Home Antiheroதளிர் – 74

தளிர் 74

 “ஆர் யூ ஆல் ரைட்?” என்ற மருத்துவரிடம், ‘எஸ்’ எனும் விதமாக தலையை ஆட்டிய உஷா, “அவர்… நரேனுக்கு எப்படி இருக்கு?” என பதட்டத்துடன் கேட்க,

“ஹீ இஸ் நாட் ஃபைன். அவருக்கு அடி ரொம்ப பலம். வலது கைல ஃப்ராக்சர். கழுத்தை நெறிச்சதுல அங்கேயும் இன்டெர்னல் இஞ்சூரி இருக்கு. அன்ட் பாடி ஃபுல்லா உள்காயம். வீக்கமும் இருக்கு, எம்ஆர்ஐ எடுத்துருக்கு, ரிப்போர்ட் வரட்டும், பார்க்கலாம்.” என்றவரிடம்,

“எம்ஆர்ஐ எடுக்கணும்னா பெரிய பிரச்சனையா டாக்டர்?” என உஷா பயந்து போய் கேட்க,

“நோ நோ… எம்ஆர்ஐ ஒரு ரெஃபரன்ஸ்க்குதான், எடுத்துக்குறது பெட்டர். தலையிலயும் அடிபட்டிருக்கு, ரிஸ்க் எடுக்க வேண்டாம். அதனால தான் ஸ்கேன் எடுக்க சொல்லிருக்கேன்.” என விளக்க,

“ஓ… ஓகே டாக்டர், அப்போ நாங்க எப்போ கிளம்பலாம்? எங்களுக்கு அங்க எமர்ஜென்சி வொர்க் இருக்கு.” என்றவளிடம்,

“கண்டிப்பா டூ டேய்ஸ் இங்க அப்சர்வேஷன்ல இருந்துதான் ஆகணும் மிசஸ் உஷா. அன்ட் உங்க பிரதர் விக்ரம் பேசினார். அங்க எந்த பிரச்சனையும் இல்லையாம், உங்க ட்ரீட்மென்ட இங்க கண்டின்யூ பண்ண சொல்றார். அவரே நாளைக்கு வந்து உங்களை அழைச்சிட்டு போறேன்னு சொல்லிருக்கார். அதனால நீங்க ரெஸ்ட் எடுங்க. உங்க ஹஸ்பெண்ட் பத்தி யோசிச்சு வருத்தப்பட வேண்டாம், இங்க இருக்க சிஸ்டர்ஸ் பார்த்துப்பாங்க.” என அவளுக்கு ஆறுதல் சொல்லி வெளியே வரும் நேரம், ஒரு நடுத்தர வயதில் ஒரு தம்பதியர் உள்ளே வந்தனர்.

“வணக்கம் உஷா, நாங்க…” என்று ஒரு ப்ரைவேட் செகியூரிட்டி கார்ட்ஸ் கம்பெனி பத்தி கூறி, “அங்க கார்ட்ஸா இருக்கோம், விக்ரம் சார் கேட்டதால எங்க ரெண்டு பேரையும் உங்களுக்கு பாதுகாப்பா, எங்க கம்பெனில இருந்து அனுப்பிருக்காங்க. நாங்க ஹஸ்பென்ட் அன்ட் வொய்ஃப் அப்புறம் தமிழ்தான். ஊரும் திண்டுக்கல் பக்கம்தான்.

ஸோ எங்களைப் பார்த்து பயந்துக்க வேண்டாம். என் பெயர் மேரி, இவர் என்னோட ஹஸ்பெண்ட் ஸ்டாலின். இவர் உங்க ஹஸ்பென்ட் கூட இருப்பார். நீங்க பயப்படாம தைரியமா தூங்குங்க. இனி இங்க எந்த பிரச்சனையும் இல்ல.” என மேரி பேசிப்பேசியே நிசாவின் பயத்தைப் போக்க,

“ம்ம்… நான் அவரை ஒரு தடவை பார்த்துட்டு வந்துடுறேன். அப்போதான் என்னால நிம்மதியா இருக்க முடியும்.”

“கண்டிப்பா பார்க்கலாம், வாங்க. ஆனா அவர் மயக்கத்துலதான் இருக்கார். அதைப் பார்த்து நீங்க பயந்திடக்கூடாது.”

“இல்ல… இல்ல… பயப்பட மாட்டேன், வாங்க ப்ளீஸ்…” என பரிதவிக்க,

“இருங்க… இருங்க உஷா, ட்ரிப்ஸ் ரிமூவ் பண்ணிக்கலாம்.” என சமாதானம் செய்து, அவள் கையில் இருந்த ஐவி செட்டை ரிமூவ் செய்து, வீல் சேரில் நரேனின் அறைக்கு அழைத்துப் போனார் மேரி.

தலையைச் சுற்றி கட்டு, கழுத்தில் நெக் பேண்டேஜ், ஃப்ராக்சர் ஆன வலது கையில் மாவுக்கட்டு, கண்ணுக்கு கீழே சிறியளவில் பேண்டேஜ், உடலில் ஆங்காங்கே ரத்தக்கட்டுப்போல் சிவந்து வீங்கியிருந்தது.

ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த இடது கையை தன் இரு கைகளுக்குள் வைத்துக் கொண்டவள், “நான் ராசியில்லாதவ நரேன், என்னோட ராசிதான் உங்களை இப்படி படுக்க வச்சிடுச்சா? நான் எதுக்கு பயந்து உங்களை விட்டு தூரமா போனேனோ, அது நடந்துடுச்சே… எனக்கு எல்லார் மாதிரியும் குடும்பமா வாழ்றதுக்கு ஆசையா இருக்கே, அதுக்கு எனக்கு கொடுத்து வைக்கலயா? எனக்குப் பயமா இருக்கு நரேன். அம்மா இல்லாம, அப்பா இல்லாம கூட இருந்துட்டேன். ஆனா, நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது நரேன்.

நீங்க, நான், நம்ம குழந்தைங்கனு எனக்கே எனக்கா ஒரு குடும்பம் வேணும். அந்த குடும்பத்தை எனக்கு கொடுக்காம ஏமாத்திடாதீங்க நரேன்.” என அவன் கைகளில் முகத்தைப் புதைத்து அழுதவளைப் பார்த்து, அருகில் இருந்த மேரிக்கும் கூட மனது பிசைந்தது.

“உஷா என்ன பண்றீங்க? அவருக்குத்தான் ஒன்னும் இல்லன்னு டாக்டர் சொல்லிருக்காரே… நீங்கதான் இப்போ தைரியமா இருக்கணும். நீங்க தைரியமா இருக்கிறதைப் பார்த்தாதான் அவரும் நிம்மதியா இங்க ட்ரீட்மென்ட்க்கு ஓகே சொல்வார். ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர்செல்ஃப் உஷா!” என மேரி அவளை சமாதானம் செய்ய, இருக்கும் சூழ்நிலையும் உஷாவிற்குப் புரிய,

‘ஊரிலிருந்து யாரும் வரும் வரைக்கும் நான் தைரியமாக இருந்துதான் ஆகவேண்டும்.’ என தன்னைத் தானே சமாதானம் செய்துகொள்ள, மேரிக்கும் ஸ்டாலினுக்கும் அப்போதுதான் சற்று நிம்மதியானது.

***

ரவியின் வீட்டிற்குள் நுழையும் போதே, விக்ரம் கொடுத்திருந்த பிஸ்டலை சந்தேகம் வராத அளவிற்கு, தன் இடுப்பில் சொருகிவிட்டு குழந்தையுடன் உள்ளே சென்றாள் நிசப்தி.

அவளின் வருகையை எதிர்பார்த்தது போலவே, வாசலை நோக்கியபடியே ஹாலில் அமர்ந்திருந்தான் விக்னேஷ். நிசாவைப் பார்த்ததும் பார்த்தபடியே நிற்க, தீக்கங்குகளே தோற்று விடுமளவிற்கு கனல் வீசும் பார்வையோடு எதிர்கொண்டாள் நிசா.

“மிசஸ் விக்னேஷா வாழ்ந்துருக்க வேண்டிய மேடம், இப்போ கழுத்துல தாலி இல்ல, ஆனா கையில பிள்ளை. இதை எங்க ஊர்ல என்ன சொல்வாங்க தெரியுமா?” என நிசப்தியை நெருங்கியபடியே விசமாய் கேட்க, அடுத்த நொடி அவன் கன்னத்தில் இடியாய் அடியை இறக்கிவிட்டு தீயாய் முறைத்தாள் பெண்.

அடிவாங்கிய கன்னத்தைத் தடவியபடியே, “அட இதுதான் பார்வையிலேயே எரிக்கிறதா? இந்த பச்சை மரத்தைப் பார்த்ததும் பத்தி எரியுமே, அவங்களை என்ன சொல்வாங்க? ஹான்! பத்தினி… நீங்க பத்தினி தெய்வம் இல்ல… அச்சோ! அப்போ நான் எரிஞ்சு போயிடுவேனா?” என பேசியபடியே அருகில் வந்தவன், நிசா சுதாரிக்கும் முன்னே குழந்தையை அவளிடமிருந்து பிடுங்கியிருந்தான்.

“ஏய்…! விடு! விடுடா… குழந்தையை விடுடா. என் குழந்தையை விடு.” என அவனிடமிருந்து குழந்தையை வாங்க போராட, இந்த இழுபறியில் குழந்தையும் பயத்தில் கத்த, குழந்தை அழ ஆரம்பிக்கவும் நிசாவிற்கு கோபம் அதிகமாக, அவனிடமிருந்து வேகமாக இழுக்கப்போக, அதை உணர்ந்தவன் போல வலதுபக்கம் குழந்தையைப் பிடித்துக்கொண்டு, இடதுகையால் நிசாவைப் பிடித்து தூர தள்ளியிருந்தான்.

“அம்மா!” என்றபடியே சோஃபாவின் விளிம்பில் தலை மோதி கீழே விழ, இடித்ததில் தலையிலிருந்து கோடாகக் குருதி வழிய ஆரம்பித்தது.

அது எதையும் பொருட்படுத்தாமல், குழந்தை அழுவதையும் தாங்க முடியாமல், “என் குழந்தையைக் கொடுத்துடு ப்ளீஸ்… என்மேல என்ன தப்பு இருக்கு? எதுக்காக என்னை எல்லோரும் இவ்வளவு கஷ்டப்படுத்துறீங்க? நீதான் நாம மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொன்ன. அப்புறம் நீதான் அந்த கல்யாணம் வேண்டாம்னும் சொன்ன. உனக்கும் அவனுக்கும் இருந்த பிரச்சனையில என்னை ஏன் இவ்வளவு டார்ச்சர் பண்றீங்க? நான் செஞ்ச ஒரே தப்பு, அவன் நினைச்சு உன்னைப் பார்த்ததுதான்.

அது தப்புன்னு புரிஞ்ச நேரம், நீ வெட்டிங்க்கு கேட்டப்போ எல்லாத்தையும் மறந்து, உனக்கு ஓகேதான சொன்னேன். இதுல என் தப்பு என்ன? சொல்லு, என் தப்பு என்ன, எங்க இருக்கு? நீங்க எல்லாருமா சேர்ந்து என் வாழ்க்கையை பாழாக்கினதுமில்லாம, என் அப்பாவையும் கொன்னுட்டீங்களே…” எனத் தலையிலடித்துக் கொண்டு கதறியவளை சுவாரஸ்யமாக பார்த்தான் விக்னேஷ்.

“ம்ம்…” என பெருமூச்சுவிட்டவன், “அக்மார்க் பத்தினி தெய்வம்தான். கண்டிப்பா நான் ஒத்துக்குறேன்.” என்ற கிண்டல் குரலில், அதிர்ந்து விழித்து எதிரில் இருந்தவனைப் பார்த்தாள் நிசா.

அவனோ தசிராவை சோஃபாவில் அமர்த்தி அதன் கையில் ஒரு பிஸ்டலை கொடுத்திருந்தான். அவன் கையிலும் ஒரு பிஸ்டல் இருந்தது. அது நேராக குழந்தையின் நெற்றியை குறி பார்த்தபடி இருந்தது.

“ஏய்! என்ன பண்ற? குழந்தை கையில இருந்து துப்பாக்கிய வாங்கு. வாங்குடா…” என பதறி எழுந்தவளைப் பார்த்து, நக்கலாக சிரித்தவன் அவள் அமர்ந்திருந்த சோஃபாவை நோக்கி சுட, அந்தச் சத்தத்தில் தாயும் மகளும் மிரண்டு போயினர்.

“நான் என்ன பண்ணேன்? நான் என்ன பண்ணேன்? ஹா… ஹா… எவ்வளவு தைரியம் உனக்கு, இதை எங்கிட்ட கேட்குறதுக்கு? நீ ஒன்னுமே பண்ணலையா? சொல்லுடி, நீ ஒன்னுமே பண்ணலையா? என் வாழ்க்கையை வாழ விடாம நரகத்தைக் காட்டினது நீதான்னு உனக்கு மறந்துடுச்சா? ஹ்ம்ம்… வாழ்வா, சாவான்னு தெரியாம ஹாஸ்பிடல்ல ஆறு மாசம் கிடந்தேன். ஆனா நான் செத்துட்டேன்னு முடிவு செஞ்சி, நீ அடுத்த லைஃப்க்கு மூவான் பண்ணிட்டு போயிட்ட.

ஒருத்தனை அடிச்சி போட்டுட்டு, அவன் இருக்கானா இல்லையானு கூடத் தெரிஞ்சிக்காம, நீ ஊரை விட்டு போய் நிம்மதியா இருப்ப. உன்கிட்ட அடிவாங்கிட்டு நான் பொ*** மாதிரி ஒளிஞ்சு மறைஞ்சு வாழணுமா? இது எந்த ஊர் நியாயம், சொல்லுடி…?” என கர்ஜிக்க, அந்த கர்ஜனை குரலில் இருவருக்கும் உடல் தூக்கி போட்டது.

குழந்தை அழுவதைப் பொறுக்க முடியாமல், “நீ என்ன வேணும்னாலும் சொல்லு, நான் இங்க இந்த இடத்துலயே அமைதியா இருக்கேன், கேட்குறேன். ஆனா குழந்தை கைல இருக்குற பிஸ்டலை வாங்கு ப்ளீஸ்… உன் கால்ல வேணும்னாலும் விழுறேன்.” என கெஞ்சிக் கொண்டே அவனிடம் நகர்ந்தவளைப் பார்த்து, நக்கலாக சிரித்தவனின் பார்வை வாசலில் படிய அங்கு, “அம்மா… நிசா…” என உள்ளே வந்து கொண்டிருந்த ரவி கண்ணில் பட்டான்.

“ஆஹான்… இந்த விக்னேஷ் கையால இரண்டாவது பலி, ஆடு தானா வந்து சிக்கிடுச்சு.” என நிசாவைப் பார்த்து சட்டென்று கண்ணைச் சிமிட்டியவன், குழந்தையின் அருகில் நெருங்கியமர, அது பயத்தில் இன்னும் வீலென்று அழ ஆரம்பித்தது.

“டேய் ப்ளடி பா*** என்னடா பண்ற குழந்தையை…?” என்று வேகமாக வந்த ரவியிடம், பிஸ்டலை சுழட்டி காட்டி குழந்தையின் நெற்றியில் வைத்து புருவத்தை உயர்த்த,

“வேண்டாம் விக்னேஷ், தப்புக்கு மேல தப்பு பண்ற. குழந்தையை விட்டுடு, அவளை ஒன்னும் செய்யாத. தசிரா மேல கை வச்சது விக்ரமுக்கு தெரிஞ்சது, உன்னை சும்மா விடமாட்டான்.” என பேசியபடியே சுற்றுப்புறத்தை ஆராய்ந்தான்.

அதுவரை கோபமாக இருந்தாலும் அமைதியாக பேசிக் கொண்டிருந்த விக்னேஷ், ரவியின் விக்ரம் என்ற பேச்சில் மீண்டும் அவன் கண்களில் பழிவெறி கனன்றது.

“ஓ… இது அவன் பொண்ணுல்ல, அதை மறந்துட்டேன் பாரு. என்னோட நண்பன் விக்ரம். அவனோட பொண்ணு இந்த பாப்பா. இந்த பாப்பாவை நான் நல்லா…” நல்லா என்றதில் அழுத்தம் கொடுத்து, “நல்லா… கவனிக்கணும் இல்ல…”

பிறகு, “என் நண்பன் என்னைத் தப்பா நினைச்சிடக் கூடாதில்ல…” என்றபடியே, தன் பாக்கெட்டில் வைத்திருந்த ஸ்லீப்பிங் ஸ்ப்ரேயை எடுத்து, நொடியில் குழந்தையின் முகத்தில் அடிக்கவும், இதை சற்றும் எதிர்பார்க்காத ரவி, “டேய்!” என அவன்மீது பாயவும் சரியாக இருந்தது.

இருவரும் கட்டிப்பிடித்து மல்லுக்கட்டி உருள, இருவர்களிடமுமிருந்து ஒதுங்கி தசிராவிடம் சென்ற நிசா, அவளைத் தூக்கி, “அம்மு… அம்மு…” என கன்னத்தைத் தட்ட, அதுவோ மயங்கி அவள் மீதே சரிந்தது.

***

You may also like

Leave a Comment

About Me

Featured