தளிர் 73
அறைக்குள் இருந்த நிசாவின் எண்ணிற்கு புது எண்ணில் இருந்து, ஒரு ஆடியோ மெசேஜும் வீடியோ மெசேஜும் வர, யோசனையுடனே அதை எடுத்துப் பார்த்தாள்.
வீடியோவில் உஷா ஒரு சேரில் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் ப்ளாஸ்டர் ஒட்டப்பட்டு அமர்த்தப்பட்டிருக்க, அவளுக்கு எதிரில் அதே போல் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் ப்ளாஸ்டரும் ஒட்டப்பட்டு உட்கார வைப்பதற்கு பதிலாக, ஒரு ஸ்டூலில் நிற்க வைக்கப்பட்டிருந்தான் நரேன்.
அதைப் பார்த்ததும் அதிர்ச்சியில் எழுந்தவள் விக்ரமை அழைக்கலாம் என நினைக்கும் முன்னே, நரேனை நிறுத்தி வைக்கப்பட்டதற்கு நேர் மேலே ஒரு கயிறைக் கட்டி, அதை சரியாக அவன் கழுத்தில் மாட்டி விட்டிருந்தனர் இருவர். அவர்களிடமிருந்து நரேனால் திமிறக்கூட முடியவில்லை.
அதிர்ச்சியில் இருந்தவளின் விரல்கள் தன்போக்கில் அந்த ஆடியோவை ஓடவிட, “ஹாய் செல்லம்…” என்று ஆரம்பிக்க, ‘அது… அது அந்த விக்னேஷ் குரல்.’ கைகள் பயத்தில் நடுங்க, அலைபேசி அவள் கையில் இருந்து கீழே விழுந்தது.
“ஹாய் செல்லம், எப்படி இருக்கனு கேட்கக்கூடாது. நீ இப்போ நல்லாத்தான் இருக்க. அதுவும் அந்த விக்ரம் கஸ்டடில ரொம்ப நல்லா இருக்க. ஆனா உன் அண்ணனும் உன் ஃப்ரண்டும் நல்லா இல்லையே…” என கொக்கரித்தவன், “இப்போ நீ என்ன பண்ற, உன்னோட இல்ல… இல்ல… அந்த விக்ரமோட வாரிசைத் தூக்கிட்டு நேரா ரவி வீட்டுக்கு வர்ற. நீ மட்டும் தனியாத்தான் வரணும். இதுல எங்கேயாச்சும் நீயும் அந்த விக்ரமும் கிரிமினல் மூளையை யூஸ் பண்ண நினைச்சா, உன் அருமை அண்ணன் அந்த நரேனும் அவன் பொண்டாட்டியும், சிவலோகம் போயிடுவாங்க.
நீயே யோசிச்சுக்கோ, இன்னும் இருபது நிமிசத்துல நீ இங்க இருக்கணும், ரைட்? யுவர் டைம் ஸ்டார்ட் நவ்!” என்று கிண்டலாகச் சிரித்து, “ஐம் வெயிட்டிங் பேபி!” என்றதோடு அந்த ஆடியோ நின்றிருக்க, யோசிக்கக்கூட நேரம் கொடுக்காமல் அவளை மிரட்டிய விக்னேஷை எண்ணி, ஒரு பக்கம் கோபம் கொழுந்து விட்டெரிந்தாலும், தனியாக செல்ல பயமாகவும் இருந்தது.
ஆனாலும் அவளுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. எப்படியும் இவள் வெளியில் சென்று கார் எடுத்ததும், விக்ரமின் ஆட்கள் அவளைப் பின்தொடருவார்கள், பாதுகாப்பு பிரச்சனை இருக்காது என்று தைரியம் வரப்பெற, ஹாலில் இருந்த யாரையும் கண்டுகொள்ளாமல் ரித்தியின் அறைக்குச் சென்று ரேணுகாவிடமிருந்த குழந்தையை வாங்கியவள், அவரிடம் குழந்தையின் கழுத்திலிருந்த செயினை கண் காட்டிவிட்டு வேகமாக வெளியேறினாள்.
அவளது பதட்டத்தையும் பயத்தையும் பார்த்த ரேணுகாவிற்கு ஏதோ தவறாகப்பட, மகனிடம் சொல்லலாம் என்று வெளியில் வர, அதற்குள் அவனே நிசாவை நிறுத்தி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.
“எனக்கு இப்போ வெளியே போகணும், உங்கிட்ட சொல்லிட்டு போகணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல.” எனப் பட்டென்று சொல்ல,
“நீ எப்படியோ போ, ஆனா குழந்தை எதுக்கு? இவ்வளவு பிரச்சனை போய்கிட்டிருக்கும் போது பாப்பாவை எங்க தூக்கிட்டு போற?” என அவனும் எரிச்சலில் கத்த,
“அதையும் உங்கிட்ட சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்ல.” எனச் சட்டென்று ஆவேசமானவள், அங்கிருந்த ஸ்வாதியைக் காட்டி “உனக்குத்தான் முக்கியமான வேலை இருக்கே, நீ அவளைப் பாரு. என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்.” என்றுவிட்டு கார் சாவியோடு கிளம்பிவிட்டாள்.
நிசா பேசியதில் பல்லைக் கடித்தவன், இவர்கள் சண்டையை நக்கலாக பார்த்துக் கொண்டிருந்த ஸ்வாதியைப் பார்த்து, “ஹேய் இதெல்லாம் உங்க வேலைதானே? இவங்க ரெண்டு பேருக்கும் எதாவது ஆச்சு, அவனுக்கு என் கையாலாதான் சாவு.” என விக்னேஷை நினைத்து கர்ஜிக்க,
“ஹா… ஹா… ஹவ் டூ ஐ க்னோ விக்ரம். விக்கியோட ப்ளான் என்னனே எனக்குத் தெரியாது. ஆனா உன்னோட இந்த துடிப்பு பார்க்க ரொம்ப நால்லாருக்கு, இன்னும் பார்க்கணும் போலவும் இருக்கு.” என கிண்டலடிக்க,
“ஏய், என்னடி நினைச்சிட்டு இருக்க? ப்ளடி பிட்ச்…” என்றவன் அவளை அறைந்திருக்க,
“விக்ரம் காம் டவுன்! இப்போ நீ ஏன் இவ்ளோ டென்சன் ஆகுற? நம்ம வேலை முடியாம போய்டும்.” என வசந்த், விக்ரமைப் பிடித்துக்கொள்ள,
“என்ன அடிச்சிட்டல்ல… உன்னை சும்மா விட மாட்டேன்டா ராஸ்கல். விக்கி, உங்களை எல்லாம் விட மாட்டான்டா.” என ஸ்வாதி பேய் போல் கத்த ஆரம்பித்தாள்.
“விக்ரம், இவ பேச்சே சரியில்ல, எனக்கு மனசும் சரியில்ல. நீ இங்க பாரு, நான் போய் அம்மாவை பார்த்துட்டு வரேன். இவ்வளவு வன்மமா பேசுறவ, அம்மாவுக்காக எல்லாம் யோசிக்க மாட்டா. நான் போயிட்டு உனக்கு கால் பண்றேன்.” என்ற ரவி, ஸ்வாதியிடம் வந்து, “அம்மாவை என்ன பண்ண? என்ன பண்ற ப்ளான்?” எனக் கூர்மையாகக் கேட்க,
“ஹா… ஹா… என்னடா அம்மா மேல பாசமா? நம்புற மாதிரி இல்லையே ரவி. ஆனா நீ இப்படி துடிக்கும் போது, ஹாஹா… சேம் டைலாக் தான் தோனுது, என்ன பண்ணலாம்?” என வில்லியாகச் சிரித்தாள்.
“ஏய்…!” என அவள் முடியைப் பிடித்து இழுத்தவன், “நீயெல்லாம் ஒரு பொண்ணாடி? எவ்வளவு தப்பு செஞ்சிருக்க? நீ செஞ்ச தப்போட வீரியம் உனக்கு புரியுதா, இல்லையாடி? உன் ஒருத்திக்காக எத்தனை பேர் வாழ்க்கையை நாசம் பண்ணிருக்க? அப்படி என்னடி உனக்கு அவன் மேல காதல்? நீ ஒரு கல்யாணம் ஆனவ, கல்யாணம் ஆன ஒரு பொண்ணு, இன்னொருத்தன் மேல அஃபர் ஆகுறது லவ் இல்ல, லஸ்ட். உனக்கு அப்படி என்னடி அவன் மேல…” என ரவி முடிக்கும் முன்னே, வெறிகொண்டு அவனைக் கீழேத் தள்ளியிருந்தாள் ஸ்வாதி.
“என்ன சொன்ன… என்ன சொன்ன? லஸ்டா? எனக்கா? அதுவும் என் விக்கி மேல? உனக்கு அப்படியா தோனுது? அப்போ அது லஸ்ட்தான். ஆமா லஸ்ட்தான், லவ் அன்ட் லஸ்ட். இந்த விக்ரமை நான் மேரேஜ் பண்ணது அந்த நிசாவை பழிவாங்க. அவளுக்கு இவனைப் பிடிச்சது, என் விக்கிக்கும் அந்த நிசாவைப் பிடிச்சது. அவளை எப்படி பிடிக்கலாம்? என் விக்கிக்கு, அவளை எப்படி பிடிக்கலாம்? நான் விக்கியை அப்போவே மேரேஜ் செய்திருந்தா, அந்த நிசா இவனை கல்யாணம் செய்துட்டு நிம்மதியா இருந்திருப்பா.
இவங்க அம்மா, இந்த மாமியார் கிழவிக்கும் அவளை மாதிரி ஒரு பொண்ணுதானே மருமகளா வரணும்னு எதிர்பார்த்துட்டு இருந்தா. அந்த நிசா இந்த வீட்டுக்கு வந்திருந்தா எல்லாம் நிம்மதியா இருந்துருப்பீங்க. ஆனா நான் மட்டும் என் விக்கிக்கு எப்படி அவளைப் பிடிச்சதுனு, யோசிச்சு யோசிச்சு பைத்தியம் பிடிச்சவ மாதிரி இருந்துருக்கணும்.”
“ஹான்! அப்படி நடக்க விட்டுருவேனா? முடியாது…! அப்படி நடக்க விட்டுருக்கவே முடியாது!” என ஆக்ரோசமானவள், ரவியின் சட்டையைப் பிடித்து,
“என்ன பண்ணலாம், என்ன பண்ணலாம்னு நான் யோசிச்சுட்டு இருக்கும் போதுதான், உனக்கும் அந்த ரித்தியைப் பிடிச்சிருந்தது தெரிஞ்சது. அதுதான் நீ பேச முன்னாடி, நானே பேசி என் ப்ளானை ஆரம்பிச்சேன்.
அங்க ஆரம்பிச்சது இப்போ அந்த நிசப்தி சாவுல வந்து நிக்கிது. இன்னும் கொஞ்ச நேரத்துல என் விக்கி கையால உன் ஆசை நாயகி நிசா சாகப்போறா. துடிக்க துடிக்க சாகப்போறா…” என வெறிப்பிடித்தவள் போலக் கத்த, விக்ரமும் வசந்த்தும் எந்த உணர்வையும் காட்டாமல் அவளையே பார்த்திருக்க, ரவியும் அறைக்குள் இருந்த மற்ற பெண்களும் அதிர்ச்சியில் வாயடைத்துப் போயிருந்தனர்.
விக்ரம், வசந்தைப் பார்த்து கண்ணைக் காட்ட, பதிலுக்கு அவனும் தலையை ஆட்டிவிட்டு, தன் மொபைலில் குழந்தையின் ஜிபிஆர்எஸ்ஸை கனெக்ட் செய்து பார்க்க, அது ரவியின் வீட்டுக்கு செல்லும் வழியைத்தான் காட்டியது.
வசந்த் உடனே, “ரவி நீங்க உங்க வீட்டுக்கு போங்க, உங்க அம்மா எப்படி இருக்காங்கனு பார்த்துட்டு எங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க, க்விக்…” என்றதும் ரவியும், ஸ்வாதியை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பிவிட்டான்.
ரவி கிளம்பியதும் ஸ்வாதியைப் பார்த்து நக்கலாக சிரித்தபடி, அவளுக்கு எதிரில் அவளைப் போலவே தோரணையாக அமர்ந்தவன், “என்ன சொல்றாங்க மேடம்?” என ஒன்றுமே நடக்காததைப் போல் வசந்த்திடம் விக்ரம் கேட்க,
“உண்மையைச் சொல்லிட்டு இருக்காங்க…” என வசந்த்தும் கிண்டலாக கூற,
“ஓ… அப்போ நம்ம வேலை ஈசிதான்…” என்ற விக்ரம், ஸ்வாதியைப் பார்த்த பார்வையில் கோபம் கனன்றது.
“ஹான்! என்ன விக்ரம், இன்னும் இங்க இருக்க? உன் ஜூனியரை காப்பாத்த வேண்டாமா? உன் குழந்தையையும் அவ அம்மாவையும் காப்பாத்த வேண்டாமா?” என நக்கலாக கேட்க,
“ம்ம்ம்… காப்பாத்தலாம்… காப்பாத்தலாம்… அதுக்கு அவசரம் இல்ல, எப்படியும் அவனால ஒன்னும் புடுங்க முடியாது. அவனுக்கு நான் வேணும், என்னை நேருக்கு நேரா பார்க்கணும், என்னை அவன் கையால போடணும். அதுதான் அவனோட திட்டம். நரேனை பிடிச்சு வச்சோ, நிசாவை பிடிச்சு வச்சோ அவனுக்கு ஒரு காரியமும் நடக்காது.” என கம்பீரமாக பேசியவனை, புருவம் சுருக்கிப் பார்த்தாள் ஸ்வாதி.
அப்போது வசந்த், “விக்ரம் ஆல் சேஃப். ரெண்டு பேரையும் மால்தீவ் போலீஸ் சேவ் பண்ணிட்டாங்க, சோ…” என இழுக்க,
“ஓகே…” என்றவன், தன் உயரத்திற்கு எழுந்து நின்று எதிரில் இருந்தவளைப் பார்த்தான்.
“இன்னைக்கு நைட் லவ் பேர்ட்ஸ் ரெண்டும் பறந்து போற ஐடியால இருக்கீங்க போல? ம்ம்… இந்த விக்கி விக்கின்னு ஒருத்தன் இருக்கானே, அவனோட பேரன்ட்ஸ் இருக்குறது உனக்கு ஞாபகம் இருக்கா? இத்தனை வருஷம் அவனை மறைச்சு வச்சது, அவங்களுக்குத் தெரிஞ்சா என்ன நடக்கும்னு உனக்கு தெரியுமா?”
“ஹான்! அவங்களை எனக்கு எதுக்குப்பா ஞாபகம் இருக்கணும்? அன்ட் அவங்களுக்குத் தெரிஞ்சா ஏன் என்மேல கோபப்பட போறாங்க? அவங்க பையனை காப்பாத்தி கொடுத்ததுக்கு என் கால்ல விழுந்து கும்பிடுவாங்க.”
“ஓ… அப்படி… ஹ்ம்ம்… ஆனா அவங்க பையனை அடிச்சு இத்தனை வருஷம் மறைச்சு வச்சதே நீதான்னு அவங்க நம்பிட்டு இருந்தா?”
“வாட் டூ யூ மீன்?”
“யெஸ் ஐ மீனிட்! உனக்கு புரியலையா? உங்க ஃப்ரண்ட் கமல் இருக்கானே கமல்… அவனை வச்சு நாங்க இப்படித்தான் சொல்லி வச்சிருக்கோம். அன்ட், அவன் உனக்கு கள்ளக் காதலன்னு குறிப்பா சொல்லி வச்சிருக்கோம்.”
“வாட்…! விக்ரம் திஸ் இஸ் டூ மச். என்னைப்பத்தி தெரிஞ்சும் விளையாடுறியா? உன் பொண்ணும் ஃப்ரண்ட்டும் இப்போ எங்க கஸ்டடில. நான் இங்க இருந்து போனாதான் அவங்க உனக்கு முழுசா கிடைப்பாங்க.”
“ஓ… இப்படி ஒரு செக் இருக்கில்ல, நீ கொஞ்சம் இந்த வீடியோவை பாரு.” என வசந்த், தனக்கு அனுப்பிய வீடியோவை அவளுக்கு நேரே நீட்டி ஓடவிட்டான்.
அதில் நரேனும் உஷாவும் அந்த காட்டுப் பங்களாவில் அடைக்கப்பட்டிருந்தது. பின் நரேனை அடித்தது, உஷாவை மிரட்டியது, பின் இருவரையும் ஒரே அறையில் வைத்து, நரேனுக்கு மட்டும் தூக்கு கயிறை மாட்டியது என அனைத்தையும் காட்ட, புருவ சுழிப்புடன் பார்த்தாள் ஸ்வாதி.
“உங்களை வெளியே கொண்டு வரதுக்கு நான் எவ்வளவு ப்ளான் பண்ண வேண்டியதிருக்கு.” என நிசா, நைனிடால் சென்றபிறகு நடந்ததைக் கூறியவன், “எல்லாரும் ஒன்னா இருந்தாதான் சேஃப்னு எனக்கு தெரிஞ்சது. ஆனா அது உங்களுக்கும் சேஃபாகிட கூடாதில்ல. யாராச்சும் வெளிய இருந்தாதானே நீங்க கை வைப்பீங்க. அப்படி நினைச்சுத் தான் நரேனை ஹனிமூன் அனுப்பினேன்.
எப்படியும் நீங்க சும்மா இருக்கமாட்டீங்கனு தெரியும்…” எனும் போதே, “விக்ரம், நிசா அங்க போயாச்சு, நாமளும் கிளம்பலாம். அங்க நிசாவுக்கும் பேபிக்கும் என்ன வேணும்னாலும் நடக்கலாம். நரேன் அன்ட் உஷா நைட் வந்துடுவாங்க, கம் ஃபாஸ்ட்.” என அவசரப்படுத்த,
“எஸ் வசந்த் போகலாம், நிசா மேல அந்த விக்னேஷ் கை வைக்க மாட்டான். அவனுக்கு நான் தான் வேணும். அவளை தொடணும்னு நினைச்சாலும், என் முன்னாடிதான் தொடணும்னு நினைப்பான். அப்போதான் அவன் ஜெயிச்சிட்டதா, அதாவது இந்த விக்ரமை வின் பண்ணிட்டதா அவனோட எண்ணம். அப்படி நிசா மேல அவன் கை வச்சா அதுதான் அவனோட கடைசி நாளா இருக்கும்.” என கர்ஜித்தவனை ரேணுகா பயந்து பார்த்தார்.
“விக்ரம் போனது எல்லாம் போகட்டும், இவ எக்கேடோ கெட்டு ஒழியட்டும். இந்த சனியனுங்கள பழிவாங்குறேன்னு உங்க வாழ்க்கையை கெடுத்துக்காதீங்க. நிசா இப்போதான் கொஞ்சம் மனம் மாறி வரா, அப்படி இருக்கும்போது மறுபடியும் ஏன் இவ்வளவு பிரச்சனை?” என விக்ரமிடம் பேசும் போதே, அவனது மொபைலில் அலார்ட் வர,
“ம்மா, இன்னையோட இது எல்லாத்தையும் முடிச்சிடலாம். எங்க யாருக்கும் ஒன்னும் ஆகாது. நீங்க குழந்தைகளையும் ரித்தியையும் பார்த்துக்கோங்க.” என்றவன், நொடிக்குள் ஸ்வாதியின் நெற்றியில் தன் பிஸ்டலை வைத்திருந்தான்.
“ஹேய் என்ன பண்ற?” எனத் திமிறியவளை, இழுத்து முன்னே விட்டவன், “உன்னை கொன்னுட்டா நீ உன்னோட விக்கி கூட வாழ முடியாதே ஸ்வாதி. இப்ப என்ன பண்றது?” என நக்கலாக கேட்க,
“வாட்! என்னை கொல்லப்போறியா? உன் ஆசை நாயகியும் உன் பொண்ணும் என் விக்கிக்கிட்ட மாட்டிருக்காங்க. அதை மறந்துட்டு பேசுறியே ரம்… ரம்… விக்ரம்.” என அவளும் பதிலுக்கு நக்கலாக பேச,
“அதுவும் சரிதான், ஆனா இன்னுமா நான் அவங்களை சேவ் பண்ணாம இருப்பேன்? ஹ்ம்ம்… நரேனை காப்பத்தினது நிசாவுக்கு தெரிஞ்சா, அவ ஏன் அங்க போக போறா?” என புருவத்தை உயர்த்த, ஸ்வாதியின் கண்களில் முதல்முறையாக பயம் தெரிந்தது.
***
1 comment
அப்படியே ரெண்டு பேரையும் காணா பொணமாவே ஆக்கிடணும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797