Home Antiheroதளிர் – 75

தளிர் 75

“அம்மு…” என அந்த வீடே அதிரும்படி கத்தி கதறியவள், அப்போதுதான் ஸ்வாதியை இழுத்துக்கொண்டு, முகுந்தனோடு வேகமாக உள்ளே வந்த விக்ரமைப் பார்த்தாள்.

பார்த்தவளுக்கு கண்மண் தெரியாத கோபம் வர, கண்ணில் வழிந்த நீரை வேகமாகத் தட்டிவிட்டு, ஆவேசமாக குழந்தையோடு அவனிடம் சென்று, “பாவி… பாவி… உனக்கு நான் என்னடா பாவம் பண்ணேன்? என் வாழ்க்கையைத்தான் எல்லாரும் சேர்ந்து சீரழிச்சீங்க. என் குழந்தை என்னடா பண்ணுச்சு? அது வாழ்க்கைலயும் விளையாண்டுட்டீங்களே…” என ஒரு கையில் குழந்தையை வைத்துக் கொண்டு, மறுகையால் விக்ரமின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள் நிசப்தி.

“ஏன் இப்படி செஞ்ச? உன்னை எவ்வளவு நம்பினேன்? என்னை விட்டமாதிரி பாப்பாவை விட்டுட மாட்டனு எவ்வளவு நம்பினேன்? ஏன் இப்படி செஞ்ச?” என கத்திக் கதறியவள் அவனை அடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

அவளை இழுத்து குழந்தையோடு அணைத்தவன், “அம்முக்கு ஒன்னும் இல்ல நிசாம்மா, கொஞ்சம் நான் சொல்றதைக் கேளு. அதுதான் நான் வந்துட்டேனே, எல்லாம் நான் பார்த்துக்குறேன். நீ உடனே முகுந்தோட ஹாஸ்பிடல் கிளம்பு.” என அவளை சமாதானம் செய்ய, அவனிடமிருந்து திமிற ஆரம்பித்தாள்.

அறைந்ததில் உதட்டோரம் லேசாகக் கிழிந்து ரத்தம் கூட துளிர்த்தது விக்ரமிற்கு, அதை பொருட்படுத்தவில்லை. தன் அணைப்பிலிருக்கும் இரு உயிரும் அவனுக்கு மிக முக்கியம்.

குழந்தையை வாங்கி, “அம்மு… அம்மு…” என கன்னத்தைத் தட்ட, அதுவோ எந்த உணர்வும் இல்லாமல் இருக்க, தவித்தபடியே தட்டிக் கொண்டிருந்தவனிடமிருந்து, “இங்க கொடு…” என வாங்கிய முகுந்த் குழந்தைக்கு முதலுதவி செய்ய ஆரம்பித்தான்.

அங்கு அடித்து உருண்டு கொண்டிருந்தவர்களிடம் ஆக்ரோசமாக வந்த விக்ரம், “பாஸ்ட***” என விக்னேஷின் கழுத்தில் காலை வைத்து அழுத்தினான்.

விக்ரமின் இந்த செயலில் விக்னேஷ் திமிறிக் கொண்டிருக்க, “முகுந்த், பாப்பாவையும் அவளையும் கூப்பிட்டு ஹாஸ்பிடல் கிளம்பு. குவிக்… ரஞ்சனிக்கு எமர்ஜென்சினு முன்னாடியே சொல்லி ரெடி பண்ண சொல்லு. கமான்…” என்றபடியே மேலும் விக்னேஷின் கழுத்திலிருந்து காலை இறக்கி நெஞ்சில் அழுத்த,

“ஏய்… விடு… விடு… விக்கியை விடு.” என ஓடி வந்த ஸ்வாதியைப் பிடித்து, தன் கோபத்தையெல்லாம் சேர்த்து ஓங்கி அறைந்திருந்தாள் நிசா.

“ஏய்… என்னையே அடிச்சிட்டியா? உன்னை…” என ஆங்காரமாக வந்த ஸ்வாதியை மீண்டும் அறைந்து, “கொன்னுடுவேன்…” என ஆவேசமானவள், முகுந்தனிடமிருந்த தசிராவை வாங்கிக்கொண்டு “அம்மு… அம்மு…” என்றபடியே அவசரமாக வெளியில் நடக்க, முகுந்தனும் அவள் பின்னே ஓடினான்.

அதற்குள் விக்னேஷின் பிடியில் இருந்து வெளியில் வந்த ரவியும் ஸ்வாதியைப் பிடித்து, கன்னம் கன்னமாக அறைந்திருந்தான்.

“நீயெல்லாம் ஒரு பொம்பளையாடி? ச்சீ… உன்கூட பிறந்தத நினைச்சு அசிங்கப்படுறேன், கேவலமா நினைக்கிறேன். குழந்தைக்கு மட்டும் எதாச்சும் ஆகட்டும், உனக்கு இருக்குடி… என் கையாலத்தான் உனக்கு சாவு.” என கர்ஜித்து, அவளைப் பிடித்து விக்னேஷின் மேலேத் தள்ளிவிட,

“ரவி, நாம வந்து இவ்வளவு நேரமாச்சு, ஆன்ட்டி இன்னும் வெளியவே வரல, என்னனு பாரு…” என்ற விக்ரமின் பேச்சைக் கேட்டு, ரவியும் ஸ்வாதியும் அதிர்ந்து போயினர்.

உடனே ரவி பதட்டத்தில் வேகமாக ஒவ்வொரு அறையாகத் தேட, ஸ்வாதியோ விக்னேஷின் மேலிருந்த விக்ரமின் காலைத் தள்ளிவிட முயன்றபடியே, “எடு, காலை எடுடா. விக்கியை விடு…” எனக் கத்த ஆரம்பித்தாள்.

அதற்குள் விக்ரமின் காலை அகற்ற முடியாமல் தவித்த விக்னேஷின் கண்கள் சொருக ஆரம்பிக்க, அதைப் பார்த்த ஸ்வாதி அங்கிருந்த இரும்பினால் ஆன ஃப்ளவர் வாஷை எடுத்து விக்ரமை அடிக்கப் போனாள்.

அவள் அடிக்க வரும் நேரம், சட்டென்று கீழேக் கிடந்த விக்னேஷைத் தூக்கி தன்னை மறைத்து தனக்கு முன்னே நிறுத்தியிருந்தான் விக்ரம்.

விக்ரமை அடித்து நொறுக்கும் அளவிற்கான கோபத்தில் ஓங்கிய அந்த ஃப்ளவர் வாஷ், விக்னேஷின் தலையில் இறங்கியதை அதிர்ச்சியோடு பார்த்தாள் ஸ்வாதி.

“விக்ரம்… விக்கியை விடு, என் விக்கியை விடு… அவனை ஒன்னும் பண்ணாத விடு…” என விக்ரமின் கைகளைப் பிடித்து இழுத்து கீழேத் தள்ள முயற்சிக்க, இப்போது தன் பிடியில் ரத்தம் வழிய நின்றிருந்த விக்னேஷை, ஸ்வாதியை நோக்கித் தள்ளிவிட்டான் விக்ரம்.

விக்ரமின் ஒவ்வொரு செய்கையிலும் அவ்வளவு மூர்க்கத்தனம், அவ்வளவு ரௌத்திரம். கண்கள் இரண்டும் கோபத்தில் சிவந்து பார்க்கவே பயமாக இருக்க, உடல்மொழியும் எக்கின் உறுதியாய் இருந்தது.

விக்ரம் அப்படி தள்ளியதில் ஸ்வாதி மீதே விழுந்திருந்தான் விக்னேஷ். ஸ்வாதியோ அங்கிருந்த கண்ணாடி டீப்பாயின் மேல் விழ, அவளது முதுகில் பலமான அடி விழுந்தது.

“அம்மா!” என அலறியபடியே விக்னேஷைப் பிடிக்க, அவனோ கொஞ்சம் கொஞ்சமாக தன் சுயநினைவை இழந்து கொண்டிருந்தான்.

தன் மீதான விக்னேஷின் பாரத்தை உணர்ந்த ஸ்வாதி, அவன் மயக்க நிலைக்கு செல்கிறான் என்பதை உணர்ந்து, “விக்கி… விக்கி…” என பைத்தியம் போல கத்த ஆரம்பித்தாள்.

வெறி கொண்ட வேங்கை போல இருவரையும் பார்த்தவன், ஸ்வாதியை இழுத்து தனியாக தள்ளி, விக்னேஷைப் பிடித்திழுத்து ஒரு சோபாவுக்கு அருகில் விட்டு, அதே சோபாவில் அமர்ந்து விக்னேஷின் தலையைப் பிடித்து, நெற்றியில் தன் பிஸ்டலை வைத்தான்.

“விக்ரம், எங்களை விடு. நாங்க ஹாஸ்பிடல் போகணும். விக்கிக்கு உடனே ட்ரீட்மென்ட் கொடுக்கணும். ஹீ நீட் ட்ரீட்மென்ட். ப்ளீஸ் விக்ரம்…” என தன் வழக்கத்துக்கு மாறாக கெஞ்சிய ஸ்வாதியை நேர்கொண்டு பார்த்தான்.

“ஆஹான்… ட்ரீட்மென்ட் கொடுக்கணுமா? கொடுக்கலாம், கொடுக்கலாம்… ஃபர்ஸ்ட் என் பொண்ணுக்கு அவன் என்ன ஸ்ப்ரே பண்ணான்னு கேட்டு சொல்லு.” என விக்ரம் மிரட்ட,

“விக்கி… விக்கி… சீக்கிரம் அது என்ன ஸ்ப்ரேன்னு சொல்லு, நாம ஹாஸ்பிடல் போகணும். சீக்கிரம் சொல்லு விக்கி…” என மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்த, விக்னேஷின் கன்னத்தில் தட்டியபடி கதறியவளைப் பார்த்தவன், திரும்பி விக்ரமைப் பார்த்தான்.

அதற்குள் மேலே இருந்த ஒரு அறையிலிருந்து ரவியின் “அம்மா…!” என்ற கதறல் கேட்க,

“என்னாச்சு… ரவி, என்னாச்சு?” என விக்ரமும் பதட்டத்துடன் கத்த,

“அம்மா விக்ரம்… அம்மாவை கொன்னுட்டான் விக்ரம்.” என கத்தி கதற, அதைக்கேட்டு அதிர்ந்த ஸ்வாதி, விக்னேஷை ஏன் இப்படி செய்தாய் என்று பார்த்தாள்.

அவள் விழிகளில் அதிர்ச்சியும், ஏன் செய்தாய் என்ற கேள்வியும் இருக்க, அதை உணர்ந்தவன் போல “ஸ்வீட்டி, நம்ம லைஃப்க்கு இடைஞ்சலா யார் வந்தாலும் அவங்க தேவையில்லன்னு நாம முடிவு பண்ணோமே. உங்க அம்மாவுக்கு இந்த விக்ரம் தான் மாப்பிள்ளையா வரணுமாம். உன்னைவிட்டு என்னை போகச் சொன்னாங்க. அது முடியாது. நீங்க அவளைவிட்டு போங்கன்னு அனுப்பிட்டேன்..” என ஒரு கொலை செய்ததை எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் கூற, என்ன சொல்வது என புரியாமல் அவனையே பார்த்தாள் ஸ்வாதி.

அவளுக்குமே இது அதிர்ச்சிதான்.

விக்னேஷ் கொலை செய்யும் அளவுக்கு, அதிலும் தன் தாயையே கொலை செய்யும் அளவுக்கு செல்வான் என்று அவளுமே எதிர்பார்க்கவில்லை.

அதற்குள் கீழே வந்த ரவி, ஸ்வாதியின் முடியைப் பிடித்து தூக்கி கொஞ்சமும் பாரபட்சம் பார்க்காமல் அடிக்க ஆரம்பித்திருந்தான்.

கோபம்! கோபம்! கோபம்! கண்மண் தெரியாதளவிற்கு கோபம்.

“அவளை ஒன்னும் செய்யாத, ஸ்வீட்டியை விடு…” என்ற விக்னேஷை, விக்ரம் அடி நொறுக்க ஆரம்பித்திருந்தான்.

“எவ்வளவு திமிர்டா?! ஒரு கொலையும் பண்ணிட்டு அதுக்கு என்ன டேஷ் விளக்கம் கொடுக்குற? இதுக்கு பிறகு உங்களை சும்மா விட்டு வச்சா இன்னும் எத்தனை கொலை பண்ணுவியோ…?” என அடிக்க,

“ரவி அவளை விடு, கொன்னது நான், நீ என்னைத்தான் அடிக்கணும்.” என்ற விக்னேஷின் வாயில் விக்ரம் ஒரு குத்து விட்டு, “உன்னை பிடிக்கலன்னு அவ அம்மாவை நீ கொன்ன, அவளைப் பிடிக்கலன்னு உன் அம்மா சொன்னா, அவங்களையும் கொன்னுடுவீங்களா? சொல்லுடா ப்ளடி ஃபா***” என்ற விக்ரமிடம்,

“விக்ரம் நீ தப்புக்கு மேல தப்பு பண்ற… உன் பொண்ணை நினைச்சுப்பாரு, அவளை காப்பாத்த விக்னேஷ் வேணும்.” என்ற ஸ்வாதியின் பேச்சில், ஆத்திரம் மேலோங்க அவளின் இடது கையை உடைத்தான் ரவி.

“எவ்வளவு திமிர், எவ்வளவு ஆங்காரம், எவ்வளவு பழிவெறி உனக்கு? பெத்த அம்மாவை கொன்னுட்டான், அதுகூட உனக்கு பெருசா தெரியல. அவனுக்கு நீ சப்போர்ட் பண்ற? உனக்கு உன் காதல் ச்சீ… ச்சீ… காதல் இல்ல, கள்ளக்காதல். கள்ளக் காதல்தான் முக்கியம் இல்ல. உன்னை கொன்னாத் தான்டி என் மனசு ஆறும்.” என ஸ்வாதியைப் பிடித்து சராமரியாக ரவி அடிக்க,

“ரவி ப்ளீஸ் விடு, எனக்கு விக்கியைத்தான் பிடிச்சிருந்தது. அவனுக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன், அவனுக்காக செய்வேன். நான் ஏற்கனவே அம்மாக்கிட்ட விக்கியைத்தான் பிடிச்சிருக்குனு சொன்னேன். நான் சொல்லியும் அவங்க கேட்கல. அதுக்குத்தான் விக்கி…” என முடிக்கும் முன்னே, அங்கிருந்த போட்டோ ஸ்டான்டை எடுத்து அவள் தலையில் அடித்திருந்தான் ரவி.

“டேய்…” என தன் பிடியில் இருந்து திமிறிய விக்னேஷப் பிடித்து நிறுக்கிய விக்ரம், “நீ ஏன் செஞ்ச? எதுக்கு செஞ்சன்னு விளக்க ம***ரெல்லாம் கொடுக்க வேண்டாம். அது எல்லாம் எனக்குத் தெரியும், இப்போ உன் கண் முன்னாடியே இவளை கொன்னுட்டா?” என்றவனின் குரலில் இருந்த கோபம், ஸ்வாதியைக் கெஞ்ச வைத்தது.

“விக்கி ப்ளீஸ்… அது என்ன ஸ்ப்ரேன்னு சொல்லு. நாம ஹாஸ்பிடல் போகணும், உனக்கு உடனே ட்ரீட்மென்ட் எடுக்கணும்.” என ரவியின் பிடியிலிருந்தபடியே விக்னேஷிடம் கெஞ்ச ஆரம்பித்தாள்.

தன்னை கொன்று விடுவேன் என்று ஒருவன் மிரட்டுகிறான், அப்படியிருந்தும் பயப்படாமல் எனக்காக தவிக்கிறாள், கெஞ்சுகிறாள். இவளை எப்படி விடமுடியும்? இவர்கள் யாரும் இல்லா ஓரிடத்திற்கு இவளை இழுத்துக்கொண்டு போய்விட வேண்டும். அங்கு திகட்ட திகட்ட காதலோடு ஒரு வாழ்வு வாழவேண்டும் என்று நினைத்த நேரம், இந்த விக்ரமையும் எப்படி விடமுடியும்? அவனோ இல்லை அந்த நிசாவோ உயிரோடு இருந்தால், அதை நினைத்து நினைத்தே மீதி வாழ்க்கையை வாழ முடியாது. அப்படி ஒரு வாழ்க்கை நிச்சயம் அவனால் வாழவே முடியாது.

ஒன்று அந்த விக்ரம் அல்லது நிசா சாக வேண்டும். இல்லை இந்த விக்னேஷ் அல்லது ஸ்வாதி சாக வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். மெல்ல மெல்ல மீண்டும் அவனுக்குள் மூர்க்கமும் விசமும் ஏறியது. அதோடு அவனின் நீங்காத ரணம் அந்த மருத்துவமனை வாசம்.

அனைவரும் இருந்தும் அனாதை போல் ஏதோ ஒரு மூலையில் கிடந்தது, இப்போது வரைக்கும் ஒளிந்து வாழ்வது என அவனால் அதை ஒதுக்கி வெளியில் வரவே முடியவில்லை. அப்படி ஒரு வலியைக் கொடுத்த ரணமது. அந்த ரணம் வார்த்தைகளாக வெளி வந்தது.

“நான் எப்படி எல்லோரும் இருந்தும், யாரும் இல்லாம கஷ்டப்பட்டேன். அந்த வலியை அவனுக்கு நான் கொடுக்கணும். தன்னோட பொருள் ஒன்னு, எதிராளிக்கிட்ட இருந்தா அது எவ்வளவு பெரிய வலி. அந்த வலியை ஏற்கனவே உன் மூலமா நான் அவனுக்கு கொடுத்துட்டேன். இனி அந்த நிசாவை கொன்னு இவனை நடைபிணமா மாத்தணும், அவ்வளவுதான்.” என அந்த வலியிலும் குரோதமாக பேச, ஸ்வாதிக்கு பயம், பயம்தான்.

“ஹா… ஹா… உன்னோட ரிவெஞ்ச் ரொம்ப நல்லாத்தான் இருக்கு. நிசா இல்லாம நான் நடைபிணம். ஆனா, ஸ்வாதி இல்லாம நீயும் அப்படித்தானே இருப்ப? ஒருவேளை என்னை பழிவாங்குறதுக்காக அவளை யூஸ் பண்ணிக்கிட்டியா?” என பிஸ்டலை கொண்டே தாடையைத் தடவியவன்,

“ரவி அவளை விட்டுட்டு ஆம்புலன்ஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணு, வசந்த் இப்போ வந்துடுவார்.” என்றதும்,

“ஹேய்! என் விக்கியைப் பத்தி தப்பா பேசாத. ஹீ இஸ் மைன்…!” என முடிக்கும் முன்னே, ஸ்வாதியின் உடைந்த கையைத் திருகியிருந்தான் ரவி.

“ம்மா… ரவி ப்ளீஸ்… விடு ரவி…” என அலறியவளை அங்கிருந்த சேரில் அமர்த்தி கட்டினான். பின் ஆம்புலன்ஸ்க்கு அழைத்து கூறிவிட்டு விக்ரமின் கையிலிருந்த விக்னேஷின் காலரைப் பிடித்துக்கொள்ள விக்ரம், ஸ்வாதியின் எதிரில் வந்தமர்ந்து ரவியைப் பார்த்தான்.

ரவி கண்ணைக் காட்ட, “உனக்கு லாஸ்ட் சான்ஸ் தரேன், இன்னும் கொஞ்ச நேரத்துல வசந்த் வந்துடுவார். ஃபுல் போலீஸ் ஃபோர்சோட, எங்கிட்ட திமிரா பேசின மாதிரி, போலீஸ்கிட்ட பேச முடியாது. அங்க உங்களை விசாரிக்கிற விதமே வேற, இப்பவே பாதி உயிர் போயிடுச்சு, இனி அவங்க அடிச்சா…” என நிறுத்த,

“நோ… நோ விக்ரம்… அவனுக்கு இப்போ உடனே ஹாஸ்பிடல் போகணும். ப்ளீஸ் ஹெல்ப் பண்ணு விக்ரம்…” என ஸ்வாதி கெஞ்ச,

“ஓகே, உன்னையும் அவனையும் தப்பிக்க விட்டுடுறேன், ஆனா…” என இழுக்க,

“என்ன விக்ரம், ப்ளீஸ் சொல்லு… நாங்க என்ன செய்யணும்?” என ஸ்வாதியே மீண்டும் கேட்க,

“ஸ்வாதி, வாயை மூடு! அவனுங்க சொல்ற மாதிரி கேட்டா, கண்டிப்பா நாம தப்பிக்க முடியாது.” என விக்னேஷ், ஸ்வாதியை அடக்க,

“விக்கி ப்ளீஸ்… நீ அமைதியா இரு, உனக்கு இப்போ ஹாஸ்பிடல் போகணும். அதுக்காகத்தான் நான் பேசிட்டு இருக்கேன். நான் பார்த்துக்குறேன், ப்ளீஸ்…” என்றவள், “நீ சொல்லு விக்ரம்…” என விக்ரமிடம் கேட்க,

“ம்ம்… பெருசா ஒன்னுமில்ல. நீங்க செஞ்சதெல்லாம் அப்படியே ஏ டூ இசட் வரிசையா சொல்லு. எங்களுக்கு எவ்வளவு தெரிஞ்சிருக்குன்னு நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்.” என நக்கலாகக் கேட்க,

“நோ… ஸ்வாதி நோ… டோன்ட் சே எனிதிங் டூ எனிஒன்…” என்ற விக்னேஷின் நெஞ்சிலே, ரவி இரண்டு முறை குத்த, அதைப் பார்த்த ஸ்வாதி,

“நோ… நோ ரவி… விக்கியை ஒன்னும் பண்ணாத. நான் எல்லாம் சொல்றேன், ப்ளீஸ் அவனை அடிக்காத…” என்றவளுக்கும் மயக்கம் வரும் போல் இருக்க, கண்ணை மூடி மூடி திறந்தாள்.

அதை கவனித்த விக்ரம், நீரெடுத்து அவள் தலை வழியே ஊற்ற, “நான் சொன்னதும் எங்களை விட்டுடணும் விக்ரம். இனி நாங்க இங்க வரவே மாட்டோம். உங்க வாழ்க்கையை தொந்தரவும் பண்ண மாட்டோம்.” என்ற ஸ்வாதியைப் பார்த்து நக்கலாக சிரித்தவன்,

“முதல்ல நீ சொல்லுமா, அப்புறம் அந்த முடிவுக்கு வரலாம். எதுவும் மிஸ் ஆகக்கூடாது.” என்றதும் சரியென்று, விக்னேஷ் வேண்டாம் வேண்டாம் என்றுக் கத்தியும் கேட்காமல், அவள் செய்த அனைத்தையும் கூறியிருந்தாள்.

அனைத்தும் தெரிந்ததுதான், முதலில் யூகமாக இருந்தது. பின் கண்டுபிடித்தது என அனைத்தும் முன்னே அறிந்ததுதான். ஆனால் இன்று அவள் வாயால் கேட்கும்போது வலித்தது. தன்னை நினைத்தே அருவருப்பாக இருந்தது. காதலி, மனைவி என்ற போர்வையில் அவள் செய்த சூழ்ச்சிகள் மனதை ரணமாக்க, கண்களை மூடி அந்த வலியையும் ஏமாற்றத்தையும் ஜீரணிக்க முற்பட்டான்.

அந்த நேரம் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருப்பதாக, அதன் சைரன் ஒலி தூரத்தில் கேட்க, ஸ்வாதிக்கு இனி தப்பிக்க முடியாதோ என்ற பயம் வந்துவிட்டது.

உடனே வேகமாக விக்னேஷைப் பார்க்க, அவனும் அரை கண்ணால் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். ‘என்ன செய்ய…?’ என பரிதவித்தபடி அவனிடம் விழியால் வினவ, அவனோ விக்ரமின் கையிருந்த பிஸ்டலை கண்காட்டினான்.

அதில் இறுக்கமாக கட்டப்பட்டிருந்த கயிறு அவள் நெளிந்து நெளிந்து லூசாகிருக்க, விக்னேஷ் கண்ணைக் காட்டவும் நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், விக்ரமிடமிருந்த பிஸ்டலை பிடுங்கிய ஸ்வாதி அவனை நோக்கி சுட்டிருக்க, ரவியின் விக்ரம் என்ற அலறலே அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது.

***  

You may also like

Leave a Comment

About Me

Featured