்ப விசயத்துல தலையிடமாட்டாங்கன்னு உறுதியா நம்புறேன். அப்புறம் அம்மாவும் முன்ன மாதிரி நடந்துக்கவும் மாட்டாங்க…” என்றாள் அவளும் தன் பங்கிற்கு.
“எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு.. இனியும் திருந்தலன்னா அவங்களுக்கு தான் நஷ்டம்..” என்றான் எதிர்காலத்தை நினைத்து.
“ஹ்ம்ம்ம்ம்…. ஆக்சிடென்ட்லயே ரொம்ப பயந்துட்டாங்க. அண்ணாவும், அப்பாவும் ஏற்கனவே மிரட்டித்தான் வச்சிருக்காங்க. அதனால அண்ணிக்கிட்டயும் சரி, மஞ்சு அத்தைக்கிட்டயும் எந்த பிரச்சினையும் பண்ண மாட்டாங்கன்னு தான் நினைக்கிறேன்.” என்றாள் தாயை விட்டுக் கொடுக்க மனமில்லாமல்.
“அகிகிட்ட அவங்களால பிரச்சினை செய்யாம இருக்க முடியாது இனிமா.. அது மாமியார் பதவி, கண்டிப்பா ஈகோஸ் வரும், ஏதோ ஒரு இடத்துல முட்டிக்கும். அதை அவங்களே சரி பண்ணிக்கட்டும். இவங்க இடையில மஞ்சும்மாவை இழுத்து விடாம இருந்தா போதும்..” என்றவன் “போதும் மகி.. இப்பவே டைம் ட்வெல்க்கு மேல ஆச்சு. இனி நம்ம வேலையை முடிச்சு படுக்க, இன்னும் லேட்டாகும். அப்புறம் நாளைக்கு போய் நான் ஹாஸ்பிடல்ல தூங்கிதான் வழியனும்..” என அவளின் பின் கழுத்தில் முகத்தைப் புதைக்க,
“நம்ம வேலையா?” என்றளுக்கு முதலில் புரியவில்லை. தன் கழுத்தில் அவனின் மூச்சுக் காற்று சூடாக வந்து விழவும் தான், எந்த வேலையை சொல்கிறான் என்று புரிந்தது.
“ரொம்ப லேட்டாச்சு..” என்றாள் முனங்கலாக.
“ம்ம்.. ரொம்ப நாளும் ஆச்சு.. கடைசியா எப்போ?” என்றான் கழுத்தை தாண்டி கீழே இறங்கி.
“ச்சூ.. என்ன பேச்சு இது?” என கணவனை அவளிடமிருந்து தள்ளிவிட,
அவளின் முயற்சி புரிந்து தன் அனைப்பை மேலும் இறுக்கி “இதுதாண்டி பேச்சு.. எல்லாமே மறந்தும் போச்சு. இனி முதல்ல இருந்து ஆரம்பிக்கனும்..” என்று அவளைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டான்.
“நோ…” என அவனிடமிருந்து துள்ள,
“யெஸ்…” என்றவனுக்கு அவளது துள்ளல் மேலும் வசதியாகிப் போனது.
அவள் துள்ளியதில் அவனின் முகம் நேராக வயிற்றுக்குள் புதைய “நோ.. நோ.. ப்ளீஸ்..” என நெளிய ஆரம்பித்தவளை தனக்கு வாகாக அனைத்துக் கொண்டவன்,
“யெஸ் ப்ளீஸ் குட்டிம்மா… மாமா பாவம்ல்ல.. பார் என் ஹார்ட் உன்னைத் தேடி எப்படி தாறுமாறா துடிக்குதுனு. நீ இங்க கிஸ் பண்ணாதான் அது நார்மலாகும். கம்.. கம்..” என்றவன் அவள் சுதாரிக்கும் முன்னே இழுத்து தன் இதயத்தோடு நெருக்கமாக அனைத்து, கழுத்தோரத்தில் அழுத்தமாய் முகம் புதைத்துக் கொண்டான்.
கணவனின் திடீர் செய்கையில் அதிர்ந்து பின் மெல்ல மெல்ல மயங்கி, கிறங்க ஆரம்பித்தாள் பெண்.
பெண்ணவளின் அங்க வளைவுகளில் தன் கரத்தை அழுத்தமாக பதித்து வருட ஆரம்பிக்க, கணவனின் செயலில் மொத்தமாக தன் வசமிழந்து, அவனின் ஆளுகைக்கு கீழ் சென்று கொண்டிருந்தாள் பெண்.
