பகுதி – 27.
அன்று அவர்கள் அனைவருமே குமாரின் வீட்டுக்கு, குழலியின் வளைகாப்பு விஷயமாக பேச வந்திருந்தார்கள். அவளுக்கு ஒன்பதாம் மாதம் துவங்கி இருக்க, இன்னும் ஒரு வாரத்தில் பிரசவ நாள் கொடுக்கப் பட்டிருந்தது.
அவளது வளைகாப்பை மிகப்பெரிய அளவில் அவன் நடத்த நினைக்க, அவனைப் பெற்றவர்கள் அதைத் தடுத்தார்கள்.
“நிறை மாசமா இருக்கற பொண்ணு. அவளை ரொம்ப அலைக்க வேண்டாம். நம்ம வீட்டு அளவில் நெருங்கின சொந்தங்களை மட்டும் வைத்து நடத்திக்கலாமே குமார். இதுவே ஏழாவது மாசம்ன்னா நாங்க தடை சொல்லி இருக்கவே மாட்டோம்” அவனது தாய் சொல்ல குமாரின் முகத்தில் அதிருப்தி.
இதே பேச்சை குழலியின் வீட்டினர் சொல்லி இருந்தால் வானுக்கும் பூமிக்கும் குதித்து இருப்பான். ஆனால் சொன்னது தன்னை பெற்றவள் என்கையில் அவனும் என்னதான் செய்ய? தாயை முறைத்தவன் மறுப்பாகப் பார்த்து வைத்தான்.
“இல்லம்மா… நம்ம வீட்டு வாரிசு… எனக்கு பெருசா செய்தாகணும்” பிடிவாதம் பிடித்தான்.
“புள்ளத்தாச்சி பொண்ணு கஷ்டம் உனக்கு என்னடா தெரியும்? இப்போவே அவளுக்கு நின்னா, நடந்தால், உட்கார்ந்தால் அப்படி மூச்சு வாங்குது. இதில் அலைச்சல், கூட்டம், நிறைய நேரம் உட்காருவது எல்லாம் சேர்ந்து அன்னைக்கே வலி வந்தால் என்னடா செய்வ?” தாய் கேட்க அவனுக்குள் சின்ன பயம் முளைவிட்டது.
அவன் மனைவியைப் பார்க்க, “என்னங்க… எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. சும்மா ஒரு நாலு வளையலை போட்டுட்டு நான் என் வீட்டுக்கு இன்னைக்கே கூட கிளம்பிப் போறேன்” அவள் சொல்ல, அதற்கு மேலே பேசுவானா என்ன?
“இல்ல… இல்ல… நாளை மறுநாள் நல்லநாள் இருக்குன்னு சொல்றாங்களே, அன்னைக்கே வச்சுக்கலாம்” முதலுக்கே மோசமாகிவிடும் நிலை வர, வேகமாகச் சொன்னான். குழலியின் வீட்டினர் வாயைத் திறக்கவே இல்லை. உங்கள் முடிவுதான், எங்கள் முடிவு என அமர்ந்து கொண்டார்கள்.
மிகவும் நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமே அழைப்பு என்பதால், அவர்களுக்குப் பெரிதாக எந்த சிரமமும் இருக்கவில்லை. அவர்கள் வழக்கத்தில் வெள்ளி வளையல்தான் பிறந்த வீட்டில் இருந்து போடுவார்கள் என்பதால், அதிலும் குழப்பம் வரவில்லை.
குடும்பத்தில் பெரியவரைப் பிடித்து, என்னவெல்லாம் வாங்க வேண்டும் எனக் கேட்டு அனைத்தையும் ஒரே நாளில் வாங்கிவிட்டார்கள். கார்முகில் ஒரு பக்கம் பொருட்கள் வாங்கினால், உடை தெரிவு மற்ற விஷயங்களை சுமித்ரா கையில் எடுத்துக் கொண்டாள்.
அவளது அக்காவுக்கு செய்து பார்த்த அனுபவம் இருக்கவே, அவளுக்கு அதைச் செய்வது சுலபமாகக் கூட இருந்தது. வளைகாப்பு குமாரின் வீட்டில் என்பதால் உணவுக்கு அவர்களையே ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டார்கள். என்ன செலவாகிறதோ அதைத் தாங்களே கொடுத்துவிடுவதாகச் சொல்ல, அது அப்படி முடிந்தது.
