அகானா -94
“என் அப்பா மேம்..” என கனலியிடம் சொல்லிவிட்டு, ரவியிடம் “அப்பா தானே..” என்றாள் நேர்ப்பார்வையாக.
சட்டென “என் பொண்ணு ம்மா..” என்றார் ரவியும் உணர்ச்சிப் பெருக்கில்.
“ஓஹ்.. அப்படியா? சொல்லவே இல்லையே அங்கிள் நீங்க?” என கனலி ரவியிடம் வியப்பாக கேட்க, அதற்கு அகானா அமைதியாக இருக்க, ரவியோ என்ன சொல்லி சமாளிக்க என யோசிக்க, ஆகன் தான் “அவங்க பொசிஷனுக்கு சேஃப் இல்லன்னு யாருக்கிட்டயும் மாமா சொல்றது இல்ல மேம்..” என சிரித்தான்.
“ரொம்ப கரெக்ட் சார்..” என்ற நிலவன் “கிளம்பிட்டீங்களா?” என்றான் ரவியிடம்.
“ஹான் ஆமாம் ப்பா.. ஆகனும் இங்க வந்துட்டான். நேரமா போனா ஹாஸ்பிடல் போய்ட்டு போவேன்.” என்று நிலவனுக்கு பதில் கொடுக்க,
“மாமா இந்த டைம் போக வேண்டாம். மார்னிங்க் யேர்லியா போனா போதும்.. இப்போ அங்க ஒரு வேலையும் இல்ல..” என்றான் ஆகன் வேகமாக.
“பார்மசி செக்ல எல்லாம் நித்யா சைன் பண்ணனும்ல கண்ணா.. நான் போய் எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்பறேன்..” என்று ரவி மேலும் ஏதோ பேச வர,
“பரவால்ல மாமா. நாளைக்கு வாங்கிக்கலாம். நான் அத்தைக்கிட்ட சொல்லிடுறேன்.. ட்ரைவர் வந்துருக்காரா? இல்ல செல்ஃப் ட்ரைவா.?” என்றான் அந்த பேச்சை நிறுத்தி,
“ட்ரைவர் தான் கண்ணா.. நீங்க பார்த்துட்டு வாங்க.. நான் கிளம்பறேன்.” என்றவர் இருவரிடமும் தலையசைத்துவிட்டு, நிலவன் தம்பதிகளிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்.
“ஸாரி ம்மா.. ஓரளவுக்கு உங்க பிரச்சினை தெரியும்..” என்றான் நிலவன்.
‘எப்படி?’ என யோசித்தாலும், “இட்ஸ் ஓக்கே சார்..” என அகானாவும் புன்னகைக்க,
“துரைப்பாண்டி அண்ணா சொல்லி..” என கனலி அகானாவின் பார்வைக்கு பதில் கொடுத்தாள்.
“துரைப்பாண்டி.?” என அகானா புருவம் உயர்த்த
“ஆரம்பத்துல எனக்கு அவரால தான் நிறைய பிரச்சனை ஸ்டார்ட் ஆச்சு.. அப்புறம் என்னோட போராட்டங்கள், என்னோட கோபங்கள், வேலை எல்லாம் பார்த்து, கொஞ்சம் கொஞ்சமா எனக்கு ஹெல்ப் பண்ண ஆரம்பிச்சார். இப்போ இங்க எல்லாமே அவர்தான் பார்த்துட்டு இருக்கார்.. உன்னை பத்தியும் அவர் தான் எனக்கு சொன்னது..” என்றாள் கனலி.
“நல்ல மனுஷன் தான், பெரியப்பாவுக்கு ஃபுல் சப்போர்ட்..”
“ஆமாம்…. லாஸ்ட் இயர் அவர் பேமிலியோட கனடா போறது.. எனக்காகத்தான் இருந்தார், அவர்கிட்ட என்னோட ப்ராஜெக்ட் ஒன்னு இருக்கு அதை கம்ப்ளீட் பண்ணி கொடுத்துட்டு கிளம்புவார்..”
“என்கிட்டயும் கனடா போறத பத்தி பேசினார்.. ஏதோ வேலையை முடிச்சிட்டு போகனும் சொன்னார்..”
“கனி உன்னைப்பத்தி அடிக்கடி பேசுவாம்மா? இந்த சொசைட்டில நீ ஃபேஸ் பண்ற பிரச்சினையும், அதுக்கு உன்னோட தீர்வும்னு அவ உன்னைப்பத்தியே தான் பேசிட்டு இருப்பா. பத்து வருசத்துக்கு முன்னாடி இவ எப்படி இருந்தாளோ? அப்படித்தான் இப்போ நீ இருக்க.. உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் நீ தயங்காம என்கிட்ட கேட்கலாம். நான் உனக்காக இருக்கேன்.” என நிலவன் அவளிடம் சொல்லி புன்னகைக்க, கனலியும் ‘ஆம்’ என்பது போல் புன்னகைத்தாள்.
அதோடு “நம்ம பேசினதும் இந்த ப்ராஜெக்ட் பத்தி தான் மா.. போடி, பெரியகுளம் சுத்தி இருக்கிற பழத்தோட்டம், பண்ணை, எஸ்டேட்ல எல்லாம் நிறைய குடும்பங்களை கொத்தடிமைகளா வேலைக்கு வச்சுருக்காங்க. அவங்க உடம்பு சரியில்லன்னா கூட ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறதுக்கோ, முதலுதவி செய்றதுக்கோ எந்த வசதியும் கிடையாது.”
“இதை விசாரிக்கப் போன ரெண்டு எஸ்ஐ, ஒரு ரிப்போர்ட்டர் என்ன ஆனாங்கன்னு தெரியல.. அதனால இந்த வேலையை நீங்க லீகலா மூவ் பண்ணாம, உங்க பிரெண்ட்ஸ் சர்கிள் வச்சு மூவ் பண்ணனும். நானோ, கனலியோ, துரைப்பாண்டி அண்ணனோ இந்த கேஸ்ல ஒன்னும் செய்ய முடியாது.. எங்கள சுத்தி அந்த எம்எல்ஏ ஆட்கள் இருக்காங்க, அவங்க எங்களை கண்காணிச்சிட்டே இருக்காங்க. துரைப்பாண்டி அண்ணனை போடவும் அவங்க ஆள் செட் பண்ணி இருக்காங்க, அண்ணன் எக்ஸ் மினிஸ்டரோட பினாமின்றதால மட்டும்தான், இன்னும் அவர் மேல கை வைக்காம இருக்காங்க. இந்த கேசை பர்தரா நீங்க மூவ் பண்ண முடியும்.. பண்றீங்களா..?” என்றான் நிலவன் நீண்ட விளக்கமாக
“கண்டிப்பா என்னால முடியும் சார்.. ஒரு டூ டேஸ் எனக்கு டைம் கொடுங்க, நாளைக்கு அம்மா சிங்கப்பூர் போறாங்க, அவங்களை சென்ட் ஆஃப் பண்ணனும் அண்ட் எனக்கு எப்போ வேணும்னாலும் டிரான்ஸ்பர் வர வாய்ப்பு இருக்கு.. சோ..” என புன்னகைக்க,
“ஐ நோ ம்மா.. உங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் கன்ஃபார்மாகிடுச்சுனு எனக்கும் தெரியும்.. ஃபார்மாலிடிஸ் முடிஞ்சு நீங்க கிளம்ப 2 வீக்ஸ் டைம் இருக்கும். அதுக்குள்ள இந்த கேஸை முடிச்சு கோர்ட்க்கு கொண்டு வந்துட்டா, அடுத்து கனலியும், அவளோட டீமும் பார்த்துப்பாங்க.” என்றான் நிலவன்.
அதுவரை அவர்களின் பேச்சில் கவனமாக இருந்த ஆகன், “டிரான்ஸ்ஃபர் எந்த டிஸ்ட்ரிக்ட்னு தெரியுமா சார்?” என்றான்.
“நெல்லை ஆர் திருச்சின்னு பேசிக்கிறாங்க ஆகன். இன்னும் கன்ஃபார்மா தெரியல..” என்றான் நிலவனும்.
ஆகனின் நிலை அங்குள்ள அனைவருக்கும் புரிய, அடுத்து என்ன பேசுவது என தெரியாமல் அமைதி காக்க,
“ஓக்கே மேம்.. ஷல் வீ கெட் கோயிங்? டுமாரோ மோர்னிங் சென்னை கிளம்பணும்.” என அகானா அந்த அமைதியை உடைத்து பேச,
மற்றவர்களும் ஆமோதிப்பாய் தலையாட்ட, கனலிதான் “ஓக்கே கேர்ள் டோன்ட் ஓவர்திங்க் எனிதிங். வீ வில் சீ ஹவ் திங்ஸ் கோ.” என சிரித்தபடியே விடை கொடுக்க, ஆகன் தம்பதியும் நல்லமுறையிலேயே விடைபெற்று கிளம்பினர்.
****
அடுத்தநாள் மாலை சென்னை விமான நிலையம்.
மஞ்சரியின் கையைப் பிடித்தபடியே நின்றிருந்தாள் அகானா.
“அம்மு..” என மஞ்சரி ஆரம்பிக்க, “ம்மா. போதும் நீங்க ஏற்கனவே என் காது தீயிற வரைக்கும் அட்வைஸ் கொடுத்துட்டீங்க.. நான் பார்த்துக்கிறேன்.. நீங்க கவனமா போயிட்டு வாங்க.. த்ரீ மந்த்ஸ் கழிச்சு நானும் மாமாவும் வரோம். அதுக்குள்ள உங்க ஈரோப் ட்ரிப் முடிச்சிட்டு வாங்க..” என்றாள் பொறுமையாக.
“அத்தை நான் தான் உங்களுக்கு முன்னமே சொல்லிட்டேனே. அம்மு இனி என் பொறுப்பு, நான் பார்த்துக்குவேன்.. நீங்க கவலைப்படாம போய்ட்டு வாங்க.” என ஆகனும் கூற, மற்றவர்களும் அதையே கூற, மனதே இல்லாமல் விமானம் ஏறினார் மஞ்சரி.
அகானாவின் நிம்மதிதான் அங்குள்ள எல்லோரின் சந்தோஷமும். அன்று போல இன்றும் உணர்வுகளின் பிடியிலிருந்தாள் அகானா. வழக்கம் போல ஆரியன் சொல்லுவதை கேட்டுக் கொண்டிருந்தாள்..
அவனுக்கும் இப்போது போயே ஆக வேண்டிய கட்டாயம். இந்த சூழலில் இருந்து மனைவியை தூரமாக கொட்னு போக வேண்டிய கடமை அவனுக்கு. அதனால் மிகவும் வருத்தத்துடனும், பல பத்திரங்களைக் கூறியும் மனைவியுடன் விமானம் ஏறிவிட்டான்.
அவர்கள் கிளம்பவும் மனதில் ஒரு பதட்டம். அதை உணர்ந்த வீட்டாட்கள் அனைவருமே அகானாவைச் சுற்றி நின்று கொண்டனர்.
அதிலும் ஹரிஷும், ஹரினியும் “க்கா. ஷாப்பிங்க் போலாம்.. மெரினா போலாம்..” என அடுக்க,
“ஹேய் நோ.. நானும் உங்க அக்காவும் மகாபலிபுரம் போறோம்.. நீங்க எல்லாம் ஷாப்பிங்க் போய்ட்டு, பீச் போங்க..” என ஆகன் இடையில் வர,
“மாமா நோ..நோ..” என இருவரும் கத்த, அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், மனைவியை இழுத்துக்கொண்டு வெளியில் வந்தான் ஆகன்.
கணவனின் செயலில் அகானாவுக்கு முகமெல்லாம் சிரிப்பு… “மாமா.. என்ன பண்றீங்க..?” என சிரித்தபடியே கேட்க,
“ஏண்டி.. இந்த ஃபீலிங்க்ஸ்னு ஒன்னு இருக்கே, அது உனக்கோ உங்க வீட்டாளுங்களுக்கோ இருக்கா. கொஞ்சம் கூட இங்கீதம் இல்லாம, பார்க், பீச்னு நம்மளை கூப்பிட்டுட்டு இருக்காங்க.” என பல்லைக் கடிக்க, கலகலவென சிரித்தாள் அகானா.
தன்னை சுற்றி இத்தனை உறவுகள்.. என்னை, என்னென்ன பெயர் சொல்லி அழைக்கின்றனர். இந்த உறவுக்கு ‘தேங்க்ஸ்..’ என கடவுளுக்கு மனதுள் நன்றி சொல்லிக் கொண்டாள்.
‘அடுத்து ஏற்கும் பொறுப்பினையும் சரியாக செய்ய வேண்டும் கடவுளே’ என உடனே வேண்டியும் கொண்டாள் மனதுக்குள்.
ஆகனின் பென்ஸ் அந்த மாலை வேளையில் மகாபலிபுரத்தின் ஒரு பீச் ரிசார்டின் முன் வந்து நின்றது.
பார்த்ததுமே தெரிந்தது அது ஒரு ப்ரைவேட் பீச் ரிசார்ட் என்று.. தன்னால் ஒரு புன்னகை பெண்ணிடம். அதை அவனுக்கு காட்டாமல் அந்த இடத்தை சுற்றி பார்வையை ஓட்டினாள்.
அதை கண்டுகொண்ட கணவன் “நீ என்ன நினைச்சாலும் ஐ டோன்ட் கேர் கலெக்டர் மேடம். என் கஷ்டம் எனக்குத்தானே தெரியும்..” என அவளிடம் புலம்பியபடியே லக்கேஜை எடுத்துக்கொண்டு முன்னே நடந்தான்.
கணவனின் பேச்சில் பெண்ணவளுக்கு சிரிப்பு அதிகமானது, அதோடு அவனை நேருக்கு நேர் சந்திக்கவும் ஒரு மாதிரியாக இருக்க, கடலை நோக்கி மெல்ல நடந்தாள்
ஆட்களின் அரவமே இல்லை. கடலலைகளின் ஓசையைத் தாண்டி எந்த சத்தமும் அந்த இடத்தில் இல்லை.
மாலை நேரத்தின் இதமான கடல் காற்றும், தனிமையும் அவளை வேறு எதையும் யோசிக்கவிடவில்லை.
எதிர்பாராத நேரத்தில் பின்னிருந்து வேகமாக அனைத்த கணவனின் அனைப்பில், விரும்பியே சிறைபட்டாள் பெண்.
“என்னாச்சு..?” என்றவனின் உதடுகள் வழக்கம் போல, அவளின் காதோரம் கவிபாட,
“ம்ம்ம்… ஏன் இவ்ளோ டென்சன்.. நீங்கதான் வீக்லி ஒன்ஸ் வரேன்னு சொல்லிட்டீங்க தானே..” என்றாள் தன் இடையில் இருந்த கணவனின் கைகளில் தன் கையை வைத்து..
“ம்ம்.. அம்மு.. நீ கனலி மேம் கேட்ட ஹெல்ப் பண்ண போறியா? அவங்க சொல்றதை வச்சுப் பார்க்கும் போது நிறைய ரிஸ்க் இருக்கும் போலையே டா..” என்றான் வருத்தமாக.
“அவங்க கேட்டதுக்காக பண்ணனும்னு நினைக்கல மாமா. துரைப்பாண்டி சாருக்காக பண்ண நினைக்கிறேன். அவர் எனக்கும் அம்மாவுக்கும் தப்பு பண்ணிட்டோம்னு நினைச்சு, இப்போ எவ்ளோ ஹெல்ப் செய்திருக்கார். அப்படி அவர் இறங்கி வந்து செய்ய எந்த அவசியமும் இல்லையே. பெரியப்பா ஒரு ரீசனா இருந்தாலும், செய்ய மனசு வந்ததே பெரிய விசயம் இல்லையா? அவருக்கு ஒரு பிரச்சினை, அதை சரி செய்ய நமக்கு ஒரு வாய்ப்பிருக்கு, அதை ஏன் தவற விடனும், அன்ட் கனலி மேம் சொன்ன ரீசனும் எனக்கு சரின்னு தான் பட்டுச்சு..” என்றாள் நீண்ட விளக்கமாக.
“அந்த MLA பத்தி என்ன சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க அம்மு. இது அவரோட சொந்த தொகுதி. ஏகப்பட்ட நல்லது செஞ்சி வச்சிருக்கார். கண்ணை மூடிட்டு அந்தாள் சொன்னா செய்வாங்க. நீ ஆதாரத்தோட நிரூபிச்சாலும், யாரோ ஒருத்தன் நான் தான் செஞ்சேன்னு வந்து சரண்டர் ஆவான். அப்புறம் அந்த MLA நம்மளை மொத்தமா முடிச்சு விட்டுடுவான்.” என கவலையாக பேச,
“மாமா.. இன்னும் நான் டீப்பா அந்த கேஸ் பத்தி விசாரிக்கல, யோசிக்கல. அதுக்கு இன்னும் டைம் இருக்கே, பார்ப்போம்.. இங்க வந்தும் இப்படித்தான் பேசிட்டே இருக்கப் போறீங்களா?” என பேசிக்கொண்டே வந்தவள், ஆகன் ‘என்ன?’ யோசிக்கும் முன்னே, அவனை விட்டு கடலை நோக்கி ஓடப்போக, அவளின் எண்ணம் புரிந்தவன் இடையில் அழுத்தத்தைக் கூட்டி இழுத்துப் பிடித்து அனைத்தான்.
ஆகன் அவளை பின்னிலிருந்து இடையோடு கட்டிக் கொள்ள.. பெண்ணின் பூந்தேகம் தளர்ந்தது.. ஆகனுக்கும் அவளின் அவஸ்தை புரிய.. தன்னை நோக்கி அவளை திருப்பினான்..
“ஃபர்ஸ்ட் டைம் என்னைப் பார்த்து வெட்கப்படுற டி குட்டி..” என பெண்ணின் நாசியில் முத்தம் வைக்க,
கணவனின் ஏக்கமான குரலில், பெண்ணவளின் உடல் மேலும் தளர்ந்தது, நிமிர்ந்து கணவனின் கண்களைப் பார்த்தாள்.. லேசாக கலங்கி இருந்தது.. முகத்தில் மலர்ச்சி.. கண்களில் மட்டும் ஏதோ கலக்கம்.
அந்த கலக்கம் அவளை ஏதோ செய்ய, தன் நெஞ்சோடு அவனை சாய்த்து, இறுக்கிக் கொண்டாள் பெண்.
ஆகனுக்கும் அந்த அனைப்பும், இறுக்கமும் தேவைப்பட்டதோ திமிராமல் அவளின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டான். ஆனால், எதுவும் பேசவில்லை.
“மாமா..” என்றாள் தவிப்பாக.
‘ம்ஹும்..’ என தலையசைத்தவன்.. பேசவில்லை, அவளையும் அடுத்து பேசாமல் நெருக்கத்தில் வைத்துக் கொண்டான்.
இருவருக்குள்ளும் வெப்ப காற்று உள் சென்று.. தாபத்தை தூண்ட.. ஆகன் தன்னவளை இன்னும் இறுக்கிக் கொண்டான்..
அகானா “மாமா என்ன இது.. வி..டுங்க..” என தனக்கே கேட்காத குரலில் மிழற்ற..
ஆகன், அவளின் தோள் வளைவில் முகத்தை வைத்தான். பெண்ணவளின் பூந்தேகம் சிலிர்க்க.. ஆகனுக்கு இன்னும் ஆசை கூடியது..
ஒவ்வொரு நாளும் அவள் மீதிருந்த ஆசையும், காதலும் கூடியதே தவிர குறையவே இல்லை மருத்துவனுக்கு.
மனைவியின் வாசமும், நேசமும் அவனை பைத்தியமாக்கிக் கொண்டிருந்ததென்னவோ உண்மை.
பெண்ணவளின் கழுத்துப் பகுதியில் இருந்த டாப்சை நகட்டி… உள்ளிருந்த ஸ்ட்ராப்சில் மூக்கை வைத்து ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டே “என்னடி ட்ரெஸ் இது..? பீச்ல போடுற ட்ரெஸா இது..? என கிண்டலாக கேட்க,
பெண்ணவளின் உடல் மொத்தமும் சிவந்து போனது…
“ம்ச்.. என்ன பண்ற நீ.?” என தன் தோள்ப்பட்டையை அவன் அசந்த நேரம் நகட்டியவள், அவனிடமிருந்து நகர்ந்து கடலை நோக்கி ஓட,
“ஹேய்..” என்றவன் நொடியில் நிதானித்து அவளுக்கு பின்னே ஓடி, சட்டென மனைவியைக் கைகளில் அள்ளி அந்த தண்ணீருக்குள் அவளோடு மொத்தமாக விழுந்தான் ஆகன்..
ஏதோ சுகம் உள்ளூறுதே
ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா
விருந்தை பெறவா
மார்போடு கண்கள் மூடவா
மலரே மௌனமா
மலர்கள் பேசுமா
1 comment
அட ராமா..! இந்த கதையை இன்னுமா முடிக்காமல் இருக்கிறாங்க..?
😀😀😀
CRVS (or) CRVS 2797