Home Antiheroதளிர் – 71

தளிர் 71

நரேனும் உஷாவும் மாலத்தீவு சென்று, அன்று நான்காவது நாள். அன்று மாலை வெளியில் சுற்றிவிட்டு ஹோட்டல் அறைக்கு செல்வதற்காக, டாக்சி புக் செய்துவிட்டு காத்திருந்தனர். அப்போது ஒரு வயதானவர் தமிழில் வந்து அவர்களிடம் பேச, உஷாவும் அவருடன் பேச என நேரம் இனிமையாகத்தான் சென்றது.

சிறிது நேரத்தில் அவர்கள் புக் செய்திருந்த டாக்சியும் வந்துவிட, பெரியவருக்கு விடை கொடுத்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே, நரேனுக்கு அந்த கால் டாக்சி ஆஃபிசில் இருந்து அழைப்பு வர, யோசனையுடன் போன் எடுத்தவன், இன்னும் சற்று நேரத்தில் கார் வந்துவிடும் என தெரிவிக்க, கேட்ட செய்தியில் டிரைவரிடம், “ஸ்டாப் த கார்…” எனக் கத்த, அதற்குள் ரெடியாக வைத்திருந்த ஸ்ப்ரேயை இருவருக்கும் அடித்து, மயக்கமடையச் செய்திருந்தான் ஓட்டுனர் இருக்கையில் இருந்த கடத்தல்காரன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் தீவைத் தாண்டிய ஒரு காட்டுப்பகுதியில் உள்ள, ஒரு காட்டு பங்களாவில் தனித்தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டனர் இருவரும்.

முதலில் மயக்கம் தெளிந்தது உஷாவிற்குத்தான். நரேனை வைத்து அவளை மிரட்டி, அதே காரில் அழைத்துச் சென்று ஹோட்டல் அறையையும் காலி செய்து அழைத்து வந்திருந்தனர்.

“டேய் யார்றா நீங்க? எதுக்குடா எங்களை கடத்தி வச்சுருக்கீங்க? என் வொய்ஃப் எங்கடா?” என மூன்று நாட்களாக, இதே கேள்விகளை மாற்றி மாற்றி கேட்டும், எந்தப் பதிலும் அங்குள்ள அடியாட்கள் யாரும் கொடுக்கவில்லை.

மனைவியைப் பற்றி விசாரித்தும் பலனில்லை. இங்கிருந்து தப்பிக்கலாம் என்றாலும் எந்த இடமென்றும் தெரியவில்லை.

தன்னை என்ன செய்தாலும் பரவாயில்லை, மனைவிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதுதான் அவனுடைய பயமே. அவளைக் கண்ணில் பார்த்து, அவள் நலமாக இருக்கிறாள் என்று தெரிந்தால் கூட போதும்.

அவனும் பலவிதமாக அங்குள்ளவர்களிடம் கேட்டு, கெஞ்சி மிஞ்சி பார்த்துவிட்டான். அவர்கள் வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வரவில்லை. உஷாவைப் பற்றித் தெரியாமல் பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது நரேனுக்கு.

அவர்கள் கடத்தப்பட்ட மூன்றாம் நாள் திடீரென்று அவனிருந்த அறையில் இருந்த தொலைக்காட்சி திரையில் சிரித்தபடி, “அப்புறம் மிஸ்டர் நரேன், எப்படி இருக்கீங்க?” என்ற விக்னேஷை முறைத்துப் பார்த்தான் நரேன்.

“ஓ… நீதானா?” என சற்று ஆசுவாசம் கூட உண்டானது.

