• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காரிகையே நீ என் தாரகையே! - அத்தியாயம் 6

தென்பெண்ணை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
73
மிருதுளா பவித்ராவிடம், "என்ன பிரச்சனை இருவருக்கும்?" எனக் கேட்டதும் ஒரு நொடி அதிர்ச்சியானவள் பிறகு மிருதுளாவிடம் உண்மையை கூறினாள். "நீ நினைக்கற மாதிரி எந்த பெரிய பிரச்சனையும் எங்களுக்குள்ள இல்ல மிருது. நான் வேலைக்கு போகலாம்னு நினைக்கறேன். அவரு வேணாம்னு சொல்றாரு அவ்ளோதான்." என்றாள் பவித்ரா.

"நீ எதுக்காக வேலைக்கு போக நினைக்கற அக்கா. இன்னும் பாப்பா ஸ்கூலுக்கு கூட போகலயே?" என மிருதுளா கேட்க, "வீட்ல கொஞ்சம் சூழ்நிலை சரியில்ல மிருது. நானும் வேலைக்கு போனா கொஞ்சம் ஈசியா இருக்கும்." என்றாள் அவள். அவள் கூறிய காரணமும் சரியாகவே பட்டது மிருதுளாவிற்கு.

"சரி. அத்தான் ஏன் போக வேண்டாம்னு சொல்றாரு." என அவள் கேட்க, "அதைக் கேட்காதடி. அவர் சொல்ற காரணத்தை கேட்டுதான் எனக்கு கோபமா வருது." என்றாள் பவித்ரா. "அப்படி என்ன காரணம்?" என மிருதுளா கேட்டாள்.

"உனக்கு எங்க கல்யாணம் எப்படி நடந்ததுனு நியாபகம் இருக்கா?" என பவித்ரா கேட்க, "மறக்கக்கூடிய விசயமா அது." என மிருதுளா கூறும்போதே இருவருக்கும் அந்த நாள் தானாகவே நினைவுக்கு வந்தது. பவித்ரா படிப்பை முடித்ததும் அவளுக்கு வரன் பார்த்து திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர்.

திருமணத்தன்று, அழகான காலை வேளையில், அந்த மண்டபத்தின் பெரிய வாசலை நிறைத்து நெருக்கமாக தென்னங்கீற்றுக்களை கொண்டு போடப்பட்ட பந்தலுக்கு, இரு புறமும் வாழை மரங்கள் கட்டப்பட்டு, பலவித தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மண்டபம் முழுக்க உறவுகள் நிறைந்திருந்தனர்.

உள்ளே அழகான மணவறை போடப்பட்டு, ஐயர் அமர்ந்து சடங்குகளுக்கான மந்திரங்களை ஓதிக் கொண்டிருக்க, மணமகன் அமர்ந்து அதை வழிமொழிந்து கொண்டிருந்தான். பின்புறம் இருந்த சமையல் கூடத்தில் திருமண விருந்துக்கு தேவையான அனைத்தும் ருசியாக தயாராகிக் கொண்டிருந்தது.

சற்று நேரத்தில், "பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ." என ஐயர் குரல் கொடுக்க, மணமகள் பவித்ராவின் அறைக்குள் சென்ற மணமகனின் சகோதரி, கையை பிசைந்து கொண்டு தயக்கத்தோடு வெளியே வந்தாள். அவளது தயக்கத்தை கண்ட அவளது அன்னை, "என்னடி ஆச்சு. பொண்ணு எங்க?" எனக் கேட்க, அவளோ இல்லையென தலையாட்டினாள்.

உடனே அவரோடு மிருதுளாவின் வீட்டினரும் உள்ளே சென்று பார்க்க, அங்கு யாரும் இல்லை. நிமிடத்தில் அந்த இடமே அல்லோகலப்பட்டது. சற்று நேரத்தில் மணப்பெண்ணை காணவில்லை என்பது தெளிவாக, அடுத்து என்ன செய்வது என சிலர் யோசனை செய்து கொண்டிருந்தனர்.

திருமணத்திற்கு வந்த இன்னும் சிலரோ, மணப்பெண்ணையும் அவளது வளர்ப்பையும் பற்றி தூற்றிக் கொண்டிருக்க, பெண்ணின் பெற்றோரோ தனது மகளை பற்றிய கவலையில் ஆழ்ந்தனர். அப்போது சில பெரியவர்கள் வழக்கம் போல, "சரி விடுங்கப்பா. நடந்தது நடந்திருச்சு. போனவளை நினைச்சு நேரத்தை வீணடிக்காம இளைவளை கட்டி வைங்க." என்றனர்.

அதுவரையில் அங்கு நடப்பது புரியாமல் பார்வையாளராக நின்று பார்த்துக் கொண்டிருந்த மிருதுளா இப்போது அதிர்ந்து பார்த்தாள். அவளறிந்த வரையில் அவளது தமக்கைக்கு யார் மீதும் விருப்பம் இல்லை. திருமணம் கூட பிடிக்கவில்லை என கூறவில்லையே. ஒருவேளை தனக்கே தெரியாமல் எதுவும் நடந்திருக்குமோ என யோசித்தாள்.

அதுவே ஒரு மாதிரி இருக்க, இப்போது தன்னை அந்த இடத்தில் நிற்க சொல்பவர்களை நினைத்தால் கோபமாக வந்தது. "என்ன பேசறீங்க. அவுங்க எங்க அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளை. நான் எப்படி கட்டிக்கறது. அதோட நான் இன்னும் படிச்சே முடிக்கல. அதுக்குள்ள கல்யாணமா?" எனக் கேட்டே விட்டாள்.

"ஏன்டி மீனாட்சி, மூத்தவதான் உன் மானத்தை வாங்கிட்டானா. இளையவளும் அதுக்கு குறைச்சல் இல்லாம இருக்கா. இப்ப என்ன எங்கிட்டும் நடக்காத முறையவா சொல்லிபுட்டாக. இந்த கல்யாணத்துக்கு சீர் செனத்தினு எம்புட்டு செலவு பண்ணீயிருப்பீக. அத்தனையும் வீணா போகனுமா?" என்றார் மூத்தவர் ஒருவர் அவளது தாய் மீனாட்சியிடம்.

அதன்பிறகு மீனாட்சியே தனது மகளை போய் மணவறையில் அமர சொல்லவும், அவளோ அதிர்ச்சியாகி மறுமொழி கூற வரும் முன்பே, "அம்மா மேல உனக்கு நிஜமாலுமே மரியாதை இருந்தா போய் உட்காரு." என்றுவிட, அதற்கு மேல் பேசாமல் சென்று அமர்ந்தாள். அதைக் கண்டு அதுவரையில் பேசாமல் இருந்த அவளது தந்தை வாய் திறந்தார்.

"வேணாம் கண்ணு. நீ எழுந்து அப்பாக்கிட்ட வா." என்றவர், "இதோ பாருங்க. இப்பவும் என் பெரிய பொண்ணு தப்பு பண்ணாளான்னு தெரியல. அதுக்குள்ள நீங்களா முடிவு பண்ணி என் சின்ன பொண்ணு வாழ்க்கையை முடிவு எடுக்காதீங்க. ஒருநாளும் இதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன்." என குரலை உயர்த்தி கூற, எழுந்து வந்து தந்தையைக் கட்டிக் கொண்டு அழுதாள் அவள்.

அப்போது, "சரியா சொன்னீங்கப்பா." என்றபடியே உள்ளே வந்தாள் பவித்ரா. அவள் ஒரு பெண்ணின் கையை பற்றியபடி வர, இன்னும் சிலரும் உடன் வந்தனர். "அம்மாடி பவி. உனக்கு ஒன்னும் இல்லையே. நல்லா இருக்கதானே. இவங்க எல்லாரும் யாரு?" எனக் கேட்டார் சுந்தரம்.

"எனக்கு ஒன்னும் இல்லப்பா. நானே சொல்றேன். ஒரு நிமிஷம்." என்றவள் மணமேடையை பார்க்க, இவர்கள் வந்ததுமே எழுந்து நின்றிருந்தான் மணமகன். "என்ன மிஸ்டர். எதுவும் பேசாம நிற்கறீங்க. இந்த பொண்ணை இன்னுமா அடையாளம் தெரியல உங்களுக்கு?" என அவளை முன் நிறுத்தினாள் பவித்ரா.

உடனே மணமகனின் தாய் அவளிடம் வந்து, "என்னம்மா நீ முகூர்த்த நேரத்துல காணாம போயிட்டு, இப்ப வந்து கேள்வி கேட்டுட்டு இருக்க. நல்ல நேரம் முடியறதுக்குள்ள போய் மணவறையில உட்காரு." எனவும், "நான் எதுக்கு அங்க உட்காரனும். இதோ இவளை உட்கார வையுங்க. ஏன்னா இவளைத்தான் உங்க மகன் காதலிக்கறாரு." என்றாள் பவித்ரா.

அனைவரும் அதில் திடுக்கிட, மீனாட்சி முன்னே வந்து, "பவி இங்க என்ன நடக்குதுன்னு கொஞ்சம் சொல்றியா?" எனக் கேட்கவும், "அம்மா இவரும், இந்த பொண்ணும் காலேஜ் படிக்கறப்ப இருந்து லவ் பண்றாங்களாம். ஆனா இப்ப கல்யாணம் பண்ணீக்க சொன்னா வீட்ல பேச பயமா இருக்கு.

பேசாம பிரேக் அப் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாராம் இந்த மனுஷன். ஆனா இந்த பொண்ணுக்கு அவரை மறக்க முடியலயாம். அதனால ஃப்ரண்ட்ஸோட சேர்ந்து கல்யாணத்தன்னிக்கு பொண்ணை தூக்கிட்டா கல்யாணம் நின்னுடும்னு பிளான் போட்டு இருக்காங்க.

அதே மாதிரி என்னையும் கொஞ்ச நேரம் முன்னாடி கடத்திட்டாங்க. அப்பறம் நான் கண்ணு முழிச்சா கேட்டா இதெல்லாம் சொல்றாங்க. அப்பறம் நான்தான், அதெல்லாம் கல்யாணம் நிற்காது. என் தங்கச்சியை பிடிச்சு கல்யாணம் பண்ணி வைச்சிடுவாங்க.

அதனால என் கூட வாங்க. நானே உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கறேனு சொல்லி கூட்டிட்டு வந்தேன். இங்க பார்த்தா நான் நினைச்ச மாதிரிதான் நடந்துட்டு இருக்கு." என நடந்ததை கூறி முடிக்க, ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை இப்படியெல்லாம் நடக்குமா என நினைத்து.

இதுவரையிலும் அமைதியாக இருந்த அந்த மாப்பிள்ளை இப்போது வாயைத் திறந்தான். "ஆமா நானும் இவளும் ரொம்ப வருஷமா லவ் பண்றோம். எங்க வீட்ல காதல்னா யாருக்கும் பிடிக்காது. அது தெரிஞ்சும் காதலிச்சது என் தப்புதான். ஜாடையா சொன்னதுக்கே ரொம்ப கோபப்பட்டாங்க. எனக்கு வீட்ல பேச பயமா இருந்தது. அதான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்." என்றான்.

அவனது தந்தையோ, "ஏன்டா நல்ல பையன் நல்ல பையனு மெச்சுக்கிட்டதுக்கு நல்ல பேரு வாங்கி குடுத்துட்ட." என்றவர், "என்னை மன்னிச்சிடுங்க சம்பந்தி. இதுக்கு மேலயும் அந்த பொண்ணை ஏத்துக்காம இருக்க முடியாது." என்றார்.

பின்பு ஒருவழியாக அதே நல்ல நேரத்தில் அந்த பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் திருமணம் நடந்தேறியது. அதன்பிறகு சிலர், "என்ன இருந்தாலும் உன் பொண்ணு கல்யாணம் நின்னுடுச்சே சுந்தரம். மணமேடை வரை வந்து கல்யாணம் நடக்கலன்னா ராசி இல்லாதவன்னு சொல்லிடுவாங்களே." என கவலைப்பட்டனர்.

"அதெல்லாம் யாரும் கவலைப்பட வேண்டாம். எங்க அக்காவுக்கு இதை விட நல்ல மாப்பிள்ளையா பார்த்து நாங்க கல்யாணம் பண்ணி வைப்போம்." என மிருதுளா வெடுக்கென கூற, "அவங்க சொல்றதுல என்ன தப்பு? நீ என்ன விளக்கம் கொடுத்தாலும் ஊர் உலகம் அப்படித்தான் பேசும்." என்றார் ஒரு பாட்டி.

"அதுக்காக இப்ப என்ன பண்ண முடியும்மா?" என மீனாட்சி நொந்துக் கொள்ள, "இந்த கல்யாணத்துக்கு நம்ம சொந்த பந்தம் எல்லாரும் வந்திருக்காங்க. இதுலயே ஒரு நல்லவனா பார்த்து கல்யாணத்தை முடிச்சிடலாம்ங்கறேன்." எனவும் அதிர்ந்து போனாள் பவித்ரா.

"பார்த்து பார்த்து முடிவு பண்ண கல்யாணத்துலயே இவ்வளவு பிரச்சனை நடக்குது. இதுல திடீர் மாப்பிள்ளையை எப்படி நம்ப முடியும்? அக்கா நீ இதுக்கு எல்லாம் ஒத்துக்காத." என மிருதுளா கூற, அப்போது, "நான் கொஞ்சம் பேசலாமா?" என்ற குரல் கேட்டது.

திருமணத்திற்கு வந்த ஒருவன்தான் அவர்களின் முன்னால் வந்து நின்றான். "என் பேரு கதிரவன். இவங்க என் அம்மா லெட்சுமி. நீங்க தப்பா நினைக்கலன்னா உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி தருவீங்களா மாமா." எனக் கேட்டான் சுந்தரத்தை பார்த்து.

"இன்னும் பொண்ணே தரல. அதுக்குள்ள மாமாவா." என மிருதுளா முணுமுணுக்க, "ஆமாங்க பொண்ணு தரலன்னாலும் மாமா முறைதான்." என அவளைப் பார்த்து கூறிய கதிரவன், "எங்க அப்பா வழியில நீங்க தூரத்து சொந்தம்னு தான் அம்மா இந்த கல்யாணத்துக்கு கம்பெல் பண்ணி என்னை கூட்டிட்டு வந்தாங்க.

இங்க நடந்தது எல்லாம் நான் பார்த்துட்டு தான் இருந்தேன். ஏதோ தப்பாயிடுச்சுனு பரிதாபத்துல உங்க பொண்ணை கேட்கல. நிஜமாலுமே எனக்கு இவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க எனக்கு கல்யாணம் பண்ணி குடுத்தா நான் கண்டிப்பா நல்லா பார்த்துப்பேன்.

அப்பறம் எங்க வீட்ல நானும், எங்க அம்மாவும் மட்டும்தான். நான் டிகிரி வரை படிச்சிருக்கேன். ஆனா ஊர்ல விவசாயம்தான் பார்க்கறேன். சொந்தமா மூணு ஏக்கர் நிலம் இருக்கு. நிலத்துக்கு நடுவுலயே வீடு கட்டியிருக்கோம். உங்க பொண்ணு எங்க வீட்டுக்கு வந்தா போதும்.

திடீர்னு வந்து கேட்கறதால எனக்கு ஏதாவது குறை இருக்குனு நினைக்க வேண்டாம். அப்படி எந்த பிரச்சனையும் இல்ல." என அவன் பேசிக் கொண்டே போக, அவன் தாய் நடுவில் நிறுத்தி, "மீனாட்சி. இந்நேரம் அவரு இருந்திருந்தா உரிமையா உன்கிட்ட வந்து பொண்ணு கேட்டுருப்பாரு. அதே உரிமையில தான் என் பையனும் கேட்கறான்.

உங்களுக்கு விருப்பம் இல்லனா பரவால்ல. அதே மாதிரி இன்னைக்கே இந்த கல்யாணம் நடக்கனும்னு எந்த அவசியமும் இல்ல. நான் தம்பியோட ஜாதகம் குடுக்கறேன். நீங்க பார்த்து ஒத்துவந்தா மேற்கொண்டு பேசிக்கலாம். மத்தபடி திடீர்னு இப்படி கேட்டதால தப்பா நினைச்சிடாதீங்க." என்றார் லெட்சுமி.

இருவரும் வந்து திடீரென இப்படி கேட்டதை யாருமே எதிர்பாராமல் அதிர்ச்சியாகி நின்றனர் மிருதுளாவின் குடும்பத்தினர். ஆனால் பவித்ரா மட்டும், "அப்பா எனக்கு இவரை கல்யாணம் பண்ணீக்க சம்மதம்." என உறுதியாக கூற, மிருதுளாவோ அதிர்ச்சியாகி அவளை பார்த்தாள்.
 

Attachments

  • IMG-20220404-WA0001.jpg
    IMG-20220404-WA0001.jpg
    147.9 KB · Views: 31

Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
#காரிகையேநீஎன்தாரகையே
#தென்பெண்ணைஆறு
#அத்தியாயம்_6

அதானே பொன்ன காணோம்னா,உடனே ஒழுங்கா வளர்க்கலன்னு வளர்ப்பை பத்தி பேசிட்டு ஒரு கும்பல் வந்திருமே😤😤😤கொஞ்சம் கூட மாத்தி யோசிக்கமாட்டங்களா.வேற யாராவதால ஆபத்து வந்திருக்கலாம்னு யோசிங்கடா🤧🤧😤😤🤷

பவித்ரா செய்தது சரியே.சுந்தரம் மகளை நம்புனது க்ரேட்.அப்படிதான் இருக்கணும்❣️❣️

பவித்ராவோட செயலை பார்த்து கதிரவன் கல்யாணம் பண்ண நினைச்சது,அவன் பக்கத்தை சொன்னது எல்லாம் பக்கா👍👍❣️ லட்சுமி அம்மா பேசுனதும் இயல்பா இருந்துச்சு.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,989
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️டீஸர் ல வந்த சீன், மிருதுளா அப்பா முடிவு ரெம்ப சரி 👍👍👍👍.கதிரவன் இப்படி படக்குனு பொண்ணு கேட்டுட்டானே அதுக்கு பவியும் சம்மதிச்சுட்டாளே 😲😲😲😲😲😲😲😲😲
 

தென்பெண்ணை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
73
#காரிகையேநீஎன்தாரகையே
#தென்பெண்ணைஆறு
#அத்தியாயம்_6

அதானே பொன்ன காணோம்னா,உடனே ஒழுங்கா வளர்க்கலன்னு வளர்ப்பை பத்தி பேசிட்டு ஒரு கும்பல் வந்திருமே😤😤😤கொஞ்சம் கூட மாத்தி யோசிக்கமாட்டங்களா.வேற யாராவதால ஆபத்து வந்திருக்கலாம்னு யோசிங்கடா🤧🤧😤😤🤷

பவித்ரா செய்தது சரியே.சுந்தரம் மகளை நம்புனது க்ரேட்.அப்படிதான் இருக்கணும்❣️❣️

பவித்ராவோட செயலை பார்த்து கதிரவன் கல்யாணம் பண்ண நினைச்சது,அவன் பக்கத்தை சொன்னது எல்லாம் பக்கா👍👍❣️ லட்சுமி அம்மா பேசுனதும் இயல்பா இருந்துச்சு.
Thanks sister..
 

தென்பெண்ணை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
73
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️டீஸர் ல வந்த சீன், மிருதுளா அப்பா முடிவு ரெம்ப சரி 👍👍👍👍.கதிரவன் இப்படி படக்குனு பொண்ணு கேட்டுட்டானே அதுக்கு பவியும் சம்மதிச்சுட்டாளே 😲😲😲😲😲😲😲😲😲
Thanks sister..
 

Chitra ganesan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
269
இந்த நாலு பேரு நாலு விதமா பேசி பேசியே சம்மந்தப்பட்டவங்களை முடிச்சிடுவாங்க.அக்கா காணவில்லைன்னா உடன் தங்கையை கல்யாண பொண்ணு ஆக்க சொன்னாங்க.இதுல அக்காவை பற்றி தப்பா வேற பேச்சு.அடுத்து எல்லாம் சரி ஆனவுடன் உடனே கல்யாணம் பண்ண சொல்லி உபதேசம்.நாலு பேரு ராசி இல்லைன்னு சொல்லுவாங்கன்னு..🙄🙄அந்த நாலு பேரே இவங்க தானே🤨
 

தென்பெண்ணை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
73
இந்த நாலு பேரு நாலு விதமா பேசி பேசியே சம்மந்தப்பட்டவங்களை முடிச்சிடுவாங்க.அக்கா காணவில்லைன்னா உடன் தங்கையை கல்யாண பொண்ணு ஆக்க சொன்னாங்க.இதுல அக்காவை பற்றி தப்பா வேற பேச்சு.அடுத்து எல்லாம் சரி ஆனவுடன் உடனே கல்யாணம் பண்ண சொல்லி உபதேசம்.நாலு பேரு ராசி இல்லைன்னு சொல்லுவாங்கன்னு..🙄🙄அந்த நாலு பேரே இவங்க தானே🤨
Ama sister. thank you..
 
Top