தன்னைத் தானேச் சுற்றிச் சூரியனை வெகுதூரமாய் காண்பித்துக் கொண்டிருந்த இந்த புவியின் பரந்த பிரதேசம் முழுவதும் வெளிச்சம் இயல்பாய் பரவிகொண்டிருந்தது.
சுடும் நீரிலிருந்து தன் வழியில் மேல்நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த ஆவியை, அவள் தன் மென் கையால் மெதுவாய் அவன் பக்கம் திசை திருப்பிவிட, அது அவனின் மூச்சோடு உள் நுழைந்து , விடியல் கலவியின் பின் அவனைச் சூழ்ந்த ஆழ்மன தூக்கத்தை களைத்துவிட்டப் பின்னும் இமைகளை திறக்க்காது, அவளை மோப்பம் பிடித்து, குனிந்திருந்த அவள் கழுத்தோடு கைபோட்டு இழுத்து, மார்போடு நெருக்கி, நெற்றியில் இதழ் குவித்து முத்தம் வைத்து இமை திறந்து சிரித்தான் மனைவியின் முதல் குழந்தையாய்.
மாலையில் குவிந்து காலையில் விரிந்தாடும் குளத்து மலர் போல கண்ணோரங்கள் சுருங்கச் சிரித்தாள் கணவனின் இரண்டாம் தாய்.
எத்தனை முக்கிய வேலைகள் இருந்தாலும் அவன் இப்படித்தான் துயிலெழுவான். அவள் இப்படித்தான் துயிலெழுப்புவாள். திருமண பந்தத்தில் இணைந்த இந்த ஈராண்டுகளில் ஒரு நாள் கூட அழுத்ததில்லை இந்த காலை தேனீரும் நெற்றி முத்தமும்.
" சொந்த நிலம் வாங்க காசு தேடி
ஒரு சனம் வந்தது சிலோன் நாடி
உடல் தேற்ற உணவுண்டு
உறங்க வசதி வீடுண்டு
பணம் தேட வேலையும் உண்டு
கைநிறைய காசு கொண்டுபோக
கப்பலில் கொஞ்சம் நடையில் கொஞ்சம்
ஒரு சனம் வந்தது சிலோன் நாடி "
எழுதி முடித்து வாசித்துப் பார்த்தாள் யாத்ரா.
தேனீர்கோப்பையோடு வெளியே வந்தவனின் செவிகளில் அவள் வரிகள் தெளிய ,
"ம்...... யாரு நம்ம சனம்தானே? உழைச்சி காசு தேடிகிட்டுப் போக வந்து இன்னமும்தான் இங்க உழைத்து கொட்டிட்டுருக்கம். உழைப்ப மட்டும் உரிமையா எடுத்துக்குறாங்க. ஆனா உழைப்பாளிகளை இன்னமும் விருந்தாளிகள்னுதான் நினைச்சிட்டுருக்காங்க..." என்று
பதிலாய் அக்கினியை கக்கிக்கிக்கொண்டே முற்றத்து ஊஞ்சலில் அமர்ந்திருந்த அவளின் பக்கத்தில் சென்று அமர்ந்தான் ஔவியன்.
அடுத்த வரிகளை எடுத்து விலாசினாள் யாத்ரா.
"ஆதிக்கம் பெருக்க நிலம் தேடி வந்தது வெள்ளை தோல்கள்!
கோப்பி, தேயிலை, இறப்பர்
தன்னுள் விதைத்து
தோட்டமாகினாள் சிலோன் தாய்!
இலாபம் தேட நல்ல நிலம் கண்டுவிட்ட வெள்ளைத் தோல்கள்,
வேலை வாங்க நல்ல ஊழியர்களுக்கு எங்கே போகும்? "
" அட கெட்டிக்காரி தாண்டி யாத்ரா நீ . வெள்ளைகாரன்கள ஒருமையில சொல்லிட்டு பூமி தாயை உயர்திணையில சொன்ன பார். அங்க நிக்கிறடி நீ. "
"காடு மலையேறி வேலை செய்ய யாரு துனிந்து வருவா? ஏமாந்து போய் வந்தாங்கள்ள? நம்ம வம்சாக்களத்தான் ஈசியா ஏமாத்தி வேலை வாங்கலாமே. அது இன்னும் தான் நாங்க நிறுபிச்சிட்டுருக்கம்"
எதிர் திசையிலிருந்து மூன்றாவது குரலாய் ஒரு குரல் அவர்களை நெருங்கிக்கொண்டிருந்தது.
" அட.... இலங்கோ அண்ணன். வாங்க வாங்க "
உற்சாகமாய் வரவேற்றாள் யாத்ரா.
" என்ன கம்பனும் ஔவையும் .... விடுமுறை நாள சிறப்பா கழிக்கிறிங்க போல.
ஒய்யாரமாய் சிரித்த ஔவியன்,
"அப்படின்னா நீர்தான் ஒட்டகூத்தரோ...?" விளையாட்டாய்ச் சொல்லி மறுபடியும் ஒய்யாரமாய் சிரித்து நிறுத்தினான்.
"அண்ணா... கம்பனும் ஔவையும் இல்லைங்க அண்ணா. வள்ளுவன் வாசுகின்னு சொல்லுங்க"
" மச்சான்....., இவள் வாய்த்திறக்காத வள்ளுவனின் வாசுகி இல்ல..... எழுத்தாளயே ருத்ர தாண்டவம் ஆட்ற என் வாசுகியாக்கும்."
ஓரக்கண்ணால் யாத்ராவை பார்த்து "நான் சொல்வது சரிதானேடி" என்பது போல் ஒற்றைக்கண்ணடித்தான் குறும்புக்காரன்.
"அண்ணா ரொம்ப நேரமா தூர நின்று எங்கள கவனிச்சிட்டுதான் வாறிங்கப் போல.."
" ஆமாம்மா.... உன் வரிகளல்லாம் கேட்டுகிட்டுதான் வாறேன். "
" ஆமாம்...தமிழ் நாட்டுலருந்து தொழிலாளிகளாகத்தான் நம் முன்னோர்கள் இங்க வந்தாங்களா? "
" ஆமா மச்சான், இதுல என்ன உனக்கு சந்தேகம்? "
" இல்ல.....அடிமைகளாக வந்தவங்க அடிமைகளாக வந்தவங்கன்னு சொல்றாங்களே.... அதுதான் கேட்டேன்."
" மச்சான்....இந்தா சொல்றென் தெளிவா கேட்டுக்க. இந்தியாவில..... நிலம் வைத்திருந்தவங்கள பன்னையார்னு சொன்னாங்க. அந்த பன்னையாளர்களின் நிலங்களில் வேலை செய்த தொழிலாளிகளுக்கும் சொந்த நிலம் வாங்கனும்னு ஆசை துளிர்விட காசு தேடினாங்க.
அப்படி காசு தேடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தான், வெள்ளைக்காரன் தேயிலை, இறப்பர்,கோப்பி பயிர் செய்கைக்காக இலங்கை நாட்டு நிலங்கள குத்தகைக்கு எடுத்தாங்க. அந்த தோட்டங்கள்ள உள்நாட்டு பிரஜைகள் தொழில் செய்ய விருப்பம் காட்ட இல்ல. அதுனாலதான் தமிழ்நாட்டுலருந்து தொழிலாளிகள இலங்கை நாட்டுக்குள்ளயும் கொண்டுவர நினைத்தான்.
வெள்ளையனின் இந்த எண்ணத்தை நம்ம கங்காணிமார் சிறப்பாக நடித்து நிறைவேற்றினாங்க.
நிறைய சம்பளம், நல்ல வேலை, தங்க வீடுனு ஆச வார்த்தை பேசி தமிழ் நாட்டுலருந்து மக்கள இந்த மண்ணுக்கு இறக்குமதி செய்தாங்க. அப்படி வந்தவங்கதான் நாம்ம சனம். "
அழகாய் ஏற்ற இறக்கங்களோடு ஔவியன் கதைச் சொல்லும் பாணியில் இருவரின் ஆர்வமும் தொற்றிக்கொண்டது.
" அப்படினால்.... சம்பளத்துக்கு வேலைக்கு வந்த தொழிலாளிகள். அப்படித்தானே? "
மீண்டும் கேட்டு மனதில் பதிவு செய்தான் இலங்கோ .
"ஔவியன்..., இந்த காலத்துல தொழில் வாய்ப்புக்காக வெளிநாட்ட தேடி போற மாதிரின்னு சொல்லு. "
"ஆமாம் , என்பது போல தலையாட்டி அவமோதித்தான் ஔவியன்.
" ஆமா... ஆமா... இப்பவும் அரைவாசிக்கு ஆரைவாசி நல்ல இடம், நல்ல தொழில், நல்ல சம்பளம்ன்னு சொல்லி தானே அனுப்புறாங்க. அங்க போய் பார்த்தாதானே விசயம் புரியும்." நகைச்சுவை தோரணையில் இலங்கோ சொல்லி முடித்தான்.
" நிலம் வாங்க புறப்பட்ட கால்கள்
நிற்காமல் இன்னும் தான் மலையேறுகிறது
இருநூறு வருடங்களும் ஆகிப்போனது
இன்னனுமா ஒரு ஏக்கர் காணிக்கு
உழைக்காமல் போனது இந்த சனம்?
முயற்சியின்மையின் விதியா
முயற்சிக்காமல் இருக்க சதியா? "
"தங்கச்சிமா..... இது சதியெல்லாம் ஒன்னுமில்ல். நம்ம சனத்தோடு தலைவிதி. சரி போய்ட்டு போகுது. செத்தா புதைக்கிறதுக்கு ஆறடி நிலம் இருந்தால் போதாதா? இந்த இயற்கை பூமி நம்மள அரவணைக்கும் போது அரசும் சட்டமும் கொடுக்குற உரிமை எதுக்கு? "
தைரியம் அறுந்த வலிகள் இலங்கோவின் வார்த்தைகளில் தத்துவங்களாக வந்து விழுந்தாலும் ,
"உழைத்து உழைத்து தேய்ந்தாலும் பூமியில உரிமையில்லையே? நமக்கு சொந்தமில்லையே " எனும் அணைந்த தணல் இலங்கோவின் ஆழ்மனதில் உறங்கிக்கொண்டிருப்பது அவனுக்கே தெரியாது.
" மனம் அழுத்து நோக்கம் மறந்து
ஆழ்மன குழியில் புதைந்து அணைந்துக் கிடக்கும் தணலை ஊதி தீக்குழம்பாய் மாற்றுவார் யாரோ? "
ஏதோ புரிந்துக்கொண்டவளாய் அவளது ஏட்டில் எழுதிவிட்டு வாசிக்காதுவிட்டாள் யாத்ரா.
" ஆமா ஔவியன்......அதென்னா ....? அரசும் சட்டமும் கொடுக்குற உரிமை? இந்த கம்பனிகாரன்கதானே நம்மள , இந்த தோட்டங்கள நிர்வகிச்சிட்டுருக்காங்க?"
"மச்சான் ....உங்க கேள்வி சரி. என்கிட்ட பதில் இருக்குது. சொல்லுறேன் கேளுங்க." ஔவியன் கதையை ஆரம்பிக்கையில் ,
இடைநிறுத்திவிட்டு அசட்டுதனமாய் ஒரு சிரிப்பையும் வைத்துவிட்டு ,
"கேட்கனும்னு ஆவலாதான் இருக்கு. ஆனால் பிறகு உட்கார்ந்து ஆறுதலா பேசலாமே. " என இருக்கையிலிருந்து எழுந்த வேகத்தில்,
"சரி தங்கச்சிமா , நான் சதாசிவன் வீட்டுக்கு கொஞ்சம் போய்ட்டு வாறேன்."
சொல்லி திரும்பினான் இலங்கோ.
"என்னா விசயமா அண்ணே அந்த பக்கம் போறீங்க? அதுவும் காலைலயே...?" உரிமையோடு கேட்டாள் யாத்ரா.
" அது வந்துமா..... லொறி போய் போய் சதாசிவம் வீட்டோட போற ரோடு கொஞ்சம் தாறுமாறா உடஞ்சிதானே கிடந்துச்சி. அவர்ட மகளோட
கல்யாணத்துக்காக....வார வண்டிகள மேல எடுக்கணும்னு சொல்லி உடஞ்சிகிடந்த பகுதியோட சேர்த்து கொங்றிட் போட்டுவிட்டாங்கதானே? அதுக்கு தொர ஏதோ சத்தம்போட்டுருக்காரு. "
நின்று பேச பொறுமையின்றி போய்க்கொண்டே கதையை தொடர்ந்தான்.
"நானும் போய் என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு வாரேன். நாங்களும் ஊர் விஷயங்கள கொஞ்சம் தெரிஞ்சிக்கதானே வேணும். "
தூரம் போக போக சத்தமும் கூடிக்கொண்டே போனது. இறுதியாக
" பகல் சாப்பாட்டுக்கு வருவேன். சமைச்சி வச்சிருமா...." என்பதோடு உருவம் மறைய குரலும் மறைந்தது.
"எண்ணடி எழுதிட்டுருக்க? புருஷன்காரன் நா , பக்கத்துல இருக்கும்போது என்னைய ரசிக்காமல்.... அப்படி என்னத்துல மூழ்கிகிடக்குற?"
பெண்களுக்கே பிடித்தமான பாணியில் காரத்தில் சீனி சேர்க்கும் விரலுக்காய் அச்சார் போல கடிந்தும் கொஞ்சியும் உரிமையாய் அவளை வளைத்து கையிலிருந்த கவிதை ஏடுகளை பிடுங்கிக்கொண்டு அவள் மடி சாய்ந்தான்.
"என்ன இது..... ? தமிழருவிக்கே எழுத்து பிழைக்கிறதே? "
கடைசியாய் எழுதிய கவிதை இலங்கோவின் உணர்வை ஒலிப்படமெடுத்து எழுதியதால். அந்த கவிதைக்கு கீழ் "இலங்கோ " என பெயர் எழுதியிருந்தாள் யாத்ரா.
கணவனிடமிருந்து இலக்கண தமிழில் வந்த கேள்விக்கு, அதே தொனியில்
" என் பாட்டில் என்ன பிழை கண்டீர் ?" என
அவன் அவளது மடியிலிருந்து தாய்மையை கொடுத்து, உணர்த்தும் காதலில் பாதி நனைந்தவளாய் மெதுவாய் கேட்டாள்.
"இலங்கோவில்தான் பிழையுண்டு? "
" இலங்கோவில் என்ன பிழையோ?"
" வெள்ளிக்கால் "ள" வில் அல்லவா இளங்கோவை எழுத வேண்டும்?"
" அது..... சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ. இது இலங்கை தேசத்தில் பிறந்த இலங்கோ.... புரிகிறதா தலைவனே"
" ஓஹோ...... இலங்கை + கோ. அப்படியா தலைவி? "
"அப்படியேதான் தலைவா. அதாவது இலங்கை அரசன் என பொருள்படும். "
" ஆமாம் யாத்ரா..... இப்படியொரு பெயர் இருக்கதாகவும் அந்த பெயருக்கு இப்படியொரு அர்த்தமிருக்கதாகவும் தமிழ்மொழி ஆய்வாளர்களுக்கு தெரியுமோ...?"
குரலில் அனுமதியில்லாமலே வந்த ஏளனச் சிரிப்பை மறைத்து நகைச்சுவையை விழுங்கி மிக அடக்கமாகவே கேட்டான். ஆனாலும் அவன் விழுங்கியதும் மறைத்ததும் அவளுக்கு புரியாமல் இல்லை.
"இதுவரை தெரியவில்லையென்றால் இனி தெரிந்துக்கொள்ளட்டும்." தன்னம்பிக்கையோடு சற்று சத்தமாகவே சொன்னாலும் பொய் கோவம் பூண்டு முகத்தை திருப்பிக்கொள்ளதான் செய்தாள்.
" என் பொண்டாட்டியோட நா விளையாடாமல்....... " என கேட்டு அண்ணார்ந்து பார்த்து அவள் முகத் தாடையை தொட்டு தன்னை நோக்கி திருப்பி,
" வேற யார் விளையாடுவா? " என்பதை முக பாவனையினால் வினாவினான்.
உடனே உள்ளம் கசிந்தவள்.... இதழ் விரித்தாள்.
தடதடவென பல மனிதக் கால்கள் ஓடும் சத்தம் கேட்டு பதறி எழுந்தவன், நுழைவாயிலை நோக்கி ஓடினான். நுழைவாயிலின் அருகே நின்று, ஓடியவர்களில் ஒருவனை பிடித்து நிறுத்தி ,
" எதுக்கு இப்படி எல்லாரும் தலதெறிக்க ஓட்றிங்க?"
"தோட்டத்து ட்ரெக்டர் ஓட்டுர நம்ம டேனியல யாரோ சிங்களவங்க அடிச்சிடாங்களாம். இரத்தம் போய் எழும்ப கூட தெம்பு இல்லாமல் மயங்கி அந்த டெக்டர்லயே சாஞ்சி கெடக்குறதாம். "
அதிர்ச்சியில் கூட்டத்தோடு சேர்ந்தோடினான் ஔவியனும்.
..... விஞ்ஞானம் சீண்டா கலைகள் தொடரும்.....

Last edited: