• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

15.ஹில்மா தாவுஸ்- பிரிவரிதடி பனிமலரே!

Hilma Thawoos

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
163
27
28
Hambantota, SriLanka
ஜோடியாய் புன்னகைத்துக் கொண்டிருந்த அன்னை-தந்தையின் புகைப்படத்துக்கு முன் விளக்கேற்றி வைத்து, கண் மூடிக் கை கூப்பினாள் பனிமலர்.

"வாழ்க்கை எந்தவித சுவாரஷ்யமும் இல்லாம ஏனோ தானோனு போயிட்டிருக்கும்மா.. என்ன பண்ணுறேன், எதுக்காக வாழறேன்னு கூட தெரிய மாட்டேங்குது. என்னோட அதியன் நிஜமாவே தேவியைக் கலியாணம் பண்ணி இருப்பாரா.. மனசு படபடங்குது. அ.. அவரு இனி என்கிட்ட திரும்பி வரவே மாட்டாராம்மா?" என்று கேட்டவளின் மூடிய இமை வழியே கண்ணீர் துளிகள் கோடாய் வழிந்தன.

நெடுநேரம் மன அமைதிக்காக பெற்றவர்களிடம் பேசிவிட்டு தளர்ந்த நடையுடன் ஜன்னலருகே வந்து நின்றவள் திரைசீலையை இழுத்து விட்டு அறைக்குள் கதிரவனின் குழந்தைகள் நுழைந்து விளையாட அனுமதித்தாள்.

கன்னங்களை நனைத்த ஈரத்தை துடைக்கக் கூட மனம் வரவில்லை அவளுக்கு. ஏதோவொரு மாயைக்குள் சிக்கித் தவிக்கும் நிம்மதியில்லா உணர்வு அவளை நடைப் பிணமாக்கி வைத்திருந்தது.

இவ்வளவு நேரமும் இருள் சூழ்ந்திருந்த அறையை தான் ஏற்றி வைத்த சிறு விளக்கு வெளிச்சமூட்டிக் கொண்டிருந்தது போல், தன் வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் தீபமாய் விளங்கியவனின் வருகைக்காக பாவை உள்ளம் ஏங்கியது.

தோட்டத்திலிருந்து பறித்து வந்த மல்லிகைப் பூக்களை மடியில் அள்ளிக் கொண்டு சீமெந்து தரையில் கால் நீட்டி அமர்ந்து, அவற்றை மாலையாகத் தொடுக்கத் துவங்கினாள் பனிமலர்.

"மலரக்கா! எங்கே இருக்கீங்க?" எனக் கீழ் மாடியில் நின்று தன் பெயரை ஏலம் விடும் கமலியின் குரல் செவிகளை எட்டியது. கமலி, அவள் வாடகைக்கு தங்கிருக்கும் வீட்டு உரிமையாளரின் மகள். பத்தாவது படித்துக் கொண்டிருக்கிறாள்.

"இங்கே வாம்மா.. டோர் திறந்து தான் இருக்கு!" எனக் குரல் கொடுத்தவாறே முகத்தை டுப்பட்டாவால் அழுந்தத் துடைத்துவிட்டு, போலிப் புன்னகை ஒன்றை இதழ்களில் ஒட்ட வைத்துக் கொண்டாள்.

அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே ஓடி வந்த கமலியின் கையில் புத்தக அடுக்கொன்று இடம் பிடித்திருந்தது.

"ஏதாவது டவுட்ஸ் இருக்கா கமலி?"

ஆமென்பது போல் தலை அசைத்தவள் பனிமலருக்கு அருகே தரையில் தானும் சம்மணமிட்டு அமர்ந்து, புத்தகத்தின் பக்கங்களை அவசர அவசரமாகப் புரட்டினாள்.

"எதுக்கு அவசரம்? புக் பேஜ்லாம் உன் கையோட வந்துடப் போகுது.." எனக் கேலி பேசியவளுக்கு தன் வரிசைப் பற்களைக் காட்டிய கமலி,

"குறுந்தொகைல வர இந்த தலைவன் கூற்றுக்கு பொருள் சொல்லுங்க அக்கா.. ட்ரை பண்ணிப் பார்த்துட்டேன். தெளிவா புரிய மாட்டேங்குது.." எனக் கூறி புத்தகத்தை நீட்டினாள்.

"நீயே படி கமலி. நான் விளக்குறேன்!"

சரியென்றவள், "யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்!.." என்ற பாடலை வாய் விட்டு சத்தமாகப் படிக்க, கோர்த்துக் கொண்டிருந்த மல்லிகைப் பூக்கள் பனிமலரின் கையிநின்று நழுவி அவள் மடியில் வீழ்ந்தன.

கண்கள் நொடிப் பொழுதினில் கலங்கித் ததும்ப, இமை தட்டி கண்ணீரைக் கடினப்பட்டு உள்ளிழுத்துக் கொண்டாள்.

"அக்கா.. என்னாச்சு?"

ஆழ மூச்சிழுத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் மனதின் கலக்கம் குரலில் தெரிந்து விடாதபடி சாமர்த்தியமாக பாடலின் பொருளைத் தெளிவாக விளக்கினாள் கமலிக்கு.

பிறகு, கமலியின் மற்றைய சந்தேகங்கள் சிலவற்றையும் தீர்த்து அவளை அங்கிருந்து அனுப்பி வைத்தவள் கதவைத் தாளிட்டு விட்டு வந்து கட்டிலில் முகம் குப்புற சரிந்தாள். நெஞ்சம் விம்மி அழுதது.

கோர்க்கவென கையிலலெடுத்த மல்லிகைப் பூக்கள் கேட்பாரற்று தரையில் அங்குமிங்குமாய் சிதறிக் கிடந்தன.

"நானே மறக்கணும்னு நினைச்சாலும் உங்க முகம் மனக்கண்ணுல தோன்றி என்னை இம்சிக்குது. உங்க நினைவுகள் என்னை விடாம துரத்திட்டே இருக்கு அதியன்! எங்க பார்த்தாலும் உங்களை மட்டுந்தான் காணுறேன்.. நீங்க பேசின வார்த்தைகளைத் தான் கேட்கறேன்!" என வேதனையுடன் முணுமுணுத்தவளின் நினைவலைகள் மெல்லப் பின்னோக்கி நகர்ந்தன.

ஒவ்வொருவர் வாழ்விலும் கவலைகளை மறக்கச் செய்து தன்னையறியாமலே புன்னகையை வரவழைக்கும் வசந்த காலமொன்று இல்லாமல் இருக்காது.
பனிமலரின் வாழ்விலும் அப்படியே!

பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் போதே வாகன விபத்தில் பெற்றவர்களை இழந்து விட்டவளுக்குத் துணையாக இருந்தது அவளது தாய்மாமன் ஜெய்ராம் மட்டுமே!

பனிமலர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தாலும், யாருமின்றி அனாதரவாக நின்றவளை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமளவுக்கு தைரியமிருக்கவில்லை அவருக்கு.

மனைவியானவள் கேள்விக் கணைகளால் தன்னைத் துளைத்தே உயிரை வாங்கி விடுவாள் எனப் பயந்தவர்.. 'ஹாஸ்டலிலே தங்கிக் கொள்கிறேன் மாமா..' என்றவளின் தலை வருடி சம்மதித்து, அவளைப் பாதுகாப்பாக பெண்கள் ஹாஸ்டலில் சேர்த்து விட்டார். மாதாமாதம் அவளைப் பார்க்க வந்து, தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து விட்டுச் செல்லவும் மறக்க மாட்டார்.

அவரது ஆதூரமான தலை வருடலுக்காகவும், அன்பான ஓரிரு வார்த்தைகளுக்காகவும் மாதம் பூரா ஏக்கத்துடன் காத்திருப்பாள். தாய் தந்தையரை இழந்து விட்ட பிறகு அன்புக்காக நிறையவே ஏங்கினாள் பனிமலர்.

வெறுமையும், சுவாரஷ்யமும் இன்றி வறண்ட பாலைவனமாய் போய்க் கொண்டிருந்த காரிகையின் வாழ்வு, அவனின் வரவால் தான் பசுமை பொங்கும் பூங்காவனமாய் மாறிப் போனது. அவன் 'அதியவர்மன்!'.

'அதியன்..' என அவனின் பெயரை உச்சரிக்கும் போதே உடல் சிலிர்க்கும் பாவைக்கு.

திடீரென வந்தான். காதலையும், அக்கறையையும் வள்ளலன்மையுடன் வாரி வழங்கினான். தாயிடமிருந்து கிடைத்த கண்டிப்புடன் கூடிய அன்பையும், தந்தை மடி தந்த பாதுகாப்புடன் கூடிய அரவணைப்பையும் கஞ்சத்தனமின்றி காட்டி பனிமலரின் மனதில் பூ பூக்கச் செய்தான்.

அவனை முதன் முதலாகப் பார்த்தது காலேஜில்!

பேராசிரியராக மாணவ மாணவியர் மத்தியில் அறிமுகமாகியவன் என்று அவளுக்கு காதலனாகி, மனதளவில் கணவனாகிப் போனானோ.. அவளே அறியாள்!

மற்ற மாணவிகளை விட்டுத் தனித்துவமான பார்வையில் தன்னை நோக்கி, எவரிடத்திலும் காட்டாத கரிசனத்தை தன்னிடம் காட்டியதை கண்டு கொண்டதுமே அவளின் மனம் கொள்ளை போய் விட்டது.

அவர்களது சொல்லாக் காதல் எனும் விதையானது, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து பெருமரமாகி விழுது பரப்பிக் கொண்டிருக்க, காலமும் யாருக்காகவும் காத்திருக்காமல் ஒற்றையடிப் பாதையில் ஓடி மறையும் வாகனமாய் நகர்ந்து போயின.

அன்று, இறுதி செமஸ்டரை முடித்துக் கொண்டு ஹாஸ்டலை நோக்கி சைக்கிளை உருட்டிக் கொண்டிருந்தாள் பனிமலர். அவளின் சோகம் தோய்ந்து, களையிழந்து போயிருந்த வதனத்தை பார்க்கவே சகிக்கவில்லை.

'இனிமேல் மனங் கவர்ந்தவனை பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைக்கவே கிடைக்காது!' என்ற நினைப்பே கசந்தது அவளுக்கு.

அவனது அன்பும், அக்கறையும், காதல் கசியும் பார்வையும் என்றும் எனக்கே எனக்காய் வேண்டுமென அடம் பிடித்த மனதை எப்படி அமைதிப்படுத்துவதெனத் தெரியாமல் திணறிப் போனாள்.

வாடிய முகத்துடன் சாலையில் கவனமின்றி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தவளின் முன் திடீரெனப் பிரசன்னமானான் அதியவர்மன்.

பாதையில் ஷூக் காலைத் தேய்த்து சைக்கிளின் இயக்கத்தை நிறுத்தியவள் தன்னைப் பார்த்து மையலாய் குறுநகை புரிந்தவனை வியப்புடன் ஏறிட்டாள். குழி விழுந்த கன்னத்திலும், தன்னிடம் எதையோ கூறத் தயங்கி அலைபாயும் கூர் கண்களிலும் பாவை மனம் சறுக்கி வீழ்ந்தது.

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.."

கீழுதட்டைப் பற்களுக்குள் சிறைப்படுத்தியவளின் கைகள், உணர்ச்சி வேகத்தில் சைக்கிள் கைப்பிடியை அழுத்திப் பிடித்தன. இமைகள் படபடக்க அவனை ஏறிட்டவள், "எ.. என்ன ஸார்?" என்று வினவினாள்.

முதலில் தயங்கினான்.

திறந்த வாயிலிருந்து வார்த்தைகளுக்குப் பதில் வெறும் காற்று மட்டுமே வெளி வந்ததைக் கண்டு அவஸ்தையுடன் நெளிந்தான். அவனைத் துளைத்துக் கொண்டிருந்த காரிகையின் விழி வீச்சைத் தாங்க முடியாமல் பிடரியை உள்ளங்கைகளால் கோதிவிட்டு வெட்கப் புன்னகை பூத்தான்.

மூச்சை ஆழமாக இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் அடிக்கடி..

இவற்றை எல்லாம் ரசனையுடன் பார்த்திருந்த பனிமலர், திடீரென அவன் கூறிய வார்த்தைகளில் அதிர்ந்து நிமிர..

"நான் உன்னைக் காதலிக்கிறேன் பனி.." என்றான் மீண்டும்!

தன் காதால் கேட்டது பொய்யில்லை என உணரவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது அவளுக்கு. எதிர்பார்த்துக் காத்திருந்த தருணம் தான் என்றாலும், ஏற்றுக் கொள்ள முடியாமல் தயங்கியவள், "அது.. நான்.. எ.எப்படி ஸார்?" நாத் தந்தியடிக்கப் பேசினாள்.

"ஏன் பனி.. உனக்கு என்னைப் பிடிக்கலையா?"

"அய்யய்யோ, ஸார்! நான் யாருனு உங்களுக்கு தெரியாது. நீங்க யாருனு எனக்குமே தெரியாது. அப்பறம் எப்படி.. க்.. காதல்.." எனத் தயங்கியவளை ஏறிட்டவன்,

"தெரிஞ்சவங்க மட்டுந்தான் லவ் பண்ணனுமா பனி? மனசும் மனசும் இணையிறதுக்கு நீ யாருனு எனக்கும், நான் யாருனு உனக்கும் தெரிஞ்சிருக்கணும்னு சொல்ல வர்றியா? இல்ல பனி, ஒருவேளை நீ மறுக்கலாம். ஆனா உண்மை என்னன்னா, நம்ம மனசு ஆல்ரெடி இணைஞ்சிருச்சு.." என்றான் காதலுடன்.

தொண்டைக்குழிக்குள் வந்து தாறுமாறாகத் துடித்தது பனிமலரின் இதயம். அவனது வார்த்தைகளில் மேனி சிலிர்த்தது அவளுக்கு.

இருந்தாலும், "ஆனா ஸார்.. எப்படி?" எனத் தயக்கம் தீராமல் திக்க,

"யாயும் ஞாயும் யார் ஆகியரோ..
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்!
யானும் நீயும் எவ்வழி அறிதும்,
செம் புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!"
கண் சிமிட்டிக் குறும்புடன் கூறினான் அதியவர்மன்.

பனிமலரின் பட்டுக் கன்னங்கள் செந்தூர நிறத்தைப் பூசிக் கொண்டன. அவன்பால் காதல் கொண்ட மனம் இனியும் பிடிவாதம் பிடிக்கத் தயாராக இருக்கவில்லை. அவன் யாரென்று தெரியவில்லை. ஆனால் பிடித்திருந்தது அவளுக்கு!

பார்வையைத் தாழ்த்தி சிறு வெட்கப் புன்னகையூடாக தன் சம்மதத்தைத் தெரிவித்தவள் சைக்கிளை தள்ளிக் கொண்டு, அடிக்கடி திரும்பிப் பார்த்தவாறே அங்கிருந்து சிட்டென மறைந்து போனாள்.

அன்று அவன் தெரு முனையில் நின்று தன்னைப் பார்த்திருந்த பார்வை இன்றும் முதுகைத் துளைப்பதாய் உணர்ந்தவள் அவஸ்தை தாளாமல் கட்டிலில் அங்குமிங்குமாய் உருண்டாள்.
 
Last edited:

Hilma Thawoos

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
163
27
28
Hambantota, SriLanka
"சத்தியமா நான் உங்களை சந்தேகிக்கல அதியன்.. ப்ளீஸ் என்கிட்டயே வந்திடறீங்களா.." என்று காற்றோடு முனகியவளின் பார்வை இலக்கின்றி விட்டத்தை வெறித்தது.

கடந்த காலம் எனும் சுழலுக்குள் சிக்கிக் கொண்டவளின் மனம் கடிவாளமில்லா குதிரை போல் தறிகெட்டு ஓடி, வருடங்கள் சிலதைப் பின் தள்ளி வேகமாகப் பயணித்தது.

காதல்.. தன் வாழ்வையே மாற்றிப் போட்டு, ஏக்கங்களையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தியாக்கி வைத்த அந்த ஒற்றை வார்த்தையை அவள் மிகவும் நேசிக்கத் தொடங்கியிருந்த காலமது!

காதலை சொல்லிக் கொண்ட நாளிலிருந்து இருவருக்கிடையேயான காதலும் வளர்ந்தது. அவளின்றி அவனில்லை. அவன் இல்லாமல் அவளது உயிரில் ஓரணுவும் அசையாது எனும் அளவுக்கு நெருக்கமாகிப் போயினர் இருவரும்!

அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தான் அதியன். அவன் எந்த ஒன்றை செய்தாலும் அதில், 'பனிக்காக!' என்ற உட்பொருள் மறைந்திருந்தது. தன் காதலைத் தங்குதடையின்றி காட்டினான் அவளுக்கு.

வருடங்கள் பஞ்சாய் பறந்து போக, திருமணமும் நடந்தது இருவருக்கும்!

ஜெய்ராமின் குடும்பத்தினர் முன்னிலையில், கோவிலில், மங்கலநாணை பனிமலரின் கழுத்தில் பூட்டி அவளை தன்னில் சரிபாதியாக ஏற்றுக் கொண்டு ஒன்னரை வருடங்கள் கழிந்த நிலையில்.. 'எனக்குனு யாருமே இல்ல. நான் ஒரு ஓஃபன்! ஓஃபனேஜ்ல தான் வளர்ந்தேன்!" என்ற அதியவர்மனின் வார்த்தைகள் பொய் என்று தெரிய வந்தது பனிமலருக்கு.

"ஏன் பொய் சொன்னிங்க அதியன்? எதுக்கு பொய் சொல்லி யாருமில்லாத மாதிரி கோவில் கூட்டிட்டு போய் என் கழுத்துல தாலி காட்டுனீங்க?" என சத்தம் வைத்தவளின் கன்னத்தைத் தன் உள்ளங்கையில் தாங்கி,

"நான் சொல்லுறதைக் கேளு பனி.. உன்னை ஏமாத்தணும்ங்குறது என்னோட இன்டென்ஷன் இல்ல.." என சமாதானம் செய்ய முயன்றான் அதியன்.

"நீங்க என்னை ஏமாத்திட்டிங்க. உங்களை எவ்ளோ நம்பினேன் தெரியுமா? எனக்குனு யாருமே இல்லைனு நீங்க சொன்னதை நம்பி எவ்ளோ வருத்தப்பட்டேன்.. உங்களுக்கு எல்லாமா நான் ஒருத்தி மட்டுமே இருக்கணும்னு நினைச்சேன். உங்களைப் பத்தி தேடி பார்க்கல. நீங்க யாருனு தோண்டித் துருவல. அவ்ளோ நம்பிக்கை வைச்சிருந்தேன். மொத்தமும் போச்சு!" என அழுதாள் பனி.

அவளின் கண்ணீர் அவனை கலங்க வைத்தது.

"பனி! எங்க வீட்டுல இந்த கலியாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்கனு தெரிஞ்சு தான், உன்னை இழக்க விரும்பாம கோவில்ல தாலி கட்டினேன். நீ என் பொண்டாட்டிங்குறதை ஆபீஷியலா உறுதிப் படுத்திட்டேன். மத்தபடி, உன்மேல பீலிங்ஸ் வர ஆரம்பிச்சப்போவே நீதான் எனக்கானவனு பிக்ஸ் பண்ணிட்டேன்டி.." எனப் பொறுமையாக எடுத்துக் கூறினான்.

"ஏ.. ஏன் அவங்க சம்மதிக்க மாட்டாங்க அதியன்.. நான் ஒரு.. அ.. அனாதைங்குறதாலையா?"

அவளைக் கோபமாக வெறித்தவன், "நான் இருக்குறப்போ உன்னை நீ அனாதைனு சொல்லிக்காத பனி.. அந்த வார்த்தை என்னை வெறியேத்துது!" எனக் கத்தினான்.

"நீங்க என்னோட கேள்விக்கு பதில் சொல்லல அதியன். ஏன் சொல்ல மாட்டேங்குறீங்க? சொல்லுங்க, ஏன் உங்க வீட்டுல எங்க லவ்வுக்கு சம்மதம் சொல்ல மாட்டாங்கனு சொல்றிங்க? காரணம் என்ன.."

"ஏன்னா.. ஏன்னா எனக்குனு வேற ஒரு பொண்ணை வீட்டாளுங்க முடிவு பண்ணி வைச்சிருக்காங்க பனிஈஈஈ.." எனக் கத்த, பனிமலர் அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

கண்கள் அவளின் அனுமதி இன்றியே கண்ணீரை இடையுறாது சிந்தின! 'இன்னொரு பெண்ணின் வாழ்வு தன் காதலால் அழிந்து போயிருக்கிறதா?' என நினைக்கும் போதே உள்ளுக்குள் உதறியது அவளுக்கு.

"எங்க வீட்டுக்கு தன்னோட அண்ணன் பொண்ணு தான் மருமகளா வரணும்னு அம்மா நினைச்சாங்க. எங்களுக்கு சின்ன வயசிருக்கும் போதே முடிவும் பண்ணிட்டாங்க. ஆனா எனக்கு தேவி மேல எந்த பீலிங்சும் இல்ல பனி! இருந்திருந்தா உன்னைக் கண்டு காதல்ல விழுந்திருப்பேனா.. அவளை பத்தி கொஞ்சமும் யோசிக்காம, வீட்டாளுங்க மறுத்துட்டா என்ன பண்ணுறதுனு பயந்து உன்னை கோவில்ல வைச்சு அவசரக் கலியாணம் பண்ணி இருந்திருப்பேனா.. இல்லைலடி?

ப்ளீஸ் புரிஞ்சிக்க.. நான் உன்னை ஏமாத்தல. உன்கிட்ட எதையும் மறைக்க நினைக்கல.." உடைந்த குரலில் சமாதான வார்த்தைகளை அள்ளி வீசியவனின் மனமோ பனிமலரின் நொறுங்கிய தோற்றம் கண்டு கலங்கித் தவித்தது.

"எவ்ளோ நாளைக்கு குடும்பத்தாளுங்க கிட்டேருந்து உண்மையை மறைக்கலாம்னு நினைக்கிறீங்க அதியன்?"

அவளின் கேள்விக்கான பதிலை அவனே அறியவில்லை எனும் போது, எவ்வாறு அவளிடம் சொல்வான்?

மௌனமாகத் தரை நோக்கியவன் ஏதோ கூற வாயெடுத்த நேரத்தில்..

"த்.. தேவி லவ் பண்ணுறாளா அதியன்?" என்று கேள்வியை அரைகுறையாகக் கேட்டு வைத்தாள் பனிமலர்.

'இல்லையென்று சொல்லிவிடேன்! என் மனம் அமைதி அடைந்து விடும்..' என்று அவளின் கண்கள் யாசித்ததை அவன் கவனிக்கவில்லையோ என்னவோ ஆமெனும் விதமாய் தலை அசைத்தான்.

உடைந்து கதறி அழுதாள் பனிமலர்.

ஒரு பெண்ணின் வாழ்வை.. அவளின் எதிர்பார்ப்பை.. அவளின் காதலை மொத்தமாக சிதைத்து விட்டேனே அவளது நல்லுள்ளம் கண்ணீர் விட்டுக் கதறியது. எட்ட நின்றே ஆயிரமாயிரம் சமாதான வார்த்தைகளை வீசினான் அதியன்.

அவளது கண்ணீர் துளிகள் அவனது நெஞ்சில் உதிரத்தை கசிய வைத்தது. இருதயம் நொறுங்கி, 'அவ கண்ணீருக்கு நீயே காரணம் ஆகிட்டியேடா!' எனத் தன்னையே திட்டிக் கொண்டான்.

அடுத்து வந்த ஒருவாரமும் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி கழிந்து போனது!

அவன் கூறிய சமாதானங்கள் அவளது செவி தாண்டி மனதைத் தொடவில்லையோ என்னவோ.. சற்றும் கண்டு கொள்ளாமல் அவனை முற்றாகத் தவிர்த்தாள் பனி. அவளின் மனதை அழுத்திக் கொண்டிருந்தது, தேவியின் வாழ்வு என்னாகுமோ என்ற பயம் மட்டுமே!

அவளுக்கு என்றுமே இளகிய மனந்தான்! மற்றவருடைய துன்பத்தைத் தன் துயரமாக நினைத்து விம்மி அழும் ரகம்.

அன்று அதியன் குளிக்கச் சென்றிருந்த நேரத்தில் அவனறியாமல் அவனது அலைபேசியை எடுத்து தேவியின் எண்ணைத் தேடினாள் பனிமலர்.

மனம் நோகாதவாறு தானே தேவியிடம் இந்த விடயத்தைப் பற்றிப் பக்குவமாக எடுத்துக் கூறலாம் என்று அவள் நினைத்திருக்க.. குளித்து முடித்து அப்போது தான் குளியலறை விட்டு வெளியே வந்தவனோ, பனிமலரின் கையில் தன் அலைபேசி இருப்பதைக் கண்டு வேறு மாதிரியாக அல்லவா நினைத்துக் கொண்டான்?

"சந்தேகிக்கிறியா பனி என்னை?" தொண்டை அடைக்க, வாய் விட்டே கேட்டவனின் கண்கள் அதீத சோகத்தில் கோவைப் பழமாகச் சிவந்து போயிருந்தன.

பனிமலர் பதட்டத்தில் அலைபேசியைக் கீழே தவற விட்டாள்.

'சந்தேகிக்கிறேனா? என்னால உங்களை சந்தேகிக்க முடியுமா அதியன்.. உங்களை சந்தேகப்படறது என்னை நானே சந்தேகிக்கற மாதிரி ஆகிடாதா என்ன.. என்ன பேசுறீங்க.. புரிஞ்சு தான் பேசுறீங்களா?' எனக் கேட்க நினைத்தாள். ஆனால் வார்த்தைகள் தொண்டைக் குழியிலே சிக்கிக் கொண்டு விட, கைகால்கள் குளிர் காய்ச்சல் கண்டது போல் வெடவெடத்து நடுங்கின.

அவளவு உயிர்ப்பற்ற பார்வை பார்த்தவன், "நானும் ஒரு வாரமா பார்த்துட்டு தான் இருக்கேன் பனி. உன்னை இழக்கக் கூடாது. உன்கூட மட்டுந்தான் என் லைஃபை ஷேர் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டு உன்னைக் கலியாணம் பண்ணிக்கிட்டேன். என் மேல இருக்குற கோபத்தை என் வீட்டாளுங்க உன்மேல காட்டிடக் கூடாதுனு பார்த்துப் பார்த்து காய் நகர்த்தி, நம்ம கலியாண விஷயத்தை சரியான நேரத்துல அவங்க கிட்ட சொல்லலாம்னு நினைச்சிருந்தேன்.

ஆனா நீ.. நீ என்னைப் புரிஞ்சிக்கவே இல்லடி. என் காதல் உனக்கு பெருசா தெரியல. என் அன்பை நீ நம்பல.. என்னையே சந்தேகப்பட்டுட்ட! கேட்டிருந்தா நானே தந்திருப்பேன்லடி என் ஃபோனை?" என வேதனையுடன் வினவினான்.

பனிமலர் அசைய மறந்து கல்லாய் சமைந்திருந்தாள்.

"நம்பிக்கை இல்லாம தான் இவ்ளோ நாள் என்கூட வாழ்ந்தியா.. என் காதலை சந்தேகிக்க எப்படி உன்னால முடிஞ்சுது?" என்று கேட்டவனின் குரல் கலங்கி இருந்தது.

அவசர அவசரமாக இஸ்திரி போடப்பட்டு ஹாங்கரில் தொங்கிக் கொண்டிருந்த சட்டையை மாட்டிக் கொண்டவன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு வேகமாக வெளியேறினான் அங்கிருந்து!

அவனைத் தடுத்து நிறுத்தத் தான் நினைத்தாள். ஆனால் தாளிட்டாற்போல் இறுக மூடிக் கொண்ட வாயை நேரத்துக்கு திறக்க முடியாமல் போனது தான் அவலம்!

அன்று வீட்டை விட்டு வெளியேறியவன் தான்.. ஒரு மாதம், இரண்டு மாதங்கள் என்ன.. மூன்று மாதங்கள் கடந்தும் இன்னுமே திரும்பி வந்திருக்கவில்லை.

அவனை தொடர்பு கொள்ளவும் வழியில்லை. அலைபேசியை வீட்டிலே விட்டுச் சென்றிருக்கும் போது, எங்கனம் அழைப்பு விடுப்பாள் அவனுக்கு?

என்ன செய்வதென்று புரியாமல் காலேஜில் அவனைப் பற்றிய தகவல்களை சேகரித்துக் கொண்டு பக்கத்து ஊருக்குப் பயணமாகி, அதியனின் வீட்டைக் கண்டு பிடித்து அங்கே சென்றவளுக்கு எஞ்சியது எல்லாம், முக சுழிப்புகளும்.. எடுத்தெறியப்பட்ட வார்த்தைகளும் மட்டுமே!

வாசலில் வைத்தே திருப்பி அனுப்பப்பட்டவளின் கழுத்தில் மின்னிய தாலிக் கொடி தன் மகனால் கட்டப்பட்டது தான் என்பதைக் கிஞ்சித்தும் நம்பவில்லை அதியனின் அன்னை.

"என்னடி.. ஊரார் முன்னால தாலி, கலியாணம்னு சொல்லிட்டு சீன் கிரியேட் பண்ணறியோ.. பச்சைக் கிளியாட்டம் இங்கே ஒருத்தி அவனே வேணும்னு அவனுக்காக காத்துட்டு இருக்குறப்போ உன்னைப் போய் கலியாணம் அவனுக்கென்ன பைத்தியமா சொல்லு.. போவியா? இப்போ நீ போகல, அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது." என சத்தம் வைத்தவர்,

"என் புள்ள ஊருல இல்லைங்கிறதைத் தெரிஞ்சிக்கிட்டு இங்கே வந்திருக்கா இவ! நல்ல நேரம், பொண்டாட்டியைக் கூட்டிட்டு ஊர் தாண்டிப் போயிருக்கான். இல்லைனா இவ பேச்சைக் கேட்டு தேவி ரொம்பக் கோபப்பட்டிருப்பா!" எனப் புலம்பியது பனிமலருக்குமே கேட்டது.

'பொண்டாட்டியைக் கூட்டிட்டு..' என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் காதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்க, புத்தி பேதலித்தது போல் பாதையில் இறங்கி நடந்தவள் வீட்டை எப்படி வந்தடைந்தால் என அவளுக்கே தெரியவில்லை.

எதுவும் கவனத்தில் பதியவில்லை. கிரகிக்கும் திறனை இழந்து விட்டிருந்தவளுக்கு அதியனின் தாய் கூறியது உண்மையோ எனத் தோன்றியது.

'தேவியை நிஜமாவே இவர் கலியாணம் பண்ணிக்கிட்டாரா.. அதனால தான், மூணு மாசமா என்னைப் பார்க்கவே வரலையா.. அதி.. அதியன் என்னை மறந்துட்டிங்களாங்க நீங்க?" என சுவற்றில் சாய்ந்து அழுதுத் துடித்தாள் இந்த ஒரு வாரமாக!

எல்லாமுமாக இருந்தவன் திடீரென மாயமாகி விட்ட மாயத்தை நினைக்கும் போது மூச்சடைத்தது பனிமலருக்கு.

கடந்தகால யோசனையில் மூழ்கி இருந்தவள் கண்ணீருடன் எப்போது உறங்கிப் போனாளோ.. மதிய நேரத்தில் அலைபேசி இசைக்க ஆரம்பித்ததும் தான் பதறியடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

சேமிக்கப்படாத எண்ணிலிருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது!

தாமதிக்காமல் மிகுந்த ஆர்வத்துடன் அழைப்பை ஏற்றவள் மறுபுறம் கூறப்பட்ட தகவலைக் கேட்டுப் பதறி, அடுத்த ஒன்னரை மணி நேரத்தில் சிட்டி ஹாஸ்பிடலை வந்தடைந்திருந்தாள்.

அரக்கப் பறக்க ஹாஸ்பிடலினுள் ஓடி வந்தவளை வழி மறித்த ஒரு பெண், "யூ பனிமலர், ரைட்?" எனக் கேட்க, ஆமென்று தலை அசைத்தவள், "அதி.. அதியன் எங்க.. அவருக்கு என்னாச்சு? நல்லாருக்காருல்ல.." எனக் கேள்விகளை அடுக்கினாள்.

"அவருக்கு சின்ன காயம் தான். மருந்து போட்டுட்டு இருக்காங்க. நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க.." என்றவள் பனிமலரின் பார்வைக்கான அர்த்தம் புரிந்து, "நான் தேவி! உங்க அதியனோட மாமா பொண்ணு!" என சுய அறிமுகம் செய்து கொண்டாள்.

பனிமலரின் முகம் கறுத்தது.

'அப்போ மாமாவோட தான் இவ இருந்திருக்காளா?' என இயல்பாய் எழுந்த கேள்வி அடி வயிற்றில் அமிலத்தைக் கரைக்க, தொண்டைக் குழி ஏற இறங்க இருக்கையில் தொப்பென்று அமர்ந்தாள்.

"அக்கா.." என்ற அழைப்புடன் பனிமலரின் அருகில் அமர்ந்து, அவளின் கைகளைப் பற்றினாள் தேவி.

'மாமாவை எனக்கே கொடுத்திடுங்களேன்!' எனக் கேட்டு விடுவாளோ என சிந்தனைகள் எங்கெங்கோ அலைபாய, மெல்ல நிமிர்ந்தாள் பனிமலர்.

தேவியின் கழுத்திலிருந்த ஈரங்காயா சாலிச்சரம் அவளைப் பார்த்துப் பல்லிளித்தது. மீண்டுமொரு முறை உடைந்தவள், "க்.. கலியாணம் ஆகிடுச்சா த..தேவி?" என உலகே வெறுத்து விட்ட தோரணையில் மூச்சடைக்கக் கேட்டாள்.

வெட்கப் புன்னகையுடன் ஆமென்று தலை அசைத்தவள், "மாமாவுக்கு நான் எப்போவும் கடமைப் பட்டிருக்கேன் அக்கா. அவரு ரொம்ப நல்லவரு!" என்றாள் பூரிப்புடன்.

மலரின் இதழ்களில் விரக்திச் சிரிப்பொன்று தவழ்ந்தது.

எதையும் பேசத் தோன்றவில்லை. அவள் கூறுவதைக் கேட்க மனம் வரவுமில்லை. வாழ்வே இருண்டு போனது போல் இருந்தது! யாருமில்லையே என வருந்தி, அன்புக்காக கையேந்தி நின்ற வேளையில் மின்னலென வந்து, மனதில் பனி மழைப் பொழியச் செய்து, தினம் தினம் தன் காதலால் தன்னை மூழ்கடிக்கச் செய்தவன் இனி இன்னொருத்தியின் கணவன் என நினைக்கும் போதே அழுகை வெடித்தது.

"மாமாவை நல்லாப் பார்த்துக்குவீங்கல்ல அக்கா?"

அழுது கொண்டிருந்தவள் துணுக்குற்று தேவியைப் புரியாத பார்வை பார்த்தாள்.

அழகாய்ப் புன்னகைத்து பதில் சொல்ல வாய் திறந்த தேவி, தன்னருகே வந்து நின்ற ஆடவனின் தோளில் தலை சாய்ந்து, "இன்னைக்கு இவரு என்னோட இருக்காருனா அதுக்கு காரணம் மாமா தான்! சரியான நேரத்துல வீட்டாளுங்க கிட்ட எங்க லவ் மேட்டரை சொல்லி, சாதி, இனம்லாம் முக்கியமே இல்லைனு கெஞ்சிக் கூத்தாடி அம்மாப்பாவை சம்மதிக்க வைச்சிட்டாரு.

அப்போ தான் உங்க ரெண்டு பேரோட கலியாண விஷயம் பத்தியும் அவர் எல்லார் கிட்டயும் சொன்னாரு. எனக்கு நேத்து தான் கலியாணமாச்சு, சிம்பிளா! வீட்டாளுங்க நாளைக்கே உங்களை புகுந்த வீட்டுக்குக் கூட்டிட்டு போக வர்றதா முடிவு பண்ணின நேரத்துல இப்படி ஆகிடுச்சு!" சந்தோசத்துடன் ஆரம்பித்து சோகத்தில் முடித்தாள்.

பனிமலருக்கு சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை. இருக்கையை விட்டு வேகமாக எழுந்து நின்றவள் வார்டு கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஓட, கட்டிலில் சாய்ந்திருந்த அதியன் அவளைப் பார்த்து குறுநகை புரிந்தான்.

அதே கன்னக்குழிப் புன்னகை!

கன்னக்குழியெனும் பாதாளத்தில் கால் சறுக்கி விழப் போன மனதை கடினப்பட்டு இழுத்து நிறுத்தியவள், "வந்துட்டிங்களா அதியன்?" எனக் கண்ணீருடன் கேட்டவாறு அவனை நெருங்கினாள்.

அவளின் கைப்பற்றி இழுத்து தன் மீது வீழச்செய்தவன், "சாரி! ரொம்ப லேட் பண்ணிட்டேனா?" என்று கிசுகிசுப்பான குரலில் கேட்க,

"ரொம்பப் பயந்திருந்தேன். நா.. நான் சத்தியமா உங்களை சந்தேகிக்கல அதி.." அவனின் நெஞ்சில் சாய்ந்து விம்மினாள் பனிமலர்.

"அதான் தெரியுமே! நீ எப்படி என்னை சந்தேகிப்ப.."

"அப்போ ஏன் இவ்ளோ நாளா என்னைப் பார்க்க வரல? ஃபோனைக் கூட வீட்டுலயே விட்டுட்டுப் போய்ட்டிங்க. நா..நான் உங்களைத் தேடி வீட்டுக்கு வேற போனேன் தெரியுங்களா.. உங்களுக்கு கலியாணம் ஆகிடுச்சுங்குற மாதிரி பேசுனாங்க அத்தை.. எவ்ளோ அழுதேன். நா.. நான் ஏன் இன்னுமே சாகாம இருக்கேன்னு நினைச்சுட்.."

"ஷ்ஷ், பனி! அன்னைக்கு தேவியைக் கூட்டிட்டு, அவளோட லவ்வரை மீட் பண்ண வெளியே போயிருந்தேன். விஷயம் தெரியாம அம்மா அப்படி சொல்லிருப்பாங்க." என இடை மறித்துப் பேசினான் அதியன்.

"நீங்க ஏன் என்னைப் பார்க்கவே வரல?" கோபமாகக் கேட்டவளின் அடிகளை எல்லாம் புன்னகையுடனே வாங்கிக் கொண்டவன்,

"நான் கண்டிப்பா எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன்னு நீ நம்பலங்குற கோபத்துல தான் வீட்டை விட்டுப் போனேன். நான் ஏதோ உன்னை நம்ப வைச்சுக் கழுத்தறுத்தேன்ங்குற மாதிரி நீ பார்க்குற பார்வையை இனிமேயும் எதிர்கொள்வதற்கு பதிலா எல்லாம் சரியாகுற வரைக்கும் எட்ட நின்னு உன்னைப் பார்க்குறதே நல்லதுனு தோணுச்சு!" என்றான்.

தன் கண்ணீரை அவனது சட்டைக்கு இடமாற்றியவள், "எது எப்படியோ.. நீங்க என்கிட்ட வந்துட்டிங்கல்ல? ந்..நீங்க என்னை விட்டு நி..நிரந்தரமாப் போய்ட்டிங்களோனு ரொம்ப பயந்துட்டேன்.." கண்ணீருகுந்தபடி கூற, அவளின் கன்ன ஈரத்தைப் பெருவிரலால் துடைத்து விட்டவன்

"அடி பைத்தியக்காரி! பிரிவென்பது அரிதடி நமக்குள்ளே.. இருதயங்களில் நேசம் உறைந்திருக்கும் போது, பிரிவு சாத்தியம் தானா என்ன.." என கண் சிமிட்டி வினவினான்.

"ஐ லவ் யூ அதியன்.." என ஆனந்தக் கண்ணீருடன் முனகியவளின் அணைப்பில் மூச்சிறுகியது காளைக்கு!
பதிலுக்கு தானும் அவளை அணைத்து, அவளின் உச்சி முகர்ந்தான் காதலுடன்..

முற்றும்!

-ஹில்மா தாவுஸ்.
 
Last edited:

Vimala Ashokan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2021
330
93
43
Tanjur
வாவ்.. என்ன சொல்ல.
அருமை மா..
வாழ்த்துக்கள் போட்டியில் வெற்றி பெற
 
  • Love
Reactions: Hilma Thawoos

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,761
570
113
45
Ariyalur
வாவ் சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தயும் நுந்தயும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புல பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
குறுந்தொகை பாடலுக்குரிய கதை மிக மிக அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
 
Hilma Thawoos

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
163
27
28
Hambantota, SriLanka
வாவ் சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தயும் நுந்தயும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புல பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
குறுந்தொகை பாடலுக்குரிய கதை மிக மிக அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
ரொம்ப ரொம்ப நன்றி சகி ♥️♥️♥️
 
திவ்யதுர்ஷி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 28, 2022
461
14
43
Sri Lanka

"நான் கண்டிப்பா எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன்னு நீ நம்பலங்குற கோபத்துல தான் வீட்டை விட்டுப் போனேன். நான் ஏதோ உன்னை நம்ப வைச்சுக் கழுத்தறுத்தேன்ங்குற மாதிரி நீ பார்க்குற பார்வையை இனிமேயும் எதிர்கொள்ளுறதுக்கு பதிலா எல்லாம் சரியாகுற வரைக்கும் எட்ட நின்னு உன்னைப் பார்க்குறதே நல்லதுனு தோணுச்சு!" என்றான்.

தன் கண்ணீரை அவனது சட்டைக்கு இடமாற்றியவள், "எது எப்படியோ.. நீங்க என்கிட்ட வந்துட்டிங்கல்ல? நா..நான் நீங்க என்னை விட்டு நி..நிறந்தரமாப் போய்ட்டிங்களோனு ரொம்ப பயந்துட்டேன்.." கண்ணீருகுந்தபடி கூற, அவளின் கன்ன ஈரத்தைப் பெருவிரலால் துடைத்து விட்டவன்

"அடி பைத்தியக்காரி! பிரிவென்பது அரிதடி நமக்குள்ளே.. இருதயங்களில் நேசம் உறைந்திருக்கும் போது, பிரிவு சாத்தியம் தானா என்ன.." என கண் சிமிட்டி வினவினான்.

"ஐ லவ் யூ அதியன்.." என ஆனந்தக் கண்ணீருடன் முனகியவளின் இறுகிய அணைப்பில் மூச்சிறுகியது காளைக்கு! பதிலுக்கு தானும் அவளை அணைத்து, அவளின் உச்சி முகர்ந்தான் காதலுடன்..

முற்றும்!

-ஹில்மா தாவுஸ்.
கதை மிக அருமை மா... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😀😀😀
 
  • Love
Reactions: Hilma Thawoos

ஆனந்த ஜோதி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 14, 2022
108
28
43
Chennai
கல்லூரி பேராசிரியராக வரும் நாயகனை காதல் மணம் புரிந்து பிரிந்திருக்கும் நாயகி, அவன் பிரிவால் கண்கலங்குவதுடன், அவனுக்கு வேறு திருமணமாகி விட்டதாக நினைத்து அழுது கொண்டிருக்க, எதற்கந்த பிரிவு, அவன் நிஜமாகவே வேறு மணந்து புரிந்து விட்டானா என்ற கேள்வி ஆரம்பத்திலேயே எட்டிப் பார்க்கிறது.

மனையாளுக்கு தெரியாமல் காய்களை நகர்த்த முயன்றவன் நிலைமை, பாவம் தான் ....

கதை நகர்வு நல்லா இருக்கு. பிளேஸ் பேக்கில் அவளது காதலும், திருமணமும், அதற்குப் பிறகான பிரிவும் இயல்பான கதையோட்டமாக இருக்கிறது.

நாயகனின் அமைதியும், காதலும், நாயகியின் பரிதவிப்பான முகமும்👌👌👌 நாயகனின் தாயாரின் பேச்சில் காணப்பட்ட கடுமையும் ஒரு கதை வாசித்த அனுபவத்தையே கொடுத்தது.

இறுதியில் அவளது அழுகையும், வார்த்தையாடலும் கண் கலங்க செய்து விட்டது.

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐
 
  • Love
Reactions: Hilma Thawoos

Chitradevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 21, 2023
21
4
3
India
ஜோடியாய் புன்னகைத்துக் கொண்டிருந்த அன்னை-தந்தையின் புகைப்படத்துக்கு முன் விளக்கேற்றி வைத்து, கண் மூடிக் கை கூப்பினாள் பனிமலர்.

"வாழ்க்கை எந்தவித சுவாரஷ்யமும் இல்லாம ஏனோ தானோனு போயிட்டிருக்கும்மா.. என்ன பண்ணுறேன், எதுக்காக வாழறேன்னு கூட தெரிய மாட்டேங்குது. என்னோட அதியன் நிஜமாவே தேவியைக் கலியாணம் பண்ணி இருப்பாரா.. மனசு படபடங்குது. அ.. அவரு இனி என்கிட்ட திரும்பி வரவே மாட்டாராம்மா?" என்று கேட்டவளின் மூடிய இமை வழியே கண்ணீர் துளிகள் கோடாய் வழிந்தன.

நெடுநேரம் மன அமைதிக்காக பெற்றவர்களிடம் பேசிவிட்டு தளர்ந்த நடையுடன் ஜன்னலருகே வந்து நின்றவள் திரைசீலையை இழுத்து விட்டு அறைக்குள் கதிரவனின் குழந்தைகள் நுழைந்து விளையாட அனுமதித்தாள்.

கன்னங்களை நனைத்த ஈரத்தை துடைக்கக் கூட மனம் வரவில்லை அவளுக்கு. ஏதோவொரு மாயைக்குள் சிக்கித் தவிக்கும் நிம்மதியில்லா உணர்வு அவளை நடைப் பிணமாக்கி வைத்திருந்தது.

இவ்வளவு நேரமும் இருள் சூழ்ந்திருந்த அறையை தான் ஏற்றி வைத்த சிறு விளக்கு வெளிச்சமூட்டிக் கொண்டிருந்தது போல், தன் வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் தீபமாய் விளங்கியவனின் வருகைக்காக பாவை உள்ளம் ஏங்கியது.

தோட்டத்திலிருந்து பறித்து வந்த மல்லிகைப் பூக்களை மடியில் அள்ளிக் கொண்டு சீமெந்து தரையில் கால் நீட்டி அமர்ந்து, அவற்றை மாலையாகத் தொடுக்கத் துவங்கினாள் பனிமலர்.

"மலரக்கா! எங்கே இருக்கீங்க?" எனக் கீழ் மாடியில் நின்று தன் பெயரை ஏலம் விடும் கமலியின் குரல் செவிகளை எட்டியது. கமலி, அவள் வாடகைக்கு தங்கிருக்கும் வீட்டு உரிமையாளரின் மகள். பத்தாவது படித்துக் கொண்டிருக்கிறாள்.

"இங்கே வாம்மா.. டோர் திறந்து தான் இருக்கு!" எனக் குரல் கொடுத்தவாறே முகத்தை டுப்பட்டாவால் அழுந்தத் துடைத்துவிட்டு, போலிப் புன்னகை ஒன்றை இதழ்களில் ஒட்ட வைத்துக் கொண்டாள்.

அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே ஓடி வந்த கமலியின் கையில் புத்தக அடுக்கொன்று இடம் பிடித்திருந்தது.

"ஏதாவது டவுட்ஸ் இருக்கா கமலி?"

ஆமென்பது போல் தலை அசைத்தவள் பனிமலருக்கு அருகே தரையில் தானும் சம்மணமிட்டு அமர்ந்து, புத்தகத்தின் பக்கங்களை அவசர அவசரமாகப் புரட்டினாள்.

"எதுக்கு அவசரம்? புக் பேஜ்லாம் உன் கையோட வந்துடப் போகுது.." எனக் கேலி பேசியவளுக்கு தன் வரிசைப் பற்களைக் காட்டிய கமலி,

"குறுந்தொகைல வர இந்த தலைவன் கூற்றுக்கு பொருள் சொல்லுங்க அக்கா.. ட்ரை பண்ணிப் பார்த்துட்டேன். தெளிவா புரிய மாட்டேங்குது.." எனக் கூறி புத்தகத்தை நீட்டினாள்.

"நீயே படி கமலி. நான் விளக்குறேன்!"

சரியென்றவள், "யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்!.." என்ற பாடலை வாய் விட்டு சத்தமாகப் படிக்க, கோர்த்துக் கொண்டிருந்த மல்லிகைப் பூக்கள் பனிமலரின் கையிநின்று நழுவி அவள் மடியில் வீழ்ந்தன.

கண்கள் நொடிப் பொழுதினில் கலங்கித் ததும்ப, இமை தட்டி கண்ணீரைக் கடினப்பட்டு உள்ளிழுத்துக் கொண்டாள்.

"அக்கா.. என்னாச்சு?"

ஆழ மூச்சிழுத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் மனதின் கலக்கம் குரலில் தெரிந்து விடாதபடி சாமர்த்தியமாக பாடலின் பொருளைத் தெளிவாக விளக்கினாள் கமலிக்கு.

பிறகு, கமலியின் மற்றைய சந்தேகங்கள் சிலவற்றையும் தீர்த்து அவளை அங்கிருந்து அனுப்பி வைத்தவள் கதவைத் தாளிட்டு விட்டு வந்து கட்டிலில் முகம் குப்புற சரிந்தாள். நெஞ்சம் விம்மி அழுதது.

கோர்க்கவென கையிலலெடுத்த மல்லிகைப் பூக்கள் கேட்பாரற்று தரையில் அங்குமிங்குமாய் சிதறிக் கிடந்தன.

"நானே மறக்கணும்னு நினைச்சாலும் உங்க முகம் மனக்கண்ணுல தோன்றி என்னை இம்சிக்குது. உங்க நினைவுகள் என்னை விடாம துரத்திட்டே இருக்கு அதியன்! எங்க பார்த்தாலும் உங்களை மட்டுந்தான் காணுறேன்.. நீங்க பேசின வார்த்தைகளைத் தான் கேட்கறேன்!" என வேதனையுடன் முணுமுணுத்தவளின் நினைவலைகள் மெல்லப் பின்னோக்கி நகர்ந்தன.

ஒவ்வொருவர் வாழ்விலும் கவலைகளை மறக்கச் செய்து தன்னையறியாமலே புன்னகையை வரவழைக்கும் வசந்த காலமொன்று இல்லாமல் இருக்காது.
பனிமலரின் வாழ்விலும் அப்படியே!

பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் போதே வாகன விபத்தில் பெற்றவர்களை இழந்து விட்டவளுக்குத் துணையாக இருந்தது அவளது தாய்மாமன் ஜெய்ராம் மட்டுமே!

பனிமலர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தாலும், யாருமின்றி அனாதரவாக நின்றவளை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமளவுக்கு தைரியமிருக்கவில்லை அவருக்கு.

மனைவியானவள் கேள்விக் கணைகளால் தன்னைத் துளைத்தே உயிரை வாங்கி விடுவாள் எனப் பயந்தவர்.. 'ஹாஸ்டலிலே தங்கிக் கொள்கிறேன் மாமா..' என்றவளின் தலை வருடி சம்மதித்து, அவளைப் பாதுகாப்பாக பெண்கள் ஹாஸ்டலில் சேர்த்து விட்டார். மாதாமாதம் அவளைப் பார்க்க வந்து, தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து விட்டுச் செல்லவும் மறக்க மாட்டார்.

அவரது ஆதூரமான தலை வருடலுக்காகவும், அன்பான ஓரிரு வார்த்தைகளுக்காகவும் மாதம் பூரா ஏக்கத்துடன் காத்திருப்பாள். தாய் தந்தையரை இழந்து விட்ட பிறகு அன்புக்காக நிறையவே ஏங்கினாள் பனிமலர்.

வெறுமையும், சுவாரஷ்யமும் இன்றி வறண்ட பாலைவனமாய் போய்க் கொண்டிருந்த காரிகையின் வாழ்வு, அவனின் வரவால் தான் பசுமை பொங்கும் பூங்காவனமாய் மாறிப் போனது. அவன் 'அதியவர்மன்!'.

'அதியன்..' என அவனின் பெயரை உச்சரிக்கும் போதே உடல் சிலிர்க்கும் பாவைக்கு.

திடீரென வந்தான். காதலையும், அக்கறையையும் வள்ளலன்மையுடன் வாரி வழங்கினான். தாயிடமிருந்து கிடைத்த கண்டிப்புடன் கூடிய அன்பையும், தந்தை மடி தந்த பாதுகாப்புடன் கூடிய அரவணைப்பையும் கஞ்சத்தனமின்றி காட்டி பனிமலரின் மனதில் பூ பூக்கச் செய்தான்.

அவனை முதன் முதலாகப் பார்த்தது காலேஜில்!

பேராசிரியராக மாணவ மாணவியர் மத்தியில் அறிமுகமாகியவன் என்று அவளுக்கு காதலனாகி, மனதளவில் கணவனாகிப் போனானோ.. அவளே அறியாள்!

மற்ற மாணவிகளை விட்டுத் தனித்துவமான பார்வையில் தன்னை நோக்கி, எவரிடத்திலும் காட்டாத கரிசனத்தை தன்னிடம் காட்டியதை கண்டு கொண்டதுமே அவளின் மனம் கொள்ளை போய் விட்டது.

அவர்களது சொல்லாக் காதல் எனும் விதையானது, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து பெருமரமாகி விழுது பரப்பிக் கொண்டிருக்க, காலமும் யாருக்காகவும் காத்திருக்காமல் ஒற்றையடிப் பாதையில் ஓடி மறையும் வாகனமாய் நகர்ந்து போயின.

அன்று, இறுதி செமஸ்டரை முடித்துக் கொண்டு ஹாஸ்டலை நோக்கி சைக்கிளை உருட்டிக் கொண்டிருந்தாள் பனிமலர். அவளின் சோகம் தோய்ந்து, களையிழந்து போயிருந்த வதனத்தை பார்க்கவே சகிக்கவில்லை.

'இனிமேல் மனங் கவர்ந்தவனை பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைக்கவே கிடைக்காது!' என்ற நினைப்பே கசந்தது அவளுக்கு.

அவனது அன்பும், அக்கறையும், காதல் கசியும் பார்வையும் என்றும் எனக்கே எனக்காய் வேண்டுமென அடம் பிடித்த மனதை எப்படி அமைதிப்படுத்துவதெனத் தெரியாமல் திணறிப் போனாள்.

வாடிய முகத்துடன் சாலையில் கவனமின்றி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தவளின் முன் திடீரெனப் பிரசன்னமானான் அதியவர்மன்.

பாதையில் ஷூக் காலைத் தேய்த்து சைக்கிளின் இயக்கத்தை நிறுத்தியவள் தன்னைப் பார்த்து மையலாய் குறுநகை புரிந்தவனை வியப்புடன் ஏறிட்டாள். குழி விழுந்த கன்னத்திலும், தன்னிடம் எதையோ கூறத் தயங்கி அலைபாயும் கூர் கண்களிலும் பாவை மனம் சறுக்கி வீழ்ந்தது.

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.."

கீழுதட்டைப் பற்களுக்குள் சிறைப்படுத்தியவளின் கைகள், உணர்ச்சி வேகத்தில் சைக்கிள் கைப்பிடியை அழுத்திப் பிடித்தன. இமைகள் படபடக்க அவனை ஏறிட்டவள், "எ.. என்ன ஸார்?" என்று வினவினாள்.

முதலில் தயங்கினான்.

திறந்த வாயிலிருந்து வார்த்தைகளுக்குப் பதில் வெறும் காற்று மட்டுமே வெளி வந்ததைக் கண்டு அவஸ்தையுடன் நெளிந்தான். அவனைத் துளைத்துக் கொண்டிருந்த காரிகையின் விழி வீச்சைத் தாங்க முடியாமல் பிடரியை உள்ளங்கைகளால் கோதிவிட்டு வெட்கப் புன்னகை பூத்தான்.

மூச்சை ஆழமாக இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் அடிக்கடி..

இவற்றை எல்லாம் ரசனையுடன் பார்த்திருந்த பனிமலர், திடீரென அவன் கூறிய வார்த்தைகளில் அதிர்ந்து நிமிர..

"நான் உன்னைக் காதலிக்கிறேன் பனி.." என்றான் மீண்டும்!

தன் காதால் கேட்டது பொய்யில்லை என உணரவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது அவளுக்கு. எதிர்பார்த்துக் காத்திருந்த தருணம் தான் என்றாலும், ஏற்றுக் கொள்ள முடியாமல் தயங்கியவள், "அது.. நான்.. எ.எப்படி ஸார்?" நாத் தந்தியடிக்கப் பேசினாள்.

"ஏன் பனி.. உனக்கு என்னைப் பிடிக்கலையா?"

"அய்யய்யோ, ஸார்! நான் யாருனு உங்களுக்கு தெரியாது. நீங்க யாருனு எனக்குமே தெரியாது. அப்பறம் எப்படி.. க்.. காதல்.." எனத் தயங்கியவளை ஏறிட்டவன்,

"தெரிஞ்சவங்க மட்டுந்தான் லவ் பண்ணனுமா பனி? மனசும் மனசும் இணையிறதுக்கு நீ யாருனு எனக்கும், நான் யாருனு உனக்கும் தெரிஞ்சிருக்கணும்னு சொல்ல வர்றியா? இல்ல பனி, ஒருவேளை நீ மறுக்கலாம். ஆனா உண்மை என்னன்னா, நம்ம மனசு ஆல்ரெடி இணைஞ்சிருச்சு.." என்றான் காதலுடன்.

தொண்டைக்குழிக்குள் வந்து தாறுமாறாகத் துடித்தது பனிமலரின் இதயம். அவனது வார்த்தைகளில் மேனி சிலிர்த்தது அவளுக்கு.

இருந்தாலும், "ஆனா ஸார்.. எப்படி?" எனத் தயக்கம் தீராமல் திக்க,

"யாயும் ஞாயும் யார் ஆகியரோ..
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்!
யானும் நீயும் எவ்வழி அறிதும்,
செம் புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!"
கண் சிமிட்டிக் குறும்புடன் கூறினான் அதியவர்மன்.

பனிமலரின் பட்டுக் கன்னங்கள் செந்தூர நிறத்தைப் பூசிக் கொண்டன. அவன்பால் காதல் கொண்ட மனம் இனியும் பிடிவாதம் பிடிக்கத் தயாராக இருக்கவில்லை. அவன் யாரென்று தெரியவில்லை. ஆனால் பிடித்திருந்தது அவளுக்கு!

பார்வையைத் தாழ்த்தி சிறு வெட்கப் புன்னகையூடாக தன் சம்மதத்தைத் தெரிவித்தவள் சைக்கிளை தள்ளிக் கொண்டு, அடிக்கடி திரும்பிப் பார்த்தவாறே அங்கிருந்து சிட்டென மறைந்து போனாள்.

அன்று அவன் தெரு முனையில் நின்று தன்னைப் பார்த்திருந்த பார்வை இன்றும் முதுகைத் துளைப்பதாய் உணர்ந்தவள் அவஸ்தை தாளாமல் கட்டிலில் அங்குமிங்குமாய் உருண்டாள்.
'Yayum nyayum yaragiyaro..
Enthaiyum unthaiyum emmurai kelir'
♥️😍😍
Nan romba rasichu padam seitha oru padal saki idhu. Arumaiyana props ❤️♥️♥️
 
  • Love
Reactions: Hilma Thawoos

Chitradevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 21, 2023
21
4
3
India
"சத்தியமா நான் உங்களை சந்தேகிக்கல அதியன்.. ப்ளீஸ் என்கிட்டயே வந்திடறீங்களா.." என்று காற்றோடு முனகியவளின் பார்வை இலக்கின்றி விட்டத்தை வெறித்தது.

கடந்த காலம் எனும் சுழலுக்குள் சிக்கிக் கொண்டவளின் மனம் கடிவாளமில்லா குதிரை போல் தறிகெட்டு ஓடி, வருடங்கள் சிலதைப் பின் தள்ளி வேகமாகப் பயணித்தது.

காதல்.. தன் வாழ்வையே மாற்றிப் போட்டு, ஏக்கங்களையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தியாக்கி வைத்த அந்த ஒற்றை வார்த்தையை அவள் மிகவும் நேசிக்கத் தொடங்கியிருந்த காலமது!

காதலை சொல்லிக் கொண்ட நாளிலிருந்து இருவருக்கிடையேயான காதலும் வளர்ந்தது. அவளின்றி அவனில்லை. அவன் இல்லாமல் அவளது உயிரில் ஓரணுவும் அசையாது எனும் அளவுக்கு நெருக்கமாகிப் போயினர் இருவரும்!

அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தான் அதியன். அவன் எந்த ஒன்றை செய்தாலும் அதில், 'பனிக்காக!' என்ற உட்பொருள் மறைந்திருந்தது. தன் காதலைத் தங்குதடையின்றி காட்டினான் அவளுக்கு.

வருடங்கள் பஞ்சாய் பறந்து போக, திருமணமும் நடந்தது இருவருக்கும்!

ஜெய்ராமின் குடும்பத்தினர் முன்னிலையில், கோவிலில், மங்கலநாணை பனிமலரின் கழுத்தில் பூட்டி அவளை தன்னில் சரிபாதியாக ஏற்றுக் கொண்டு ஒன்னரை வருடங்கள் கழிந்த நிலையில்.. 'எனக்குனு யாருமே இல்ல. நான் ஒரு ஓஃபன்! ஓஃபனேஜ்ல தான் வளர்ந்தேன்!" என்ற அதியவர்மனின் வார்த்தைகள் பொய் என்று தெரிய வந்தது பனிமலருக்கு.

"ஏன் பொய் சொன்னிங்க அதியன்? எதுக்கு பொய் சொல்லி யாருமில்லாத மாதிரி கோவில் கூட்டிட்டு போய் என் கழுத்துல தாலி காட்டுனீங்க?" என சத்தம் வைத்தவளின் கன்னத்தைத் தன் உள்ளங்கையில் தாங்கி,

"நான் சொல்லுறதைக் கேளு பனி.. உன்னை ஏமாத்தணும்ங்குறது என்னோட இன்டென்ஷன் இல்ல.." என சமாதானம் செய்ய முயன்றான் அதியன்.

"நீங்க என்னை ஏமாத்திட்டிங்க. உங்களை எவ்ளோ நம்பினேன் தெரியுமா? எனக்குனு யாருமே இல்லைனு நீங்க சொன்னதை நம்பி எவ்ளோ வருத்தப்பட்டேன்.. உங்களுக்கு எல்லாமா நான் ஒருத்தி மட்டுமே இருக்கணும்னு நினைச்சேன். உங்களைப் பத்தி தேடி பார்க்கல. நீங்க யாருனு தோண்டித் துருவல. அவ்ளோ நம்பிக்கை வைச்சிருந்தேன். மொத்தமும் போச்சு!" என அழுதாள் பனி.

அவளின் கண்ணீர் அவனை கலங்க வைத்தது.

"பனி! எங்க வீட்டுல இந்த கலியாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்கனு தெரிஞ்சு தான், உன்னை இழக்க விரும்பாம கோவில்ல தாலி கட்டினேன். நீ என் பொண்டாட்டிங்குறதை ஆபீஷியலா உறுதிப் படுத்திட்டேன். மத்தபடி, உன்மேல பீலிங்ஸ் வர ஆரம்பிச்சப்போவே நீதான் எனக்கானவனு பிக்ஸ் பண்ணிட்டேன்டி.." எனப் பொறுமையாக எடுத்துக் கூறினான்.

"ஏ.. ஏன் அவங்க சம்மதிக்க மாட்டாங்க அதியன்.. நான் ஒரு.. அ.. அனாதைங்குறதாலையா?"

அவளைக் கோபமாக வெறித்தவன், "நான் இருக்குறப்போ உன்னை நீ அனாதைனு சொல்லிக்காத பனி.. அந்த வார்த்தை என்னை வெறியேத்துது!" எனக் கத்தினான்.

"நீங்க என்னோட கேள்விக்கு பதில் சொல்லல அதியன். ஏன் சொல்ல மாட்டேங்குறீங்க? சொல்லுங்க, ஏன் உங்க வீட்டுல எங்க லவ்வுக்கு சம்மதம் சொல்ல மாட்டாங்கனு சொல்றிங்க? காரணம் என்ன.."

"ஏன்னா.. ஏன்னா எனக்குனு வேற ஒரு பொண்ணை வீட்டாளுங்க முடிவு பண்ணி வைச்சிருக்காங்க பனிஈஈஈ.." எனக் கத்த, பனிமலர் அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

கண்கள் அவளின் அனுமதி இன்றியே கண்ணீரை இடையுறாது சிந்தின! 'இன்னொரு பெண்ணின் வாழ்வு தன் காதலால் அழிந்து போயிருக்கிறதா?' என நினைக்கும் போதே உள்ளுக்குள் உதறியது அவளுக்கு.

"எங்க வீட்டுக்கு தன்னோட அண்ணன் பொண்ணு தான் மருமகளா வரணும்னு அம்மா நினைச்சாங்க. எங்களுக்கு சின்ன வயசிருக்கும் போதே முடிவும் பண்ணிட்டாங்க. ஆனா எனக்கு தேவி மேல எந்த பீலிங்சும் இல்ல பனி! இருந்திருந்தா உன்னைக் கண்டு காதல்ல விழுந்திருப்பேனா.. அவளை பத்தி கொஞ்சமும் யோசிக்காம, வீட்டாளுங்க மறுத்துட்டா என்ன பண்ணுறதுனு பயந்து உன்னை கோவில்ல வைச்சு அவசரக் கலியாணம் பண்ணி இருந்திருப்பேனா.. இல்லைலடி?

ப்ளீஸ் புரிஞ்சிக்க.. நான் உன்னை ஏமாத்தல. உன்கிட்ட எதையும் மறைக்க நினைக்கல.." உடைந்த குரலில் சமாதான வார்த்தைகளை அள்ளி வீசியவனின் மனமோ பனிமலரின் நொறுங்கிய தோற்றம் கண்டு கலங்கித் தவித்தது.

"எவ்ளோ நாளைக்கு குடும்பத்தாளுங்க கிட்டேருந்து உண்மையை மறைக்கலாம்னு நினைக்கிறீங்க அதியன்?"

அவளின் கேள்விக்கான பதிலை அவனே அறியவில்லை எனும் போது, எவ்வாறு அவளிடம் சொல்வான்?

மௌனமாகத் தரை நோக்கியவன் ஏதோ கூற வாயெடுத்த நேரத்தில்..

"த்.. தேவி லவ் பண்ணுறாளா அதியன்?" என்று கேள்வியை அரைகுறையாகக் கேட்டு வைத்தாள் பனிமலர்.

'இல்லையென்று சொல்லிவிடேன்! என் மனம் அமைதி அடைந்து விடும்..' என்று அவளின் கண்கள் யாசித்ததை அவன் கவனிக்கவில்லையோ என்னவோ ஆமெனும் விதமாய் தலை அசைத்தான்.

உடைந்து கதறி அழுதாள் பனிமலர்.

ஒரு பெண்ணின் வாழ்வை.. அவளின் எதிர்பார்ப்பை.. அவளின் காதலை மொத்தமாக சிதைத்து விட்டேனே அவளது நல்லுள்ளம் கண்ணீர் விட்டுக் கதறியது. எட்ட நின்றே ஆயிரமாயிரம் சமாதான வார்த்தைகளை வீசினான் அதியன்.

அவளது கண்ணீர் துளிகள் அவனது நெஞ்சில் உதிரத்தை கசிய வைத்தது. இருதயம் நொறுங்கி, 'அவ கண்ணீருக்கு நீயே காரணம் ஆகிட்டியேடா!' எனத் தன்னையே திட்டிக் கொண்டான்.

அடுத்து வந்த ஒருவாரமும் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி கழிந்து போனது!

அவன் கூறிய சமாதானங்கள் அவளது செவி தாண்டி மனதைத் தொடவில்லையோ என்னவோ.. சற்றும் கண்டு கொள்ளாமல் அவனை முற்றாகத் தவிர்த்தாள் பனி. அவளின் மனதை அழுத்திக் கொண்டிருந்தது, தேவியின் வாழ்வு என்னாகுமோ என்ற பயம் மட்டுமே!

அவளுக்கு என்றுமே இளகிய மனந்தான்! மற்றவருடைய துன்பத்தைத் தன் துயரமாக நினைத்து விம்மி அழும் ரகம்.

அன்று அதியன் குளிக்கச் சென்றிருந்த நேரத்தில் அவனறியாமல் அவனது அலைபேசியை எடுத்து தேவியின் எண்ணைத் தேடினாள் பனிமலர்.

மனம் நோகாதவாறு தானே தேவியிடம் இந்த விடயத்தைப் பற்றிப் பக்குவமாக எடுத்துக் கூறலாம் என்று அவள் நினைத்திருக்க.. குளித்து முடித்து அப்போது தான் குளியலறை விட்டு வெளியே வந்தவனோ, பனிமலரின் கையில் தன் அலைபேசி இருப்பதைக் கண்டு வேறு மாதிரியாக அல்லவா நினைத்துக் கொண்டான்?

"சந்தேகிக்கிறியா பனி என்னை?" தொண்டை அடைக்க, வாய் விட்டே கேட்டவனின் கண்கள் அதீத சோகத்தில் கோவைப் பழமாகச் சிவந்து போயிருந்தன.

பனிமலர் பதட்டத்தில் அலைபேசியைக் கீழே தவற விட்டாள்.

'சந்தேகிக்கிறேனா? என்னால உங்களை சந்தேகிக்க முடியுமா அதியன்.. உங்களை சந்தேகப்படறது என்னை நானே சந்தேகிக்கற மாதிரி ஆகிடாதா என்ன.. என்ன பேசுறீங்க.. புரிஞ்சு தான் பேசுறீங்களா?' எனக் கேட்க நினைத்தாள். ஆனால் வார்த்தைகள் தொண்டைக் குழியிலே சிக்கிக் கொண்டு விட, கைகால்கள் குளிர் காய்ச்சல் கண்டது போல் வெடவெடத்து நடுங்கின.

அவளவு உயிர்ப்பற்ற பார்வை பார்த்தவன், "நானும் ஒரு வாரமா பார்த்துட்டு தான் இருக்கேன் பனி. உன்னை இழக்கக் கூடாது. உன்கூட மட்டுந்தான் என் லைஃபை ஷேர் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டு உன்னைக் கலியாணம் பண்ணிக்கிட்டேன். என் மேல இருக்குற கோபத்தை என் வீட்டாளுங்க உன்மேல காட்டிடக் கூடாதுனு பார்த்துப் பார்த்து காய் நகர்த்தி, நம்ம கலியாண விஷயத்தை சரியான நேரத்துல அவங்க கிட்ட சொல்லலாம்னு நினைச்சிருந்தேன்.

ஆனா நீ.. நீ என்னைப் புரிஞ்சிக்கவே இல்லடி. என் காதல் உனக்கு பெருசா தெரியல. என் அன்பை நீ நம்பல.. என்னையே சந்தேகப்பட்டுட்ட! கேட்டிருந்தா நானே தந்திருப்பேன்லடி என் ஃபோனை?" என வேதனையுடன் வினவினான்.

பனிமலர் அசைய மறந்து கல்லாய் சமைந்திருந்தாள்.

"நம்பிக்கை இல்லாம தான் இவ்ளோ நாள் என்கூட வாழ்ந்தியா.. என் காதலை சந்தேகிக்க எப்படி உன்னால முடிஞ்சுது?" என்று கேட்டவனின் குரல் கலங்கி இருந்தது.

அவசர அவசரமாக இஸ்திரி போடப்பட்டு ஹாங்கரில் தொங்கிக் கொண்டிருந்த சட்டையை மாட்டிக் கொண்டவன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு வேகமாக வெளியேறினான் அங்கிருந்து!

அவனைத் தடுத்து நிறுத்தத் தான் நினைத்தாள். ஆனால் தாளிட்டாற்போல் இறுக மூடிக் கொண்ட வாயை நேரத்துக்கு திறக்க முடியாமல் போனது தான் அவலம்!

அன்று வீட்டை விட்டு வெளியேறியவன் தான்.. ஒரு மாதம், இரண்டு மாதங்கள் என்ன.. மூன்று மாதங்கள் கடந்தும் இன்னுமே திரும்பி வந்திருக்கவில்லை.

அவனை தொடர்பு கொள்ளவும் வழியில்லை. அலைபேசியை வீட்டிலே விட்டுச் சென்றிருக்கும் போது, எங்கனம் அழைப்பு விடுப்பாள் அவனுக்கு?

என்ன செய்வதென்று புரியாமல் காலேஜில் அவனைப் பற்றிய தகவல்களை சேகரித்துக் கொண்டு பக்கத்து ஊருக்குப் பயணமாகி, அதியனின் வீட்டைக் கண்டு பிடித்து அங்கே சென்றவளுக்கு எஞ்சியது எல்லாம், முக சுழிப்புகளும்.. எடுத்தெறியப்பட்ட வார்த்தைகளும் மட்டுமே!

வாசலில் வைத்தே திருப்பி அனுப்பப்பட்டவளின் கழுத்தில் மின்னிய தாலிக் கொடி தன் மகனால் கட்டப்பட்டது தான் என்பதைக் கிஞ்சித்தும் நம்பவில்லை அதியனின் அன்னை.

"என்னடி.. ஊரார் முன்னால தாலி, கலியாணம்னு சொல்லிட்டு சீன் கிரியேட் பண்ணறியோ.. பச்சைக் கிளியாட்டம் இங்கே ஒருத்தி அவனே வேணும்னு அவனுக்காக காத்துட்டு இருக்குறப்போ உன்னைப் போய் கலியாணம் அவனுக்கென்ன பைத்தியமா சொல்லு.. போவியா? இப்போ நீ போகல, அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது." என சத்தம் வைத்தவர்,

"என் புள்ள ஊருல இல்லைங்கிறதைத் தெரிஞ்சிக்கிட்டு இங்கே வந்திருக்கா இவ! நல்ல நேரம், பொண்டாட்டியைக் கூட்டிட்டு ஊர் தாண்டிப் போயிருக்கான். இல்லைனா இவ பேச்சைக் கேட்டு தேவி ரொம்பக் கோபப்பட்டிருப்பா!" எனப் புலம்பியது பனிமலருக்குமே கேட்டது.

'பொண்டாட்டியைக் கூட்டிட்டு..' என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் காதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்க, புத்தி பேதலித்தது போல் பாதையில் இறங்கி நடந்தவள் வீட்டை எப்படி வந்தடைந்தால் என அவளுக்கே தெரியவில்லை.

எதுவும் கவனத்தில் பதியவில்லை. கிரகிக்கும் திறனை இழந்து விட்டிருந்தவளுக்கு அதியனின் தாய் கூறியது உண்மையோ எனத் தோன்றியது.

'தேவியை நிஜமாவே இவர் கலியாணம் பண்ணிக்கிட்டாரா.. அதனால தான், மூணு மாசமா என்னைப் பார்க்கவே வரலையா.. அதி.. அதியன் என்னை மறந்துட்டிங்களாங்க நீங்க?" என சுவற்றில் சாய்ந்து அழுதுத் துடித்தாள் இந்த ஒரு வாரமாக!

எல்லாமுமாக இருந்தவன் திடீரென மாயமாகி விட்ட மாயத்தை நினைக்கும் போது மூச்சடைத்தது பனிமலருக்கு.

கடந்தகால யோசனையில் மூழ்கி இருந்தவள் கண்ணீருடன் எப்போது உறங்கிப் போனாளோ.. மதிய நேரத்தில் அலைபேசி இசைக்க ஆரம்பித்ததும் தான் பதறியடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

சேமிக்கப்படாத எண்ணிலிருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது!

தாமதிக்காமல் மிகுந்த ஆர்வத்துடன் அழைப்பை ஏற்றவள் மறுபுறம் கூறப்பட்ட தகவலைக் கேட்டுப் பதறி, அடுத்த ஒன்னரை மணி நேரத்தில் சிட்டி ஹாஸ்பிடலை வந்தடைந்திருந்தாள்.

அரக்கப் பறக்க ஹாஸ்பிடலினுள் ஓடி வந்தவளை வழி மறித்த ஒரு பெண், "யூ பனிமலர், ரைட்?" எனக் கேட்க, ஆமென்று தலை அசைத்தவள், "அதி.. அதியன் எங்க.. அவருக்கு என்னாச்சு? நல்லாருக்காருல்ல.." எனக் கேள்விகளை அடுக்கினாள்.

"அவருக்கு சின்ன காயம் தான். மருந்து போட்டுட்டு இருக்காங்க. நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க.." என்றவள் பனிமலரின் பார்வைக்கான அர்த்தம் புரிந்து, "நான் தேவி! உங்க அதியனோட மாமா பொண்ணு!" என சுய அறிமுகம் செய்து கொண்டாள்.

பனிமலரின் முகம் கறுத்தது.

'அப்போ மாமாவோட தான் இவ இருந்திருக்காளா?' என இயல்பாய் எழுந்த கேள்வி அடி வயிற்றில் அமிலத்தைக் கரைக்க, தொண்டைக் குழி ஏற இறங்க இருக்கையில் தொப்பென்று அமர்ந்தாள்.

"அக்கா.." என்ற அழைப்புடன் பனிமலரின் அருகில் அமர்ந்து, அவளின் கைகளைப் பற்றினாள் தேவி.

'மாமாவை எனக்கே கொடுத்திடுங்களேன்!' எனக் கேட்டு விடுவாளோ என சிந்தனைகள் எங்கெங்கோ அலைபாய, மெல்ல நிமிர்ந்தாள் பனிமலர்.

தேவியின் கழுத்திலிருந்த ஈரங்காயா சாலிச்சரம் அவளைப் பார்த்துப் பல்லிளித்தது. மீண்டுமொரு முறை உடைந்தவள், "க்.. கலியாணம் ஆகிடுச்சா த..தேவி?" என உலகே வெறுத்து விட்ட தோரணையில் மூச்சடைக்கக் கேட்டாள்.

வெட்கப் புன்னகையுடன் ஆமென்று தலை அசைத்தவள், "மாமாவுக்கு நான் எப்போவும் கடமைப் பட்டிருக்கேன் அக்கா. அவரு ரொம்ப நல்லவரு!" என்றாள் பூரிப்புடன்.

மலரின் இதழ்களில் விரக்திச் சிரிப்பொன்று தவழ்ந்தது.

எதையும் பேசத் தோன்றவில்லை. அவள் கூறுவதைக் கேட்க மனம் வரவுமில்லை. வாழ்வே இருண்டு போனது போல் இருந்தது! யாருமில்லையே என வருந்தி, அன்புக்காக கையேந்தி நின்ற வேளையில் மின்னலென வந்து, மனதில் பனி மழைப் பொழியச் செய்து, தினம் தினம் தன் காதலால் தன்னை மூழ்கடிக்கச் செய்தவன் இனி இன்னொருத்தியின் கணவன் என நினைக்கும் போதே அழுகை வெடித்தது.

"மாமாவை நல்லாப் பார்த்துக்குவீங்கல்ல அக்கா?"

அழுது கொண்டிருந்தவள் துணுக்குற்று தேவியைப் புரியாத பார்வை பார்த்தாள்.

அழகாய்ப் புன்னகைத்து பதில் சொல்ல வாய் திறந்த தேவி, தன்னருகே வந்து நின்ற ஆடவனின் தோளில் தலை சாய்ந்து, "இன்னைக்கு இவரு என்னோட இருக்காருனா அதுக்கு காரணம் மாமா தான்! சரியான நேரத்துல வீட்டாளுங்க கிட்ட எங்க லவ் மேட்டரை சொல்லி, சாதி, இனம்லாம் முக்கியமே இல்லைனு கெஞ்சிக் கூத்தாடி அம்மாப்பாவை சம்மதிக்க வைச்சிட்டாரு.

அப்போ தான் உங்க ரெண்டு பேரோட கலியாண விஷயம் பத்தியும் அவர் எல்லார் கிட்டயும் சொன்னாரு. எனக்கு நேத்து தான் கலியாணமாச்சு, சிம்பிளா! வீட்டாளுங்க நாளைக்கே உங்களை புகுந்த வீட்டுக்குக் கூட்டிட்டு போக வர்றதா முடிவு பண்ணின நேரத்துல இப்படி ஆகிடுச்சு!" சந்தோசத்துடன் ஆரம்பித்து சோகத்தில் முடித்தாள்.

பனிமலருக்கு சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை. இருக்கையை விட்டு வேகமாக எழுந்து நின்றவள் வார்டு கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஓட, கட்டிலில் சாய்ந்திருந்த அதியன் அவளைப் பார்த்து குறுநகை புரிந்தான்.

அதே கன்னக்குழிப் புன்னகை!

கன்னக்குழியெனும் பாதாளத்தில் கால் சறுக்கி விழப் போன மனதை கடினப்பட்டு இழுத்து நிறுத்தியவள், "வந்துட்டிங்களா அதியன்?" எனக் கண்ணீருடன் கேட்டவாறு அவனை நெருங்கினாள்.

அவளின் கைப்பற்றி இழுத்து தன் மீது வீழச்செய்தவன், "சாரி! ரொம்ப லேட் பண்ணிட்டேனா?" என்று கிசுகிசுப்பான குரலில் கேட்க,

"ரொம்பப் பயந்திருந்தேன். நா.. நான் சத்தியமா உங்களை சந்தேகிக்கல அதி.." அவனின் நெஞ்சில் சாய்ந்து விம்மினாள் பனிமலர்.

"அதான் தெரியுமே! நீ எப்படி என்னை சந்தேகிப்ப.."

"அப்போ ஏன் இவ்ளோ நாளா என்னைப் பார்க்க வரல? ஃபோனைக் கூட வீட்டுலயே விட்டுட்டுப் போய்ட்டிங்க. நா..நான் உங்களைத் தேடி வீட்டுக்கு வேற போனேன் தெரியுங்களா.. உங்களுக்கு கலியாணம் ஆகிடுச்சுங்குற மாதிரி பேசுனாங்க அத்தை.. எவ்ளோ அழுதேன். நா.. நான் ஏன் இன்னுமே சாகாம இருக்கேன்னு நினைச்சுட்.."

"ஷ்ஷ், பனி! அன்னைக்கு தேவியைக் கூட்டிட்டு, அவளோட லவ்வரை மீட் பண்ண வெளியே போயிருந்தேன். விஷயம் தெரியாம அம்மா அப்படி சொல்லிருப்பாங்க." என இடை மறித்துப் பேசினான் அதியன்.

"நீங்க ஏன் என்னைப் பார்க்கவே வரல?" கோபமாகக் கேட்டவளின் அடிகளை எல்லாம் புன்னகையுடனே வாங்கிக் கொண்டவன்,

"நான் கண்டிப்பா எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன்னு நீ நம்பலங்குற கோபத்துல தான் வீட்டை விட்டுப் போனேன். நான் ஏதோ உன்னை நம்ப வைச்சுக் கழுத்தறுத்தேன்ங்குற மாதிரி நீ பார்க்குற பார்வையை இனிமேயும் எதிர்கொள்வதற்கு பதிலா எல்லாம் சரியாகுற வரைக்கும் எட்ட நின்னு உன்னைப் பார்க்குறதே நல்லதுனு தோணுச்சு!" என்றான்.

தன் கண்ணீரை அவனது சட்டைக்கு இடமாற்றியவள், "எது எப்படியோ.. நீங்க என்கிட்ட வந்துட்டிங்கல்ல? ந்..நீங்க என்னை விட்டு நி..நிரந்தரமாப் போய்ட்டிங்களோனு ரொம்ப பயந்துட்டேன்.." கண்ணீருகுந்தபடி கூற, அவளின் கன்ன ஈரத்தைப் பெருவிரலால் துடைத்து விட்டவன்

"அடி பைத்தியக்காரி! பிரிவென்பது அரிதடி நமக்குள்ளே.. இருதயங்களில் நேசம் உறைந்திருக்கும் போது, பிரிவு சாத்தியம் தானா என்ன.." என கண் சிமிட்டி வினவினான்.

"ஐ லவ் யூ அதியன்.." என ஆனந்தக் கண்ணீருடன் முனகியவளின் அணைப்பில் மூச்சிறுகியது காளைக்கு!
பதிலுக்கு தானும் அவளை அணைத்து, அவளின் உச்சி முகர்ந்தான் காதலுடன்..

முற்றும்!

-ஹில்மா தாவுஸ்.
''Ati paithiakari! Pirivenbadhu arithadi namakkulle.. Irudhayangalil neasm urainthirukum bodhu pirivu sathiyam thana?'' Ppa innaa lines da sami. Udambu silirthadhu saki ♥️😍😍😍
Adhiyan and panimalar perfect couple ♥️♥️
Pirivarithadi namakkulle.. Vidyasamana title. Tilte pathathum patikka aasa vandhituchu..
♥️♥️♥️
Ungka writing styl arumaii saki
Pottiyil vetri pera vaazhthukkal ♥️♥️♥️♥️😍😍😍😍
 
  • Love
Reactions: Hilma Thawoos

Hilma Thawoos

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
163
27
28
Hambantota, SriLanka
''Ati paithiakari! Pirivenbadhu arithadi namakkulle.. Irudhayangalil neasm urainthirukum bodhu pirivu sathiyam thana?'' Ppa innaa lines da sami. Udambu silirthadhu saki ♥️😍😍😍
Adhiyan and panimalar perfect couple ♥️♥️
Pirivarithadi namakkulle.. Vidyasamana title. Tilte pathathum patikka aasa vandhituchu..
♥️♥️♥️
Ungka writing styl arumaii saki
Pottiyil vetri pera vaazhthukkal ♥️♥️♥️♥️😍😍😍😍
Romba nanri sagii 💙💙
 
Hilma Thawoos

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
163
27
28
Hambantota, SriLanka
கல்லூரி பேராசிரியராக வரும் நாயகனை காதல் மணம் புரிந்து பிரிந்திருக்கும் நாயகி, அவன் பிரிவால் கண்கலங்குவதுடன், அவனுக்கு வேறு திருமணமாகி விட்டதாக நினைத்து அழுது கொண்டிருக்க, எதற்கந்த பிரிவு, அவன் நிஜமாகவே வேறு மணந்து புரிந்து விட்டானா என்ற கேள்வி ஆரம்பத்திலேயே எட்டிப் பார்க்கிறது.

மனையாளுக்கு தெரியாமல் காய்களை நகர்த்த முயன்றவன் நிலைமை, பாவம் தான் ....

கதை நகர்வு நல்லா இருக்கு. பிளேஸ் பேக்கில் அவளது காதலும், திருமணமும், அதற்குப் பிறகான பிரிவும் இயல்பான கதையோட்டமாக இருக்கிறது.

நாயகனின் அமைதியும், காதலும், நாயகியின் பரிதவிப்பான முகமும்👌👌👌 நாயகனின் தாயாரின் பேச்சில் காணப்பட்ட கடுமையும் ஒரு கதை வாசித்த அனுபவத்தையே கொடுத்தது.

இறுதியில் அவளது அழுகையும், வார்த்தையாடலும் கண் கலங்க செய்து விட்டது.

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐
Romba romba nanri akkaa ❤️😍
Unga anbuku nanrigal pala..
 
Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
267
105
43
Theni
அருமை என்ற வார்த்தைகள் மிகக் குறைவு//
மனதைத் தொட்ட கதை.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா
 
  • Love
Reactions: Hilma Thawoos

Hilma Thawoos

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
163
27
28
Hambantota, SriLanka
அருமை என்ற வார்த்தைகள் மிகக் குறைவு//
மனதைத் தொட்ட கதை.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா
ரொம்ப நன்றி சகி 💙💙💙