• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

45. நதியறியா பயணமிது.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
670
பானு எச்சரித்து சென்றபின் இருவரும் சாதாரணமாயிருக்க,
உள்ளே வந்தார்கள் பின்னால் பானுவும், மயூரனும் நின்றிருந்தனர்.


அவர்களை பார்த்ததும் இத்தனை நாள் கண்டிராத தவிப்பில் முகிலன் கூறியதை மறந்து கட்டிலை விட்டு இறங்குவதற்கு எத்தணித்தவள் கையை பிடித்து தடுத்தவன்,

வேண்டாம் என்பதாக தலையசைத்தான்.

அப்பாவியாய் அவனை பார்த்தவள் தாயை ஏக்கமாக காண, அவள் ஏக்கம் புரிந்தவருக்கும் அதே தவிப்பு இருந்திருக்கும் தானே?


என்ன தான் பெற்ற மகள் இல்லை என்றாலும், இத்தனை நாள் பிள்ளைக்கு நிகராக வளர்த்தவராயிற்றே!
சொல்லப்போனால் பானுவை விட மேகலா கொஞ்சம் விபரமானவள் என்றபடியினால் அவள் மேல் மரியதை கலந்த அன்பு அதிகம் இருந்தது.


அவள் நிலமை புரிந்து ஓடி வர முடியாமல் விட்டாலும் தான் வேகத்தை கூட்டி அவளை நெருங்கியவர் கட்டிக்கொண்டு ஆனந்தத்தில் கண்ணீர் விட்டார்.


"என்னை மன்னிச்சிடுடா..... உன்னை இக்கட்டில நிக்க வைச்சு அம்மா எதுவும் பேசலனு அம்மா மேல வருத்தமிருக்கும்,

அம்மாவால அந்த நேரம் எதுவுமே செய்ய முடியலடா!.
அப்படி ஒரு நிலைமையை உன் தங்கை அம்மாக்கு குடுத்துட்டா, நான் என்னடா செய்வேன்?" என இத்தனை நான் தன் மனதிலிருந்த உறுத்தலை மகளிடம் சொல்லி மன்னிப்பு வேண்ட,



"ம்மா.....என்னம்மா மன்னிப்பெல்லாம் கேட்டிட்டு?

முதல்ல கொஞ்சம் வருத்தமா தான் இருந்திங்சு, ஏன் கோபம்கூட வந்திச்சு.
அப்புறம் உங்க இடத்தில இருந்து யோசிக்குறப்போ,
இதை நீ செய்யுன்னு சொன்னாக்கூட நான் செய்யது தானேம்மா ஆகணும், அந்தளவுக்கு நான் உங்களுக்கு கடமை பட்டிருக்கேன்.


இப்படியொரு இக்கட்டில நீங்க இருக்குறபோ சுயனலமா நான் இருந்தேனா, என்னை விட சுயநலவாதி இந்த உலகத்தில யாரும் இருக்க முடியாதும்மா...


ஏதோ ஒரு இக்கட்டில அப்பிடி நடந்தது உண்மை தான்.
ஆனா இப்போ நான் சந்தோஷமா தானே இருக்கேன்.

இனியாவது எல்லாத்தையும் மறந்திடுவோம்மா...

எப்போ நீங்க என்னை பாக்கணும்னு நினைச்சாலும் ஓடி வாங்க, அதே போல நானும் ஓடிவருவேன்." என அணைப்பிலிருந்தவரை விலக்கி கண்ணீரை துடைத்து விட்டவளையே பார்த்திருந்தான் முகிலன்.


இத்தனை நாள் இவர்களை பிரித்து வைத்தது எந்தளவு பெரிய தவறென்று புரிந்தது.
இத்தனை அன்பையும் மனதில் வைத்துக்கொண்டு எப்படி தன் மனைவி தவித்திருப்பாள்? என்னதான் வெளியில் தாயை பிரிந்து தான் படும் வேதனையையும் கவலையும் காட்டிக்கொள்ளாமல் இருந்தாலும், உண்மையில் தான் அவளை நேசித்திருந்தால் அவள் மனம் புரிந்து நடந்திருக்க வேண்டுமோ? என தோன்றியது.


எப்போதுமே தாயின் அன்பிற்கு எவர் அன்பும் ஈடாகதே!

அவளே ஒரு பிள்ளைக்கு தாயாக இருந்தாலும், அவள் அன்னைக்கு எப்போதும் அவள் தானே செல்லமகள்.


கணவனிடம் பகிர்ந்து கொள்ள முடியாத சிலவற்றை தாயிடம் மட்டுந்தானே மனம் திறந்து கூற முடியும்.


புஷ்பாவை முழுவதுமாக ஆராய்ந்தவளாே,


"என்னம்மா உங்க சாப்பாட்டையும் இவ புடுங்கி கொட்டிக்கிறாளா? இவ்ளே் இளைச்சிட்டிங்க"

"இதோடா....! நான் ஒண்ணும் யார் சாப்பாட்டையும் திங்கல.
எப்போ பாரு மூத்த பொண்ணு என்ன செய்யிறாளோ...?
இப்போ சாப்பிட்டிருப்பாளா..? தூங்கிருபபாளா...?
இவங்க உன்னை நல்லா கவனிப்பாங்கல்ல....? இல்லன்னா எங்கமேல இருக்கிற கோபத்த உன்மேல காட்டுவாங்களாே....?
நீ தான் எங்ககிட்ட உண்மையை மறைக்கிறீயோன்னு' உன்னை பத்தயே யோசிச்சிட்டிருந்தா உடம்பு மெலியாமல் தடிக்குமோ" என்றாள்.

அவர் அன்பில் நெகிழ்ந்தவள்,

"ஏன்ம்மா......? நான் தான் தினமும் உங்கூட பேசுறேனே!
பிறகு எதுக்கும்மா.....?" என மேகலா வருத்தமாக.


'யோசிக்காம என்னம்மா செய்ய சொல்லுற?
என் பொண்ணுங்களோட வாழ்கை திசை மாறிப்போனா வேற என்ன தான்டா பண்ணுவேன்?


உன் குணத்துக்கு ஏத்த மாதிரியே மாப்பிள்ளையும் அமைஞ்சிருக்காரு. இனி உன்னை பத்தி கவலையில்லை. என்றவர்,

"இவளோட குழந்தைபிள்ளை தனத்துக்கே எந்த மாப்பிள்ளையும் அமையாது.


இதில இவ செய்து வைச்சிருக்க வேலைக்கு...?." என்று சொல்லும் போதே கண்கள் கண்ணீர் கண்டது.


"அழாதிங்கம்மா..... அவ அவ்வளவு மோசம்லாம் இல்லை....

அவளை புரிஞ்சிகிட்ட ஒருதன் நிச்சயம அவளை ஏத்துப்பான்." சமாதானம் செய்தவள் ,


"இதுக்கு தான் இங்க வந்திங்களா...? ஆதெல்லாம் சொல்லி என்னையும் கவலை படுத்தணும்... அப்படித்தானே!" என பொய் கோபம் காட்டி கேட்க,


"இல்லடாம்மா.... உன்னை பாத்ததும் இத்தனை நாள் இருந்த அழுத்தம் வெளியால வந்திடிச்சு...
மன்னிச்சிடும்மா...., இனி நான் அழல்லை." என்றவர் குழந்தை போல் கண்களை துடைக்க,


அவரையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கும் கண்கள் கலங்கியது.


'தன் துயரத்தை பகிர்ந்து, பாரத்தை குறைக்க வந்த தாயை காயப்படுத்தி விட்டோமே!' என நினைத்தவள் அவரை மீண்டும் அணைத்துக்கொண்டவள் இம்முறை தானும் சேர்ந்து கரைந்தாள்.


"ஊஷ்ஷ்ஷ்...... தாங்க முடியலடா சாமி.....
எங்க பாத்தாலும் அழுகாட்சி தானா?

கொஞ்சம் முன்னாடி தான் இந்த அறையில ரொமான்ஸ் படம் பாத்தேன், திரும்பவும் அதே படம் பாக்கலாம்னு வந்தா, இங்க சீரியலா ஓடுதே.

ச்சே...... இத பாக்கிறத்துக்கு, சீரியலாவது பாத்திருப்மேன்... அதில தான் மேக்கப்போட அழுவாங்க.

அதுங்க தான் அழுதுங்கன்னா நீங்களும் கண்வெட்டாம பாக்கிறீங்க.... அவ்வளவு நல்லாவா இருக்கு இந்த கண்டராவி காட்சி?

என்னால முடியலைப்பா....! பாருங்க என் கண்ணு கூட வேர்த்து போச்சு.

கொஞ்சம் விட்டா சளி புடிச்சிடும். நான் போறேன்." என்றவள்,

"நீங்க என்னமாதிரி....? இங்கேயே நின்று இந்த கறுமத்தை பாக்க போறீங்களா ? இல்லன்னா என்கூட வந்து டீவி பார்க்க போறீங்களா?" என அந்த இடத்தை இலகுவாக்கவென்றே மயூரனையும், முகிலனையும் பார்த்து வினவினாள் பானு.


அவளை திரும்பி முறைத்த புஷ்பா,

"உனக்கு எங்க பாசத்த பார்த்தா சீரியல் போலவாடி இருக்கு?"

"ஆமா... அதிலயும் இதே போல தானே அழுதுட்டு கிடக்கிறாங்க? நீயும் தான் தினமும் பாப்பியே ஒரு சீரியல்....., என்ன பெயர் அதோட பெயர் கூட மறந்திடிச்சு,


கறுமம்டா.... ஒரு வருஷமா கல்யாணம் பண்ணாங்க.


அந்த கல்யாணத்தை அம்மாக்கு சொல்ல ரெண்டு வருஷம் பிடிச்சிட்டிருக்கு,
இனி குழந்தை பிறக்க பத்து வருஷமாகும் போல...." என்றாள்.


"இப்போ உனக்கு என்ன தான்டி பிரச்சினை?
எதுக்கு பார்வதியை இங்க இழுக்கிற?" என்றார் புஷ்பா கோபமாக.


"பெத்த பொண்ணை குறை சொல்லலாம், ஆனா யாருன்னே தெரியாத பார்வதியை குறை சொல்ல கூடாதாம்?" என பானுவும் விடாமல் வாதம் செய்ய,


"அவளை விடுங்கம்மா.! அவ குணம்தான் தெரியும்ல, தெரிஞ்சும் எதுக்கு வாதம் பண்ணிட்டு?." என்றவள்,

"சாப்பிட்டிங்களாம்மா?" என இயல்புக்கு மாறினாள்.


"பறவாயில்லையே!
இந்த ஓட்டை வாய் நிலமையை சரிபண்ணிட்டாளே!
சும்மா சொல்ல கூடாது கொஞ்சோண்டு மூளை வேலை செய்யுது தான்." என்று நினைத்துக்கொண்டான் மயூரன்.


அதன் பின், மேகலா எப்படி இந்த சமயத்தில் இருக்க வேண்டும் என எடுத்துரைத்தவர்,


பானுவிடம்,
உன்னோட குறும்ப மூட்டை கட்டி வைச்சிட்டு, அக்காக்கு துணையா பொறுப்பா நடந்துக்கோ! என்று எச்சரித்து விட்டு விடைபெற்றனர்.


மாலை வீடு வந்த மதிக்கு, பானுவை கண்டதும் கோபம் வந்தாலும், முகிலன் உத்தரவின் பேரில் வந்ததால் அமைதியாகவே ஒதுங்கிக்கொண்டாள்.



நேற்றைய நிகழ்விற்கு பின் முகிலன் அவளை உதாசீனப்படுத்துவதிலிருந்தே தெரிந்ததும்,
அவன் இவளின் சதியினை கண்டு கொண்டான் என்று.


அண்ணனே அவளை மன்னித்து ஏற்கும் போது தனக்கென்ன வந்தது என்று அவளும் ஒதுங்கிக்கொண்டாள்.


ஆனால் பானு தமையனையும் தான்டி தன் காதலனையே ஏமாற்றி விட்டாள் என்ற கோபம்
மட்டும் அடங்கவில்லை.


அந்தளவிற்கு அவள் மூளையை சலவை செய்திருந்தான் தீபன்.


காதலனுக்கு பகைவனால், தனக்கும் பகைவன் என்ற கூற்று. அதனால் அவளை காணும்போது கொதிநிலைக்கு போனவள், முகிலனை நினைத்து அ
டக்கிக்கொண்டாள்.


ஆனால் பகை உள்ளே கொழுந்து விட்டு எரிமலையாய் வெடிக்கும் தருணத்திற்காக காத்திருந்தது.


பாவம் அது வெடிக்காமலே ஊசிப்போன புஷ்வாணமாகும் என்பது அறியாமல்
..



நாட்கள் கடந்து மாதங்களாகின.

பானுவோ தன் வீடு போலவே நினைத்து வீட்டில் என்னவெல்லாம் செய்தாளோ அதையே இங்கும் செய்ய தொடங்கினாள்.


தனியே
வே சேட்டைகாரி.
இப்போது அவள் குணத்தை ஒத்த சர்மியும் அவளுடன் சேர்ந்து விட சொல்லவா வேண்டும்?


இரண்டு நாட்களின் பின் மேகலாவை நல்ல ஒரு மகப்பேற்று மருத்துவரிடம் அழைத்து செல்ல,

குழந்தை கருவுற்று மூன்று மாதங்கள் ஆரம்பித்திருப்பதாக கூறியவர்,


மேகலாவின் சோர்வை பார்க்கும் போது அவளுக்கு சத்தான உணவும், தினமும் ஒரு வகை கீரை உணவில் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும், மீதியை பிளட் ரிப்போட் வந்த பிறகே கூறமுடியும். என்றவர், கூடவே அவர்கள் பீபீயையும் பரிதோதித்து விட்டு ,
அடிக்கடி தன்னிடம் அழைத்துவருமாறு கூறி ஒரு சில சத்து மாத்திரைகள் எழுதிக்கொடுத்தார்.


பின் பிளட் ரிப்போட்டும் வந்துவிட. அதனடிப்படையில் மருந்தும் கொடுத்தவர்,


முகிலனுக்கு சில அறிவுரைகளும் வழங்கியே அனுப்பினார்.


முதல் குழந்தை வேறு. ஈமாேகுளோபின் லெவல் கொஞ்சம் அதிகமானாலே போதும். கொஞ்சம் கவனம் எடுத்து பார்த்துக்கொண்டால் சர்ஜரி மூலமே குழந்தையை வெளியே எடுத்திடலாம்." என்றார் நம்பிக்கையாய்.


அதன்பின் மனைவியை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டான்.


இங்கு மயூவுக்கோ அலுவலகத்திற்கு வந்தால் வேலை ஓடுவதாக தெரியவில்லை.


எப்போதும் வீட்டு நினைவாகவே இருக்கும்
,
முன்பெல்லாம் எங்கு சென்றாலும் இடையே இருக்கும் கடைகளில் சாப்பாட்டை முடித்துக்கொள்பவன்,


இப்போதெல்லாம் தமையனைப் போல எந்த வேலை இருந்தாலும் அதை ஒதுக்கு விட்டு சாப்பிடவென்றே வீட்டுக்கு வருவது வாடிக்கையானது.



சாப்பாடு முடிந்தும் ஒரு மணி நேரம் கடந்தே அலுவலகம் செல்வான்.


அப்படி தன்னை மறந்து பானு செய்யும் குறும்புகளை நேரம் ஒதுக்கி ரசிக்க தோன்றும்.

அவளை எந்த நேரமும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என தோன்றும் உணர்வுகளை அவனால் புரிந்து கொள்ள முடிந்தாலும்
, அதன் காரணம் மட்டும் தெரியவில்லை.


அந்த உணர்விற்கு என்ன பெயர் வைப்பது என்று அவனுள் பல போராட்டம்.


'அந்த சிந்தனையை இப்போதைக்கு ஒதுக்கி வைத்து விடலாம் என்று நினைப்பவனுக்கு, கிடைக்கும் சந்தர்பத்தில் அவளை ரசித்தாலே போதுமென்ன எண்ணம்.

அடுத்த கட்டத்தை சிந்திக்க மனதிற்கு இடம் கொடாலும், இருக்கும் சந்தர்ப்பத்தையும் இழக்க விரும்பாமலும் தன் மனதுக்கு இனிமை தரும் அவள் செயல்களை ரசிக்க தொடங்கினான்.


பாவம் அவன் செயற்பாடுகளில் வித்தியாசத்தை ஒரு ஜோடி கண்கள் தினமும் ஆராய்வதை அவன் அறிவதற்கு வாய்பில்லை.


பானு அந்த வீட்டிற்கு வந்து மூன்று மாதங்கள் கடந்து விட்ட நிலையில், புஷ்பா கிணற்றடியில் வழுக்கி விழுந்ததனால் சிறிது காலத்திற்கு என்னை நான் கவனித்துக்கொள்வேன்
,

இப்பாே எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
அம்மாவை பார்த்துக்கொள்வதற்கு தான் ஒருவர் தேவை.. அதனால் அவருக்கு துணையாக இரு என்று முகிலன் சம்மதத்தோடு பானுவை அனுப்பி வைத்தாள் மேகலா.


மதியம் சாப்பாட்டிற்கு வந்த
மயூரன்,
வழமையாக இந்த நேரத்தில் ஹாலில் இருந்து சர்மியோடு டீவிக்காக குளாயடி சண்டையில் ஈடுபடுபவளை காணாது, சாப்பாட்டு மேசையில் இருந்தவாறே கண்களால் வலை வீச,

பாவம் அவளை தான் காணவில்லை.

சர்மிதான் நிம்மதியாக சீரியல் பார்த்துக்கொண்டிருந்தாள்.


இந்த சீரியலினால் தான் பானுவிற்கும் சர்மிக்கும் எப்போதுமே சண்டை.


பானுவிற்கு சீரியல் என்றாலும் பிடிக்காது, அப்படி யாராவது பார்த்தார்கள் எனின் டீவியின் முன்பு நின்று பார்ப்பவர்களுக்கு இடையூறு செய்வாள்.


இல்லை என்றால் ரிமோட்டை அவர்களிடமிருந்து பறித்து, மியூசிக் சேனலுக்கு மாற்றுவள்.


அதுவும் இல்லையெனில் டீவியை நிறுத்தி விட்டு, ரிமோட்டை தூக்கிக்கொண்டு சர்மியிடம் சிக்காமல் வீடு பூராவும் ஓடி அவளை அலைக்கழித்த பின்பே ரிமோட்டை கொடுத்து, அடியும் வாங்கிக் கொள்வாள்.


இந்த மூன்று மாதத்தில் அவளின் செயல் சர்மிக்கு தெரிந்ததனால், அவள் கையில் ரிமோட் சிக்காமல் இறுக பிடித்துக்கொள்பவள், டீவியின் அருகில் இருக்கையை இழுத்துப்போட்டு கொள்வாள்.


தானும் அவளருகில் இருக்கையை பாேட்டு அமர்ந்திருப்பவளுக்கு
அழுகாட்சி வந்துவிட்டால் போதும்,

உடனே சர்மியின் கண்ணீர் காணாத கண்ணை பொய்யாக துடைத்து விட்டு,


"நீ அழாதடா செல்லம்..! இருந்தாலும் அவங்களுக்கு இவ்ளோ கஷ்டம் வேண்டாம்.

ஏன் தான் கடவுள் நல்லவங்கள சோதிக்கிறானோ..?" என கூறி சர்மி அடக்கிக்கொண்டிருக்கும் கண்ணீரை வர வைத்துவிட்டு சிரிப்பாள்.


பின்பு அதையே மூன்று நாட்களுக்கு சொல்லிக்காட்டி சர்மியை வெறுப்பேற்றுவாள்.


அதனாலயே பானு மேகலா அறையில் இருக்கும் போது மட்டும் தொடர் சீரியல் பார்ப்பாள்.



மற்றைய நேரங்களில் பானுவிற்கு பிடித்த ஆதித்தியா தான்.


இன்றோ வீடு அவ்வளவு அமைதியாக இருக்க
,


'இவ எங்க போனா..? அண்ணி அறையில இருந்தாக்கூட அவ குரல் இங்கவரை காதை கிழிக்குமே..!

சர்மிக்கிட்ட கேட்போமா? எதுக்கு அவளை கேக்குறேன்னு கேட்டுட்டா...?

சரி வேறு விதமாக கேட்டு பார்த்திடுவோம்.' என நினைத்தவன்.


"சர்மி!.....'

"சொல்லுண்ணா...." என்றவள் விழிகளோ டீவியிலேயே மூழ்கியிருந்தது.


"நிம்மதிய சீரியல் பாக்கிற போல?."


"ஆமாண்ணா..... இந்த கங்கா இருக்காளே வைஷ்ணவிக்கு காஃபில விஷத்தை கலந்திட்டா... பாவம் இது தெரியாமல் அவளும் இப்போ குடிக்க போறாண்ணா.." என
சீரியலுக்குள் மூழ்கிப்போனவள் கவலையாக கூற,

"கிழிஞ்சுது போ...! இவ என் கதையையே நாசம் பண்ணிட்டாளே! சரி மறுபடியும் கேட்போம்.


"உன்னை சீரியல் பாக்க விடாம தொல்லை செய்யிறவளை எங்க காணோம்?.." ' மேலோட்டமாகவே மறுபடியும் கேட்டான்.


"நிம்மதியா இன்னைக்கு தான் சீரியலே பாக்கிறேன். உனக்கெதுக்குண்ணா இந்த கெட்ட எண்ணம்?"


'சரியான சீரியல பைத்தியம்! உனக்கு ரேடியோ தான்டி சரி'. என நினைத்தவன்.


"வீட்டிலேயே அவளை காணல, எங்க போய் தொலைஞ்சிட்டா?' என நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

"நான் தான்டா அவளை அவங்க வீட்டில கொண்டு போய் விட்டுட்டு வரேன்." என முகிலன் வாசலில் நின்று குரல்கொடுக்க.


"ஓ......" என்றவனை கேள்வியாக பார்த்தவன்
,
அடுத்த கேள்வி அவன் கேட்பதற்கு முன்,


"அத்தை கிணத்தடியில வழுக்கி விழுந்திட்டாங்களாம், அதனால அவங்களை பாத்துக்க இப்போ கட்டாயம் ஒருதங்க தேவை!,

கலைக்கு தான் மாத மாதம் ஹெல்த் செக்கப் போறோமே!
எந்த பிரச்சினையும் இல்லையாம், இதே மாதிரி மெயின்டேன் பண்ணா சரி என்டதனால, இப்போதைக்கு பானு அம்மாவ கூட இருந்து கவனிச்சுக்கட்டும்.
கலைக்கு உதவி தேவைப்பட்டா அவளை கூப்பிட்டுகலாம்..., நீ என்ன சொல்லுற மயூ...?" என்றான்.


அவன் என்ன சொல்ல முடியும்?
அவள் இருப்பாள் என எதிர்பார்த்து வந்து ஏமாந்தல்லவா போனான்.


அவள் வீட்டை விட்டு போய்விட்டாள் என்பதே ஏமாற்றமாக இருந்தது.

அவன் முகத்தையே பார்த்திருந்த முகிலன்
,

"பானு இருக்குறப்போ வீடே இரைச்சலா இருக்கும்,
இப்போ ரொம்ப அமைதிய இருக்குல்ல...

வீடுன்னா அது பானு இருக்குறப்போ தான் வீடு வீடாவே இருந்திச்சு. சின்ன பொண்ணாட்டம் கூவிட்டே திரிவால்லடா?
யார் வீட்டுக்கு மருமகளா போக போறாளோ அந்த வாயாடி? அந்த வீடு சொர்க்கம் தான்."


"என்ன கொஞ்சம் குறும்பு, வீட்டுக்கு குழந்தையே தேவையில்லை. இவளே குழந்தையாட்டம் குறும்பு பண்ணுவா!


ஆனா ஒன்னுடா....!

அவ இருக்குற வரை இம்சைன்னு தோனிச்சு. இப்போ எதுக்கு அனுப்பி வைச்சேன்னு தோணுது.

சும்மா சும்மா நம்மள சீண்டிப் பாக்குறதுக்காகவே மரியாதை இல்லாம பேசுவா,
ஆனால் அத்தான், அத்தை, மாமான்னு மனசுக்குள்ள எங்க மேல நல்ல மரியாதை வைச்சிருக்கா." என அவளை பற்றியே நன்றாக பேசியவன் நோக்கம் எதிரில் இருப்பவனை நோட்டமிடவென்று அவன் அறியான்.


அவன் கூறியதன் தாக்கமாக அவன் முகத்தில் சிறு சலனம் தெரிய,

' மீன் வலையில் சிக்கிடிச்சு' என நினைத்தவாறு ,
"சரிடா...! கலையை பார்

க்க போகுறேன். நீ சாப்பிட்டு கிளம்பு." என்றவன் மாடி படிகளில் ஏற.

சாப்பிட வந்தவன் சாப்பாட்டிற்கு மனமில்லாமல் வந்த வழியே திரும்பிவிட்டான்.

சங்கமிப்பாள்............
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,989
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️அடுத்த காதல் அரும்பிடுச்சு 😄😄😄😄
 
Top