• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
"அண்ணா தேவ் சார் இருக்காரு..." என ரதி சொல்ல திரும்பிப் பார்க்க அங்கே தான் ஆதித்யா, ஐ.ஜி. அமரதேவனுடன் பேசிக் கொண்டிருந்தான்.

அவர்கள் உள்ளே நுழைந்த நொடியே ஆதித்யா கண்டுவிட்டான். ஏதோ பரிதவிப்புடன் தீராவின் பார்வை ஆதித்யாவிடம் எதையோ வினவ அவனது உணர்ச்சி துடைத்த முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாமல் தான் போய்விட்டது.

ஐ.ஜி போலிஸ் ட்ரெஸ் கோட்டுடன் இருக்க குழம்பியவளாக ரதி தீராவை கேள்வியாய் நோக்க நொடியில் தன் ரியெக்ஷனை மாற்றிக் கொண்டவன் சின்னச் சிரிப்புடன் "ஹீ இஸ் ஐ.ஜி. அமரதேவன். தேவ்வோட மாமா..." எனக் கூற ஓஓஓ என்றவளின் முகமும் தெளிவானது..

பின் இருவரும் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு செல்ல சலூட்டுடன் விறைப்பாய் நின்ற தீராவின் பார்வை ஆதித்யாவை கள்ளச் சிரிப்புடன் தழுவி மீண்டது.

அவனோ அழுத்தமாக அவனைப் பார்த்து வைத்தாலும் மீசைத் துடித்தது புன்னகையில்...!!

"வாப்பா இரு.." என்றவரின் பார்வை ரதியிடம் இருக்க தீரா சுருக்கமாக அவருக்கு விளக்க சிறு தலையசைப்பைத் தந்தவர் இப்போது ஆதித்யாவின் புறம் திரும்ப அவரின் பார்வையைப் புரிந்து கொண்டவனாக கிளம்ப எத்தணிக்க தீரா தான் "டேய் பார்த்துப் போடா.. அன்டைக்கு எப்படியோ மீடியால மாட்டாம தப்பிட்டோம்... பட் இப்போ..?" என கேள்வியாய் நிறுத்தியவனிடம் கெப் ஒன்றை எடுத்துக் காட்டியவன் சுற்றிக் கை காட்ட அந்த காஃபி ஷாப்பில் ஒரு ஈ காக்கா கூட இருக்கவில்லை.. அட இதை எப்படி கவனிக்க மறந்தான் தீரா..? ஆம் ஆதித்யா தான் இந்த சிறிய மீட்டப்பிற்காக இரண்டு மணித்தியாலங்கள் அந்த ஷாப்பையே விலைக்கு எடுத்திருந்தான்...

இல்லாவிட்டால் தான் அந்த மகா தொழிலதிபனை சுற்றி ஜனம் திரண்டு விடுமே..

எப்போதும் போல அவனை மெச்சும் பார்வை பார்த்தவனை கண்ணடித்து அலறவிட்ட ஆதித்யா, கெப்பை அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேற எத்தணிக்க தீராவிடம் முக்கியமான விடயம் பேச வேண்டும் என ஐ.ஜி தடுத்திருந்தார்.

அதற்கும் தலையசைப்பொன்றை கொடுத்தவன் ரதியை ஆதித்யாவுடன் மீண்டும் அவனில்லத்திற்கு அனுப்பி வைத்தான்.

அவர்கள் சென்ற பின்னர் அரைமணித்தியாலம் தொடர்ந்த தீரா, அமரதேவனின் பேச்சும் முடிவுக்கு வர ஐ.ஜியும் கைகுலுக்கலுடன் கிளம்பி விட்டார். சிறிது நேரத்தில் ஷாப்பில் ஆட்கள் நிறையவும் அரவிந்த் உள்ளே வரவும் சரியாக இருந்தது..

அரவிந்த் வந்து தீராவின் தோளைத் தொட திரும்பியவனுக்கு கால் வர எடுத்து காதில் வைத்தவன் அரவிந்திடம் கண்காட்டி விட்டு சற்றுத் தொலைவில் நின்று பேசிக் கொண்டிருந்தான்.

மேசையில் தட்டிக் கொண்டே டைம் பார்த்தவன் சுற்றி சுற்றி ரதியைத் தேடினான்.

அப்படியே திரும்ப சிங் பக்கம் யாரோ மறைந்து நின்று ஃபோனில் பேசுவதைக் கவனித்தான். ஆம் ரதியே தான்...! அதே சுடிதார்..!அதே உருவம்..!

அரவிந்திற்கு அந்தப் பெண்ணின் பின்பக்கத் தோற்றமே தெரிய எதையும் யோசிக்காமல் எழுந்து சென்றவன் எதிர்பாராத விதமாக அவளது பேச்சுக்களை கேட்டுவிட்டான்.

அதிர்ந்து அப்படியே அவ்விடமே நின்று விட்டவனுக்கு, தான் காது கொடுத்துக் கேட்பவைகளை நம்ப முடியவில்லை. மீண்டும் மீண்டும் அந்த கணீர் குரல் செவிகளைத் தீண்ட கண்கள் கோபத்தில் சிவந்து உடல் சிலிர்த்தது...

என்ன கூறி விட்டாள்..?இதோ இவை தான்..

"எஸ் மாம்.. நீங்க சொன்ன மாதிரி தான் அந்த டாக்டர்ட சொன்னேன்... பாவம் நம்பிட்டான் போல...ஹா..ஹா.. ஆமாம்மா அவன் ப்ரெண்ட் கூட நம்பிட்டான்..சரியான கூமுட்டை பசங்களா இருக்காங்க.. அதுலையும் அந்த டாக்டர்..."

என்றவள் அதற்கு மேல் பேசியதைக் கேட்க விரும்பாதவனாக கைமுஷ்டி மடக்கி உடல் இறுக வெளியேறிவிட்டான்.

அவள் கூறியதை அவன் மனம் ஏற்க முடியாமல் தவித்தது.. பாதகத்தி ஏமாற்றி விட்டாளே!? என்று நினைத்து வெதும்பியன் கொஞ்சம் நிதானமாக யோசித்து விட்டு கிளம்பி இருக்கலாம்.. அந்தா பரிதாபம் அந்தப் பெண் பேசிவிட்டு திரும்ப அது ரதியல்ல.. அவளைப் போல சுடிதார் அணிந்திருந்த சென்னை வாசி...

அவன் பட்ட அடியினால் தீராவிடம் கூட சொல்லிக்காமல் சென்று விட்டான். இங்கே தீரா வந்து பார்க்க அரவிந்தைக் காணாமல் அழைப்பெடுக்க ரிங் போய்க் கொண்டிருந்தததே தவிர அவன் அழைப்பை ஏற்கவில்லை...

பின் அவனும் அந்த காஃபி ஷாப்பை விட்டு வெளியேறி மேலதிகாரியின் ஆபிஸிற்கு சென்று விட்டான்...

பரிதாபம் என்னவென்றால் அன்று அரவிந்தின் முட்டாள் தனத்தால் ஒரு பெண்ணின் கட்பு பழியாகப் போவது...

விதி தன் திருவிளையாடலை இனிதே தொடங்கி இருந்தது...


***


"அ..அக்கா.." எனத் தயங்கி நின்றாள் ரதி..

சமைத்த உணவை மேஜையில் அடுக்கிக் கொண்டிருந்தவள் புரியாமல் அவளைப் பார்க்க, "நீங்க ரொம்ப அழகா இருக்கிங்கக்கா..." என்றவளுக்கு சின்னச் சிரிப்பொன்றை உதிர்த்தாள் வர்ஷினி.. அழகுக்கு சொந்தக்காரி..!!

சரியாக ரதி அப்படிக்கூறும் போதே கீழே வந்திருந்த ஆதித்யா, சுவரில் சாய்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் பார்வை முழுக்க முழுக்க தன்னவளைத் தான் மேய்ந்தது..அதில் தடுப்பொன்று இருந்ததால் அவனை யாரும் கவனித்திருக்கவில்லை..

"அப்பறம் நான் உங்களை அக்கானு கூப்புடலாம்ல..?" இப்போதும் ரதி தான் பேசினாள்.

"ம்ம் தாராளமா.." என்று சிரித்தவள் திரும்பி சமையல்கட்டை நோக்கிச் செல்ல, அவசரமாக அவளை மறித்து கட்டிக் கொண்டாள் ரதி.."தெங்கியூக்கா...ம்மா..." என முத்தம் ஒன்றையும் சலுகையாக வழங்க அங்கே பொறாமையில் வெந்தது என்னவோ ஆதித்யா தான்..

க்கும்...என்ற கனைத்தல் சத்தத்தில் களைந்த இருவரில் வர்ஷினி அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல் உள்ளே போக ரதி தான் காதில் கை வைத்து அவனிடம் உதட்டசைத்து மன்னிப்பு யாசித்தாள்.. அவள் தான் அவனது பொறாமையுடனான முகத்தை கண்டுவிட்டாளே... கண்கள் சுருங்க நின்றவளைப் பார்த்து தலையசைத்தவன் அப்படியே சென்று சோஃபாவில் அமர்ந்து விட்டான்..

இவளும் சிரித்துக் கொண்டே உள்ளே சென்றவளுக்கு ஆதித்யாவின் இல்லத்திற்கு வரும் போதே தீரா அனைத்தையும் கூறி இருந்தான்.

"வர்ஷு காஃபி..." என ஆதித்யா குரல் கொடுக்க "இதோ வரேன்..." என அவளும் குரல் கொடுக்க அதிர்ந்து எட்டிப் பார்த்தது என்னவோ அமரா தான்... பின்ன, இவனுக்குத் தான் வீட்டில் காஃபி குடிப்பதென்றால் கண்ணில் காட்டாதல்லவா...

அவளும் தனக்குத் தெரிந்ததை வைத்து ஏதோ கலக்கிக் கொண்டு வர ஓரமாக நின்று அமராவும் ரதியும் வேடிக்கைப் பார்த்தனர்.. பின்ன, அவள் சக்கரைக்குப் பதிலாக உப்பையல்லவா அள்ளிக் கொட்டினாள்...

மகனின் கோபத்தை அறிந்தவர் பதபதைப்புடன் நின்றாலும் ரதிக்கு சுவாரஸ்யமாக போய் விட்டது..

காஃபியை அவள் நீட்ட அதன் நிறமே அவனை குழப்பி விட்டது.. பின் புது மேக் போல என்றெண்ணியவன் வாங்கிப் பருகி விட்டு எதுவும் பேசாமல் அவள் கையில் வெறும் கப்பைத் கொடுத்து விட்டு எழுந்து தோட்டத்துப் பக்கம் சென்று விட்டான்... அவனுக்கு அந்த வீட்டில் அவளது இருப்பை நொடிக்கொரு தரம் உணர்த்த வேண்டும்...அதனாலே தன் வழக்கத்தை கைவிட்டு விட்டு இன்று அவளுக்காக காஃபி குடித்தான்..இல்லை இல்லை கழனித் தண்ணியை பருகினான்...ஹா..ஹா!!

அவளும் பேசாமல் திரும்பி வர மகனின் நடவடிக்கையில் மேலும் அதிர்ந்தவராக அமரா நின்று விட்டார்.. சுக்குக் காஃபிக்குப் பதிலாக உப்புக் காஃபியை அல்லவா குடித்தான். இருந்தும் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் செல்பவனை நினைத்து மெல்லச் சிரித்தார் அவர். அவருக்குத் தெரியும் அவளுக்காக மட்டும் தான் அவன் எதுவும் பேசாமல் செல்கிறான் என. இன்னேரம் தானோ அல்லது வேலைக்காரப் பெண்ணோ கொண்டு வந்து கொடுத்திருந்தால், தட்டை பறந்திருக்கும் பத்து மைல் தூர தொலைவில்...

இனி இவளை வைத்துத் தான் பெற்ற மகனை மடக்க வேண்டும் என அல்ட்ரா மதர் நினைத்துக் கொண்டு மருமகளைத் தேடிச் சென்றார்.

அதற்குள் அவளை நெருங்கிய ரதி அவள் ஊற்றிய காஃபியை அவளுக்கு ஒரு கப்பில் ஊற்றித் திணிக்க என்னவென அவள் கேட்டதுக்கு..

"உப்புக் காஃபி.. ச்சீ சீ சுக்குக் காஃபி சூப்பரா இருந்துச்சுக்கா..வேணா நீங்க ஒரு சிப் எடுத்துப் பாருங்களே..." என நீட்டி விட்டு அமராவைப் பார்த்து கண்சிமிட்டினாள்.

இருவரையும் மாறி மாறி பார்த்தவள் எடுத்து அருந்திய அடுத்த நொடி "உவ்வேக்..." என வாஸ் பேசினை நோக்கி ஓடினாள்.

இங்கே இவர்கள் இருவரும் கிலுக்கி சிரிக்க முகத்தை சுளித்தவள் "அப்போ இதைத் தானே அவரும் குடிச்சாரு..இருந்தும் எதுவும் சொல்லாம போறாரு..." என்றவள் தலையைத் தொங்கப் போட அமரா தான் அவளை சமாதானம் செய்திருந்தார்.

"நீ மனசு கஷ்டபடக் கூடாதுனு தான் அவன் அப்படியே போய்டான்.." என அவரும் "உங்க மேலே அவ்ளோ லவ் கா சாருக்கு..." என்றவள் கண்ணடிக்க ஏனோ அவனுக்கு தன் மேல் காதலா!? என்றதை எண்ணும் போதே மெய் சிலிர்த்தது... அமரா ரதியின் காதை மெல்லத் திருக அவளோ வலித்தது போலப் பாசாங்கு பண்ண, அந்த இடத்தில் இருப்பதே அவஸ்தையாகப் போக வர்ஷினி பிடித்தாள் ஓட்டத்தை.

இப்படியே அங்கு மூவருக்கும் நல்ல உறவு உருவாகி இருந்தது.

வெளியே வந்தவள் அவனைத் தான் தேடினாள்.

தோட்டத்துப் பக்கம் கால்களை அகல விரித்து கைகட்டி நின்று யாருடனோ அவன் தொலைபேசியில் உரையாடுவதைப் பார்த்து சட்டென அங்கே சென்று விட்டாள்.

அவனுக்குப் பின்னே வந்து நின்ற பிறகு தான் யோசித்தாள் ஏன் வந்தோம் என..?திரும்பிப் போய் விடுவோமா என்று கூட தோன்ற திரும்பியவளது கையை எட்டிப் பிடித்தான் ஆதித்யா.

"ஐ வில் கால் யூ பேக்..." என்றவன் அழைபேசியை அணைத்து வைத்து விட்டு வர்ஷினியைப் பார்க்க அவளோ அவன் தன்னை சட்டெனப் பிடித்ததில் நிலை குலைந்து அவனைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள்..

ஆடவனுக்கே வெட்கம் வர வழமை போல தன் பிடரி முடியை கோதி விட்டவன் சற்று அவளை நெருங்கி "இப்படியே என்னை பார்த்துட்டு இருக்கப் போறியா...?" என கேட்க அவசரமாக விலகியவள் என்ன செய்வதெனத் தவித்தாள்.. அவளை இன்னும் சீண்ட நினைத்தவன் "பார்க்க நீ ரெடின்னா என்னைப் பார்க்க பர்மிஷன் தர நான் ரெடி..." என்றவன் அவளது கையில் மெல்ல வருட உணர்ச்சிகள் அவிழ்ந்து நின்றவள் தன்னிலை உணர்ந்தவளாக சடாரென கையை உருவிக்கொண்டு அவனைப் பார்க்க சக்தியில்லாமல் திரும்பிப் போக எத்தணிக்க இடைமறித்தவன் "வந்த காரணத்தை சொல்லிட்டு போங்க மேடம்.. இல்லன்னா என்னை விட்டுப் பிரிய மனசில்லாமல் ஓடி வந்துட்டிங்கனு நெனச்சிப்பேன்.." என்றவனைப் பார்த்து "இதென்ன பேச்சு...?" என அதிர்ந்தவளுக்கு இதயம் படு வேகமாக துடித்தது..

இனி தான் வந்த காரணத்தை சொல்லாவிட்டால் ஏடாகூடமாக ஏதாவது சொல்லி விடுவான் என நினைத்து.."நீ..நீங்க ஏன் அந்த கா.. காஃபியை குடிச்சிங்க...?" என மெல்லிய குரலில் கேட்க அவளை நெருங்கியவன் "கேட்கல்ல..இன்னும் சத்தமா..." என பின்பக்கமாக அவளை அணைத்தாற் போன்று நெருங்கி நிற்க அந்தா பரிதாபம் வந்த கொஞ்ச நஞ்ச குரல் கூட நா ஓட்டிக் கொண்டதால் வர மறுத்தது.

அவனுக்கு அவளது அருகாமையில் உணர்ச்சிகள் கிளர்ந்தெழ கைகள் அதன் பாட்டில் அவள் இடை தேடி அழைந்தன..

இங்கே வர்ஷினியோ அவனது தொடுகையில் ஸ்தம்பித்து நின்றாள்...

இருவருள்ளும் காதல் இருக்கிறது.. வெளியே சொல்லிக் கொள்ளவில்லையாயினும் நுண்ணிய உணர்வின் மூலம் புரிந்து கொண்டனர்.

அதனால் தான் வர்ஷினி அவன் செய்ததை மறந்து இன்று அவனுடன் இருக்கிறாள்..

அவனது வலிய கரமோ அவளது இடையை தழுவி இருக்க மூக்கு நுனியோ கழுத்தில் தஞ்சம் அடைந்திருந்தது. அவளிடமிருந்து வந்த மல்லிகைப் பூ வாசனை அவன் மூக்கை நிருட ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து தன்னவளின் சுகந்தத்தை நுரையீரலினுள் நிறைத்துக் கொண்டான்..

நெஞ்சுக்குழி ஏறி இறங்க நின்றிருந்தவளுக்கு மூச்சு முட்டியது. இதற்கு மேல் தாங்க முடியாமல் அவனது கையைத் தட்டி விட்டு திரும்பி பார்க்காமல் சென்று விட்டாள்.

மோகக் கயிறு அறுபட தன்னிலை உணர்ந்தவன் தலையைக் கோதிக் கொண்டே வந்த காரணத்தை சொல்லாம் ஓடுபவளின் செயலில் வாய் விட்டே சிரித்தான்..

இப்படியெல்லாம் தன் வாழ்வில் வசந்தம் வீசுமென கனவா கண்டான் அவன்..இருந்தும் இந்த நிலை பிடித்திருந்தது வேங்கைக்கு.


தொடரும்...

தீரா.
 
Top