“என்னப்பா நீ, கொஞ்சம் கூட பொண்டாட்டி மேல பாசம் இல்லாத புருஷனா இருக்கியே? பாசமிருந்தா என்னை இப்படி முறைச்சிட்டு இருக்கமாட்ட.” என நக்கலாக கேட்க,

“டேய் கட்டி வச்சுட்டு பேசுற நீயெல்லாம், ஆம்பளையாடா?” என ஆக்ரோசமாகக் கத்த,

“வைலன்ஸ் வைலன்ஸ் வைலன்ஸ்… ஐ டோன்ட் லைக், ஐ அவாய்ட். பட், வைலன்ஸ் லைக்ஸ் மீ! ஹா… ஹா… இந்த டைலாக் நல்லா இருக்குல்ல, எனக்காகவே எழுதின மாதிரி இருக்கு.” என கொக்கரித்தவன், “டேய், புருஷனுக்கு பொண்டாட்டியை காட்டுங்கடா, ஹனிமூனுக்கு வந்துருக்க கப்பிளை பிரிச்சு வச்ச பாவம் நமக்கெதுக்கு?” என அங்கிருந்த அடியாளுக்கு கண்ணைக் காட்டினான்.

“எஸ் பாஸ்…” என்றவன், பக்கத்தில் இருந்த மற்றொரு டிவியை ஆன் செய்ய, அதில் ஒரு சேரில் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் ப்ளாஸ்டர் ஒட்டிய நிலையில், விழிகளில் நீரும் பரிதவிப்புமாக அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் உஷா.

அடித்திருப்பார்கள் போல, கன்னத்தில் சிறு வீக்கம் இருந்தது. தலை கலைந்து, முகம் சோர்ந்து, உடல் முற்றிலுமாக தளர்ந்து பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தாள். அவள் கண்களில் தெரிந்த பரிதவிப்பில், ‘சீக்கிரம் என்னை காப்பாற்று.’ என்ற செய்தியும் இருக்க, அவளுக்கு கண்ணைக் காட்டியவன் விக்னேஷை உறுத்து விழித்தான்.

“அட என்னப்பா முறைச்சிட்டே இருக்க…?” எனக் கிண்டலடித்தவன், “உன் பாஸ் இங்க நாயா சுத்திட்டு இருக்கான், கண்டுபிடிச்சிடுவானா?” என நக்கலாக கேட்க,

“ம்ம்… கண்டுபிடிச்சு வந்த பிறகு அவர்கிட்டயே கேளு.” என நரேனும் நக்கலாக பதில் சொல்ல,

“ம்ம்… அதுவும் சரிதான், அவனை நேருக்கு நேரா பார்க்க நானும் வெயிட்டிங்.” எனச் சிரிக்க, அவனை வெறித்துப் பார்த்தான் நரேன்.

அப்போது நரேன் அணிந்திருந்த செயினில் இருந்த டாலரில் இருந்து, லேசான மின்சாரம் அவனது உடலைத் தீண்டிச் சென்றது. அந்த நேரம் நரேனின் உதட்டில் விக்னேஷைப் பார்த்து கிண்டலான புன்னகையும் ஒன்று வந்தமர்ந்தது.

“நீ என்னை கடத்தி, மிரட்டி கொலை செஞ்சி இப்படி என்ன செய்தாலும், அது என் பாஸ்கிட்ட நீ தோத்துட்டதா தான் நான் நினைப்பேன். எதிரியை நேருக்கு நேரா நின்னு அடிக்கணும் என் பாஸ் மாதிரி. கோழைங்க மாதிரி முதுகுல குத்திட்டு ஒளிஞ்சிட்டு இருக்கக்கூடாது.” என கோபமாக பேச,

“டேய்! இவன் வாயை முதல்ல மூடுங்க. தமிழ் ஹீரோ டைலாக்ஸ் எல்லாம் பேசி டென்சன் பண்ணிட்டு இருக்கான். உன் பாஸ் ஹீரோடா, அவன் எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். நான் வில்லன், உங்க எதிர்பார்ப்பிற்கு ஏத்த மாதிரி இருக்க முடியுமா, என்ன? ஹா… ஹா… சரி விடு, அப்புறம் உன் தங்கச்சி எப்படி இருக்கா? மறுபடியும் எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்குமா?” என கண்ணைச் சிமிட்டி ஏளனமாக கேட்க,