என் நீலோத்தி நீலோத்தி
உன் நினப்புல லாந்துறேன்.. லாந்துறேன்…
**
இங்கு நவீனின் குடும்பம் மாலினியை பெண் பார்க்க வந்திருந்தது.
இப்படியொரு நிகழ்வு தன் வாழ்வில் நடக்கும் என கனவு கூட கண்டதில்லை மாலினி.
இரண்டு வீட்டிற்கும் இடையில் இருக்கும் பிரச்சினை அந்த மாதிரி. அகானா வந்த பிறகு நடந்ததை வைத்து இனி இதற்கு வாய்ப்பே இல்லை என்று முடிவே செய்திருந்தாள்.
ஆனால் நடப்பதையெல்லாம் பார்க்கும் போது, ஒரு வேளை கனவோ என்று கூட தோன்றியது.
“இன்னும் என்ன தாண்டி பண்ணுவீங்க ரெண்டு பேரும். ராகினி நீ போய் உங்க அத்தைக்கிட்ட உட்காரு. தம்பி தேடிட்டே இருக்கார் பாரு..” என வந்ததிலிருந்து குமரன் தன் மகளை தேடுவதைக் கண்டு சொல்ல,
“ம்மா.. அத்தை தான் அக்கா கூட இருக்க சொன்னாங்க. மகியும் வரல, ரஞ்சனி பெரிம்மாவும் வரல.. நீங்க மட்டும் தனியா இருந்து கஷ்டப்படுவீங்க, அதனால விஷேஷம் முடியுற வரை கூடவே இருன்னு சொன்னாங்க..” என்றவாறே மாலினியின் சேலைக்கு மடிப்பு எடுத்து விட்டாள் ராகினி.
அதைக் கேட்ட மாலினியின் அன்னைக்குதான் மிகுந்த குற்றவுணர்ச்சியாகிப் போனது.
கவிதாவின் குடும்பத்தைப்பற்றி தெரியாதவர் அல்ல. ஆனாலும் ரஞ்சனியை பகைத்துக் கொள்ள முடியாது என்பதால், மிகவும் மோசமாக நடந்து கொண்டார்.
அதிலும் ராகினியின் திருமணத்தின் போது, குடும்பத்தையே ஸ்டேஷனில் அமர வைத்திருந்ததை எல்லாம் இப்போது நினைக்கும் போது மனம் கனக்கத் தொடங்கியது.
முடிந்ததைப்பற்றி யோசித்து என்ன செய்ய? இதோ அடித்த பெண்ணும் அந்த வீட்டிற்கே மருமகளாகப் போகிறாள், இனியும் இப்படி விரைத்துக் கொண்டு இருக்காமல், அவர்களை அனுசரித்து சமாதானமாக போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
ஏற்கனவே இரு வீட்டாருக்கும் சம்மதம் என்பதால், ராகினி வந்து மாலினிக்கு பூ வைத்து உறுதி செய்ய, பெண் பார்க்கும் நிகழ்வு ஒரு சம்பிரதாயத்திற்காக நடந்து முடிந்தது.
இரண்டு மாதம் கழித்து நிச்சயதார்த்தமும், திருமணமும் அடுத்தடுத்த நாட்கள் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவானது.
“மஞ்சரி கிளம்ப இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. போயிட்டு உடனே கல்யாணத்துக்கு வர முடியுமா தெரியல.?” என கவிதா வருத்தமாக கூற,
“மகியும் வந்துதானே ஆகனும் அண்ணி.. அதனால மாப்பிள்ளை ரெண்டு பேரையும் கூப்பிட்டுத்தான் வருவார்..” என்று சமாதானம் செய்தார் மாலினியின் தாய்.
“மஞ்சு.. இங்க இருந்து போன பிறகு எந்த விஷேசத்துக்கும் வந்ததில்ல. நவீன் கல்யாணத்துல மஞ்சு இல்லாம இருக்கக்கூடாது. அம்முவும் இப்படி எதுலயும் கலந்துக்கிட்டது இல்லையே. மஞ்சு இருந்தா, அவளும் சந்தோசப்படுவா..” என்றார் ஒரு அக்காவாக.
“எனக்குப் புரியுது அண்ணி.. இன்னும் ரெண்டு மாசம் இருக்கே.. அதுக்குள்ள எல்லாம் சரியாகிடும். மகி வீட்டுக்காரருக்கும் லீவு கிடைக்க வசதியா இருக்கும்.. அவரே ரெண்டு பேரையும் கூப்பிட்டு வருவார்.”
“இன்னைக்கே இங்க வர முடியலன்னு ரெண்டு பேருக்குமே வருத்தம் தான். மஞ்சுவுக்கு இன்னும் சரியாகல. மகியும் அவளைப் பார்த்துக்கனும்னு வர முடியல. அம்முவுக்கு மனசெல்லாம் இங்கதான் இருக்கும். அவங்க இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்..” என்றார் நெகிழ்வோடு.
“ஆகனும், அம்முவும் காலையிலே மாலினிக்கிட்ட பேசிட்டாங்க. ஆகன் வந்து எல்லாம் பார்த்துக்கிறேனு சொல்லிருக்கான். எங்க பொண்ணுங்களுக்கும் அவன்தானே எல்லாம் செய்யனும், அவன் இல்லாம செஞ்சது அவருக்குமே வருத்தம் தான். ஆனா எங்களுக்காக தள்ளிப் போடாதீங்கனு ஆகன் சொல்லவும், அவரும் அமைதியா கேட்டுக்கிட்டார்..” என்றார் மாலினியின் அன்னை.
இப்படி இருவரும் பேசிக் கொண்டிருக்க, தன் அறையில் நவீனின் அனைப்பில் இருந்தாள் மாலினி.
“இன்னும் என்னால இதெல்லாம் நம்பவே முடில தெரியுமா?” என அவனின் மார்பில் முட்டி முட்டி பேச, அவளுக்கு பதில் சொல்லாமல் தன் அனைப்பை மேலும் இறுக்கினான் நவீன்.
‘இப்போ புரியுதா, இது நிஜம்னு’ என அந்த அனைப்பு கூற, “ஹ்ம்ம்..” என அவனோடு ஒட்டிக் கொண்டு நின்றாள் பெண்.
“வெளியே எல்லாரும் இருக்காங்க பாப்பு..” என்றான் பெண்ணவளின் அனைப்பில் வித்தியாசத்தைக் கண்டு.
“ஹ்ம்ம்…” என்றாள் அவனோடு ஒன்றிப்போய்.
“ஹேய் உசுப்பேத்தாதடி.. மாமா ஸ்ட்ராங்க…” என்றவனுக்கும் குரல் மாறியிருந்தது.
“ஹ்ம்ம்…” என்றவளின் குரல் இப்போது வெளியில் கேட்கவே இல்லை.
“சொன்னா கேளு பாப்பு.. அப்புறம் சேதாரம் ஆனா நான் பொறுப்பில்ல..” என்றான் மோகம் முளைத்த குரலில்.
“ஹ்ம்ம்ம்” என்ற பெண்ணின் குரலிலும் மோகம் முகிழ்க்க,
“இந்த பொண்ணுங்களே இப்படித்தான். அவங்களுக்கு வேணும்னா ஒட்டிக்கிறது, கட்டிக்கிறது.. வேண்டாம்னா வெட்டிக்கிறது..” என அவளின் கூந்தலில் சூடியிருந்த குண்டு மல்லியை வாசம் பிடிக்க,
“ஹ்ம்ம்ம்.. இந்த நாளுக்காக எவ்ளோ நாள் ஏங்கி போயிருக்கேன் தெரியுமா? அது நிஜத்துல நடக்குது, அந்த ஃபீலை அனுபவிக்கவிடாம ஏன் இப்படி கரடி மாதிரி கத்திட்டே இருக்கீங்க..” என கட்டிக் கொண்டிருந்தவனின் சட்டையைப் பிடித்து திருக,
“எத கரடியா? இதெல்லாம் அநியாயம்டி..” என நவீன் அடுத்து ஏதோ சொல்ல வர, “நவீ ண்ணா..” என்ற காயத்ரியின் குரல் கதவுக்கு அந்தப்பக்கம் கேட்க,
“நிஜமாவே இப்பதாண்டி ஒரு கரடி எண்ட்ரி ஆகுறா..” என நவீன் கடுப்பாக கத்த, கலகலவென சிரித்துவிட்டாள் மாலினி.
“ஹேய் என்னோட ஃபீலிங்க் உனக்கு சிரிப்பா..?” என அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே காயத்ரி மீண்டும் அழைக்க, கதவைத் திரும்பி பார்த்த மாலினி, நவீன் சுதாரிக்கும் முன்பே அவன் இதழில் அழுத்தமாக தன் இதழை பதித்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள்.
இப்போது என்ன நடந்தது? என அதிர்ந்து, திகைத்துப்போய் நின்றிருந்தான் நவீன்.
நெனச்ச வாழ்க்கை வேணும்னு
நெஞ்சம் கிடந்து ஏங்குதே..!