இருபது நபர்களை கொண்ட வட்டமேசை மாநாடு பிரம்மாணடமான இருக்கைகளோடு விசாலமான அறையில் மழை வரும் முன் எச்சரிக்கை விடும் சூற காற்றால் ஜென்னல் கதவு படபடவென அடித்து கொண்டிருந்தது. அதை விட அங்கிருந்த ஒவ்வொருவரின் மனதும் பயத்தாலும் பதட்டத்தாலும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நடு நாயகமாக அமர்ந்திருந்த முதலமைச்சரும் கட்சியின் தலைவருமான கண்ணன் அவர்களை தீர்வு சொல்லவும் என்ற பார்வையோடு பார்த்திருந்தனர். ஆனால் பாவம் அவரே என்ன தீர்ப்பு சொல்வது என்று தெரியாமல் தன் இடது பக்கம் காலியாக இருந்த நாற்காலியை பார்த்தார். வந்திருந்த இருபது நபர்களை விட இன்னொரு முக்கியமான நபர் அங்கு வர வேண்டும் என்பதை அந்த நாற்காலியே உணர்த்தியது அவனுக்காக தான் காத்திருந்தனர். டக் டக் என்ற சத்தம் அமைதி மட்டும் நிரம்பி இருந்த இடத்தில் கேட்டது அதை உணர்ந்த ஒருவன் அவசரமாக கட்சி தலைவரை பார்த்தவன் “ஐயா! நாங்க யாரும் அவன்கிட்ட பேச முடியாது அதனால் நீங்களே அவன்கிட்ட முடிவு இதுதான்னு பேசிடுங்க. ஏன்னா? நீங்க சொன்னா மட்டும் தான் அவன் காதிலாவது வாங்குவான் இல்லைன்னா கட்சி கதி அதோ கதி தான்” பின்னே நடக்க போவதை முன்னே அவன் கூறி முடிக்க சரியாக அப்பொழுது தேக்கு மர கதவை திறந்து உள்ளே வந்தான் ஆறடி அழகன், ஆண்மைக்கு குறையாத கம்பீரம் நடை முதல் காற்றில் ஆடிய கேசம் வரை அவன் அதிகார தன்மையை உணர்த்தியது கண்ணாலே அங்கிருந்தவர்களை பார்வையிட்டவன் கம்பீரமாக தனக்கென நியமிக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்தான். “சிம்மா!” கட்சி தலைவர் அழைக்க அது காதில் விழாதது போல் எங்கோ பார்த்தவன் சிந்தனையை மீண்டும் கலைக்கும் விதமாக “வீரசிம்மா!” இப்பொழுது கணீர் என்று அழைக்க அதில் அவரை பார்த்தான். வீரசிம்மன் அந்த கட்சியின் இளைஞர் அணி தலைவர் மற்றும் இல்லாமல் எம்எல்ஏ வேறு. யாரும் அவனிடம் பேச பயப்படுவர் ஏனென்றால் இரண்டு வார்த்தை கேட்பான் மூன்றாவது வார்த்தை பிடிக்கவில்லை என்றால் முகத்திற்கு நேராகவே அவமானப்படுத்திவிட்டு செல்வான் ஆனால் கண்ணன் அவரை அப்படி சொல்ல முடியாது அதற்கு இரண்டு காரணம் இருந்தது ஒன்று அவர் கட்சி தலைவர் இன்னொன்று அவனை நன்கு புரிந்து கொண்ட தந்தை என்பதால் ஆமாம் கண்ணனின் மகன் வீரசிம்மன். வயது முப்பத்திரண்டு ஆகிறது இளம் வயது எம்எல்ஏவா என்றால் இல்லை கல்லூரி முடித்தது கட்சி கீழ் நிலையில் இருந்து வேலை செய்து தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறான். அதுவும் இல்லாமல் அவனுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் எந்த அளவு என்றால் பிள்ளையார் சதுர்த்தி என்றால் கூட வீட்டிற்கு ஒரு கொழுக்கட்டை பார்சல் அவனுக்கு வந்துவிடும் அந்த அளவு மக்களின் அன்பை சம்பாதித்து இருக்கிறான். அவன் அனுபவம் அதிகம் என்பதால் அவனை யாரும் குறை சொல்லி விட முடியாது அதான் தன் மகனிடம் ஒரு வேண்டுகோளை இல்லை கட்டளையை முன் வைக்கிறார் கண்ணன். “சொல்லுங்க தலைவரே””சிம்மா!” தயங்க “தயங்க வேண்டாம் எனக்கு வேலை நிறைய இருக்கு. இன்னைக்கு என் தொகுதி வாலிபால் விளையாட்டு நடக்குது. அங்கே நான் போகனும் எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க தலைவரே!””சரி! நம்ம கட்சி எம்எல்ஏ அதாவது மூன்று மாசத்துக்கு முன்னாடி இறந்து போனார் இல்லை பாலாஜி””தெரியும் கட்சிக்காக நிறைய உழைத்து இருக்காரு. அந்த தொகுதி மக்கள் கிட்ட நல்ல பெயரும் வாங்கி இருக்காரு அதான் இப்போ அவர் இல்லையே””அவர் இல்லை அதான் அவரோட இடத்தில் நாம இன்னொருத்தரை நிறுத்த போறோம்””யாரு தலைவரே””வேற யாரு அவரோட பொண்ணை தான்””அது சரியா வருமா தலைவரே!””சரியா வரனும் அதை நீ தான் சரி படுத்தனும்””என்ன நானா?””ஆமாம்! அவரோட பொண்ணு மேனகா அவளை நீ கல்யாணம் பண்ணா. அந்த தொகுதி உனக்கு சொந்தமாகிடும். மேனகா அங்கேயும் நீ இங்கேயும் இருந்தா நல்லா இருக்கும்””தலைவரே! நீங்க அந்த தொகுதியில் போட்டியிட அந்த பொண்ணை நிற்க வைங்க நான் அவளை ஜெய்க்க வைக்கிறேன் ஆனால் கல்யாணம் பண்ணிக்க முடியாது””நீ கல்யாணம் பண்ணா தான் நமக்கு இன்னும் ஓட்டு கிடைக்கும் நம்ம கட்சி பெயர் இன்னும் பத்து வருஷம் நிலைத்து நிற்கும்””அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்காமல் அவள் நின்னா ஜெயிக்க மாட்டாளா என்ன?””அங்கே வர தேர்தலில் நிற்க போறது பெரிய கை அவன் முன்னாடி மேனகா தூசி அதுவே நீ அங்கே நின்னா யாராலும் ஜெயிக்க முடியாது. உன் தொகுதியில் மேனகா நின்னா அவளுக்கு தான் ஓட்டு வரும் உன் தொகுதியும் உன் கையை விட்டு போகாது அதனால் தான் சொல்றேன் அவரோட பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ””தலைவரே! நீங்க என்ன வேணா சொல்லுங்க அதை நான் கண்டிப்பா செய்வேன் ஆனால் பொண்ணு விஷயம் வேணாம். இது எப்படி இருக்குன்னா பொண்ணை பேரம் பேசற மாதிரி இருக்கு. அதுவும் யாரு பாலாஜி அவரோட பொண்ணு இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். என்னை மன்னிச்சுடுங்க” முடிவாக அவர் சொன்னதை மறுத்துவிட்டு வீரசிம்மன் அங்கிருந்து சென்றான். அவன் இந்த பதிலை தான் சொல்வான் என்று கண்ணன் எதிர்பார்த்தார் பின்ன பெற்ற அவருக்கு தெரியாதா அவன் எப்படி என்று ஆனால் மேனகாவை இப்போ விட்டால் எதிர்கட்சி அவளை தன் பக்கம் இழுத்து கொள்வார்கள் அப்படி நடந்தால் கட்சிக்கு கெட்ட பெயர் அது மட்டும் இல்லாமல் அந்த தொகுதியும் கை விட்டு போகும் அதனை யோசித்து தான் வீரசிம்மனுக்கு அவளை திருமணம் செய்து வைக்க நினைத்தான். இப்படி நிர்ப்பந்தத்தில் வந்தாலாவது அவன் திருமணத்திற்கு ஒப்பு கொள்வான் என்று நினைத்தார் அது இப்பொழுது நடக்காமல் போனது. “தலைவரே! என்ன சிம்மன் இப்படி பேசிட்டு போய்ட்டாரு?” அங்கிருந்த ஒருவன் வினவ “நமக்கு இன்னும் ஒரு வாரம் நேரம் இருக்கு அதுக்குள்ள நான் வீரசிம்மனை சமாளிக்கிறேன். அதே சமயம் நீங்க பாலாஜி குடும்பத்தை போய் பார்ப்பதை நிறுத்திடாதீங்க அவங்களுக்கு தேவையான உதவியை செய்ங்க. அவங்க குடும்பம் நம்ம பார்வையிலே இருக்கனும்” கட்டளையாக கண்ணன் சொல்ல அங்கிருந்தவர்களும் சரி என்று தலை அசைத்து கூடியிருந்த கூட்டத்தை கலைத்தனர். ஆனால் கண்ணன் மட்டும் மன குழப்பத்திலே இருந்தார் எப்படி அவனிடம் சம்மதம் வாங்குவது என்று.
அதிகாரத்தின் அந்தப்பக்கம் காதல் 01
11
previous post