• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - கதைத்திரி

kkp29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
36
12
8
Tamilnadu
உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - கதைத்திரி
 
Last edited:

kkp29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
36
12
8
Tamilnadu

தவிப்பு - 1 :​



‘ரெண்டு வருஷம்… ரெண்டு வருஷம் எதையும் மறக்க போதுமானது. ஆனா எல்லாத்தையும் மறந்திட இது போதுமானதா?’



தன் அறையில் இருந்த சுழல் நாற்காலியில் கண்களை மூடியபடி அமர்ந்திருந்த ரகுவீர் தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். அவன் கண்களில் பெருக்கெடுத்த கண்ணீர் அதற்கான பதிலை சொன்னது.



‘இல்லை… என்னால எதையும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது’ என்று தனக்குத்தானே முணுமுணுத்தவன் இரண்டு வருடத்திற்கு முன்பிருந்ததை போல ஒருமுறையாவது மனம் விட்டு சிரித்து விட ஏங்கினான். ஆனால் அப்படி ஒருநாள் இனி வரும் என்று அவனுக்கு தோன்றவில்லை.



ரகுவீர் சக்கரவர்த்தி… சக்கரவர்த்தியின் ஆசை பேரன். பிசினஸில் புலி என்று பெயர் எடுத்த தனசேகர் சக்கரவர்த்தியின் ஒரே மகன். இன்று அவன் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருந்தான். அவர் தந்தையின் உதவியின்றி அவனே முயன்று சொந்தமாக ஒரு ஃபேஷன் ஹவுஸ் நடத்தி வருகிறான்.



இந்த இரண்டு வருடத்தில் ஃபேஷன் உலகில் அவன் மிகப்பெரிய உயரத்தை எட்டி இருந்தான். யாராலும் அவ்வளவு எளிதாக அந்த உயரத்தை அடைந்து விட முடியாது. ஆனால் அதை நினைத்து அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மிகப்பெரிய உயரத்தை அடைந்த பிறகும் அவனுள் எப்போதும் ஒரு வெறுமை குடி கொண்டிருந்தது.



அவன் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றி நினைத்துக் கொண்டிருந்த போது “புஜ்ஜி” என்று ஒரு இனிமையான குரல் அவன் காதில் விழுந்தது.



அவன் தங்கை அமிர்தாவை தவிர வேறு யாராலும் அவனின் சிறுவயது செல்ல பெயரை சொல்லி அவனை தைரியமாக அழைத்து விட முடியாது. அவள் குரல் கேட்டதும் அதுவரை வெறுமையான முகத்துடன் இருந்தவனின் உதட்டில் புன்னகை தோன்றியது.



சட்டென்று தன்னைத்தானே அமைதிப்படுத்தி கொண்டவன் திரும்பி அவளைப் பார்த்து புன்னகையுடன் “என்னடா அம்மு?” என்று கனிவுடன் கேட்டான்.



“புஜ்ஜி… டாடி இந்த முறையும் உன்னோட ஃபேஷன் ஷோவுக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டார்”



அவள் சொன்னதை கேட்ட ரகுவீர் ஒருகணம் தன் கண்களை மூடித் திறந்தான். அவன் அப்பா அவனுடன் பேசுவதை நிறுத்தி இரண்டு வருடம் ஆகிவிட்டது. அவனையும் அவன் தந்தையையும் முன்பு போல மாற்ற அமிர்தா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் அவளின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியை தழுவியது. இப்போது போல.



“விடு அம்மு… அவர் இதை தான் சொல்வார்னு உனக்கும் தெரியும்… எனக்கும் தெரியும்… அப்புறம் ஏன் ஃபீல் பண்ற?”



“இல்ல புஜ்ஜி… இந்த முறை டாடி உன் பேஷன் ஷோவுக்கு வருவார்னு நான் ரொம்ப நம்பிக்கையா இருந்தேன்”



“விடுடா பாத்துக்கலாம்” என்ற ரகுவீர் தன் தங்கையை சமாதானப்படுத்தி விட்டு தன் இரண்டாவது வீடான தனது ஃபேஷன் ஹவுஸிற்கு வந்தான்.



அவனைப் பார்த்ததும் அங்கிருந்த அனைவரும் ஜெட் வேகத்தில் வேலை பார்க்க தொடங்கினர். அவனைப் பார்த்ததும் அங்கு வேலை பார்ப்பவர்களின் கண்களில் பயம் தெளிவாகத் தெரிந்தது. எப்போதும் இறுகிய முகத்துடன் வலம் வருபவனை பார்த்தால் யாருக்கு தான் பயம் வராது?



ஆனால் அவனுக்குள்ளும் இளகிய மனம் இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியும். கோபம் வந்தால் தவறு செய்தவர்களை வார்த்தைகளாலேயே பஸ்பமாக்குபவன், அங்கு பணிபுரிபவர்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் முதல் ஆளாக உதவி செய்வான். அதனால் தான் அவர்கள் அனைவரும் இன்னும் அவனுக்கு கீழே வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.



ரகுவீர் தனது ஆபிஸ் அறைக்குள் வந்து அமர்ந்ததும் அவன் அறை கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தார் மேனேஜர் சம்பத். அவருக்கு எப்படியும் ஐம்பது வயதிருக்கும். அந்த கம்பெனியிலேயே ரகுவீருடன் உரிமையாக பேசும் ஒரே நபர் அவர்தான். அவர் யார்? என்னவென்ற விவரம் எதுவும் அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு தெரியாது.



அவன் அமருமாறு சைகை செய்ததும் அவன் முன்பிருந்த இருக்கையில் அமர்ந்தவர் “சார் ராயல் குரூப்போட கான்ட்ராக்ட்டை அக்செப்ட் பண்ணிக்குங்களேன். ஏன் அதை வேண்டாம்னு சொல்றீங்க? அதை ஒத்துக்கிட்டா நமக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும் சார்” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.



அவர் முகத்தை கூர்ந்து பார்த்த ரகுவீர் “இந்த காண்ட்ராக்ட்டைநமக்கு கொடுக்க சொல்லி ராயல் குரூப்புக்கு ரெக்கமண்ட் பண்ணது யாரு?” என்று அழுத்தமாக கேட்டான்.



அவன் அவ்வாறு கேட்டதும் சம்பத் ஒருகணம் தடுமாறினார்.



பின்னர் பாக்கெட்டில் இருந்த கர்சிப்பை எடுத்து நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தவர் “சார் அது யாரா இருந்தா நமக்கு என்ன? நமக்கு இந்த காண்ட்ராக்ட் தானே முக்கியம். ப்ளீஸ் சார்… உங்க ஈகோவால இந்த காண்ட்ராக்ட்டை மிஸ் பண்ணிடாதீங்க” என்றார்.



“இல்ல… எங்களுக்கு இந்த காண்ட்ராக்ட் தேவையில்லைன்னு நான் ஆல்ரெடி ராயல் குரூப்க்கு மெயில் பண்ணிட்டேன். அதனால இந்த பேச்சை இதோட விடுங்க” என்றவன் அதற்கு மேல் பேச விருப்பம் இல்லாதவனை போல தனக்கு முன்பிருந்த பைலை எடுத்து பார்க்கத் தொடங்கினான்.



அவன் சொன்னதை கேட்ட சம்பத் பல்லை கடித்தார். அவரால் இதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அப்போது அவரின் போன் ஒலித்தது. யார் அவருக்கு போன் செய்கிறார்கள் என்று ரகுவீர்க்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவன் எதையும் கண்டுகொள்ளாமல் தன் வேலையை பார்க்க தொடங்கினான்.



அதே நேரம் போனை எடுத்து பேசிய சம்பத்தின் முகம் ஆயிரம் உணர்வுகளை காட்டியது.



போன் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவர் “ஏன் சார் இப்படி பண்றீங்க?” என்று மனத்தாங்கலுடன் கேட்டார்.



“அதுக்கான காரணம் உங்களுக்கே தெரியும்… சரி நீங்க கிளம்புங்க” என்றவன் தன் வேலையை பார்க்கத் தொடங்கினான்.



அவனுடைய இந்த ஆட்டிட்யூட் சம்பத்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் அவரால் வேறு என்ன செய்ய முடியும்? எனவே அவர் ஒன்றும் பேசாமல் அந்த அறையை விட்டு வெளியேறினார்.



மதியம் வரை வேலை பார்த்த ரகுவீர் ஒரு லஞ்ச் மீட்டிங்கிற்காக கிளம்பினான். அவனுக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். அதுவும் தன்னுடைய புகாட்டியை வேறு யார் ஓட்டவும் அனுமதிக்க மாட்டான்.



கார் பார்க்கிங்கிருக்கு வந்தவன் தன் புகாட்டியில் அமர்ந்து தனக்கு பிடித்த பாடலை வைத்துவிட்டு காரை எடுத்தான்.



எம்.ஆர் இண்டஸ்ட்ரி…



தன் மனதில் இருப்பதை யாரும் படித்து விடக்கூடாது என்ற நினைப்புடன் வெறுமையான முகத்துடன் தனக்கு எதிரே இருந்த பெண்ணை பார்த்த ஆத்விக் “ இந்த வேலை உங்களுக்கு எவ்வளவு முக்கியம்?” என்று உணர்ச்சியற்ற குரலில்



கேட்டான். அவனுக்கு முன்பு அமர்ந்திருந்த பெண் பயத்தில் எச்சிலை விழுங்கினாள். அவன் முகத்தைப் பார்க்கவே அவளுக்கு பயமாக இருந்தது.



அந்தப் பெண்ணின் முகத்தை அழுத்தமாக பார்த்த குரலில் “இந்த வேலை உங்களுக்கு எவ்வளவு முக்கியம்னு கேட்டேன்?” என்று மீண்டும் அதே கேள்வியை கேட்டான்.



“சார் நிஜமாவே இந்த வேலை எனக்கு ரொம்ப அவசியம்… எனக்கு அப்பா இல்லை சார்… என் தங்கச்சி படிச்சிட்டு இருக்கா… எங்க அம்மாவுக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்ல. அதனால இனி என் குடும்பத்தை நான் தான் பார்த்துக்கணும். அதுக்கு இந்த வேலை ரொம்ப அவசியம் சார்” என்று அந்தப் பெண் ஆத்விக்கின் மனதை தொடுவது போல ஒரு பதிலை சொன்னாள்.



ஆனால் தனக்கெதிரே இருப்பவனுக்கு இதுபோன்ற சென்டிமென்ட் எல்லாம் பிடிக்காது என்று அவளுக்கு தெரிந்திருந்தால் நிச்சயம் இப்படி ஒரு பதிலை சொல்லி இருக்க மாட்டாள்.



தன் முகத்தை சுளித்தபடி அந்தப் பெண்ணை பார்த்த ஆத்விக் “பணத்துக்காக வேலை பார்ப்பவர்களை விட பேஷன்காக வேலை பார்ப்பவர்கள் தான் எனக்கு வேணும்” என்றவன் அந்தப் பெண்ணின் பைலை மூடி அவளிடம் கொடுத்து விட்டு “அவுட்” என்றான்.



ஆத்விக் எம்.ஆர் இண்டஸ்ட்ரீஸின் சிஇஓ. குடும்பம், உறவுகள் இதில் எல்லாம் அவனுக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. அவன் யாரையுமே இப்போதெல்லாம் நம்புவதில்லை.



பின்னர் தன் அறையை விட்டு வெளியேறியவன் தன் லம்போகினியில் அமர்ந்து சீட் பெல்ட் போட்டான். இரண்டு வருடங்கள் கழித்து அவன் இப்போதுதான் சென்னைக்கு வந்திருக்கிறான். இந்த இரண்டு வருடத்தில் சென்னையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. அவன் அந்த மாற்றங்களை கவனித்தபடி காரை செலுத்த ஆரம்பித்தான்.



“அப்பா விநாயகா எப்படியாவது இன்னைக்கு நான் இன்டர்வியூக்கு டைமுக்கு போய் சேரணும்… அப்படி மட்டும் போய் சேர்ந்துட்டா நான் உனக்கு 101 தேங்காய் உடைக்கிறேன். நான் போற வழியில இருக்க எல்லா சிக்னலும் க்ரீனாவே இருக்கணும். டிராபிக் இருக்கவே கூடாது. முக்கியமா எந்த அரசியல் தலைவர்களும் நான் போற வழியில வந்துட கூடாது” என்று கடவுளை வேண்டியபடி சங்கமித்ரா தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.



அவள் வேண்டுதலை கேட்டபடி வெளியே வந்த அவள் அம்மா “இன்னைக்கு இன்டர்வியூ இருக்குன்னு தெரியும்ல… சீக்கிரம் எழுந்து கிளம்பி இருக்கலாம் இல்ல” என்றார்.



“நான் என்னம்மா பண்றது? இன்னைக்கு நான் இன்டர்வியூ போறது ரொம்ப பெரிய கம்பெனி. அதனால நைட் ஒருமணி வரைக்கும் சில டீடைல்ஸ் படிச்சுக்கிட்டு இருந்தேன். அதான் லேட் ஆகிடுச்சு. சரி உன்கிட்ட பேச நேரம் இல்ல. வந்து பேசிக்கிறேன்” என்ற சங்கமித்ரா மின்னல் வேகத்தில் ஸ்கூட்டியை செலுத்த ஆரம்பித்தாள்.



அவள் செல்லும் வேகத்தை பார்த்த அவள் அம்மா கஸ்தூரிக்கு கவலையாக இருந்தது. அவள் நன்றாக ஸ்கூட்டி ஓட்டுவாள் என்றாலும் இன்டர்வியூக்கு நேரமாகிவிட்ட பதட்டத்தில் வேகமாக ஓட்டி ஆக்சிடென்ட் ஏதேனும் ஆகிவிடுமோ என்று அவருக்கு பயமாக இருந்தது.



“கடவுளே இந்த வேலை அவளுக்கு கிடைக்குதோ? இல்லையோ? அவ உருப்படியா வீடு வந்து சேர்ந்தா போதும்” என்று கடவுளிடம் வேண்டுதலை வைத்தவருக்கு அப்போதுதான் அந்த விஷயம் நியாபகம் வந்தது.



'அய்யயோ நேத்து அவ பர்ஸ்ல இருந்து ஐநூறு ரூபாய் எடுத்தேனே... அதை சொல்ல மறந்துட்டேனே... அவகிட்ட வேற பைசா ஏதாவது இருக்கான்னு தெரியலையே... இந்த விஷயம் மட்டும் அவளுக்கு தெரிஞ்சது என்னை பேசியே கொன்னுடுவாளே' என்று நினைத்தபடி வீட்டின் உள்ளே சென்றார்.



அதே நேரம் சங்கமித்ரா நேரத்தை வீணாக்க விரும்பாமல் ஒரு கையால் ஹெல்மெட்டை மாட்டியபடி மற்றொரு கையால் ஸ்கூட்டியை வேகமாக செலுத்திக் கொண்டிருந்தவள் வலதுபுறம் திரும்புவதற்காக இண்டிகேட்டரை போட்டாள்.



அப்போது அவள் எதிர்பாராத விதமாக வலதுபுறப் பாதையில் இருந்து ஒரு லம்போகினியும் இடதுபுற பாதையில் இருந்து புகாட்டியும் அவள் வந்த பாதையில் திரும்பியது.



அதை பார்த்து பதற்றமடைந்தவள் எதிரே இருந்த பள்ளத்தை கவனிக்காமல் அதற்குள் ஸ்கூட்டியை விட்டுவிட்டாள். ஒரு கையால் ஓட்டியதால் சட்டென்று பேலன்ஸ் செய்ய முடியவில்லை. அடுத்த கணம் அவள் ஒருபுறமும் ஸ்கூட்டி மறுபுறமும் விழுந்தது.
 

kkp29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
36
12
8
Tamilnadu

தவிப்பு - 2 :



கீழே விழுந்த சங்கமித்ரா தனக்கு அடிபட்டு இருக்கிறதா என்பதைப் பற்றி கவலைப்படாமல் வேகமாக ஸ்கூட்டியின் அருகே ஓடியவள் அதை தூக்கி நிறுத்தி அதற்கு ஏதாவது சேதமாகி இருக்கிறதா என்று பார்த்தாள்.



‘அப்பாடி… நல்லவேளை… பெருசா எதுவும் ஆகல’ என்று முணுமுணுத்தபடி தன் விழிகளை உயர்த்தியவளின் பார்வையில் காரை விட்டு கீழிறங்கி ஒருவரை ஒருவர் முறைத்தபடி நின்றிருந்த ரகுவீர் மற்றும் ஆத்விக் இருவரும் விழுந்தனர்.



‘என்ன இவனுங்க… கீழ விழுந்த எனக்கு வந்து ஹெல்ப் பண்ணாம ஒருத்தரை ஒருத்தர் முறைச்சிக்கிட்டு நின்னுகிட்டு இருக்கானுங்க’ என்று நினைத்தவள் ‘ஹலோ மிஸ்டர் ரெண்டு பேரும் கண்ணாலேயே ரொமான்ஸ் பண்றத நிறுத்திட்டு கொஞ்சம் இங்க பார்க்கறீங்களா?” என்றாள்.



அவள் குரலில் தன்னிலைக்கு வந்த இருவரும் அவளை பார்த்தனர்.



அவர்கள் தன்னை பார்த்ததும் தன் இடுப்பின் மீது கை வைத்தபடி அவர்களை முறைத்த சங்கமித்ரா “திருப்பத்துல வளையும் போது ஹார்ன் அடிக்கணும்னு கூட உங்க ரெண்டு பேருக்கும் அறிவே இல்லையா? இங்க பாருங்க… கார் ஓட்ட தெரியலன்னா முதல்ல கார் நல்லா ஓட்ட கத்துக்கிட்டு அதுக்கு பிறகு இந்த மாதிரி ரோட்ல கார் ஓட்டுங்க… தேவையில்லாம அடுத்தவங்க உயிரோட விளையாடாதீங்க… ஏதோ நான் சுதாரிப்பா இருக்கவும் தப்பிச்சேன்… இல்லன்னா இன்னைக்கு உங்க ரெண்டு பேர் கார்ல மோதி நான் மேல போய் சேர்ந்திருப்பேன்” என்றாள்.



அவள் பேசியதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆத்விக் “ஏய்… நான் யாருன்னு தெரியுமா? என்கிட்ட இப்படி எல்லாம் பேச உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்… அதான் உனக்கு எதுவும் ஆகல இல்ல… இப்போ எதுக்காக நீ இந்த மாதிரி எல்லாம் பேசறேன்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்றவன் வேகமாக தன் காரில் இருந்த செக் புக்கில் ஐம்பதாயிரம் ரூபாயை எழுதி அதை அவள் கையில் கொடுத்தான்.



அந்த செக்கை வாங்கிய சங்கமித்ரா திகைப்புடன் ஆத்விக்கை பார்த்துக் கொண்டிருந்த போதே அவள் அருகே வந்த ரகுவீர் ஒரு லட்சத்திற்கு செக்கை எழுதி அவள் கையில் கொடுத்துவிட்டு “இந்தாங்க இதை வச்சு உங்க ஸ்கூட்டிக்கு ஏதாவது டேமேஜ் ஆகி இருந்தா சரி பண்ணிக்கோங்க” என்றான்.



தன் கையில் இருந்த இரண்டு செக்கையும் மாறி மாறி பார்த்த சங்கமித்ரா ‘இவனுங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு… அசால்ட்டா ஐம்பதாயிரம் ஒரு லட்சத்திற்கு செக் எழுதி கொடுக்கறாங்க…. அவனுங்க பண்ணது தப்புனா நான் பண்ணதும் தப்புதான். அதுக்காக அவனுங்க என்ன பதிலுக்கு திட்டி இருந்தா போனா போகுதுன்னு விட்டுடலாம். ஆனா இப்படி பணம் கொடுத்து என்ன அசிங்கப்படுத்தறாங்களே… என்ன பார்த்தா பணத்துக்காக அலையறவ மாதிரியா இவனுங்களுக்கு தோணுது’ என்று நினைத்தவள் அடுத்த கணம் அந்த இரண்டு செக்கையும் துண்டு துண்டாக கிழித்து அவர்களின் முகத்தில் விசிறி அடித்தாள்.



பின்னர் தன் ஸ்கூட்டியில் சென்று அமர்ந்தவள் “பணத்தால எல்லாத்தையும் வாங்கிட முடியும்னு நினைச்சீங்கன்னா முதல்ல போய் ரெண்டு பேரும் கொஞ்சம் மேனர்ஸை வாங்குங்க… அது உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப உதவியா இருக்கும்” என்று சொல்லிவிட்டு அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் ஸ்கூட்டியை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டாள்.



அவள் சொன்னதை கேட்டு கோபத்தில் பல்லை கடித்த ரகுவீர் மற்றும் ஆத்விக் இருவரும் அவளை கண்களாலேயே எரித்து விட விரும்புபவர்களைப் போல முறைத்துப் பார்த்தனர்.



அவர்கள் கண் பார்வையில் இருந்து அவள் மறைந்ததும் மீண்டும் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முறைக்க தொடங்கினர். அப்போது அவர்கள் காருக்கு பின்னே இருந்து நிறைய பேர் ஹாரன் அடிக்கும் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தில் தன்னிலைக்குத் திரும்பியவர்கள் ஒருவரை ஒருவர் முறைத்தபடியே தங்கள் காரில் அமர்ந்து அங்கிருந்து கிளம்பினர்.



அடுத்த 15 நிமிடத்தில் சங்கமித்ரா தான் செல்ல வேண்டிய இடத்தை அடைந்தாள்.



வேகமாக ஸ்கூட்டியை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு ரிசப்ஷனுக்கு சென்றவள் அங்கிருந்த பெண்ணிடம் “ஹலோ நான் இங்க இன்டர்வியூக்கு வந்திருக்கேன்… இன்டர்வியூ எங்க நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டாள்.



“சாரி மேடம்… நீங்க பத்து நிமிஷம் லேட்டா வந்திருக்கீங்க. லேட்டா வர யாரையும் இன்டர்வியூக்கு அலோ பண்ண கூடாதுன்னு எங்க மேனேஜர் ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்காரு. சோ நீங்க கிளம்பலாம்” என்று ரிசப்ஷனில் இருந்த பெண் சொன்னாள்.



என்ன செய்வதென்று தெரியாமல் ஒருகணம் தன் உதட்டை கடித்த சங்கமித்ரா பின்னர் “இங்க பாருங்க நான் லேட்டா வந்தது தப்புதான்… ஆனா அதுக்கு காரணம் இருக்கு. நான் மேனேஜர் கிட்ட அதை எக்ஸ்பிளைன் பண்றேன். ப்ளீஸ் என்ன உள்ள போக அலோ பண்ணுங்களேன்” என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.



கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவள் வேலை தேடிக் கொண்டிருக்கிறாள். ஆனால் இதுவரை அவளுக்கு அவள் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. அதுவும் இன்று அவள் இன்டர்வியூக்கு வந்திருப்பது மிகப்பெரிய கம்பெனி. இங்கு வேலை கிடைத்துவிட்டால் தொடக்க சம்பளமே அதிகமாக இருக்கும். இந்த வாய்ப்பை நழுவ விட்டுவிட்டால் அவள் ஏதாவது ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்கு அமர்ந்து மிகக் குறைவான சம்பளத்திற்கு வேலை செய்ய நேரிடும். அதனால்தான் அவள் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.



“சாரி மேம்… என்னால எதுவும் பண்ண முடியாது” என்று சொன்ன ரிசப்ஷனிஸ்டிற்கு சங்கமித்ராவை பார்க்க பாவமாக தான் இருந்தது.



ஆனால் அவளால் வேறு எதுவும் செய்ய முடியாது.



“இட்ஸ் ஓகே” என்ற சங்கமித்ரா வேறு வழியில்லாமல் அந்த கம்பெனியை விட்டு வெளியேறினாள்.



அவள் வெளியில் தன்னை விளையாட்டு பெண்ணாக, எப்போதும் சுட்டித்தனமாக இருக்கும் பெண்ணாக காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் மிகவும் சென்சிட்டிவ் ஆனவள். அவளின் ஒவ்வொரு முடிவிலும் அவள் அம்மாவும் பாட்டியும் அவளுக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர்.



அவள் எம்பிஏ படிக்கப் போகிறேன் என்று சொன்ன போதும், அவள் படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் குறைவான தகுதியுடைய வேலை கிடைத்த போது அதை மறுத்த போதும் அவர்கள் எதுவுமே சொன்னதில்லை. ஆனால் இனியும் அவளால் வேலைக்கு செல்லாமல் இருக்க முடியாது. ஏனென்றால் இப்போதெல்லாம் அவள் பாட்டியின் மருத்துவ செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. எனவே அவள் தனது பிடிவாதத்தை தளர்த்திவிட்டு தன் குடும்பத்திற்காக ஏதாவது ஒரு வேலைக்கு சென்றுதான் ஆக வேண்டும்.



உடம்பில் உள்ள சக்தி எல்லாம் வடிந்தது போல கார் பார்க்கிங்கை நோக்கி சென்று கொண்டிருந்தவளின் நினைவில் இன்று காலையில் அவள் சந்தித்த இரண்டு பேரும் நினைவுக்கு வந்தனர்.



“டேய் ராட்சஷன்ங்களா… உங்களால தான்டா இன்னைக்கு நான் இன்டர்வியூக்கு லேட்டா வந்தேன்… உங்களால தான் எனக்கு வேலை கிடைக்காம போயிடுச்சு… நீங்க மட்டும் என் கையில மாட்டுங்க… உங்களை என்ன பண்றேன்னு பாருங்க” என்று முணுமுணுத்தவள் தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.



அதேநேரம் நேராக தன் வீட்டிற்கு வந்த ரகுவீர் தன் அறைக்கு சென்றவன் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் தூக்கி எறிய ஆரம்பித்தான்.



அமிர்தா அப்போதுதான் வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். அவள் உள்ளே நுழைந்ததும் ரகுவீரின் அறைக்குள் இருந்து நிலநடுக்கம் ஏற்பட்டது போல சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.



அந்த சத்தத்தை கேட்டு பயந்தவள் வேகமாக ஓடிச் சென்று அவன் அறை கதவை தட்டினாள்.



அவள் குரல் கேட்டதும் ரகுவீர் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அறைக் கதவை திறந்தான்.



கோபத்தில் சிவந்திருந்த அவன் கண்களை பார்த்த அமிர்தா “என்ன ஆச்சு புஜ்ஜி?” என்று அக்கறையான குரலில் கேட்டாள்.



“ஒன்னும் இல்லடா அம்மு… கொஞ்சம் பிசினஸ் டென்ஷன்” என்று ரகுவீர் பொய் சொன்னான்.



அவன் தன் தங்கையிடம் ஆத்விக்கை பார்த்ததை பற்றி சொல்ல விரும்பவில்லை. அவனைப் பற்றி சொன்னால் அவள் உள்ளுக்குள் உடைந்துவிடுவாள் என்பதை அவன் அறிவான். அப்படி நடப்பதை அவன் விரும்பவில்லை.



“புஜ்ஜி உனக்கு என்கிட்ட உண்மையை சொல்ல விருப்பம் இல்லனா அதை நேரடியா சொல்லு… எனக்கு பொய் சொல்றது பிடிக்காதுன்னு உனக்கே தெரியும் இல்லையா?” என்று அமிர்தா கோபமாக சொன்னாள்.



அவளுக்கு பொய் சொல்வது சுத்தமாக பிடிக்காது.



“அடச்சே… நான் எப்படி என் அம்முகிட்ட பொய் சொல்லத் துணிந்தேன்… என்னோட கண் அசைவை வைத்தே அவ என் மனசுல இருக்கறதை கண்டுபிடிச்சிடுவான்னு தான் எனக்கு தெரியுமே” என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டவன் “சரி… சரி… எதுக்காக இப்போ உன் மூஞ்சியை இப்படி வச்சிருக்க… பார்க்க சகிக்கல” என்றவன் பின்னர் “நத்திங்டா… நீ எதை நினைச்சும் கவலைப்படாத” என்றான்.



அப்போது கீழே இருந்து “மச்சான்… அமிர்தா” என்ற குரல் கேட்டது.



“பிரேம் குரல் மாதிரி இருக்கு அம்மு… வா போகலாம்” என்றவன் தன் தங்கையை அழைத்துக் கொண்டு கீழே வந்தான்.



அமிர்தாவும் அவனை பின்தொடர்ந்து கீழே வந்தாள்.



பிரேமை பார்த்ததும் “என்ன மச்சான் ரொம்ப பிஸி போல… ஒருவாரமா இந்தப் பக்கம் ஆளையே காணோம்” என்றான்.



“ஆமா மச்சான்… கொஞ்சம் பிஸி தான்… அப்புறம் இதை பாரேன்” என்ற பிரேம் தன் கையில் இருந்த சில டாக்குமெண்ட்களை ரகுவீரிடம் கொடுத்தான்.



அந்த டாக்குமெண்டை வாங்கி படித்த ரகுவீரின் முகம் இருண்டது. கோபத்தில் தன் கைமுஷ்டியை இறுக்கியவன் தன் கையில் இருந்த பேப்பர்களை தூக்கி விசிறி எறிந்தான்.



பின்னர் நிமிர்ந்து பிரேமை பார்த்தவன் “அவங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பண்ணி இருப்பாங்க?” என்று பல்லை கடித்தபடி கேட்டான்.



அவன் கோபத்தை கவனித்த அமிர்தா “என்ன ஆச்சு புஜ்ஜி?” என்று கேட்டபடி அவன் விசிறி எறிந்த பேப்பர்களை எடுத்து படிக்க தொடங்கினாள்.



அதைப் படித்ததும் அவள் உடல் நடுங்கத் தொடங்கியது. அவளால் நேராக நிற்க முடியவில்லை. வேகமாக அவள் அருகே வந்து அவளை தோளோடு அணைத்துக் கொண்ட ரகுவீர் பிரேமை முறைத்து பார்த்தான்.



“இந்த காண்ட்ராக்டை டெர்மினேட் பண்ண என்ன பாசிபிலிட்டி இருக்குன்னு நான் சர்ச் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்… ஆனா இப்போ நம்மளால எதுவும் பண்ண முடியாதுன்னு தோணுது… அது மட்டும் இல்ல நம்மளை மொதமொதல்ல நம்பி வாய்ப்பு கொடுத்த மனுஷன் அவர்தான். அதையும் நாம மறந்திட கூடாது” என்று பிரேம் சொன்னான்.



அவனும் இந்த காண்ட்ராக்ட்டை ரத்து செய்ய எவ்வளவோ வழிகளில் முயன்று பார்த்துவிட்டான். இந்த நொடி எதுவும் அவர்கள் கையில் இல்லை. ஏனென்றால் அந்த காண்ட்ராக்டை அவர்கள் மூன்று வருடத்திற்கு முன்பு கையெழுத்திட்டிருந்தனர். இப்போது அதை வைத்துதான் விஸ்வநாதன் அவர்களை பிளாக்மெயில் செய்கிறார்.



“பிரேம் நீ போய் விஸ்வநாதன் சாரை மீட் பண்ணி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த ப்ராப்ளத்தை சால்வ் பண்ணு” என்ற ரகுவீர் அமிர்தாவை அழைத்துக் கொண்டு அவளின் அறையை நோக்கி சென்றான்.



“புஜ்ஜி இனி என்ன ஆகும்?” என்று அமிர்தா நடுங்கிய குரலில் கேட்டாள்.



“அம்மு… என்னை நம்பு… இனி அவன் நம்ம லைஃப்க்குள்ள நுழைய நான் அலோ பண்ண மாட்டேன்” என்று ரகுவீர் உறுதியான குரலில் சொன்னான்.
 

kkp29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
36
12
8
Tamilnadu

தவிப்பு – 3 :



“சரி விடு செல்லம்… இந்த கம்பெனி இல்லைனா இன்னொரு கம்பெனி… உன் திறமைக்கு இன்னும் கூட பெரிய கம்பெனியில் வேலை கிடைக்கும் பாரேன்” என்று சங்கமித்ராவின் அம்மா சுபத்ரா தன் மகளை தேற்றிக் கொண்டிருந்தார்.



“போங்கம்மா… இது எவ்வளவு பெரிய கம்பெனி தெரியுமா? இங்க மட்டும் எனக்கு வேலை கிடைச்சிருந்தா இன்னும் சில வருஷத்துல நான் எங்கேயோ இருந்திருப்பேன்… இப்போ எல்லாமே போச்சு… இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி வேலை கிடைக்கவில்லை என்றால் கூட என்னால மனசை தேத்திகிட்டு அடுத்த வேலையை தேட முடியும்… ஆனால் லேட் ஆனதால என்னால இன்டர்வியூ அட்டென்ட் பண்ண முடியாமல் போனதை தான் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியல”



அவள் சொன்னதைக் கேட்டபடி அங்கு வந்த சங்கமித்ராவின் பாட்டி கண்ணம்மா “என்னதான் உடம்பு முழுக்க எண்ணெயை தடவிக்கிட்டு தரையில உருண்டாலும் ஒட்டற மண்ணுதான் உடம்புல ஒட்டும். அது மாதிரி தான் யாருக்கு என்ன கிடைக்கணும்னு தலையில எழுதி இருக்கோ அதுதான் நடக்கும். இப்போ எதுக்காக நீ இப்படி புலம்பிக்கிட்டு இருக்க… போய் அடுத்து எந்த கம்பெனிக்கு இன்டர்வியூக்கு போலாம்னு பாரு” என்றார்.



“நீ சொல்றது சரிதான் கண்ணம்மா… நாளைக்கு எனக்கு வேறொரு கம்பெனியில இன்டர்வியூ இருக்கு. நான் அதுக்கு போய் ப்ரிப்பேர் பண்றேன்”



“அடி கழுதை… பாட்டியை பேர் சொல்லிக் கூப்பிடக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்… திரும்பத் திரும்ப அவங்களை பேர் சொல்லிக் கூப்பிட்டால் என்ன அர்த்தம்?” என்று சுபத்ரா அதட்டினார்.



“போம்மா… எனக்கு இப்படி கூப்பிட தான் புடிச்சிருக்கு … என் பாட்டியை நான் செல்லமா கண்ணம்மான்னு கூப்பிடுறேன்… உனக்கு என்ன வந்துச்சு? என் கண்ணம்மாவுக்கு பிடிக்கலைன்னா அதுவே என்கிட்ட சொல்லும்” என்று தன் அம்மாவிடம் சொன்னவள் “அப்படிதான கண்ணம்மா?” என்று தன் பாட்டியிடம் கேட்டாள்.



“ஆமாண்டி செல்லம்… சரி… நீ போய் டிரஸ் மாத்திட்டு வந்து ஏதாவது சாப்பிடு… நீதான் வெளியில போனா காசு செலவாகிடும்னு ஒரு காபி, டீ கூட குடிக்க மாட்டியே”



தன் மாமியார் சொன்னதை கேட்ட சுபத்ராவிற்கு அப்போதுதான் தன் மகளின் பர்ஸில் இருந்து 500 ரூபாயை எடுத்ததை பற்றி அவளிடம் தான் இன்னும் சொல்லவில்லை என்பது நினைவிற்கு வந்தது.



தன் தலையிலேயே அடித்துக் கொண்டவர் பின்னர் “மித்ரா அம்மா உன் பர்ஸில் இருந்து 500 ரூபாய் எடுத்தேன்டா… அதை உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன். சாரிடா” என்று அசட்டு சிரிப்புடன் சொன்னார்.



அவரை முறைத்துப் பார்த்த சங்கமித்ரா “ஏம்மா இப்படி பண்ற? உன்னை நான் காசு எடுக்க வேண்டாம்னு சொல்லல… ஆனா எடுத்தா என்னிடம் ஒரு வார்த்தை சொல்லலாம் இல்லையா? நீ பண்ற இந்த காரியத்தால என்னைக்கு நான் எங்க போய் அசிங்கப்பட போறேன்னு எனக்கே தெரியல” என்று சலிப்புடன் சொன்னாள்.



“சாரிடா… அம்மா இனி இந்த மாதிரி பண்ண மாட்டேன். சரியா?”



“சரி சரி… நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்… அதுக்குள்ள நீ குழம்பு சூடு பண்ணி வச்சுடு” என்றவள் உடை மாற்றுவதற்காக தன் அறைக்கு சென்றாள்.



அதேநேரம் தன் தங்கையை அவள் அறையில் விட்டுவிட்டு மீண்டும் வராண்டாவிற்கு வந்த ரகுவீர் “ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே நாம எல்லாத்தையும் விட்டு விலகி வந்தாச்சு. இப்போ எதுக்காக அவங்க நம்மகிட்ட இப்படி டிமாண்ட் பண்றாங்க?” என்று பிரேமிடம் நேரடியாக கேட்டான்.



“நீ சொல்றதெல்லாம் சரிடா… ஆனா நாம அவங்க கூட ஐந்து வருடத்திற்கு கான்ட்ராக்ட் போட்டு இருக்கோம். இந்த இரண்டு வருடமா நம்ம நிலைமை தெரிஞ்சு அவங்க நம்மளோட பழைய வேலைகளை வைத்து மேனேஜ் பண்ணிக்கிட்டு வந்தாங்க… நம்மளை எந்த விதத்திலும் தொந்தரவு பண்ணல… ஆனா இப்போ அவங்க கம்பெனி கொஞ்சம் பிரச்சனையில இருக்கு. அவங்க நம்ம கூட சேர்ந்து ஒர்க் பண்ணா அவங்க பொசிஷன் திரும்பவும் சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள்”



“ஆனா நம்மளால எப்படி முன்ன மாதிரி சேர்ந்து ஒர்க் பண்ண முடியும்? அதுக்கு வாய்ப்பே இல்ல… நீ முதல்ல போய் விஸ்வநாதன் சார் கிட்ட பேசு” என்று ரகுவீர் அழுத்தமான குரலில் சொன்னான்.



அதற்கு மேல் அவனிடம் பேச முடியாது என்பதை புரிந்து கொண்ட பிரேம் அவன் சொன்னபடி விஸ்வநாதனை சந்திக்க சென்றான்.



மறுபுறம் “என்னோட எல்லா மீட்டிங்கையும் கேன்சல் பண்ணுங்க” என்று தன் செகரட்டரியிடம் கத்திய ஆத்விக் தன் கையில் இருந்த காண்ட்ராக்ட் பேப்பரை விசிறி எறிந்துவிட்டு தன் அறையை விட்டு வெளியேறினான்.



நேராக கார் பார்க்கிங்கிற்கு வந்து தன் காரை எடுத்தவன் “எவ்வளவு தைரியம் இருந்தா அவங்க இப்படி பண்ணியிருப்பாங்க?” என்று முணுமுணுத்தபடி ஸ்டியரிங் வீலில் குத்தினான்.



அவனால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இரவு பகலாக தன்னை கொன்று கொண்டிருக்கும் நினைவுகளில் இருந்து விடுபட அவன் எவ்வளவு கடினமாக முயன்று கொண்டிருக்கிறான். ஆனால் இப்போது அவன் கண் முன்பே அனைத்தும் பாழாகிக் கொண்டிருந்தது. அவனால் மீண்டும் இந்த விஷயத்தில் ஈடுபடவே முடியாது.



தனக்குள் போராடியபடி ஆத்விக் விஸ்வநாதனின் ஆபீஸிற்கு வந்தான்.



கதவைக் கூட தட்டாமல் புயலைப் போல உள்ளே நுழைந்தவன் “ஹெல் வித் யூ… அண்ட் யுவர் காண்ட்ராக்ட்” என்று கோபமாக கத்தினான்.



கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தவன் முகத்தில் பலவித உணர்வுகளுடன் தன்னை பார்த்தபடி அங்கே ஒருவன் அமர்ந்திருப்பதை கவனிக்கவில்லை. ஆத்விக்கை பார்த்ததும் அவன் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது.



அப்போதுதான் அவனைப் பார்த்த ஆத்விக் தன் கண்களில் இருந்த கூலர்சை கழற்றியபடி “பிரேம்” என்று வாய்க்குள் முணுமுணுத்தான்.



அவன் மேலே எதுவும் சொல்வதற்குள் “மச்சான்” என்று பிரேம் சந்தோஷத்தில் கத்தினான்.



ஆனால் ஆத்விக் அவனைக் கண்டுகொள்ளாமல் “மிஸ்டர் விஸ்வநாதன் நீங்க ஏன் இந்த மாதிரி எல்லாம் பண்றீங்கன்னு எனக்கு தெரியல” என்றான்.



“ஆத்விக் எனக்கு எல்லாமே தெரியும்… ஆனா இப்போ சில எக்ஸ்க்ளூசிவ் ப்ராஜெக்ட் மட்டும்தான் என் கம்பெனியை சேவ் பண்ண முடியும். இதை விட்டா என் கம்பெனியை காப்பாத்த என்கிட்ட வேற வழி இல்ல” என்று விஸ்வநாதன் கெஞ்சலான குரலில் சொன்னார்.



ஆத்விக் அதற்குமேல் எதையும் கேட்க விரும்பவில்லை. ஏனென்றால் விஸ்வநாதன் ஏதாவது பேசி தன்னை ஒத்துக்கொள்ள வைத்துவிடுவார் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவன் தான் அவன். ஆனால் விஸ்வநாதனிடம் அவனால் கடுமையாக நடந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு முதல் முதலில் வாய்ப்பு அளித்த நல்ல மனிதன் அவர்.



எனவே அவன் அவருடன் மேலே பேச விரும்பாமல் அந்த அறையை விட்டு வெளியேறினான்.



அவன் சென்றதும் “இங்க பாரு பிரேம்… இப்போ என்கிட்ட இருக்க ஒரே ஒரு வழி இதுதான். இது மட்டும் எனக்கு கடைசி வாய்ப்பா இல்லாம இருந்திருந்தால் நான் உங்களை இந்த அளவுக்கு கம்பெல் பண்ணுவேனா சொல்லு… உனக்கு இந்த அங்கிளை பத்தி தெரியும் தானே?” என்று விஸ்வநாதன் கேட்டார்.



விஸ்வநாதன் பிரேமின் மாமா. அவன் மூலம் தான் அவருக்கு ஆத்விக் மற்றும் ரகுவீரின் அறிமுகம் கிடைத்தது.



“ரிலாக்ஸ் அங்கிள்… இவனுங்க ரெண்டு பேர்கிட்டயும் நான் பேசுறேன்”



“ப்ளீஸ் பிரேம் …ஏதாவது பண்ணு… இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து முன்ன மாதிரி ப்ராஜெக்ட் பண்ணியே ஆகணும்… மொதல்ல அவனை உள்ள கூட்டிகிட்டு வா... கோபத்துல போய்ட போறான்”



“ஓகே அங்கிள்… நான் நிச்சயம் அவங்ககிட்ட இத பத்தி பேசுறேன்” என்றவன் வெளியே வந்தான்.



அவன் வெளியே வந்த போது ஆத்விக் அங்கிருந்த பால்கனியில் சிகரெட் பிடித்தபடி நின்றிருந்தான்.



‘அட பரவாயில்லையே… பயபுள்ள இன்னும் போகாம இருக்கான்’ என்று நினைத்த பிரேம் வேகமாக சென்று அவனை கட்டி அணைத்தவன் “எப்படி மச்சான் இருக்க?” என்றான்.



சிகரெட்டை அணைத்து அங்கிருந்த குப்பைத் தொட்டியில் வீசிய ஆத்விக் “நான் நல்லா இருக்கேன்… நீ எப்படி இருக்க? அப்புறம்” என்றவன் கேட்க வந்ததை கேட்காமல் பாதியிலேயே நிறுத்தினான்.



அவன் என்ன கேட்க வந்தான் என்பதை புரிந்து கொண்ட பிரேம் தன் புருவத்தை உயர்த்தியபடி அவனை பார்த்தவன்” என்ன அப்புறம்? யாரைப் பற்றியாவது உனக்கு தெரிஞ்சுக்கணுமா? என்றான்.



அவன் அவ்வாறு கேட்டதும் தன் முக உணர்வுகளை மறைக்க ஆத்விக் தன் முகத்தை திருப்பினான்.



அவனைப் பார்த்து சிரித்த பிரேம் “நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் மச்சான்… அது சரி இத்தனை நாளா நீ எங்க போயிருந்த? நானும் எப்படி எல்லாமோ உன்னை கண்டுபிடிக்க ட்ரை பண்ணன். ஆனால் நீ இருக்க இடத்தை கண்டுபிடிக்கவே முடியல. ஆனாலும் ஓடி ஒளிஞ்சிகிறதுல உன்ன அடிச்சுக்கவே முடியாது மச்சான்என்று கிண்டலாக சொன்னான்.



“எனக்கு யாரையும் பார்க்க பிடிக்கல… பேச பிடிக்கல… அதனால தான் நான் எங்க இருக்கேன்னு யாருக்கும் தெரிய வேண்டாம் என்று நினைத்தேன். அதான் இப்போ வந்துட்டேன் இல்ல… விடு”



“மச்சான் நீ நடந்த எல்லாத்தையும் மறந்துட்ட தானே?”



“நான் எதையும் மறக்கவும் இல்லை… யாரையும் மன்னிக்கவும் இல்ல” என்று ஆத்விக் தன் கைமுஷ்டியை இறுக்கியபடி சொன்னான்.



“மச்சான் ரகு பக்கம் ஏதாவது நியாயம் இருக்கும்னு உனக்கு கொஞ்சம் கூட தோணலையா?”



“அவன் பக்கம் என்ன நியாயம் வேணும்னாலும் இருக்கட்டும். ஆனா அவன் எனக்கு பண்ணது நம்பிக்கை துரோகம். துரோகத்துக்கு என்னைக்குமே மன்னிப்பு கிடையாது. நீ இதை பத்தி பேசறதா இருந்தா நான் இப்பவே கிளம்பறேன்” என்று ஆத்விக் உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்.



அவன் சொன்னதைக் கேட்ட பிரேம் பெருமூச்சை வெளியேற்றியவன் இப்போதைக்கு ரகுவீர் பற்றி அவனிடம் எதையும் பேச வேண்டாம் என்று முடிவெடுத்தவன் “சரி, நீ உள்ள வா… விஸ்வநாதன் சார் உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு” என்றான்.



அவனைப் பார்த்து தலையசைத்த ஆத்விக் பிரேமுடன் மீண்டும் விஸ்வநாதனின் அறைக்குள் நுழைந்தான்.



அவர்கள் இருவரும் வந்து நாற்காலியில் அமர்ந்ததும் “இங்க பாரு ஆத்விக் ஒழுங்கா இதுக்கு ஒத்துக்கோ… இல்லைனா நான் என் வழியில உங்க ரெண்டு பேரையும் ஒத்துக்க வைக்க வேண்டி இருக்கும்” என்று குரலை உயர்த்தி சொன்னார்.



அவர் எதை செய்தாவது அவர்கள் இதுவரையும் ஒத்துக்கொள்ள வைக்க தயாராக இருந்தார். அதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்லவும் தயாராக இருந்தார்.



“ரெண்டு பேருக்கும் என்னை பார்த்தா எப்படி தெரியுது? நீ நேர்ல வந்து முடியாதுன்னு சொன்னா… அவன் நூறு முறைக்கு மேல போன் பண்ணி வேற வழியே இல்லையான்னு கேட்கறான்? ஏன் ரெண்டு பேரும் என்னை இப்படி படுத்தி எடுக்கறீங்க?” என்று எரிச்சலுடன் கேட்டார்.



அவர் சொன்னதை கேட்ட ஆத்விக்கின் மனதில் வேறொரு திட்டம் தோன்றியது.



தன் உதட்டை வளைத்து புன்னகைத்தவன் “ஓகே… நீங்க இவ்வளவு சொல்றதால நான் இந்த ப்ராஜெக்ட் பண்ண ஒத்துக்கிறேன்” என்றான்.



அவன் சொன்னதைக் கேட்ட விஸ்வநாதனுக்கு சந்தோஷத்தில் துள்ளி குதிக்க வேண்டும் போல தோன்றியது.



பின்னர் தன் கூலர்சை எடுத்து ஸ்டைலாக தன் கண்களில் அணிந்த ஆத்விக் ‘டேய் ரகு இதைகேட்டா உன்னோட முகம் எப்படி போகும்?’ என்று யோசித்தான்.
 
  • Like
Reactions: Indhumathy

kkp29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
36
12
8
Tamilnadu

தவிப்பு - 4 :



“அவன் எப்படி இதுக்கு ஒத்துக்கிட்டான்?” என்று ரகுவீர் பிரேமின் முகத்தை கூர்ந்து பார்த்துபடி கேட்டான்.



பிரேம் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தான்.



ரகுவீர் மிகுந்த கோபத்தில் இருப்பதை பார்த்த அமிர்தா “புஜ்ஜி ரிலாக்ஸ்” என்று தன் அண்ணனை அமைதிபடுத்தினாள்.



“இப்போ விஸ்வநாதன் சார் என்ன எல்லா வழியிலேயும் கம்பெல் பண்ண ட்ரை பண்ணுவார்” என்று ரகுவீர் தன் தலையை அழுந்த கோதியபடி சொன்னான்.



அதுநேரம் வரை அமைதியாக இருந்த பிரேம் “நீ எதுக்காக இப்போ ஓடி ஒளிய முயற்சி பண்ற ரகு? உனக்கு ஆத்விக்கை ஃபேஸ் பண்ண தைரியம் இல்லையா?” என்று கேட்டான்.

அவன் சொன்னதை கேட்ட அண்ணன், தங்கை இருவரும் திகைத்தனர்.



“நான் எதுக்காக அவனை பேஸ் பண்ண பயப்படணும்? என்று ரகுவீர் தன் பல்லை கடித்தபடி கேட்டான்.



“அப்போ எதுக்காக இப்போ கோபப்படற? உன்னோட பிரசன்ஸ் அவனை அஃபெக்ட் பண்ணல இல்லையா? அப்போ அவனோட பிரசன்ஸ் உன்னை அஃபெக்ட் பண்ணாம பார்த்துக்கோ” என்று சொல்லி பிரேம் ரகுவீரின் ஈகோவை தூண்டிவிட்டான்.



“இங்க பாரு… நான் விஸ்வநாதன் அங்கிள் கிட்ட ஏற்கனவே இதைப் பற்றி பேசிட்டேன்… இதுதான் எங்களோட லாஸ்ட் ப்ராஜெக்ட்னு சொல்லிட்டேன்… அவரும் அதுக்கு ஒத்துக்கிட்டார். இத நாம நல்லபடியா முடிச்சு கொடுத்துட்டா இனி அவர் நம்மை தொந்தரவு பண்ண மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணிருக்கார்… அம்மு கொஞ்சம் ரகுவுக்கு எடுத்து சொல்லேன்” என்றவன் அமிர்தாவை கெஞ்சலாக பார்த்தான்.



ஏனென்றால் ரகுவீரை சமாதானப்படுத்துவதை விட அமிர்தாவை சமாதானப்படுத்துவது எளிதென்று அவனுக்குத் தெரியும்.



“புஜ்ஜி இதுதான் லாஸ்ட் ப்ராஜெக்ட்னு பிரேம் அண்ணா சொல்றார் தானே… ப்ளீஸ் ஒத்துக்கோ” என்று அமிர்தா கெஞ்சலாக கேட்டாள்.



தங்களால் விஸ்வநாதன் பாதிக்கப்படுவதை அவள் விரும்பவில்லை.



“சரி… உங்க விருப்பம் அதுதான் என்றால் நான் ஒத்துக்கறேன்…” என்று சொன்ன ரகுவீர் அதற்கு மேல் அங்கே நிற்க விருப்பமில்லாமல் அந்த அறையை விட்டு வெளியேறினான்.

************************ ************************ *****************

“ரொம்ப நன்றி விஸ்வநாதன்… நீ எனக்கு பண்ணி இருக்கிறது மிகப்பெரிய உதவி” என்று தனசேகர் சக்கரவர்த்தி விஸ்வநாதனிடம் போனில் சொல்லிக் கொண்டிருந்தார்.



“அட என்ன சேகர்… அவங்க எனக்கும் பசங்க மாதிரி தான்… இதுக்கெல்லாம் நன்றி சொல்லுவியா என்ன? இந்த கான்ட்ராக்ட் அவங்களை முன்ன மாதிரி ஒன்னு சேர்க்கும்னா இந்த மாதிரி எத்தனை காண்ட்ராக்ட் வேணும்னாலும் நான் ரெடி பண்ண தயாரா இருக்கேன்”



“இந்த சான்ஸை யூஸ் பண்ணி அவங்க தங்களுக்கு இடையே இருக்க பிரச்சனையை தீர்த்துப்பாங்கன்னு நான் நம்புறேன்”



“நிச்சயமா சேகர்… ஆனா எனக்கு ஒரு சந்தேகம்…. பெரியவங்க நீங்க ஏன் இந்த பிரச்சினையில் தலையிட்டு இதை சால்வ் பண்ண முயற்சி பண்ணல” என்று அவரது நீண்ட நாளைய சந்தேகத்தை விஸ்வநாதன் கேட்டார்.



“இந்தப் பிரச்சனைக்குள்ள பெரியவங்க யாரும் வரக்கூடாதுன்னு ரெண்டு பேருமே ரொம்ப ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க… அதை மீறி உள்ள போக எங்களுக்கும் மனசு இல்ல. ஆயிரம் இருந்தாலும் அவங்க ரெண்டு பேருமே வளர்ந்த பசங்க. அவங்க வார்த்தைக்கு நாம மதிப்பு கொடுக்கணும் இல்லையா? அதனால தான் நாங்க எல்லாரும் கடந்த ரெண்டு வருஷமா அமைதியா இருந்தோம். ஆனால் இனியும் அப்படியே இருக்க முடியாது இல்லையா? அதனால தான் அவங்க தங்களுடைய பிரச்சனையை சால்வ் பண்ணிக்க மறைமுகமா உன்ன வச்சு ட்ரை பண்றேன்”



“ஓஹோ இப்படி பண்றதன் மூலமா நீ உன் பையன் பேச்சை மீறாமல் ரகுவுக்கு நல்ல அப்பாவாவும் இருக்க… அதேசமயம் என் மூலமா அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு அமிர்தாவுக்கும் நல்ல அப்பாவா இருக்க… உன்னைய பிசினஸ்ல புலின்னு ஏன் சொல்றாங்கன்னு எனக்கு இப்போதான் புரியுது”



“பிசினஸ்ல புலியா இருந்து என்னப்பா பண்றது? என் பசங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இல்லையே… ஒரு அப்பாவா எனக்கு வேண்டியதெல்லாம் அவங்களோட சந்தோஷம் மட்டும்தான்” என்று சொன்ன தனசேகரின் குரல் கனத்திருந்தது.



அதை உணர்ந்து கொண்ட விஸ்வநாதன் “கவலைப்படாத சேகர்… அந்த கடவுள் மேல நம்பிக்கை வை… நிச்சயம் உன் பசங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க பாரு” என்று சொல்லிவிட்டு மேலும் சிறிது நேரம் பேசியவர் பின்னர் அழைப்பை துண்டித்தார்.



இரவு 11 மணி…



ஆத்விக்குடன் இணைந்து ப்ராஜெக்ட் செய்ய சம்மதித்த பிறகு ஒரு கணம் கூட ரகுவீரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஆனால் தங்கள் பிரச்சனைக்குள் மீண்டும் அமிர்தா சிக்கிக் கொள்வதை அவன் விரும்பவில்லை.



ஆத்விக்கை சந்திப்பது அவனுக்கே எளிதான காரியம் அல்ல. அப்படி இருக்கும் போது அமிர்தா அவனை சந்திக்க நேர்ந்தால் அவள் அப்படி எதிர்வினை ஆற்றுவாள் என்பதை அவனால் கணிக்க முடியவில்லை. எனவே அவன் அவர்கள் இருவரையும் சந்திக்க விடாமல் தடுக்க நினைத்தான்.



தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தவன் பின்னர் தனது போனை எடுத்து பிரேமிற்கு அழைத்தான்.



மறுபுறம் இருந்து “ஹலோ” என்று தூக்க கலக்கத்துடன் பிரேமின் குரல் கேட்டது.



“ஹலோ நான் ரகு பேசுறேன்டா”



“சொல்லுடா… என்ன இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க?”



“காண்ட்ராக்ட் பத்தி கொஞ்சம் பேசணும்” என்று ரகு சொன்னதும் பிரேம் அரக்கப் பறக்க எழுந்து அமர்ந்தான்.



“என்ன மச்சான்? அதான் ஆத்விக் கூட சேர்ந்து ஒர்க் பண்ண ஒத்துக்கிட்டயே… அப்புறம் அத பத்தி பேச என்ன இருக்கு”



“இருக்கு… இங்க பார் எக்காரணம் கொண்டும் இந்த ப்ராஜெக்ட்ல அமிர்தா இன்வால்வ் ஆக மாட்டா… அதுக்கு விஸ்வநாதன் சார் ஒத்துக்கிட்டா மட்டும் தான் நான் இந்த ப்ராஜெக்ட் பண்ணுவேன்… அப்படி இல்லன்னா அவர் என்ன பண்ணாலும் சரி நான் இந்த ப்ராஜெக்ட்ல இல்ல” என்று அழுத்தமான குரலில் சொன்னான்.



அவன் சொன்னதைக் கேட்ட பிரேமிற்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.



“அட இவ்வளவுதானா? நீ இதைத்தான் சொல்லுவேன்னு எனக்கு நல்லாவே தெரியும்… அதனால நீ இதை என்கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே நான் இதைப் பற்றி விஸ்வநாதன் அங்கிள் கிட்ட பேசிட்டேன். அவரும் புதுசா ஒருத்தவங்களை ஹையர் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாரு… அப்புறம் மச்சான் விஸ்வநாதன் அங்கிள் உன்னையும் ஆத்விக்கையும் நாளைக்கு மீட் பண்ணனும்னு சொன்னார்.”



"ஓஹ்... எப்போ? எங்கே?"



"காலைல சொல்றேன்னு சொன்னார். நானே வந்து உன்னை கூட்டிக்கிட்டு போறேன். இப்போ போய் நீயும் தூங்கு… என்னையும் தூங்க விடு” என்றவன் ரகுவீரின் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தான்.



மறுநாள்…



விஸ்வநாதன் தன் அலுவலக அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.



ஒரு ஓரமாக நின்றிருந்த அவர் செக்ரட்டரி “நான் என்ன சார் பண்ணட்டும்? ஆத்விக், ரகு சார் இடையே இருக்கும் பிரச்சனை நம்ம கம்பெனியில் இருக்க எல்லாருக்குமே தெரியும். அதனால அவங்க யாரும் நம் கம்பெனி சார்பா அவங்க கோஆர்டினேட்டரா இருக்க பயப்படறாங்க… யாரும் ஒத்துக்க மாட்றாங்க” என்றார்.



“ஒரு கம்பெனியில இந்த வேலைய பார்க்கணும்னு சொன்னா பார்க்கணும்… அவங்க தானே நல்ல எம்ப்ளாயி… எனக்கு வர கோபத்துக்கு இவங்க எல்லாரையும் உடனே டிஸ்மிஸ் பண்ணிடலாமான்னு தோணுது” என்று விஸ்வநாதன் பல்லை கடித்தபடி சொன்னார்.



“சார்… இதுவரைக்கும் இவங்க யாராவது நாம சொன்னதை மீறி நடந்து இருக்காங்களா? ஆனா இப்போ இப்படி சொல்றாங்கன்னா அவங்க எல்லாருக்கும் ரகு, ஆத்விக் சார் மேல எவ்வளவு பயம் இருக்கும்னு நீங்களே புரிந்து கொள்ளுங்கள்...”



“சரி… இப்போ நாம என்ன பண்றது?”



“சார் என்கிட்ட ஒரு யோசனை இருக்கு… சொல்லவா?”



“சொல்லுங்க”



“சார் நேத்து புதுசா ஒரு பொண்ணை வேலைக்கு எடுத்தோமே… அந்தப் பொண்ணு பார்க்க ரொம்ப புத்திசாலியா தெரியறா சார்… அவ இந்த மாதிரி ப்ராஜெக்ட்ல இதுக்கு முன்னாடி ஒர்க் பண்ணது இல்லைனாலும் அவளால நல்லா கோஆர்டினேட் பண்ண முடியும்னு எனக்கு தோணுது… அது மட்டும் இல்ல அவ பொண்ணா இருக்கறதால ரகு, ஆத்விக் இரண்டு பேரும் அவ மேல பாவப்பட்டு கொஞ்சம் மென்மையாக கூட நடந்துக்கலாம் இல்லையா?”



அவர் சொன்னதைக் கேட்ட விஸ்வநாதனுக்கு அதுவே சரியென்று பட்டது. ஏனென்றால் அனுபவம் வாய்ந்த கோஆர்டினேட்டர்கள் யாரும் ரகு மற்றும் ஆத்விக்குடன் வேலை பார்க்க விரும்ப மாட்டார்கள்.



அது பற்றி யோசித்த விஸ்வநாதன் “சரி… அந்த பொண்ணுக்கு போன் பண்ணி மீட்டிங் ஸ்பாட்டுக்கு வர சொல்லிடுங்க” என்றவர் தன் அறையை விட்டு வெளியேறினார்.



அதேநேரம் வெளிர் நீல நிற சட்டை, பிளாக் கோட் அணிந்திருந்த சித்தார்த் வெளியே செல்வதற்கு தயாராகி வந்தான். இன்று என்ன நடந்தாலும் தான் கோபப்படக்கூடாது அமைதியாக இருக்க வேண்டும் என்று அவன் நேற்றிரவே முடிவெடுத்து இருந்தான். அவன் மாடிப்படி இறங்கி வரும் போது அமிர்தா அனார்கலி சுடிதார் அணிந்து தயாராக நின்றிருந்தாள்.



அவளைப் பார்த்தவன் “அம்மு நீ எங்கேயாவது வெளியே போறியா?” என்று தன் புருவத்தை உயர்த்தியபடி கேட்டான்.



“நானும் உன்னோட மீட்டிங்க்கு வரேன்”



“நோ… நீ வேண்டாம்” என்று ரகுவீர் அழுத்தமான குரலில் சொன்னான்.



“ஆனா புஜ்ஜி” என்ற அமிர்தா மேலே எதுவும் சொல்வதற்கு முன்பு



“இங்க பார் அம்மு… நீ சொன்னதுக்காக மட்டும்தான் நான் இந்த ப்ராஜெக்ட்ல ஒர்க் பண்ண சம்மதித்தேன்… ஆனா அதுக்காக நீ இதுல இன்வால்வ் ஆகறதை நான் விரும்பல… நீ வர வேண்டாம்… அவ்வளவுதான்” என்றவன் அவர்கள் இருவரும் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிரேமை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.



அவன் முதுகை வெறித்துப் பார்த்த அமிர்தா “சாரி புஜ்ஜி… நான் கண்டிப்பா வந்தே தீருவேன்… உன்னை நான் எப்போதும் தனியா விடமாட்டேன்” என்று முணுமுணுத்தவள் ஆட்டோ பிடித்து அவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.



ரகுவீரை தனியாக விடக்கூடாது என்ற நினைப்பில் அவள் சென்று கொண்டிருந்தாலும் ஆத்விக்கை நீண்ட நாட்கள் கழித்து பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பே அவளை பதட்டப்பட வைத்தது. அவளால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை. பேசாமல் திரும்பிப் போய் விடலாமா என்று கூட ஒருகணம் நினைத்தாள்.



ஆனால் மறுகணமே தன் மனதை மாற்றிக் கொண்டு “இல்ல… இப்போ நான் என்னோட புஜ்ஜிக்கு சப்போர்ட்டா இருந்தே ஆகணும்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் மீட்டிங் நடைபெறும் இடத்திற்கு சென்றாள்.
 
  • Like
Reactions: Indhumathy

kkp29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
36
12
8
Tamilnadu

தவிப்பு - 5 :



பிரேம் மற்றும் ரகுவீர் இருவரும் மீட்டிங் நடைபெறும் இடத்தை அடைந்தனர். அந்த இடத்தை பார்த்தவர்களுக்கு ஒன்று மட்டும் நிச்சயமாக புரிந்தது. விஸ்வநாதன் தங்களை இந்தப் ப்ராஜக்டிற்காக மட்டும் ஒன்றிணைக்க விரும்பவில்லை. அவருக்கு வேறு ஏதோ உள்நோக்கம் இருப்பது.



ஆனால் ரகுவீர் அந்த எண்ணத்தை உடனே புறக்கணித்தான். விஸ்வநாதன் எதையும் வியாபார ரீதியாக அணுகுபவர். ஒருவேளை அவர்கள் படித்த கல்லூரியை மீட்டிங்கிற்காக ஏற்பாடு செய்தது தற்செயல் நிகழ்வாக கூட இருக்கலாம்.



அந்த கல்லூரியை சுற்றிப் பார்த்த பிரேம் மற்றும் ரகுவீர் இருவருக்கும் அங்கு படிக்கும் போது அவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருந்த தருணங்கள் நினைவிற்கு வந்தன. ஆனால் அதைப் புறக்கணித்துவிட்டு அவர்கள் இருவரும் உள்ளே சென்றனர்.



அதே நேரம் அவர்களை பின்தொடர்ந்து வந்த அமிர்தா அந்த கல்லூரியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாள். அவளும் அதே கல்லூரியில் தான் படித்தாள். அந்தக் கல்லூரியில் தான் அவளுள் காதல் அரும்பி மலர்ந்தது. தன் கண்களை மூடி தன்னுள் எழுந்த உணர்வுகளை கட்டுப்படுத்தியவள் ஆட்டோவிற்கு பணம் கொடுத்துவிட்டு கீழே இறங்கினாள். அப்போது ரகுவீர் தான் இருக்கும் புறம் திரும்புவதைப் போல உணர்ந்தவள் வேகமாக அங்கிருந்த ஒரு அறைக்குள் ஒளிந்து கொண்டாள்.



மறுபுறம் கல்லூரியை அடைந்த ஆத்விக் “விஸ்வநாதன் சார்… வேணும்னே தான் இந்த இடத்துல மீட்டிங் ஏற்பாடு பண்ணி இருக்காரு போல” என்று பல்லை கடித்தபடி நினைத்தான்.



அவனுக்கு கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கக் கூட வெறுப்பாக இருந்தது. உள்ளுக்குள் ஆத்திரத்தில் கொதித்தபடி அவன் அந்த கல்லூரிக்குள் நுழைந்தான்.



கல்லூரிக்குள் நுழைந்த பிறகு ஒருவரின் மனதிலும் நிம்மதி இல்லை. அங்கு படித்த காலத்தில் அவர்கள் சந்தோஷமாக இருந்த தருணங்கள் அவர்களை பார்த்து சிரிக்க தொடங்கியது. முன்பு போலவே தங்கள் வாழ்க்கை மாறிவிடாதா என்று ஒரு கணம் அவர்கள் மனம் ஏங்கியது. ஆனால் அது நடைபெற வாய்ப்பே இல்லை என்பதும் அவர்களுக்கு புரிந்தது.



பிரேம், ரகுவீர் இருவரும் கல்லூரியின் நுழைவாயிலுக்குள் நுழைந்ததும் அங்கு கூட்டமாக நின்றிருந்த பெண்கள் ரகுவீரிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்காக அவர்களை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அனைவரையும் பார்த்து புன்னகைத்த ரகுவீர் கேட்பவர் அனைவருக்கும் தனது ஆட்டோகிராப்பை போட்டுக் கொண்டிருந்தான்.



அப்போது அவன் அருகில் நின்றிருந்த பிரேம் “மச்சான் நீ இந்த பீல்டை விட்டு போய் இரண்டு வருஷம் ஆனாலும் பொண்ணுங்களுக்கு உன்மேல இருக்க கிரேஸ் கொஞ்சம் கூட குறையலடா” என்று அவன் காதில் கிசுகிசுத்தான்.



ரகுவீர் அவனுக்கு பதில் சொல்லாமல் அமைதியாக ஆட்டோகிராப் போட்டுக் கொண்டிருந்தான்.



அப்போது அவனுக்கு சற்று பின்னால் இருந்து ஆத்விக்கின் பெயர் சொல்லி பெண்கள் கத்துவது அவன் காதில் விழுந்தது. அவன் பெயர் காதில் விழுந்ததும் ரகுவீரின் உடல் ஒரு கணம் விறைத்தது.



ஆழ்ந்த மூச்செடுத்து அவன் தன்னைத்தானே அமைதிப்படுத்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த விஸ்வநாதன் “வெல்கம் ரகு” என்றார்.



அவரைப் பார்த்து தலையசைத்த ரகுவீர் அவர் முகத்தை உற்றுப் பார்த்தபடி “இந்த இடத்தை மீட்டிங் பிளேஸா சூஸ் பண்ண ஏதாவது காரணம் இருக்கா?” என்று கேட்டான்.



அவன் பார்வையே விஸ்வநாதனை பயப்படுத்தியது.



ஆனால் தன்னுடைய பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “அதெல்லாம் எதுவும் இல்ல… நீதான் அமிர்தா இந்த ப்ராஜெக்ட்ல இன்வால் ஆக மாட்டான்னு சொல்லிட்ட இல்லையா… அதனால ஆத்விக் கூட பாடறதுக்கு வேற ஒரு புது முகத்தை செலக்ட் பண்றதுக்காக இன்னைக்கு இங்க ஒரு ஆடிஷன் ஏற்பாடு பண்ணி இருக்கு… இந்தக் காலேஜ் பிரின்ஸ்பல் என்னோட பிரண்ட்… சோ நான் இன்னைக்கு நமக்கு ஆடிட்டோரியம் வேணும்னு கேட்டதும் உடனே ஓகே சொல்லிட்டாரு… அதனாலதான் இந்த இடத்தை செலக்ட் பண்ணன்… மத்தபடி வேற காரணம் எதுவும் இல்லை” என்றார்.



அவர் சொன்னதை கேட்ட ரகுவீருக்கு அது உண்மையான காரணமாக இருக்கும் என்று தோன்றவில்லை.



அவர்கள் பேசுவதை கேட்டபடி அங்கு வந்த ஆத்விக் “குட் செலெக்ஷன் விஸ்வநாதன் சார்” என்று சொல்லி ரகுவீரை வெறுப்பேற்றினான்.



அவன் தன்னை வெறுப்பேற்ற தான் அவ்வாறு சொல்கிறான் என்று புரிந்த ரகுவீர் கோபத்தில் தன் பல்லை கடித்தபடி ஆத்விக்கை முறைத்துப் பார்த்தான்.



‘ஐயையோ வந்தவுடனே ஆரம்பிச்சுட்டானுங்களே…’ என்று நினைத்த விஸ்வநாதன் பிரேமிற்கு அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து வரும்படி கண்ணைக் காட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.



மறுபுறம் சங்கமித்ரா சந்தோஷமாக அந்த கல்லூரிக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.



“மித்து யாருக்குமே கிடைக்காத ஒரு பொன்னான வாய்ப்பு உனக்கு கிடைச்சிருக்கு… இந்த ப்ராஜெக்ட்டை மட்டும் நீ சக்சஸ்ஃபுல்லா கோஆர்டினேட் பண்ணி முடிச்சிட்டா உனக்கு கம்பெனியில நல்ல பேர் கிடைச்சிடும்… அதுக்கு பிறகு இதே மாதிரி நிறைய ப்ராஜெக்ட் உனக்கு கொடுப்பாங்க… அதனால இந்த ப்ராஜெக்ட்டை எப்படியாவது வெற்றிகரமா முடிச்சிடணும்” என்று தனக்குத்தானே முணுமுணுத்தபடி சங்கமித்ரா கல்லூரிக்குள் நுழைந்தாள்.



உள்ளே வந்தவளின் பார்வையில் ஆத்விக் விழுந்தான்.



“அடியாத்தி… இவனா? அன்னைக்கு இவனையும் அந்த இன்னொரு மான்ஸ்ட்டரையும் பார்த்ததால தான் என்னால இன்டர்வியூ அட்டென்ட் பண்ண முடியாம போயிடுச்சு… இவனுங்க ரெண்டு பேருமே எனக்கு அன்லக்கி ஃபெலோஸ்… நான் மொதமொதல்ல வேலைக்கு வந்த நேரத்துல இவன் முகத்துலையா முழிக்கணும் ஒருவேளை இவனுங்களை பார்த்துட்டு போனதால அன்னைக்கு வேலை கிடைக்காத மாதிரி… இன்னைக்கு கிடைச்ச வேலை கைவிட்டு போயிடுமோ… இல்ல… இல்ல… அப்படி மட்டும் நடந்து விடக்கூடாது… “என்று நினைத்தவள் ஒரு கணம் கூட தாமதிக்காமல் சட்டென்று அருகே இருந்த மரத்தின் பின்னால் மறைந்து கொண்டாள்.



“கடவுளே… இவன் கண்ணுல நான் பட்டுடவே கூடாது… இவன் இப்போவே இங்கிருந்து போயிடணும்… இந்த வேலை எனக்கு ரொம்ப முக்கியம்… இந்த கடன்காரனை பார்த்ததால என் வேலை போயிடுச்சுன்னா அதுக்கு பிறகு நான் உன்னை சும்மா விடமாட்டேன்…. முதல்ல நீங்க இவனை இங்க இருந்து அனுப்புங்க” என்று சங்கமித்ரா கடவுளிடம் பலமாக வேண்டிக் கொண்டாள்.



அவள் வேண்டுதலுக்கு கடவுள் செவி சாய்த்தது போல உடனே ஆத்விக் அங்கிருந்து சென்றுவிட்டான். அவன் சென்றதைப் பார்த்த பிறகு தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.



“அப்பாடி… மான்ஸ்டர் போய் தொலைஞ்சிட்டான்… இனி நான் பயப்பட வேண்டிய அவசியமில்லை” என்று சொல்லிவிட்டு செல்பவனின் முதுகையே பார்த்தபடி அடியெடுத்து வைத்தவள் சட்டென்று வழுக்கி விழுந்தாள்.



“ஐயோ… அம்மா” என்று கத்தியபடி விழுந்தவள் கீழே பார்த்த போது தான் தண்ணீர் கொட்டி கிடந்த பாலித்தீன் கவரின் மீது கவனம் இல்லாமல் கால் வைத்தது தெரிந்தது.



“இவனை பார்த்து தொலைச்சிட்டோமே… நிச்சயம் ஏதாவது நடக்கும்னு நான் அப்போவே நினைச்சேன்… நான் நெனச்ச மாதிரியே நடந்துருச்சு” என்று முனகியவள் எழுந்து நின்றாள்.



அவள் கீழே விழுந்ததில் அவள் உடை முழுவதும் மண்ணாகி இருந்தது. அவள் கைகளிலும் மண் படிந்திருந்தது. மேலும் ஓரிடத்தில் லேசாக சிராய்த்திருந்தது.



அதை கவனித்தவள் ஆத்விக்கை திட்டியபடியே தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள அருகே இருந்த ரெஸ்ட் ரூமை நோக்கி சென்றாள்.



"முதல் முதல்ல வேலைக்கு வரும் போதே இப்படி அடிபட்டுடிச்சே... இது எல்லாத்துக்கும் அவன்தான் காரணம்... அவனை பார்த்ததால தான் எனக்கு இப்படி அடிபட்டுடிச்சி" என்று புலம்பிக்கொண்டே தன் உடையை சுத்தப்படுத்தியவள் பின்னர் கையை ஓடும் நீரின் முன்பு காட்டினாள்.



அப்போது அங்கிருந்த அமிர்தா "எஸ்கியூஸ் மீ... உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமா?" என்று கேட்டாள்.



சங்கமித்ரா புலம்புவதை கவனித்தவள் அவளுக்கு ஏதாவது உதவி தேவைப்படுமோ என்று நினைத்துதான் கேட்டாள்.



அப்போதுதான் சங்கமித்ரா அந்த அறையில் வேறொரு பெண் இருப்பதையே கவனித்தாள்.



'அடச்சே... ஆள் இருக்கறதை கவனிக்காம நாம பாட்டுக்கு புலம்பிகிட்டு இருந்துருக்கோமே... அவங்க நம்மளை பத்தி என்ன நினைத்திருப்பாங்க' என்று மனதிற்குள் தன்னைத்தானே திட்டிக் கொண்டவள் அமிர்தாவை பார்த்து சங்கடத்துடன் சிரித்தபடி "நோ... தேங்க்ஸ்" என்றாள்.



"ஓஹ்... அப்படியா... "



"எனக்கு ஹெல்ப் வேணுமான்னு அக்கறையா கேட்டதுக்கு தேங்க்ஸ்..."என்று சங்கமித்ரா சொல்லும் போதே அவளின் போன் ஒலித்தது.



வேகமாக போனை எடுத்து காதில் வைத்தவள் "இதோ வந்துட்டேன் சார்... காலேஜ்ல தான் இருக்கேன்... இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவேன்" என்று பேசியபடி அங்கிருந்து சென்றுவிட்டாள்.



அதேநேரம் தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர ரகுவீருக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. எனவே அவன் பிரேமை ஆடிட்டோரியத்திற்கு செல்ல சொல்லிவிட்டு ரெஸ்ட் ரூமை நோக்கி சென்றான்.



அப்போது அந்த வழியாக வந்த சங்கமித்ராவின் பார்வையில் ரகுவீர் விழுந்தான்.



அவனைப் பார்த்ததும் “ஐயோ… இவனையும் பார்த்துட்டேனே… இன்னைக்கு நிச்சயம் எனக்கு ரொம்ப மோசமான நாளாக தான் இருக்க போகுது போல” என்று முணுமுணுத்தவள் அவன் பார்வையில் படும் முன்பு திரும்பி அவனுக்கு எதிர்ப்புற திசையில் நடக்கத் தொடங்கினாள்.



அந்தப் பாதை முடிந்த இடத்தில் இரண்டு வழிகள் இருந்தன.



“ஐயோ கடவுளே… இதுல எது ஆடிட்டோரியத்துக்கு போற வழி என்று தெரியலையே… சரி ஏதாவது ஒன்னுல போய் பார்ப்போம்” என்று நினைத்தவள் அதில் ஒரு வழியை தேர்வு செய்து அந்த வழியாக செல்லத் தொடங்கினாள்.



சிறிது தூரம் சென்ற பிறகு ஒரு வளைவு வந்தது. அதில் திரும்பி நடக்க தொடங்கியவளுக்கு ஏற்கனவே இந்த வழியில் வந்தது போல தோன்றியது.



“என்ன இது… முன்னாடி வந்த வழி மாதிரியே இருக்கு” என்று அவள் நினைக்கும் போதே அவளுக்கு பக்கவாட்டில் இருந்த ஒரு அறை கதவை திறந்து கொண்டு ரகுவீர் வெளியே வந்தான்.



அவனைப் பார்த்ததும் அவள் பேய் அடித்தது போல ஸ்தம்பித்து நின்றாள். அதே நேரம் ரகுவீரும் திகைத்தான்.



“ஏய் நீ இங்க என்ன பண்ற?” என்று ரகுவீர் கோபமாக கேட்டான்.



“அதை பற்றி உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்ல”



“ஏய் என்ன? என்னை பாலோ பண்ணிக்கிட்டு வரியா? ஒரு பணக்காரனை பார்த்தா போதுமே உடனே அவன் பின்னாடி சுத்த ஆரம்பிச்சிடுவீங்களே” என்று ரகுவீர் அபாண்டமாக அவள் மீது பழிபோட்டான்.



அவன் எப்போதும் இது மாதிரி பெண்களிடம் பேசமாட்டான். ஆனால் ஆத்விக்கிடம் காட்ட முடியாத கோபத்தை தன்னை அறியாமலே அவன் சங்கமித்ராவிடம் காட்டிக் கொண்டிருந்தான்.



அவன் சொன்னதை கேட்ட சங்கமித்ராவிற்கு கோபம் வந்தது.



“ஆமா… நீ பெரிய ஆணழகன்… உன் பின்னாடி சுத்துறதை தவிர எனக்கு வேற வேலையே இல்ல பாரு… ஆனாலும் உன்னை பத்தி நீ ரொம்ப ஓவரா தான் கற்பனை பண்ணி வச்சிருக்க… உனக்கெல்லாம் அவ்வளவு சீன் இல்ல… புரியுதா?”



அவள் சொன்னதைக் கேட்டுக் கோபமடைந்த ரகுவீர் சட்டென்று அவளின் கையைப் பிடித்து தனக்கருகே இழுத்தவன் “என்னடி சொன்ன? எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே இப்படி பேசுவ?” என்று கோபமாக கேட்டான்.



கோபத்தில் சிவந்திருந்த அவன் கண்களைப் பார்த்த சங்கமித்ராவிற்கு சற்று பயமாக தான் இருந்தது.



ஆனாலும் அவள் தன் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “நான் எதுவும் தப்பா பேசலையே… நீ பேசினதுக்கு தான் பதிலடி கொடுத்தேன்” என்று நிமிர்யுடன் சொன்னாள்.



அப்போது ரகுவீரின் போன் ஒலித்தது. பிரேம் தான் போன் செய்iதான்.



போனை எடுத்து “சரி… உடனே வரன்” என்றவன் சங்கமித்ராவை உதறித் தள்ளிவிட்டு “நீ பேசின பேச்சுக்கு நான் உன்னை உண்டு இல்லைன்னு பண்ணி இருப்பேன்… ஏதோ உன் நல்ல நேரம் நீ தப்பிச்சுட்ட… என் மனசு மாறுறதுக்குள்ள ஒழுங்கா இங்க இருந்து ஓடிடு… இனி ஒருமுறை என் கண்ணுல பட்ட அதுக்குப் பிறகு நடக்கறதுக்கு நாம் பொறுப்பில்ல” என்றவன் அவளை திரும்பிக் கூட பார்க்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.
 
  • Like
Reactions: Indhumathy

kkp29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
36
12
8
Tamilnadu

தவிப்பு - 6 :



ரகுவீர் ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்த போது ஆத்விக் ஏற்கனவே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தான். ரகுவீர் அவனை முறைத்தபடியே தன் இருக்கையில் சென்று அமர்ந்தான்.



“வெல்கம் கைஸ்… ரொம்ப நாள் கழிச்சு உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பாக்கறதுல ரொம்ப சந்தோஷம்” என்று விஸ்வநாதன் சொன்னார்.



அவர் பேச்சை பாதியிலேயே தடுத்து நிறுத்திய ரகுவீர் “பேச்சை நிறுத்திட்டு இன்னும் எத்தனை நாளுக்குள்ள ப்ராஜெக்ட்டை கம்ப்ளீட் பண்ணனும்னு சொல்லுங்க” என்று எரிச்சலுடன் கேட்டான்.



“அட என்ன ரகு… எதுக்கு இப்போ இவ்ளோ கோபம்? இங்க பாரு… உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இப்போ டர்ம்ஸ் சரியில்லன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா அது என்னோட ப்ராஜெக்டை பாதிக்காம பாத்துக்கோங்க… இந்த ப்ராஜெக்ட்டை நீங்க இன்னும் ஒரு மாசத்துக்குள்ள முடிச்சாகணும்”



“அட நீங்க சொன்னா ஒரு மாசத்துக்குள்ள இந்த ப்ராஜெக்ட்டை முடிக்க நான் ஒத்துப்பேன்னு நினைக்கிறீங்களா?” என்று ஆத்விக் அலட்சியமாக கேட்டான்.



அவன் சொல்லி முடித்த அடுத்த கணம் “நான் இதுக்கு ஒத்துக்கறேன்” என்று ஆத்விக்கை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தபடி ரகுவீர் சொன்னான்.



இப்போது ஆத்வக்கை எரிச்சல் படுத்துவது அவன் முறை.



அவன் சொன்னதை கேட்ட ஆத்விக் அவனை உயிரோடு தின்றுவிட விரும்புபவனைப் போல முறைத்து பார்த்தான். அவனுக்கு வந்த கோபத்திற்கு அவன் உடனே அங்கிருந்து செல்ல விரும்பினான். அதற்கு மேல் அங்கிருந்து தன் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.



அவன் என்ன நினைக்கிறான் என்பதை யூகித்த விஸ்வநாதன் தன்னுடைய அடுத்த அஸ்திரத்தை பயன்படுத்தினார்.



அவன் கோபத்தை கண்டுகொள்ளாதவரை போல “அப்புறம் ஆத்விக்… இந்த முறை அமிர்தா இந்தப் ப்ராஜெக்ட்ல இன்வால்வ் ஆக மாட்டான்னு ரகு சொல்லிட்டான்… அதை பத்தி நீ என்ன நினைக்கிற” என்றார்.



அமிர்தாவின் பெயரை கேட்டதும் ஒரு கணம் அவன் உடல் விறைத்தது.



உடனே சமாளித்துக் கொண்டவன் “அட …அவ இல்லனா இன்னொருத்தி வந்து பாட போறா… இந்த மாதிரி யூஸ்லெஸ் திங்ஸ் பத்தி யோசிச்சு நான் என்னோட டைம் வேஸ்ட் பண்ண விரும்பல” என்று ஆத்விக் உணர்ச்சியற்ற முகத்துடன் சொன்னான்.



ஆனால் அதே நேரம் அவன் மனம் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அவன் இந்த ப்ராஜெக்ட்டை ஒத்துக்கொள்ள சம்மதித்ததற்கு மிக முக்கிய காரணம் அவளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக தான். அவளைப் பார்த்து அவளுடன் தனது உறவை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள அவளைப் பார்க்க விரும்பவில்லை. தன் கோபத்தை எல்லாம் அவள் மீது கொட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவளை பார்க்க நினைத்தான். ஆனால் அவன் மனம் புரிந்தது போல ரகுவீர் இந்தப் ப்ராஜெக்ட்டில் அவளை இன்வால்வ் ஆகாமல் தடுத்து விட்டான்.



அதேநேரம் அவன் சொன்னதை கேட்ட ரகுவீர் “பார்த்து பேசு… இல்லன்னா” என்று கோபமாக சொன்னபடி தன் இருக்கையை விட்டு எழுந்தான்.



அப்போது அவன் கையை பிடித்து தடுத்து நிறுத்திய பிரேம் “ரிலாக்ஸ் ரகு… அவன் உன்னை கோபப்படுத்த தான் அந்த மாதிரி எல்லாம் பேசறாண்டா… நீ கோபப்பட்டு அவனை ஜெயிக்க வச்சிடாத” என்று அவன் காதில் கிசுகிசுத்தான்.



அவன் சொன்னது உண்மை என்பதால் ரகுவீர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக அமர்ந்தான்.



“இங்க பாருங்க காய்ஸ்… எதுக்காக இப்போ சின்ன பசங்க மாதிரி சண்டை போடறீங்க” என்ற விஸ்வநாதன் “ஆத்விக், அமிர்தா பொசிஷனுக்கு இன்னைக்கே இன்னொரு ஆளை செலக்ட் பண்ணி ஆகணும்… ப்ளீஸ் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் அதை பண்ணனும்… அதனால ரெண்டு பேரும் கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோங்க… அப்புறம் நான் இந்த ப்ராஜெக்ட் முடியுற வரைக்கும் உங்களுக்கு வேண்டியதை ஏற்பாடு பண்ணிக் கொடுக்க எங்க கம்பெனி சார்பா ஒரு கோஆர்டினேட்டரை ஏற்பாடு பண்ணியிருக்கேன்… இதோ இவங்கதான் அது” என்றவர் யாரையோ உள்ளே வருமாறு சைகை செய்தார்.



அவர் சைகை செய்ததும் உள்ளே வந்த சங்கமித்ரா ரகுவீர் மற்றும் ஆத்விக்கை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாள்.



‘ஐயோ கடவுளே… என்ன இது? இவனுங்க கண்ணுல பட்டுடவே கூடாதுன்னு நான் ஓடி ஒளிஞ்சா நீ இவனுங்களுக்கே என்னை கோஆர்டினேட்டரா இருக்க மாதிரி பண்ணியிருக்கியே… இதெல்லாம் நியாயமா?’ என்று முணுமுணுத்தாள்.



அதேநேரம் சங்கமித்ராவை பார்த்த ஆத்விக் மற்றும் ரகுவீர் இருவருமே திகைத்தனர்.



“மிஸ் சங்கமித்ரா… மீட் மிஸ்டர் ஆத்விக் அண்ட் ரகுவீர்… இவங்க தான் தமிழ் ராக்கர்ஸ் டீமோட ரெண்டு பில்லர்ஸ்… நீங்க இன்னும் ஒரு மாசத்துக்கு இவங்க கூட தான் ஒர்க் பண்ண போறீங்க” என்று விஸ்வநாதன் மகிழ்ச்சியுடன் சொன்னார்.



“என்னது? இவதான் எங்களுக்கு கோஆர்டினேட்டரா இருக்க போறாளா? இல்ல… இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்” என்று ரகுவீர் கோபமாக சொன்னான்.



“ஏன் ரகு இப்படி சொல்ற? சங்கமித்ரா ரொம்ப திறமையான பொண்ணு… நிச்சயம் இவ உங்களுக்கு வேண்டியதை திறம்பட செஞ்சு கொடுப்பா” என்று விஸ்வநாதன் சொன்னார்.



ரகுவீர் அந்தப் பெண்ணை எந்த அளவிற்கு வெறுக்கிறான் என்பது அவன் அவளை பார்க்கும் பார்வையிலே ஆத்விக்கிற்கு புரிந்தது. இப்போது ரகுவீரை வெறுப்பேற்றுவது அவன் முறை.



எனவே சங்கமித்ராவின் முன்பு கையை நீட்டியவன் “நைஸ் டு மீட் யு சங்கமித்ரா… விஸ்வநாதன் சாரே உங்களை ரெகமெண்ட் பண்றார்னா… நீங்க நிச்சயமா திறமைசாலியா தான் இருக்கணும்” என்றான்.



அவனைத் திகைப்புடன் பார்த்த சங்கமித்ரா அவனுடன் கை குலுக்கியபடி “தேங்க்யூ சார்… நீங்க எனக்கு சப்போர்ட் பண்ண மாட்டீங்கன்னு நான் நினைச்சேன்” என்றாள்.



“அன்னைக்கு நடந்ததை நான் எப்போவோ மறந்துட்டேன்… அப்புறம் நீங்க என்ன சார்னு எல்லாம் கூப்பிடாதீங்க… ரொம்ப வயசான மாதிரி பீல் கிடைக்குது… பேர் சொல்லியே கூப்பிடுங்க” என்று கோபத்தில் தன் கைமுஷ்டியை இறுக்க மூடியிருந்த ரகுவீரை ஓரக்கண்ணால் பார்த்தபடி சொன்னான்.



“ஓகே மிஸ்டர் ஆத்விக்”



அவர்கள் இருவரையும் எரித்து விட விரும்புபவனை போல பார்த்த ரகுவீர் அடுத்த கணம் அங்கிருந்து செல்ல ஆரம்பித்தான்.



அதை பார்த்து பதற்றமடைந்த விஸ்வநாதன் "டேய் பிரேம்... போய் அவனை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வா" என்றார்.



ஆனால் அவர் சொல்வதற்கு முன்பே பிரேம் ரகுவீரின் பின்னால் ஓடியிருந்தான்.



வேகமாக சென்று ரகுவீரின் கையை பிடித்து அவனை தடுத்து நிறுத்தியவன் "ஏன் மச்சான் இப்படி பண்ற?" என்று சலிப்புடன் கேட்டான்.



"அந்த பொண்ணு கோஆர்டினேட்டரா இருக்கறதுல எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்ல... அவ கோஆர்டினேட்டரா இருந்தா நான் இந்த ப்ரொஜெக்ட்டை பண்ண மாட்டேன்"



"ஏன்டா அந்த பொண்ணு கோஆர்டினேட்டரா இருக்கறதுல உனக்கென்ன பிரச்சனை? நீ இதுக்கு முன்னாடி அந்தப் பொண்ணை மீட் பண்ணி இருக்கியா?"என்று பிரேம் யோசனையுடன் கேட்டான்.



"ஹ்ம்ம்... அவ சரியான திமிர் பிடிச்சவடா" என்ற ரகுவீர் அவளை தான் சந்தித்த இரண்டு தருணங்களையும் பற்றி சொன்னான்.

அவன் சொன்னதை கேட்ட பிரேம் அவனை முறைத்து பார்த்தான்.



"ஏன்டா இப்போ என்னை முறைக்கிறா?"



"முறைக்காம என்ன பண்ணுவாங்க... நீ பண்ணியிருக்க வேலைக்கு அந்த பொண்ணு தான் உன்கூட வேலை பார்க்க விரும்பலைன்னு சொல்லணும்... முதல் முறை அந்த பொண்ணு கீழ விழ நீயும் ஒரு காரணமா இருந்திருக்க... அதுக்கு ஒரு சாரி கூட சொல்லாம அந்த பொண்ணு கிட்ட செக்கை நீட்டின தன்மானம் உள்ள எந்த பொண்ணும் அப்படிதான் பண்ணுவ... ரெண்டாவது முறையும் நீதான் தேவையில்லாம அந்த பொண்ணு மேல அக்கியூஸ் பண்ணி இருக்க... அதுக்கு அவ பதிலடி கொடுத்திருக்கா... அவ்வளவுதான்... இதுக்காக எல்லாம் நீ அந்த பொண்ணு கூட ஒர்க் பண்ண மாட்டேன்னு சொல்லுவியா? இங்க பார்... ஆத்விக் மாதிரி நீ ஒன்னும் முன்கோபக்காரன் கிடையாது... எது சரி? எது தப்புன்னு? உனக்கே தெரியும்... ஆனா நடந்ததை மறந்துட்டு அவனே அவளுக்கு ஓகே சொல்லிட்டான்... ஆனா நீ பிடிவாதம் பிடிக்கிற... இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல... எங்க ரகு இந்த மாதிரி நடந்துக்கறவன் இல்லையே"



பிரேம் சொன்னதை கேட்ட ரகுவீருக்கு சங்கடமாக இருந்தது. அவன் சொல்வது உண்மை என்பதால் ஒரு கணம் என்ன சொல்வதென்று தெரியாமல் அவன் அமைதியாக இருந்தான்.



சில நிமிடங்களுக்கு பிறகு "அவன் ஒன்னும் நடந்ததை மறந்து அவளுக்கு ஓகே சொல்லல... என்னை வெறுப்பேத்த தான் அவளுக்கு ஓகே சொன்னான்" என்றான்.



"இருந்துட்டு போகட்டும்... நீ கூட தான் அவனை வெறுப்பேத்த ஒரு மாசத்துல ப்ரொஜெக்ட்டை முடிக்க ஓகே சொன்ன... அது சரின்னா... இது சரிதான்... ஒழுங்கா உள்ள வா" என்ற பிரேம் ரகுவீரின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.



அவர்கள் உள்ளே நுழையும் போது ஆத்விக்கும் சங்கமித்ராவும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை முறைத்தபடி ரகுவீர் மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தான்.



"ஓகே காய்ஸ்... அமிர்தா பொசிஷனுக்கு யார் சூட் ஆவாங்கன்னு தோணுதோ அவங்களை செலக்ட் பண்ணிடுங்க... சங்கமித்ரா உங்களுக்கு உதவியா இருப்பா... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... நான் கிளம்புறேன்" என்று விஸ்வநாதன் சொன்னதும் அவர்கள் இருவரும் தலையசைத்தனர்.





பின்னர் விஸ்வநாதன் சங்கமித்ராவை தன் பின்னால் வரும்படி சைகை செய்தார். அவளும் அவரை பின்தொடர்ந்து சென்றாள்.



சிறிது தூரம் சென்றதும் "மிஸ் சங்கமித்ரா இந்த கொஞ்ச நேரத்துலேயே அவங்களை பத்தி உங்களுக்கு கொஞ்சம் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்... அவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் கொஞ்சம் டர்ம்ஸ் சரியில்ல... சோ அவங்க என்ன பண்ணினாலும் நீங்கதான் கொஞ்சம் பொறுமையா ஹாண்டில் பண்ணனும்... அட் எனி காஸ்ட் இன்னும் ஒரு மாசத்துல இந்த ப்ராஜெக்ட் முடியணும்... புரிஞ்சிதா?" என்றார்.



அவர் ரகுவீர் மற்றும் ஆத்விக்கிற்கு இடையே உள்ள ஈகோவால் தான் சங்கமித்ராவுடன் வேலை பார்க்க ரகுவீர் விரும்பவில்லை என்று நினைத்தார். அவளுக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் பற்றி அவருக்கு தெரியாது.



"ஓகே சார்... நிச்சயம் நீங்க சொன்ன டைம்குள்ள இந்த ப்ரொஜெக்ட்டை முடிச்சிடலாம் சார்"



"ஆல் தி பெஸ்ட்"என்ற விஸ்வநாதன் அங்கிருந்து சென்றுவிட்டார்.



பெருமூச்சை வெளியேற்றிய சங்கமித்ரா உள்ளே வந்தாள்.

அடுத்த சிறிது நேரத்தில் ஆடிஷன் தொடங்கியது. ஆத்விக்கிற்கு பிடித்தால் ரகுவீருக்கு பிடிக்கவில்லை. ரகுவீருக்கு பிடித்தால் ஆத்விக்கிற்கு பிடிக்கவில்லை. நூறு பேருக்கும் மேல் ஆடிஷன் செய்தும் அமிர்தாவின் பொஷிஷனுக்கு இருவரும் இணைந்து ஒருவரையும் தேர்வு செய்யவில்லை.



காலை முடிந்து மதியம் வந்துவிட்டது. எனவே உணவு இடைவேளை விடப்பட்டது. ரகுவீர் மற்றும் பிரேம் இருவரும் அருகே உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வருவதாக சொல்லி சென்றனர். ஆத்விக்கின் வீடு அங்கிருந்து பக்கம் என்பதால் அவன் சாப்பிட தன் வீட்டிற்கு சென்றுவிட்டான்.



அவர்கள் சென்றதும் சங்கமித்ரா ஒரு ஓரமாக சென்று அமர்ந்து தன் தலையை பிடித்துவிட தொடங்கினாள். அவளுக்கு பயங்கரமாக தலை வலிக்க தொடங்கியது. சாப்பிட்டால் தலைவலி சற்று குறைய வாய்ப்புள்ளது. ஆனால் அவள் இப்போது சாப்பிடும் மனநிலையில் இல்லை.



ரகுவீர் மற்றும் ஆத்விக்கின் செய்கையால் அவள் முற்றிலும் களைப்படைந்து விட்டாள்.



இன்று மதியம் வரை ஆடிஷன் செய்ததில் பலருக்கு நல்ல குரல் வளம் இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் தங்களுக்கிடையே உள்ள ஈகோவால் அனைவரையும் ரிஜெக்ட் செய்துவிட்டனர். ரகுவீர் ஒருவரை செலெக்ட் செய்து பச்சை பட்டனை அடித்தால் ஆத்விக் அடுத்த கணம் சிவப்பு பட்டனை அடித்தான். ரகுவீரும் அவனை போலவே செய்தான். இப்படியே சென்றால் இன்னும் ஒருமாதம் ஆனாலும் பெண் குரலை தேடும் படலமே முடியாது என்று தோன்றியது. பிறகெங்கே அவள் ஒரு மாதத்தில் ப்ராஜெக்ட்டை முடித்து ஆபிஸில் நல்ல பெயர் எடுக்க?



அவள் அதை நினைத்து கவலையுடன் அமர்ந்திருந்த போது யாரோ அவள் அருகில் வந்து அமர்ந்தனர். அவள் திரும்பி பார்த்த போது காலையில் ரெஸ்ட் ரூமில் பார்த்த பெண் அங்கே அமர்ந்திருந்தாள். அவள் வேறு யாருமல்ல. அமிர்தா தான்.



அவளும் காலையில் இருந்து ஒரு ஓரமாக அமர்ந்தபடி நடப்பதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள். அதனால் சங்கமித்ராவின் கவலை அவளுக்கும் புரிந்தது.



ஆனால் எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல் "நீங்க சாப்பிட போகலையா?" என்று கேட்டாள்.



"இல்ல... சாப்பிடற மூடுல நான் இல்ல"



"சாப்பிட பசி இருந்தா போதும்... மூட் தேவையில்ல"



"நல்லா கடிக்கிறீங்க... ஆனா அதை ரசிக்கிற மனநிலையில தான் நான் இல்லை"



"ஏன்?" என்று அமிர்தா கேட்டதும் சங்கமித்ரா தன் மன ஆதங்கத்தை கொட்ட தொடங்கினாள்.



"காலையில இருந்து ரெண்டு ராட்சஷனுங்க கையில மாட்டிக்கிட்டு சிக்கி சின்னபின்னமாகிட்டு இருக்கேன்"என்றவள் அவர்கள் இருவரும் படுத்தும் பாட்டை கூறினாள்.



"இந்த ப்ரொஜெக்ட்டை வெற்றிகரமா முடிச்சிட்டா கம்பெனியில எனக்கு நல்ல பெயர் கிடைக்கும்னு நினைச்சுகிட்டு இருந்தேன்... ஆனா என் நினைப்பெல்லாம் மண்ணோட மண்ணா போச்சு"



"அட எதுக்காக இப்போ எல்லாம் முடிந்த மாதிரி பீல் பண்றிங்க? ரிலாக்ஸா இருங்க" என்று சொல்லிவிட்டு அமிர்தா அவளின் தோளை தட்டினாள்.



"சொல்றது ரொம்ப சுலபம்ங்க... ஆனா அந்த ராட்சஷனுங்க ரெண்டு பேருக்கும் எப்போ ஒரே ஆளை பிடித்து எப்போ கம்போஸ் பண்ணி எப்போ லிரிக்ஸ் எழுதி... ஊஹூம்... நிச்சயம் சார் சொன்ன டைம் குள்ள இந்த ப்ரொஜெக்ட்டை முடிக்கவே முடியாது" என்று புலம்பினாள்.



"இப்போ என்ன... அவங்க ரெண்டு பேரும் இன்னைக்கு நடக்கற ஆடிஷன்ல ஒருத்தரை செலக்ட் பண்ணனும்.. .அவ்வளவுதானே... இருங்க நான் அதுக்கு ஐடியா தரேன்" என்ற அமிர்தா சங்கமித்ராவிற்கு ஒரு சூப்பரான ஐடியாவை கொடுத்தாள்.
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
அனலும் புயலுக்கு நடுவில்
அல்லாடும் பூங்காற்று......
அமிர்தாவின் யோசனை
அப்படி என்னவாக இருந்திருக்கும்????
அவர்கள் இருவரும் சேர்ந்து தேர்ந்தெடுக்க......
 

kkp29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
36
12
8
Tamilnadu
அனலும் புயலுக்கு நடுவில்
அல்லாடும் பூங்காற்று......
அமிர்தாவின் யோசனை
அப்படி என்னவாக இருந்திருக்கும்????
அவர்கள் இருவரும் சேர்ந்து தேர்ந்தெடுக்க......
அவளுக்கு அவங்க ரெண்டு பேரை பத்தியும் நல்லாவே தெரியும். அதனால ஏதாவது பண்ணுவா...
 

kkp29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
36
12
8
Tamilnadu

தவிப்பு - 7 :



ஹோட்டல் சென்றுவிட்டு பிரேமுடன் ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்த ரகுவீரின் பார்வையில் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிவது போல பளிச்சென்ற முகத்துடன் சுற்றிக் கொண்டிருந்த சங்கமித்ரா விழுந்தாள்.



அவளை யோசனையுடன் பார்த்தவன் "ஏன் மச்சான் நாம போகும் போது கப்பல் கவிழ்ந்து போன மாதிரி முகத்தை தொங்கபோட்டுக்கிட்டு இருந்தா... இப்போ என்ன இவ்வளவு சந்தோசமா இருக்கா?" என்று கேட்டான்.



"நீ யாரை பத்தி சொல்றடா?" என்று பிரேம் கேட்டதற்கு கண்களால் சங்கமித்ராவை காட்டினான்.



"நீயும் ஆத்விக்கும் அடிக்கிற லூட்டியை பார்த்து எனக்கே கடுப்பாகுது... பாவம் அந்த பொண்ணு... அதுக்கு டென்ஷன் ஆகாதா? அதான் அப்படி இருந்தா..."



"அதெல்லாம் சரி... இப்போ எதுக்கு சந்தோசமா இருக்கா? இப்போ மட்டும் நாங்க மாறிட்டோமா என்ன?"



"ஏண்டா... நானும் உன்னோட தானே இருக்கேன்... எனக்கெப்படி தெரியும்? வேற ஏதாவது குட் நியூஸ் வந்துச்சுச்சோ என்னவோ? அவ எப்படி இருந்தா நமெக்கென்ன? மச்சான் ப்ளீஸ்டா... சீக்கிரம் ஒரு கேண்டிடேட்டை செலக்ட் பண்ணுடா... என்னால முடியல... அவனை கடுப்பேத்தறன்னு என்னை கடுப்பேத்தாத"



"பார்க்கலாம்... பார்க்கலாம்" என்ற ரகுவீர் பிரேமுடன் தன் இருக்கையில் சென்று அமர்ந்தான்.

சிறிது நேரத்தில் ஆத்விக்கும் வந்துவிட்டான். ஆடிஷன் மீண்டும் தொடங்கியது.



ஆடிஷனை தொடங்குவதற்கு முன்பு அவர்கள் இருவரின் இருக்கைக்கு நடுவில் வந்து நின்ற சங்கமித்ரா "சார் உங்க ரெண்டு பேருகிட்டயும் ஒரு விஷயம் சொல்லணும்" என்றாள்.



அவள் சொன்னதை கேட்ட ரகுவீர் பதில் சொல்லாமல் அவளை பார்த்தான்.



"சொல்லு மித்ரா" என்று ஆத்விக் சொன்னான்.



"சார் அதுவந்து திடீரென்று இந்த ஆடிட்டோரியத்துக்கு வர கரண்ட் லைன்ல ஏதோ பிரச்சனை ஆகிடிச்சி... அதனால ஆடிஷனுக்கு யூஸ் பண்ற க்ரீன் அண்ட் ரெட் லைட்டை இனி யூஸ் பண்ண முடியாது"



அவள் சொன்னதை கேட்ட இருவரும் லைட்டை அடித்து பார்த்தனர். ஆனால் அது எரியவில்லை.



அதில் கடுப்பான ரகுவீர் "இதை போன் பண்ணி சொல்லி இருக்க வேண்டியது தானே... நாங்க அப்படியே கிளம்பி இருப்போமே..." என்றான்.



அவள் பதில் சொல்வதற்குள் "ஓகே மித்ரா... சில சமயங்களில் இந்த மாதிரி நடக்கறதுதான்... ஒன்னு பண்ணுங்க ... மீதி இருக்கவங்களை நாளைக்கு வர சொல்லுங்க" என்று சொன்னபடி ஆத்விக் எழுந்தான்.



"ஐயோ சார்... எங்க கிளம்பறீங்க? வெயிட்... வெயிட்" என்று அவள் பதற்றத்துடன் சொன்னாள்.



"ஏன் மித்ரா வெயிட் பண்ண சொல்றிங்க? இனி எப்படி ஆடிஷன் பண்ண முடியும்? அதான் நான் கிளம்புறேன்"



"சார்... நான் அதுக்கு ஒரு ஏற்பாடு பண்ணிட்டேன்... சோ நாம ஆடிஷனை கன்டினியூ பண்ணலாம்" என்றவள் ஒரு குச்சியில் ஒட்டி வைத்திருந்த சார்ட்டை கொண்டு வந்து ஆளுக்கு இரண்டு கொடுத்தாள்.



அந்த நான்கு குச்சியிலும் ஒட்டி இருந்த சார்ட் மஞ்சள் நிறத்தில் இருந்தது. எழுத்துக்கள் மட்டும் பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் இருந்தன.



அதை வாங்கிப் பார்த்த ஆத்விக் "பெண்டாஸ்டிக் ஐடியா மித்ரா... " என்றான்.



ஆனால் ரகுவீர் அந்த அட்டைகளை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.



அப்போது பிரேம் "பரவாயில்லைடா... விஸ்வநாதன் அங்கிள் சொன்ன மாதிரி புத்திசாலியா தான் இருக்கா... பாரேன் ஒரு பிரச்சனை வந்ததும் என்னமா யோசித்து செயல்படறான்னு" என்று சிலாகித்தான்.



"புத்திசாலி தான்டா... ஆனா மேடம் ஒன்னும் பிரச்சனை வந்த பிறகு அதை சமாளிக்கல... பிரச்சனையை உண்டு பண்ணதே மேடம் தான்னு நினைக்கிறேன்"



"என்னடா சொல்ற?"



"நாங்க ரெண்டு பேரும் அடிச்ச கூத்துல காண்டாகி இவளே லைட்ஸ் எரியாத மாதிரி ஏதோ பண்ணியிருக்கா...அப்புறம் இந்த போர்டை ரெடி பண்ணி இருக்கா... கலரை நோட் பண்ணியா? நாலு போர்டும் சேம் கலர்... நாங்க ஒருத்தருக்கொருத்தர் என்ன போர்டு காட்டறோம்னு அடுத்தவங்க கண்டுபிடிக்க கூடாதுன்னே இப்படி ஒரு ஐடியா பண்ணியிருக்கா"



"சே... சே... அப்படியெல்லாம் நடந்துருக்க வாய்ப்பே இல்லைடா"



"போடா லூசு... நல்லா பாரு ஆடிட்டோரியத்துல லைட்ஸ் எரியுது... ஏசி ஓடுது... அப்படின்னா என்ன அர்த்தம் அந்த பொண்ணு சொன்ன மாதிரி கரண்ட்ல ஏதும் ப்ரோப்ளம் இல்லைனு அர்த்தம்"



"ஏன் ஜெனெரேட்டர்ல கூட இதெல்லாம் ஓடலாமே?"



"போடா லூசு... இவ்வளவும் ஜெனெரேட்டர்ல ஓட வாய்ப்பே இல்ல... ஆனா இப்படி ஒரு ஐடியா இவளுக்கு எப்படி வந்ததுன்னு தான் தெரியல... ஏன்னா இவ எங்க கூட காலைல இருந்து தான் ஒர்க் பண்றா... அதுக்குள்ள எங்களை புரிஞ்சிகிட்டு இப்படி ஒரு ஐடியா பண்ண வாய்ப்பே இல்லை" என்று ரகுவீர் யோசனையுடன் சொன்னான்.



"அப்படியா சொல்ற" என்ற பிரேம் சங்கமித்ராவை பார்த்தான்.



அப்போது அவள் நன்றியுடன் யாரையோ பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் எங்கே பார்க்கிறாள் என்று அவள் பார்வையை பின்தொடர்ந்த பிரேம் அதிர்ந்தான். ஏனென்றால் அங்கே இருந்தது அமிர்தா.



'இவ இங்க என்ன பண்றா? இவளை மட்டும் ரெண்டு பேரும் பார்த்தானுங்க அவ்வளவுதான்... முதல்ல இவளை இந்த இடத்தை காலி பண்ண சொல்லணும்' என்று நினைத்த பிரேம் ஏதுமறியாதவனை போல ரகுவீரிடம் "சரி விடுடா... இப்போ எதுக்கு நீ கண்டதையும் யோசிச்சிகிட்டு இருக்க... ஆடிஷனை ஸ்டார்ட் பண்ணலாம்" என்றவன் சங்கமித்ராவிடம் "சங்கமித்ரா பர்ஸ்ட் கேண்டிடேட்டை வர சொல்லுங்க" என்றான்.



"ஓகே சார்"



ஆடிஷன் மீண்டும் தொடங்கியது. ரகுவீர் மற்றும் ஆத்விக்கின் கவனம் முழுக்க ஆடிஷனில் இருப்பதை உறுதி செய்த பிரேம் ரெஸ்ட் ரூம் சென்று வருவதாக ரகுவீரிடம் சொல்லிவிட்டு அமிர்தாவின் அருகே வந்தான்.



அவனை பார்த்ததும் ஒருநொடி அதிர்ந்த அமிர்தா எழுந்து நின்றாள்.



"நீ இப்படி பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கல அம்மு... ரகு சொன்னதை மீறி நீ எதுக்காக இங்க வந்த?"



"இல்ல அண்ணா... ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதாவது பெரிய பிரச்சனை வந்துடுமோன்னு எனக்கு பயமா இருந்துச்சு... அதான் நானும் வந்தேன்"



"நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கு புரியுது அம்மு... ஆனா நீ ரகு பேச்சை மீறி இங்க வந்திருக்கேன்னு அவனுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவான். அப்புறம் ஆத்விக் அவன் உன்னை பார்த்தா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னே என்னால கெஸ் பண்ண முடியல... சோ ப்ளீஸ் அவனுங்க உன்னை பார்க்கறதுக்கு முன்னாடி நீ கிளம்பு"



"சரிங்க அண்ணா" என்ற அமிர்தா ஷாலை எடுத்து தலையில் முக்காடு போல போட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்ப திரும்பினாள்.



அப்போது பிரேம் "அந்த பொண்ணுக்கு ஐடியா கொடுத்தது நீதானே?" என்று கேட்டான் .



எந்த பெண்ணிற்கு என்று அமிர்தா கேட்கவில்லை. சங்கமித்ராவை பற்றிதான் அவன் சொல்கிறான் என்று அவளுக்கு புரிந்தது.



திரும்பி அவனை பார்த்து சிரித்தவள் "ஆமா" என்றாள்.



"ஆனாலும் உன் அண்ணன் ரொம்ப புத்திசாலி... நிச்சயம் எங்களை பத்தி தெரிஞ்சவங்களால தான் இப்படி ஒரு ஐடியா பண்ண முடியும்னு கரெக்ட்டா கெஸ் பண்ணிட்டான்... சரி நீ பார்த்து பத்திரமா போ" என்றதும் அவள் அங்கிருந்து புறப்பட்டாள்.



பிரேம் மீண்டும் ரகுவீரின் அருகே வந்த போது அவன் எழுந்து நின்றிருந்தான். ஆத்விக்கும் சங்கமித்ராவிடம் விடைபெற்று கொண்டிருந்தான்.



"என்ன மச்சான்... ஆடிஷன் ஓவரா?" என்று பிரேம் கேட்டான்.



"ஆமா... நீ போகும் போது ஒரு பொண்ணு பாடினா இல்லையா? அவ குரல் நல்லா இருக்கு... சோ அவளை செலக்ட் பண்ணியாச்சு... சரி வா கிளம்பலாம்..." என்ற ரகுவீர் பிரேமை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.



ரகுவீருடன் வெளியே வந்த பிரேமிற்கு அப்போதுதான் அமிர்தா சற்று முன்னர் தான் வெளியே கிளம்பியது ஞாபகத்திற்கு வந்தது.



‘ஐயையோ அவ இன்னும் போயிருக்க மாட்டாளே’ என்று நினைத்தவனின் பார்வையில் அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்த அமிர்தா விழுந்தாள்.



என்ன செய்வதென்று ஒரு நொடி யோசித்தவன் “டேய் ரகு” என்று உரத்த குரலில் அழைத்தான்.



அவன் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த அமிர்தா தன் அண்ணனை பார்த்ததும் ஒரு நொடி அதிர்ந்தவள் பின்னர் சட்டென்று அருகே இருந்த அறைக்குள் ஒளிந்து கொண்டாள்.



அதேநேரம் “எதுக்குடா இப்போ கத்துற? நான் உன் பக்கத்துல தானே இருக்கேன்… மெதுவா பேச முடியாதா?” என்று பிரேமை கடிந்து கொண்ட ரகுவீர் என்ன விஷயம்னு சொல்லு?” என்றான்.



“அது… அது வந்து… என்ன விஷயம்னா… போடா நீ திட்டினதுல நான் என்ன சொல்ல வந்தேன்னு மறந்துட்டேன். எனக்கு ஞாபகம் வந்த பிறகு சொல்றேன். சரி சீக்கிரம் வா… நான் உன்ன டிராப் பண்ணிட்டு என்னோட ஆபீஸ் போகணும்” என்றபடி அவனை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்.



அவர்கள் இருவரும் சென்ற பிறகு அந்த அறையை விட்டு வெளியே வந்த அமிர்தா "நல்லவேளை தப்பிச்சோம்டா சாமி" என்று முனகியவள் வேகமாக நடக்க தொடங்கினாள்.



அப்போது அவள் கையில் இருந்த பர்ஸ் தவறி கீழே விழுந்துவிட்டது. ஆனால் அவள் அதை கவனிக்கவில்லை.



அவளுக்குப் பின்னால் வந்த ஆத்விக் கீழே கிடந்த பர்ஸை கவனித்தவன் அதை குனிந்து எடுத்தான்.



‘இது யாரோடதா இருக்கும்?’ என்று அவன் யோசிக்கும் போதே அவனுக்கு முன்னால் ஒரு பெண் செல்வது அவன் பார்வையில் விழுந்தது.



‘ஒருவேளை இந்த பொண்ணோடதா இருக்குமோ?’ என்று நினைத்த ஆத்விக் “ஹலோ மேடம்… உங்க பர்ஸை விட்டுட்டு போறீங்க பாருங்க” என்று கத்தினான்.



ஆத்விக்கின் குரல் கேட்டதும் அமிர்தா அப்படியே நின்றாள். அவன் குரல் அவள் செவிவழி நுழைந்து அவள் இதயத்தை தீண்டி கண்களில் கண்ணீரை பெருக்கெடுக்க வைத்தது. தன் கண்களை மூடி கண்ணீரை கட்டுப்படுத்தியவள் இந்த நிமிடம் அவனை நேருக்கு நேர் சந்திக்க தயாராக இல்லை. எனவே அடுத்த கணம் அவள் ஓட தொடங்கினாள்.



அதைப் பார்த்து ஆத்விக் குழப்பமடைந்தான். அவன் அந்த பர்ஸை தூக்கிப்போட்டு விட்டு அங்கிருந்து செல்லத்தான் நினைத்தான். ஆனால் அவன் உள்ளுணர்வு அந்தப் பெண்ணைப் பின்தொடர சொல்லியது. எனவே அவன் அவளை பின்தொடர்ந்து செல்ல ஆரம்பித்தான்.



ஆத்விக் தன்னை பின் தொடர்வதை கவனித்த அமிர்தா அங்கிருந்த ஸ்டோர் ரூமிற்குள் ஒளிந்து கொண்டாள்.



‘இந்த சைட் தான வந்தா… அதுக்குள்ள எங்க போயிட்டா?’ என்று ஆத்விக் தனக்கு தானே முணுமுணுத்துக் கொண்டிருந்த போது ஸ்டோர் ரூமிற்குள் இருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்டது.



ஆத்விக் வேகமாக சென்று பார்த்த போது ஸ்டோர் ரூமுக்குள் ஒரு பெண் மயங்கி கிடந்தாள். அவள் முகம் முழுக்க சிவப்பு நிற பெயிண்ட் படிந்திருந்தது. அவள் அருகே ஒரு பக்கெட் கிடந்தது. அதை பார்த்தவனுக்கு அந்தப் பெயிண்ட் பக்கெட் அவள் தலையில் விழுந்ததால் தான் அவள் மயங்கி இருக்கிறாள் என்பது புரிந்தது.



‘யார் இந்த பொண்ணுன்னு தெரியலையே… பேசாம வாட்ச்மேன் கிட்ட இன்பார்ம் பண்ணிட்டு போயிடலாமா?’ என்று ஆத்விக் யோசிக்கும் போதே ‘இல்ல… இவ உனக்கு ரொம்ப நெருக்கமானவ’ என்று அவன் உள்ளுணர்வு சொல்லியது.



எனவே அடுத்த கணம் அவன் எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்தப் பெண்ணை தன் கைகளில் தூக்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.



ஆத்விக் அவளை தூக்கிக் கொண்டு வெளியே வந்த போது யாரோ ஒரு பெண்ணை ஆத்விக் கையில் தூக்கிக் கொண்டு வருவதை ரகுவீர் பார்த்தான். அந்தப் பெண்ணின் முகத்தில் பெயிண்ட் படிந்திருந்ததால் அவனால் அவளை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால் ஆத்விக் யாரோ ஒரு பெண்ணை தன் கையில் தூக்கி வருவதை பார்த்தவனின் மனம் கோபத்தில் கொதிக்க ஆரம்பித்தது.



ஆத்விக் அவனை கவனிக்கவில்லை. அவன் அமிர்தாவை தூக்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.
 

kkp29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
36
12
8
Tamilnadu

தவிப்பு – 8 :



அந்தப் பெண்ணை கைகளில் ஏந்தியதில் இருந்து ஏதோ ஒரு உணர்வு அவன் மனதை நச்சரித்துக் கொண்டே வந்தது. ஆனால் ஆத்விக் அதைப் புறக்கணித்துவிட்டு அந்தப் பெண்ணை தன் படுக்கையில் படுக்க வைத்தான்.



அவன் மனது அவளை உணர்ந்து கொண்டது. ஆனால் அவன் மூளை அவளை உணரவில்லை. பாவம்… அது அவனுக்கு தெரியவில்லை.



தன் மன உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவன் அந்த பெண்ணை பார்த்தான். அவள் இன்னும் மயக்கத்தில் தான் இருந்தாள். ஆனால் அவ்வப்போது அவள் மூக்கு சுருங்கி விரிந்து கொண்டிருந்தது. ஒருவேளை அவள் முகத்தில் படிந்திருந்த பெயிண்டின் வாசனையால் அவள் எரிச்சல் அடைந்திருக்கலாம்.



அப்போது அங்கு வந்த டாக்டர் அவளை பரிசோதிக்க ஆரம்பித்தார்.



சிறிது நேரம் அவளை பரிசோதித்தவர் பின்னர் “இன்னும் ஒன்னு இல்ல ரெண்டு மணி நேரத்துல இவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சிடும்” என்றார்.



“என்னது இன்னும் ஒன் ஹவர் ஆகுமா? ஏதாவது பண்ணி சீக்கிரம் மயக்கம் தெளிய வையுங்க… இந்த பொண்ணு யாருன்னே எனக்கு தெரியாது… இன்னும் ரெண்டு மணி நேரம் நான் எப்படி இவ்வளவு பார்த்துக்க முடியும்?” என்று ஆத்விக் டாக்டரிடம் சொன்னான்.



“சார் அப்படியெல்லாம் பண்ண முடியாது.. இவங்களுக்கு தலையில அடிபட்டு இருக்கு… நான் இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன்… எப்படியும் ரெண்டு மணி நேரத்துல கண்ணு முழிச்சிடுவாங்க… அப்புறம் இன்னொரு விஷயம் அதுக்குள்ள அவங்க முகத்துல இருக்க பெயிண்டை ரிமூவ் பண்ணுங்க… இந்த ஸ்மெல் அவங்களுக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்… இதனால அவங்களுக்கு அலர்ஜி மாறி ஏதாவது வந்துட போகுது”



“ஆனா நான் எப்படி அதை பண்ண முடியும்?”



“ஆத்விக் நீங்க தான இந்த பொண்ணை இங்க தூக்கிட்டு வந்தீங்க… அப்போ நீங்க தான் ஏதாவது பண்ணனும்… சரி எனக்கு வேற அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு… நான் கிளம்புறேன்” என்ற டாக்டர் அங்கிருந்து புறப்பட்டார்.



டாக்டர் சென்றதும் என்ன செய்வதென்று ஒரு நொடி யோசித்த ஆத்விக் யாருக்கோ மெசேஜ் அனுப்பிவிட்டு பெருமூச்சை வெளியேற்றினான்.



‘எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல அவ வந்துடுவா… அவ வந்த பிறகு இந்த பொண்ணை அவ கையில ஒப்படைச்சிட்டு நாம நிம்மதியா இருக்கலாம்’ என்று ஆத்விக் நினைத்தான்.



அடுத்த கால் மணி நேரத்தில் அவன் எதிர்பார்த்த பெண் வந்து சேர்ந்தாள். அவளைப் பார்த்ததும் ஆத்விக் புன்னகைத்தான்.



உள்ளே வந்ததும் அவனை கட்டி அனைத்தவள் “அத்து டார்லிங்… எப்பவும் நான் தானே உனக்கு போன் பண்ணுவேன்… என்ன இன்னைக்கு நீ எனக்கு போன் பண்ணி உடனே வீட்டுக்கு வர சொன்ன… என் நம்பர் கூட உன் போன்ல இருக்குன்னு இன்னைக்கு தான்டா எனக்கு தெரிஞ்சது… சரி என்ன விஷயம்னு சொல்லு” என்று பிருந்தா கேட்டாள்.



பிருந்தா ஆத்விக்கின் சிறுவயது தோழி. அவனைப் பற்றி நன்கு அறிந்தவள்.



அவளை தன்னிடமிருந்து தள்ளிவிட்ட ஆத்விக் “இந்த மாதிரி கட்டி பிடிக்காத… என்கிட்ட ப்ளர்ட் பண்ணாதன்னு எத்தன முறை சொல்றது? எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல” என்று பல்லை கடித்தபடி சொன்னான்.



“அட டார்லிங்… லண்டன் போய்ட்டு வந்தும் நீ இன்னும் திருந்தலையா? உனக்கே தெரியும்… என்னால உன்கிட்ட ப்ளர்ட் பண்ணாம உயிர் வாழ முடியாதுன்னு” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்து கண்ணடித்தாள்.



“நீ முதல்ல இந்த மாதிரி டார்லிங் சொல்றதை நிறுத்து”



“இல்ல இல்ல… யூ ஆர் மை டார்லிங்… நான் உன்னை அப்படி தான் கூப்பிடுவேன்”



“சரி… எப்படியோ கூப்பிட்டு தொலை… இப்போ அந்த ரூமுக்கு போ… அங்க ஒரு பொண்ணு இருக்கா… அவ முகத்துல இருக்க பெயிண்டை வாஷ் பண்ணி விடு”



“அத்து டார்லிங் நீ எனக்கு துரோகம் பண்ணிட்டியா? வீட்டுக்கு ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்திருக்கேன்னா நீங்க ரெண்டு பேரும் அவ்ளோ குளோஸா? நான் உனக்காக ரெண்டு வருஷமா காத்துக்கிட்டு இருக்கிறது உனக்கு ஞாபகம் இருக்கா? இல்லையா? அதுசரி யார் அவ? நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைக்கவே இல்ல அத்து” என்றபடி அவள் வராத கண்ணீரை துடைத்தாள்.



“ஏய் ட்ராமா குயின்… போதும் உன் நாடகத்தை நிறுத்திட்டு உள்ள போய் அந்த பொண்ணோட முகத்தை கழுவி விடு… அவ யாருன்னு எனக்கு தெரியாது… நான் ஆடிஷன் போயிட்டு வரும்போது மயங்கி விழுந்து கிடந்தா… அதனால வீட்டுக்கு தூக்கிட்டு வந்தேன்… இன்னும் ஒன்னு இல்ல ரெண்டு மணி நேரத்துல அவளுக்கு மயக்கம் தெளிஞ்சுடும்னு டாக்டர் சொல்லி இருக்கார். அதனாலதான் அவளுக்கு துணையாக இருக்க நான் உன்னை வரவைச்சேன்…”



“அதுக்காக தான் நீ என்னை கூப்பிட்டியா? ஆசையா கூப்பிடவில்லையா? ஐ ஹேட் யூ டார்லிங்”



“ரொம்ப சந்தோஷம்… நீ இவ்வளவு நேரம் பேசினதிலேயே எனக்கு இந்த வார்த்தை தான் ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொல்லிவிட்டு ஆத்விக் அவளை பார்த்து கண்ணடித்தான்.



“போடா” என்றபடி அவன் தோளில் ஒரு அடி போட்ட பிருந்தா பின்னர் உள்ளே சென்று அமிர்தாவின் முகத்தை சுடுதண்ணீரில் கழுவி விட்டாள்.



அமிர்தாவின் முகத்தை பார்த்ததும் ஒரு கணம் திகைத்தவள் பின்னர் தன் கண்களை பலமுறை சிமிட்டி இது உண்மையிலேயே அமிர்தாவா அல்லது வேறு யாராவதா என்று உறுதிப்படுத்தினாள்.



‘அமிர்தா… இது அவதான்னு ஆத்விக்கிற்கு தெரியுமா?’ என்று தனக்குத்தானே முணுமுணுத்தவள் யோசனையுடன் வெளியே வந்தாள்.



‘என்ன பிருந்தா? அவ முகத்தை வாஷ் பண்ணிட்டியா?”



அவனைப் பார்த்து தலையசைத்தவள் பின்னர் அவன் முகத்தை உற்றுப் பார்த்தபடி “அத்து நீ நிஜமாகவே அவ யார் என்று தெரியாமல் தான் ஹெல்ப் பண்ணியா?” என்று கேட்டாள்.



“ஆமா… ஏன் அப்படி கேக்கற?”



“உள்ள போய் பாரு… நான் ஏன் அப்படி கேட்கிறேன்னு உனக்கே புரியும்… அதுக்குள்ள நான் போய் நமக்கு காபி போட்டு கொண்டு வரேன்” என்ற பிருந்தா சமையலறையை நோக்கி சென்றாள்.



“இவ என்ன சொல்லிட்டு போறா?’ என்று குழம்பிய ஆத்விக் உள்ளே சென்று பார்த்தான்.



தன் படுக்கையில் படுத்திருந்தவளின் முகத்தை பார்த்தவனால் அவள் முகத்தை விட்டு பார்வையை திருப்ப முடியவில்லை. கண்ணை கூட சிமிட்டாமல் அவன் அமிர்தாவின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான். தன் வாழ்நாள் முழுவதும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட முகம் அது. ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது.



அதை நினைத்ததுமே அவன் மனது வலிக்க தொடங்கியது. கண்களில் நீர் கோர்க்கத் தொடங்கியது. ஆனால் மறுகணம் தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டவன் உணர்ச்சியற்ற முகத்துடன் அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.



எவ்வளவு நேரம் சென்றதோ? பிருந்தாவின் காலடி சத்தத்தில் தான் அவன் தன்னிலைக்கு திரும்பினான்.



அவள் நீட்டிய காபியை வாங்கிக் கொண்டவன் “எனக்கு யாருன்னு தெரியல… உனக்கு தெரியுமா என்ன?” என்று இயல்பாக கேட்டபடி அந்த அறையை விட்டு வெளியேற தொடங்கினான்.



“நீ என்கிட்டயும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல… உன்னையும் பொய் சொல்லி ஏமாத்திக்க வேண்டிய அவசியம் இல்ல… காப்பியை குடி” என்றபடி பிருந்தா அவனை பின்தொடர்ந்து சென்றாள்.



அதேநேரம் தன் வீட்டை அடைந்த ரகுவீர் “அம்மு” என்று குரல் கொடுத்தான்.



ஆனால் யாரும் பதில் அளிக்கவில்லை. அப்போது ஒரு வேலைக்காரன் வந்து அமிர்தா காலையிலேயே வீட்டை விட்டு சென்றுவிட்டதாக சொல்லி சென்றார்.



‘என்னது காலையிலேயே வீட்டை விட்டு போயிட்டாளா?’ என்று முனகியவன் அவளுக்கு போன் செய்தான்.



ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை.



மறுபுறம் அமிர்தாவின் போன் அடிப்பதை பார்த்த பிருந்தா “அத்து யாரோ அவளுக்கு போன் பண்ணிகிட்டே இருக்காங்க… இங்க பாரு ஏழு மிஸ்டு கால்ஸ் காட்டுது… ஏதாவது அவசரமா இருக்க போகுது… போனை எடுத்து அவ இங்கதான் இருக்காங்கன்னு சொல்லு’ என்று கவலையுடன் சொன்னாள்.



“அதற்கு அவசியமில்லை” என்று ஆத்விக் கோபமாக சொன்னான்.



“அத்து சின்ன குழந்தை மாதிரி பண்ணாத… அவங்க கவலைப்பட போறாங்க… ப்ளீஸ் எனக்காக இதை பண்ணு”



“நானெல்லாம் எதுவும் பண்ண மாட்டேன்… வேணும்னா நீ அந்த நம்பருக்கு ஒரு மெசேஜ் பண்ணு… அவ தன் ஃப்ரெண்ட் கூட இருக்கிறதாகவும், ஈவினிங் வீட்டுக்கு வரதாவும்” என்று ஆத்விக் அசட்டையாக சொன்னான்.



அமிர்தாவின் போனை எடுத்துப் பார்த்த பிருந்தா “என்னது புஜ்ஜியா? இது ஏதோ செல்லப் பேர் மாதிரி இல்ல… இது யாரா இருக்கும்?” என்று கேட்டாள்.அ



அந்தப் பெயரைக் கேட்டதும் ஆத்விக்கின் ரத்தம் கோபத்தில் கொதிக்க தொடங்கியது.



தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டவன் “நான் சொன்னதை மட்டும் செய்… அது யாரா இருந்தா உனக்கு என்ன? அடுத்தவங்க விஷயத்தில் தேவையில்லாம தலையிடாத… அந்த புஜ்ஜிக்கு நான் சொன்ன மாதிரி மெசேஜ் பண்ணு” என்று எரிந்து விழுந்தான்.



“கூல்… கூல்… நான் என்ன கேட்டுடேன்னு இவ்ளோ கோபப்படற?” என்ற பிருந்தா அந்த எண்ணிற்கு ஒரு மெசேஜை அனுப்பி வைத்தாள்.



ஆனால் அந்த மெசேஜை பார்த்த அடுத்த கணம் ரகுவீர் மீண்டும் போன் செய்தான்.



இப்போது என்ன செய்வது என்பது போல பிருந்தா ஆத்விக்கை பார்த்தாள்.



“போன் எடுத்து பேசு… இல்லன்னா அவன் போன் பண்ணிக்கிட்டே இருப்பான்” என்று அவன் சொன்னதும் போனை எடுத்து ஸ்பீக்கரில் போட்டாள்.



“அம்மு நீ எங்க இருக்க?” என்று ரகுவீர் பயம் நிறைந்த குரலில் கேட்டான்.



“ஹாய் நான் அமிர்தாவோட ஃப்ரெண்ட்… அவ ரெஸ்ட் ரூம் போய் இருக்கா… அவ வந்ததும் நான் உங்களுக்கு கால் பண்ண சொல்றேன்” என்று பிருந்தா ஆத்விக் சொல்லிக் கொடுத்தது போல சொன்னாள்.



“நீங்க யாரு?” என்று ரகுவீர் சற்று சந்தேகத்துடன் கேட்டான்.



ஆத்விக் அருகே இருந்த பேப்பரில் “தாரணி” என்று சொல்லுமாறு எழுதி காட்டினான்.



“என் பெயர் தாரணி” என்று அவன் எழுதியதைப் பார்த்து பிருந்தா சொன்னாள்.



“ஓகே… அம்முவை அங்கேயே இருக்க சொல்லுங்க… நான் வந்து அவளை பிக்கப் பண்ணிக்கிறேன்” என்று சொன்ன ரகுவீர் புறப்படுவதற்காக எழுந்தான்.



“வேண்டாம்… நீங்க இங்க எல்லாம் வர வேண்டாம்” என்று பிருந்தா பதற்றத்துடன் சொன்னாள்.



அவளின் பதட்டம் ரகுவீருக்கு சந்தேகத்தை கிளப்பியது.



‘இவள வச்சுக்கிட்டு ஒரு சின்ன தகிடுதத்தம் பண்ண முடியுதா?’ என்று நினைத்த ஆத்விக் கோபத்தில் அருகே இருந்த தலையணையை எடுத்து அவள் மீது எறிந்தான்.



“ஏன்?” என்று ரகுவீர் கேட்டான்.



“ஏன்னா அது… அது வந்து… நாங்க வீட்ல இல்ல” என்று பிருந்தா சொன்னதும் ஆத்விக் அவளை பார்த்து பெருமிதமாக புன்னகைத்தான்.



“ஆனா அவ ரெஸ்ட் ரூம் போய் இருக்கறதா இப்போ நீங்க தானே சொன்னீங்க?”



"ஆமா சொன்னேன்... ஆனா நாங்க இப்போ ஹோட்டல்ல இருக்கோம்... இங்கதான் அவ ரெஸ்ட் ரூம் போயிருக்கா... போதுமா? இன்னும் எவ்ளோ கேள்விதான் கேட்பீங்க... என்னால உங்களுக்கு பதில் சொல்லி மாளல... நான் போனை வைக்கிறேன்" என்று பொரிந்து தள்ளியவள் உடனே அழைப்பை துண்டித்தாள்.



ரகுவீருக்கு தாரணியை தெரியும்... அவள் அமிர்தாவின் தோழி... ஆனாலும் அவனுக்கு ஏதோ ஒன்று தவறாக இருப்பதாக உள்ளுணர்வு சொல்லியது
 

kkp29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
36
12
8
Tamilnadu

தவிப்பு - 9 :



அமிர்தாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவு திரும்பிக் கொண்டிருந்தது. கஷ்டப்பட்டு கண்களைத் திறந்தவள் தலையைப் பிடித்தபடி எழுந்து அமர முயற்சித்தாள்.



அமிர்தா எழுந்து அமர சிரமப்படுவதை கவனித்த ஆத்விக் அவள் பின்னே சென்று நின்று அவள் எழுந்து அமர உதவினான். யாரோ தனக்கு உதவுகிறார்கள் என்று புரிந்து அவள் திரும்பிப் பார்த்த போது அங்கே ஆத்விக் நின்றிருந்தான். இதை அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.



“இல்ல இப்படி நடக்க வாய்ப்பே இல்ல … நிச்சயம் இது கனவா தான் இருக்கணும்’ என்று முனகியவள் தன் கண்களை மீண்டும் மூடித் திறந்தாள்.



அப்போதுதான் அது உண்மையிலேயே ஆத்விக் என்பது அவளுக்கு புரிந்தது. அடுத்த நொடி அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தன. அவன் முன்பு தன்னை வலிமையானவளாக தான் காட்டிக் கொள்ள நினைத்தாள். ஆனாலும் முடியவில்லை.



அவள் கண்கள் கலங்குவதை ஆத்விக்கும் கவனித்தான். அவளை அள்ளி அணைத்து ஆறுதல் சொல்ல அவன் கைகள் பரபரத்தன.



ஆனாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அவள் கலங்குவதை கண்டு கொள்ளாதவனை போல எழுந்து நின்றவன் தன் கைகளை பாக்கெட்டில் விட்டபடி முகத்தை திருப்பி வேறெங்கோ பார்த்தான்.



“நான் காலேஜ்ல தானே இருந்தேன்…” என்ற அமிர்தாநடந்ததை நினைவு கூற முயன்றாள்.



“ஆமா… அங்க ஸ்டோர் ரூம்ல நீ மயங்கி கிடந்த… நான் தான் உன்னை இங்கு கூட்டிட்டு வந்தேன்” என்று ஆத்விக் உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்.



அவன் சொன்னதைக் கேட்ட அமிர்தாவிற்கு அனைத்தும் நினைவிற்கு வந்தது.



இதுநேரம் வரை அவனை நினைத்து கலங்கியவளுக்கு அவன் இரண்டு ஆண்டுகள் யாருக்கும் தெரியாமல் எங்கோ மறைந்திருந்தது நியாபகத்திற்கு வந்து அவளை கோபமுற செய்தது.



அவனை முறைத்துப் பார்த்தவள் “நீ எதுக்காக என்னை கூட்டிட்டு வந்த? என் அண்ணனுக்கு சொல்லிவிட வேண்டியதுதானே…” என்று கத்தினாள்.



“ஏய் இங்க பாரு… நான் ஒன்னும் நீன்னு நெனச்சு உன்னை தூக்கிட்டு வரல… யாரோ ஒரு பொண்ணு மயங்கி கிடக்கிறா… அவளுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சு தான் தூக்கிட்டு வந்தேன்… புரியுதா? நீன்னு தெரிந்து இருந்தா உன் நொண்ணனுக்கு இன்போர்ம் பண்ணிட்டு கிளம்பிட்டே இருந்திருப்பேன்... ஒரு பிரச்சனையை என் வீட்டுக்கு கூட்டிட்டு வர எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?” என்று அலட்சியமாக சொன்னான்.



“அப்படின்னா இது உன்னோட வீடா?” என்று அமிர்தா சுற்றும் முற்றும் பார்த்தபடி கேட்டாள்.



“ஆமா… பை த வே… நீ இப்போ படுத்துட்டு இருக்கறது கூட என்னோட பெட் தான்” என்று நமுட்டு சிரிப்பு சிரித்தபடி ஆத்விக் சொன்னான்.



அவன் சிரிப்பை பார்த்த அமிர்தாவிற்கு எரிச்சலாக இருந்தது. எனவே அவள் உடனே படுக்கையில் இருந்து எழுந்தாள். ஆனால் அவள் எழுந்ததும் தலை சுற்றுவது போல இருந்ததால் தடுமாறி கீழே விழப் போனாள்.



அதை கவனித்த ஆத்விக் முன்னே சென்று அவளைத் தாங்கிப் பிடித்தான். அவள் கண்களை பார்த்ததும் ஆத்விக்கிற்கு சில கணங்கள் அனைத்தும் மறந்துவிட்டன. அவன் கைகளுக்குள் இருந்த அமிர்தாவின் நிலையும் அவனைப் போலவே இருந்தது.



“இந்த நிமிடம் இப்படியே உறைந்து விடாதா?” என்று இருவரும் ஒன்று போல நினைத்தனர்.



அப்போது பிருந்தா அந்த அறைக்குள் நுழைந்தாள். அவள் காலடி சத்தம் கேட்டு இருவரும் தன்னிலைக்கு திரும்பினர். அப்போதுதான் தாங்கள் இருக்கும் நிலையை உணர்ந்த அமிர்தா அவன் பிடியிலிருந்து விடுபட முயன்றாள். அதைக் கண்டு கொள்ளாதவனை போல ஆத்விக் அவள் கண்களை உற்றுப் பார்த்தபடி அவளை விடுவித்தான்.



அமிர்தா விழித்துவிட்டதை பார்த்த பிருந்தா “அப்பாடி ஒருவழியா நீ கண் முழிச்சிட்ட… இப்போ எப்படி பீல் பண்ற?” என்று கேட்டாள்.



“நான் நல்லா இருக்கேன்… நீங்க யாரு?” என்று அமிர்தா குழப்பத்துடன் கேட்டாள்.



“நீங்க என்னை பார்த்ததில்லை… ஆனா நிச்சயம் என்னை பத்தி தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்… நான் பிருந்தா… இவனோட ப்ரெண்ட்” என்று அமிர்தாவை பார்த்து புன்னகைத்தபடி சொன்னாள்.



“பிருந்தாவா? அஞ்சு வருஷத்துக்கு முன்ன லண்டனுக்கு படிக்கப் போனது நீங்கதான?” என்ற அமிர்தா சட்டென்று பேச்சை நிறுத்தினாள்.



பிருந்தா ஆத்விக்கின் சிறுவயது தோழி. ஐந்து வருடத்திற்கு முன்பு தன்னுடைய மேற்படிப்பிற்காக லண்டனுக்கு சென்றிருந்தாள். ஆனால் அவள் லண்டன் சென்ற பிறகும் ஆன்லைன் வழியாக அவர்கள் இருவரின் நட்பும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. அது அமிர்தாவிற்கும் தெரியும்.



“வாவ் சூப்பர்… இந்த இடியட் என்னை பத்தி கூட உங்ககிட்ட சொல்லி இருக்கானா?” என்று அமிர்தாவிடம் சொன்னவள் “சூப்பர் அத்து… ஐ அம் இம்ப்ரஸ்ட்” என்றபடி அவனை பார்த்துக் கண்ணடித்தாள்.



ஆனால் அமிர்தா அவளின் செய்கையை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. பிருந்தாவை பற்றியும் அவள் அவனிடம் எப்படி நடந்து கொள்வாள் என்பது பற்றியும் ஆத்விக் அவளிடம் சொல்லியிருக்கிறான்.



“உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்… நான் இப்போ கிளம்பணும்” என்ற அமிர்தா அதற்குமேல் ஒரு கணம் கூட அங்கே இருக்க விரும்பவில்லை.



“இல்ல… இல்ல… நீங்க உடனே எல்லாம் போகக்கூடாது… இங்க பாருங்க … இப்போ டைம் என்ன தெரியுமா? ஒன்பது மணி… ரொம்ப லேட் ஆயிடுச்சு… சாப்பிட்டுட்டு கிளம்புங்க”



“இல்ல பிருந்தா… அவ போகட்டும்…” என்று ஆத்விக் சொன்னான்.



அவன் அவ்வாறு சொன்னதும் அமிர்தாவிற்கு கோபம் வந்தது.



“ஆமா பிருந்தா ஒரு நாள் லேட்டாக சாப்பிடுவதால் நான் ஒன்னும் செத்துட மாட்டேன்” என்று அமிர்தா பல்லை கடித்தபடி சொன்னாள்.



“ஓ ரியலி… அப்படின்னா நீங்க கிளம்பலாம்” என்ற ஆத்விக் கதவை நோக்கி கைகளை காட்டினான்.



அவர்கள் இருவரின் சண்டையையும் பார்த்த பிருந்தா “அட… என்ன இது… ரெண்டு பேரும் சின்ன பிள்ளை மாதிரி சண்டை போட்டுட்டு இருக்கீங்க? க்ரோ அப் காய்ஸ்…” என்று இருவரிடமும் சொன்னவள் “ஒரே ஒரு காபியாவது குடிச்சிட்டு போங்களேன்” என்று அமிர்தாவிடம் சொன்னாள்.



“தேங்க்ஸ் பிருந்தா… ஆனா என்னால இங்க ஒரு செகண்ட் கூட இருக்க முடியாது… நம்ம இருப்பை விரும்பாதவங்க வீட்ல இருக்கறது நெருப்புல நிக்கிறதுக்கு சமம்”



அவளிடம் எதுவும் சொல்லாமல் ஆத்விக்கை முறைத்து பார்த்த பிருந்தா “அத்து… என்ன இது? நீதான அவளை உன் வீட்டுக்கு தூக்கிட்டு வந்த… இப்போ அவகிட்ட இப்படி நடந்துக்கிட்டா என்ன அர்த்தம்? அவ தலையில வேற அடிபட்டு இருக்கு… ரொம்ப களைப்பா இருப்பா இல்லையா? எப்படி எதுவும் சாப்பிடாம அனுப்ப முடியும்? ஒழுங்கா அவளை சாப்பிட்டுட்டு போக சொல்லு... வீட்டுக்கு வந்தவங்களை சாப்பிடாம அனுப்பக் கூடாதுன்னு உனக்கு தெரியாதா?” என்று சொன்னாள்.



அவள் சொன்னதை கேட்ட ஆத்விக்கிற்கும் அமிர்தா மிகவும் களைப்பாக இருப்பது புரிந்தது.



"அதான் அவ சொல்றா இல்ல... ஏதாவது சாப்பிட்டுட்டு போ" என்று அவன் எங்கோ பார்த்தபடி சொன்னான்.



'தொரை என் முகத்தை பார்த்து பேச மாட்டாரோ' என்று உள்ளுக்குள் கருவியவள் "நீ சொன்னதும் நான் செய்வேன்னு நினைக்கிறியா என்ன?" என்று அமிர்தா தன் கைகளை மார்பின் குறுக்காக காட்டியபடி கேட்டாள்.



'செய்ய மாட்டேன்னு தான் தெரியுமே' என்று முனகியவன் அவள் முகத்தை உற்று பார்த்தபடி " ஜான்சி ராணி மேடம் நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க... இந்த ஆத்விக் நிறைய விஷயங்களை கத்துக்கிட்டு இருக்கான்... ஆனா பாருங்க இல்லை, முடியாதுன்ற பதிலை எல்லாம் கேட்க கத்துக்கல... சோ பெட்டர் நான் சொல்றதை கேட்கறது நல்லது" என்று கட்டளையிடும் குரலில் சொன்னான்.



அவன் சொன்னதை கேளாதவள் போல "ஓகே பிருந்தா... எனக்கு ஆர்கியூவ் பண்ண டைம் இல்ல.... நான் கிளம்பறேன்" என்றவள் திரும்பி நடக்க தொடங்கினாள்.



"ஓகே... நான் உன் நொண்ணனுக்கு போன் பண்ணி உன்னை இங்க வந்து பிக்கப் பண்ணிக்க சொல்றேன்" என்று ஆத்விக் இயல்பாக சொன்னான்.



அவன் சொன்னதை கேட்டு ஒருகணம் திகைத்த அமிர்தா "வேண்டாம்... வேண்டாம்... நானே போய்டுவேன்" என்று பதற்றத்துடன் சொன்னாள்.



அவளின் பதற்றத்தை உள்ளுக்குள் ரசித்த ஆத்விக் "சரி சொல்லல... ஆனா நீ இருந்து ஒரு காப்பியாவது குடிச்சிட்டு தான் போகணும்... இல்லைனா" என்றவன் தன் தோள்களை குலுக்கினான்.



"என்னை பிளாக் மெயில் பண்றியா?"



"அட நீ ரொம்ப புத்திசாலியா மாறிட்ட போல... கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்ட" என்று ஆத்விக் நக்கலாக சொன்னான்.



அவனை பார்த்து அலட்சியமாக உதட்டை சுளித்த அமிர்தா அவனுக்கு பதிலை கூட சொல்லமால் கதவை நோக்கி சென்றாள்.



'ரொம்ப திமிராகிடிச்சி உனக்கு...' என்று முணுமுணுத்தவன் அருகே இருந்த மேஜையில் இருந்து அவளின் போனை எடுத்து ரகுவீருக்கு போன் செய்தான்.



மறுமுனையில் போனை எடுத்த ரகுவீர் "ஹலோ அம்மு" என்றதும் அவன் போனை ஸ்பீக்கரில் போட்டான்.



"ஹலோ" என்று ஆத்விக் சொல்லிக் கொண்டிருந்த போது அவன்\ கையில் இருந்த போனை பிடுங்கிய அமிர்தா "ஹலோ புஜ்ஜி... அது அது வந்து புஜ்ஜி தப்பா உன் நம்பரை டயல் பண்ணிட்டேன்" என்று சமாளித்தாள்.



"அதுசரி... முதல்ல ஹலோன்னு ஒரு ஜென்ட்ஸ் வாய்ஸ் கேட்டுச்சே... அது யாரு? ஆமா உன் குரல்ல ஏன் இவ்வளவு பதட்டம் தெரியுது?"



"அது என் ப்ரெண்டோட புருஷன்... நான் இப்போ வீட்டுக்கு தான் வந்துகிட்டு இருக்கேன்... இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்... நீ என்னை நினைத்து கவலைப்படாத" என்றவள் அழைப்பை துண்டித்தாள்.



"ஆனா தாரணிக்கு இன்னும் கல்யாணமாகலையே?" என்று கேட்ட ரகுவீர் அப்போதுதான் அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதை கவனித்தான்.



அவன் அது பற்றி யோசிக்க தொடங்கிய போது அவன் செயலாளர் போன் செய்து ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் பற்றி அவனிடம் சில விஷயங்களை சொன்னார். அவரிடம் மும்மராக பேச ஆரம்பித்த ரகுவீர் இந்த விஷயத்தை பற்றி மறந்துவிட்டான்.



அதேநேரம் "பிருந்தா போய் காபி கொண்டு வா... ஜான்சி ராணி மேடம் இந்த ஏழையோட வீட்ல காபி குடிச்சிட்டு தான் போவாங்க" என்று கிண்டலாக சொன்னான்.



"போதும் அத்து... நீ ஒன்னும் சின்ன பிள்ளை கிடையாது... தேவையில்லாம அவங்களை கிண்டல் பண்ணாத... வாங்க அமிர்தா... போகலாம்" என்றவள் அமிர்தாவை அழைத்துக் கொண்டு வராண்டாவிற்கு சென்றாள்.



தன் தோள்களை குலுக்கிய ஆத்விக் அவர்களை பின்தொடர்ந்தான்.



அமிர்தாவை சோபாவில் அமர செய்த பிருந்தா தானும் அவள் அருகே அமர்ந்தாள். ஆத்விக் அவர்கள் இருவருக்கும் எதிரே இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்தான்.



டீப்பாயின் மீது ஏற்கனவே ஒரு பிளாஸ்கில் டீ தயாராக இருந்தது. அதன் அருகே சில கோப்பைகளும், ஒரு கோப்பையில் சர்க்கரையும் இருந்தது.



ஒரு கோப்பையில் அமிர்தாவிற்கு டீயை ஊற்றிய பிருந்தா அதில் சர்க்கரையை சேர்க்க ஆரம்பித்தாள்.



அதை கவனித்த ஆத்விக் "ஏய் அவ நிறைய சுகர் சேர்த்துக்க மாட்டா... கம்மியா போடு" என்று தன்னையறியாமல் சொன்னான்.



அதை சொன்ன பிறகே தான் என்ன சொன்னோம் என்று அவனுக்கு புரிந்தது. எனவே அவன் அதற்குமேல் எதுவும் சொல்லாமல் அமைதியானான்.



அவன் சொன்னதை கேட்ட அமிர்தாவிற்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது.



'இன்னமும் நீ எனக்கு பிடிச்சது, பிடிக்காதது எதையும் மறக்கல இல்ல' என்று சந்தோசமாக நினைத்தவள் 'அப்புறம் எதுக்குடா ரெண்டு வருஷம் நீ எங்க இருக்கேன்னு கூட தெரியாம என்னை தவிக்கவிட்ட?' என்று கோபத்துடன் நினைத்தாள்.



ஆத்விக் சொன்னதை கேட்ட பிருந்தாவிற்கும் சந்தோஷமாக இருந்தது. அவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்றுதான் அவளும் விரும்புகிறாள்.



சிறிது நேரம் அமைதியாக இருந்த ஆத்விக் "அது வந்து நான் என்ன சொல்ல வந்தேன்னா மனக்கசப்போட இருக்கவங்களுக்கு அதிகமான இனிப்பை கொடுத்தா அது அவங்க மனக்கசப்பை பாதிச்சிடும் இல்லையா?" என்றான்.



அவனை குழப்பத்துடன் பார்த்த பிருந்தா "அப்படின்னு யார்டா சொன்னது?" என்று கேட்டாள்.



"வேற யாரு... அர்ரோகென்ட் ஆத்விக் தான் அதை சொன்னது" என்று அமிர்தா நமுட்டு சிரிப்பு சிரித்தபடி சொன்னாள்.



"என்னது? அர்ரோக்கெண்டா... வாவ்... சூப்பர்.. .அத்து உனக்கு இது தேவைதான்" என்று சிரித்தபடி சொன்ன பிருந்தா "எவ்வளவு சுகர் போடட்டும் பிருந்தா?" என்று கேட்டாள்.



"எவ்வளவு வேணும்னாலும் போடுங்க பிருந்தா... நான் மாறிட்டேன்... இப்போல்லாம் நிறைய இனிப்பை சேர்த்துக்கறேன்.. வாழ்க்கை தான் கசப்பா மாறிடிச்சி... காப்பியாவது இனிப்பா குடிக்கலாமேன்னு தான்" என்று ஆத்விக்கின் முகத்தை உற்றுப் பார்த்தபடி சொன்னாள்
 

k. ஆனந்த ஜோதி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 16, 2023
35
8
28
Chennai
இங்க என்ன தான்யா நடக்குது. மாறி மாறி மாஸ் காட்டுதுக ரெண்டும் சேர்ந்து ...

ஆனால், ஆத்விக் அவளிடம் தன் கோபத்தைக் காட்டவே இல்ல. சூப்பர்.

வெயிட்டிங் ...
 

kkp29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
36
12
8
Tamilnadu
இங்க என்ன தான்யா நடக்குது. மாறி மாறி மாஸ் காட்டுதுக ரெண்டும் சேர்ந்து ...

ஆனால், ஆத்விக் அவளிடம் தன் கோபத்தைக் காட்டவே இல்ல. சூப்பர்.

வெயிட்டிங் ...
அவன் எப்படி காட்டுவான் சிஸ்... அவதான் அவனோட உயிராச்சே... இந்த கதையை பொறுத்த வரைக்கும் இது சின்ன பசங்க போட்டுக்கற சண்டை மாதிரி தான் எல்லாம் இருக்கும்... சோ நீங்க ரசிச்சி படிக்கலாம்.
 

kkp29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
36
12
8
Tamilnadu

தவிப்பு - 10 :



அமிர்தா சொன்னதை கேட்ட ஆத்விக் அவளை கடித்து தின்றுவிட விரும்புபவனை போல முறைத்து பார்த்தான். அவனுக்கு சளைக்காமல் அவளும் அவனை முறைத்தாள்.



அவர்கள் இருவரையும் பார்த்த பிருந்தா "யப்பா சாமிகளா... இப்படி பார்வையாலேயே ஒருத்தரை ஒருத்தர் கடிச்சி தின்றதை நிறுத்திட்டு டீயை குடிங்க..." என்று சலிப்புடன் சொன்னாள்.



அமிர்தா எதுவும் பேசாமல் டீயை குடிக்க ஆரம்பித்தாள். அதை பார்த்த ஆத்விக் ஆச்சர்யமடைந்தான். ஏனென்றால் அவனுக்கு அவளை பற்றி நன்றாக தெரியும். இவ்வளவு சர்க்கரை சேர்த்த டீயை அவள் ஒருவாய் கூட குடிக்க மாட்டாள். ஆனால் இப்போதோ அதை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருந்தாள்.



அவளை பார்த்தபடியே அவன் தன் டீயை எடுத்துக் குடித்தான். அதை குடித்த அடுத்த நொடி அவன் அதை துப்பினான். அதை பார்த்த அமிர்தா நமுட்டு சிரிப்பு சிரித்தாள். ஏனென்றால் அவள்தான் யாருக்கும் தெரியாமல் தான் குடிக்க வேண்டியதை அவன் புறம் மாற்றி வைத்தாள்.



நடப்பதை கவனித்த பிருந்தா வேகமாக டீயை குடித்துவிட்டு "ஓகே காய்ஸ்... நான் கிளம்பறேன்" என்றபடி எழுந்து நின்றாள்.



"ஹே... அவ கிளம்பற வரை இரு பிருந்தா" என்று ஆத்விக் சொன்னான்.



"இல்ல அத்து... ஆல்ரெடி நான் வந்து ரொம்ப நேரம் ஆகிடிச்சி... அம்மா வேற போன் பண்ணி எப்போ வருவேன்னு கேட்டுகிட்டே இருக்காங்க... பை அமிர்தா..." என்றவள் அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.



"இவங்க ரெண்டு பேரும் ஏன் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடிக்கிட்டு இருக்காங்கன்னு தெரியல... ரெண்டும் தேவையில்லாம தனக்குத் தானே தண்டனை கொடுத்துக்கிட்டு இருக்குங்க" என்று நினைத்தவள் பெருமூச்சை வெளியேற்றிவிட்டு தன் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.



அவள் சென்ற பிறகு ஆத்விக் மற்றும் அமிர்தா இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அமைதியாக டீயை குடித்தனர்.



டீயை குடித்து முடித்ததும் "நீ எப்படி போக போற? காலேஜ்க்கு எப்படி வந்த கார்லயா?" என்று ஆத்விக் கேட்டான்.



அப்போதுதான் காலையில் தான் ரகுவீர் மற்றும் பிரேமை பின்தொடர்ந்து ஆட்டோவில் வந்தது அவள் நினைவிற்கு வந்தது.



அவள் முகத்தில் தோன்றிய மாற்றங்களை கவனித்த ஆத்விக் "நான் உன்னை ட்ராப் பண்றேன்... வா" என்றபடி எழுந்தான்.



"தேவையில்லை... நானே போய்டுவேன்..." என்ற அமிர்தா எழுந்து வாசலை நோக்கி செல்லத் தொடங்கினாள்.



"என் பேச்சை எப்போதும் கேட்கவே கூடாதுன்ற உன் பழக்கம் கொஞ்சம் கூட மாறவே இல்லை... நான் உன்னை வான்னு சொன்னேன்... உன்கிட்ட பெர்மிஸன் ஒன்னும் கேட்கல" என்று சொல்லிவிட்டு அவளை முந்திக்கொண்டு சென்றவன் காரில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தான்.



அமிர்தாவிற்கு லேசாக தலைசுற்றுவது போல இருந்ததால் அவள் எதுவும் பேசாமல் காரில் ஏறி அமர்ந்தாள்.



"என்னடா இது... ஒரு பெரிய வாக்குவாதத்தை எதிர்பார்த்தா அமைதியா ஏறி உட்கார்ந்துட்டா... நான் காண்பதென்ன கனவா? இல்லை நினைவா?" என்று நினைத்தவன் அதை அவளிடம் கேட்டால் காரை விட்டு இறங்கிவிடுவாள் என்பதால் எதுவும் பேசாமல் காரை கிளப்பினான்.



காரில் மயான அமைதி நிலவியது. இருவருமே ஒருவருடன் ஒருவர் பேச ஆர்வம் காட்டவில்லை. ஆனால் ஓரக்கண்ணால் அவ்வப்போது அடுத்தவரை பார்த்து கண்களில் நிரப்பிக் கொண்டனர்.



சிறிது நேரம் கழித்து ஆத்விக் மியூசிக் பிளேயரை போட்டான்.



ஓ வெண்ணிலா

என் மேல் கோபம் ஏன்?

ஆகாயம் சேராமல்

தனியா வாழ்வது

ஏனோ ஏனோ ஏனோ?



என்ற பாடல் ஓடியது. அந்த பாடலை கேட்ட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.



அந்த பாடலை கேட்க பிடிக்காமல் அமிர்தா பாடலை மாற்றினாள்.




மியூசிக் பிளேயரில் வேறொரு பாடல் ஒலிக்கத் தொடங்கியது.



அந்த பாடலை கேட்ட இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அந்த பாடல் அவர்களின் பல இனிய நினைவுகளை சுமந்திருக்கிறது. அதை கேட்டதும் அமிர்தாவின் மனம் பாகாய் உருகியது. ஏனென்றால் அந்த பாடலை ஆத்விக் தனக்கு மிகவும் பிடித்த ஒரு பெண்ணிற்காக அவனே எழுதியது. அது வேறு யாருமல்ல... அவள்தான்



அந்த பாடலை கேட்ட இருவரும் கடந்த காலத்திற்கு சென்றனர்.



வெள்ளை டீ-ஷர்ட், கருப்பு பேண்ட் அணிந்திருந்த ஆத்விக் அமிர்தாவிற்காக ஒரு பாடலை பாடிக் கொண்டிருந்தான்.



அன்று அவளும் வெள்ளை நிறத்தில் தான் அனார்கலி சுடிதார் அணிந்திருந்தாள்.



ஆத்விக் பாடி முடித்ததும் கண்களில் காதலுடன் அவனைப் பார்த்தவள் " ஆது... நீ ஒவ்வொருமுறை பாடும் போதும் என் மனசு எப்படி உருகுது தெரியுமா? என்னால என்னை கண்ட்ரோல் பண்ணிக்கவே முடியல... அப்படியே உன்னை இறுக்கி அணைத்து உம்மா தரணும் போல இருக்கு" என்றவள் அவனை அணைப்பதற்காக அருகே சென்றாள்.



அவள் பிடிக்குள் சிக்காமல் விலகியவன் "இதெல்லாம் கல்யாணத்துக்கு பிறகுதான் பேபி" என்றபடி அவள் கண்ணத்தை தட்டினான்.



அவனை பார்த்து முகத்தை சுளுக்கியவள் "ஆனாலும் நீ ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிஸரா இருக்க ஆது... இப்போல்லாம் லவ் பண்றவங்க எல்லாம் முடிஞ்ச பின்னாடிதான் கல்யாணத்துக்கு டேட்டே பிக்ஸ் பண்றாங்க... ஆனா நீயும் இருக்கியே... ஒரு சின்ன ஹக் பண்றதுக்கே தடா போடற... போடா" என்றவள் பின்னர் "என்னை பேபின்னு கூப்பிடாத... எனக்கு பிடிக்கலைன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன்" என்று கடுப்புடன் சொன்னாள்.



ஏனென்றால் ஆத்விக் தன் பெண் ரசிகைகளை பேபி என்றுதான் கூப்பிட்டு பேசுவான். எனவே அதேபோல தன்னை கூப்பிடுவதை அமிர்தா விரும்பமாட்டாள். தான் எப்போதும் அவனுக்கு ஸ்பெஷலாக இருக்க விரும்புவாள்.



அவள் கடுப்பை ரசித்து பார்த்த ஆத்விக் "இங்க பார் செல்லம்... நாம ரெண்டு பேர் லவ் பண்றோம்னு தெரிந்த பிறகும் நீயும் நானும் வெளிய எங்க போனாலும் எப்போ திரும்பி வந்தாலும் நம்ம வீட்ல யாரும் எதுவும் கேட்கறது இல்லை... இதுக்கு காரணம் நம்ம ரெண்டு பேர் மேல அவங்க வச்சிருக்க நம்பிக்கை தான்... அதை நாம காப்பாத்த வேண்டாமா?" என்று கேட்டுவிட்டு அவள் மூக்கை பிடித்து திருகினான்.



அவனை கிண்டலாக பார்த்த அமிர்தா "கட்டி பிடிச்சி முத்தம் கொடுத்தாலே குழந்தை பிறந்துடும்னு நினைக்கிற 90'ஸ் கிட்ஸா நீ?" என்று கேட்டாள்.



அவள் சொன்னதை கேட்டு வாய்விட்டு சிரித்த ஆத்விக் "ஹலோ மேடம்... நாங்க அந்த அளவுக்கு ஒன்னும் தெரியாதவங்க இல்ல... எங்களுக்கு எல்லாம் தெரியும்... ஆனா நான் உன்னை ஹக் பண்ணி கிஸ் பண்ணா என்னால அதோட நிறுத்த முடியும்னு தோணல... உன்னை முழுசா எடுத்துக்காம விடமாட்டேன்... அதான் நீ இந்த ஊரறிய என்னோடவளா ஆகற அன்னைக்கு தான் எல்லாம்னு டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணிக்கிட்டு இருக்கேன்" என்று ஆழ்ந்த குரலில் சொன்னான்.



அவன் சொன்னதை கேட்டதும் அமிர்தாவின் முகம் செவ்வானமாய் சிவந்துவிட்டது.



ஆத்விக் அவளை ரசித்துப் பார்த்தான்.



அன்று நடந்ததெல்லாம் இன்று நடந்தது போல அவர்கள் இருவரின் மனதிலும் பசுமையாக இருந்தது.



கடந்த காலத்தில் இருந்து தன்னிலைக்கு திரும்பிய ஆத்விக் அந்த பாட்டை அணைத்துவிட்டு அவளை திரும்பி பார்த்தான். ஆனால் அவள் அவன்புறம் திரும்பவே இல்லை. கலங்கி இருந்த தன் கண்களை அவன் பார்த்துவிட கூடாது என்பதற்காக உதட்டை கடித்தபடி ஜன்னல் வழியாக வெளியே எதையோ மும்மரமாக பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தாள்.



அவன் தன்னை பார்க்கிறான் என்பதை உணர்ந்த போதும் அவள் திரும்பவே இல்லை.



அவள் திரும்பி பார்க்காததில் ஆத்விக்கின் கர்வம் அடிவாங்கியது.



'திமிரு... திமிரு... உடம்பெல்லாம் திமிரு... " என்று முணுமுணுத்தவன் காரின் வேகத்தை அதிகப்படுத்தினான்.



சிறிது நேரத்தில் கார் ரகுவீரின் வீட்டை அடைந்தது.



கார் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கிய ஆத்விக் அவள் புறம் வந்து கதவை திறந்துவிட்டான்.



அவன் முகத்தை பார்த்தபடி அமிர்தா கீழே இறங்கினாள். ஆனால் இப்போது அவன் அவளை பார்க்காமல் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.



அவனை பார்த்துக் கொண்டே இறங்கியவள் கால் தடுக்கி தடுமாறி கீழே விழவிருந்தாள்.



அவளை தாங்கி பிடித்த ஆத்விக் "கவனமா இறங்க மாட்டியா?" என்று அதட்டியவன் அவளை தன் பிடியில் இருந்து விலக்காமல் கைத்தாங்கலாக அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.



அப்போது சிகரெட் குடிப்பதற்காக வெளியே வந்த பிரேம் தனக்கெதிரே இருந்த காட்சியை பார்த்துவிட்டு வாயைப் பிளந்தான். இரண்டு வருடத்திற்கு முன்பு நிறைய முறை அவன் அவர்கள் இருவரையும் இதுபோல ஒன்றாக பார்த்திருக்கிறான். ஆனால் இப்போது இது எப்படி சாத்தியம்? அதைவிட அவர்கள் இருவரையும் ரகுவீர் ஒன்றாக பார்த்தால் அவன் எப்படி ரியாக்ட் செய்வான்?



அதையெல்லாம் நினைத்தபடி வேகமாக அமிர்தாவின் அருகே சென்ற பிரேம் "அம்மு நீ எப்படி ஆத்விக் கூட? ரகு ஏற்கனவே வந்துட்டான்... அவன் மட்டும் உன்னை இவன்கூட பார்த்தான் அவ்வளவுதான்" என்று பதற்றத்துடன் சொன்னான்.



"அவன் எங்களை பார்த்தா என்ன பண்ணுவான்? நான் ஒன்னும் உங்க வீட்டுக்கு விருந்து சாப்பிட வரல... இந்தா பிடி உன் தங்கச்சியை... நான் கிளம்பறேன்" என்றவன் அமிர்தாவை பிரேமிடம் ஒப்படைத்தான்.



அப்போதுதான் பிரேம் அமிர்தாவின் தலையில் அடிபட்டிருப்பதை கவனித்தான்.



"என்ன ஆச்சு அம்மு... காலேஜ்ல இருந்து கிளம்பும் போது நல்லாதானே இருந்த?"



"அதை பத்தி அப்புறம் சொல்றேன் அண்ணா" என்றவள் பின்னர் திரும்பி "ஆது" என்று அழைத்தாள்.



அவள் அவ்வாறு கூப்பிட்டதும் ஆத்விக்கின் கால்கள் தானாக நடப்பதை நிறுத்தின. அவள் கண் விழித்ததில் இருந்து இந்த நொடி வரை அவனை ஆது என்று அழைக்கவில்லை. இப்போது அப்படி அழைத்ததும் அவன் இதயம் ஒருநொடி நின்று துடித்தது. அவன் தன்னையறியாமல் திரும்பிப் பார்த்தான்.



"தேங்க்ஸ்" என்று அவன் கண்களை உற்றுப் பார்த்தபடி ஆழ்ந்த குரலில் சொன்னாள்.



இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்ட அந்த நொடி அனைத்தையும் மறந்துவிட்டு அவளை அள்ளி அணைத்து தனக்குள் பொத்தி வைத்துக் கொள்ள அவன் மனம் ஏங்கியது. ஆனால் உடனே தன் கைமுஷ்டியை இறுக்கி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
 
Last edited: