Home Anti Heroineஅகானா – 92

அகானா – 92 

ஆகன் தம்பதிகள் மாலத்தீவில் இருந்து வந்து இரண்டு நாட்கள் ஆகி இருக்க ஆஹானா தன் அன்றாட வேலைகளை பார்க்க ஆரம்பித்து இருந்தாள் 

அன்று வேலை நேரம் முடியாமல் அவனிடமிருந்து அழைப்பு வரவே யோசித்தபடியே தான் எடுத்தாள்.

பொதுவாக வேலை நேரத்தில் அவசரம் தவிர மற்ற நேரங்களில் ஆதம் அழைப்பதில்லை இப்போது ஏன் என்று நினைத்துக் கொண்டே “சொல்லுங்க சீனியர்..” என்றாள் குழப்பமாக.

“அம்மு.. நீ கிளம்பிட்டா இங்க நேரா ஹாஸ்பிடல் வந்துடு.. ரெண்டு பேரும் சேர்ந்து போயிடலாம்..” என்றதும்,

“ஹான்.. ஆனா செவன்க்கு ஒரு மீட்டிங்க் இருக்கு சீனியர்.. நான் வீட்டுக்கு போய்ட்டு கிளம்பி மீட்டிங்க் போகத்தான் டைம் சரியா இருக்கும்..” என அவள் யோசிக்க

“ட்வென்டி மினிட்ஸ்ல கிளம்பிடலாம் அம்மு..” என்று சற்றே கட்டாயப்படுத்தும் குரலில் கூற,

அடுத்து ஒன்றும் யோசிக்கவில்லை. “ஓக்கே… வந்துடுறேன்..” என வைத்துவிட்டாலும், அகானாவின் முகத்தில் குழப்பம் குறையவே இல்லை.

எப்போதும் இப்படி அழைப்பவனில்லை, அதிலும் வேலை இருக்கு என்று சொல்லியும் வர சொன்னால்? ஏதேதோ எண்ணங்களும், பயங்களும் அவளை பாடாய்படுத்தினாலும், அடுத்த பத்து நிமிடத்தில் அவனுக்கு எதிரே இருந்தாள் அகானா.

‘என்ன பிரச்சினை?’ என யோசித்துக்கொண்டே வந்தவள், ஆகனின் அறையில் ரஞ்சனியைப் பார்த்ததுமே ‘இது தான் பிரச்சினையா?’ என நினைத்தவளுக்கு எரிச்சலும் கோபமும் வந்துவிட்டது.

அமைதியாக ஆகனைப் பார்த்தபடியே அமர, அவனோ அவளுக்கு காபியை சொல்லிவிட்டு ரஞ்சனியைப் பார்த்தான்.

அந்த பார்வையே ‘நீ தான் பேச வேண்டும்’ என்று சொல்லாமல் சொல்ல, ரஞ்சனிக்கு பயத்தில் காய்ச்சலே வந்துவிடும் போல இருந்தது.

“சீனியர்..” என அகானா பொறுமையை இழந்து கத்த,

“அது.. அது நான் தான் பேசனும்னு ஆகன்கிட்ட சொல்லி வரச் சொன்னேன்…” என ரஞ்சனி குரல் தந்தியடிக்க,

“என்ன பேசனும் உங்களுக்கு? உங்க வீட்டுக்கு எல்லாம் வர முடியாது..” என பட்டென சொல்ல, ரஞ்சனியின் முகம் கருத்துவிட்டது.

“அம்மு..” என ஆகன் அதட்ட,

“ம்ச்.. அவங்களுக்குத்தான நான் அந்த வீட்டுக்கு வரது பிடிக்காது. நான் என்னமோ புதுசா சொல்றமாதிரி ஏன் இவ்ளோ சீன்..” என அவனையும் அதட்ட,

“ம்ச்.. பொறுமையா அவங்க சொல்றதை கேளு… அதுக்குப்பிறகு பேசு.. உனக்கும் டைம் இல்ல..” என ஆகன் சொல்லவும் தான் அமைதியானாள் அகானா.

“அது.. நான் இப்படி கேட்கிறேன்னு நீ தப்பா எடுத்துக்காத ப்ளீஸ்..” என நிறுத்தி அகானாவைப் பார்க்க, அவளோ ‘சீக்கிரம் சொல்லித் தொலைங்க’ என்பது போல் பார்த்தாள்.

“அது.. உங்க அம்மா… அது என் அண்ணாவோட.. நீங்க மூனு பேரும்.. வந்து..” என கோர்வையாக சொல்ல முடியாமல் திணற, அந்த திணறலை வெகுவாக ரசித்தாள் அகானா.

பார்க்கவே கண்கொள்ளா காட்சியா இருக்கே! எப்பவும் திமிரும், தெனாவட்டுமா அலையுற ரஞ்சனிக்கு கூட வார்த்தை வாயில வர தகிட தித்தோம் போடுதே!

அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளையும், உதட்டை கடித்து வெளிவரத் துடித்த புன்னகையை அடக்கும் விதமும் ஆகனின் கண்களில் படாமல் இல்லை.

ஆனால் அவன் எதுவும் பேசவில்லை. மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீங்க எப்பவும் இப்படித்தானா? தெளிவாவே பேசமாட்டீங்களா?” என்றாள் ரஞ்சனியைப் பார்த்து கடுப்பாகவே

“அம்மு..” என ஆகன் மீண்டும் மனைவியை அதட்ட,

“பின்ன என்ன சீனியர், வந்து போய்ன்னு இழுத்துட்டு இருக்காங்க.. என்ன பிரச்சினைனு தெளிவா சொன்னாதானே எனக்குப் புரியும்..” என அவனிடமே கூற,

“அம்மு.. ஒரு நிமிசம் அமைதியா இரு, அம்மா பேசுவாங்க..” என மனைவியை அதட்டிவிட்டு, தன் அம்மாவைப் பார்க்க, அவரோ மகனைத்தான் பரிதாபமாக பார்த்துக்  கொண்டிருந்தார்.

“ம்மா..” என அந்த பார்வையில் பல்லைக் கடித்தவன், “அம்மு… அம்மா என்ன கேட்குறாங்கன்னா உன்னோட ப்ளான் என்ன? அத்தை தான் சுபாஷ் அங்கிளை வேண்டாம்னு சொல்றாங்க, மாமாவும் மைத்தி அத்தையை டிவோர்ஸ் பண்ண போறார் சோ..” என்றதும்,

“உங்க மைத்தி அத்தையை துரத்தி விட்டுட்டு எங்க அம்மாவை அந்த இடத்துக்கு கொண்டு வரலாம்னு யோசிக்கிறீங்களா?” என படு நக்கலாக ரஞ்சனியைப் பார்த்து கேட்க,

“ஹேய்..” என ஆகன் அதட்ட,

“இல்ல.. அப்படியெல்லாம் இல்ல… நீ என்னை தப்பா நினைச்சாலும் பரவாயில்ல. என்னை சுயநலவாதியா? பணத்தாசைப் பிடிச்சவளா எப்படி வேணும்னாலும் நினைச்சிக்கோ, ஆனா எங்க அண்ணியோட வாழ்க்கையை மட்டும் விட்டுடு. அவங்களுக்கு லைஃப்ல எதுவுமே நல்லது நடக்கல. அண்ணா மேல இருந்த ஆசையில..” என ரஞ்சனி முடிக்கும் முன்னே பட்டென அந்த இருக்கையில் இருந்து எழுந்துவிட்டாள் அகானா.

“உங்க அண்ணா மேல வந்த ஆசை தப்பு கிடையாது. அடுத்தவங்களோட புருசன் மல வந்தது தப்பு.. உங்க அண்ணா செஞ்சதை என் அம்மா செஞ்சிருந்தா நீங்க எல்லாம் அவங்களை சும்மா விட்டுருப்பீங்களா?” என ரஞ்சனியைப் பார்த்து ஆத்திரமாக கத்த,

“அம்மு.. ப்ளீஸ்டா.. கோபம் வேண்டாம்.. டென்சன் வேண்டாம். அதோட இந்த பிரச்சினையை இழுத்துக்கிட்டே போகவும் வேண்டாம். முடிச்சி விடு. அப்போதான் எல்லாருமே நிம்மதியா இருக்க முடியும்..” என அகானாவைப் பிடித்து மீண்டும் அந்த இருக்கையில் அமர வைத்தான் ஆகன்.

நொடியில் அந்த இடமே அமைதியில் வியாபித்திருந்தது. அகானாவின் இப்போதைய மனநிலையில் விட்டால் தன்னை அடித்து விடுவாளோ என்ற பயம் கூட வந்திருந்தது ரஞ்சனிக்கு.

மைதிலி அவர்களுக்காக நிறைய செய்திருக்கிறார். அந்த நன்றி உணர்ச்சிக்காகத்தான், தனக்கு பிடிக்கவே பிடிக்காத மருமகளிடம் இறங்கி வந்து பேசிக்கொண்டிருந்தார்.

அகானா சொல்லப் போகும் செய்திக்காக பக் பக்கென்ற மனதுடன் காத்திருந்தார் ரஞ்சனி.

நொடிகள் கரைந்து நிமிடங்களே சென்று கொண்டிருந்தது. அகானாவின் உள்ளத்தின் கொதிப்புகள் அவளின் முகத்திலே தெரிந்தது.

முகம் செக்கசெவேலன்னே சிவந்திருக்க, உடலும் இறுகிப் போயிருந்தது.

மனைவியின் மனநிலை புரிய, அவளின் தோளை வருடி “அம்மு..” என்றான் ஆதரவாக.

‘இனி உனக்கு யாரும் வேண்டாம். யாருக்காகவும் நீ ஏங்கவும் வேண்டாம். உன்னுடைய அனைத்துமானவனாக நான் இருப்பேன்’ என அந்த குரல் கூற, “ஊப்ஸ்” என பெருமூச்சைவிட்டு தன்னை சமன் செய்து கொண்டு ரஞ்சனியை நிமிர்ந்து பார்த்து பளிச்சென புன்னகைத்தாள்.

“அவர் கூட என் அம்மாவை சேர்த்து வைக்கனும்னு நான் எப்பவும் யோசிச்சதில்ல. அப்படி யோசிச்சிருந்தா நான் பழிவாங்குற ஸ்டைலே வேறமாதிரி இருந்திருக்கும். என் அம்மாவுக்கோ, எனக்கோ அவர் வேண்டாம். எப்படி வந்தாலும் வேண்டாம்..” என நிறுத்தி நிதானமாக கூற, ஆகனின் இதயத்திலொரு பெரும் வலி.

மனைவியின் முகத்தில் வந்து போன வலிகளை, தன் வலிகளாக உணர்ந்தவன் அவளைத் தோளோடு அனைத்துக் கொண்டான்.

ஆனால் அதற்கு மாறாக ரஞ்சனியின் முகத்தில் ஆயிரம் வால்ட்ஸ் பல்பை மாட்டியது போல பிரகாசம்.

“ம்மா..” என அவரைப் பார்த்து ஆகன் பல்லைக் கடிக்க,

“அவங்களை எல்லாம் திருத்த முடியாது. அவங்க அப்படித்தானு எனக்குத்தான் தெரியுமே நீங்க ஃப்ரீயா விடுங்க..” என்றவள் “அவ்ளோதானே..” என அவனைத் திரும்பி பார்க்க, 

“இல்ல..” என மீண்டும் ஆரம்பித்த ரஞ்சனி, மைதிலி பற்றியும், அவர் எடுத்த முடிவைப்பற்றியும் அனைத்தையும் சொல்ல, “ஓ..” என்றவள் கணவனைப் பார்த்து தலையசைத்துவிட்டு கிளம்பிவிட்டாள்.

“என்ன கண்ணா ஒன்னுமே சொல்லாம போறா..?” என மகனிடம் கேட்க

“இன்னும் என்ன சொல்லனும்? அதுதான் சொல்ல வேண்டியதை, நீங்க எதிர்பார்த்த மாதிரியே சொல்லிட்டால்ல..” என பல்லைக் கடிக்க

“ம்ச் அது இல்ல கண்ணா..” என ரஞ்சனி ஏதோ சொல்ல வர,

“ம்மா.. போதும் கிளம்புங்க.. இனி அவங்க என்ன முடிவெடுத்தாலும், நீங்க தலையிடாதீங்க.. அவங்க வாழ்க்கையை அவங்களை வாழ விடுங்க..” என்று முடித்து அனுப்பிவிட்டான்.

அகானா சென்ற சில நிமிடங்களிலேயே, ஆகனின் அலைபேசிக்கு மனைவியிடமிருந்து வந்து விழுந்தது ஒரு குறுஞ்செய்தி.

வழக்கறிஞர் பிரபாகரன் என்பவரின் தொடர்பு எண். அதிலேயே அடுத்து அவன் என்ன செய்ய வேண்டும் என்று புரிய, தன் மாமனிடம் பேசி அந்த லாயரையே சந்திக்க வைத்தான்.

இனி அவர்களைக் கொண்டு தன் தாய்க்கு எந்த மனக்கிலேசமும் வந்து விடக்கூடாது என்று உறுதியாக நினைத்திருந்தாள் அகானா. 

அதோடு மஞ்சரியும் இங்கிருக்கப் போவதில்லை என்றான பிறகு, இவர்களோடு மல்லுக்கட்டியதெல்லாம் போதும் என்ற முடிவுக்கும் வந்திருந்தாள் பெண்.

மேலும் ரஞ்சனி கேட்டதற்காக இந்த பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றெல்லாம் அவள் நினைக்கவில்லை.

ரவிக்கு ஒரு வருத்தம் என்றால், தன் கணவனும் வருத்தப்படுவான் என்று தெரியும். அவனை போதுமான அளவிற்கு வருத்தப்படுத்தியாயிற்று. மேலும் மேலும் வருத்தப்படுத்த அவளால் முடியாது. அது தன் நேசத்திற்கு அவள் செய்யும் துரோகம். கணவனின் காதல் உணர்ந்த பிறகு அவன் வருந்துவது போல் எதையும் செய்யும் துணிவில்லை பெண்ணுக்கு.

அனைத்தையும் நொடியில் யோசித்துப் பார்த்தவள் “ம்ம் சரி அங்கிள்.. இந்த கனலி மேடம் என்னை பார்க்கிற பார்வையே டிஃபரன்டா இருக்கு.. ஏதோ சரியில்ல..” என முணுமுணுக்க,

“இன்னைக்கு ரவி சார் மீட் பண்ண லாயர், கனலி மேடமோட சீனியர். ஒருவேளை அவர் சொல்லிருக்கலாம்.” என்றார் கண்ணனும்.

“ஓ.. ஆனாலும்” என ஏதோ சொல்ல வந்தவள் அப்படியே கிளம்பிவிட்டாள்.

******

இங்கு இரண்டு வாரம் என்றிருந்த நாட்கள் கரைந்து இரண்டு நாட்களாக வந்து நின்றிருந்தது.

ஆரியன் தம்பதிகள் சிங்கப்பூர் செல்வதற்கு. இடையில் ஒருமுறை பாண்டிச்சேரி சென்று, மூன்று நாட்கள் அங்கு தங்கி வந்திருந்தனர்.

இப்போது அனைவரும் பாண்டிச்சேரி சென்று ஒருநாள் தங்கிவிட்டு, அங்கிருந்து சென்னைப் போய் விமானம் ஏறுவதாக ப்ளான்.

நித்யா வினோத் பிள்ளைகளோடு அடுத்தநாள் வருவதாக கூறிவிட,

ஆகன்-அகானாவைவைத் தவிர மற்ற அனைவரும் பாண்டிச்சேரி கிளம்ப ஆயத்தமாகினர். 

You may also like

1 comment

M. Sarathi Rio May 28, 2026 - 12:56 am

இப்ப எதுக்கு ரஞ்சனி வந்து அகானா கிட்ட பேசிட்டிருக்கிறாளாம்?

😔😔😔
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured