Home Antiheroதளிர் – 58

தளிர் 58

“பாஸ், இனி நான் உங்களை அப்படித்தான் கூப்பிடப் போறேன்.” என்ற நரேனை முறைத்த விக்ரம், “வேலை முடிஞ்சதா, இல்லையா?” எனக் கடுமையாகக் கேட்க,

“எஸ் பாஸ், இங்க பாருங்க…” எனத் தன் கையில் இருந்த போனை காட்ட, “ம்ம்…” என்றவன், “அதை என்னோட பெர்சனல் மெயிலுக்கு அனுப்பிட்டு, பென் ட்ரைவ்ல காப்பி பண்ணிடு. மறக்காம உன் பொண்டாட்டிக்கும் அனுப்பிட்டு, போன்ல அதை டெலிட் செஞ்சிடு.” என்றவன், நரேனின் அதிர்ச்சி பார்வையை சில நொடிகள் உள்வாங்கி பிறகு, “சரியா?” என்றான் முக்கியமாக.

“பாஸ், உஷாவுக்கு எதுக்கு…?” என அதே அதிர்ச்சியுடன் கேட்க,

“ம்ம் சும்மா இருக்குற மூளைதான் கண்டதையும் யோசிக்கும். உன் பொண்டாட்டி இப்போ அப்படித்தான் இருக்கா. அவளுக்கு அனுப்பு, என்ன செய்றானு பார்ப்போம். நம்மக்கிட்ட வர்றாளா இல்லை, போலிஸ்கிட்ட போறாளானு…” என கண்ணைச் சிமிட்ட,

“பாஸ் எனக்கு இருக்குறது ஒரே பொண்டாட்டி. இன்னும் முழுசா அவக்கூட வாழாம, கன்னி கழியாம இருக்கேன். நீங்க செய்றது எல்லாம் பார்க்கும் போது, கடைசி வரை நான் கன்னி கழியாம, கன்னிப் பையனாவே போய் சேர்ந்துடுவேன் போலயே…” என பாவமாக கேட்க,

“டேய், உன் ஃபீலிங்க்ஸை இழுத்து மூடிட்டு போய் வேலையைப் பாரு. என்னவோ அவனவன் ஏழு பொண்டாட்டி வச்சு, ஏழு தடவ கன்னி கழிச்ச மாதிரி…” என விக்ரம் கடுப்பில் கத்த,

“ஐ க்னோ யுவர் ஃபீலிங்க்ஸ் பாஸ். பட் நீங்க கன்னி கழியலைனாலும் இப்போ ஒரு குழந்தைக்கு அப்பா.” என்றவனை எரிச்சலாக முறைத்த விக்ரம், தன் கையில் வைத்திருந்த கேஸ் கட்டை தூக்கி நரேன் மேல் எறிந்தான்.

“ஓகே ஓகே பாஸ், லீவிட்…” என சரண்டர் போல் தன் கைகளைத் தூக்கியவன், தன் விளையாட்டுத் தனத்தை விட்டுவிட்டு, “பாஸ், நீங்க அந்த வீடியோ பார்க்கலயா? இதை ஏன் அவளுக்கு அனுப்ப சொல்றீங்க? உஷா நம்மக்கிட்ட வரவே மாட்டா. அவளுக்கு இந்த கேஸ்ல நம்ம மேல நம்பிக்கையே வராது.

கண்டிப்பா லூசுத்தனமா ஏதாச்சும் வில்லங்கம் பண்ணி வைப்பா. அப்புறம் அவ பின்னாடி நாம ஓடணும். இது தேவையா, சொல்லுங்க? பட், நீங்க சொல்றதும் சரிதான். அவளை சும்மாவே இருக்கவிட்டா இப்படித்தான் கிறுக்குத்தனம் செய்வா. அதுக்கு இப்படி இன்வெஸ்டிகேட் பண்றேன்னு லூசுத்தனம் பண்ணாக்கூட ஓகேதான்.” என பெருமூச்சு விட,

“டேய்… டேய்…” என சிரித்த விக்ரம், “என்னடா இது, கிறுக்குத்தனம், லூசுத்தனம்னு மொத்தத்துல அவளை மென்டல்னே முடிவு பண்ணிட்டியா?” என்று மேலும் சிரித்தவன், “நல்ல பொண்ணுடா அவ, உன்னோட கிறுக்குத் தனத்தால தான் இப்போ தனியா இருக்கா. அவளை கொஞ்சம் உன் கண்காணிப்பிலேயே வச்சுக்கோ. இனி நம்மளை சார்ந்த யாருக்கும் எதுவும் ஆகிடக்கூடாது.” என்றவனின் குரலில் இருந்த இறுக்கத்தில், நரேனும் தன் விளையாட்டுத் தனத்தை மொத்தமாக விட்டிருந்தான்.

ஆனாலும், “இப்போ இதை மட்டும் வச்சு கேஸ் போட்டா என்னாகும் பாஸ்? அந்த விக்கியையும் ஸ்வாதியையும் ரிமான்ட் பண்ணி, உண்டு இல்லைனு ஆக்கிடலாம் இல்ல…” என்றவனை முறைத்தான் விக்ரம்.

“ஒய் பாஸ் இப்படி முறைச்சீங்…” எனவும், “டேய் முதல்ல இந்த பாஸை விட்டுத் தொலை, அது ஏதோ கொள்ளக்கூட்டத் தலைவனைக் கூப்பிடுற போல இருக்கு.” எனக் கடுப்பாகச் சொல்லவும்,

“நோ பாஸ், இதுதான் எனக்கு கம்ஃபர்டபிளா இருக்கு. இந்த சீனியர் சீனியர்ங்கிறது ஏதோ நம்ம ரெண்டு பேருக்கும் இடைல, ப்ரேக் போட்ட மாதிரி ஃபீலாகுது பாஸ். சோ, நான் உங்களை பாஸ்ன்னே கூப்பிடுறேன்.” என நரேன் பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்க, விக்ரமின் நினைவில் ஒரு பெண் குரல், ‘லவ் யூ சீனியர்!’ என்ற வார்த்தைகள் தொடர்ந்து வந்து விழுந்த வண்ணம் இருக்க, அவன் எண்ணங்கள் அவளை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

சட்டென்று தலையை உலுக்கி, “ஷப்பா! அவளை நினைச்சாலே எனக்கு எக்குத்தப்பா பிபி எகிறும்.” என நரேனுக்குத் தெரியாமல் புலம்பியவன், “அதுவும் சரிதான், நீ இப்படியே கூப்பிடு. இதுவும் ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கு.” என்றவனை, கிண்டலாகப் பார்த்தான் நரேன்.

‘என்ன?’ என பார்வையால் விக்ரம் வினவ,

“ம்ச்! பாஸ், இப்போ நாம அடுத்து என்ன பண்ண போறோம்? நிசாவை இங்க கொண்டு வந்துடலாம். அவ எங்க இருந்தாலும் சேஃப் கிடையாது. அந்த விக்கி இன்னும் என்ன செய்வான்னோனு பயந்துட்டும் இருக்க முடியாது.” என சீரியசாக சொல்ல,

“ம்ம்…” என்று தன் தாடையைத் தடவியவன், பின் ஒரு புன்சிரிப்புடன், “பார்த்துக்கலாம் விடு, உன் தங்கச்சி நான் கூப்பிட்டதும் உடனே ஓடி வந்துடுவாளா என்ன? அவளா வர்ற மாதிரி ஒரு ப்ளான் இருக்கு. அதுவரைக்கும் நீ இதை யாருகிட்டயும் சொல்லாத, முக்கியமா அம்மாக்கிட்ட. அப்புறம் என்மேல இருக்குற கோபத்துல, என்னை விட்டுட்டு உன்னைத்தான் குடைவாங்க.” என விக்ரம் கிண்டாலாகச் சொல்ல,

“என்ன ப்ளான் பாஸ்? நிசாவை மறுபடியும் டார்ச்சர் செய்ய மாட்டீங்கள்ள…” என்ற நரேனிடம்,

“டேய்…!” எனப் பல்லைக் கடித்த விக்ரம், “என்னைப் பார்த்தா உங்களுக்கெல்லாம் எப்படி தெரியுது? இடியட், கெட் லாஸ்ட்!” எனக் கத்த,

“இப்போ ஏன் இவ்ளோ டென்சன்? என்ன ப்ளான்னு தெரிஞ்சா நானும் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்.” என்றவனை விக்ரம் மீண்டும் முறைக்கவும், “சரி விடுங்க, வழக்கம் போல நான் உங்களை நம்பித் தொலைக்கிறேன்.” என,

“நரேன்…” என விக்ரம் எரிச்சலில் கத்த,

“ஓகே ஓகே கூல் பாஸ்… உங்களை நான் நம்புறேன், நான் இப்போ கிளம்புறேன்.” என நரேன் சிரித்துக் கொண்டே வெளியேறிவிட, ‘ஷப்பா!’ எனத் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் விக்ரம்.

***

லண்டனில்,

“விக்கி என்னாச்சு, ஏன் ரெண்டு நாளா ரெஸ்ட் லெஸ்ஸா இருக்க, எனி ப்ராப்ளம்?” என்ற ஸ்வாதியிடம், “நத்திங் பேபி, நெக்ஸ்ட் என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்.” என்றான் விக்னேஷ்.

“புரியல விக்கி…” என்றவளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டியவன், “அங்க எல்லாரும் ரொம்ப நிம்மதியா இருக்குறதா ஒரு பட்சி சொல்லுது ஸ்வீட்டி. அவங்களை எப்படி நிம்மதியா இருக்க விட முடியும், சொல்லு? அதுதான் என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்.” என்றவன் திடீரென, “நம்ம மொத்தப் பிரச்சனைக்கும் காரணமான அந்த நிசாவை, பேசாம போட்டுட்டா என்ன? எல்லாம் சால்வ் ஆகிடும். எல்லா பிரச்சனையும் சால்வ் ஆகிடும். உனக்கும் நிம்மதி, எனக்கும் நிம்மதி.” என சட்டென்று ஆக்ரோசமானவனைப் பார்த்து, மறுத்து வேகமாக தலையசைத்தாள் ஸ்வாதி.

“நோ விக்கி… நோ… அவளை அப்படியெல்லாம் சாகவிடக் கூடாது. உன்னை, என்னை நிம்மதியா வாழ விடாம ஊரை விட்டு, அந்த நாட்டை விட்டு, நம்ம அடையாளத்தை தொலைச்சு, ஒளிஞ்சு வாழ வச்ச அவளை அப்படியே கொல்லக்கூடாது.

ஒவ்வொரு நிமிசமும் ஏன் இந்த வாழ்க்கையை வாழ்றோம்னு கத்தி கதறிதான் அவ சாகணும். எனக்கு நீ எதாவது செய்யணும்னு ஆசைப்பட்டா இதை செய். முதல்ல அந்த குழந்தை, அப்புறம் அந்த நரேன் அண்ட் உஷா, அடுத்து தி க்ரேட் முட்டாள் லாயர் விக்ரம். இவங்க நாலு பேரையும் கொன்னுட்டாலே போதும். அதிலும் அந்த விக்ரம் சாகுறதை அந்த நிஷா கண்ணால பார்க்கணும். அந்த சாவை நினைச்சு அவ துடிச்சு துடிச்சு கொஞ்சம் கொஞ்சமா மூளைக் குழம்பி போய், ஒன்னு பைத்தியமா அலையணும். இல்ல, சூசைட் பண்ணிக்கணும். ஹ்ம்ம்… இதுதான் நடக்கணும் விக்கி. இது மட்டும் தான் நடக்கணும்.” என சாதாரணமாக ஆரம்பித்து, ஆங்காரமாகக் கத்த ஆரம்பித்தாள்.

அவளை இறுக்கி அணைத்து, “ஓகே ஓகே பேபி… பண்ணிடலாம், நீ கேட்டு நான் பண்ணாம இருப்பேனா? பண்ணிடலாம் பேபி. கூல்… கூல்…” என அவளை ஆறுதல் படுத்தியபடியே, தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டவனுக்கு அடுத்து என்ன செய்வது என யோசனை ஓடியது.

அடுத்த சில நொடிகளில் அதற்கான திட்டமும் கிடைத்துவிட, அவன் முகத்தில் வெற்றிப் புன்னகை அகங்காரமாக வந்தமர்ந்தது.

குருவிக் குஞ்சாய் தனக்குள் அடங்கி இருந்தவளைப் பார்த்தவனுக்கு, அவனுக்காக அவள் செய்த ஒவ்வொன்றும் மின்னலாக வந்து போக, தன் மேல் வைத்திருக்கும் இந்த பைத்தியக்காரத் தனமானக் காதலுக்கு, அவன் என்ன செய்தாலும் குறைவுதான். சாகக் கிடந்த தன்னைக் காப்பாற்றி, உயிர் கொடுத்து, புது வாழ்க்கையைத் தனக்கு பரிசளித்திருப்பவளுக்கு அவன் என்ன செய்தாலும் அது குறைவுதான்.

அவளின் இந்த எல்லையில்லா காதலில் கரைந்து, அப்படியே காணாமல் போய்விட தோன்றியது அவனுக்கு. இப்படியான காதலை கொண்டாடாமல் விட்டால் அவன் என்ன காதலன், அல்ல கணவன். இறுக்கியவனின் அணைப்பில் வித்தியாசத்தை உணர்ந்தவள் தலை தூக்கி அவனைப் பார்க்க, அதற்காகவே காத்திருந்ததைப் போல கண்ணைச் சிமிட்டியவன், அடுத்த நொடி அவள் இதழ்களை வன்மையாக சிறை செய்திருந்தான்.

***

“நிஷ், நீ ஹேண்டில் பண்ணிப்ப தானே? நானும் ருக்குவும் டூ டேஸ் இருக்கமாட்டோம். செக்கியூரிட்டி எப்பவும் இங்கையே இருப்பார். ஈவ்னிங் ருக்குவோட அம்மா வந்துடுவாங்க, உன்னால மேனேஜ் செய்துக்க முடியும் தானே?” என மீண்டும் மீண்டும் கேட்ட சாருவைப் பார்த்து முறைத்தாள் நிஷா.

“ஓய்… எத்தன தடவைதான் கேட்ப, நானும் பதில் சொல்ல? கிளம்பு… கிளம்பு… நான் சமாளிச்சுக்குவேன். நான் வீட்டை விட்டு வெளியவே போகல, சரிதானே கிளம்பு.” எனச் சிரிக்க,

“ஓகே டியர், இது போதும் எனக்கு. இந்த வாலுங்க ரெண்டையும் இழுத்துக்கிட்டு பார்க் போறேன், வாக்கிங் போறேன்னு கிளம்பிடாத, அப்புறம் நான் காண்டாகிடுவேன்.” என்றபடியே லக்கேஜை காரில் வைத்த சாரு, மூவரிடமும் விடைபெற்று கிளம்பியிருந்தாள்.

சாரு அங்குள்ள மலைக் கிராமங்களில் மாதத்தில் இரண்டு நாட்கள் வழக்கமாக கேம்ப் நடத்துவாள். அதற்காகத்தான் இந்த பயணம். நிசாவுக்கும் விருப்பம் தான், ஆனால் அவளின் பாதுகாப்பு கருதி வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் சாரு. சொல்ல வைத்தான் விக்ரம்.

அதனால் குழந்தைகள் இருவரையும் நிசாவிடம் விட்டுவிட்டு சாரு மட்டும் கிளம்பிவிட்டாள்.

உண்மையில் இந்த தனிமை அவளுக்கும் தேவைப் பட்டதுதான். இந்த நான்கு மாதங்களாக வேலை வேலை என ஓடிக்கொண்டே இருந்தாள். வேலைக்காகத் தான் இந்த ஓட்டம் என்றால், இல்லையென்று அவளுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தெரியும். சில கசப்பான நினைவுகளை தன் மனதில், மூளையில் இருந்து மொத்தமாக வெளியேத் தள்ள வேண்டும் என்றுதான் இந்த ஓட்டம். எதை மறக்க இந்த ஓட்டம் என்று சாரு கூட கேட்டுவிட்டாள். பதில் தெரிந்த கேள்விக்கு என்ன பதிலை சொல்ல? ஒரு சிரிப்புடன் கடந்துவிடுவாள்.

குழந்தைகளுக்குத் தேவையானதை செய்து, இருவரையும் விளையாட விட்டுவிட்டு தனக்கான உலகத்துக்குள் சென்றுவிட்டாள். ஆம், அவளும் அவனுமாக ஒரு உலகம். அதில் சோகம், அழுகை, துரோகம், கோபம், சண்டை என எதுவும் இல்லை.

கண்களை மூடி அந்த கனவுலகை ஆழந்து அனுபவித்தாள். அதில் அவளை மட்டுமே விரும்பும் ஒருவன், அவளுக்காகவே வாழும் ஒருவன் என எல்லாமுமாக இருந்தான் அவன். எண்ணங்களின் ஓட்டத்தில் அவள் முகத்திலும் அழகான புன்னகை. இவை எதுவும் நிகழ்காலத்தில் நடக்காது என்று அவளுக்கு உறுதியாகத் தெரியும். அதனால்தான் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

கானலாகிப் போகும் இந்த நினைவுகள் தான் அவளை கொஞ்சமேனும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இப்போது மட்டுமல்ல, எப்போதும்!

திடீரென கேட்ட குழந்தைகளின் சத்தத்தில் தன் நினைவுகளில் இருந்து மீண்டவள், தனக்கு முன் நின்றிருந்தவனைப் பார்த்து அதிர்ச்சியில் பட்டென்று எழுந்து நிற்க, எதிரில் இருந்தவனோ, “ரொம்ப சந்தோசமா இருக்க போல?” என நக்கலாக அவளைப் பார்த்துக் கேட்டபடியே, சாவகாசமாக குழந்தையைத் தூக்கிகொண்டு வெளியில் நடந்தான்.

***

அன்று மிகவும் களைப்பாக வந்து தன் இடத்தில் அமர்ந்தாள் உஷா. என்ன வாழ்க்கைடா இது எனதான் தோன்றியது. வீம்பிற்கென வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டவளை என்ன சொல்ல? வாழ்க்கையின் மேல் பிடிப்பில்லாமலே சுத்திக் கொண்டிருந்தவளுக்கு, இந்த வேலையும் அப்படி ஒன்றும் பிடித்தத்தைக் கொடுக்கவில்லை.

எப்போதும் மைக்கும் கையுமாக வெளியில் சுற்றுவது ஏனோ அவளுக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்தது. தன் பிடிவாதத்தை விடுத்து நரேனிடம் சென்று விடலாமா என்று கூட, சில நாட்கள் யோசித்திருக்கிறாள். ஆனால் அவளின் குற்றவுணர்ச்சி அதை செய்யவிடவில்லை. இப்படியே ஏனோ தானோவென போய் கொண்டிருக்கும் போதுதான், ஒரு முக்கியப் புள்ளியின் கெஸ்ட் ஹவுசில் பெண்களைக் கடத்தி வைத்திருப்பதாக தகவல் வர, யாருக்கும் சொல்லாமல் சிஐடி போல் அங்கு சென்று, அவர்களிடம் மாட்டி, பிரச்சனை பெரிதாகும் முன் மனோகர் மூலம் தப்பித்து வந்திருந்தாள்.

‘ஷப்பா என்னடா இது!’ என மனதுக்குள் புலம்பியபடியே தண்ணீரைக் குடிக்க, மெசேஜ் வந்ததற்கான சத்தம் அவள் மொபைலில் கேட்க, அன்நோன் நம்பர் எனக் காட்ட, யோசனையுடன் எடுத்து அதை ஓப்பன் செய்தவளுக்கு விழிகள் இரண்டும் தெறித்துவிடும் அளவிற்கு விரிந்து போனது.

விரிந்த விழிகளில் கோபம் அனலாய் பறக்க, “டேமிட்! எப்படி ஏமாத்திருக்கா…?” எனக் கத்த, பக்கத்தில் இருந்த அனைவரும் அவளை வித்தியாசமாகப் பார்க்க, “சாரி…” என்றவள், மனோகரை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியில் சென்றுவிட்டாள்.

வெளியே வந்தவளுக்கு தாறுமாறாக மூச்சுக்கள் ஏறி இறங்கியது. “ஓ மை காட்! என்ன இது? எப்படி இது?” என மூளைக் குடைய, “இவளை நான் சும்மா விடப்போறது இல்ல, இவளையும் முக்கியமா அந்த விக்ரமையும்…” எனக் கறுவிக் கொண்டு அடுத்து என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்தாள்.

நரேன் சொன்னது போல அவள், அந்த வீடியோக்களை எடுத்துக் கொண்டு விக்ரமிடமும் செல்லப் போவதில்லை, போலீசிடமும் செல்லப் போவதில்லை. வேறுதான் யோசிக்க வேண்டும் என்று, ஒரே முடிவாக விக்ரமை எப்படி மாட்டிவிட்டு, நிசாவைக் காப்பாற்ற வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

***

You may also like

1 comment

M. Sarathi Rio April 16, 2026 - 5:20 pm

இந்த சாருவுக்கு இதே வேலையாப் போச்சு, திரும்ப, திரும்ப நிஷாவை தனியா விட்டுட்டு போயிட வேண்டியது.
இப்ப யாரு வந்து குழந்தையை தூக்கிட்டுப் போனாங்கன்னு தெரியலையே..?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured