• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
காதலனின்மிரட்டலைவிட, செந்தில்நாதனின் கடவுள் பற்றிய மிரட்டல் அவள் மனதை உலுக்க விக்கியின் கடைகண் கெஞ்சல்களை எல்லாம் தாட்டிக்கழித்துவிட்டு உண்மையை உரைத்தாள் டீனா.

ரோஹன் விட்ட அறையில் அதன்பிறகு அவன் இருக்கும் பக்கமே தலையை காட்டிடவில்லை நீத்து. ஆனால் ரோஹன் அப்படியே எல்லாம் விட்டுவிடவில்லை. அவளது நண்பர்கள் வரும்போது அவள் கேட்டுக்கொண்டபடி முன்பே முன்பணம் இன்றி புக் செய்யப்பட்ட காட்டேஜ்-ம், ஹோட்டல் அலுவலர் என்ற முறையில் சில சலுகைகளும், நியூ ஜாயினி என்று கூறி அவள் மேலும் கேட்டுக்கொண்ட சில சலுகைகள் என அனைத்தையும் சிறிதும் குறையில்லாமல் ஏற்பாடு செய்து கொடுத்தான்.

அவள் எதிர்பார்த்தது போலவே விகாஸ், சயந்தன், ராக்கேஷ் மற்றும் டீனா நால்வரும் வந்துவிட, வந்த முதல் நாளே தன் திட்டத்தைக் கூறி அவர்களது கொண்டாட்டத்தை கெடுக்க விரும்பவில்லை நீத்து. பகலில் சுற்றியடித்துவிட்டு, இரவு அவர்களது குடிலில் தஞ்சம் அடைந்தனர் நண்பர்கள் நால்வரும்.

என்ன தான் நால்வரும் ஒன்றாக சுற்ற ஆரம்பித்தாலும் நாள் முடியும்போது காதல் ஜோடிகள் தங்கள் உலகில் தனியாக சஞ்சரிக்கச் செல்வது எப்போதும் வழக்கம் தான். சொல்லப்போனால் அவர்களைப் பொருத்தவரை இது டேட்டிங் அல்லது திருமணத்திற்கு முன் ஹனிமூன் என்று கூட சொல்லலாம்…
இரவு நண்பர்களின் காட்டேஜ்ஜிற்கு சென்ற நீத்து தனக்கு நேர்ந்த அவமானத்தைக் கூறிட, நால்வரும் சற்றே ஆக்ரோஷம் கொண்டனர். “ஹோட்டல் அவனுதா இருந்தா கை வைப்பானா அவன்?”
“நீ ஏன் சும்மா நின்னே .. பதிலுக்கு ஒன்னு கொடுத்திருக்க வேண்டியது தானே!” என்று ஆளுக்கு ஒருபுறம் திட்டத் தொடங்கிட, நீத்துவின் முகம் மீண்டும் அரைவாங்கியதை நினைத்து அவமானத்தில் சுருங்கியது.

அரசியல் பின்புலம் கொண்ட விக்கி “இப்போ எதுக்கு வொரி பண்ணிக்கிறே நீத்து… கவலையவிடு என் அப்பாகிட்ட சொல்லி இந்த ஹோட்டலையே ஒன்னு இல்லாம பண்ணிடலாம்” என்றான்.

நீத்துவிற்கு அவனது வார்த்தைகள் பக்கபலமாக தைரியம் தருவதாக அமைந்தாலும் அவளது திட்டம் அதுவல்லவே!

“நோ விக்கி… எனக்கு அது தேவையில்லை… யார் முன்னாடி என்னை அடிச்சு அசிங்கப்படுத்தினானோ அவ எல்லார் முன்னோடியும் அசிங்கப்படனும்…”

“நீயும் அவளை பதிலுக்கு அடிக்கனுமா? அதுக்கு எதுக்கு நாங்க… திரும்ப நீ தர்ம அடி வாங்கும்போது கவுன்ட் பண்றதுக்கா?” என்று ராக்கி கேலியாகக் கேட்டு அவளை காண்டாக்கினான்.

“தர்ம அடி இப்போ உனக்கு தான் தரப்போறேன் பார்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு ரிக்கேஷிற்கு பதிலுரைத்தாலும் நண்பனின் கேலியில் சற்றே கோபம் தனித்திருந்தாள். அத்தோடு தன் திட்டத்தையும் நண்பர்களிடம் கூறத் தொடங்கினாள்.

"அவளை தனியா அனுப்பி வைக்கிறேன்… அவ பொதுவா ஆண்கள்கிட்ட சரிக்கு சரி பேசினாலும் அப்படி இப்படி இருக்க விரும்பமாட்டா… சோ கை வெச்சு மட்டும் அனுப்பிடுங்க… அதை நாலு பேர் முன்னாடி சொல்லிக் காமிச்சாலே ஆட்டோமேட்டிக்கா அடங்கிடுவா….. அவ கூட சேத்து வெச்சு பேசினதுக்கு தானே அவன் என்னை அடிச்சான். இனி இந்த ஹோட்டலே அவளை தப்பா பேசனும்… அப்போ என்ன செய்யிறான்னு பாப்போம்" என்று திட்டம்போட்டுக் கொடுத்தாள்.

அப்போதும் விக்கி தான் நம்பிக்கை கொடுத்தான். “அவ்ளோ தானே அப்படியே செஞ்சிடலாம்… ப்ரச்சனைனு வந்தா இருக்கவே இருக்கார் என் அப்பா… அவர் பெயரை மட்டுமே சொல்லியே தப்பிச்சுக்கலாம்… ஒரு பிரச்சனையும் இல்லே” என்றான்.

நண்பர்கள் தனது திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்துவிடவே, மஹி அவமானப்பட்டு நிற்கும் தருணத்தை கற்பனையில் கண்டு நிஜத்திலும் நடக்கும் நாளை எண்ணி காத்திருந்தாள் நீத்து. அடுத்த நாளே அதற்கான சந்தர்ப்பம் கிடைத்திட, அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்து மஹியின் முன்னால் வந்து நின்றாள் படபடத்தபடி…

“மஹி என் ஃப்ரெண்ட் சயந்த் தெரியும்ல… அவனுக்கு அடி பட்டிருக்கு… என்னனு வந்து பாரேன்” என்றாள் பதற்றமாக…

“என்னாச்சு நீத்து? எப்படி அடிபட்டது?”

“சேட்டை தான்… ஃப்ளெவர் வாஷ்-ஐ எடுத்து கிரிக்கெட் விளையாடினானாம்… இப்போ வெசெல் உடஞ்சு கையில குத்தி ரத்தம் கொட்டிட்டு இருக்கு…”

“அவ்ளோ தானா? ஃபஸ்ட் எய்டு கிட் எடுத்துட்டு போ… ஹோட்டல் ல யாராவது டாக்டர்ஸ் இருக்காங்களானு பாக்குறேன்… அப்படி யாரும் இல்லேன்னா நம்ம ஹோட்டல் டாக்ஸிலயே நியர் பை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்… ஹவுஸ் கீப்பிங் அனுப்பி வைக்கிறேன்… க்ளாஸ் பீசஸ் க்ளீன் பன்றதுக்கு…” என்றிட நீத்துவிற்கு இப்போது என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தாள்.

“அப்போ நீ வந்து பாக்கமாட்டேயா?” என்றாள் எங்கே தன் திட்டம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற கடுப்பில்.

“இந்த மாதிரி பிரச்சனைக்கு எல்லாம் நான் போவதில்லை நீத்து… எல்லாருக்கும் என்ன ரூல்ஸ்ஸோ அதே தான் உன் ஃப்ரெண்ட்ஸ்-க்கும்”

இவளிடம் சத்தம் உயர்த்தி பேசியோ அல்லது ரோஹனிடம் பேசியது போல் ஊழியர் என்ற முறையில் சலுகை கவனிப்போ கேட்டு நின்றாலும் காரியம் நடக்காது என்று அறிந்து கொண்டவள் மஹியிடம் அடங்கியே சென்றாள்.

“அதுக்கு இல்லே மஹி… அவனுங்க நான் சொன்னா கேக்கமாட்டானுங்க… நீ இன்னொரு முறை இப்படி உடைக்கிற வேலையெல்லாம் இருக்கக் கூடாதுனு கொஞ்சம் கண்டிச்சு சொன்னா கேட்டுப்பானுங்க… அதுக்கு தான் சொல்றேன்… எனக்காக வந்து சொல்லேன்…”

மஹியும் நீத்துவின் குணத்தை அனுபவப் பூர்வமாக அறிந்தவள் என்பதால் இதற்கெல்லாம் மசிந்து போகாமல், “லிசன் நீத்து, இன்னொரு முறை அட்வைஸ் பண்ணி அசிங்கப்பட நான் விரும்பலே! அதுவும் இல்லாம உன் ஃப்ரெண்ட்ஸை பாத்தா யாரும் காசு இல்லாம, கஷ்டபடுற ஃபேமிலி மாதிரி தெரியலே! சோ அவங்க உடைக்கிற பொருளுக்கு அவங்க ப்பே பண்ணிக்கட்டும்… இப்போ டாக்டரை வர சொல்றேன்” என்று இத்தோடு தன் வேலை முடிந்துவிட்டது என்று ஒதுங்கிக் கொள்ள நினைத்தாள்…

மஹி சொல்வது போல் நீத்துவின் நண்பர்கள் மட்டுமல்ல, நீத்து ஒருவரிடம் இரண்டாம் முறையாக பேசுகிறாள் என்றாலே அவர்கள் நிச்சயம் பணம் படைத்தவர்களாகத் தான் இருப்பார்கள். மஹியின் அனுமானம் சரியே என்ற போதும் 'காரியம் ஆக காலையும் பிடி' என்பது போல் கடைசி முயற்சியாக அனுதாபத்தைப் பெற நினைத்து பேச்சை வளர்த்தாள்.

“மஹி நீங்க இன்னும் நான் சொன்னதை மனசுல வெச்சுட்டு தானே இப்படி பேசுறிங்க… நான் தான் சர் அடிச்ச அன்னைக்கே உங்ககிட்ட மன்னிப்பு கேட்டேனே! இன்னும் நீங்க என்னை மன்னிக்கலேயா?” என்று அப்பாவியாக வினவி நடிப்புக்கலையை இறக்கினாள்...

மஹி எதற்கும் இறங்கிப் போகவில்லை. “மன்னிக்கிறதுக்கும் மறுக்குறதுக்கும் சம்மந்தம் இல்லே நீத்து… நீ பேசியதை எப்பவோ மறந்துட்டேன். என்னைப் பத்தி தெரியாதவங்க, ஒரு வார்த்தை தப்பா சொல்லிட்டாங்கன்றதுக்காக நான் தப்பான பொண்ணு ஆகிட மாட்டேன்… ஒரே விஷயத்தை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பார்ப்பாங்க… அது அவங்கவங்க இஷ்டம். என்னை பொருத்தவரைக்கும் நீ என்னை எப்படி பார்க்குறேயோ அது தான் உன் கேரக்டர்… சோ அன்னைக்கு நீ வெளிப்படுத்தியது என் குணத்தை இல்லே… உன் குணத்தை. அதை நான் அன்னைக்கே மறந்துட்டேன். இப்போ நான் மறுக்கிறதுக்கு காரணம், இது என் வேலை கிடையாது… எனது பணியே இல்லாத போது அதில் நான் ஏன் தலையிட வேண்டும்? … அதை மற்றவர் சுட்டிக்காட்டி என்னை ஏன் அவமானப்படுத்த வேண்டும்... புரியுதா?” என்று நிறுத்தி நிதானமாக தெளிவாக மறுத்து உரைத்தாள். மஹி கூறிய கடைசி வரிகள் ரோஹனை நினைவில் வைத்து தான்.
நீத்துவோ தனது திட்டம் தோல்வியடையவே, எரிச்சலுற்று தன் நண்பர்களிடம் சென்று ‘இன்று ப்ளான் கேன்சல்’ என்று கூறுவதற்காக மீண்டும் அவர்களது காட்டேஜ்-ஜிற்கு சென்றாள். அங்கே நீத்துவின் நண்பர்கள் நால்வரும் மஹிக்காக காத்திருந்தனர். ஆனால் தங்கள் தோழியையே கண்டவுடன், “என்னாச்சு?” என்று வெகு வேகமாக விசாரித்தது விக்கி தான். பின் டீனாவின் முறைப்பில் அடங்கி அமைதியாகினான்.

என்ன தான் டீனா தன் நட்பிற்காக நீத்துவின் பக்கம் நின்று அவளது யோசனைகளுக்கு சம்மதித்தாலும், மனதில் சிறு புள்ளி அளவில் ஒரு உறுத்தல் இருந்தது. அதுமட்டும் அல்லாமல் தன் காதலன் ஒரு சாதாரண ஆண் மகனாய் பெண்கள் விடயத்தில் சற்றே தடுமாறுகிறானோ என்ற பயம் அவள் மனதில் தோன்றாமல் இல்லை. தோன்றாமல் இருந்திருந்தால் தான் அதிசயமே! ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக அவமதிக்கத் துடிக்கும் ஆண்ணின் மேல் சந்தேகம் வருவது இயல்பு தானே! பெண்கள் உடலின் மீதான ஆராய்ச்சிப் பார்வையும், ஈடுபாடும் தானா இந்த ஆர்வத்திற்கு காரணம் என்ற சந்தேகம் டீனாவிற்கு நொடிப்பொழுதில் தோன்றி மறைந்தது.

இவர்களின் நயன சம்பாஷனைகளை கவனிக்காத நீத்து “அவ கொஞ்சம் பிடி கொடுக்காம பேசுறா? அவளை வர வைக்கிறது அவ்வளவு ஈசி கிடையாதுனு நினைக்கிறேன்… வேற ப்ளான் பண்ணலாம்” என்று கூறியபடி அதி தீவிர சிந்தனையில் மூழ்கினாள் நீத்து….

கையில் அடி பட்டிருந்த சயந்த்-திற்கு, ரத்தம் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே வெளியேறியிருந்ததில் சற்றே களைப்பாக உணர்ந்தவன் நீள்சாய்விருக்கையில் அமர்ந்திருந்தபடியே பின்னால் சாய்ந்து வசதியாக அமர்ந்து கொண்டான்.

மஹி கூறியது போல் சற்று நேரத்தில் மருத்துவர் வர உள்ளங்கையில் பீங்கான் சற்றே ஆழமாக இறங்கியிருந்ததால் ஆன்டிசெப்டிக் சொல்யூஷன் கொண்டு சுத்தம் செய்து கட்டிட்டுவிட்டு ஒரு ஊசியோடு, சில மாத்திரைகள் பரிந்துரைத்துவிட்டுச் சென்றார்.

அன்றைய நாள் வெளியே செல்ல முடியாமல் போன கடுப்பில் இருந்த ராக்கி, நீத்து மற்றும் சயந்த் இருவரையும் வருத்து எடுக்கத் தொடங்கினான்.

அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத டீனா சற்று நிம்மதியாகக் கூட உணர்ந்தாள், மஹி வராமல் போனதை நினைத்து. எழுந்து சென்று தன் அன்றாட பணிகளில் ஒன்றான, தனது உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் தேனில் ஊறவைத்த நெல்லிக்கனி சாப்பிட எடுத்து வந்து விக்கியின் அருகே அமர்ந்தாள்… குழந்தை போல் இதழ்களில் தேனை ஒழுகவிட்டு உண்பவளை காதல் கண் கொண்டு நோக்கினான், காதலெனும் காளையவன்.

அவள் இதழ்களில் வலிந்த தேனை தன் விரல் கொண்டு வலித்து எடுத்து தன் இதழ்களுக்கு மாற்றிச் சுவைத்தான். காதலனுக்கே உரிய காதல் பெருக்கில் அவள் இதழிலிருந்து தன் விரல்களை பிரித்து எடுக்க மனம் இல்லாமல், “இன்னும் கொஞ்சம் இருக்கு… அசையாம இரு” என்று கூறி மீண்டும் ஒருமுறை இதழ் வறுடினான். காதல் தீர்ந்து மோகம் முழைவிட கண்கள் நான்கும் கட்டிக்கொண்டன. சுற்றம் மறந்து அவள் மெல்லிதழ்களை தன் விரல் வறுடலாலும், காந்த நயனங்களை தன் கூர்விழி வறுடலாலும் மூச்சுத் தினறச் செய்தான். பெண்ணவளும் சலைக்காமல் அவன் வறுடல்களை தாங்கி அசையாமல் அமர்ந்திருந்தாள்.

சுற்றம் மறந்து நான்கு நயனங்களின் தீண்டல் நான்கு இதழ்களின் தீண்டலாக மாறிப்போக ராக்கியின் கவனம் இவர்கள் புறம் திரும்பி இவர்களைத் திட்டத் தொடங்கினான். “இதோ ஆரம்பிச்சுட்டான்… இனி இவனுக்கும் இவளுக்கும் நேரம் காலம் கிடையாது… உங்களால நான் தான் இப்போ அவதிப்படுகின்றேன்” என்று கத்தி விட்டு அறைக்குள் சென்று படுத்துக் கொண்டான்.

ராக்கியின் செயல்கள் காதில் விழுந்ததே ஒழிய காதல் ஜோடிகளின் கண்ணிலும் விழவில்லை, கருத்திலும் பதியவில்லை. தங்கள் மோனநிலைக்கு தடங்கள் வராதபடி தனிமை தேடி, நீத்துவிடம் வெளியே செல்வதாகக் கூறிவிட்டு, வழக்கம் போல் அருகில் இருக்கும் மூங்கில் காட்டிற்குள் தஞ்சம் அடைந்தனர்.
★★★★★

“அதுக்கு அப்புறம் என்ன நடந்ததுனு எனக்கு தெரியாது… விக்கி சொன்ன மாதிரி நாங்க வெளியே போயிட்டு வரும்போது சர் ராக்கேஷ்-அ அடிச்சிட்டு இருந்தார். சயந்த் செத்துட்டானதும் ஒரு பயத்துல எங்களை காப்பாத்திக்கிட நீத்து செஞ்ச எதையும் நாங்க வெளியே சொல்லலே” என்று குமுரிக்கொண்டே கூறி முடித்தாள்.

இத்தனை நாள் ரோஹன் மேல் தான் குற்றம் என்ற கோணத்தில் மட்டுமே விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் டீனாவின்
கூற்றால் மாற்றம் ஏற்பட்டிருந்தது
 
Top