எப்படியோ அந்த நாளும் வந்து சேர, வீடு முழுவதும் உறவினர்களால் நிரம்பி வழிந்தது. என்னதான் பார்த்துப் பார்த்து செய்தாலும், இறுதி நேரத்தில் விடுபட்ட பொருட்களை வாங்க கார்முகில் தான் அலைய வேண்டி இருந்தது.
அதியன் அவனுடனே இருக்க, லிஸ்ட் போட்டு அவனிடம் சிலவற்றை கொடுத்துவிட, அதையெல்லாம் மொத்தமாக அதியனே பார்த்துக் கொண்டான். இறுதியாக எல்லாம் தயாராக எடுத்து வைத்துவிட்டு குளிக்கலாம் என அவன் செல்ல, உடனடியாக அவனது அறைக்கதவு தட்டப் பட்டது.
உள்ளே வந்தவன், அடர் பச்சை நிறத்தில் மெல்லிய கரையிட்ட பட்டுடுத்தி தேவதையென நின்ற தன் மனைவியை அப்பொழுதுதான் நின்று ஒரு பார்வை பார்த்தான். அவளை அப்படிப் பார்த்தவனுக்கு மூச்சடைத்தது.
அவன் அப்படியே நின்றுவிட, மீண்டும் அறைக்கதவு தட்டப் பட்டது. “யோ…” தலைமுடியை பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது. அவன் நிலையைப் பார்த்த சுமித்ரா, வாய்பொத்தி சிரித்து வைத்தாள்.
“என் அவஸ்தை உனக்கு சிரிப்பா இருக்கா? நீயே கல்யாணத்துக்குப் பிறகு இன்னைக்குதான் புடவை கட்டி இருக்க, அதை நின்னு ரசிக்க விடறாங்களா?” சின்னக் குரலில் கடுகடுத்தான்.
அதே நேரம் மீண்டும் கதவு தட்டும் ஓசை கேட்கவே, “இதோ வர்றேன்…” என்றவாறு சுமித்ரா வேகமாகச் சென்று கதவைத் திறந்தாள். சற்று ஒதுங்கி நின்றிருந்த கார்முகிலுக்கோ, அந்த நேரம் அவளோடான சின்ன தனிமை வேண்டும்போல் இருந்தது.
“முகில் எங்கேம்மா?” அவனது பெரியம்மா அவளிடம் கேட்க,
“இதோ… இங்கேதான் இருக்காங்க… என்னங்க…” பின்னால் திரும்பி, கண்களால் அவனிடம் கெஞ்சினாள். அவன் தன்னுடன் சில நொடிகளாவது இருக்கப் பிரியப்படுவது புரிந்தவளுக்கும் வேற என்ன செய்வது எனத் தெரியாத நிலையே.
“என்ன பெரியம்மா?” என்றவாறு அறைக்கு வெளியே வந்தான்.
“தம்பி… கிழங்கு மஞ்சள் வைக்கணும்ப்பா… இது குழம்பு மஞ்சள், இதை வைக்க முடியாது” அவர் சொல்ல, அவனுக்கு தலை சுற்றிப் போனது.
“இதையெல்லாம் இப்போதான் கவனிப்பீங்களா? முதல்லேயே கவனிக்க மாட்டீங்களா? கிளம்பற நேரத்தில் வந்து இப்படி சொன்னா நானும் என்னதான் செய்யட்டும்?” கிளர்ந்த கோபத்தை, சுமித்ரா அவன் கையைப் பிடித்து அழுத்தவே கொஞ்சம் அடக்கினான்.
“சரி பெரியம்மா, நான் வாங்கிட்டு வர்றேன்” என்றவன் விலகிச் செல்ல, சுமித்ராவுக்கு ஒரு பக்கம் சிரிப்பும், மறு பக்கம் கவலையும் ஒருங்கே எழுந்தது.
அதைக் கேட்டு கார்முகில் முதலில் சென்று நின்றது அதியனின் கடைதான். “இப்போதான் முடிஞ்சது முகிலா… கோவில் பக்கத்தில் இருக்கும் கடையில் கிடைக்கும், நான் பார்க்கவா?” என்றவன் அங்கே செல்லப் போனான்.
“அது இருக்கட்டும்… நீ என்ன கிளம்பாமலே இருக்க?” என்றவன் அவனை முறைத்தான்.
“ஆராவும் குழந்தையும் வர்றாங்க மச்சான். இன்னைக்குன்னு பார்த்து கடைப்பையன் கழுத்தை அறுத்துட்டான். நீங்க முன்னாடி போங்க, நான் வண்டியில் பின்னாடியே வந்துடறேன்” அவன் சொல்ல, அவனை முறைத்துவிட்டு விலகிவிட்டான்.
அவனிடம் நின்று வாதாடிக் கொண்டிருக்க நேரம் இருக்கவில்லையே. “நான் வாங்கிட்டு வந்து தர்றேன்டா…” அதியன் அவனைத் தடுக்க, ‘நீ மூடு’ என்பதுபோல் கரத்தைக் காட்டிவிட்டு சென்றுவிட்டான்.
“நான் வந்துடுவேன் முகிலா…” அதியன் சொன்னதை அவன் கேட்டுக்கொண்டதாக கூட காட்டிக் கொள்ளவில்லை. அதியன் சொன்ன கடையைத் தேடி அவன் செல்ல, அங்கே அன்றைக்கு எனப் பார்த்து கடை பூட்டிக் கிடந்தது.
பிறகு பக்கத்தில் விசாரித்து, வேறு இடத்துக்குச் சென்று அதை வாங்கிக்கொண்டு வருவதற்குள் களைத்துப் போய்விட்டான். அதற்குள் வீட்டில் கார்முகிலைக் காணவில்லை, அவனால்தான் தாமதமாகிறது என பேசவே துவங்கி விட்டார்கள்.
சுமித்ரா அவனுக்கு அழைக்கவா? வேண்டாமா? என யோசிக்கையிலேயே வியர்வையில் தொப்பலாக நனைந்து அங்கே வந்து சேர்ந்தான்.
“என்னப்பா…” அவனது பெரியம்மா கேட்க துவங்கியவர், அவன் பார்த்த பார்வையில் வாயை மூடிக்கொண்டு அவன் கொடுத்ததை வாங்கிக் கொண்டு சென்றார்.
“முகி… நீங்க போய் குளிச்சுட்டு ட்ரஸ் மாத்திட்டு வாங்க” சுமித்ரா சொல்ல, அவன் குளிக்கப் போனான்.
அவன் பின்னால் செல்லச் சொல்லி மனம் உந்தினாலும், பொருட்களை எல்லாம் சரியாகப் பார்த்து வண்டியில் ஏற்ற வேண்டி இருக்கவே சுமித்ரா தேங்கினாள். அனைத்தையும் வேனில் ஏற்றத் துவங்க, அவளும் உதவி செய்தாள்.
முக்கியமானவற்றை எல்லாம் சுதா தங்களோடு வைத்துக் கொள்ளலாம் எனச் சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டாள். என்னதான் கார்முகில் அவசரமாக குளித்து கிளம்பினாலும் பதினைந்து நிமிடங்களை அது விழுங்கி இருந்தது.
அவன் வெளியே வருகையில் அனைவரும் வேனில் ஏறி இருக்க, இவன் வீட்டினர் பெரிய காரில் ஏறி இருந்தார்கள். ஓட்டுனர் இருக்கைக்கு அருகே மூர்த்தி அமர்ந்திருக்க, தன்னவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தான்.
‘ப்ளீஸ்…’ அவள் கண்களால் கெஞ்ச, “நேரமாகுது முகில்” மூர்த்தி அவசரப்படுத்தினார்.
‘ச்சே… கட்டுன பொண்டாட்டியை நிறுத்தி நிதானமா ரசிக்க கூட முடியலை’ உள்ளுக்குள் சலித்துக் கொண்டான். அங்கே குமாரின் வீட்டுக்குச் சென்ற பிறகும், அவனுக்கு நின்று நிதானிக்க நேரம் இருக்கவில்லை.
அங்கே உணவுக்கு அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தாலும், அனைத்தும் சரியான விதத்தில் வந்திருக்கிறதா? எனப் பார்க்க வேண்டிய வேலை அவனது ஆகிப் போனது. உள்ளே அவர்கள் அனைத்து சடங்கையும் துவங்க, இவனது முறை வந்தபொழுது இவன் அழைக்கப்பட்டான்.
தங்கைக்கு பன்னீர் தெளித்து, சந்தானம் பூசி, வளையல் போட்டு முடித்தவன் தன்னவளைத்தான் தேடினான். அங்கே இருந்து பெரியவர்கள் சொன்னதை சிரத்தையாக அவள் செய்து கொண்டிருக்க, இருவரின் பார்வையும் ஒரு நொடி உரசிக் கொண்டது.
குழலிக்கு அனைத்தும் முடிய, “அம்மாடி… அடுத்து உனக்குத்தான் ஒரு நல்லது நடக்கணும்… வா வந்து வளையல் போட்டுக்கோ” அவர்கள் சுமித்ராவை அழைக்க, அவளோ விழித்தாள். கண்கள் வேகமாக தன்னவனைத் தேட, அவன் அங்கே இருக்கவில்லை.
“போம்மா… போய் உட்கார்” சுதாவே சொல்லிவிட, அவள் அதற்கு மேலே மறுக்கவில்லை. அவளுடனே இருந்த ஆராதனாவும் இது நடப்பதுதான் எனச் சொல்ல சென்றாள்.
“அவரை வரச் சொல்லு ஆரு…” அவளிடம் சொல்லிவிட்டு சென்றாள். ஆராதனா கார்முகிலைத் தேடிச் செல்லப் போகையில் அங்கே வந்தான் அதியன்.
“அதியன்… உடனே முகில் அண்ணாவை கூப்பிடுங்க. சுமிக்கு சந்தனம் பூசறாங்கன்னு சொல்லுங்க” அவள் குரலில் அவசரம் தெரியவே அதியன் நண்பனை தேடி ஓடினான்.
கார்முகில் பின்னால் போடப்பட்டிருந்த பந்தலில், டேபிள் சேர் என அனைத்தையும் போட்டுக் கொண்டு இருந்தான்.
“முகிலா, நீ இங்கே என்னடா பண்ற? அங்கே சுமித்ரா அவங்களுக்கு சந்தனம் பூசி வளையல் போடப் போறாங்களாம், உன்னைக் கூப்பிட்டாங்க” அவன் சொல்ல, கார்முகில் அங்கே இருந்து விரைந்தான்.
அவன் சென்ற பொழுது, கன்னத்தில் கொஞ்சமாக சந்தனம் பூசி, கரத்தில் கொஞ்சமாக வளையல் போட்டுக்கொண்டு சுமித்ரா மனையில் அமர்ந்திருந்தாள். அதைப் பார்த்தவன் பார்த்தபடி நின்றுவிட்டான்.
அவள் முகத்தில் இருந்த சந்தனத்தை விட, அவள் நெற்றியில் இருந்த குங்குமம் அவன் கவனத்தை அதிகம் கவர்ந்தது. அவள் அணிந்திருந்த அந்த புடவையும், அவள் கரத்தில் இருந்த அடர் நிற கண்ணாடி வளையலுமாக அவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்குத் தெவிட்டவில்லை.
“மாப்ள… கொஞ்சம் அடக்கிவாசிடா… எல்லாரும் உன்னைத்தான் பார்க்கறாங்க” அதியன் அவன் காதுக்குள் கிசுகிசுக்க, தன் பார்வையை திருப்பிக் கொண்டான். ஆனாலும் அவளுடனே இருக்கச் சொல்லி மனம் கெஞ்ச, அது முடியாதே.
சுமித்ராவுமே அவனைப் பார்த்தவள், அவன் பார்வையை உணர்ந்து முகத்தை லேசாக திருப்பிக் கொண்டாள். ஆனாலும் முகம் மொத்தமாக சிவந்து போவதை அவளால் தடுக்கவே முடியவில்லை.
சுமித்ராவின் பெற்றவர்களும் அங்கே வந்திருக்க, மகளை இப்படிப் பார்க்கத் திகட்டவில்லை.
அதற்குள் அங்கே உணவு வகைகள் வந்து இறங்க, அடுத்து பந்தி கவனிப்பதில் பிசியாகிப் போனான். நின்று நிதானமாக தன்னவளை ரசிக்கக் கூட அவனால் முடியவில்லை. அப்பொழுது மட்டுமல்ல, குழலியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்த பிறகும் அவனால் முடியவில்லை.
உறவினர்கள் அனைவருமே மாலை காபிக்குப் பிறகே கிளம்பிச் செல்ல, அவனும் கொஞ்சம் வேலையைப் பார்க்க வெளியே சென்றுவிட்டான். வீட்டில் இருந்தாலும் தங்கள் அறைக்குள் முடங்க முடியாது என அவனுக்குத் தெரியுமே.
அப்படி இருக்கையில் வீட்டில் இருந்து தன் ஏக்கத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டாம் என நினைத்தே அவ்வாறு செய்தான். ஆனால் சுமித்ராவுக்கு தன் உடையை மாற்றவே பிடிக்கவில்லை.
தன்னை முழுதாக ரசிக்க முடியாத அவனது ஏக்க முகமே கண்முன் விரிய, அந்த நினைப்பையே கைவிட்டாள். மாலை காபிக்கு வருவானோ? என அவள் எதிர்பார்க்க, அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்கினான்.
‘சரி… எப்படியும் வீட்டுக்குத்தானே வருவார்…’ என அவள் மனதைத் தேற்றிக் கொண்டாள். அவள் உடை மாற்றாததை சுதாவும் குழலியும் கவனித்தாலும் அவளை எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
இரவு உணவு நேரம் நெருங்கவே, அவனுக்கு அழைக்க, “வந்துட்டே இருக்கேன்… பத்தே நிமிஷம்…” என்றவன் அவன் சொன்னது போலவே வந்து நின்றான்.
‘நாளே ஓடிப் போச்சு…’ என சலிப்பாக காரில் இருந்து இறங்கியவன், அவளைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்தான்.
“ஏலியன்…” அவன் குரலில் அப்படி ஒரு துள்ளல் வந்திருக்க, “ஷ்… எல்லாரும் இருக்காங்க” அடிக்குரலில் அவனிடம் சொன்னாள்.
“சாப்பிட வாப்பா…” தாய் அழைக்க,
“நீங்க சாப்பிடுங்கம்மா… நான் குளிச்சுட்டு கொஞ்ச நேரம் கழிச்சு சாப்ட்டுக்கறேன்” அவன் சொல்லிவிட்டு அறைக்குச் சென்றான். அவன் பின்னாலேயே எப்படிச் செல்வது? எனத் தெரியாமல் சுமித்ரா தடுமாறினாள்.
அதற்கு அவசியமே இல்லை என்பதுபோல், “சுமி…” என அறைக்குள் இருந்து அவன் அழைப்பது கேட்க, அவளால் மற்றவர்களை நிமிர்ந்தும் பார்க்க முடியவில்லை.
அங்கே உணவு மேஜையின் முன்னால் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்த சுதாவும், மூர்த்தியும் தங்கள் உணவில் கவனமாக இருப்பதுபோல் காட்டிக் கொண்டார்கள். ஆனால் குழலி ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்து வைக்க, அவளுக்கு ‘ஐயோ’ என்று இருந்தது.
‘போச்சு… இவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க?’ எண்ணியவள் அவன் மீண்டும் அழைக்கும் முன்பு தங்கள் அறைக்கு விரைந்தாள். அவள் உள்ளே நுழைந்த உடனே, கதவைப் பூட்டினான். பூட்டிய கதவின்மீதே அவளை சாய்த்து, அவள்மேல் அழுத்தமாக சாய்ந்து இருந்தான்.
“மு…” துவங்கியவளின் வார்த்தைகளை அவள் வாயில் கை வைத்து மூடி நிறுத்தினான்.
‘என்ன?’ என அவள் பார்வையாலேயே கேட்டு வைக்க, “ட்ரஸ் மாத்திக்கவே இல்லையா?” கிசுகிசுப்பாக கேட்டவன், பார்வையால் அவளை வருடினான்.
அவன் கரத்தை மெதுவாக விலக்கியவள், “யாரோ காலையில் என்னை முழுசா பார்க்க கூட முடியலைன்னு வருத்தப்பட்டாங்களே… அவங்களை நீங்க பார்த்தீங்க?” அவனிடம் கேட்டாள்.
“ஓ…” கண்களில் சுவாரசியமும் குறும்பும் போட்டி போட, அவளை விட்டு அப்படியே பின்னால் நகர்ந்து சென்றவன் படுக்கையில் அமர்ந்தான்.
‘இவர் என்ன செய்யறார்?’ என்பதுபோல் அவள் பார்த்திருக்க, அவனோ தலைமுதல் கால்வரை அங்குலம் அங்குலமாக அவளை ரசித்தான். தலை கலைந்து, அதில் சூடி இருந்த பூவும் வாடி இருந்தாலும் அந்த மல்லிகையின் மணம் இன்னும் மிச்சம் இருந்தது.
கண்மை கொஞ்சம் கலைந்திருக்க, பூசி இருந்த உதட்டுச் சாயம் முழுதாக கலைந்தும் கலையாத நிலையில் நின்றவளை மொத்தமாக ரசித்தான். நிஜத்தில் என்னவோ அன்றைக்குத்தான் அவளைப் பார்ப்பவன் போன்று அவளைப் பார்வையால் பருகினான்.
அவள் தன் விரிந்த கூந்தலை தோளில் வழிய விட்டிருக்க, கழுத்தில் கிடந்த பொன் தாலியும், குட்டி செயினும்… அவளது தேகத்தில் அவன் பார்வை நழுவியது. கழுத்தில் இருந்து இறங்கிய பார்வை, அவள் தேகத்தில் நிலைக்க, அத்தனை நேரமாக அவனை நேர்ப் பார்வை பார்த்திருந்தவள், வேகமாக பார்வையை திருப்பிக் கொண்டாள்.
முகத்தையும் கொஞ்சம் பக்கவாட்டாக திருப்பிக் கொண்டு, இதழ் கடித்து தன் உணர்வுகளை அடக்கினாள். அவன் தன்னை விடாமல் ரசிக்கிறான் என்னும் நினைப்பே அவளை என்னென்னவோ செய்தது.
சில பல நிமிடங்கள் கடந்து அவனை கொஞ்சமாக விழி திருப்பிப் பார்க்க, அவன் பார்வை இப்பொழுது கொஞ்சமாகத் தெரிந்த அவளது வெற்றிடையில் நிலைத்து இருந்தது. தன் புடவையைக் கொண்டு, இடையை சரிசெய்துகொள்ளச் சொல்லி மனம் உந்தித் தள்ளியது.
ஆனால் தன்னை ரசிப்பவன் தன்னவன் என்கையில் ‘அவனிடமிருந்து அதை மறைத்து அவள் என்ன சாதித்துக் கொள்ள’ என்ற எண்ணம் எழ அப்படியே நின்றாள்.
அவன் பார்வை இப்பொழுது இன்னும் இறங்க, அவன் பார்வையின் தீவிரத்தில் அதற்கு மேலே அவளால் அங்கே நிற்க முடியவில்லை. “முகி…” என்றவள் அவனை நோக்கி ஓடிச் செல்ல, அவளை இழுத்து அணைத்துக் கொண்டு அப்படியே படுக்கையில் சரிந்தான்.
அவளை முழுதாக தன்மேல் போட்டுக் கொள்ள, “என்ன பார்வை இது? இப்படித்தான் பார்ப்பாங்களா?” அவனைப் போலியாக அடித்தாள்.
“இன்னும் முழுசா ரசிச்சு முடிக்கவே இல்லையே. அதையெல்லாம் விட… இதெல்லாம் இல்லாமல் ரசிக்கத்தான் மனசு கிடந்தது தவிக்குது” என்றவன் பார்வையால் அவள் ஆடைகளைச் சுட்டிக் காட்ட, மொத்தமாக சிவந்து போனாள்.
“ஏய்… ச்சீ… நீங்க ரொம்ப மோசம்…” தன் முகத்தை அவன் நெஞ்சில் புதைத்து தன் வெட்கத்தை மறைத்தாள்.
“இன்னும் நான் மோசமாகவே இல்லையே… அன்னைக்கு சொன்னதை எல்லாம் நடத்திக்க ஆசையா இருக்கு. உனக்கு ஓகேயா?” சின்னக் குரலில், கிசுகிசுப்பாக கேட்டு, அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்த முயன்றான்.
அதை அனுமதிக்காதவளோ, “ஐயாவுக்கு எல்லாம் சும்மா வாய் ஜாலம் தான்…” அவள் சொல்ல, அதற்கு மேலே அவன் சும்மா இருப்பானா என்ன?
அவளை பட்டென படுக்கையில் சரித்தவன், அவள்மேல் இருந்தான். அத்தனை நெருக்கத்தில் மொத்தமாக அவளை உரசிக்கொண்டு, நெற்றி முட்டி, மூக்கை உரசி, இதழை தன் மீசை ரோமம் கொண்டு உரசி அவளுக்குள் நெருப்பை மூட்டினான்.
‘ஹம்..’ அவள் உணர்ச்சிப் பெருக்கில் முனக, அவள் பின்னந்தலையைத் தாங்கி, அவள் இதழை தன் இதழால் உரசி உரசியே அவளை கொந்தளிக்கச் செய்தான்.
“முகி… என்ன பண்றீங்க?” அவன் முழுதாக முத்தமிட்டுக் கொண்டாடினால் கூட இந்த உணர்வுப் போராட்டம் இருக்காதோ என்னவோ. ஆனால் அவனது இந்த உரசல்… சின்னதாக முத்தமிட்டு, இதழை இதழால் சின்னதாக கவ்வி இழுத்து அவன் விளையாட அவளால் முடியவே இல்லை.
அதற்கு மேலே தாங்க முடியாமல், அவன் கன்னம் தாங்கி, அவன் இதழ்களை மொத்தமாக அவள் கவ்விக் கொண்டாள். அவன் கீழுதட்டைக் கடித்து, மேலுதட்டை சுவைத்து, அவன் மீசை முடியை கவ்வி இழுத்து என அவள் போராட, அவளுக்கு தன்னை விட்டுக் கொடுத்தான்.
அவள் சற்று சோர்ந்து விலகப் போன அந்த நொடி, அவள் இதழ்களை கவ்விக் கொண்டவன், தன் இதழ்களுக்குள் மொத்தமாக இழுத்துக் கொண்டான். ஆழமான அழுத்தமான முத்தம்… அவள் இதழ்களுக்குள் புகுந்து, அவள் இதழ் தேனைப் பருகி… மொத்தமாக அவள் இதழ்களைக் கொள்ளையிட்டான்.
முத்தங்களுக்கு இடையே அவன் கரங்கள் இரண்டும் அத்தனை வேகமாக அவள் மேனியில் தன் தேடலைத் துவங்க, அவள் தேகத்தில் நெருப்பு பற்றிக் கொண்ட உணர்வு. அவளது ரகசியங்களைப் பொக்கிஷங்களை தெரிந்து கொள்ளும் வேட்கையும், வேகமும் அவனிடம் கொட்டிக் கிடக்க, அவளைக் கொண்டாடினான்.
தன் தடைகள் கடந்து, கரங்களில் செய்கையை இதழ்கள் எடுத்துக் கொள்ள, அவள் இதழ்களைக் கொள்ளையிட்டு முடித்தவன், அவள் கன்னம் தீண்டி, கழுத்தில் இறங்கி, தேகத்தில் நிலைக்க அவன் கொடுத்த உணர்வுகளின் கனம் தாளாமல் அவள் தேகம் நடுங்கியது.
அவள் நடுக்கம் உணர்ந்து, அவளை முத்தமிட்டு சாமாதானம் செய்து, அவள் தேகம் முழுக்க அவன் முத்தங்களால் அர்ச்சிக்க, கொஞ்சம் தெளிந்தாள். அவன் உணர்வுகள் அவளைத் தாக்க, ‘எப்படி என்னால் முடியும்?’ என்ற எண்ணம் எழ, பார்வையால் அவனிடம் கேட்டாள்.
அவனோ தன்னை அவளுக்கு உணர்த்த, சற்று நடுங்கித்தான் போனாள். “ம்ஹும்… முகி… வேணா…” அவள் சிறு நடுக்கத்தோடு மறுக்க, மெல்லியதாக சிரித்து வைத்தான்.
அதைப் பார்த்தவள், “சிரிக்காதீங்க… நிஜமாவே எனக்கு பயமா இருக்கு” அவள் சொல்ல, அவளை முத்தமிட்டு சமாதானம் செய்தான்.
“என்னால் இதுக்கு மேலே முடியாதே…” அவளை அத்தனை பயம் கொள்ளச் செய்து எதையும் சாதித்துக்கொள்ள அவனால் முடியுமா என்ன? ஆனாலும் தன் உணர்வுகள் கொந்தளித்துக் கிடக்கையில் அவனால் விலகவும் முடியவில்லை.
அவளுக்குமே அதை முடிக்காமல் விலகிக் கொள்ள முடியும் என்று எல்லாம் தோன்றவில்லை. கொஞ்சம் பயத்துடனே அவள் அனுமதிவழங்க, அவன் அவளுக்கு நெருக்கமாக மாற, நிஜத்தில் அலறினாள்.
அவள் அலறியதில் அவனால் அதற்கு மேலே முன்னேற முடியாமல் போக, வேகமாக அவளை விட்டு விலகினான்.
“ஆப்பிரிக்கா க*த… எதுக்கு இவ்வளவு…” அடுத்தடுத்து அவள் சொன்ன வார்த்தைகளை கேட்டு வேகமாக அவள் வாயை தன் இதழ்களால் மூடினான்.
“ஏலியன்… என்ன இப்படியெல்லாம் பேசற?” அவள் சொன்னவிதத்தில் அவனுக்கே ஒரு மாதிரி கூச்சமாகிப் போக, அவள் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான்.
“வேற என்ன செய்யச் சொல்றீங்க? இது எப்படி ***” என அவள் நடுக்கமாக கேட்டு வைக்க, அந்த நிலையிலும் கடகடவென சிரித்துவிட்டான்.
அவன் அப்படி சிரித்துவைக்க, இப்பொழுது அவன் செய்த வேலையை தான் செய்தாள். அதுதான்… அவன் இதழ்களை தன் இதழ்களால் மூடினாள். அவளை முத்தமிட்டு சமாதானம் செய்தவன், மீண்டும் முயல அதுவும் தோல்வியையே தழுவியது.
அவள் படும் துன்பத்தைக் காண முடியாமல் அவன் அதற்கு மேலே அவளைக் கட்டாயப்படுத்தவில்லை. “சரி… நாம ரொம்ப ஃபோர்ஸ் பண்ணிக்க வேண்டாம்… பிறகு பார்க்கலாம்” அவன் சொல்ல, அவள் அவன் முகத்தைத்தான் பார்த்தாள்.
“இல்ல பரவாயில்லை… நான் தாங்கிப்பேன்…” அவனை ஏமாற்ற அவளால் முடியவில்லை. அவளைப் பார்த்து மென்னகை புரிந்தவன், “எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை… நீ வா… குளிச்சுட்டு சாப்பிடப் போகலாம்” என்றான்.
அப்படியும் மேலும் இருமுறை முயன்று, குளிக்கையிலும் முயன்று, சாப்பிட்டுவிட்டு வந்த பிறகும் அவனை அவள் நெருங்க முயல, பிடிவாதமாக அவளைத் தடுத்தான்.
“கிணற்று தண்ணியை ஆற்று வெள்ளமா அடிச்சுட்டு போகப் போகுது? நாம பிறகு பார்த்துக்கலாம்” அவன் அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டு சொன்னான்.
“அப்போ மட்டும் என்ன வித்தியாசம் வந்துடுமாம்? இதே…” அவளை மேலே பேச விடாமல் அவள் வாயைக் கடித்து வைத்தான்.
“ஸ்… ஆ…” அவள் வலியில் அலற,
“என்னமா பேசற நீ? எனக்கு வெட்கமா வருது. கம்முன்னு இரு. இப்போ என்ன கெட்டுப் போய்டுச்சு… ரெண்டு பேரும்… திருப்தி ஆயிட்டோம் தானே… விடு…” என்றவன் அவளைப் பார்த்து கண்ணடிக்க, இப்பொழுது அவள் தன் வாயோடு சேர்த்து கண்களையும் மூடிக் கொண்டாள்.
‘அதற்கு’ அவன் என்னவெல்லாம் செய்தான் என அவளுக்குத்தானே தெரியும். “நீங்க ரொம்ப மோசம்…” அவன் காதுக்குள் முனகினாள். தேகம் மொத்தமும் சிவந்து, அவன் செய்கையால் சிலிர்த்துக் கிடக்க, அவளும் வேறு என்னதான் சொல்ல?
“தேங்க்ஸ்…” அவன் தேகம் சிரிப்பில் அதிரச் சொல்ல, அவன் நெஞ்சில் படபடவென போட்டு அடித்தாள். அப்படியே அவனை கட்டிக்கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.
“முகி… இது… இப்படியே…” அவள் கேட்க வருவது புரிய, அவன் இன்னும் சிரிக்க, “போங்க நீங்க…” என்றவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள். அவளைப் பின்னால் இருந்து அவன் அணைத்துக் கொள்ள, இருவரும் இமைகளை மூடிக் கொண்டார்கள்.
இருவரின் மனதுக்குள்ளும் ஒரு அமைதியும், சிறு தவிப்பும் கலந்தே கிடந்தது.