நிசாவைப் பற்றி பேசியதும் கோபத்தின் உச்சிக்கு சென்றவன், “டேய் நிசாவைப் பத்தி பேசின, உன்னை கொன்னுடுவேன்டா ராஸ்கல்! அவக்கிட்ட வாங்கின அடியை மறந்துட்டியா? ஒரு பொண்ணுக்கிட்ட அடிவாங்கிட்டு நீயெல்லாம் ஆம்பளனு வெளிய சொல்லிட்டு இருக்க, டேமிட்!” என ஆக்ரோசமாகக் கத்த,

அதுவரை கிண்டலாக பேசிக் கொண்டிருந்த விக்னேஷ் திடீரென்று மூர்க்கமாக, “டேய்! அவன் உடம்புல உயிர் மட்டும்தான் இருக்கணும்.” எனக் கட்டளையாகக் கூறி,

“உன் பொண்டாட்டி இங்கதான இருக்கா. நான் ஆம்பளையா இல்லையானு அவ சொல்லுவா. நீ வர வரைக்கும் அவளை உயிரோட வச்சிருக்கேன்.” என குரூரமாகச் சொல்ல,

“டேய் வேண்டாம்… சொல்றதை கேளு, அவ மேல கை வச்சா உன்னை கொன்னுடுவேன்டா…” என நரேன் ஆக்ரோசமாகக் கத்தியதை, எள்ளல் சிரிப்புடன் பார்த்துக்கொண்டே, அந்த வீடியோ காலை கட் செய்துவிட்டான் விக்னேஷ்.

***

இங்கு விக்ரம் சொன்னதை போலவே பத்து நிமிடத்தில் வீட்டுக்கு வந்திருந்தான். கூடவே தன் கமிஷ்னர் நண்பன் வசந்த்தையும் அழைத்து வந்திருந்தான். அவன் வந்த சில நிமிடத்திலேயே ரவியும் வந்துவிட்டான்.

“என்ன மிஸ்டர் கண்ணன், என்ன என்கொய்ரி இது?” என கமிஷ்னர் கேட்கவும்,

அதுவரை நிசாவை மிரட்டிக் கொண்டிருந்த அந்த இன்ஸ்பெக்டர், கமிஷ்னரே வந்ததும் கொஞ்சம் ஆடித்தான் போயிருந்தார்.

“இவங்க குழந்தையை கொடுக்க மாட்டேன்னு சொல்லி பிரச்சனை பண்றாங்கனு கம்ப்ளைன்ட் கொடுத்துருக்காங்க சார். அதைத்தான் விசாரிச்சிட்டு இருக்கேன்.” என திக்கி திணறி கூற,

“ஓ…” என்றவன், “ஏன், நீங்க மட்டும் வந்துருக்கீங்க, கான்ஸ்டபிள் யாரும் வரல?” எனவும்,

“அது… அது சார்… இவங்க கொஞ்சம் பிரச்சனை பண்ணுவாங்க, அதனால நீங்களே வாங்கனு ரெக்வெஸ்ட் செஞ்சி கேட்டாங்க, அதான்…” எனவும்,

“ம்ம்… இப்போ என்னாச்சு, என்கொய்ரி முடிஞ்சதா? ரிட்டர்ன் கம்ப்ளைன்ட் கொடுத்துருக்காங்களா? ஸ்டேஷன் வர சொல்லிருக்கீங்களா, எப்படி?”

