"பொண்ணு மாப்பிளை ரெண்டு பேரும் பெரியவா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க" என ஐயர் அந்த மேள சத்தத்திற்கும் மேலாக கத்தி கூற வேண்டா வெறுப்பாக மாப்பிளையும் சந்தோசத்துடன் பெண்ணும் எழுந்து அவரவர் பெற்றவர்களின் பாதத்தை பணிந்து வணங்கினர்…
மாப்பிளையாகிய அருண் மிகவும் கடுப்பாக அவனின் அறையில் யாரோ போல நின்று இருந்தான்…
காரணம் இன்று மனைவியாக வந்த அருந்ததி செய்த வேலை…
அவள் உள் நுழைந்ததும் நுழையததுமாக அருண் தான் தொடங்கினான்…
"உனக்கு என்ன தகுதி இருக்குன்னு என்னை கலயாணம் செய்ய ஒத்துக்கிட்ட…என் போட்டோ பாத்ததும் ஐயோ அப்பா இவரு அளவுக்கு நா இல்ல.. எனக்கு இவரு வேணாம்னு சொல்லி இருக்கணும் தான…
கல்யாணம்னு ஒன்னு செஞ்சா போதும் யார் கிடைச்சாலும் பரவாயில்லன்னு கட்டி வச்சிட்டாங்களா உன்னை?
ச்ச என் படிப்புக்கும் அழகுக்கும் எனக்கு எவ்ளோ ப்ரோபசல் வந்துச்சு தெரியுமா?
ஜாதி மதம்ன்னு என் அப்பாரு குதிபாருன்னு அமைதியா இருந்தேன்…இப்படி வந்து மாட்டிப்பேன்னு நினைக்கல…"
இன்னும் என்ன பேசி இருப்பானோ.. அருந்ததி அவனை பார்த்து வாயை மூடுமாறு சைகை செய்து "இதுக்கு மேல இந்த ரூம்ல எந்த சத்தமும் கேட்க கூடாது அண்டர்ஸ்டாண்ட்" என கூறிவிட்டு கட்டிலில் இருந்த இரு தலையணைகளில் ஒன்றை எடுத்து சோபாவில் போட்டுவிட்டு அந்த கட்டிலை அவள் ஆக்கிரமித்து உறங்கவும் துவங்கி விட்டாள்… இன்றைய நாளின் முக்கியத்துவமும் இவளை ஆ என பார்த்து நின்றவனின் உறவும் இவளை சற்றும் பாதிக்கவில்லை…
'மூச்சு பிடிச்சி இத்தனை நாளா யோசிச்சு வச்சதை எல்லாம் பேசினா இவ என்ன ஒரே லைன்ல என்னை ஆப் பண்ணிட்டா…
ஆள பாரு கருப்பா இல்லை கொஞ்சம் சாக்லேட் கலரா ஒல்லியா இருந்துகிட்டு இவ்ளோ திமிரா?
எழுப்பி கேட்போமா? என ஒரு வினாடி சிந்தித்தவன் நாளை பேசி கொள்ளலாம் 'என சோபாவில் படுத்து உறங்கினான்.
அதிகாலையில் எழுந்து யோகா மற்றும் தியானம் செய்து விட்டு குளித்த பின்பே அறையில் இருந்து வெளியே சென்றாள்…
மாமியாரும் நாத்தனாரும் அவளின் முகத்தில் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா என ஆராய ஒன்றும் விளங்கவில்லை அவர்களுக்கு…
அவர்கள் தயாரித்த டீயை இவளுக்கும் ஊற்ற போக…
"வேண்டாம் அத்தை எனக்கு தண்ணீர் மட்டும் போதும்… 8 மணிக்கு டிபன் சாப்பிட்டு கொள்கிறேன்" என கூறிவிட்டு ஹாலில் மாமனாருடன் பேப்பர் படிக்க துவங்கினாள்…
"என்னம்மா புது இடம் புது மனிதர்கள் பிடிச்சி இருக்கா?"
"ஹான் மாமா எல்லாமே பிடிச்சி இருக்கு…"
"இன்னும் சார் எழுந்துகலையா அருந்ததிம்மா… " என மாமனார் கேட்கும் பொழுதே மாமியார் வந்து "அம்மாடி அவனுக்கு டீ குடுத்துட்டு வாம்மா "என கூற..
"இன்னும் இல்லன்னு நினைக்கறேன் மாமா … அத்தை எழுந்தா ரூம்லயேவா இருப்பார்.. கிழ வரும் போது குடிக்கட்டும்…நீங்களும் உட்காருங்க…இன்னைக்கு டிபன் நான் செய்றேன்…"
"வேண்டாம்மா வீட்ல இருக்கும் போது ரெஸ்ட் எடு "என மாமியார் கூற…
"அத்தை இது என் குடும்பம்னு எனக்கும் தோணனும்னா நானும் எல்லா வேலையும் செய்யணும்னு அம்மா சொன்னாங்க.. சோ ரொம்ப யோசிக்காதீங்க அத்தை…"
"சரிம்மா…உன் இஷ்டம்.."
"மாவு இருக்கா அத்தை…"?
"இருக்கு அண்ணி வாங்க நா உங்களுக்கு எல்லாத்தையும் இடம் காமிக்கறேன்…"
"தேங்க்ஸ் அனி.."
"அட பரவாயில்ல அண்ணி வாங்க…"
பின்பு இருவரும் பேசிக்கொண்டே இட்லி சட்னி சாம்பார் என முடித்து அரை மணி நேரத்தில் கொண்டு வந்து டைனிங்கிள் வைத்து விட்டு அமர்ந்தனர்.. அதற்குள் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு உருவாகி இருந்தது…
அப்பொழுது தான் அருண் கீழே இறங்கி வந்தான்…
"அம்மா ஒரு டீ கூட குடுக்க மாட்டிங்களா டெய்லி நீங்க தான ரூம்க்கு கொண்டு வருவீங்க…"
"டேய் உனக்கு கல்யாணம் ஆகிடிச்சி டா…உனக்கு சீக்கிரம் ஒரு பிள்ளை வருவான்.. இன்னும் என் முன்தானை புடிச்சிட்டு இருப்பியா?" என கலாய்க்க…
"நா என்ன கேட்டேன் நீங்க என்ன பேசறீங்கம்மா ?இப்போ டீ வருமா வராதா?"
அதற்குள் அனி கொண்டு வந்து அண்ணனின் கைகளில் கொடுக்க..
"நீ ஏன் இதெல்லாம் செய்ற.. போ போய் படி நாளைக்கு யூனிவர்சிட்டி எக்ஸாம் வச்சிட்டு சுத்திட்டு இருக்கியா?"
"ஹலோ ப்ரோ அதெல்லாம் செமஸ்டர்க்கு 2 அரியர் வச்சவங்க பேச கூடாது நா இதுவரைக்கும் எழுதின எல்லாத்துலயும் பர்ஸ்ட் தான்.. உனக்கு போய் டீ குடுத்த என்னை சொல்லணும்…"
இங்கு இவ்வளவு அக்கப்போர் நடக்க அருந்ததியும் அவளின் அருமை மாமனாரும் சட்னி 30•/• சாம்பார் 70 •/• என ஊற்றி இட்லியை சாப்பிட துவங்கி இருந்தனர்…
அவனுக்கு அவளை பார்த்ததும் ஏற்கனவே இருந்த மன எரிச்சல் வயிற்று எரிச்சலாக மாறி விட்டது…
அவன் அவளை பார்த்துக்கொண்டு நின்ற இரண்டு நிமிடத்தில் ஆறு இட்லியை சாப்பிட்டு விட்டு எழுந்தாள்…
கை கழுவும் நேரம் அவள் போன் இசைக்க எடுத்தவள் முகத்தில் உடம்பில் புது ரத்தம் பாய்ந்தவள் போல் சந்தோஷ மிகுதியில் அங்கு வந்த மாமனாரை கட்டி கொண்டு "எனக்கு நம்ம ஊர்ல போஸ்டிங் போட்டு கொரியர் வந்துடுச்சாம் மாமா…" என்றாள்..
"அடடே ரொம்ப சந்தோஷம்டாம்மா… பாரு நம்ம வீட்டுக்கு வந்ததும் உனக்கு நல்லது தேடி வருது…"
"அத்தை இங்க வாங்க…"என அழைத்து இருவரின் கால்களிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள்…
அவர்களும் "உன் வேலையில நீ நிறைய சாதிக்கனும் அருந்ததி" என கூறினர்…அனி வந்து "கங்கிராட்ஸ் அண்ணி " என வாழ்த்தினாள்…
பின்பு அவளே அங்கு நின்று இருந்த அருணை அவனின் தவத்தை களைத்து "அண்ணா அண்ணிக்கு இங்கயே நம்ம ஊர்லயே ஐபிஎஸ் போஸ்ட் போட்டு இருக்காங்களாம் போய் விஷ் பண்ணுண்ணா…"
"ஹான் என்ன சொல்ற அனி?"
"ஹ்ம் எல்லாம் நானே சொல்ல கூடாது அண்ணிகிட்ட கேட்டுக்கோ…"
இவர்களுக்கு மத்தியில் எதுவும் பேசாமல் கங்கிராட்ஸ் என கூறிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டான்…
இவளும் தன் உடமைகளை கப்போர்டில் அடுக்க சென்றாள்…"நீ போலீஸ்ன்னு எனக்கு யாரும் சொல்லல" என தானாகவே பேச தொடங்க…
"உங்ககிட்ட என்னை பத்தி கொடுத்த ப்ரொபைல் எங்க வச்சி இருக்கீங்க? "என கேட்க கப்போர்ட்டில் தேடி எடுத்தான்…
அதற்குள் அவள் பெட்டிக்களை ஓபன் செய்து துணிகளை வெளியே எடுத்தாள்…
"நா போட்டோ பாத்துட்டு புடிக்கலன்னு ப்ரொபைல் படிக்கல…அப்பா அம்மா சொன்னாங்கன்னு தான் கல்யாணம் செஞ்சேன்…"
"ஹ்ம் நேத்து பேசும் போதே தெரிஞ்சது…சரி பேசிக்கிட்டே கப்போர்ட் கொஞ்சம் ஸ்பேஸ் செஞ்சி தாங்க.. "என கூற…
'என்ன இவ இவள புடிக்கலன்னு தான சொல்லிட்டு இருக்கேன்…நா பேசுறத இவ கேக்குறாளா இல்லையா? ' அதை அவன் வெளிப்படையாக கேட்கவும் செய்தான்…
அதற்கு அவள் "சிலரை பார்த்ததும் பிடிக்கும்.. சிலரை பார்க்க பார்க்க தான் பிடிக்கும்ன்னு கேள்விபட்டு இருக்கேன்.. சோ கவலை பட வேண்டாம் உங்களுக்கு நா சீக்கிரம் பழகிடுவேன்…
எனக்கு உங்களை பார்த்ததும் பிடிச்சி இருந்தது ஓகே சொல்லிட்டேன்…போன வாரம் உங்களுக்கு வந்த பர்த்டேக்கு நா வாங்கின கிப்ட் இது இந்தாங்க அருண் "என அவன் கைகளில் கொடுத்தாள்…
அந்த கிப்ட் என்ன என பார்த்தவன் அதிர்ந்துதான் போனான்…
ஒரு ஐ லவ் யூ கார்டும் கபுல்ஸ் இண்டிமசிக்கான ஒரு கேம் போர்டும் இருந்தது…
பார்த்தவன் வேறு எதுவும் கேட்காமல்" நா ஒரு விவசாயி என்னை எதுக்கு செலக்ட் செஞ்ச "என கேட்டான்…
முதலில் இருந்த, தான் எனும் எண்ணம் கொஞ்சம் குறைந்து இருந்தது அவனிடத்தில்…
"நா செய்ய போற வேலையில எனக்கு டென்ஷன் ஒர்க் பிரஷர்ன்னு நிறைய இருக்கும்.. அதுக்கு ஆப்போசிட்டா வேலை செய்யற ஆளை தான் தேடினேன்.. அப்பாகிட்டயும் அப்படி தான் சொல்லி வச்சேன்…உங்க ப்ரொபைல் பார்த்து புடிச்சி போய் தான் பத்து நாள் உங்களை பாலோ பண்ணேன் ரொம்ப டென்ஷன் ஆகாம வேலை பிரண்ட்ஸ்ன்னு மெயின்டைன் செய்றதை பாத்த பிறகு தான் வீட்ல ஓகே சொன்னேன்… அந்த பத்து நாள்ள லவ் பண்ணவே ஆரம்பித்துவிட்டேன்…"
என கூறியவள் தன் உடமைகளை அடுக்கி முடித்து இருந்தாள்..
பின் அவளே "கல்யாணம் ஆனதும் உங்களுக்கு என்னை பிடிக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை இல்லையா? சோ டேக் யுவர் ஓன் டைம் ஆனா உங்க லைப் என் கூட மட்டும் தான் அப்படி நினச்சு தான் உங்க டைம் ஓடணும்" என கூறி கண் சிமிட்டினாள்…
அவனுக்கும் இப்பொழுது அவளை பிடிக்கும் போல் இருந்தது…
அந்நேரம் அவளின் வீட்டில் இருந்து வந்து இருப்பதாக கீழ் இருந்து அம்பிகா அழைத்தார்…
அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு கீழ் இறங்கினாள் அவளுடன் அவனும் (இறங்கி) வந்தான்…
அம்மா அப்பா என இருவரையும் கட்டி கொண்டு துள்ளினாள் அருந்ததி…
"ரொம்ப சந்தோஷம் டா,எப்பவுமே ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்" என வாழ்த்தினர்…
அவனும் புன்னகை புரிந்து ஏற்றுக்கொண்டான்… பின்பு இவனையும் கிளப்பி கொண்டு அருந்ததி வீடு சென்றனர்…
அங்கே அவளின் அறையில் ஒரு போட்டோவை கண்டு மீண்டும் அதிர்ந்து நின்றான்..
அது அவள் கல்லூரி படிக்கும் போது எடுத்தது…அதில் அவள் இப்பொழுது இருக்கும் படி இல்லை…
இப்பொழுது ஒல்லியாக மாநிறமாக இருப்பாள்.. அந்த புகைப்படத்தில் வெள்ளையாக அதே நேரம் கொழுக் மொழுக் என இருந்தாள்…
அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை…அந்த நேரம் உள்ளே வந்த அருந்ததி பின் இருந்து அவனை அணைத்து இருந்தாள்..
அவள் தான் என அறிந்து அப்படியே நின்றான்…
அதில் அவளுக்கு புன்னகை அதிகம் ஆகியது….
"என்ன பண்ற.. எனக்கு ஒருமாதிரி இருக்கு இப்படி முன்னாடி வா…நிறைய பேசணும் புரிஞ்சிக்கணும் இதுல நா உன்னை லவ் வேற பண்ணனும்" என்றதில் அவள் இன்னும் இறுக்கி கட்டினாள் அவனை…
அவனுக்கு புதிதாக வெட்கம் வேறு வந்து தொலைத்தது.. எனவே "ப்ளீஸ் அருந்ததி" என ஹஸ்கி குரலில் கூற… இப்பொழுது அவளுக்கு வெட்கம் வரும் போல் இருந்ததால் முகத்தை அவன் முதுகில் ஒட்டி வைத்தாள்…
இது வேலைக்கு ஆகாது என மிக தாமதமாக அறிந்து கொண்டவன் அவளின் கைகளை அவனின் வயிற்றில் இருந்து பிரித்து எடுத்து அவளை முன்னே கொண்டுவராமல் இவன் பின்நோக்கி திரும்பினான்…
அப்பொழுது தான் அவளின் முகத்தை அத்தனை அருகில் பார்க்கிறான்…அவளின் முகத்தில் இருந்த கண்ண சிவப்பும் கண் மூடி புன்னகை முகமாக நின்ற கோலம் அவனை ஈர்த்தது..
ஆனாலும் அவனுக்கு அவளை காதல் கொள்ள வேண்டும்.. திருமணம் ஆகிற்று என்பதற்காக அல்ல.. அவளுக்காக அவள் காதலுக்காக அவளை காதல் செய்ய வேண்டும் என விரும்பினான்…
"ஹேய் போலீஸ் என்ன வெட்கம்லாம் வருது.. கொஞ்சம் கண்ண தொறந்து பாத்தா தான நா என்ன செய்ய போறேன்னு தெரியும் "என கூற…அவள் இன்னமும் கண்களை இறுக்கி மூடினாள்…
அவன் இப்பொழுது அன்னிச்சையாக அவளின் கண்களில் முத்தம் இட்டான்..
பின் சிறு அமைதிக்கு பின் கண்கள் திறந்து "சாரிங்க என் ரூம்ல உங்களை பாத்ததும் என்னை அறியாம தான் கட்டிபிடிச்சிட்டேன்.. அதுக்கு அப்புறம் எப்படி உங்களை பேஸ் பண்றதுன்னு தெரியாம தான் அப்டியே நின்னேன்…"
"எதுக்கு சாரி என்னை கட்டி பிடிச்சதுக்கா? அப்போ நா உன்னை கட்டி பிடிச்சாலும் சாரி கேட்கணுமா "என கேட்டு சிரித்தான்…
"அது அப்படி இல்ல அருண்… உங்களுக்கு என்னை பிடிக்காதுன்னு தெரிஞ்சும் உங்களை உங்க உணர்வுகளை தூண்டுறது போல செஞ்சது தப்புன்னு தோணுச்சு அதான் சாரி கேட்டேன்…"
"ஹ்ம் உண்மை தான்…ஆனா எனக்கு உன் மேல வெறுப்பு கிடையாது,ஹ்ம் நீ என்னை கட்டிபிடிச்சதும் எனக்கு பிடிச்சு இருந்தது…
நீ நீயா இரு.. பாத்துக்கலாம் காலம் நமக்கு நீண்டு இருக்கு.." என கூறி அணைத்து கொண்டான்…
அடுத்த ஒரு வாரமும் நிறைய நிறைய பேசினார்கள்…
அவள் கூறியது போல் அவனுக்கும் அவளை பழக பழக பிடித்து விட்டது… ஆனாலும் தாம்பத்தியத்தின் ருசியை அறிய முயலவில்லை இருவரும்…
அன்றைய நாள் அவள் வேலையில் சேரும் நாள்.. யூனிபார்மில் அவளை கண்டவன் சல்யூட் அடித்து சிரித்தான்.. அவளும் அவனின் முதுகில் ஒரு அடி வைத்து சிரித்தாள்…
"மத்த டிரஸ் விட இது சூப்பரா இருக்கு அதி.."
"தேங்க்ஸ் அருண்" என சிரித்தாள்…
இப்பொழுதெல்லாம் அதி என சுருக்கி அழைக்கிறான்…நல்ல முன்னேற்றம் தான்..
"நா வேணா உன்னை ஐஜி ஆபிஸ்ல ட்ராப் செய்யவா? " என கண் அடித்தான் அருண்..
"அட ரொம்ப முன்னேறிட்டீங்க பாஸ் "என அவளும் கண் அடித்தாள்…
அன்று இரவு பணி முடிந்து இல்லம் வந்தவள் சோர்வையும் மீறிய சந்தோஷத்துடன் ஹாலில் அமர்ந்து அனைவருடனும் பேசிக்கொண்டு இருந்தாள்…
அருண் தான் தவித்து கொண்டு இருந்தான் அவளை மிக அருகில் சந்திக்க…
அவளோ வேண்டும் என்றே நேரத்தை ஒட்டிக்கொண்டு இருந்தாள்…பின்பு அனைவரும் களைந்த பின்னரே அறைக்கு சென்றாள்…
அவனோ முதுகு காட்டி படுத்துகொண்டான்..
"அருண் என்ன ஆச்சு அதுக்குள்ள படுத்துட்டிங்க " என அவன் அருகில் அமர்ந்தாள்…
"யாரும் என்கிட்ட பேச வேண்டாம்…அமைதியா படுத்து தூங்கு என்னை படுத்தாத"என்றான் முழுதாக அருந்ததியின் காதலனாக மாறி இருந்த அருண்…
அவளுக்கு சிரிப்பு தான் வந்தது…"அடடா என் அருண்க்கு இந்த கோவம் கூட கொள்ளை அழகா இருக்கே.. அதை ரசிக்கணும்னா நீங்க என் பக்கம் திரும்பினா தான முடியும் "என கூற…
உண்மையில் கோவமான முகத்துடன் அவளை திரும்பி முறைத்தான்…
அவளோ "அச்சோ சோ கியூட் அருண் நீங்க…என்ன கோவமாம் என்மேல "என அவனின் இரு கன்னத்தையும் இரு கைகளால் கிள்ளி எடுத்து முத்தம் வைத்தாள் காதல் பித்தான அருந்ததி…
"காலையில போனதுல இருந்து ஒரு மெசேஜ் கால் எதுவும் இல்ல…இப்போ வந்த பிறகும் எல்லார்கிட்டயும் அரட்டை அடிச்சிட்டு இருக்க…" என சிறுபிள்ளை போல் கோவம் கொள்ள..
அவனை கொள்ளை கொள்ளும் அளவுக்கு அவனை பிடித்து தொலைத்தது அவளுக்கு..
கொஞ்சிக்கொண்டு இருந்த கைகளின் மென்மை வன்மை கொண்டு அவனின் இரு கன்னங்களையும் அழுத்தி பிடித்து அவனின் உதட்டில் தன்னதை பதித்தாள்…
அவனோ முதல் நிலை அதிர்ச்சியில் இருந்து விடுபட்டு அவள் அடுத்து என்ன செய்வாள் என ஆர்வம் ஆனான்…
அவள் மனம் டேய் ஏதாவது செய்து என்னை காப்பாத்தேன் என புலம்பியது…
கண்களை திறந்து அவன் கண்களை நோக்க அவனோ கண்களை சிமிட்டி கிண்டல் செய்து அவளின் கண்கள் தாமாக மூடும் வேலையை செவ்வனே செய்தான்…
அவளின் உச்சியில் முத்தம் பதித்து அவளை முழுதாக சிறை செய்தான்…
இவ்வாறு நாளும் பொழுதும் காதல் அவர்களை ஆண்டது…
அதற்கும் ஆப்பு வைக்க ஆண்டவன் நேரம் பார்த்து வைத்து இருந்தான்…ஒரு மாதம் கழிந்த நிலையில்…
"ஏன் முத்து என்னை அப்படி பாக்குறீங்க?"
"இல்ல மேடம் உங்க கிட்ட வந்த கேஸ் எல்லாத்தையும் உங்க கூட வேலை செய்ற போலீஸ் கிட்ட கொடுத்துட்டு, யாரோ ஒரு கால் செஞ்சாங்கன்னு அந்த கேஸ இப்படி யாருக்கும் தெரியாம விசாரிக்கணுமா மேடம்?"
"எல்லாருக்கும் தெரிஞ்சி விசாரிச்சு அதை நான் சால்வ் செஞ்சி அவார்டா வாங்க போறேன்…அப்புறம் எல்லோருக்கும் அவங்க அவங்களை நிரூபிக்க வைய்ப்பு தேவைபடுது முத்து.. அவங்க என்கூடவே சுத்திட்டு இருந்தா சுயமா எதுவும் செய்ய முடியாது.. இந்த கேஸ்லயும் பாதி வேலை முடிஞ்சது முத்து…நாளைக்கு ரெடியா இருங்க.. சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கா?"
"பக்கா மேம்…எல்லாம் சரியா நடக்கும்…நீங்க இந்த கேஸ யாருக்கும் தெரியாம முடிச்சாலும் எல்லாருக்கும் தெரிஞ்சே ஒரு புது கேஸ் இதுல இருந்து உங்ககிட்ட வர போகுது" என சிரித்தான் முத்து.. அருந்ததியின் நம்பிக்கைக்கு உரிய கான்ஸ்டபிள் முத்து.
"சரியா சொன்னிங்க முத்து…"என அவளும் சிரித்தாள்…
அன்று இரவு அருணிடம் எதுவும் கூறாமல் அமைதியாய் படுத்ததும் உறங்கி விட்டாள்.. அவனும் அவளுக்கு அதிக சோர்வு என நினைத்து அவளை அணைத்து கொண்டு உறங்கி விட்டான்…
அவனுக்கும் தொழிலில் சில பிரச்னைகள் அதை சரி செய்யும் பொருட்டு அவனுக்கும் ஒரு அமைதி தேவைபட்டது என்னமோ உண்மை…அதனால் தான் அவளின் உணர்வுகளையும் இவனால் உணர முடிகிறது போல் …
காதல் என்றால் வார்த்தைகளில் பரிமாறி உடல்களை உணர்வது மட்டுமா? தன் இணையின் உணர்வுகளையும் உணர்வது தானே காதல்…
"அடுத்த பேஷண்ட் வெயிட் பன்றாங்க டாக்டர்…"
"உள்ள வர சொல்லுங்க அப்டியே அண்ணனை பாத்துக்கற நர்ஸ்க்கு போன் பண்ணி இப்போ என்ன பண்றாங்கன்னு மானிடர் செய்ங்க…"
"ஓகே டாக்டர்…"என வெளியே சென்று அங்கு இருந்த தம்பதியரை உள்ளே அனுப்பினார் நர்ஸ்…
உள்ளே நுழைந்தவர்கள் மெடிக்கல் ரிப்போர்ட்டை டாக்டரிடம் கொடுத்தனர்.
"ரெண்டு கிட்னியும் ரொம்ப மோசமா டேமேஜ் ஆகி இருக்கே…இப்போ என்ன டிரீட்மென்ட் எடுக்கறீங்க மிஸ்டர் மாதவ்" என கேட்டார் டாக்டர்…
"டாக்டர் என்னால வலி தாங்கல எதுவும் சாப்பிட முடியல…அப்புறம் இதுக்கு என்னமோ டயலிசிஸ் பண்ணனுமாமே, அதுக்கும் வேற ஒரு அப்பரேசன் செஞ்சி மிஷின் உள்ள வைக்கணுமாம்.. என்னால ஆவாது டாக்டர்.. காசு இருக்கு தர்றேன்…ஒரு கிட்னியாச்சும் எனக்கு மாத்தி குடுங்க அதை வச்சி மீதி காலத்தை ஓட்டிடுவேன்" என அழுதார் மாதவ்..(தாய் மொழி இந்தி எனினும் தமிழை நன்றாகவே பேசினார் )
பக்கத்தில் முக்காடு இட்டு மாஸ்க் அணிந்து கொண்டு இருந்த பெண்மணி அவனை ஒருபக்கமாய் அணைத்து கொண்டாள்…அவள் எதுவும் பேசவில்லை…
"நீங்க கேக்குற மாதிரி செய்யலாம் ஆனா உடனே கிடைக்காது…அதுவரைக்கும் டயலிசிஸ் செஞ்சு தான் ஆகணும்…மிஸ்டர் மாதவ் இப்படி வந்து படுங்க" என அவரை செக் அப் செய்ய போக அடுத்த சில வினாடிகளில் பின்னாலே வந்த பெண்மணி டாக்டரின் பின்புறத்தில் ஊசி ஒன்றை போட படுத்து இருந்த மாதவ் டாக்டரின் கையை பிடித்து கொண்டு வாயில் துணி வைத்து அடைத்து இருந்தார்…
டாக்டருக்கு என்ன நடத்தது என தெரியும் முன்னே அவரின் உயிர் உடலை விட்டு பிரிந்து இருந்தது…
இருவரும் வந்த இடம் தெரியாமல் கிளம்பி சென்று ஆட்டோவில் ஏறி அதை நடுவில் நிறுத்தி அங்கு நின்று இருந்த வண்டியை கிளப்பி கொண்டு போய் வேறு இடத்தில் நிறுத்தி ஒரு வீட்டின்னுள் சென்று வேடத்தை களைத்து ஒவ்வொருவராய் வெளியே சென்றனர்…
அடுத்த சில மணி நேரங்களில் ஹாஸ்பிடலில் போலீஸ் கூட்டமும் செய்தியாளர்களின் கூட்டமும் அந்த இடத்தை பெரிய கலவர பூமியாக காட்டியது…
அந்த இடத்திற்கு ஜீப்பில் வந்து இறங்கினாள் அருந்ததி…
"மேம் உங்க கண்ட்ரோல்ல இருக்கற ஏரியா இது… பட்டபகல்ல இப்படி ஹாஸ்பிடல் குள்ளேயே ஒரு கொலை நடந்து இருக்கு…என்ன ஆக்ஷன் எடுக்க போறீங்க "என செய்தியாளர் ஒருவர் அனைவரையும் முந்தி கொண்டு கேட்க…
"நீங்க எனக்கு முன்னாடியே வந்துடீங்க…நா இப்போதான வர்றேன்..உள்ள போய் பாத்துட்டு வந்து பதில் சொல்லவா" என கேட்டு விட்டு வேக எட்டுக்களுடன் ஹாஸ்பிடல் உள்ளே நுழைந்தாள்…
அங்கு இருக்கும் நிலவரம் அறிந்து கொண்டு வெளியே வந்தவள் காத்து கொண்டு இருந்தவர்களிடம் "இன்ஸ்பெக்டர் இந்த கேஸ் எடுத்து நடத்துவார்.. தேவை எனில் நானும் ஈடுபடுவேன்.. சீக்கிரம் குற்றவாளியை கண்டுபிடிப்போம்" என பொதுவாக பேசியவள் வீட்டிற்கு கிளம்பினாள்…
அந்த சாயங்கால நேரத்திலேயே அருண் வீட்டில் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன..
"என்ன அருண் இவ்ளோ சீக்கிரம் தோட்டத்துல இருந்து வந்துடீங்க…ஆர் யூ ஓகே "என கேட்டு அவனின் நெற்றியில் கை வைக்க போக அருந்ததியின் கை மேலே படாதவாறு ஒதுங்கி நின்றான் அருண்…
"என்ன ஆச்சு அருண்.. சொன்னா தான தெரியும்?"
"உன்னை நா ரொம்ப நேர்மையான போலீசா நினைச்சு இருந்தேன்…ஆனா உன் கைல ரத்த கரையும் ரத்த வாடையும் வருது…இது மட்டும் தானா இல்ல காசும் புழங்குமா"? என கோவமாக கேட்டு விட்டு அவளின் பதிலுக்காக காத்து இருந்தான் அருண்…
"சோ நீங்க தான் அந்த டாக்டர் பத்தி எனக்கு தெரியபடுத்தினது இல்லையா அருண்?"
"ஆமா நீ நேர்மையா விசாரிப்பன்னு நினைச்சேன்.."
"இப்போ எந்த விதத்துல என்னோட நேர்மையை சந்தேகப்படுறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா மிஸ்டர் அருண்" என கேட்டு இன்னும் நிமிர்ந்து நின்றாள்…
"அந்த டாக்டர கொன்னுட்டியே இது போதாதா? அவனை மக்கள் மத்தில கெட்டவன்னு அடையாளம் காட்டி இருக்க வேண்டாமா?" என அவனின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி அவளின் விலகலை அதனின் வலியை உள்ளுக்குள் உணர்ந்தான்…
"என்கிட்ட வர்ற கேசை என்ன செய்யணும் எப்படி அதை முடிக்கணும்னு எனக்கு தெரியும்.. என்னோட வேலைல தலையிட யாருக்கும் நா உரிமை தரல அருண்…"
"ஹ்ம் பாத்தேனே உன் வேலையை தான்…கேசை முடிக்க முடியலைன்னா கேஸ் சம்பந்தபட்டவனை முடிக்கறது தான" என ஏளனமாக கேட்டான் அருண்…
"தேங்க்ஸ் பார் தி அண்டர்ஸ்ட்டாண்டிங் மிஸ்டர் அருண்…அன்ட் குட் பாய்" என கூறி போட்டுக்கொண்டு இருந்த யூனிபார்மிலேயே வெளியே கிளம்பியவள் கீழே இருந்து மேலேயே பார்த்து கொண்டு இருந்த மாமனாரையும் மாமியாரையும் பார்த்து "கொஞ்ச நாள் தான் அத்தை வந்துடுவேன்…
சின்ன பிரிவு ரெண்டு பேரையும் புரிய வைக்கும்ன்னு நினைக்கறேன்.. நீங்க ரொம்ப ஒர்ரி செஞ்சிக்காதீங்க …எங்க வீட்ல ஏதாவது கேட்டா.. என்கிட்ட பேச சொல்லிடுங்க வரேன் மாமா "என்றவள் தன் புல்லட்டில் கிளம்பி விட்டாள்…
அருணிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை…
அவனுக்கு அவள் ஏன் இதை செய்தாள் என்பதிலேயே எண்ணங்கள் நின்று விட்டது…
ஆனால் அங்கு அவன் செய்யும் கொலைகள் பற்றி தெரிந்த பின்பும் இவ்வாறு எண்ணுவானா என அருந்ததி நினைத்து கொண்டே அவள் இல்லம் சென்றாள்…
வீட்டில் அனைவரையும் பார்க்க தோன்றியதால் வந்ததாக கூறி தனிமை நாடினாள்..
அந்த நேரம் முத்து கால் செய்து" மேம் நீங்க சொன்ன வேலையை முடிச்சிட்டேன்… இன்னும் கொஞ்ச நேரத்துல பிளாஷ் நியூஸ் வரும்" என கூறி வைத்தான்…
இறந்த அந்த டாக்டரை என்னவோ பெரிய தியாகியை போலவும், சமூக நெறியாளர் போலவும் செய்திகளில் உலா வருவதை கண்டு எரிச்சல் உற்றவள் அவனை பற்றி பெயர் போடாத கவரில் அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்து விட்டாள்…
'நல்லவராக அடையாளம் காட்ட பட்ட இந்த டாக்டர் அவரின் சொந்த அண்ணனுக்கு ஏற்பட்ட ஒரு வியாதியினால் பாதிக்கபட்ட ஒவ்வொரு உள்உறுப்புகளையும் அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் தவறான பரிசோதனைகளை காட்டி ஆப்பரேசன் செய்து அதை நீக்குவதாக கூறி அண்ணனை காப்பாற்றி கொண்டு வந்தவர் அதில் கிட்டிய லாபத்தில் அதை தொடர்ந்து செய்து கொண்டு இருந்து இருக்கிறார்…
இதில் தவறான சிகிச்சையில் இறந்தவர்கள் பத்திற்கும் மேல் "என அந்த செய்தி வாசிப்பாளர் கூறி கொண்டு இருக்கும் பொழுதே அருண் வீட்டில் இருந்து வேகமாக வெளியேறி இருந்தான்.
"என்ன இது அவ இப்போதான் வந்தா உடனே மாப்பிளையும் வர்ரார்.. ஏதாவது பிரச்னையோ" என அருந்ததியின் தந்தை கூற தாயோ "எதுவாக இருந்தாலும் ரெண்டு பேரும் பேசிக்கட்டும் அமைதியா இருங்க "என அவரை அடக்கி விட்டார்…அதனால் உள் நுழைந்தவனை வாங்க பாப்பா உள்ள தான் இருக்கா போய் பாருங்க" என கூறி இருவரும் அமர்ந்து விட்டனர்…
அறையை திறந்து உள் நுழைந்தவன் கண்டது அவனின் போட்டோவை வைத்து கொண்டு திட்டி கொண்டு இருந்தவளை தான்…
"அதி நா நேர்லயே இருக்கேன் எதுக்கு போட்டோவை திட்டுற என கேட்டு கொண்டே அவள் அருகில் சென்று அமர்ந்தான்…
"என்ன திட்ட மாட்டேனா என்ன?" என கூறியவள் முதலில் அவனின் கன்னத்தில் நன்றாக கடித்து விட்டு உடனே அதற்கு மருந்தாய் உதடை கொஞ்ச நேரம் அதில் ஒட்ட வைத்து விட்டு எழுந்து சென்று கதவை அடைத்து விட்டு வந்தாள்…
"இவ்ளோ செஞ்சிட்டு இதுக்கு அப்புறம் எதுக்கு கதவ மூடுற அதி "என கேட்டு சிரித்தான் அருண்…
"டேய் உன்னை கொல்ல போறேன் பாரு…என்னை பாத்தா எப்படி இருக்கு உனக்கு.. லஞ்சம் வாங்கிட்டு ஆள போட்டு தள்ளுற அடியாள் போல இருக்கேனா? ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து கிளம்பிடு "என விரல் நீட்டி மிரட்ட…
"கோவத்துல எவ்ளோ அழகா இருக்கா என் போலீஸ் பொண்டாட்டி "என அவளுக்கு திருஷ்டி கழிப்பது போல் செய்து அவளை இழுத்து அணைத்து இருந்தான்…
"நா சொன்னதால ஒரு உயிர் போய்டுச்சுனு குற்ற உணர்ச்சில பேசிட்டேன் டா.. சாரி சாரி ரொம்ப சாரி.. இனி நா உன் வேலை விஷயத்துல எதுவும் கேட்க மாட்டேன்.. ஆனா நீ என்னை எவ்ளோ வேணா கேட்கலாம்…கேக்குற அத்தனையும் நா கொடுப்பேனாம் "என அவளை முதலில் கெஞ்சியவன் அடுத்து கொஞ்சினான்…
"ஹ்ம் விடு அருண்…எனக்கு மனசு சரி இல்ல…நா உன்கூட எல்லாம் வர மாட்டேன்.." என அடம் பிடிக்க…"சரி வராத நா உன்கூட இருக்கேன் ஓகே தான" என முத்தம் இட்டு கொண்டே கேட்க அவள் பேசும் நிலையை தாண்டி மயக்க நிலைக்கு செல்ல அவளின் மயக்கத்தில் இவனும் மயங்க..
ஒவ்வொரு ஊடலும் கூடலில் முடிவதில்லை…
ஊடல் கொள்ளாமல் கூடலும் இனிமை சேர்பதாய் இல்லை..
அருண் அருந்ததியின் ஒவ்வொரு ஊடலும் இனிமையை சேர்க்க வேண்டி விடை பெறுவோம்