Home Anti Heroineஅகானா – 87

அகானா – 87

by Vathani S

அகானா – 87 

“சீனியர் சீனியர்.. இங்க பாருங்க…” என கடலுக்குள் ஓடிக்கொண்டிருந்த ஒரு ஸ்டார் ஃபிஷை காட்டிக் குதுகலமாக கத்திக் கொண்டிருந்தாள் அகானா.

நீல வானம், பளிங்கு போன்ற தெளிந்த நீர், அதில் அங்குமிங்கும் அலைபாயும் கடல் வாழ் உயிரிணங்கள் என அந்த இடத்திலேயே மெய் மறந்து போயிருந்தாள் அகானா.

அவளின் பல ஆண்டுகள் ஆசை இது. ஆகனோடு மட்டுமே இங்கு வர வேண்டும் என்று பேராசையும் கூட. ஆனால் அதை இதுவரை அவனிடம் வெளிப்படுத்தியதே கிடையாது அகானா.

திடீரென வந்து மாலத்தீவு போகலாம் என்று கேட்கும் போது அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அதோடு இப்போது இருக்கும் சூழ்நிலையில் இதெல்லாம் தேவையா என்ற கோபம் கூட வந்தது.

எவ்வளவோ மறுத்து சமாளித்துப் பார்த்தாள் தான் ஆனால் யாருமே அவளின் பேச்சைக் கேட்கவில்லை. ஒருபடி மேலாக ஆரியன் அவர்களுக்கு டிக்கெட்டே புக் செய்து கொடுத்துவிட, அனைவரிடமும் கோபத்தோடுதான் கிளம்பியிருந்தாள்.

வந்ததில் இருந்து இன்னும் வீட்டில் யாரிடனும் பேசவில்லை. அவளுக்கும் சேர்த்து ஆகன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

மனைவியின் ஒவ்வொரு செய்கையையும், மகிழ்ச்சியையும், போட்டோவும் வீடியோவுமாக எடுத்து அனுப்பிக் கொண்டிருந்தான் ஆகன்.

அதைப் பார்த்த பிறகுதான் பெரியவர்களுக்கு மூச்சே சரியாக வந்தது.

தன் பதவி, கோபம், நிமிர்வு, வெறுப்பு என அனைத்தையும் மறந்து சிறு குழந்தை என துள்ளிக்குதித்து கடல் அலையில் ஆடிக்கொண்டிருக்கும் மனைவியை ரசித்தபடியே வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான் ஆகன். 

“சீனியர் நாளைக்கு மறுபடியும் டைவுக்கு கூப்பிட்டு போறீங்களா, ப்ளீஸ்..” என்றபடியே அவனிடம் வர,

“நோ வே அம்மு, ஆல்ரெடி த்ரீ டைம்ஸ் போயாச்சு.. டுமாரோ வேற பிளேஸ் போறோம். இன்னைக்கு இது போதும். ஆல்ரெடி செம டயர்டு.. ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுத்தாதான், நாளைக்கு அவுட்டிங் போக முடியும்.” என பேசிக்கொண்டே தன் போனை பாக்கெட்டில் போட்டவன், அவள் அசந்த நேரம் அலேக்காக கைகளில் அள்ளிக் கொண்டு, ரிஷார்டை நோக்கி நடந்தான்.

“டேய் என்ன பண்ற..? என கணவனை கைகளில் இருந்து குதிக்க பார்க்க,

அவளை விடாமல் இழுத்துப் பிடித்தவன் “நாம இங்க வந்து டூ டேஸ் ஆச்சு.. ஆனா..?” என அவளின் காதோடு உதடுரச,

“ப்ளீஸ்.. இப்படியெல்லாம் பண்ணாத..”  என்றவளின் சினுங்களில், கணவனின் கரம் பெண்ணவளின் இடையில் அழுந்தப் பதிந்தது.

கணவனின் பிடியில் “சீ..னி..ய..ர்..” என பெண்ணவள் தன் உடலைத் தூக்க,  அது இன்னமும் வசதியாகிப் போனது ஆகனுக்கு.

இடையில் இருந்த கரம் சற்றே மேலேற, பெண்ணவளின் துடிப்பும் கூடியது.

“நீ என் கைல இப்படியெல்லாம் நெளிஞ்சு, குலைஞ்சு இருக்கிறதை நான் பார்த்து ரசிக்கனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை அம்மு..” என்றான் போதையேறிய குரலில்.

அந்த மாலை மங்கும் நேரமும், கண்ணாடியாய் பளபளக்கும் தண்ணீரும், இதமான காற்றும், அவன் கைகளில் மோகனத்தில் மயங்கிய மங்கையுமாக அந்த நேரம் ஆணவனுக்கும் மோகம் கொழுந்து விட்டெறிந்தது.

“அம்மு…” என்றான் அவள் கழுத்தில் முகத்தைப் புதைத்து,

“ஹ்ம்ம்..” என்றவளுக்கு பேச்சே வரவில்லை. 

“அம்மு..” என்றான் மீண்டும்.

அதில் அவளுக்கு சிரிப்பு வந்துவிட, “உங்களை…” அகானா அவனை தள்ளிவிட,

“ஏய்.. ஏய்… விழுந்தா ரெண்டு பேரும் சேர்ந்து தான் விழுவோம்டி என் அம்முக்குட்டி..” என அவளின் ஸ்லீவ்லெஸ் டாபில் பார்வையை கொடுக்க,

அவனின் பார்வையை கவனிக்காதவள் “பரவாயில்லை.. உன் மேல தான் நான் விழுவேன்..” என தலையை சிலுப்ப,

“அப்போ சேர்ந்தே கீழே விழுவோம்னு சொல்றியா..?” என விஷமமாக பார்த்து கேட்டான்.

“ஒண்ணும் வேண்டாம் ப்போ” என்றவளைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான் ஆகன்.

“ம்ச்… மாமா..”

“ஓக்கே ஓக்கே..” என்றவன், அவள் சற்றும் எதிர்பாராத நேரமாக பார்த்து அவளோடு சேர்ந்து நீரில் விழுந்தான்..

“ஹேய்..” என நீரில் விழுந்து எழுந்தவள் அவனைப் பார்த்து முறைக்க, அப்போதும் சிரித்துக் கொண்டுதான் இருந்தான்.

“ஏன் இப்படி சிரிக்கிற?” என முகத்தில் விழுந்த நீரைத் துடைத்தபடி கேட்க

“நத்திங்க்..” என்றாலும் சிரிப்பு மாறவில்லை. ஆனால் அந்த சிரிப்பில் இப்போது விசமம் கூடிருந்தது.

அந்த சிரிப்பில் வேகமாக குனிந்து தன்னைப் பார்க்க, அணிந்திருந்த உடை அலோங்கலமாக மாறி, அவனுக்கு தேவ தரிசனம் கொடுக்க “ஓ மை காட்..” என்றவள், வேகமாக நீருக்கடியில் சென்றுவிட, சத்தமாக சிரித்தான் ஆகன்.

“ப்ராடு.. ப்ராடு..” என முனங்கியபடியே, நீருக்குள்ளே தன் உடையை சரிசெய்து கொண்டு வெளியில் வந்தவள், அவனை முறைத்துக்கொண்டே, சிரித்தபடியே அவளோடு உரசியபடியே நடந்தான் ஆகன்.

“வாட் ஹேப்பன்ட்? ஏன் இவ்ளோ ரியாக்ஷன்ஸ், எமோஷன்ஸ்.. உன்னை நான் இப்படி பார்த்ததே இல்ல..”

“ம்ம் என்னடி வேணும் உனக்கு..? நான் உன்கிட்ட மயங்கி கிறங்கி போய் கிடக்கிறதுதான் ஊருக்கே தெரியுமே. இன்னும் என்ன செய்யனும்.. ஏதோ நம்ம லைஃப்லயும் இதெல்லாம் நடக்குதேனு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டா, கேள்வியா கேட்குறா?” என கடுப்படிக்க,

“நீ ரொம்ப எமோஷன் ஆயிட்ட, நான் எப்போவும், கோவத்துல, எமோஷன்ல எதையும் யார்கிட்டயும் டீல் பண்ண மாட்டேன்..” என கணவனைப் பார்த்து கிண்டலடிக்க,

“ஹேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டி.. நீ எங்க என்னை நார்மலா வச்சிருந்த.. உன்னை நினைச்சாலே நான் எமோஷன் ஆயிடுறேன் என்ன செய்றது..?” என்றான் அவனுமே கிண்டலாக

“இது ரொம்ப தப்பாச்சே மேன், என்னை நினைச்சா ரொமான்ஸ் தானே ஞாபகம் வரணும்..” என கண் சிமிட்ட.

“அடி கள்ளி..” என்றவன் அவளை அனைக்க வர, சிரித்தபடியே அறைக்குள் நுழைந்து கொண்டாள் பெண்.

எத்தனை நாட்களாகிவிட்டது மனைவியின் சிரிப்பை பார்த்து.

நாட்கள் இல்லை வருடங்களே இருக்கும். அவன் காதலிக்கும் போது தான் இப்படி கலகலத்து சிரிக்கும் சிரிப்பை அவன் பார்த்திருக்கிறான்.

அதன் பிறகு எப்போது என்று ஞாபகமே இல்லை. இப்போது மனைவியின் சிரிப்பில் மனம் குளிர்ந்து போனது மன்னவனுக்கு.

இந்த சிரிப்பை இனி எப்போதும் வாட விட்டுவிடக்கூடாது என மனதில் உறுதியே எடுத்துக்கொண்டான்.

நினைவுகளின் ராணியோ குளித்துவிட்டு, ஒரு ஸ்லீவ்லெஸ் நைட் ட்ரெஸை மாட்டிக்கொண்டு தலையைத் துவட்டியபடியே வந்து கொண்டிருந்தாள்.

“அதுக்குள்ள குளிச்சிட்டியா?” என்றவனிடம் பொய்யாக ஒரு முறைப்பைக் கொடுத்தாள் பெண்.

அதை உள்வாங்கியபடியே அவனும் குளிக்க செல்ல, இப்போது பெண்ணவளின் நினைவுகள் கணவனின் பால் ஓடியது.

தன்னை வருத்தக்கூடாது என்று பார்த்து பார்த்து கணவன் செய்யும் ஒவ்வொரு செய்கையும் அவளுக்கு அவன் மீதான காதலை மேலும் மேலும் பெருக்கியது.

அவன் விட்டுச் சென்ற நாட்களில் பைத்தியம் பிடிக்காத குறையாக அலைந்திருக்கிறாள். தன்னுடையை அனைத்து கோபத்தையும் படிப்பில் காட்டி, படித்து இன்று ஒரு நிலையில் இருக்க அவனும் ஒரு காரணம் தான்.

“என்ன ஓடுது இந்த மண்டையில?” என அவளின் தலையில் தட்டியபடியே அருகில் அமர,

சார்ட்ஸ் மட்டும் அணிந்திருந்தவன், மேலே ஒரு டவலை மட்டும் போட்டிருந்தான்.

அவன் கேட்பதற்காகவே காத்திருந்தது போல, அவன் மேல் சாய்ந்தவள், “நீங்க கட்டாயப்படுத்தி கல்யாணம் செஞ்சிருக்கலன்னா, நான் என்ன ஆகிருப்பேன்னு யோசிச்சேன்..” என்றாள்.

“என்ன ஆகிருக்கும்.. ஒன்னும் ஆகிருக்காது. அந்த ஐடியா ஃப்லாப் ஆகிருந்தா, கொஞ்ச நாள்ல மறுபடியும் ஒரு ஐடியாவோட உன்கிட்ட வந்திருப்பேன். ஆனா வந்துக்கிட்டே இருந்திருப்பேன்..”

“ஹ்ம். அதான் சொல்றேன். உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்திருக்கேன். அவமானப்படுத்திருக்கேன். அதையெல்லாம் யோசிக்காம..”

“ஹேய் அம்மு.. நான் உனக்கு கொடுத்த வலியை விட இது ஒன்னும் பெரிய வலி இல்லடா… அன்னைக்கு உண்மை தெரியாம உன்கிட்ட பேசினது எவ்ளோ தப்பு.. அதனால நீ எந்தளவுக்கு கஷ்டப்பட்டன்னு ஆரி சொல்லி கேட்டிருக்கேன். அதுக்கெல்லாம் எனக்கு என்ன தண்டனை கொடுக்க முடியும் சொல்லு..”

“ம்ம்.. நீங்க போனதும் எனக்கு ஒன்னுமே புரியல. உங்களை அவ்வளவு தேடினேன், கோபம் குறைஞ்சு திரும்பி வந்துடுவீங்கனு கூட நினைச்சே.. அப்போ மட்டும் இல்ல, நம்ம கல்யாணத்துக்கு அப்புறமும் கூட ரொம்ப தேடினேன்…”

“இப்போவுமா..? நான் உன்கூட தானே இருந்தேன்..” என அவளின் முதுகை வருடி கேட்க,

“ம்ம்.. நீங்க உங்க வீட்டுக்கு கூப்பிட்டுருவீங்களோன்னு ஒரு பயம். கூப்பிடமாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கை. நீங்க ஏன் என் வீட்டுக்கு வரல. ஒரு வேளை வரமாட்டீங்களோன்னு.. இப்படி ஏகப்பட்ட குழப்பம்.”

“அதுதான் வந்துட்டேனே..” என்றான் அவளை சமாதானம் செய்தபடியே,

“ஹ்ம்ம் நான் அதை எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல. உங்களை என் ரூம்ல பார்த்ததும் எப்பவும் போல கனவோன்னு நினைச்சேன்.. ஆனா..” என்றவள் அடுத்து பேசமுடியாமல் அவன் மார்பில் ஒழிய,

“ஹாஹா.. என் செல்லம்டி.. நான் கூட என்னடா இந்த பொண்ணு ஒரு ரியாக்ஷனும் காட்டாம, எல்லாத்தையும் அப்செட் பண்ணுதேன்னு பயந்துட்டே இருந்தேன். ஆனா இப்போதான தெரியுது. மேடம் எல்லாத்தையும் ரசிச்சிருக்கீங்க..” என சிரிக்க

“ச்சி.. அப்படியெல்லாம் இல்ல.. ஆனா பிடிச்சிருந்தது தான்..” என உண்மையை ஒப்புக்கொள்ள,

“மார்னிங்க் நீ என்னை கண்டுக்காம போகவும், ரொம்பவே பயந்துட்டேன்டி.. உனக்கு பிடிக்கலயோ, அவசரப்பட்டுட்டோமோன்னு கூட நினைச்சேன்…” என்றான் அன்றைய நிலையை நினைத்து,

“நீ எங்கிட்ட வந்ததே பெரிய ஷாக்.. இதுல அன்னைக்கே எல்லாம் நடந்தது.. நான் உன்னை தடுக்காம விட்டது, நீ என்ன நினைப்பியோன்னு ஒரு மாதிரியான குழப்பம்.. அதனாலத்தான் அப்படி இருந்தேன்..” 

“ச்சி.. என்னடி நீ.. நான் எப்படி உன்னை நினைப்பேன். அது நம்மளோட எவர்கிரீன் மெமரிஸ், அதைப்போய்..” என்றவன், “இப்போவும் அப்படித்தான் நினைக்கிறியா?” என்றான் அவள் முகத்தை தாங்கி,

“ஹ்ம்ம் இல்ல அப்போ ஏதோ ஒரு குழப்பம்.. அதை விடு.. எனக்கு பசிக்கிது, ஃபுட் ஆர்டர் பண்ணு ப்ளீஸ்..” 

“என்ன வேணும்..” என கேட்டு ஆர்டர் செய்து, உண்டு முடித்து படுக்கைக்கு வரும் வரைக்குமே இந்த பேச்சை மீண்டும் எடுக்கவில்லை இருவரும்.

படுக்கையில் தளர்ந்து கிடந்தவளின் நெஞ்சில் முகம் புதைத்தவன் “ஏன் அம்மு.. நானா உன்கிட்ட வாராம், நீ என்னைத் தேடி வந்திருக்க மாட்ட தானே..” என்றவனின் குரலில் அத்தனை வலி.

ஆறாத காயங்களை
ஆற்றும் நம் நேசந்தனை
மாளாத சோகங்களை
மாய்த்திடும் மாயம்தனை
செய்யும் விந்தை காதலுக்கு
கைவந்ததொரு கலைதானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி
உயிர் செய்யும் மாயமும் அதுதானடி
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
இன்னொரு உயிர்தானடி

 நீல வானம் நீயும் நானும் 

You may also like

1 comment

M. Sarathi Rio May 18, 2026 - 7:32 am

அடப்பாவிங்களா..! மாலத்தீவுக்கு வந்தும் பேசி பேசி டைம் வேஸ்ட் பண்றாங்களோ..?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured