ஆசைக்கு தடையேது!!!
"இந்த கல்யாணம் அவசியம் வேண்டுமா? கொஞ்சம் சொல்றதை கேளு பாரதி. அவசரப்பட்டு வார்த்தைகளை வேற விடுற . தப்பு பண்ணாத." என்றான் அர்ஜுன்.
"ஆமாம் நான் தப்பு தான் பண்ணிட்டேன். நான் பண்ண பெரிய தப்பு என்னத் தெரியுமா? உங்களை காதலிச்சது தான்." என்ற பாரதி விடாமல் ஏதேதோ பொரிந்துத் தள்ளிருக்க.
அந்த ஒத்த வார்த்தையில் மொத்தமாக செத்து போயிருந்தான் அர்ஜுன்.
கண்களில் வலி சுமந்திருக்க, மௌனமாக அவளைப் பார்த்தான்.
இவ்வளவு நேரம் அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்துக் கொண்டிருந்தவனின், திடீர் அமைதி அவளை சுட்டது.
அவனது முகத்தைப் பார்த்தவள், "ஷிட்." என்று தனது நெற்றியில் அறைந்துக் கொண்டாள்.
"கண்ணா…" என்று அவள் அழைக்க…
அதை காதில் வாங்காமல் அறைக்குள் நுழைந்துக் கதவை சாற்றியவன், அதன் மேல் சாய்ந்துக் கொண்டான்.
வெளியே நின்றிருந்த பாரதியும், விட்டு விட்ட வார்த்தையின் வீரியம் தாங்காமல் கதவின் மேல் சாய்ந்திருந்தாள்.
" கதவை திற கண்ணா." என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அழைத்தாள்.
" ஓகே யுவர் விஷ் பாரதி. இந்த பங்ஷனை ஸ்டாப் பண்ணிடலாம்." என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், வேறு மறுமொழி அளித்தவனது குரலோ வழக்கத்திற்கு மாறாக கம்மியிருந்தது.
" அதை அப்புறம் பேசலாம் கண்ணா. முதல்ல கதவைத் திற." என்று அழுத்தமாக கூற.
" டோண்ட் கால் மீ கண்ணா. அர்ஜுன் என்று மட்டும் கூப்பிடு."
" நான் கண்ணான்னு கூப்பிடக் கூடாதா?" என்றவளது தைரியமெல்லாம் மறைந்து கண்களிலிருந்து மீண்டும் கண்ணீர் பெருகியது.
காதலிக்கும் போது அர்ஜுன் என்று இவள் கூப்பிட்டால், "பாரதி… எல்லாரும் போல அர்ஜுன்னு தான் கூப்பிடுவியா? வேற பெயர்ல கூப்பிடேன்." என்று கெஞ்சுவான்.
" அர்ஜுன் முதல்ல நீ என்னை எப்படி கூப்பிடுற? பாரதின்னு தானே. அப்புறம் நான் மட்டும் எப்படி ஸ்பெஷலா கூப்பிட முடியும்? அதுவும் உன் பேரை சுருக்கி வேற கூப்பிட்டால் சகிக்க்காது." என்று விட்டு நக்கலாக அவனைப் பார்த்து சிரிப்பாள்.
" ப்ச்… பாரதி… நான் முதல்ல உன் பேரை கேட்டு தான் இம்ப்ரஸ் ஆனேன். அந்த பாரதி போல தைரியமாக இருக்கவும் தான் உன்னை விரும்பவும் ஆரம்பித்தேன். எனக்கு அந்த பேர் ரொம்ப ஸ்பெஷல். சோ உன்னை நான் எப்பவும் பேரை சுருக்கி கூப்பிட மாட்டேன். நீ எனக்கு என்னைக்கும் பாரதி தான். அதுக்காக நீயும் அப்படி இருக்கணும்னு அவசியமில்லை. நீ வேற பேர் வச்சு தான் என்னை கூப்பிடணும். ஹான் இப்படி பண்ணுனா என்ன? அந்த பாரதி விரும்பின கண்ணனா என்னை நினைச்சுக்கோ." என்று கண் சிமிட்டி அவன் சிரித்த நினைவு கண் முன்னே வந்து போனது. இன்றோ அவன் அப்படி கூப்பிடாதே என்று கூறவும், பாரதிக்கு மனம் கணத்துப் போனது.
இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருந்தால் அவர்களுக்கு இடையே இருக்கும் கொஞ்சம் நஞ்ச காதலும் செத்துப் போய்விடும் என்பதை உணர்ந்தவள், " நான் கிளம்புறேன். குட் பை." என்று அவனை எந்த பெயரிட்டும் அழைக்காமல் பொதுவாக கூறி விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
அவளைத் தடுப்பதற்காக வெளியே வந்த அர்ஜுன், பார்த்தது என்னவோ ஸ்கூட்டியில் பறந்த பாரதியைத் தான். அப்படியே அங்கிருந்த சோபாவில் விழுந்தான். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கித் தவித்தான்.
******************
வீட்டிற்கு வந்தவள் மௌனமாக கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க.
அசோக், "என்னடா இன்னும் உங்க சண்டை தீரலையா." என்று வாஞ்சையாக வினவினான்.
" அண்ணா… இந்த பிரச்சனை முடியும் போல தெரியலை. என்னோட ஆசையை அவர் பெருசா நினைக்கலை. இப்படியே போனதுன்னா எங்க காதல் தோத்துடுமோன்னு பயமா இருக்கு. நான் அவரை வெறுத்துடுவேன்னோ, இல்லை அவர் என்னை வெறுத்திடுவாரோன்னு தோணுது."என்ற பாரதி வெடித்து அழுதாள்.
"அழாதடா…" என்று சமாதானம் செய்துக் கொண்டிருந்தான் அசோக்.
அதுவரை மௌனமாக நின்றிருந்த அனுஷா, வாயைத் திறந்தாள்.
"எதுக்கு இப்ப அழற நீ? அதான் எங்க அண்ணன் மனசை உடைச்சிட்டியே. இதுக்கு மேல என்ன இருக்கு?"
" என்ன அனு… உனக்கும் நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியலையா? நீயும் உன் அண்ணனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ. எல்லோருக்கும் அவங்க பக்கம் ஒரு நியாயம் இருக்கும். ஆனால் என் பக்கம் உள்ள நியாயத்தை கேட்கத்தான் ஆள் இல்லை."
" உனக்கு உன் விருப்பம் தான் முக்கியம். ஆனால் உனக்காகவே வாழ்ந்துட்டு இருக்க எங்க அண்ணனைப் பத்தி உனக்கு எந்த அக்கறையும் இல்லை. இல்லைன்னா எங்க அண்ணன் கூட இப்படி சண்டை போட்டுட்டு வந்திருக்க மாட்ட. பாவம் அந்த மனுஷன். தனியா தவிச்சிட்டு இருப்பாரு."
" நான் மட்டும் சந்தோஷத்துல குதிச்சிட்டு இருக்கேனா அனு."
" தெரியுதில்ல பாரதி. நீயும் கஷ்டப்பட்டுக்கிட்டு, அண்ணனையும் கஷ்டப்படுத்திக்கிட்டு இதெல்லாம் தேவையா? அதுவும் இத்தனை வருஷத்துக்கு அப்புறம் அவசியமா?" என்றாள் அனுஷா
" அனு… எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நீயே இப்படி கேட்கும் போது, ஆச்சரியமா தான் இருக்குது." என்று தனது தோழியும், அண்ணியுமான அனுஷாவை அதிர்வுடன் பார்த்தாள்.
" அடியே பாரதி. தெரியும் டி. உன்னோட கல்யாண கனவுகள் பத்தி எனக்கு மட்டுமில்லை, நம்ம காலேஜ் முழுக்க உள்ள எல்லோருக்கும் நல்லா தெரியும் டி. அதை வச்சு தானே அண்ணனுக்கும், உனக்கும் முதல் கான்வர்ஷேஷனே ஆரம்பமானது. " என்றாள்.
' "ஹலோ… பாரதியாரோட பேரை வச்சுக்கிட்டு எதையாவது சாதீப்பிங்கன்னு பார்த்தா, இப்படி படிக்குற காலத்துல கல்யாணத்தைப் பத்தி கனவு கண்டு இருக்கீங்க. ரிடிகுலஸ்."
"ஹலோ நான் எப்படி இருந்தா உங்களுக்கு என்ன வந்துச்சு. நீங்க யாரு ஏன் விஷயத்துல தலையிட?ஹூ ஆர் யூ மேன்?" என்று நக்கலாக வினவினாள் பாரதி.
" நான் உன் ஃப்ரெண்டோட அண்ணன்."
" இருந்துட்டு போ. அதுக்கு என்னோட விஷயத்துல தலையிட யார் உனக்கு அனுமதி குடுத்தா?" என்று நிமிர்ந்து தைரியமாக வினவினாள்.
" லுக் பாரதி.உன் கூட சேர்ந்து என் தங்கச்சியும் கெட்டு போய்ட்டா என்ன பண்றது. அதனால உனக்கு அட்வைஸ் பண்ற கடமை எனக்கு இருக்கு."
" இங்க பாருங்க சார். பாரதி கூட கல்யாணம் பண்ணாமல் சாதிக்கல. யாரா இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கிட்டும் சாதிக்கலாம். நானும் அதான் பண்ண போறேன். அதற்காக என்னோட கல்யாண கனவுகளைப் பத்தி பேசாமல் இருக்க மாட்டேன்." என்று பளிச்சென்று கூறிய பாரதி, அவனது இதயத்தில் அழுத்தமாக பதிந்து விட்டாள்.' அதையெல்லாம் நினைத்துப் பார்த்த பாரதி தலையை குலுக்கிக் கொண்டாள்.
"இப்போ எதுக்கு பழசை பத்தி பேசுற? அதான் முடிஞ்சிருச்சே. விட்டுத்தள்ளு."
"அப்புறம் எதுக்கு நீ அதையே புடிச்சு தொங்குற பாரதி. உனக்கு எங்க அண்ணனோட கல்யாணம் ஆகணும்ங்குறது தானே முக்கியம்? அது தான் நடத்துச்சுடுச்சே. இருபத்திஐஞ்சு வருஷமாகிடுச்சு. இப்போ போய் உன் ஆசைப்படி கல்யாணம் பண்ணனும்னு சொல்றீயே எங்காவது நியாயமிருக்கா? நீ அப்பவே உன் விருப்பத்துல ஸ்டெடியா இருந்திருக்கணும்."
" அனு… நான் என் விருப்பத்துல உறுதியாத் தான் இருந்தேன். எங்க அப்பா, அம்மா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலை. என்னை எங்கேயும் போகக்கூடாதுன்னு வீட்லேயே வச்சிருந்தாங்க. உடனே மாப்பிள்ளையும் கொண்டு வந்தாங்க. ஆனால் நான் வர்ற மாப்பிள்ளையை ஓட விட்டதைப் பார்த்து, இவ அடங்கமாட்டானு தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க. ஆனால் உங்க அண்ணன் அத்தை, மாமா கிட்ட காதலை சொன்ன போது, கல்யாண வயசுல பொண்ணை வச்சுக்கிட்டு இப்போ உனக்கு எப்படி கல்யாணம் பண்ன நாங்க ஒத்துக்குவோம். காதல், கல்யாணம்னு உளறாமல், வாழ்க்கையில் முன்னேறுற வழியைப் பாருன்னு அவங்க சொல்லவும், அவங்க கிட்ட போராடாமல் பயந்துட்டார்.
உன் மூலமா என்னை கோவிலுக்கு வரச் சொல்லி, அங்கு வந்தவளை வற்புறுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டார். அதெல்லாம் உனக்கும் தெரியும். அது பாஸ்ட். சரி அதை விடு அனு. இப்போ நான் என்ன பெரிசா கேட்டுட்டேன். ஊரை கூட்டி சில்வர் ஜுப்ளி கொண்டாடுவதுக்கு பதிலா, நம்ம நெருங்குன சொந்தத்தைக் கூப்பிட்டு முறைப்படி கல்யாணம் பண்ணணும். ஒவ்வொரு சடங்கும், அதுக்கான அர்த்தத்தை சொல்லி செஞ்சுக்க ஆசைப்படுறேன். அது தப்பா?" என்னவளின் கண்களில் தவிப்பு தெரிந்தது.
" நடைமுறையில் இது சாத்தியப்படுமா பாரதி. உன் பொண்ணோட மாமியார் வீட்டுல என்ன சொல்லுவாங்க. அவ சங்கடமா நினைக்குறா?"
" கடவுளே! உங்க அண்ணன் மொதல்ல உங்க அம்மா, அப்பாவுக்காக பார்த்தாங்க. அப்புறம் உனக்காக பார்த்தாங்க. இப்போ அவங்க பொண்ணுக்காக பார்க்குறாங்களா? ரைட் அப்போ நான் யாரு? எனக்காக எதுவும் செய்ய மாட்டாங்களா? நானும் இப்படி ஒவ்வொருத்தவங்களுக்காகவே யோசிச்சு என் வாழ்க்கையை முடிச்சிக்கணுமா. எனக்கான வாழ்க்கையை எப்போ நான் வாழ்றது?
நான் நிறைய கோவிலுக்கு போய் ரிசர்ச் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். எங்க அம்மாவோ எதுனாலும் கல்யாணத்துக்கு அப்புறம் உன் புருஷனோட போன்னு சொல்லிட்டாங்க. ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம், உங்க அண்ணன் கிட்ட சொன்னா, கொஞ்ச நாளாகட்டும் பாரதி. அம்மா, அப்பா ஏற்கனவே நம்ம மேல கோவத்துல இருக்காங்கன்னு சொன்னாரு. அப்புறம் கன்சீவ் ஆயிட்டேன். குழந்தை உண்டாயிடுச்சு அலைய வேண்டாம்னு தடுத்தாங்க. அப்புறம் புள்ளைய பார்த்துக்கணும் தடைப் போட்டாங்க. நான் சராசரி பொண்ணா இருந்தா என் கனவை குழித் தோண்டி புதைச்சிட்டு இருந்திருப்பேன். ஆனால் நான் போராடி அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் என்னுடைய லட்சியத்தை அடைஞ்சேன். அதை நினைச்சு நான் ரொம்ப பெருமை பட்டுக்கிட்டடேன். ஆனா இப்போ நினைச்சா எனக்கு அசிங்கமா இருக்கு. என்னுடைய நியாயமான ஆசைகளை நிறைவேற்றக் கூட போராட வேண்டியிருக்கு.
அந்த விஷயத்துல என் பொண்ணு குடுத்து வச்சவ. அவளை யாரும் குறை சொல்லக்கூடாது. கேலி செய்யக்கூடாது. அதுக்காக அவள் போராடுறா. அவங்க அப்பா ஒத்துழைக்கிறாரு. குட்… அதே போலத் தானே நானும் ஒரு பொண்ணுன்னு ரெண்டு பேரும் நினைக்க மாட்டேங்குறாங்களே. என்னோட சுயத்தை இழக்கணும்னு நினைக்கிறாங்க.
ஆனால் இனிமேல் என்னால அப்படி இருக்க முடியாது. இனி நான் உங்க அண்ணன் கூட வாழ மாட்டேன்." என்றவளது கண்களில் இருந்து தண்ணீர் பெருகியது.
"அப்படி உன்னால இருக்க முடியுமா பாரதி."
" இருந்து தான் ஆகணும் அனு. நான் திரும்ப அங்கப் போனால் நான் நானாக இருக்க மாட்டேன். சங்கடம் தான் வரும் இப்ப கூட உங்க அண்ணனை கஷ்டப்படுத்திட்டு தான் வந்தேன். அது இன்னும் அதிகமாகத்தான் செய்யும். உண்மையிலே என்னுடைய இயல்பே மாறிடுச்சு. இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா, எங்களுடைய காதல் தான் சாகும். அது இவ்வளவு நாள் நாங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். அதனால் இனி நான் அங்கு போக மாட்டேன். எனக்கான வாழ்க்கையை வாழப் போறேன்."
"என்ன பாரதி பேரன், பேத்தி எடுக்கற வயசுல பிரியறதைப் பத்தி பேசுற?"
"பார்த்தியா நான் இவ்வளவு நேரம் சொன்னதை நீயும் காதுல வாங்கலை. நீ மட்டும் தான் என்னை புரிஞ்சுப்பேன்னு நினைச்சேன். ஆனால் நீயும் எல்லோரைப் போலத்தானனு சொல்லாமல் சொல்லிட்ட. உனக்குத் தெரியுமா அனு… நம்ம எல்லோருமே சில விஷயங்கள் நம் வாழ்க்கையில் நடக்காமல் இருந்தால் எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி பார்ப்போம். லைக் டைம் மெஷின் கிடைச்சா, நம்ம காலேஜ் லைஃபை போய் பார்ப்போம், இல்லை ஸ்கூல் லைஃபை போய் பார்ப்போம். சில இழப்புகள் நிகழ்ந்து இருந்தால், அந்த நிகழ்வு நடக்காமல் இருந்தால் எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணிப் பார்ப்போம்.
நானும் அப்படித்தான். இதுவரை நான் என்னோட கல்யாணம் கோவில்ல நடக்காமல், எங்க ரெண்டு பேரோட பெத்தவங்க சம்மதத்தோட நடந்தால் எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணிப் பார்த்துக்கிட்டே இருப்பேன். ஆனால் இப்போ என்ன தோணுது தெரியுமா, உங்க அண்ணனை சந்திக்காமல் இருந்திருக்கலாமோன்னு தோணுது." என்ற பாரதி வாய்விட்டு அழ.
அனுவின் முகத்திலும் வேதனை தாண்டவமாடியது. தன் தோழியின் மேல் உள்ள அக்கறையில் தான் அவளது வேதனையை கிளறி விட்டிருந்தாள். அதனுடன் அவளது அண்ணணுக்கு ஃபோன் செய்து எல்லாவற்றையும் கேட்க வைத்திருந்தாள்.
பாரதி பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவனது நெஞ்சில் ஊசியாய் குத்தியது. தான் தன் காதலால் அவளை பூஜிப்பதாக நினைத்துக் கொண்டிருக்க… அவளது எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறாமல் ஏமாற்றத்தை சுமந்துக் கொண்டிருப்பது புரிய, இப்போது தான் அவன்செய்த தவறு பொட்டில் அறைந்தார் போல் புரிந்தது. பாரதி என்ற பெயருக்கு தகுந்தார் போல் புதுமை பெண்ணாக இருந்தவளை, திருமணம் என்ற பெயரில் அழைத்து வந்து அவளது சிறகுகளை பிய்த்துக் கொண்டிருந்திருக்கிறேன் என்கிற நிதர்சனம் அவனுக்கு இப்போது தான் புரிந்தது. ஹெட்செட் மூலம் பாரதி பேசுவதைக் கேட்டுக் கொண்டே காரை ஓட்டிய அர்ஜுன் ஒரிடத்தில் சடன்ப்ரேக் போட்டான்.
அங்கு பல விதமான பூக்களை விற்கும் கடை இருந்தது. வண்டியை ஓரம் கட்டியவன், அங்கு சென்றான்.
கண்ணைப் பறிக்கும் நிறத்தில் ஒய்யாரமாக இருந்த ரோஜாக் கூட்டத்தில், நடுநாயகமாக சிவப்பு ரோஜா வீற்றிருந்தது. அதை ஆசையாக பார்த்தான். அதை லேசாக வருடி விட்டு, வாங்கியது என்னவோ சந்தனமுல்லையைத் தான்.
பாரதிக்கு மிகவும் பிடித்த பூ. பலமுறை வாங்கி கொடுத்திருக்கிறான். ஆனால் இன்று இதை கொடுத்தால் அவள் முகம் எப்படி மாறும் என்று அறிந்துக் கொள்ள எண்ணியவனின் முகத்திலோ இளநகை வந்தது.
பாரதியிடம் சிவப்பு ரோஜா வித் கேட்பரிஸ் சாக்லேட் கொடுத்து தான் காதல் சொன்னான்.
அதை வாங்கியவளோ, " ரோஜா குடுத்து தான் லவ் சொல்லணுமா? ஏன் வேற பூ குடுத்தா என்ன? எனக்கு சந்தனமுல்லை பூ தான் பிடிக்கும்." என்றாள்.
" பாரதி… நான் வேற பூ வாங்கிக் கொடுத்தா தான் தப்பா போய்டும். எல்லாத்திலும் விதண்டாவாதம் பண்ணாதே. ப்ளீஸ் வாங்கிக்கோ." என்று கெஞ்சினான். அப்போது அவள் பார்த்த பார்வைக்கு அர்த்தம் புரியவில்லை. இப்போது தான் உணர்ந்துக் கொண்டான்.
வேகமாக அவளது அண்ணன் வீட்டிற்கு சென்றவன் கண்டதென்னவோ ஓய்ந்து போய் சோபாவில் அமர்ந்து இருந்த பாரதியை தான்.
அனு அவளை சமாதானம் செய்யாமல் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். அர்ஜுனை பார்த்ததும் அவளது முகத்தில் வெற்றி புன்னகை மலர்ந்தது.
அவனோ அதை எதையும் கண்டு கொள்ளவில்லை. நேராக மனைவியின் அருகே சென்றான்.
அவனது கால் தடத்தின் சத்தத்திலே அவன் வந்ததை உணர்ந்திருந்தாள் பாரதி. ஆனாலும் கண்களை திறக்கவில்லை.
அர்ஜுனோ அவளது காலருகே மண்டியிட்டு," பாரதி." என்று கெஞ்சலாக அழைத்தான்.
அதற்கு பிறகும் அவளால் கண்களைத் திறக்காமல் இருக்க இயலவில்லை.
அவன் கையில் இருந்த சந்தனமுல்லையைப் பார்த்ததும் உதட்டோரம் ஒரு நக்கலான புன்னகை ஒன்று பரவியது.
" என்ன இது?"
" ஐ லவ் யூ பாரதி." என்று அவன் அதை நீட்ட.
" இப்ப மட்டும் இதை தப்பா நினைக்க மாட்டாங்களா?"
"எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை."
"ஓஹோ! உங்க தங்கச்சி இருக்கா… தங்கச்சி வீட்டுக்காரரும் இருக்காரு. அவங்க எல்லாம் கிண்டலா பார்க்கிறாங்க. பரவாயில்லையா?"
"யார் எப்படி நினைச்சாலும் எனக்கு அதை பத்தி கவலை இல்லை."
" உங்க தங்கச்சி பையன் வீடியோ எடுத்துட்டு இருக்கான். சோசியல் மீடியாவில போட்டால் பரவாயில்லையா?"
" ஐ டோண்ட் கேர் பாரதி."
" உங்க பொண்ணுக்கு அனுப்பினாலும் பரவாயில்லையா?"
"பரவாயில்லை."
"நாளைப் பின்ன சம்பந்தி வீட்டில பிரச்சனையானதுனா?
"நான் ஃபேஸ் பண்ணிப்பேன்."
"எப்போதையிலிருந்து இந்த ஞானோதயம் அர்ஜுன்?"
" நீ காதலிக்காமலே இருந்திருக்கலாம் நீ சொன்ன அந்த நொடி தான் நான் செய்த தவறை புரிஞ்சுக்கிட்டேன். ஐயம் ரியல்லி சாரி பாரதி. மறுபடியும் நீ என்னை கண்ணான்னு கூப்பிடுன்னு சொல்ற தகுதி எனக்கு இருக்கான்னு தெரியலை. ஆனா நம்பிக்கை இருக்கு. என்னோட அன்பை மீதி இருக்குற காலத்துல உனக்கு உணர்த்தி, உன்னை கூப்பிட வைப்பேன்." என்றவனது குரலில் தவறு செய்து விட்ட குன்றலிருந்தது.
" சரி இதெல்லாம் இப்ப எதுக்கு சொல்லிட்டு இருக்கீங்க?" என்றவளுக்கு மீண்டும் கோபம் பெருகியது.
" சில்வர் ஜூப்ளி அன்னைக்கு நாம இன்வைட் பண்ணவங்க வரட்டும். ஆனால் அன்னைக்கு எல்லாருக்கு முன்னாடியும் நான் உன் விருப்பப்படி மீண்டும் கல்யாணம் பண்ணிக்க போறேன். யார் எப்படி பேசினாலும் நான் பார்த்துக்கிறேன். இனி யாருக்காகவும் நம்மளோட சின்ன சின்ன ஆசைகளை விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை." என்று அவன் கூற.
பாரதியின் முகத்திலோ நிறைவான புன்னகை மலர்ந்தது.
"அடியே பாரதி… இன்னும் எவ்வளவு நேரம் எங்க அண்ணனை முட்டி போட வைக்கப் போற? சீக்கிரம் உன் சம்மதத்தை சொல்லு. எங்க அண்ணனும் காதலை சொல்லி விட்டு எவ்வளவு நேரமா காத்துட்டு இருக்காங்க"என்று அனு கேலி செய்தாள்
"இருபத்தி ஐந்து வருஷமா என் தங்கச்சியை புரிஞ்சிக்காமல் இருந்ததுக்கு உன் அண்ணனுக்கு இந்த தண்டனை தேவை தான்." என்று அசோக் கூற.
" பாவம் அண்ணா. பொழைச்சு போகட்டும்." என்ற பாரதி, முகம் சிவக்க அவன் கொடுத்த சந்தனமுல்லை பூவை வாங்கிக் கொண்டாள். பாரதியின் வதனத்திலோ அவள் நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போவதில் அந்த பூப்போல மலர்ந்திருந்தது.
" ஓஹோ… பார்த்தீங்களா பாரதியே எங்க அண்ணனுக்கு தான் சப்போர்ட்." என்ற உற்சாக கூக்குரல் பின்னே ஒலித்தது.
ஆனால் பாரதியும், அர்ஜுனும் அதைக் கண்டுக்கொள்ளாமல் வேறு உலகத்திற்கு சென்றிருந்தனர்.
முற்றும்.