Home Antiheroதளிர் – 67

தளிர் 67

“பாஸ் சடனா ஏன் இந்த முடிவு…?” என குழப்பமாக கேட்ட நரேனை, எரிச்சலாக பார்த்தான் விக்ரம்.

“என்ன சடனா? ஏன் உனக்கு பொண்டாட்டி, பிள்ளைங்க, குடும்பம் இதெல்லாம் வேண்டாமா? இன்னும் எவ்வளவு நாளைக்கு எங்க பின்னாடியும் இந்த பிரச்சனைங்க பின்னாடியும் ஓட போறீங்க? முதல்ல உங்க லைஃபை பாருங்க. நீ உனக்காக யோசிக்கலைனாலும், உஷாவுக்காக யோசி. இதுவரை அவ ஃபேமிலி செட்டப்ல வாழல. இருந்த வரைக்கும் அவளை யூஸ் பண்ணிட்டு தூக்கி எறிஞ்சிட்டாங்க. அவளுக்கும் ஆசை இருக்கும் நரேன். நீ முதல்ல அதை புரிஞ்சிக்க ட்ரை பண்ணு.

நாளைக்கே நீ அவளை அழைச்சிட்டு போனு நான் சொல்லல. ஆனா அதுக்கான முயற்சி கூட நீ எடுக்கலன்னு சொல்றேன். அவக்கிட்ட பேசு, கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணு, வெளியே அழைச்சிட்டு போ. உங்க ஃப்யூச்சர் பத்தி டிஸ்கஸ் பண்ணு.” என்றதும், நரேனுக்கும் அதுவே சரியெனப்பட, சரியென்று தலையசைத்தான்.

“ஏன்டா, உன் பொண்டாட்டி கூடதானடா டைம் ஸ்பென்ட் பண்ண சொன்னேன், அதுக்கு ஏன் இவ்வளவு யோசனை…?”

“அதுதான் பாஸ் பெரிய பிரச்சனையே… நான் போய் கூப்பிட்டதும், ஏதோ ஏலியன் ரேன்ஞ்சுக்கு என்னை லுக் விடுவா பாருங்க…”

“ஹா… ஹா… உனக்கு மட்டுமில்ல, இங்க இருக்க எல்லா ஹஸ்பெண்டுக்கும் இதே நிலைதான்.”

“ம்ம்… ஹன்ரட் ப்ரெசென்ட் உண்மை பாஸ்…”

“நரேன், விக்னேஷ் வந்தது இன்னும் அவங்க வீட்டுக்கு தெரியாதுனு நினைக்கிறேன். இந்த பிரச்சனையில நானும் கவனிக்கல. கொஞ்சம் அவங்க வீட்டுக்கு எப்படி சொல்லணுமோ, அப்படி சொல்லிடு. அவன் ரவி வீட்டுல இருக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கல.”

“பாஸ் அதெல்லாம் சொல்லிடலாம். பட், எனக்கு ஒரு டவுட். ஏன் இன்னும் அந்த கமலை தேடாம இருக்கான்? அவன் நம்ம கஸ்டடில இருக்குறது அவனுக்குத் தெரிஞ்சிருக்குமே…”

“ஹா… ஹா… அதனாலத்தான் இன்னும் தேடாம இருக்கான். கமலை வச்சு இனி விக்னேஷுக்கு என்ன யூஸ் இருக்கு? சோ, தேவையில்லனு விட்டுட்டான். அப்படியே கமல், விக்னேஷை தேடி போனாலும், அவங்க ப்ளான்ல இன்க்ளூட் பண்ண மாட்டாங்க. எனக்குத் தெரிஞ்சி இனி விக்னேஷ் யாரையும் எதிர்பார்க்காம இறங்கி அடிப்பான், அதுக்கு விடக்கூடாது. அவனோட ஃபேமிலியை கொண்டு போய் நிறுத்திட்டா, கொஞ்சம் யோசிப்பான். அதுக்குள்ள நம்ம வேலையை முடிச்சிடலாம்.”

“ம்ம்… ஓகே பாஸ். பட், விக்னேஷ் இருக்குறது தெரிஞ்சாலும் பிரச்சனைதானே. அவன் எப்படி இங்க இருந்து போனான், யார் கொண்டு போனது, எல்லாம் லீகலா நடந்ததானு எல்லாம் தோண்டுவாங்களே… அதுக்கு நாம பேசாம போலீஸ்க்கு சொல்லிட்டா என்ன?”

“ம்ம்… சொல்லலாமே! பட், அதுக்கு ஒரு டைம் வேணும். அவனை அப்படியே கொத்தா அள்ளிட்டு போற மாதிரி…”

“ஓகே பாஸ்! நான் கிளம்புறேன், நிசாவுக்கு இன்னைக்கு செக்கப் இருக்குனு ரேணும்மா சொன்னாங்க. அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும். முகுந்தன் சார் அப்பாய்ன்மென்ட் டைம் வேற சேன்ஞ் பண்ணிட்டார். இப்போ போனாத் தான் சரியா இருக்கும்.” என நரேன் கிளம்ப,

“ம்ம்… எனக்கும் மெசேஜ் போட்டுருந்தான். இரு, நானும் வர்றேன். பாப்பாவை நான் பார்த்துக்குறேன், நீங்க போயிட்டு வாங்க.” என விக்ரமும் உடனே கிளம்ப,

“பாஸ், நாளைக்கு மினிஸ்டர் கேஸ் ஹியரிங் இருக்கு, நோட்ஸ் எடுக்கணும் சொன்னீங்க.” என நரேன் கிண்டலாக கேட்க,

“சோ வாட்!? கேஸ் அட்டென்ட் பண்ண போறது நான்தானே, உனக்கு எதுவும் கஷ்டமா?” என விக்ரமும் திருப்பி கிண்டலாக கேட்க,

“நோ பாஸ்… போகலாமா?” என்று உடனே ஜகா வாங்கிக் கொண்டான்.

***

மதியழகியின் சத்தத்தைக் கேட்டதும் அனைவரும் வெளியே வந்துவிட்டனர். உஷாவை, ‘இன்னும் ஏன் இங்கிருக்கிறாய்?’ எனும் விதமாக கேட்டதில் நிசாவிற்கு கோபம் வர, வேகமாக அவரிடம் பேச போனவள், அவருக்கு பின்னே நின்ற ஸ்வாதியைப் பார்த்து அதிர்ந்து நின்றாள்.

ஸ்வாதி திரும்பி வந்துவிட்டாள் என்று எல்லோரும் சொல்லக் கேட்டிருக்கிறாள் தான். ஆனால், இப்போது தானே பார்க்கிறாள். அதே திமிர், அதே ஆனவம், அதே எள்ளல் பார்வை என எங்கும் ஸ்வாதி மாறாமல் அப்படியே இருந்தாள்.

“என்ன மதி, பேச்செல்லாம் வித்தியாசமா இருக்கு. உஷா இங்க இருக்குறது எங்க விருப்பம். அதை வேண்டாம்னு நீ சொல்ல முடியாது. உனக்கு என்ன வேலையோ அதை மட்டும் பாரு.” என ரேணுகா முகத்திலடித்தாற் போல பேச, ரேணுகாவின் பேச்சில் நிசா நிகழ்வுக்கு வர,

“ரேணும்மா இது என்னோட வீடு. இங்க யார் இருக்கணும், இருக்கக் கூடாது, வரணும், வரக்கூடாது எல்லாம் நான்தான் முடிவு பண்ணுவேன். இப்போ இவங்க இங்க வந்தது எனக்கு பிடிக்கல. இப்போ ஏன் வந்தாங்கனு கேட்டுட்டு, இனி இங்க வரக்கூடாதுனு சொல்லி அனுப்பிடுங்க.” என யாரையும் கண்டுகொள்ளாமல் தன் அறைக்குள் செல்ல முற்பட,

“ஏய்! என்ன… விட்டா பேசிட்டே போற? என்னைப் பத்தி இவங்களுக்குத் தான் தெரியாது, உனக்குமா தெரியாது? நீ இப்படி யாருமே இல்லாம நிக்கிறதுக்கு நான்தான் காரணம். அதை மறந்திருக்க மாட்டியே… இங்க எந்த பிரச்சனையும் பண்றதுக்கு நான் வரல, அதுக்கு இப்போ மூடும் இல்ல. நீயே என் மூடை மாத்திடுவ போலயே…” என குரோதமாக ஸ்வாதி கேட்க,

“ஹேய் என்ன மிரட்டுறியா? உன்னை ஒன்னும் பண்ணாம சும்மா விட்டுருக்கோம்னு நீயா நினைச்சிட்டு இருக்க போல… உனக்கு எப்போ எங்க சம்பவம் பண்ணணும்னு எங்களுக்குத் தெரியும். வாயை மூடிட்டு இரு, இல்ல இங்க நடக்கிறதே வேற…” என நிசாவை மறைத்துக் கொண்டு உஷா முன்னால் வந்து நிற்க,

“அட ஜான்சிராணி வாம்மா… வா! நீதான இவ மேல பொறாமைப்பட்டு, உன் புருசனை சந்தேகப்பட்டு மருந்தைக் குடிச்சது? இப்போ நீ எந்த மூஞ்சை வச்சிக்கிட்டு இங்க இருக்க? நான் இங்க வரக்கூடாதுன்னா, நீயும்தான் இங்க இருக்கக்கூடாது.” என ஸ்வாதி உஷாவைப் பார்த்து நக்கலாக பேச,

“ச்சீ… வாயை மூடு, யாரை யார் கூட கம்பேர் பண்ற? அவளும் நீயும் ஒன்னா? உன்னை மாதிரி சூனியக்காரி இல்ல அவ, ஒரு பொண்ணோட வாழ்க்கையை மொத்தமா முடிச்சிட்டு எவ்வளவு தைரியமா இங்க வந்து பேசுவ? மதி, உன் பொண்ணுக்கு அவ்வளவுதான் மரியாதை. முதல்ல அவளை வெளியே போகச் சொல்லு.” என ஆவேசமாக ரேணுகா பேச,

“போதும் அண்ணி, எனக்கும் இங்க யார் கூடவும் பேசவும் வேண்டாம், சண்டையும் வேண்டாம். நான் என் மருமகளையும் பேரப் பிள்ளைங்களையும் பார்க்க வந்தேன். அவங்களைக் கூப்பிடுங்க, நான் பார்த்துட்டு கிளம்புறேன்.” என, மதியழகி யாரையும் மதிக்காமல் சட்டமாக சென்று சோஃபாவில் அமர்ந்துவிட,

“ம்மா, இதெல்லாம் எனக்குத் தேவையா? நான்தான் வரலனு எத்தனை தடவை சொன்னேன், கேட்டியா? இப்போ பாரு, எல்லோரும் உன்னை மதிக்காம, என்னை அசிங்கப்படுத்துறாங்க. நீ வந்திருக்க, உன் மருமக ரூமுக்குள்ள இருந்துக்கிட்டு வெளியே வரமாட்டேங்குறா. ஒரு பிச்சைக்கார வாழ்க்கைல இருந்து, அவளைக் காப்பாத்தி விட்டுருக்கேன்னு அவளுக்கெல்லாம் கொஞ்சமாவது நன்றி இருக்கா…” என முடிக்கும் முன்னே, ஸ்வாதியைப் பிடித்து வெளியில் தள்ளியிருந்தான் ரவி.

“ரவி என்ன பண்ற?” என்ற மதியழகியைக் கண்டுகொள்ளாது, “உன்னைத் தொட்டு அந்த பாவத்தை சுமக்க நான் தயாரா இல்லை. இதுதான் நீ இங்க வர்றது கடைசியா இருக்கணும். இனிமே எந்தக் காரணத்தை சொல்லியும், இந்த வீட்டுப்பக்கம் எட்டிப் பார்க்கக்கூடாது அவுட்…!” என கோபத்தில் ருத்ரமூர்த்தியாக கர்ஜித்தவனை, வாழ்க்கையில் முதன்முறையாக அரண்டு போய் பார்த்திருந்தாள் ஸ்வாதி.

“ரவி…” என மகனைப் பார்த்து கத்திய மதி, “நீ மாறிட்டடா… ரொம்ப மாறிட்ட… கூடப் பிறந்தவ மேலயே கை வைக்கிற அளவுக்கு வந்திட்டல்ல… அவ வரவே மாட்டேன்னுதான் சொன்னா. நான்தான் மத்தவங்களுக்காக வேண்டாம், உன் அண்ணனுக்காக வா, அவனுக்கு உன் மேல பாசம் அப்படியேதான் இருக்கும்னு, சொல்லி கூப்பிட்டு வந்தேன். என் மூஞ்சில கரியை பூசிட்ட இல்ல… வீட்டுக்கு வந்தவளை வெளியே தள்ளி அசிங்கப்படுத்திட்டல்ல, நீயெல்லாம்…” என மதி ஆக்ரோசமாக பேசிக்கொண்டிருக்கும் போதே,

“என்ன சாபம் கொடுக்கப் போறீங்களா? தாராளமா கொடுங்க, இந்த சாபமெல்லாம் என்னையும் என் குடும்பத்தையும் ஒன்னும் செய்யாது. அன்னைக்கே உங்களை இங்க வர வேண்டாம்னு சொன்னேன். சொன்னது புரியல போல, இனி எப்பவும் இங்க வராதீங்க. இன்னைக்கு மாதிரி இவ்வளவு மரியாதையா பொறுமையா எல்லாம் பேசமாட்டேன்.” என கட்டளையாக அறிவித்த நேரம்,

“இங்க என்ன நடக்குது?” என ஸ்வாதியைப் பிடித்தபடி கோபமாக வந்து நின்றான் விக்ரம். விக்ரமின் கரங்களுக்குள் ஸ்வாதியின் உடல் பயத்தில் நடுங்கத் தொடங்க, அது விக்ரமிற்கும் தெரிந்தது.

எல்லோரும் அவளையே பார்க்க, “உங்கிட்டத்தான் கேட்டுட்டு இருக்கேன், இங்க என்ன நடக்குது?” என நிசாவைப் பார்த்து கத்த,

“விக்கி எல்லோரும் என்னை இங்கே வரக்கூடாது சொல்றாங்க, ரவி என்னை வெளியே தள்ளி விட்டுட்டான். நான் அன்னைக்கு எதுவுமே வேணும்னு பண்ணல விக்கி. ரித்திக்கு அப்படி நடக்கும், பாப்பா இறந்துடும்னு எல்லாம் நான் நினைக்கவே இல்ல…

இவ்வளவு நாள் கழிச்சு வந்த என்னை, யாருமே கவனிக்கலனு ஒரு கோபம். அதுதான் என்னை அந்தளவுக்கு செய்ய வச்சது. நான் செஞ்சது தப்புத்தான். ஆனால் வேணும்னு செய்யல விக்கி, உனக்கு நான் சொல்றது புரியுதா? நீயாச்சும் என்னை நம்பு விக்கி, ப்ளீஸ் விக்கி…” விக்ரமிடம் அழுது கொண்டே பேச, அத்தனை பேரும் விக்ரமையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதில் விக்ரம் பின்னே உள்ளே வந்த நரேனைக் கண்ட உஷா, வேகமாக அவனிடம் சென்று யாரையும் பொருட்படுத்தாமல், அவனை அணைத்துக்கொண்டு அழ ஆரம்பிக்க,

“என்னம்மா… என்ன… என்னாச்சு உஷா?” என நரேன் மனைவியிடம் விசாரித்தபடியே ஸ்வாதியை முறைத்துப் பார்க்க, ‘ச்சீ… ப்பே! நீயெல்லாம் எனக்கொரு ஆளா?’ என்பது போல கேவலமான பார்வையைக் கொடுத்தாள் அவள்.

“உஷா அமைதியா இரு, நரேன் அவளை உள்ளக் கூப்பிட்டு போ, அப்புறம் பேசிக்கலாம்.” என ரேணுகா நிலைமையை சீர் செய்ய நினைக்க,

நரேனும் சரியென்றபடி மனைவியை உள்ளே அழைக்க, அவளோ முடியாது எனும் விதமாக தலையை ஆட்டி மறுத்து, “நம்ம வீட்டுக்கு என்னைக் கூப்பிட்டு போறீங்களா? ப்ளீஸ்….” என அழுதபடியே கேட்க, எல்லோரும் உஷாவை அதிர்ந்து பார்த்தனர்.

“என்ன நடந்தது ரேணும்மா…?” என நரேன் கேட்க,

“நரேன் நீ அவளைக் கூப்பிட்டு கிளம்பு, இங்க நான் பார்த்துக்குறேன்.” என்ற விக்ரமை, நிசாவும் ரேணுகாவும் முறைத்துப் பார்க்க, நரேன் ஒன்றும் சொல்லாமல் ஸ்வாதியை முறைத்தபடியே, மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

***

You may also like

1 comment

M. Sarathi Rio April 24, 2026 - 5:23 pm

அட ராமா..! திரும்பவுமா? இந்த விக்ரம் மாறவே மாட்டானோ?

😔😔😔
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to M. Sarathi Rio Cancel Reply

About Me

Featured