ஜோடியாய் புன்னகைத்துக் கொண்டிருந்த அன்னை-தந்தையின் புகைப்படத்துக்கு முன் விளக்கேற்றி வைத்து, கண் மூடிக் கை கூப்பினாள் பனிமலர்.
"வாழ்க்கை எந்தவித சுவாரஷ்யமும் இல்லாம ஏனோ தானோனு போயிட்டிருக்கும்மா.. என்ன பண்ணுறேன், எதுக்காக வாழறேன்னு கூட தெரிய மாட்டேங்குது. என்னோட அதியன் நிஜமாவே தேவியைக் கலியாணம் பண்ணி இருப்பாரா.. மனசு படபடங்குது. அ.. அவரு இனி என்கிட்ட திரும்பி வரவே மாட்டாராம்மா?" என்று கேட்டவளின் மூடிய இமை வழியே கண்ணீர் துளிகள் கோடாய் வழிந்தன.
நெடுநேரம் மன அமைதிக்காக பெற்றவர்களிடம் பேசிவிட்டு தளர்ந்த நடையுடன் ஜன்னலருகே வந்து நின்றவள் திரைசீலையை இழுத்து விட்டு அறைக்குள் கதிரவனின் குழந்தைகள் நுழைந்து விளையாட அனுமதித்தாள்.
கன்னங்களை நனைத்த ஈரத்தை துடைக்கக் கூட மனம் வரவில்லை அவளுக்கு. ஏதோவொரு மாயைக்குள் சிக்கித் தவிக்கும் நிம்மதியில்லா உணர்வு அவளை நடைப் பிணமாக்கி வைத்திருந்தது.
இவ்வளவு நேரமும் இருள் சூழ்ந்திருந்த அறையை தான் ஏற்றி வைத்த சிறு விளக்கு வெளிச்சமூட்டிக் கொண்டிருந்தது போல், தன் வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் தீபமாய் விளங்கியவனின் வருகைக்காக பாவை உள்ளம் ஏங்கியது.
தோட்டத்திலிருந்து பறித்து வந்த மல்லிகைப் பூக்களை மடியில் அள்ளிக் கொண்டு சீமெந்து தரையில் கால் நீட்டி அமர்ந்து, அவற்றை மாலையாகத் தொடுக்கத் துவங்கினாள் பனிமலர்.
"மலரக்கா! எங்கே இருக்கீங்க?" எனக் கீழ் மாடியில் நின்று தன் பெயரை ஏலம் விடும் கமலியின் குரல் செவிகளை எட்டியது. கமலி, அவள் வாடகைக்கு தங்கிருக்கும் வீட்டு உரிமையாளரின் மகள். பத்தாவது படித்துக் கொண்டிருக்கிறாள்.
"இங்கே வாம்மா.. டோர் திறந்து தான் இருக்கு!" எனக் குரல் கொடுத்தவாறே முகத்தை டுப்பட்டாவால் அழுந்தத் துடைத்துவிட்டு, போலிப் புன்னகை ஒன்றை இதழ்களில் ஒட்ட வைத்துக் கொண்டாள்.
அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே ஓடி வந்த கமலியின் கையில் புத்தக அடுக்கொன்று இடம் பிடித்திருந்தது.
"ஏதாவது டவுட்ஸ் இருக்கா கமலி?"
ஆமென்பது போல் தலை அசைத்தவள் பனிமலருக்கு அருகே தரையில் தானும் சம்மணமிட்டு அமர்ந்து, புத்தகத்தின் பக்கங்களை அவசர அவசரமாகப் புரட்டினாள்.
"எதுக்கு அவசரம்? புக் பேஜ்லாம் உன் கையோட வந்துடப் போகுது.." எனக் கேலி பேசியவளுக்கு தன் வரிசைப் பற்களைக் காட்டிய கமலி,
"குறுந்தொகைல வர இந்த தலைவன் கூற்றுக்கு பொருள் சொல்லுங்க அக்கா.. ட்ரை பண்ணிப் பார்த்துட்டேன். தெளிவா புரிய மாட்டேங்குது.." எனக் கூறி புத்தகத்தை நீட்டினாள்.
"நீயே படி கமலி. நான் விளக்குறேன்!"
சரியென்றவள், "யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்!.." என்ற பாடலை வாய் விட்டு சத்தமாகப் படிக்க, கோர்த்துக் கொண்டிருந்த மல்லிகைப் பூக்கள் பனிமலரின் கையிநின்று நழுவி அவள் மடியில் வீழ்ந்தன.
கண்கள் நொடிப் பொழுதினில் கலங்கித் ததும்ப, இமை தட்டி கண்ணீரைக் கடினப்பட்டு உள்ளிழுத்துக் கொண்டாள்.
"அக்கா.. என்னாச்சு?"
ஆழ மூச்சிழுத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் மனதின் கலக்கம் குரலில் தெரிந்து விடாதபடி சாமர்த்தியமாக பாடலின் பொருளைத் தெளிவாக விளக்கினாள் கமலிக்கு.
பிறகு, கமலியின் மற்றைய சந்தேகங்கள் சிலவற்றையும் தீர்த்து அவளை அங்கிருந்து அனுப்பி வைத்தவள் கதவைத் தாளிட்டு விட்டு வந்து கட்டிலில் முகம் குப்புற சரிந்தாள். நெஞ்சம் விம்மி அழுதது.
கோர்க்கவென கையிலலெடுத்த மல்லிகைப் பூக்கள் கேட்பாரற்று தரையில் அங்குமிங்குமாய் சிதறிக் கிடந்தன.
"நானே மறக்கணும்னு நினைச்சாலும் உங்க முகம் மனக்கண்ணுல தோன்றி என்னை இம்சிக்குது. உங்க நினைவுகள் என்னை விடாம துரத்திட்டே இருக்கு அதியன்! எங்க பார்த்தாலும் உங்களை மட்டுந்தான் காணுறேன்.. நீங்க பேசின வார்த்தைகளைத் தான் கேட்கறேன்!" என வேதனையுடன் முணுமுணுத்தவளின் நினைவலைகள் மெல்லப் பின்னோக்கி நகர்ந்தன.
ஒவ்வொருவர் வாழ்விலும் கவலைகளை மறக்கச் செய்து தன்னையறியாமலே புன்னகையை வரவழைக்கும் வசந்த காலமொன்று இல்லாமல் இருக்காது.
பனிமலரின் வாழ்விலும் அப்படியே!
பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் போதே வாகன விபத்தில் பெற்றவர்களை இழந்து விட்டவளுக்குத் துணையாக இருந்தது அவளது தாய்மாமன் ஜெய்ராம் மட்டுமே!
பனிமலர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தாலும், யாருமின்றி அனாதரவாக நின்றவளை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமளவுக்கு தைரியமிருக்கவில்லை அவருக்கு.
மனைவியானவள் கேள்விக் கணைகளால் தன்னைத் துளைத்தே உயிரை வாங்கி விடுவாள் எனப் பயந்தவர்.. 'ஹாஸ்டலிலே தங்கிக் கொள்கிறேன் மாமா..' என்றவளின் தலை வருடி சம்மதித்து, அவளைப் பாதுகாப்பாக பெண்கள் ஹாஸ்டலில் சேர்த்து விட்டார். மாதாமாதம் அவளைப் பார்க்க வந்து, தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து விட்டுச் செல்லவும் மறக்க மாட்டார்.
அவரது ஆதூரமான தலை வருடலுக்காகவும், அன்பான ஓரிரு வார்த்தைகளுக்காகவும் மாதம் பூரா ஏக்கத்துடன் காத்திருப்பாள். தாய் தந்தையரை இழந்து விட்ட பிறகு அன்புக்காக நிறையவே ஏங்கினாள் பனிமலர்.
வெறுமையும், சுவாரஷ்யமும் இன்றி வறண்ட பாலைவனமாய் போய்க் கொண்டிருந்த காரிகையின் வாழ்வு, அவனின் வரவால் தான் பசுமை பொங்கும் பூங்காவனமாய் மாறிப் போனது. அவன் 'அதியவர்மன்!'.
'அதியன்..' என அவனின் பெயரை உச்சரிக்கும் போதே உடல் சிலிர்க்கும் பாவைக்கு.
திடீரென வந்தான். காதலையும், அக்கறையையும் வள்ளலன்மையுடன் வாரி வழங்கினான். தாயிடமிருந்து கிடைத்த கண்டிப்புடன் கூடிய அன்பையும், தந்தை மடி தந்த பாதுகாப்புடன் கூடிய அரவணைப்பையும் கஞ்சத்தனமின்றி காட்டி பனிமலரின் மனதில் பூ பூக்கச் செய்தான்.
அவனை முதன் முதலாகப் பார்த்தது காலேஜில்!
பேராசிரியராக மாணவ மாணவியர் மத்தியில் அறிமுகமாகியவன் என்று அவளுக்கு காதலனாகி, மனதளவில் கணவனாகிப் போனானோ.. அவளே அறியாள்!
மற்ற மாணவிகளை விட்டுத் தனித்துவமான பார்வையில் தன்னை நோக்கி, எவரிடத்திலும் காட்டாத கரிசனத்தை தன்னிடம் காட்டியதை கண்டு கொண்டதுமே அவளின் மனம் கொள்ளை போய் விட்டது.
அவர்களது சொல்லாக் காதல் எனும் விதையானது, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து பெருமரமாகி விழுது பரப்பிக் கொண்டிருக்க, காலமும் யாருக்காகவும் காத்திருக்காமல் ஒற்றையடிப் பாதையில் ஓடி மறையும் வாகனமாய் நகர்ந்து போயின.
அன்று, இறுதி செமஸ்டரை முடித்துக் கொண்டு ஹாஸ்டலை நோக்கி சைக்கிளை உருட்டிக் கொண்டிருந்தாள் பனிமலர். அவளின் சோகம் தோய்ந்து, களையிழந்து போயிருந்த வதனத்தை பார்க்கவே சகிக்கவில்லை.
'இனிமேல் மனங் கவர்ந்தவனை பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைக்கவே கிடைக்காது!' என்ற நினைப்பே கசந்தது அவளுக்கு.
அவனது அன்பும், அக்கறையும், காதல் கசியும் பார்வையும் என்றும் எனக்கே எனக்காய் வேண்டுமென அடம் பிடித்த மனதை எப்படி அமைதிப்படுத்துவதெனத் தெரியாமல் திணறிப் போனாள்.
வாடிய முகத்துடன் சாலையில் கவனமின்றி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தவளின் முன் திடீரெனப் பிரசன்னமானான் அதியவர்மன்.
பாதையில் ஷூக் காலைத் தேய்த்து சைக்கிளின் இயக்கத்தை நிறுத்தியவள் தன்னைப் பார்த்து மையலாய் குறுநகை புரிந்தவனை வியப்புடன் ஏறிட்டாள். குழி விழுந்த கன்னத்திலும், தன்னிடம் எதையோ கூறத் தயங்கி அலைபாயும் கூர் கண்களிலும் பாவை மனம் சறுக்கி வீழ்ந்தது.
"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.."
கீழுதட்டைப் பற்களுக்குள் சிறைப்படுத்தியவளின் கைகள், உணர்ச்சி வேகத்தில் சைக்கிள் கைப்பிடியை அழுத்திப் பிடித்தன. இமைகள் படபடக்க அவனை ஏறிட்டவள், "எ.. என்ன ஸார்?" என்று வினவினாள்.
முதலில் தயங்கினான்.
திறந்த வாயிலிருந்து வார்த்தைகளுக்குப் பதில் வெறும் காற்று மட்டுமே வெளி வந்ததைக் கண்டு அவஸ்தையுடன் நெளிந்தான். அவனைத் துளைத்துக் கொண்டிருந்த காரிகையின் விழி வீச்சைத் தாங்க முடியாமல் பிடரியை உள்ளங்கைகளால் கோதிவிட்டு வெட்கப் புன்னகை பூத்தான்.
மூச்சை ஆழமாக இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் அடிக்கடி..
இவற்றை எல்லாம் ரசனையுடன் பார்த்திருந்த பனிமலர், திடீரென அவன் கூறிய வார்த்தைகளில் அதிர்ந்து நிமிர..
"நான் உன்னைக் காதலிக்கிறேன் பனி.." என்றான் மீண்டும்!
தன் காதால் கேட்டது பொய்யில்லை என உணரவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது அவளுக்கு. எதிர்பார்த்துக் காத்திருந்த தருணம் தான் என்றாலும், ஏற்றுக் கொள்ள முடியாமல் தயங்கியவள், "அது.. நான்.. எ.எப்படி ஸார்?" நாத் தந்தியடிக்கப் பேசினாள்.
"ஏன் பனி.. உனக்கு என்னைப் பிடிக்கலையா?"
"அய்யய்யோ, ஸார்! நான் யாருனு உங்களுக்கு தெரியாது. நீங்க யாருனு எனக்குமே தெரியாது. அப்பறம் எப்படி.. க்.. காதல்.." எனத் தயங்கியவளை ஏறிட்டவன்,
"தெரிஞ்சவங்க மட்டுந்தான் லவ் பண்ணனுமா பனி? மனசும் மனசும் இணையிறதுக்கு நீ யாருனு எனக்கும், நான் யாருனு உனக்கும் தெரிஞ்சிருக்கணும்னு சொல்ல வர்றியா? இல்ல பனி, ஒருவேளை நீ மறுக்கலாம். ஆனா உண்மை என்னன்னா, நம்ம மனசு ஆல்ரெடி இணைஞ்சிருச்சு.." என்றான் காதலுடன்.
தொண்டைக்குழிக்குள் வந்து தாறுமாறாகத் துடித்தது பனிமலரின் இதயம். அவனது வார்த்தைகளில் மேனி சிலிர்த்தது அவளுக்கு.
இருந்தாலும், "ஆனா ஸார்.. எப்படி?" எனத் தயக்கம் தீராமல் திக்க,
"யாயும் ஞாயும் யார் ஆகியரோ..
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்!
யானும் நீயும் எவ்வழி அறிதும்,
செம் புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!" கண் சிமிட்டிக் குறும்புடன் கூறினான் அதியவர்மன்.
பனிமலரின் பட்டுக் கன்னங்கள் செந்தூர நிறத்தைப் பூசிக் கொண்டன. அவன்பால் காதல் கொண்ட மனம் இனியும் பிடிவாதம் பிடிக்கத் தயாராக இருக்கவில்லை. அவன் யாரென்று தெரியவில்லை. ஆனால் பிடித்திருந்தது அவளுக்கு!
பார்வையைத் தாழ்த்தி சிறு வெட்கப் புன்னகையூடாக தன் சம்மதத்தைத் தெரிவித்தவள் சைக்கிளை தள்ளிக் கொண்டு, அடிக்கடி திரும்பிப் பார்த்தவாறே அங்கிருந்து சிட்டென மறைந்து போனாள்.
அன்று அவன் தெரு முனையில் நின்று தன்னைப் பார்த்திருந்த பார்வை இன்றும் முதுகைத் துளைப்பதாய் உணர்ந்தவள் அவஸ்தை தாளாமல் கட்டிலில் அங்குமிங்குமாய் உருண்டாள்.

Last edited: