முழங்கால் தெரிய அரைகாற் சட்டை , மேகம் மறைத்து தெரியும் வாண் போல் தடித்த கோட்டுக்குள் மறைந்து கச்சிதமாய் சுருக்கங்களே இன்றி அந்த காற்சட்டை இடுப்பில் போய் இறுகியிருந்த இளம் நீல சேர்ட்டும் , கழுத்தில் தொங்கிய கரு நீல டையும் , கல் முள் குத்தாமல் இருக்க கால்களில் பூட்ஸ்சும் காரிலிருந்து இறங்கியவர் (dho)தொரதான் என்பதை அடையாளப்படுத்தியது. பார்க்கும் இளம் பெண்களையும் நிமிர்ந்து பார்க்கத் தூண்டும் அழகான கம்பீரமான உடற் தோற்றம்.
இத்தனை அழகும் அவனது அதிகாரப் பேச்சில் நிர்மூலமாகிப்போனது.
" மொகாத்த சாதாசிவம் மே கரலா தியேன்னே? " (என்ன சதாசிவம் செய்திருக்கீங்க? ) தமிழ் பெயரின் உச்சரிப்பே அந்த சிங்கள வாயில் ஒரு தினுசாகத்தான் வந்தது.
சத்தம் லயத்தின் கடைசி வீடு வரை ஒலித்தது. இன்னொருத்தனும் இது போல் செய்திட கூடாதல்லவா, மொத்த மக்களுக்குமான அதட்டலொலியாகவே இருந்தது.
"கா(G)கென் அஹலாத மே பார ஹெதுவே ஹா? " (யார கேட்டு இந்த ரோட்ட செய்தீங்க ஹா? )
புதிய பாதையை பார்த்தப்படி நின்று பேசியவன் அந்த புதிய பாதையில் தானும் பூட்ஸ் கால்களை பதிக்க ஆசைப்பட்டுக் கீழ் வரை நடந்து பின் மேலேறினான்.
(சிங்கள மொழி, வாசகர்களுக்காக தமிழ் மொழியிலேயே எழுதப்படுகிறது. )
"சதா சிவம் ! இதொன்னும் உங்க சொந்த நிலம் கிடையாது. இங்க எது செய்றதுனாலும் எங்ககிட்ட கேட்கனும். கம்பனி அனுமதி கொடுத்தாதான் யாரும் எதுவும் செய்யலாம். அரசாங்கத்துக்கே எந்த உரிமையும் கிடையாது. இதெல்லாம் உங்களுக்கு தெரியாமல் இல்ல, எந்த தைரியத்துல இப்படியொரு காரியத்த செய்திங்க? "
சிங்கள மொழியில் பதிலளிக்கிறார் சதாசிவம்.
" மஹாத்தியா (sir...) மகள்ட கல்யாணத்துக்காகத்தான் செய்தெ. மழ காலத்துல அந்த அடி ரோட்ல நடக்க முடியாதில்லையா? சகதியாகி கால் வக்கமுடியாம இல்லையா இருக்கும். கால் வலுக்கி விட்டுரும். மகள்ட கல்யாணமும் சரியா மழக்காலத்துலயே அமஞ்சிபோச்சி. வாறவங்களுக்கு அது சங்கடமா போய்டுமில்ல, அதனாலதான் மஹாத்யா கொஞ்சம் கொங்றீட்ட போட்டேன். "
"கொஞ்சமா ! நல்ல கொஞ்சம் தான். ம்... லொறியொன்னே எடுக்குறளவுக்கு ரோட்ட வெட்டி கொங்றீட்டும் போட்டு வச்சிகிட்டு கொஞ்சமா? " ஏளனச் சிரிப்போடு நாசுக்காய் மிரட்டினார் தொர.
"இவ்வளோ காலமா அந்த அடி ரோட்ல தானே போனோ வந்தோ. லொறி போய் போய் ரோடும் மோசமா இருக்கதால சந்திய தாண்டி ஒரு த்ரீவீலும் இங்கன வருதில்ல. வீட்டுக்கு சாமான் வாங்கினாலும் அந்த சந்தியிலருந்து தூக்கிகிட்டுதான் வரவேண்டியிருந்துச்சி. இந்த வீட்ட கொஞ்சம் முன்னுக்கெடுத்து கட்டுனப்பக் கூட கல்லையும் மண்ணையும் கீழருந்து தூக்கிதான் மேல எடுத்தம். நீங்கள்கள் எல்லாம் பாத்துகிட்டு பேசாமல் தானே இருந்திங்க? எவ்ளோ நாளைக்குத்தான் அப்படியே கஷ்டபட்டுகிட்டு கெடக்குறது? " சதாசிவத்தின் குரலும் உயர்ந்தது.
தனக்கு எதிராய் குரல் உயர்வதை பொறுத்துக்கொள்ளமுடியாத தொரயின் முகம் கறுத்து விட்டதை அவதானித்த இலங்கோ, சதாசிவத்தை சைகையால் அடக்கிவிட்டு,
"சரி, சரி... மஹாத்தயா, இப்போ நடந்தத பத்தி பேசி என்ன செய்ய? இப்ப நாங்க என்ன செய்யணும்னு சொல்லிட்டிங்கன்னா....அத செய்துட்டு போறம். " சரணடையும் விதமாக அமைதியாய் பேச,
உயர்த்திய தோற்பட்டைகளை சற்றும் சரிக்காத தொர, வார்த்தைகளை சடசடவென அவிழ்த்துவிட்டிடாது பெரிய மனித தன்மானத்தை காக்க, போலி கௌரவத்தை முகத்தில் கொண்டு வந்து இறுக்கிவிட்டு சற்று நேரம் நிதானமாய் யோசிப்பது போல பாவனை செய்ய, இருவரும் பதிலுக்காய் காத்திருந்தார்கள்.
கண நேர யோசனையின் பின் தொரசாமி மௌனம் களைத்து,
" (ஹரி...) சரி.... குறித்த திகதிய போட்டு, ' அன்று சதாசிவம் என்பவரின் சொந்த செலவில் செய்யப்பட்ட இந்த கொங்ரீட் பாதை தனியொரு நபருக்கோ அல்லது குடும்பத்துக்கோ சொந்தமானது அல்ல. இந்த நிலம் மற்றும் கொங்ரீட் பாதை தோட்டத்துக்கே சொந்தமானது. நாங்கள் என்றும் உரிமை கொண்டாடமாட்டோம். " னு சொல்லி ஒரு கடிதம் எழுதி சைன் பண்ணி கொடுக்க சொல்லு. இது மாதிரி ஒரு விசயம் இனி நடக்கக் கூடாது பாத்துக்கங்க..." என்று இலங்கோவிடம் சொல்லிவிட்டு பின் இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு காரில் ஏற, கார் பின்னோக்கி கீழிறங்கிச் சென்றது.
கார் போகும் வரை சிலையாய் நின்றுக்கொண்டிருந்த இருவரும் அந்த பாதையில் கார் போன வேகத்தை பார்த்ததும்,
அன்ரொரு நாள் கார் சக்கரம் சகதியில் மாட்டிக்கொண்டு எடுக்கமுடியாமல் தவித்தப்போது சதாசிவமும் இலங்கோவும் போய் உதவி செய்தே காரை தள்ளிவிட்டார்கள். கடைசியாக தொர காரில் வந்த அந்த நாளும் நினைவுக்கு வர, அதற்கு பிறகு காரிலேயே வராத தொர, இன்றுதான் காரை எடுத்துக்கொண்டு இந்தப்பக்கம் தைரியமாக வந்திருக்கிறாரென்றால் அது இந்த புதிய பாதையை நம்பிதானே?" என்பதையும் யூகித்துக்கொண்ட இருவரும்,
" நா போட்ட ரோட்லதானே... ஓங்கார் , இந்த வேகத்துல ( B)பூஸ்ணு போகுது....."
என்பது போல ஒரே வசனத்தை இருவர் மனதும் சொல்கையில், ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள நகைச்சுவையான சிரிப்பு தானாய் வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது.
:::::::::::: ***** ***** ***** *****::::::::::::
சாயம் வெளுத்தாலும்
சில உடைகள் கிழிவதில்லை....
காயம் அழுத்தாலும்
சில மனங்கள் உடைவதில்லை....!
ஏதோ மனதில் தோன்றியதை எழுதிய யாத்ரா,
கணவன் ஔவியனின் வருகைக்காகவும் அண்ணன் இலங்கோவின் வருகைக்காகவும் முற்றத்து மர நிழலில் காத்திருந்தாள்.
" பெண் விரல் வதக்கல் செஞ்சி
கடல் மீன் பொறியல் வச்சி
சிறு பருப்பு கொழம்பு வச்சி
வல்லாரை சம்பல் செஞ்சி
கண்ணுக்குள்ள உங்கள வச்சி
காத்திருக்கன் வாங்களேன்
இந்த பெண் கை பாசத்த
பந்தியில சொல்லுங்களே....! "
மூக்கு வேர்த்தது போல்
"இதோ வந்துட்டம்..... வந்துட்டம்..." என சொல்லும் விதமாக தனித்தனியாய் போன இருவரும் ஒன்றாய் வந்துக்கொண்டிருந்தார்கள்.
"சதாசிவம் விசயம் என்னாச்சி மச்சான்? தொர வந்தாரா? "
" ஹா வந்தாரு வந்தாரு. ரோட்ல உரிம கொண்டாடமாட்டம்னு கடிதம் எழுதி தர சொல்லிட்டு போய்டாரு. ஆனா... சதாசிவம் பேசின மாதிரிக்கு தொரக்கு நல்லா கோவம் வந்துடுச்சி. நான்தான் நைசா சமாளிச்சிவிட்டன். "
தன்னை பெருமைபடுத்திக்கொண்டு சொன்னான் இலங்கோ.
"அவன்ககிட்டலாம் அப்படிதான் மச்சான் பேசனும். நாம மரியாதையா பேசினா போதும். கூனி குருகி கும்பிடு போட்டுகிட்டு இருக்கத் தேவையில்ல. "
" அத விடு ஔவியன். ஆமா.... நீ எங்க போய்ட்டு வார?"
"விசயம் தெரியாதா? டேனியல புதுசா வந்த அந்த ட்ரைவர் ரெண்டு பேரும் சேர்ந்து அடிச்சி போட்டுட்டு போய்டான்க. அத பாக்கதான் போய்ட்டு வாரன்."
"அப்படியா..? ம்..... அவன்க வந்ததுலருந்தே டேனியல் மேல ஒரு கோபத்தோடத்தான் திரிஞ்சான்க. சந்தர்ப்பத்துக்குத்தான் காத்திருந்தான்க. ஏதோவோர் காரணத்த வச்சி பலிவாங்கிடான்க. "
"நீங்க எத சொல்றிங்க இலங்கோண்ணே.... ? "
"அதான்பா...., அந்த ட்ரைவர் , யாரு.... பேரும் நெனவுக்கு வருதுல்ல... ஆ... சம்பத், அவன் அம்மா மையத்த ஸ்கூல் ரோட் பக்கத்துலயே புதைச்சாங்க இல்லையா? அத போய் டேனியல் கேட்டானில்ல? அதுலருந்தே அவன்களுக்கு கோபம்தான்."
" ஆமா பின்ன, அவ்ளோ எடம் கெடக்கும் போது சரியா புள்ளைங்க போய் வார ரோட் கிட்டவா குழிய வெட்டணும்."
"அத சொன்னதுக்கு தான்...., 'அது ஸ்கூல் காணியே இல்ல, அவங்க பாட்டிடய பொதச்ச எடத்துலதான் ஸ்கூல் ரோட்டயே வெட்டியிருக்காங்க. அந்த சுடுகாடு தோட்டத்து ஆட்களுக்கு மட்டும் சொந்தமானதில்ல. எங்களுக்கும் சொந்தமானதுதான். இப்ப இருக்க ஸ்கூல் ரோட்லதான் எங்க தாத்தா பாட்டிய பொதச்சியிருக்காங்க. " ன்னு சொல்லிடான்களாமே."
" சொல்லி வேல இல்ல இலங்கோண்ணே. அநேகமான தோட்டத்து ஸ்கூல்கள் சுடுகாட்டுக்கு மேலயோ கீழயோதான் இருக்குது. என்ன நினைச்சி ஸ்கூல்கள் சுடுகாட்டு நிலத்துல செய்தாங்களோ ?என்னதான் செய்ய? நம்ப புள்ளைங்க எந்த நாளும் சுடுகாட்ட தாண்டி தான் போகவேண்டியிருக்கு. "
"ஹா....ஹா..."
சிரித்தான் இலங்கோ.
பேசிக்கொண்டே வந்தவர்கள் வீடு வந்து சேர,
"சாப்பாட போடு யாத்ரா. சரியான பசி"
"எடுத்துதான்க வச்சியிருக்க. வாங்க சாப்டலாம். அண்ணா நீங்களும் வாங்க."
"நா வராமல்..? வீட்டுக்கு கூட போகாமல் இங்க வந்தது தங்கச்சி சாப்பாட சாப்டத்தானே. "
கை கழுவிக்கொண்டு மேசையில் அமர்ந்தான் ஔவியன். இலங்கோவும் பின்தொடர்ந்தான். யாத்ரா பரிமாறினாள்.
"சரி, என்னாச்சிங்க? டேனியலண்ணன் எப்படியிருக்காரு. எதுக்கு அடிச்சான்களாம்? "
" என்ன...., எல்லாம் தொழில் பொறாமதான். சம்பத்த விட டேனியல் முன்னுக்கு நிக்கிறான்ற கோவம்தான். தொரயும் டேனியலோட நெருக்கம் அதிகம்தானே. அவன்களவிட சம்பளமும் கூட. அந்த பொறாமையில செஞ்சியிருக்கான்க. " கடுகடுத்துக்கொண்டு சொன்னான் ஔவியன்.
" டேனியல் பழைய ஆள். வேலைலயும் பொறுப்பா இருப்பான். அவனுக்கு சம்பளம் கூட கொடுக்குறது நியாயம்தானே ? அதுக்கு எதுக்கு இவ்ளோ கொலவெறி? " சோற்றை பிசைந்துக் கொண்டே பேசினான் இலங்கோ.
"டேனியல் போன மாசம் தொடர்ச்சியா லீவ் எடுத்துருக்கா. ஆனா சம்பளம் கொறக்கலயாம். சம்பத் எடுத்த லீவ்க்கு மட்டும் சம்பளத்த கொறச்சியிடாங்களாம். அந்த கடுப்புல பழைய கோவத்தயும் வச்சி செஞ்சிடான்க. " அசைப்போட்டுக்கொண்டே ஔவியன் நடந்ததைச் சொல்ல,
" அப்போ, அடிச்சவன்களுக்கு என்ன நடவடிக்க எடுக்கபோறாங்களாம்?" கேட்டாள் யாத்ரா.
"என்னா செய்வாங்க, வேலயவே இல்லாமல் ஆக்குவாங்க. சும்மா விடுவாங்களா...? சும்மா விட்டால் ஆளுங்கதான் சும்மா இருப்பாங்களா" கடுமையாய் சொல்லிவிட்டு சாப்பிட்டு முடித்து கை கழுவுவதற்காய் எழும்பினான் இலங்கோ.
"ஆனா... பிரச்சின ஆறினதும் திரும்ப கொஞ்சநாள்ள சேத்துப்பாங்க. இதானே வழமையா நடக்குது." சிரித்துக்கொண்டே சாதாரணமாய்ச் சொல்லி எழும்பினான் ஒளவியன்.
"யாத்ரா... நா பொலிஸ்க்கு கொஞ்சம் போய்ட்டு வாரே. மரினோ அவங்க அப்பாவ அடிக்குறத பாத்துட்டு கள்ளெடுத்து அடிச்சியிருக்கான். அவன ஏதும் செய்துடுவாங்கன்னு டீச்சர் பயப்பட்றாங்க. நா அவன கூட்டிக்கிட்டுப் போய் " 'அவனுக்கு ஏதும் நடந்தால் அதுக்கு சம்பத்தாக்கள்தான் காரணம்னு " ஒரு எண்ட்றிய போட்டுட்டு வாறேன்.
என சொல்லிவிட்டு, கிளம்ப, " நானும் வாறேன் " என இலங்கோவும் கிளம்பினான்.
போனவன் திரும்பவும் வந்து " யாத்ரா, அந்த வீதி நாடகம் நினைவிருக்குள்ள? சீக்ரம் எழுதி முடிச்சிடு. அடுத்த வாரம் செய்யணும். சரியாடி குட்டி" என அவன் கன்னத்தை காட்ட , அவள் அழகாய் ஒரு முத்தம் வைத்து வழியனுப்பினாள்.
" மச்சான், நில்லுங்க நானும் வாரேன்." முற்றத்தை தாண்டி சென்ற இலங்கோ சற்று நிற்க இருவரும் சேர்ந்து புறப்பட்டார்கள்.
...விஞ்ஞானம் தீண்டாத கலைகள் தொடரும்....