• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

30. என்னாளும் உன் பாென்வானம் நான்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
673
அவன் தான் கூறுகெட்டுப் போய் கிடக்கிறான்னா, நீங்களும் தோளுக்கு மேல வளந்தவனை அடிக்க போயிட்டு” என்றார்.


“பின்ன என்ன பாக்கியா..? பிள்ளை மாதிரியா நடந்துக்குறான், என் எதிர்க்கவே அந்த பொண்ண கொடுமைப்படுத்துறானே, நான் இல்லாத நேரம் என்ன பாடு படுத்துவான்” என்றார் மனைவியிடம் கோபமாய்.


“அவ என் பொண்டாட்டி! நான் அவளை என்னவும் பண்ணுவேன், நீங்க அவளுக்கு மாமனார் மட்டும் தான், அதாவது அப்பாவுக்கு சமன் என்கிறது நினைவில வைச்சிருந்தா சரி” என்றவன் விறுவிறு என தன் அறை நுழைந்து கொண்டான்.


போகும் அவனையே பார்த்திருந்த பாக்கியாவிற்கு மகன் கூறிச் சென்றதன் பொருள் விளங்கவே இல்லை. கணவன் புறம் திரும்பியவர்,
“என்னங்க சம்மந்தமே இல்லாம ஏதேதோ சொல்லிட்டு போறான்?” என்றவரிடம்,


“அவன் ஒரு கிறுக்கன் அவனை விடு! மருமகளுக்கு என்னாச்சு? இப்போ அவ எங்க?” எனக் கேட்டார்.


“அவ கன்னப்பகுதியில தோள் கொஞ்சமா உரிஞ்சு கையோட வந்திடிச்சுங்க. அதை பாத்ததும் மயக்கமாகிட்டா! டாக்டருக்கு போன் போட்டேன், இப்போ வந்திடுவாரு” என்க,


“நீயாவது உண்மைய சொல்லு பாக்கியா! உன் பையனுக்கும் அந்த பொண்ணுக்கும் இடையில என்ன நடந்தது..?
எதுக்கு இப்பிடி இவன் நடந்துக்கிறான். குடிச்சிட்டு,பொண்ணுங்க சகவாசமா இருந்தப்போ கூட இந்தமாதிரி மூர்க்க தனமா நடந்துக்கலையேம்மா!
இப்போ நான் இருக்கிறேன்னு கூட பாக்காம ஏன் இந்த மாதிரில்லாம் பண்ணுறான்.?” என ஆற்றாமையோடு கேட்ட கணவனிடம் அவரும் எதை சொல்லுவார்.


“எனக்கு எதுவுமே தெரியலங்க” என்றவர்,


“முதல்ல பொண்ணுங்களே கதியன்னு கிடந்தான், அப்புறம் துளசி தான் எல்லாமே, அவளை கொஞ்சமும் விட்டு நகர மாட்டேன் என்று அவ முந்தானைய புடிச்சிட்டே திரிஞ்சான். இப்போ என்னடான்னா அவளை ரொம்ப கொடுமைப் படுத்திட்டிருக்கான்.


எனக்கென்னமோ இவனுக்கு தான் ஏதாவது பிரச்சினை இருக்குமோன்னு பயமா இருக்கு” என்றவரின் பேச்சு புரிந்தவர்.


“நீ என்ன சொல்ல வர பாக்கியா? அவனுக்கு மூளை குழம்பிடிச்சு என்கிறியா..?
அப்பிடி எதுவும் இருக்காதும்மா! அவன் மனசுக்குள்ள எதையோ வைச்சிட்டு தான் இந்த மாதிரி ஆகிட்டான்.
அதுவும் அவன் சம்சார விஷயத்தில மட்டும் தானே இந்த மாதிரி இருக்கான், நம்ம கூடவோ, இல்ல வேலையிலயோ தெளிவா நடந்துக்கிறவனுக்கு நீ நினைக்கிறது போல எதுவுமிருக்காது”
என விளக்கிக் கொண்டிருக்கும் நேரம்.


“நான் உள்ள வரலாமா?” என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தவர்கள், வாசலில் நின்றவரை கண்டு


“இது என்ன கேள்வி டாக்டர்? உள்ள வாங்க” என அழைத்தார் பாக்கியா.


“கேக்காமலே வந்திருப்பேன். ஆனா நீங்க ஏதோ சீரியஸா பேசிட்டிருந்தா மாதிரி இருந்திச்சு. அதான் கேட்டேன்” என்றவாறே உள்ளே வந்தவர்,


“யாருக்கு என்னாச்சு..?” என தன் கடமையினை செய்யத் தயாராக,


“என் மருமகளுக்கு தான் டார்டர். உள்ள தான் படுத்திருக்கா வாங்க” என அவளிடம் அழைத்து சென்றார்.


அவர் செல்லும் போதும் மயக்கத்திலேயே கிடந்தவளை பரிசோதித்து, காயத்திற்கு வேண்டிய மருந்திட்டு, இன்ஜெக்ஷனையும் போட்டவர். நாடித்துடிப்பினை ஆராய்ந்தவாறே,


“சுடு தண்ணி எப்பிடி முகத்துமேல கொட்டிச்சிது? அப்பிடி அலட்சியமா என்ன பண்ணாங்க?” எனக்கேட்க.


“அது... அது..” எனத் தடுமாறியவரை முந்திக் கொண்ட அவர் கணவர்.


“எதுக்கு பாக்கியா டாக்டர்கிட்டை மறைக்கணும்ன்னு நினைக்கிற? அவருக்கு தான் நம்ம குடும்பத்த பத்தி எல்லாமே தெரியுமே!


ராஜா தான் டாக்டர் காஃபி சூடா இருக்குன்னு சொல்லி அவ முகத்தில ஊத்திட்டான்” என்றவரை அதிர்ச்சியாக நோக்கியவர்.


“ஆனா இதெல்லாம் அநியாயம் சார்!” என்றவாறு அவளை திரும்பி பார்த்தார்.


“பேஷன்ட்க்கு டிஸ்டபன்ஸ் தராமல் நாம வெளிய போய் பேசிக்கலாமா?” என்றவாறு வெளியே வந்தவர்.


“உங்க மருமக ரொம்பவே வீக்கா இருக்கா சார். அதனால தான் இந்த மாதிரி ரொம்ப நேரமா மயக்கத்தில இருக்காங்க. அதுவும் இப்போதைக்கு ஒரு வகையில நல்லது தான். ஏன்னா இது சின்ன காயமாக இருந்தாலும் இந்த மாதிரி காயம் எல்லாம் பயங்கர வலியா இருக்கும்.
இதை தாங்கிக்க உடல் வலிமைய விட மன வலிமை ரொம்பவே தேவை.


இப்போ இந்த பொண்ணுகிட்ட ரெண்டுமே இல்லை. அதனால எந்தளவுக்கு ரெஸ்ட் எடுக்கிறாங்களோ அந்தளவுக்கு வலி தெரியாது. இவங்களா மயக்கமாகலன்னாலும் நானே இன்ஜெக்ஷன் போட்டு தூங்கத்தான் வைச்சிருப்பேன். முடிஞ்ச வரை உங்க பையன அவங்கள நெருங்க விடாம கூடவே இருந்து பாருங்க.”


என தன் கை பையினை திறந்து ஒரு சில மாத்திரைகளை எடுத்து தந்தவர்,
“வெளி கவர்ல எப்பிடி எடுத்துக்கிறதுன்னு போட்டிருக்கேன். மூணு வேளையும் தவறாக எடுத்துக்கணும். ஏதாவதுன்னா என்னை கூப்பிடுங்க” என்று நகரப்போக.


“டாக்டர்" என உள்ளே போன குரலில் தயக்கமாக அழைத்தவர்,
"சின்ன காயம் என்கிறீங்க. இந்த காயத்தினால அவ முகத்துக்கு எதுவும் ஆகாதுல்ல” என்றவர் தொடர்ந்து,


“அது எப்பிடின்னா இந்த சூடு பட்டு அந்த இடம் தனியா கறுப்பா தெரியுமே அதே மாதிரி ஒன்னும் ஆகாதுல்ல..?” என தயக்கமாக கேட்டார்.


“அவரை புன்னகையுடனே பார்த்தவர். இதே பதட்டம் கொஞ்சமாவது உங்க பையனுக்கு இருந்தா நல்லா இருந்திருக்கும். கல்யாணமாகி வந்த அன்னைக்கும் இதே போல தான். அவ்வளவு ரத்தம் போயி மயக்கமா கிடந்த பொண்ண ஏன்னு கூட கேக்காம…” எனக் கூறிக்கொண்டே போனவர். தன் எல்லை தெரிந்து அத்தோடு நிறுத்தி,


“இல்லம்மா!. கொதி எண்ணெய்க்கு தான் ஸ்கின் சுருக்கி கலர் மாறும், வெந்த நீருக்கு அந்த மாதிரி எதுவும் ஆகாது.
அதுக்கு ஏத்த மாதிரித்தான் மருந்தும் போட்டுவிட்டேன். பயப்படத் தேவையில்ல.
ஆனா பாவம் அந்த பொண்ணு. கொஞ்சம் பக்குவமா பாத்துக்கங்க” எனக் கூறிச் சென்றுவிட்டார்.


அவரை அனுப்பிவிட்டு நிம்மதி பெருமூச்சோடு ஷோபாவில் அமர்ந்தார்கள்.


“ஏன் பாக்கியா நாம கொஞ்ச நாளைக்கு துளசிய அவங்க வீட்டுக்கு அனுப்பி வைச்சா என்ன? அவளுக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும், உடல் நிலையும் சரியாகிடும். அதுக்கப்புறம் இவன் சரியாகிட்டான்னா கூப்பிட்டுப்போமே..?”


இல்லன்னா அவ அங்கேயே இருக்கட்டும்” என கூறியவரையே பார்த்திருந்தவர்,


“நீங்க சொல்லுறதும் சரி தாங்க. நம்மாலயே திருத்த முடியாத பிள்ளைய, நம்மளையே நம்பி வர பொண்ணு திருத்திப்பாள்ன்னு நினைக்கிறது எவ்ளோ பெரிய முட்டாள்த் தனம்ன்னு தெரிஞ்சுகிட்டேன்.
அவளாவது நல்லா இருக்கட்டும். காயம் ஆறினதும் அனுப்பி வைச்சிடலாம். இந்த நிலையில அனுப்பி வைச்சா அப்புறம் அவங்க என்ன செய்வாங்களோ!” எனப் பயந்தார்.


“நீ சொல்லுறதும் சரி தான். காயம் ஆறினதும் அனுப்பிடுவோம்” என சொல்லிக் கொண்டிருந்தவர் கதவு திறக்கும் சத்தம் வந்த திசையில் திரும்பி பார்த்தார்.


அவர் மகனே தான். துளசி தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் போய் கதவடைப்பதை கண்டவர்,


“பாக்கியா உன் பையன மருமக கிட்ட நெருங்க விட வேண்டாம்ன்னு இப்ப தானே டாக்டர் சொல்லிட்டு போனாரு. ஆனா பாரு உன் பையன் அந்த ரூம்க்குள்ள தான் போறான்” என்க.


அவர் சொன்னதின் பின்தான் திரும்பி பார்த்தவர் கதவு மூடியிருப்பதை கண்டு, இல்லையே கதவு மூடித்தானே இருக்கு. அதுவுமில்லாம நாம இங்க இருக்கும் போது எப்பிடி நம்மள கடந்து போக முடியும் என்றவரை,


“இல்ல பாக்கியா நான் பாத்தேன். அவன் நமக்கு தெரியாம போகணும்னே போயிருக்கான் . நாம பேசினதையும் கேட்டிருப்பான் போல. இப்போ இதுக்கும் அவளை தான் ஏதோ பண்ணப்போறான்” என்க.


“ஐய்யைய்யோ..!” எனப் பயந்தவர் ஓடிச்சென்று கதவை தள்ளிப்பார்த்தார்.
உற்புறம் தாழ் போட்டு இருந்தது.


“என்னங்க திறபடமாட்டேங்குது?”


“நான் தான் சொன்னேனேம்மா அவன் உள்ள போனத பாத்தேன்னு.”


“இப்போ என்னங்க பண்றது? என பதறியவர், ராஜா கதவத் திறடா, கதவத் திற!” எனப் பதறியவர் குரல் அவன் காதில் விழுந்தால் தானே!


உள்ளே வந்தவன் தூங்கிக் கொண்டிருந்தவளையும், அவர் காயத்தினையும் வலி நிறைந்த பார்வையோடு பார்த்திருந்தான்.


அவள் கேசமதை இதமாக வருடிக் கொடுத்தவன்,


“உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன்ல..?
உனக்கு ரொம்ப வலிச்சிருக்கும்ல்ல..? சாரி துளசி,
ஏதோ புத்தியில்லாம பண்ணிட்டேன் துளசி.
ஆனா நீ ஏன் அந்தாள தொட விட்ட? அவரு உனக்கு மாமனார் துளசி. நீ பண்ணது தப்புத்தானே! அதனால தான் எனக்கு கோபம் வந்து அந்த மாதிரி பண்ணிட்டேன்.” என்று அவள் காயத்தை தாெட்டுப் பார்த்தவன் தீண்டலில் கண்விழித்தாள் துளசி.


கண்விழித்ததும் எதிரே நின்றவனை கண்டு பயந்தவளாய் வேகமா எழுந்தமர்தவள் கட்டிலின் ஓரத்தில் முடங்கிப்போக,
தன்மேலான அவள் பயம் கண்டு உடைந்தே போனான் அவன்.


கலங்கிய விழிகளோடு,
“ஏன் துளசி என்னை பாத்து பயப்படற..?”
என அவள் அமர்ந்திருந்த கட்டிலிலே தானும் அமர்ந்தவன்,


“என்னை பாத்து பயப்படாத துளசி!
நீயும் எல்லாரையும் மாதிரி என்னை ஒதுக்கி வைக்கிறத என்னால தாங்கிக்க முடியாது துளசி.


நீ மட்டும் தானே எனக்குன்னு இருக்க.
என்னை விட்டு நீ விலகிப்போனா நான் செத்துடுவேன் துளசி.


நான் கோபப்பட்டு உன்னை காயப்படுத்துறேன்னு தெரியுது. ஆனா கோபம் வரும்போது என்னை என்னாலயே கட்டுப்படுத்த முடியாம உன்னை கஷ்டப்படுத்திடுறேன். அப்புறம் நிதானமா இருந்து யோசிக்கிறப்போ என்மேலயே எனக்கு கோபம் வருது துளசி!.


உன்னை கஷ்டப்படுத்தின நான் உயிரோடயே இருக்க கூடாது. உயிரோடையும் இருக்க மாட்டேன்.”
என வேகமாக கட்டிலில் இருந்து எழுந்தவன், அருகில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த கூஜாவினை சுவற்றோடு அடித்து நொறுக்கி பைத்தியம் பிடித்தவனாட்டம் தன் கைகளிலேயே சரசரவென பல கீறுகள் போட்டான்.


அதுவரை தன்னை தான் எதுவோ செய்யப்போகிறான் என அவனை பீதியாய் பார்த்திருந்தவள், அவனது செயல் கண்டு பதறியவாறு ஓடி வந்து அவன் கையிலிருந்ததை பல போராட்ட மத்தியில் பிடிங்கி எறிந்து விட்டு அவன் கையினை பார்த்தாள்.


கிழிபட்ட இடங்களில் கோடுகோடாய் இரத்தக்கசிவுகளை கண்டு கண்கள் நீரினை சொரிந்தது.


“ஏங்க இந்த மாதிரில்லாம் பண்றீங்க? நீங்க பண்றதெல்லாம் பாக்க எனக்கு பயமா இருக்குங்க.”
என செய்வது அறியாது கதறவே ஆரம்பித்து விட்டாள்.


இதை தவிர பாவம் அவளால் என்ன செய்யமுடியும். தன் புடவையில் முந்தானையினால் அவன் கைகளில் வடியும் இரத்தத்தை பொத்திப்பிடித்தவளால் எவ்வளவு நேரம் அவ்வாறே நிற்க முடியும்?


“எதுவும் பண்ணிடாதிங்க. நான் அத்தைய கூட்டிட்டு வரேன்.” என ஓடியவளை பார்த்தவன் உதட்டினில் வலியில்லை. மாறாக புன்னகையே அரும்பியிருந்தது.


நிஜத்தில் இதுவும் ஒருவகை மனநோய் தான் போலும். தனக்கு பிடித்தவள் தன் வலி தாங்காது துடிப்பதை ஆனந்தமாகப் பார்ப்பது மனநோய் இல்லாது எவ்வகையில் சேரும்.


கதவை திறந்ததும் வெளியே நின்றவர்களை கண்டவள்
“அத்த இவரு.. இவரு…” என பதட்டமாய் தடுமாறியவளை கண்டவர்களுக்கு ஏதோ விபரீதம் என புரிந்து போனது.


அவளை கடந்து அவனிடம் ஓடியவர்கள், காலில் மிதுபட்ட கூஜாவின் பாகங்களையும், அவன் கையில் இருந்து கசிந்த இரத்தத்தை கண்டு,


தலையில் அடித்துக்கொண்ட அவன் தந்தை, செல்போனினை எடுத்து டாக்டரை வரவைத்தார்.


பாக்கியாவோ அவன் கையினை ஏந்தியவாறு அவனை திட்ட ஆரம்பித்து விட்டார்.


முதலுதவிப் பொட்டியோடு வந்த துளசி அந்த காயங்களை சுத்தம் செய்து கட்டுப்போட ஆரம்பிக்கும் சமயம் பாதி வழி சென்றிருந்த வைத்தியரும் வந்து சேர்ந்தார்.


“என்ன சார்! உங்க பாசத்தினால என்னை வீட்டுக்கே அனுப்ப மாட்டிங்க போல..?” என இம்முறை கேலி பேசியவாறு வந்தவர்,


“இப்போ யாருக்கு என்னாச்சு..?”


“என் பையனுக்கு தான் டாக்டர். பைத்தியக்காரனாட்டம் கைய கிழிச்சு வைச்சிருக்கான்” என்றார்.


அவனிடம் சென்று துளசி சுத்தம் செய்த காயத்தை ஆராய்ந்து மருந்திட்டவர்.


“பரவாயில்ல. உங்க பையனால என் வாழ்க்கை சிறக்கும் போலயே!” என சிரித்தவர்.


“எல்லாம் விளையாட்டு இல்ல தம்பி. சில விஷயங்கள் நம்மள விட்டுப் போனா வராது. அதுல உயிரும் ஒன்னு.
தென்னை மரத்தில மார்க் போடுறது போல இத்தனை கோடு போட்டிருக்கியே. தவறி நாடி நரம்புல வெட்டுப்பட்டிருந்தா எல்லாருக்கும் டாட்டா தான் காமிச்சிருக்கணும்.
பாத்து நடந்துக்கோ" என்றவர்.


"அப்புறம் என்ன சார். போகவா இல்ல. ஒரு ரூம் ரெடி பண்ணுறீங்களா? நான் இங்கேயே தங்கிக்க?” என நகைச்சுவையாக கேட்டுவிட்டு விரைந்துவிட்டார்.


மருத்துவர் போகும் வரை அமைதி காத்த பாக்கியாவாே!
“உனக்கு என்ன தான்டா பிரச்சினை..?
ஏன் நீயும் நிம்மதியா இருக்காம, எங்களையும் நிம்மதியா இருக்க விடாம சாகடிக்கிற..?


இதபாரு இனிமே இது தான் துளசியோட ரூம். நீ இவகிட்ட வரக்கூடாது. கல்யாணத்துக்கு முன்னாடி எப்பிடி இருந்தியோ அந்த மாதிரியே இருந்துக்காே. ஆனா இவளை விட்டிடு” என்றவரை முறைத்தவன்.


“ஏன்..? அவ என் பொண்டாட்டி. என்கூட என் ரூம்ல தான் இருப்பா” என்றவன்.
“வா துளசி நம்ம ரூம்க்கு போகலாம்.” என அவள் கைளை இறுகப்பற்றியவாறு இழுத்துச் சென்றவனோடு போனவள் விழிகளோ மிரட்சியையே வெளிப்படுத்தியது.


அறையில் நுழைந்ததும் கதவடைத்து கொண்டவன்,
துளசியை பெட்டில் அமர்த்தி அவள் மடிமீது படுத்துக்கொண்டான்.


சிறிது நேரம் அறை முழுவதும் நிசப்தமே நிலவியிருந்தது.
அந்த அமைதியினை குலைக்கும் பொருட்டு அவள் விழிகளை நிமிர்ந்து பார்த்தவன்,


“நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்ல. உன்னை சித்திரவதை பண்ணுறேன்ல்ல..?” என்றவன் விழிகள் கலங்கிப் போயிருந்தது.


அதை பார்க்க முடியாத துளசியோ "இல்லங்க, அப்பிடி எதுவும் இல்லை” என்றவளை வலி நிறைந்த புன்னகையோடு பார்த்தவன்.


“இல்ல துளசி,
நான் வருத்தப்படுவேன்னு தான் நீ பொய் சொல்லுற. ஆனா அம்மாவும், அப்பாவும் வெளிய பேசிட்டிருந்தத கேட்டேன்.


நீ ரொம்பவே நொந்து போயிருக்கிறதா டாக்டர் சொன்னதா பேசிட்டிருந்தாங்க. அதனால உன்னை என்கிட்ட இருந்து பிடிச்சு உன்வீட்டுக்கு அனுப்பி வைக்க போறாங்களாம்.


ஏன் துளசி! நீ என்னை விட்டு போயிடுவியா..?
அப்போ உன்னோட வாழ்க்கையில நான் இனி இல்யைா..?
எனக்கு நீ வேணும் துளசி. எல்லாரும் என்னை ஒதுக்கினப்போ நீ மட்டும் தானே என்கூட இருந்த, நீ இருந்ததனால யாரு என்னை விட்டு போனாலும் எனக்கது தெரியல. இப்போ நீயும் என்னை விட்டுப்போனா நான் செத்துடுவேன் துளசி”
என அழுவே ஆரம்பித்து விட்டான்.


பெண்கள் அழுதாலே தாங்கிக்கொள்ள முடியாது. இதில் ஆண் அதுவும் அவள் கணவன் அழுதால் பார்த்துக் கொண்டிருப்பாளா..?




............
 
Top