“இல்ல சார், விசாரிச்சுட்டு அப்புறம் ஸ்டேஷன் கூப்பிட்டு போகலாம்னு…” என இழுக்க,

“ஏற்கனவே உங்க மேல மூணு என்கொய்ரி இருக்கு, மறுபடியும் புதுசா ஒன்னை சேர்க்கணுமா? இப்பதான் சஸ்பென்ட் ஆகி ரீஜாய்ன் பண்ணிருக்கீங்க, என்ன பண்ணலாம்?” என மிரட்டல் குரலில் கேட்க,

“சார், மேடம் வந்து தான்…” என ஸ்வாதியைக் காட்டி, “குழந்தையை வாங்கிக் கொடுக்கலன்னா ஸ்டேஷன் முன்னாடியே தீக்குளிப்பேன்னு சொல்லவும்…” என முடிக்கும் முன்னே,

“ஸ்டாப்பிட் இடியட்! எனக்கு உன்னையும் தெரியும், அவளையும் தெரியும். நம்ம டிபார்ட்மென்ட் தேடிட்டு இருக்க ஒரு அக்கியூஸ்ட் அவ. அவளை சேஃப் பண்ணணும்னு நினைக்கிறியா? இந்த டைம் உனக்கு டீ ப்ரோமோசனோட சஸ்பென்சன் கொடுத்தா சரியாகிடும்.” என மிரட்டி, “கெட் லாஸ்ட்!” எனக் கத்த, விட்டால் போதுமென்று அந்த இன்ஸ்பெக்டரும் கிளம்பிவிட, இப்போது அங்கிருந்த அத்தனை பேரையும் திமிராக பார்த்தவள், விக்ரமிற்கு எதிரில் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அதே திமிரோடு அமர்ந்தாள்.

அவளின் அந்த செய்கை, அந்த பார்வை, அந்த உடல்மொழி, அவளின் பார்வையில் இருந்த குரோதம் விக்ரமிற்கு, ‘இவளையா நாம் காதலித்தோம்?’ என்று ஆயிரமாவது முறையாக யோசிக்க வைத்தது.

“டீல் பேசலாமா மிஸ்டர் விக்ரம், டீல்… டீல்…” என நக்கலாக கூறி, அவனைப் பார்த்து ஏளனமாக சிரிக்க,

“ஹேய்! எங்க வந்து என்ன பேசுற?” என வந்த ரேணுகாவைப் பார்த்து, “அட! நீ வேற ஏன்மா சும்மா ஃபீவர் வந்த பியர் (கரடி) மாதிரி கத்திட்டு இருக்க?” என கிண்டலடிக்க, ரவி அவளிடம் சென்று, “வாயை மூடு, யாருக்கிட்ட என்ன பேசுற?” என அதட்ட,

“ம்மா, அவளை கூப்பிட்டு உள்ள போங்க.” என நிசாவைக் காண்பித்து சொல்ல,

“விக்கி, இவளை சும்மா விடக்கூடாது. எவ்வளவு தைரியம், நம்ம வீட்டுக்கு வந்து நம்மளையே திமிரா பேசுறா. இவ இங்க இருந்து உயிரோட போகவேக் கூடாது.” என ரேணுகா, விக்ரமின் சட்டையைப் பிடித்துக் கத்த,

“ம்மா, முதல்ல இப்படி கத்தாதீங்க. பிபி தாறுமாற ஏறப்போகுது. இருக்குற பிரச்சனையில உங்ககூட ஹாஸ்பிடல், வீடுன்னு அலைய முடியாது.” என்றவன், நிசாவிடம் கண்ணைக் காட்ட, அவளோ அவனைப் பார்த்து அடமாக நின்றிருந்தாள்.

“ஷப்பா!” என பெருமூச்சு விட்டவன், “வசந்த், நீ மேடத்துக்கிட்ட என்ன கேட்கணுமோ கேளு, நான் இப்போ வர்றேன்.” என்றவன் ரவியிடம், “அம்மாவை ரித்திக்கிட்ட கூப்பிட்டு போ. நான் சொல்ற வரை யாரும் வெளியே வரக்கூடாதுனு ரித்திட்ட சொல்லு.” என்று, நிசாவை இழுத்துக்கொண்டு அவளது அறைக்குள் நுழைந்தான்.

“எல்லாம் சரியாகி, நாம நினைச்ச மாதிரி தனியா அவ இங்க வந்து மாட்டிருக்கா, இன்னும் என்ன?”

“தெரியும், ஆனா பாப்பாவைக் கேட்டு வந்து நிக்கும்போது, அதோட அவக்கிட்ட எல்லா ரிப்போர்ட்சும் இருக்கு. கூடவே நான் சைன் பண்ண டாகுமென்ட்சும். எப்படி பயப்படாம இருக்க?”

“அவ கொண்டு வந்தது எல்லாம் ஃபோர்ஜரி பேப்பர்ஸ், நீ சைன் பண்ண டாகுமென்ட்ஸ் மட்டும்தான் ஒரிஜினல். அப்படியே இருந்தாலும் அவ எப்படி நம்ம பாப்பாவை வாங்கிட்டு போக முடியும்? நான் எப்படி விடுவேன்? எப்பத்தான்டி என்னை நம்புவ? ரெண்டு வருஷமா உன் பின்னாடி அலையுறேன். பாப்பாவுக்காகனு மத்தவங்க நினைச்சாலும் உனக்குத் தெரியும், நான் உனக்காகத்தான் உன் பின்னாடி அலையுறேன்னு. இன்னும் என்னதான்டி வேணும்?”

“ம்ச்! எனக்கு அதைப்பத்தி பேச விருப்பம் இல்ல, இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கொசுத் தொல்லை இருக்கும்?”

“அங்க நரேனையும் உஷாவையும் கிட்னாப் பண்ணிட்டான். லொக்கேஷன் ட்ரேஸ் பண்ணியாச்சு, வசந்த் மூலமா அங்க போலீஸ்க்கு சொல்லியாச்சு. அவங்க சேஃப்னு மெசேஜ் வர வரைக்கும், இவளை சகிச்சிதான் ஆகணும். அப்புறம் எனக்கும் அவளுக்குமே பேச வேண்டியது இருக்கு.” எனவும், நிசாவின் முகத்தில் எரிச்சல் வந்து போக,

“நீ வேற ஏன்டி…” என சலித்தவன் “அவ வாயிலிருந்தே உண்மையை வாங்கணும்னு வசந்த் சொல்றான். கமல் கொடுத்த ஸ்டேட்மென்ட்டும் இவ கொடுக்குறதும் ஒன்னா இருக்கணும், அதுக்கு நான்தான் அவக்கிட்ட பேசணும்.” என்றதும்,

“நீ பேசு இல்ல என்னமோ பண்ணு, அதை எங்கிட்ட சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல. அந்த பிசாசுக்கிட்ட இருந்து எந்த பிரச்சனையுமில்லாம என் பொண்ணை எனக்கு வாங்கிக் கொடுத்தா போதும்.” என்றாள் கடுகடுப்புடன்.

“உன்னையெல்லாம் திருத்தவே முடியாது.” என்றவன், அவள் சுதாரிக்கும் முன்னே இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவள் திமிறினாலும் விடாமல், “ம்ச்! டூ மினிட்ஸ்…” என முணுமுணுத்துவிட்டு மிக இறுக்கமாக அணைத்துக்கொள்ள, விக்ரமின் இந்த செய்கையில் நிசாதான் அதிர்ந்து போய் நின்றிருந்தாள்.

‘பிடிவாதம் பிடி

சினம் தீரும் அடி

இழந்தோம் எழில்கோலம்

இனிமேல் மழைக்காலம்

மறுவார்த்தை பேசாதே

மடிமீது நீ தூங்கிடு

இமை போல நான் காக்க

கனவாய் நீ மாறிடு…’

***

You may also like

1 comment

M. Sarathi Rio April 28, 2026 - 5:10 pm

நிமாவே இந்த ஸ்வாதி ஒரு கொசு தொல்லைத் தான்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured