சரண் – 30
பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே
உனக்கென பிறந்தவள் நானா
நிலவுக்குத் துணை இந்த வானா
வாழ்ந்தேனே உறவின்றி முந்நாள்
வந்தாயே உறவாக இந்நாள்
எந்தன் நெஞ்சில்..ஹோ…ம்..ம்..
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா..ஆ..
இசைக்கும் குயில் நீதானா வா..ஆ
********
திருமண நிகழ்வுகள் முடிய, அதைத் தொடர்ந்து திறப்பு விழா நிகழ்வுகள் பரபரப்பாகத் தொடங்கியது. ஊர்மக்கள் அனைவரும் ஒரு திருவிழாவை வேடிக்கைப் பார்ப்பது போலவே பார்த்திருந்தனர். கணபதி கோமத்தில் புகழும் – அரூபியும் தம்பதி சமேதராக அமர்ந்திருந்தனர்.
முதலில் புகழ் இதை ஏற்றுக் கொள்ளவே இல்லை. தன்னைவிட வெற்றியும் மங்கையும் தான் இதில் அதிகம் சிரமத்தை தாங்கியிருந்தனர், அதனால் அவர்களே அமரட்டும் என முரண்டு பிடிக்க, யார் சொல்லியும்கேட்கவில்லை. பிறகு மங்கை கர்ப்பமாக இருப்பதால் பூஜையில் உட்காரக் கூடாது என்ற நாச்சியர் விளக்கவும் தான் அமைதியாகப் போய் மனையில் அமர்ந்தான்.
அமைச்சரின் வருகைக்கு முன்னே, முதற்கட்ட நிகழ்வுகளை முடித்துவிட வேண்டும் என முனைப்பாக இருந்தனர். வனிதா மங்கையை வேலையே செய்யவிடவில்லை. தன் அப்பாவிடம் வந்து “அப்பா இவளை எங்கேயும் விடாதீங்க. மினிஸ்டர் வந்ததும் நான் வந்து இவளை அழைச்சிட்டுப் போறேன். புடவையைத் தூக்கிட்டு இவ நடக்குறதைப் பார்த்தா எனக்குப் பயமா இருக்கு. பிறகு இவ புருஷனுக்கு யார் பதில் சொல்றது..” என்று மங்கையை அவரிடம் விட்டுவிட்டுச் சென்றார்.
சென்று கொண்டிருந்த அத்தையை முறைத்தவள், பின் “பாருங்க தாத்தா இந்த அத்தையை. எனக்கும் அங்க எல்லாம் பார்க்கனும் போல இருக்காதா..” எனச் சினுங்க
“அதெல்லாம் பார்க்கலாம் குட்டி, ஆனா இப்போ வேனாம். வாந்தி பண்ணி டயர்டா இல்லையா உனக்கு. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமே குட்டிம்மா.. எல்லாரும் இருக்காங்க தானே. உடம்புக்கு முடியாம போச்சுன்னா வெற்றிக்கு என்ன பதில் சொல்ல.. நீ இங்கேயே இரு. வெற்றி வரட்டும்..” என கனிவாக சொல்ல
“ம்ம்ம்… மாமா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்கும் தெரியும்.. என்னைக் காணோம்ன்னு தேடி இங்க வருவாங்க பாருங்க..” என்றவளைப் பார்த்த ராமசாமி “நீ சந்தோசமா இருக்கியா குட்டிம்மா.. நீங்க ரெண்டு பேரும் இருக்குறதைப் பார்த்து நான் எதுவும் கேட்டுருக்கக் கூடாது தான். உன்னோட அம்மா அப்பா இருந்திருந்தா நான் இப்படி கேட்டுருக்க மாட்டேன். நான் என்ன சொல்ல வர்ரேன்னு உனக்குப் புரியுதா..? அம்மா மேல இருக்குற கோபத்தை வெற்றி உங்கிட்ட காட்டல தானே..” என எப்படிக் கேட்பது என பரிதவிப்புடன் கேட்டவரைத் தீர்க்கமாகப் பார்த்தவள்
“எல்லாரும் உங்களை மாதிரியே இருக்க மாட்டாங்க தாத்தா. இன்னைக்கு அத்தை இப்படி இருக்க காரணமே நீங்கதான். அத்தையோட குணம் உங்களுக்குத் தெரிஞ்சும் ஏன் மாத்த முயற்சிக்கல, அதுவும் தான் பெத்தக் குழந்தையவே ஒதுக்குற அளவுக்கு அவங்க போன பிறகும் நீங்க ஏன் எதுவும் செய்யல.. ஆச்சியும், சுமிம்மாவும், சுபிம்மாவும் இருந்ததால மாமாவுக்குப் பிரச்சினை இல்லை. ஆனாலும் ஒரு அம்மாவோட அன்பும் அரவனைப்பும் கிடைக்காம அந்தக் குழந்தை எவ்வளவு கஷ்டப்படும்னு உங்களுக்குத் தெரியாதா..? சரி அதைக் கூட விடுங்க, கருப்பா பிறந்தது யார் தப்பு..? அவர் தப்பா..? ஆனா உங்க கண் முன்னாடியே நான் வளர்ந்தேனே பெத்தவங்க பாசம் இல்லாம, அப்போக் கூட உங்களுக்குஅத்தை செஞ்சது தப்புன்னு தோனலையா..?”
“இப்போ வந்து எந்த அர்த்தத்தில் இந்தக் கேள்வி எல்லாம் கேட்குறீங்க தாத்தா, நான் அந்த வீட்டுல வாழப் போனதுனாலயா..? மாமா என்னைக் கொடுமை படுத்தி, என் கூட வாழமாட்டேன்னு சொல்லி உங்ககிட்ட அனுப்பியிருந்தாலும் தப்பில்லை தானே, ஏன்னா நீங்க செஞ்சது அப்படி. அவருக்கு என்ன நியாயம் செஞ்சிங்க சொல்லுங்க. அன்னைக்கு அந்த வீட்டுக்கு வர்ரதுக்கு எவ்வளவு யோசிச்சார் பார்த்தீங்களா. அப்போ எந்தளவுக்கு, நிராகரிப்பும், வேதனையும் வலியும் அனுபவிச்சிருப்பார். அவரே மனசு மாறி என்னை அத்தை வீட்டுக்கு கூப்பிட்டு வந்தா தான் வருவேன். இல்லை வரமாட்டேன். கோயம்புத்தூர் வந்தாலும் நம்ம வீட்டுக்கு போயிடுவேன்..” எனக் காட்டமாகப் பேசியவள்,
“உங்களுக்குத் தெரியுமா.? நானும் வெற்றி மாமாவை நெறைய டைம் ஹர்ட் செய்துருக்கேன். அவர் எங்கிட்ட பேச வந்தா பேசாம, உங்களை மாதிரியே நானும் மதிக்காம இருந்துருக்கேன். அன்னைக்கு நடந்த இன்சிடன்ட்ல என்மேல தான் தப்பு. மாமா மேல இல்ல. அத்தை தான் தப்பா புரிஞ்சிக்கட்டாங்க. நானோ புகழ் மாமாவோ சொல்ல வந்ததை அத்தைக் கேட்கவே இல்ல. வெற்றி மாமா அப்பவே ஊருக்குப் போறேன்னு நின்னாங்க. புகழ் மாமா விடவே இல்லை. நீங்க வந்ததும் போங்கன்னு சொன்னார்.”
“ஆனா நீங்களும் பெரிய மாமாவும் வந்தும் அவருக்கிட்ட ஒன்னுமே கேட்கல. பெரிய மாமா அப்பவே ஊருக்குக் கூப்பிட்டு போயிட்டார். அதுதான் மாமா நம்ம வீட்டுக்கு வந்துட்டு போன கடைசி நாள். அன்னைக்கு நான் எப்படி அழுதேன் தெரியுமா..? புகழ் மாமா ஆச்சிக்கு போன் செஞ்சி எல்லாமே சொல்லிட்டார். ஆச்சியும் இனி மாமாவை இங்க அனுப்ப மாட்டேன் சொன்னாங்க.”
“உங்களுக்கு அத்தைப் பத்தி தெரியும் தான.. நீங்களாச்சும் விசாரிச்சிருக்கலாம் தான. ஏன் அப்படி செஞ்சீங்க. வெற்றி மாமாவும் எங்களை மாதிரி உங்களுக்கும் ஒரு பேரன் தான. ஏன் அத்தைக்கிட்ட பேசிப் புரிய வைக்கல. நீங்க எல்லாரும் மாமாவை ஒதுக்க, ஒதுக்க தான் எனக்கு அவர் மேல ஆர்வம் வர ஆரம்பிச்சது. அந்த ஆர்வம் எப்போ காதலா மாறிச்சுன்னு தெரியல. ஆனா மேரேஜ்ன்னு ஒன்னு நடந்தா அது அவர்கூட தான்னு நான் முடிவு பண்ணி ரொம்ப வருஷமே ஆச்சு. உங்ககிட்ட மறைக்கனும்னு நினைக்கல. புகழ் மாமாவோட மேரேஜுக்கு நீங்க ஒரு வார்த்தை உனக்கு சம்மதமான்னு கேட்கல. நீங்களும் அத்தையுமே பேசி முடிவு செஞ்சீங்க. அந்தக் கோபம் தான் உங்கக்கிட்ட சொல்ல விடாம தடுத்துச்சு.”
“என்னால தான் அன்னைக்கு மாமாவுக்கு அவ்வளவு கஷ்டமும், வருத்தமும். அதை என்னால தான் சரி செய்ய முடியும்ன்னு தோனுச்சு. எப்படி சரி செய்றதுன்னு யோசிச்சப்ப தான் மேரேஜ் செய்யலாம்ன்னு தோனுச்சு. அவர் கூட கல்யாணம்ன்னு யோசனை வந்த பிறகு நான் தெளிவாகிட்டேன். அவரை விரும்ப ஆரம்பிச்சிட்டேன். ஆனா கல்யாணம் முடியிற வரைக்கும் கூட அவர் என்னை விரும்பினார்ன்னு எனக்குத் தெரியாது.”
“தெரிஞ்ச பிறகு என்னால நிம்மதியாவே இருக்க முடியல. ஒருவேளை நான் அவரை விரும்பாம, நீங்க சொன்ன மாதிரி புகழ் மாமாவைக் கட்டியிருந்தா, என் புருஷனோட நிலமை என்ன தாத்தா.. சொல்லுங்க.? அவர் நிலைமை என்ன..? கடைசி வரைக்கும் எந்தப் பொண்ணையும் திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டார். நானும் அவரும் ஒரே வீட்டுல இருந்திருந்தா இன்னும் நிலமை மோசமாகிருக்கும். இதையெல்லாம் நினைச்சு நான் எத்தனை நாள் கவலைப்பட்டுருக்கேன் தெரியுமா..? ஆனா நீங்க இன்னும் உங்க பொண்ணுக்கு தான் சப்போர்ட் செய்றீங்க..” என அவரை லெஃப்ட் ரைட் கொடுத்தாள்
மங்கையின் பேச்சில் பெரியவருக்கு முகம் விழுந்துவிட்டது. இங்கு வந்ததில் இருந்தே வெற்றி மங்கையை எப்படி பார்த்துக் கொள்கிறான் என்று அவரும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்.. அதோடு ஆச்சியிடம் உரிமையாகப் பேசுபவன் தன்னிடம் ஒதுக்கம் காட்டிப் பேசுவதையும் உணர்ந்தார். அதற்கு காரணமும் அவர் தான் என்பதை புரிந்து கொண்டார். விழா முடிந்ததும் இருவரிடமும் பேசி கோவைக்கு அழைக்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தார். ஆனால் மங்கைப் பேசுவதைப் பார்த்தால், அழைத்தாலும் வரமாட்டானோ எனத் தோன்றியது.
அன்று நடந்தது என்ன என்று மருமகனின் மூலம் அறிந்தது தான். அதோடு சம்மந்தியம்மாவும் அழைத்து அவரிடம் பேசினாரே.. அன்றைய நிலையில் வனிதாவின் பிடிவாதம் அதிகமாகி அது கோபமாக உருமாறி வெற்றியின் பக்கம் திரும்பி விடக்கூடாது என்றுதான் மருமகனும் அவரும் அந்த முடிவை எடுத்தார்கள். ஆனால் அது தப்போ.. நாச்சியார் இருந்ததால் அவனை அனுப்பி வைக்க முடிந்தது. அதுவே வேறு யாரும் இல்லாத சூழல் என்றால் யோசித்து செய்திருப்போமோ..? என இப்போது யோசித்தார். ஆனால் இப்போது யோசித்து என்ன செய்ய..?
மங்கைக்கு புகழைப் பார்க்கலாம் என வனிதா அடம் பிடிக்கும் போது அவர் முதலில் மறுக்கத்தான் செய்தார். பிறகு வழக்கம்போல வனிதா பிடிவாதம் பிடிக்க, வேறுவழியில்லாமல் ஒத்துக் கொண்டார். ஆனால் மங்கையும் வெற்றியும் ஒருவரை ஒருவர் விரும்பியிருப்பார்கள் என்று அவர் யோசிக்கவே இல்லை. எப்படியோ அனைத்தும் சரியாகிவிட்டதே என்று நினைத்தால் இந்தப் பெண் என்ன சொல்கிறாள் என யோசனையானார்.
“வனி..” என்ற வெற்றியின் குரலில் இருவரும் திரும்பி பார்க்க, அவன் யோசனையாக மனைவியைப் பார்த்திருந்தான். பெரியவர் அவனைப் பார்த்தபடியே இருக்க, மங்கைதான் “என்ன மாமா மினிஸ்டர் வந்துட்டாரா..? ஃபங்க்ஷன் ஸ்டார்ட் ஆகிடுச்சா..” அவர்கள் இருவரும் பேசியதை வெற்றிக் கேட்டுருப்பானோ எனப் பதட்டமாக கேட்க,
“அதெல்லாம் இல்ல.. இன்னும் டைம் இருக்கு… அங்க உன்னைக் கணோமேன்னு தேடினேன். மணி தான் நீ இங்க இவர் கூட இருக்கன்னு சொன்னா..? ஆமா ஜூஸ் குடிச்சியா..? இல்லைக் கொண்டு வரச் சொல்லட்டா.. ரொம்ப நேரம் பேசுனியா என்ன..? களைச்ச மாதிரி இருக்க..” என அவளின் முகத்தில் இருந்த வியர்வையைத் துடைக்க,
“இல்லையே.. அப்படி இல்லையே.. நான் சும்மா தாத்தாக்கிட்ட ஊர்ல எல்லாம் எப்படி.? என்னன்னு கேட்டுட்டு இருந்தேன். அவர் செக்கப்க்கு எல்லாம் போனாரான்னு விசாரிச்சிட்டு இருந்தேன். நாம அங்க போலாமா.? அத்தை கூப்பிட போறாங்க.” என அவசரப்படுத்த..
“அவங்க தான் சொன்னாங்க. என் மருமக தனியா இருக்கா.. போய் கூட இரு.. மினிஸ்டர் வந்ததும் கூப்பிடுறேன்னு.. அதனால இங்கையே இருப்போம். டோன்ட் வொரி..” என்றவன் பெரியவரிடம் திரும்பி, “ஏன் நிக்கிறீங்க.. உட்காருங்க..” என, அவரோ “இல்ல நீங்க இருங்க.. மணி அப்பவே வரச்சொன்னா.. நான் போறேன்..” என்றுவிட்டு நகர்ந்து விட்டார்.
அவர் நகர்வதற்காகவே காத்திருந்ததைப் போல, நகர்ந்ததும் மனைவியை இழுத்து அணைத்தவன் “விட்டா மாமனுக்கு கட்சியே ஆரம்பிப்ப போல. பாவம்டி மனுஷன் முகமே விழுந்துடுச்சு. உனக்கு இவ்வளவு கோபம் வருமா என்ன..? பாவம் உன் கையில சிக்கின நானும் என் குட்டிப்பொண்ணும்..” என மனைவியின் இடையைத் தழுவி, வயிற்றில் கைவைத்துப் பேச
“ம்ம்.. ஏன் எனக்காக என் மாமா ஆஸ்பிடலே கட்டிக் கொடுக்கும் போது, என் மாமாவுக்காக ஆஃப்ட்ரால் ஒரு கட்சி. அதை ஆரம்பிக்க மாட்டேனா.. நம்ம ஃபேமிலி மொத்தமும் ஓட்டு போட்டாலே நீங்க சி.எம் ஆகிடுவீங்க தெரியுமா..?” என்றதும்
“அடிப்பாவி ஆஃப்ட்ரால் ஒரு கட்சியா..? பாவம்டி இந்த அரசியல்வாதிங்க எல்லாம். நீ சொன்னதைக் கேட்டு தலையில துண்டப் போட்டுட்டுத் தான் போகனும்.. இந்த மினிஸ்டர் வரும்போது மட்டும் இப்படி ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்துடாத.. அந்தாளு அப்படியே ஓடிடப் போறாரு..” எனச் சிரிக்க
“ம்ம்.. கிண்டலு நடக்கட்டும்.. நடக்கட்டும்.. சரி என்னை விடுங்க. உட்காருவோம். கால் வலிக்குது..” என்றதும், அவளை உட்காரவைத்து அருகில் அமர்ந்தவன், கழுத்தில் முகம் பதித்து… “ஆமா மாமாவை உனக்கு அவ்வளவு பிடிக்குமா..? உங்க தாத்தாவை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிட்ட..” என முணுமுணுக்க,
அவன் கேட்டுவிட்டான் என்பதில் ஒருபக்கம் வருத்தமும், மறுபக்கம் நிம்மதியாகவும் இருந்தது. அதில் ஒரு பெருமூச்சு விட்டவள், “ம்ம்.. அவர் எனக்கு மட்டும் தான் தாத்தாவா உங்களுக்கு இல்லையா..? அத்தையவே மன்னிச்சிட்டீங்க. ஆனா தாத்தா மேல மட்டும் இன்னும் கோபம் இருக்கா.. வயசானவர் இல்லையா..? யாருமே இல்லாம தனியா இருக்குறது எவ்வளவு கஷ்டம்ன்னு உங்களுக்கே தெரியுமில்ல.. நீங்க கஷ்டப்பட்டா எப்படி என்னால தாங்கமுடியாதோ.. அதே போல தான் தாத்தா கஷ்டப்பட்டாலும்..” என்றவளின் விழிகளில் நீர் உருண்டது. “பேசுங்க மாமா.. அவர் மட்டும் ஏன் மன வருத்தத்தோட இருக்கனும்.. என்னைத் தவிர அவருக்கு யாரும் இல்லை நிம்மதியைக் கொடுக்க” என
மனைவியின் கண்ணீரைத் துடைத்து, அந்த விழிகளில் குட்டி குட்டியாக முத்தமிட்டவன், “சும்மாவே என்னை எல்லாரும் பொண்டாட்டி தாசன்னு தான் சொல்றாங்க. அதை நீ கன்ஃபார்ம் பண்ண வச்சிடுவ போலயே..” எனச் சிரித்தவன், “யாருக்காக இல்லன்னாலும் என் வனிக்குட்டிக்காக இதை செய்வேன். கண்டிப்பா செய்றேன்.. காலம் அதுக்கான நேரத்தைக் கொடுக்கும் இல்ல. எனக்கும் அவர் மேல கோபமோ வருத்தமோ இல்ல வனி. பேசப்போன முன்ன மாதிரி முகத்தைத் திருப்பிட்டா என்ன செய்ய.. அதனால தான் அவாய்ட் பண்ணேன். இனி அப்படி இருக்க மாட்டேன் ஓகேவா.. சரி சொல்லு… அன்னைக்கு நீயும் உன் புகழ் மாமாவும் சேர்ந்து தான என்னை மாட்டிவிட்டீங்க.. எனக்கு அப்பவே தெரியும்..” எனச் சிரிக்க,
“அது.. அது சாரி மாமா.. அப்படியெல்லாம் நடக்கும்ன்னு நான் நினைக்கவே இல்லை. நான் வேண்டாம்னுதான் சொன்னேன். இந்த புகழ் மாமா தான் அவனும் உனக்கு மாமா தான. அவன்கிட்டயும் கேளு சொன்னாங்க. அதுதான் கேட்டேன். ஆனா அத்தை அப்ப வருவாங்கன்னு நினைக்கவே இல்ல மாமா.. அத்தை உங்களை பேசினது இப்பவும் என்னால மறக்கவே முடியாது.. ப்ச்..” என
“சரி விடு.. அவங்க அப்படி நடந்ததால தான் இந்த டாக்டர் மேடம் என் மேல லவ்வுல விழுந்தாங்க. நீ யோசிச்சுப் பாரேன் அந்த சம்பவம் நடக்கலன்னா வீட்டுல யாரை சொல்றாங்களோ, அவங்களை மேரேஜ் செஞ்சிட்டு நீ போயிருப்ப. அதோட என் மேல இருந்த கெட்ட எண்ணமும் மாறியிருக்காது தான..” என அணைப்பில் வைத்தே பேச,
“ம்ம்.. நானும் கேட்டுட்டே இருக்கேன். நீங்க சொல்லவே மாட்டேங்குறீங்க.. சொல்லுங்க மாமா உங்களுக்கு எப்போ என்னைப் பிடிக்க ஆரம்பிச்சது.. சொல்லுங்க ப்ளீஸ்..” என அவன் கன்னம் வருட, வருடிய கைகளைப் பிடித்தவன் அவன் மனதில் மனைவி காதலியாக அமர்ந்த நொடிகளைப் பகிர ஆரம்பித்தான்.
கோவையில் இருந்த பாலனின் வீடு விருந்தினரால் நிரம்பியிருந்தது. அந்த வீட்டின் இளவரசி, செல்வச் சீமாட்டி மணிமொழி பூப்பெய்திருந்தாள். அந்த விழாவிற்குத் தான் ஊரிலிருந்து அனைவரும் வந்திருந்தனர்.
வெற்றிக்கு கல்லூரி விடுமுறை என்பதாலும், செல்லத் தங்கையின் மிரட்டலிலும் ஆச்சியோடு முன்னமே வந்திருந்தான்… பாலனின் சகோதரிகள் இருவரும் தலைக்கு நீர் ஊற்றித் தள்ளி வைப்பதற்கு வந்து விட்டு, விழாவிற்கு வருவதாக சென்று விட்டனர்… புகழும் விடுமுறை இல்லாததால் விழாவிற்கு கண்டிப்பாக வருவதாக சொல்லி இருந்தான்… வனிதாவிற்கு வீட்டில் வேலை சரியாக இருந்தது. அதிலும் தினமும் விருந்தினர் யாராவது வந்து கொண்டே இருந்தனர்.
மங்கை பள்ளி இறுதியாண்டில் இருக்க, அவளைப் பார்ப்பதே அரிதாக இருந்தது. வெற்றியும் சில நாள் தந்தையோடு கம்பெனிக்கு சென்று வந்தாலும், தங்கையோடு தான் அவனது பெரும்பாலான நேரங்கள் கழியும். மணிக்கு வெற்றி எப்போதும் வேண்டும். உறங்கும் நேரம் கூட அவளுக்கு அருகில் ஒரு மெத்தையைப் போட்டு படுத்துக் கொண்டிருந்தான். இதையெல்லாம் பார்த்த வனிதாவிற்கு எரிச்சல் தான். ஆனால் மாமியார் இருக்கையில் வாயைத் திறக்க முடியாது என்பதால் பல்லைக் கடித்து அமைதியாக இருந்தார்…
நாச்சியார் கூட மருமகளின் நடத்தையில் திருந்தி விட்டாளோ என்று. வெற்றி காலையில் எழுந்ததும் ராமசாமியோடும் பாலனோடும் வாக்கிங் போவான். அதிகம் பேச மாட்டான் இருவரிடமும், ஆனால் அவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனிப்பான். அவர்கள் திரும்பி வர, மங்கை ஏழு மணிக்கே பள்ளிக்குச் சென்றிருப்பாள். அவளைப் பற்றி யாரிடமும் அவன் விசாரித்ததில்லை. அவனே சில முறை பேசப் போக அவள் திரும்பியும் பார்க்காமல் கடந்து போயிருக்கிறாள். அது தன் தாய் சொல்லிக் கொடுத்தது என்று அவனுக்குப் புரிய அதிலிருந்து அவளிடம் ஒதுங்கியே இருப்பான்… இப்போதும் அப்படியே…
அன்று மாலை விழா என்பதால் அனைவரும் மண்டபத்தில் இருந்தனர். புகழ் அன்று காலையில் தான் வந்திருந்தான். வந்தவன் மணியிடம் சில நிமிடங்கள் இருந்தவன் தான். அதன் பிறகு அவளிடம் வரவில்லை. மங்கையோடு தான் இருந்தான். ஆனால் வெற்றி அவளை விட்டு அசையவில்லை. மணியும் அசைய விடவில்லை…
“இங்கேயே இருண்ணா இதெல்லாம் பார்த்தா எனக்கு பயமா இருக்கு..” என்றதும் பிறகு அவன் எதற்கும் அங்கிருந்து நகரவில்லை. அதோடு அங்கு அவனுக்கு அதிகம் யாரையும் தெரியவில்லை என்பதால் அப்படியே இருந்து கொண்டான்…
இவர்களின் பாசத்தைப் பார்த்து எல்லோருக்கும் வியப்பு தான். இருவரும் பக்கத்திலேயே இல்லை, எப்படி இவ்வளவு பாசம் உண்டானது என வியக்கவே செய்தனர். அதிலும் மணியின் செய்கையில் நாச்சியாரின் கண்கள் பணிக்கவே செய்தது. கடவுள் ஒரு கதவை மூடினால் மறு கதவைத் திறப்பான் என்பது எத்தனை உண்மை… தாய் பாசம் இல்லையென்றாலும், தங்கைப் பாசம் அவனை உயிர்பிக்க போதுமானதாக இருந்தது.
விழா முடிந்த அடுத்த நாள் அனைவரும் கிளம்ப, வெற்றியும் கிளம்பினான். மணியோ ஆச்சியிடம் சென்றவள், “இன்னும் ஒரு வாரம் தான ஆச்சி. எனக்கு லீவு விட்டுடுவாங்க, பிறகு என்னை யார் கூப்பிட்டு வருவா? வெற்றிண்ணாவை இருக்கச் சொல்லுங்க நானும் அண்ணாவும் வரோம்.” எனவும்ம், அவரும் பெரியதாக யோசிக்கவில்லை. மருமகளின் மீது நம்பிக்கை வந்திருந்தது. அதனால் பேரனை இருக்கச் சொன்னார்…
ஆனால் வெற்றி யோசித்தான். வனிதா ஒன்றும் பேசவில்லையே தவிர, அவனது இருப்பை விரும்பவும் இல்லையே… அதை அவனாள் உணர முடிந்தது. எப்படி சொல்வது என யோசிக்கும் போதே… “என்ன மணிக்குட்டி உங்க வெற்றிண்ணா ரொம்ப யோசிக்கிறார். உன் மேல பாசம் இருந்தா யோசிக்கவே மாட்டாங்க, இவர் யோசிக்கறதைப் பார்த்தா…”? என வெற்றியை சீண்டி விட,
“நீ பேசாத உனக்கு ரொம்பத் தெரியுமா…? உனக்குத் தான் என் மேல பாசமே இல்ல. என் அண்ணன் இருப்பான், என்னண்ணா இருப்ப தானே…” என வெற்றிக்கு பதிலாக புகழோடு மல்லுக்கு நிற்க,
“இருந்தா சரிதான்.” என புகழும் கிண்டலடிக்க, “நான் இருக்கேன் மொழிமா, நீ போ போய் ஸ்கூல் கிளம்பு, நான் உன்னை ஸ்கூல்ல விட்டுட்டு வரேன்.” என தங்கையிடம் கூற,
“ஹைய் சூப்பர்ண்ணா பைக்ல போகலாமா…? ப்ளீஸ்ண்ணா..” என தன் ஆசையை சொல்ல, ‘அதெல்லாம் வேண்டாம்’ என வனிதா சொல்வதற்குள், “நோ வே… கார் தான். பைக்னா நான் வர மாட்டேன். ஊருக்குப் போனதும் உன்னைப் பைக்ல கூட்டிட்டு சுத்துறேன். இங்க வேண்டாம் கிளம்பு ஓடு டைமாச்சு…” என முடித்து விட,
“போண்ணா…” என சினுங்கிய படியே நகர, அவளைப் பார்த்து சிரித்தவன் ஆச்சியிடம் சென்று “ஆச்சிம்மா நீங்க இருந்துபீங்க தானே. நான் சனிக்கிழமை அங்க இருப்பேன்…” எனவும்
“டேய் அதெல்லாம் எனக்குத் தெரியும், நீ கவலைப்படாம இரு, உன் அப்பனுக்கே அந்த கவலை இல்லை போடா…” எனச் சிரிக்க, அவனும் சிரிக்க, “என்னம்மா நீங்க…” பாலன் வருத்தப்பட,
“அட, ஏன் பாலா நான் சும்மா தான் சொல்றேன். என் புள்ளைங்கள எனக்குத் தெரியாதா.? சரி நாங்க கிளம்புறோம் பார்த்துக்கோங்க…” என்றவர் முறுக்கி நின்ற புகழை சமாதனம் செய்துவிட்டுக் கிளம்ப, அப்படியே ஒவ்வருவரும் சென்று விட, வெற்றி தங்கையை பள்ளியில் விட போயிருந்தான்…
ராமசாமிக்கு அன்று மந்த்லி செக்கப் என்பதால் வனிதா அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைச் சென்றிருந்தார். பாலனும் ஆபிஸ் போய் விட, வீட்டில் இருந்ததோ மங்கையும் புகழும் தான்…
மங்கையின் பாடப் புத்தகத்தை ஒரு கையிலும், மறு கையில் குச்சி ஒன்றையும் வைத்துக் கொண்டு அவளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தான் புகழ். இதைப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்த வெற்றி வரவேற்பாக ஒரு புன்னகையை இருவருக்கும் கொடுத்து விட்டு ஆபிஸ் செல்ல, ரெடியானான்…
அப்போது புகழ், “மகி நீ ஏன் வெற்றி கூட பேசுறதே இல்ல, நானும் பார்த்துட்டே இருக்கேன் அவனும் உனக்கு மாமா தான். நீ பேசலன்னா உன்னைத் தப்பா நினைக்க மாட்டானா.? என்ன பழக்கம் இது…” என கேட்க,
“இல்ல மாமா… அது அத்தைதான்” என இழுக்க, “ஓ… அம்மா சொன்னாங்களா…? அவங்களைப் பத்தி தெரியும் தான, ஏன் மகி இப்படி செஞ்ச..” என ஏமாற்றமாக கேட்க,
“அது நீங்களும் தானே பேசல, நீங்க பேசல, நானும் பேசல, அத்தையும் சொன்னாங்க. அவர் என் கிட்ட பேச வந்தார். அத்தைப் பார்த்தா திட்டுவாங்கன்னு ஓடிட்டேன்…” என பாவமாகப் பேச,
“உனக்கு என்ன லூசா… நீ சின்னபுள்ளையா மகி, நான் பேசலன்னா அதுக்கு வேற ரீசன் இருக்கு, நீ என்னன்னா அத்தை சொன்னாங்க அது இதுன்னு கதை சொல்லிட்டு இருக்க, போ போய் பேசு, அவன் இன்னும் நாலு நாள் தான் இங்க இருப்பான்…” என அவளைத் திட்ட,
“என்ன பேச மாமா…? எனக்குப் பயமா இருக்கே… இதுவரை பேசாம, இப்போ போய் பேசினா தப்பா நினைக்க மாட்டாங்க…” என அவள் தயங்க,
“தப்பாவே நினைச்சாலும் பரவாயில்ல போய் பேசு தப்பு செஞ்சது நீ தானே…” என்றவன், “இந்தா இந்த மேத்க்ஸ் புக் எடுத்துட்டு போய் வெற்றி கிட்ட, டவுட் கேளு, மேத்ஸ்ல அவன் புலி, டவுட்ஸ் கிளியர் பண்ணுவான். நான் ரூமுக்கு போறேன். என்னை எங்கேன்னு கேட்டா போன் வந்தது போயிட்டாங்கன்னு சொல்லிடு…” என அவளிடம் புக்கைத் திணித்து விட்டு மாடியேறி விட்டான்…
“மாமா… மாமா…” எனக் கத்தியவள் வேறு வழியில்லாமல், தயக்கமாகவே வெற்றியின் அறைக்குச் சென்று கதவைத் தட்ட கை வைக்கப்போக, கம்பெனி செல்வதற்காக கதவைத் திறந்து கொண்டு அப்போது தான் வெற்றி வெளியே வந்தான்.
வந்தவன் வெளியே நின்றிருந்தவளைப் பார்க்காமல் அப்படியே மோத இதை எதிர்பார்க்காதவள் அப்படியே சரிய, விழப் போகிறாள் என்பதை உணர்ந்தவன் அவளின் இடையில் கை கொடுத்து பிடிக்க, ஆனால் பயத்தில் அவனையும் தன்னை நோக்கி அவள் இழுக்க, வேறு வழியில்லாமல் இருவரும் கீழே உருண்டனர். அவள் கையில் இருந்த புக் பறந்து விழ, அது அப்போது தான் உள்ளே வந்த வனிதாவின் மேல் விழுந்தது.
அத்தோடு மங்கையின் கத்தலும் கேட்க, பயந்து போய் மேலே வந்தவர் பார்த்த காட்சியில் அனைத்தையும் மறந்து உண்மை என்ன என்பதை அறியாமல் வெற்றியைக் கண்டபடி திட்டிவிட்டு மங்கையை அழைத்துக் கொண்டு போய்விட்டார்…
“எதற்கு அந்த பெண் வந்தாள்…? என்ன நடந்தது…? இவர்கள் ஏன் தன்னை அசிங்கமாக பேச வேண்டும்…? என அவன் யோசிக்க யோசிக்க பதிலே இல்லை. ஆனால் அடுத்த நிமிடம் அவனால் அங்கு இருக்கவே முடியவில்லை. இது என் வீடு அல்ல, இவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் அல்ல, என மனம் சத்தமிட்டு கதற, அடுத்த நொடி கிளம்பி விட்டான்.
அதற்குள் ஓடி வந்த புகழோ அவனை விடவே இல்லை… “அப்பா வந்ததும் கிளம்பு தனியா உன்னை அனுப்ப மாட்டேன்…” என பிடிவாதமாக பிடிக்க, அறைக்குள் நுழைந்தவன் பாலன் வந்து அழைக்கும் வரை வெளியில் வரவே இல்லை…
புகழும், மங்கையும் வனிதாவிற்கு நடந்ததைச் சொல்லி சத்தம் போட்டிருந்தனர். புகழ் சென்று சாப்பிட அழைத்தும் வெற்றி வரவே இல்லை. அவன் நிலையில் இருந்து யோசித்த புகழும் பதில் வேறெதுவும் பேசவில்லை.நாச்சியாருக்கு அழைத்து புகழ் இங்கு நடந்ததைச் சொல்ல, அவரோ பாலனைக் கூப்பிட்டுச் சத்தம் போட்டு வெற்றியை உடனே அழைத்து வரும் படி கூற, பாலனோ அரக்க பறக்க வந்தார்.
வந்தவர் மனைவியிடம் எதையும் விசாரிக்கவில்லை… வெற்றியை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். அவனும் யாரையும் பார்க்கக் கூட இல்லை. வழியில் பாலன் எத்தனையோ சமாதானம் செய்தும் அவனிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. இனி தன் மகன் தனக்கு இல்லை என்பதை அவர் உணர்ந்த நொடி அது தான்… அடுத்து வீடு வரும் வரை அவர் எதுவும் பேசவில்லை…
தாயிடம் தன்னை மறந்து அழுத பாலன், அடுத்த நாள் கிளம்பி விட்டார்… அப்போதிருந்தே மனைவியிடம் ஒதுக்கத்தைக் காட்ட ஆரம்பித்தார் பாலன். ஆனால், அதற்கு பதிலாக மனைவியிடம் உட்கார்ந்து பேசியிருக்கலாம்.” ஒருவேளை வனிதா தன் தவறை உணர்ந்திருப்பார்…
அடுத்து வந்த நாட்கள் வெற்றிக்கு எப்படி கழிந்ததோ.. ஆனால் ஒரு பெண்ணை உணர்ந்த, அவளின் இடையைத் தீண்டி மென்மையை உணர்ந்த நொடிகள் மட்டும் அப்படியே பொக்கிஷமாக மனதில் பதிந்தது. தன்னையும் மறந்து பெண்ணின் மென்மையில் தொலைந்து அவளை மனதில் சும்க்க ஆரம்பித்திருந்தான்.
இது நடக்குமா..? நடக்காதா..? அவளுக்குத் தன்னைப் பிடிக்குமா..? பிடிக்காதா..? எதுவும் தெரியாது. ஆனால் அவனுக்கு அவலைத் தாண்டி வேறு வாழ்வு இல்லை என்பதை மட்டும் உணர்ந்திருந்தான்.
தன் மனதில் பூத்த அந்தக் காதலை அவன் யாரிடமும் சொல்லவில்லை. இந்த நேசத்தை எல்லோரும் எப்படி எடுத்துக் கொள்வார்களோ..? அதோடு அவனது அன்னை அன்று பேசிய பேச்சை யோசிக்கும் போது, தன் நேசத்தை வெளியே சொல்லவேக் கூடாது என்று முடிவே செய்துவிட்டான்.
மங்கை அதன்பிறகு படிப்பிற்காக தஞ்சாவூர் வந்தது, புகழோடான அவளின் திருமணப் பேச்சு என எல்லாம் தெரிந்தும் அவன் தன் மனதை திறக்கவில்லை. யாரும் தன்னை சிறு சந்தேகம் கூட பட முடியாத அளவிற்கு தெளிவாக இருந்தான்.
புகழின் முயற்சியால் இன்று அனைத்தும் சுகமாக நடக்க, இதோ இப்போது அவனின் காதல் மகாராணி அவனருகில். தன் காதல் கதையை அவளிடம் சொல்லி முடித்துவிட்டு, “ம்ம் சொல்லுடி என் பொண்டாட்டி, எப்படி இருந்துசு என் லவ் ஸ்டோரி..” என கண் சிமிட்ட,
“படுகேவலமா இருந்துச்சு கேட்க, இதெல்லாம் ஒரு லவ் ஸ்டோரியா.. ஒரு ஃபீலே வரலையே.. என் பர்த்டேக்கு எனக்குத் தெரியாமா வந்து பார்த்தீங்க, எனக்கு கிஃப்ட் வாங்கி வச்சீங்க.. இப்படி சொல்லுவீங்கன்னு வேற.. வேற மாதிரி எதிர்பார்த்தேன்.” எனக் கிண்டலடிக்க,
“என்னம்மா பன்றது.. சினிமால வர்ர மாதிரி எல்லாம் நமக்கு லவ் பண்ண தெரியல. உன் லவ் ஸ்டோரியை விட இது பரவாயில்ல தான். இவ்வளவு தான் நம்ம லவ்..” என அவனும் பதிலுக்கு கிண்டலடிக்க
“சரி விடுங்க மாமா.. நம்ம மேனுஃபேக்சரிங்க் அப்படி. பட் இனி அப்படி இருக்க முடியாது. பிஃபோர் லவ் தான் கேவலமா போச்சு. ஆஃப்டர் லவ்வாச்சும் செம்மையா அப்படியே காவியம் மாதிரி இருக்கனும். நம்மளை யாரும் ஃபீட் பண்னக் கூடாது சரியா.. அப்புறம் பேபி பொறந்ததும் எல்லா ஜென்ஸ்ம் போல, நீங்களும் பேபி பின்னாடியே சுத்துனீங்க அப்புறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன். புரியுதா..? என மிரட்ட
“தேவதையா தெரியிற எல்லா காதலிகளும், கல்யாணத்துக்கு அப்புறம் பேயா மாறுறது இயற்கை தானே. விடு விடு மாமா எல்லாத்தையும் சமாளிக்கிறேன்…” எனவும்
அவனைத் தள்ளிவிட்டு, “ஓழுங்கா ஓடிடுங்க.. என் முன்னாடி இருந்தீங்க கடிச்சு கொதறிடுவேன்..” என இடுப்பில் கைவைத்து முறைத்த படியே புசுபுசுவென மூச்சுவிட
“உணமையை சொன்னா கோபம் வருமே.. பாரு அசல் அப்படியே பேய் மாதிரி இருக்க..” என நின்றிருந்தவளின் இடையில் கைவிட்டு தன்னை நோக்கி இழுத்து, இதழில் இதழ் பொறுத்த, “ம்ம்..ம்ம்ம்” என அவள் திமிற, இவன் இழுக்க என சற்று இழுபறியான முத்தம். அப்போது வெற்றிண்ணா.. என்ற மணிமொழியின் குரல் கேட்கவே, மனைவியை உட்காரவைத்துவிட்டு, அவசரமாக வெளியே வந்தான்.
“என்ன மொழிமா..?” என்றதும், “மினிஸ்டர் வந்துட்டார்ன்னா.. அப்பா கூப்பிட்டார்.” என, சரி நான் போறேன். அண்ணி உள்ள இருக்கா.. அவளுக்கு டயர்டா இருக்காம். கொஞ்சம் பார்த்து அழைச்சிட்டு வா..” எனத் தங்கையிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, விழா நடக்கும் இடத்திற்கு ஓடினான்.
திறப்பு விழா வெகு சிறப்பாக நடந்து முடிந்திருந்தது. வனத்துறை அமைச்சர் பாலனை மிகவும் பாராட்டி பேசினார். என்னதான் மகன்கள் இருவருடைய திறமையால் இந்த திட்டங்கள் அனைத்தும் சாத்தியமாகியிருந்தாலும், பெரியவர்களின் தலையீடும், அறிவுரைகளும் இல்லாமல் இவை நடந்திருக்காது அதனால் அந்த இடத்தில் இருவரும் ஒதுங்கி பாலனை மேடையில் கௌரவப்படுத்தியிருந்தனர். அது யார் சொல்லியும் அல்ல. எங்கு எப்படி யாருக்கு மரியாதைக் கொடுக்க வேண்டும் என்று நாச்சியார் பேரபிள்ளைகளுக்குத் தெரியாதா.. என்ன..? தன் இரு பிள்ளைகளையும் நினைத்து வனிதாவிற்கு பெருமை பிடிபடவில்லை.
வனத்துறை அமைச்சரே விழாவிற்கு வந்திருந்தது அந்த நிகழ்வை மொத்த தமிழ்நாடும் திரும்பி பார்க்க வைத்தது. மேலும் மணிமொழியும் யு டியுப், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களிலும் லைவ் போட, நெட்டிசன்களுக்கு இந்த ஒரு நிகழ்வு பல நாள் விருந்தாகிப் போனது. அமைச்சர் பேசும் போது முன்னனி தொழிலதிபர்கள் ஒவ்வொருவரும் இப்படி ஒரு கிராமத்தைத் தத்தெடுத்தால், நாட்டில் வறுமை அழிந்து, பசி பட்டினி இல்லாமல் வாழமுடியும் என்றார்.
பாலன் பேசும் போதும் அதையே தான் தெரிவித்தார். நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுப்பதில் ஒரு தவறும் இல்லையே. இன்று இருப்பது நாளை இருப்பதில்லை. இன்றைய சூழல் நாளை எப்படி வேண்டுமானலும் மாறலாம். முடிந்தவரை நல்லதை மட்டும் செய்துவிட்டு போக வேண்டும் என்றார்.
பள்ளியை பார்த்திராத குழந்தைகள், மருத்துவமனையைப் பார்த்திராத மக்கள், வெளிச்சத்தைப் பார்த்திராத பெண்கள் என அவர்களின் தேவைகளைக் கண்டுபிடித்து நிவர்த்தி செய்திருந்த வெற்றியையும், புகழையும் அவர்களைப் பெற்ற பெற்றவர்களையும் என ஒவ்வொருவரையும் தங்கள் கடவுள் காடு வெட்டி அய்யனாராகவேப் பார்த்தனர்.
அவர்களின் நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டு, ஊர் மக்கள் அனைவரும் இரண்டு நாட்கள் பாலன் குடும்பத்தாரை அங்கேயே இருந்து செல்லும்படி கூற, அங்கிருந்த சூழலும், கள்ளம் கபடமற்ற அந்த மக்களின் தூய அன்பும், அடுத்து எப்போது இப்படி ஒற்றுமையாக வரப்போகிறோம் என்ற எண்ணத்திலும் நாச்சியார் சரியென்றுவிட, அந்த இரண்டு நாட்களும் மொத்த கிராம மக்களும் தங்களின் அன்பையும், மரியாதையும், நன்றியையும் ஒவ்வொரு வகையில் காட்டிக் கொண்டிருந்தனர்.
தபேராவிடம் அங்குள்ள அனைத்தையும் மேற்பார்வைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பையும், புகழும் அரூபியும் அங்கு இருக்கும்வரை அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பையும் ஒப்படைத்தார். அது புகழ் சொல்லி பாலன் செய்வது என பத்ரனுக்குப் புரிந்தது. குழந்தைகள் இல்லாத அவரது தவ வாழ்க்கையில் மகளாக அவதாரம் எடுத்தவள் அரூபி. இன்று அவள் சீரும் சிறப்புமாக வாழ்வதை, வாழப்போவதைக் கண்கள் குளிர ரசித்தார்.
பத்ரனைப் பார்த்து முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அலையும், மனைவியின் மன வருத்தத்தைப் பார்க்க முடியாமல் பத்ரனைத் தங்களோடு வந்து தங்க சொல்லி புகழ் பேச, அதைக் கேட்டப் பெரியவரோ அது சரிவராது எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். வீட்டுப் பெண்ணாக இல்லாமல், விருந்தாளியாக வந்து அவரது வீட்டில் தங்குமாறு பத்ரன் இருவரையும் அழைக்க, அவளோ உனக்கு நான் பேத்தி என்பதைக் காட்டும் விதமாக, அவரது அழைப்புக்கு அரூபி ஒத்துக் கொள்ளவேவில்லை.
ஆரவாரங்கள் அனைத்தும் முடிந்து, புகழையும் அரூபியையும் அங்கேயே விட்டுவிட்டு மற்றவர்கள் கிளம்பியிருந்தனர். அடுத்த பத்தாவது நாளில் கோவையில் பிரமாண்டமாக ரிசப்ஷன் வைக்க வேண்டும் என்பது வனிதாவின் ஆசை. அதில் தன் இரு மகன்களும் மனைவியோடு இருக்க வேண்டும் என்றுக் கண்டிப்பாக சொல்லியிருந்தார். பெரியவர்கள் அதற்கான வேலைகளைப் பார்க்கக் கிளம்பிவிட்டனர். புதுமணத் தம்பதிகள் இருவரையும் ஒரு வாரம் இங்கு இருந்துவிட்டு வந்தால் போதும் என்று அறிவுறுத்தி சென்றிருந்தனர்.
வனிதா இப்போது வெற்றியிடம் மிகவும் இணக்கமாக நடந்து கொள்கிறார். அவனே ஒதுங்கிப் போனாலும் அவர் விடாமல் பேசிக்கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கிறார். அவர் வெற்றியிடம் முன்னர் நடந்து கொண்டதெல்லாம் கனவோ, பொய்யோ என மற்றவர்கள் என்னும் அளவிற்கு அவரது மாற்றங்கள் இருந்தன. அதுவே குடும்பத்தாருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்க, ஒதுங்கிப் போகும் தன் தாத்தாவை இழுத்து வைத்து அவருடன் பேசினான் வெற்றி. தன் மனைவிக்காக. அவள் இப்போது எந்த வருத்தமும் படக்கூடாது என்பதால். இப்படி அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
அனைவரும் பல பத்திரங்களைச் சொல்லிவிட்டு கிளம்பிவிட, அந்த வீட்டில் புகழும் அபியும் மட்டுமே. ஒரு ஆணாக அவனுக்கு அன்றைய இரவிற்கான எதிர்பார்ப்புகள் இருந்தாலும், அபியின் சம்மதம் தெரியாமல் எதுவும் செய்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.
தன் முன்னே பேரழகுப் பெட்டகமாய் நின்றிருந்தவளைப் பார்க்க பார்க்க புகழுக்கு உணர்வுகளைக் கட்டுக்குள்ளே கொண்டு வர முடியவில்லை. ஆனாலும் அவளிடம் அதைக் காட்டிக் கொள்ளாமல், சாதாரணமாகவேப் பார்த்துக் கொண்டிருந்தான். கணவனின் பார்வையில் கொஞ்சமும் வித்தியாசம் இல்லாததைக் கண்டவள், ‘என்னாச்சு இவருக்கு.? இவ்ளோ அமைதியா இருக்கார். ஒருவேளை இந்த ரெண்டு நாள் அலைச்சல்ல மறுபடியும் உடம்புக்கு முடியாம போய்டுச்சோ..’ என யோசித்தபடியே நின்றிருந்தாள்.
மனைவியின் முகத்தையேப் பார்த்திருந்தவனுக்கு அது காட்டும் உணர்வுகள் புரியாமல் இல்லை. ஆனாலும் தன் முக மாற்றத்தைக் காட்டவில்லை. நம்ம ரியாக்ஷனைத் தெரிஞ்சிக்காம இவ பக்கத்துல வரப்போறது இல்லையோ.. அப்போ இன்னைக்கு முழுசும் இப்படியே தான் நிப்பாளா..? என்ற எண்ணம் மனதில் தோன்றவும் பக்கென்றானது பையனுக்கு.
அந்த பயம் அவனைப் பேச வைத்தது. “ஏன் அங்கையே நிக்கிற, இங்கே வா.. இந்த வீடு உனக்கு முன்னமே உனக்கு பழக்கம் தான.. அப்புறம் என்ன.?” என்றதும்,
“ம்ம்ம்… உங்களுக்கு என்ன..? உடம்புக்கு முடியலயா..?” என அவன் பயந்தது போல் அல்லாமல், கணவனிடம் நெருங்கி அமர்ந்து, அவன் கையைப் பிடித்தபடியே கேட்க
“இல்லையே.. அப்படில்லாம் இல்லயே.. நீ தான் ஏதோ யோசனையா இருந்த.. என்ன யோசிச்சது இந்தக் குட்டி மூளை. உன் மாமியார் போகும் போது உங்கிட்ட தனியா ஏதோ ரகசியம் பேசினாங்க. என்ன சொல்லிட்டு போனாங்க. என் பையனை நல்லா பார்த்துக்கோ.. என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன். அந்தக் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது. அப்படின்னு டைலாக் விட்டுட்டு போனாங்களா..?” என்றதும், அபி வாய்விட்டுச் சிரித்தபடியே இல்லையென்றுத் தலையசைக்க
“அது இல்லையா.. வேறென்ன் சொன்னாங்க.. நீயே சொல்லு..” எனப் பேச்சுவாக்கிலேயே அவளை இன்னும் நெருங்கியிருந்தான். அதை உணராமல் “அது வந்து… அது கொஞ்சம் சூதானமா இருக்கனும் சொன்னாங்க..” என்றாள் மெல்லியக் குரலில்
“சூதானமானா எப்படி.. புரியல.. சரியா சொல்லு..” எனவும், தலையைச் சிழுப்ப, அது ஏடகூடமாக அவன் மீது “சூதானமான்னா என்னனு கூடத் தெரியாதா..? கவனமா இருக்கனுமாம்..” எனப் பல்லைக் கடிக்க
“ஏய் இரு எதுக்கு இப்போ டென்ஷன் ஆகுற.. நாம இருக்குறது காட்டுக்குள்ள சோ கவனமா இருங்கன்னு சொல்லிட்டுப் போயிருப்பாங்க. அதுக்கு ஏன் இவ்ளோ பில்டப் கொடுக்குற..” என்றவன், இப்போது அவளைத் தன்னில் மொத்தமாக சாய்த்திருந்தான்.
அவனைத் தள்ளியவள் “கவனமான்னா.. இப்பவே புள்ளக்குட்டியெல்லம் பெத்துக்காதீங்க. மங்கை வேற மாசமா இருக்கா.. நீயும் உண்டாகிட்டா ரெண்டு பேரையும் பார்த்துக்குறது கஷ்டம். அதனால அவ புள்ளைக்கு மூனு வயசாகட்டும் அதுக்குப் பிறகு பார்ப்போம்ன்னு சொன்னாங்க..” என எரிச்சலில் கத்த
மனவியின் முதல் வார்த்தையிலேயே அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதைப் புரிந்து கொண்டான். ஆனாலும் நிறுத்தவில்லை. சொல்லி முடித்து அவனைப் பார்க்க, மீண்டும் தன் முகத்தைப் பாவமாக வைத்தவன், “ஓ.. அந்தக் கவனத்தைச் சொன்னாங்களா.. அது பிரச்சினையில்லை. நான் இப்போதைக்கு குழந்தைப் பெத்துக்குற ஐடியாவிலேயே இல்ல. இப்ப என்ன பண்ணலாம். உன் மாமியார் சொன்னதைக் கேட்கலாமா..? வா தூங்குவோம் இனி மூனு வருஷத்துக்கு உன்னைப் பக்கத்துல வச்சிட்டு சும்மா இருக்கனுமா..? புகழ் உன் நிலமை இப்படியா ஆகனும்..?” என மனைவியை ஓரக் கண்ணால் பார்த்தபடியே, அவளது ரியாக்ஷனை கவனித்தபடியே பாவம் போல் புலம்ப,
‘என்ன மூனு வருஷமா இப்படியேவா.. அதுவும் ஒன்னா ஒரேக் கட்டில்ல படுத்துட்டு.. அவன் சும்மா இருந்தாலும் நம்ம கை சும்மா இருக்கனுமே.. ஆத்தி அது முடியாது..’ என ஜெர்க்கானவள், “ஹேய் அப்படி… அப்படி ஒன்னும் சொல்லல.. அது.. அதுக்கு எல்லாம் நிறைய முன்னெச்சரிக்கையா பாதுகாப்பா இருக்குற மாதிரி மாத்திரை எல்லாம் இருக்காம ஏ.. அது மகிக்காகிட்ட இருந்து வாங்கிக் கொடுத்தாங்க. அப்புறம் ஆம்பளைங்க பயன்படுத்துற மாதிரியும்..” என அடுத்து அவள் என்ன சொல்வாள் என யூகித்து, தன்மேல் சாய்ந்திருந்தவளைப் புரட்டி, பேசிய இதழை, தன்னிதழ் கொண்டு பூட்டியிருந்தான்.
அவள் திமிறத் திமிற ஒரு முத்தம் சில நிமிடங்களில் திமிறலை விட்டவள், அவனை நோக்கி “ஒரு முத்தம் கூட கொடுக்கத் தெரியல. சண்டக்காரன் மாதிரி நடந்துக்குறீங்க. முத்தம் கொடுக்கச் சொன்னா கடிச்சு வைக்குறீங்க.. நீங்கல்லாம் என்ன டவுன்ல இருந்து எல்லாத்தையும் கத்துக்கிட்டீங்களோ.. தெரியல..” என பரிகசித்தபடியே அவனை சராமாரியாக அடிக்க,
“ஒ.. எனக்குத் தெரியாது.. உனக்குத்தாண்டி இந்த மாமவைப் பத்தி தெரியாது. முத்தம் கொடுக்க ஆரம்பிச்சா கமல்ஹாசனுக்கே டஃப் கொடுப்பேன். அது போகப்போகத் தெரிஞ்சிக்கோ. இப்போ சொல்லு உனக்கு எப்படித் தெரியும் இதெல்லாம். அதுவும் முத்தம் கொடுக்குறதைப்பத்தி இவ்வலவு டீடைலா சொல்ர..” என சந்தேகமாகப் பார்க்க
“ஹான்… மகிக்கா படம் போட்டு…” என் முடிக்க விடவில்லை. “என்னது இதையும் படம் போட்டுக் காட்டினாளா..? என்னடி சொல்ற தெளிவா சொல்லு..” அரண்டு போன குரலில் கேட்க,
“அடச்சாமி… அது அப்படி இல்ல.. மகிக்கா ஒரு நாள் படம் பார்த்துட்டு இருந்தாங்க. அப்போ நான் வந்தேன். நல்லாருக்கும் உட்காரு பார்க்கலாம் சொன்னாங்க. ஆனா என்ன பேசினாங்க.. அது என்ன மொழி எதுவும் புரியல.. அந்தப் படத்துல தான் ரெண்டு முத்தம் கொடுப்பாங்க.. அதைப் பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்…” என்றதும்,
“ஷப்பா… ஒரு நிமிஷம் நான் கூட பயந்தே போயிட்டேன்…” என பெருமூச்சு விட, “உங்கப்புத்தி போகுது பாரு ச்சே..” என அவனை விட்டு விலக முயல, அவளைப் போக விடாமல் தடுத்து தன் மேலேப் போட்டவன், “மாத்திரை எல்லாம் போடக்கூடாது சரியா..? அது உடம்புக்கு கேடு.. இதுக்குத் தான் அந்த அரை டாக்டர் கூட சேராதன்னு சொன்னேன் கேட்டியா…? இரு அவக்கிட்ட பேசும் போது உண்டு இல்லைன்னு பன்றேன்…” எனக் கோபமாகப் போல் பேச,
“அய்யோ அப்படியெல்லாம் எதுவும் சொல்லாதீங்க. அக்கா இப்போ மாசமா இருக்கும் போது யாரும் கடுசா ஒரு வார்த்தைக் கூடப் பேசக்கூடாது. அக்காவுக்கும் கஷ்டம், வயித்துல இருக்குற பாப்பாவுக்கும் ஆகாது.. அப்படி நீங்க அவுகள எதாச்சும் திட்டினா, நான் உங்களோட பேசமாட்டேன்..” என முறுக்க,
“ஹா.. ஹா.. அடேங்கப்பா பாசக்காரிதான். ரொம்பத்தான் பன்றடி.. உங்க மகிக்காதான் முக்கியமா உனக்கு..? அவளுக்காக நீ என் கூட சண்டை போடுவியா..?” என அவளைச் சீண்ட
“ம்ம்ம்.. ஆமாம்.. அவங்கதானே நாம சேர முக்கியக் காரணம். மகிக்காவும் மாமாவும் முயர்ச்சி செய்யலன்னா இப்போ நாம ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்துருக்க முடியுமா..? நான் கிடைச்சது உங்களுக்கு வேணும்னா சாதாரணமா தெரியலாம். ஆனா நீங்க எனக்கு கிடைச்சது வரம். வரம் வாழ்க்கையில் ஒரு தடவை தான் கிடைக்கும். அந்த வரம் கிடைக்க உதவி செய்தவங்களை எந்த வகையிலும் கஷ்டப்படுத்தவோ, காயப்படுத்தவோ மறந்துடவோ கூடாது. அதை என் உயிர் போறவரைக்கும் நான் செய்ய மாட்டேன்..” எனத் தெளிவாகப் பேசினாலும், கண்கள் லேசாக கலங்கியிருந்தது.
அவளை அணைத்திருந்தவன் ஆறுதலாக முதுகை வருடியபடியே சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு “எனக்குத் தெரியும் கண்ணம்மா.. உன்னைப்பத்தி எனக்குத் தெரியாதா..? நான் சும்மா உன்னை சீண்டினேன்..” என்று சமாதானம் செய்துவிட்டு, “ஆனலும் என் பொண்டாட்டிக்கு எவ்ளவு பெரிய மனசு.. சரி அதை விடு.. மாத்திரை போடக்கூடாது சொன்னேன்ல.. அடுத்து என்ன செய்யலாம்..” என அவன் காரியத்திலேயேக் கண்ணாக கேட்க,
“ஹான்.. போங்க நீங்க, என்னைச் சும்மா சும்மா சீண்டுறீங்க, எனக்குத் தெரியாது..? ஆனா உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். நீங்க என்னமோ பண்ணுங்க. எனக்குத் தூக்கம் வருது…” என அவன் அசந்த நேரம் பார்த்து தள்ளீவிட்டு, போர்வையில் தன் உடலை புகுத்தி மெத்தையில் ஒரு ஓரமாய் படுக்க,
அதைப் பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் குளியலறை நோக்கிச் செல்ல, அவனைப் பார்த்துத் தோளைக் குலுக்கியபடி கண்களை மூட, சில நிமிடங்கள் கழித்து தன் போர்வைக்குள் கணவனின் வாசமும், வெற்று முதுகில் அவனது சுவாசமும், சட்டென்று உடல் சிலிர்க்க, வேகமாகத் திரும்பியவளை அதற்காகவேக் காத்திருந்தவன் போல, திரும்பியவளின் கால்கள் இரண்டையும் தன் கால்களுக்குள் கொண்டு வந்து, அவள் திமிறாதவாறு இறுக்கிக் கட்டிக் கொண்டான்.
பிறகு கரங்கள் இரண்டையும் தனக்குப் பின்னால் போட்டவன் முகத்தைத் தனக்கு அருகே இழுத்து கோபமாக முறைத்த விழிகளில் மென்மையாக ஒரு குட்டி முத்தம். அடுத்து கோபத்தில் சிவந்திருந்த கன்னங்கள் ஒவ்வொன்றிலும் ஒருக் குட்டி முத்தம். அடுத்து முனுக்கென்று கோபத்தில் துடிக்கும் நுனி மூக்கில் ஒரு குட்டி முத்தம். அடுத்து கீழ் நாடியில் ஓர் முத்தம்.. சற்று மேலே அவனது உயிரைக் குடிக்கும் அவளது தேனிதழ்கள்.
கணவனின் முத்த தாக்குதலில் தளர்ந்து, மயக்கத்தில் லேசாக பிளந்த இதழ்களைச் சுற்றி மென்மையாக குட்டி குட்டி முத்தங்களை வைக்க, அவள் உடல் மொத்தமும் தளர்ந்தது. ஒரு கரமோ அவன் கேசத்தை கொத்தாகப் பிடிக்க, மற்றொரு கரமோ அவனது வெற்று முதுகில் அழுத்தமாகப் பதிய.. இதழ்களோ ‘பாவா’ என உச்சரிக்க, இதற்கு மேல் தாங்கமாட்டள் என்பதை உணர்ந்தவன், அந்த தேனூறும் இதழ்களை அப்படியே சுவைத்திருந்தான். சீண்டலும், சினுங்கலுமாக அவர்களது இல்வாழ்க்கை இனிதே தொடங்க, மேகமோ அவர்களுக்குப் பரிசாக வான்மழையைக் கொட்டி மகிழ்ந்து விடைப்பெற்றது. வான்மழையோடு நாமும் அவர்களை வாழ்த்தி விடைபெறுவொம்..
புன்னகை மட்டும்
அணிகலனாய் கொண்டு
புன்சிரிப்பில் மனதை
வெல்லும் பேரழகி நீ
ஒப்பற்ற அழகுக்கு
ஒப்பனைகள் எதற்க்காக
என கூறும் உன் வெட்கம்
போதும் நான் உனக்குள்
கரைந்து போக..
சுபம்!!