Home Anti Heroineஅகானா – 88

அகானா – 88

by Vathani S

அகானா – 88 

அகானாவிடம் சில நொடிகள் மட்டுமல்ல, சில நிமிடங்களே அமைதி நீடித்தது.

அதை அமைதி என்ற ஒற்றை வார்த்தையில் அடைத்துவிட முடியாது. 

அனைத்தையும் தனக்குள்ளே அழுத்திவைத்துக் கொண்டு, வெளியில் அமைதியாக காட்டும், அந்த ஆழ்கடலின் ஆழம் போல பேரமைதி.

அந்த சில நொடி அமைதியைக்கூட ஆகனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

“ம்ச் விடு. எல்லாம் தெரிஞ்சும் நான் இந்த கேள்வியைக் கேட்டிருக்கக்கூடாது.” என்றான் வேதனையாக.

அப்போது “வந்திருப்பேன்..” என்றாள் அகானா. தன் மூச்சை ஆழ எடுத்து. ஆகனால் இதை நம்பவே முடியவில்லை.

ஆகனுக்கு முதலில் புரியவில்லை, புரிந்தவுடன் அவன் முகம் பளிச்சென மலர்ந்தது. உடனே குழப்பமும் அடைந்தது.

‘நிஜமா’ என்பது போல் பார்க்க, 

“நிச்சயமா வந்திருப்பேன், என்னோட பழிவாங்கிற படலம் எல்லாம் முடிஞ்ச பிறகு, ஆனா அப்போ உங்களாலத்தான் என்னை அக்செப்ட் பண்ணிக்க முடியாம போயிருக்கும்..” என்றாள் வருத்தத்துடன்.

இதைக் கேட்டதும் ஆகனின் உடல் சட்டென இறுகிப் போனது.

அவள் சொல்வது உண்மைதானே.. எல்லாம் முடிந்த பிறகு தன்னைத் தேடி வந்திருந்தால், பெருந்தன்மையாக அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டிருக்க அவனால் முடியுமா?

நிச்சயம் முடிந்திருக்காது..

தன்னுடைய கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு, கோழிக்குஞ்சாய் தன்னிடம் அடங்கி கிடப்பவளின் தலையை மிருதுவாக வருடிவிட்டான் கணவன்.

அவன் மனசாட்சியோ ‘டேய் ஆகன் உனக்கும், லவ்க்கும் செட்டே ஆகாதுடா, அவளைப்பத்தி தெரிஞ்சும் ஏன் இந்த கேள்வியைக் கேட்ட, இப்போ பார் மூட் அவுட் ஆகிட்டா.. இனி எப்படி அவளை சமாதானம் செய்வ..’ என கடித்துக் குதற,

‘அவ என்கிட்ட வர வரைக்கும் தான் எனக்கு பயமே. வந்த பிறகு எப்பவும், எப்படியும் அவளை விட முடியாது. அவளை சமாதானம் செய்யவும், அவ மூடை மாத்தவும் எனக்குத் தெரியும், என்னால முடியும்.. நீ உன் வேலையைப் பார்த்துட்டு கிளம்பு..’ என தன் மனசாட்சியை பதிலுக்கு கத்தி அனுப்பியவன், மனைவியின் நெற்றியில் தன் தலையை வைத்து அழுத்தினான்.

அந்த அழுத்தத்தில் மேலும் அவனோடு ஒன்ற, “சாரி..” என்றான் மெல்ல.

“ஆனா நான் சாரி சொல்லமாட்டேன்..” என்றாள் அழுத்தமாக..

பின் மெதுவாக, “ஸாரி. ரொம்பவே ஸாரி.. என்னோட கவலைகளுக்கான மருந்தை, ஆறுதலை என்னால உங்ககிட்ட மட்டும் தானே தேடிக்க முடியும். அம்மாக்கிட்ட கூட இதெல்லாம் முடியாது, என்னை உங்களுக்குப் புரியுதா..?” என்றாள் கலக்கமாக.

விழிகளில் நீர் விழவா என்றிருந்தது பெண்ணுக்கு. “ஆரம்பத்துல என் மேலையும் தப்பு இருக்கு அம்மு.. நானும் உன்னை புரிஞ்சிக்கல தானே..” என்றான் அந்த கண்ணீரில் பளபளத்த விழிகளைப் பார்த்து.

“என்னமோ ஒரு கோபம், இந்த வாழ்க்கை மேல, என்னை ஒதுக்கின இந்த காலத்தின் மேல, என்னோட வயசுல எனக்கு கிடைக்க வேண்டிய சாதாரண ஆசைகளும், அன்பும் கிடைக்காம போன கோபம். இந்த கண்மூடித்தனமான கோபம் தான் என்னை இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு..” என்றாள் வெளிப்படையாகவே.

இதற்கு மேல் பேசவிட்டால், பேசிக்கொண்டே இருப்பாள் என புரிய, 

“அடியே ஆட்டக்காரி.. இப்போ நீயும் சாரி சொல்லுன்னு நான் சொன்னேனா.? நீ என்ன தப்பு செஞ்ச, சாரி சொல்ல?” என அவளை இடையை இன்னும் இன்னும் இறுக்க,

“ஹேய் என்னப்பா நீ..?” என கணவனின் அனைப்பை தளர்த்த பார்க்க,

“மேடம்.. ஆல்ரெடி மாமா லேட் பிக்கப்.. இதுல இன்னும் என்னனு சினுங்கினா?” என அவளை வளைக்க, 

“ஸ்ஸ் போதும் போதும்..” என்று நகரப் போனவளை இழுத்து இறுக்கியவன், “இதெல்லாம் ஒரு பிடியே இல்லடி.. மாமாவோட பிடி எப்படி இருக்கும்னு உனக்கு இன்னைக்கு காட்டுறேன்..” என தன்னோடு அள்ளியவன், அவளையும்  அனைத்தபடியே கட்டிலில் விழுந்தான்.

‘ம்மா..’ என்றவளின் சினுங்கலும், முனங்கலும் அவனுக்கு மேலும் மேலும் மோகத்தைத் தான் கொடுத்தது. 

தன் முகத்திற்கு நேராக இருந்தவளின் முகத்தையே ஆழ்ந்து பார்க்க, அது பெண்ணவளுக்கு கூச்சத்தையும், மயக்கத்தையும் கொடுக்க, பெண்ணின் விழிகள் தன்னால் மூடிக் கொண்டது.

மூடிய விழிகளில் அழுத்தமாக தன் இதழால் சத்தமாக முத்தம் வைக்க, பட்டென இமை பிரிந்த விழிகள் இரண்டும், ஆழிப் பேரலையாய் அவனை இழுக்க, அவனது மோகத்தின் அளவு அந்த பார்வையில் தெரிய, பெண்ணவளின் பிரிந்த விழிகள் மீண்டும் மூடிக் கொண்டு, இதழ்கள் பிரிந்து அவனுக்கு அழைப்பு விடுத்தது.

அவனோ அந்த அழைப்பை ஏற்று, அவளின் இதழுக்குள் கரைந்தே போனான்.

காற்று கூட நுழைந்து விடாமல் கலந்து நின்ற அந்த கணத்தில், முத்தத்தின் வாயிலாக மொத்தமாக அவளின் மனதில் இருக்கும் பயத்தையும், குற்றவுணர்ச்சியையும் துடைத்துக் கொண்டிருந்தான் அவள் கணவன்.

‘உன்னை இனி விடவே மாட்டேன்’ என்ற பிடிவாதத்தை, அந்த முத்தத்தின் மூலமாக ஆகன் உணர்த்திக் கொண்டிருந்தான். 

ஒரு கட்டத்தில் முத்தம் முற்றுப் பெறாமல் போக, அவன் கைகளிலேயே கரைந்து விழுந்தாள் பெண்.

“அம்மு.. அம்மு..” என அவனின் ஒவ்வொரு முத்தத்திலும், தீரா மயக்கத்தில் அவளின் பெயரை மந்திரம் போல உச்சரித்துக் கொண்டே இருக்க, உருகி மருகி அவன் காதலிலும், காமத்திலும் களைத்து, திளைத்துக் கொண்டிருந்தாள் அகானா.

அந்த மாலை நேரம் அவர்களின் இல்லற வாழ்க்கையில் இனிமையை கொண்டாடி கொண்டிருந்தது.

தீண்டாமல் தீண்டி போகும்
வாடை காற்றே தூக்கம் தீர்ந்து
நாட்கள் ஆச்சு உன் வாசம்
என்னில் பட்டும் வாடி போனேன்
வாசல் தூணாய் நானும் ஆனேன்

மாலை மங்கும்
நேரம் ஒரு மோகம்
கண்ணின் ஓரம் 

இங்கு மைதிலியின் அருகே அமர்ந்திருந்தார் நித்யா. வேறு யாரையும் அனுமதிக்கவில்லை மைதிலி.

நித்யவின் இருபக்கமும் ஹரினியும், ஹரிஷும் இருக்க, அவர்களைப் பார்த்து வலியோடு புன்னகைத்தார் மைதிலி.

“உங்களுக்கு என்ன பெரிம்மா.. ஏன் நீங்க போறீங்க..?” என்ற ஹரிஷின் கேள்விக்கும் சின்னதாக சிரித்தாரே பதில் சொல்லவில்லை.

“அக்கா.. இன்னும் ஒரு தடவை யோசிக்கக்கூடாதா?” என நித்யா கேட்க,

“நிறைய முறை யோசிச்சிட்டேன் நித்தி. எனக்கு இதுதான் சரின்னு படுது. என்னை கொஞ்ச நாள் இப்படியே விட்டா நல்லா இருக்கும். எனக்கும் இந்த பிரச்சினைகள்ல இருந்து தள்ளி இருந்தா பரவாயில்லன்னு தோணுது..”

“அக்கா.. அதுக்காக டிவோர்ஸ் எல்லாம் தேவையா? அதுவும் இந்த மாதிரி நேரத்துல.”

“இந்த மாதிரி நேரத்துலன்னு நீ பாலிஷா கேட்குறது எனக்கு புரியுது. இந்த வயசுல தேவையான்னு நேரடியாவே கேட்கலாம் நித்தி. நான் வருத்தப்படமாட்டேன்..”

“அக்கா..” 

“என்ன விதைக்கிறமோ, அதைத்தானே அறுவடை செய்ய முடியும். நான் என்ன செஞ்சேனோ, அதுக்கான பலனைத்தான அனுபவிக்க முடியும்..”

“ஆனா.. டிவோர்ஸ்ல்லாம் ஏன் க்கா.. கொஞ்சம் யோசிக்கலாம்ல..”

“கண்டிப்பா இந்த டிவோர்ஸ் வேணும் நித்தி.. எந்த ஒரு நிர்பந்தமும், பினையும் இல்லாம நான் இங்க இருந்து போகனும்னு நினைக்கிறேன்..” என்றதும் நித்யாவின் முகமே வாடிப்போனது.

அன்று மைதிலி மூச்சிப்பேச்சில்லாமல் கிடக்க, ஏதோ உந்துதலில் அந்த பக்கம் வந்த ரவியின் பார்வையில் அது விழ, உடனே அவருக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சையிலும் இருந்தார்.

அடுத்த நாள் நார்மல் வார்டிற்கு மாற்றப்பட்டாலும், யாரிடமும் பேசவில்லை மைதிலி.

எப்போதும் யோசனைதான். யோசனையின் முடிவில் ரவியிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று உறுதியாக கேட்டார்.

ரவியால் இந்த அதிர்ச்சியை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

‘என்ன விவாகரத்தா? மீண்டுமா?’ என்பதிலேயே அவரது காலம் நின்றுவிட்டது.

மைதிலி ஏன் இப்படி அவசரப்படுற? பொறுமையா யோசிச்சு முடிவெடுக்கலாம். இந்த வயசுக்கு பிறகு போய் கோர்ட் வாசல்ல நின்னா என்ன பேசுவாங்க..?”  என  ரவியின் எந்த கெஞ்சலும் மைதிலியிடம் செல்லுபடியாகவில்லை.

“அண்ணி.. நீங்க இந்த வாழ்க்கைக்காக எவ்வளவு கஷ்டப்பட்டீனக்ன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். இடையிலே ஏதேதோ நடந்திடுச்சு. இல்லைன்னு சொல்லல. அதுக்காக விவாகரத்தெல்லாம் சரியில்ல அண்ணி.. இப்போதான் எல்லாமே சரியாகிடுச்சே. அண்ணாவும் உங்களை கூப்பிட்டு கனடா போறேன் சொல்றாரே.. இனி அவங்களோட எந்த தலையீடும் இருக்காது, அவங்களால எந்த பிரச்சினையும் வராது அண்ணி.. யோசிங்க ப்ளீஸ்..” என ரஞ்சனியும் கெஞ்ச, மைதிலி அசையவே இல்லை.

“என்னை நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்கு ரஞ்சி.. எல்லாரும் ஏன் இன்னை இவ்வலவு கஷ்டப்படுத்துறீங்க. என்னை கொஞ்சம் என் போக்குல விடுங்க..” என சற்றே எரிச்சலாக பேச, அதன்பிறகு யாராலும் மைதிலியின் முடிவை மாற்ற முயற்சிக்கவில்லை.

வினோத் சொல்லி நித்யாவிற்கும் தெரிய, மைதிலியைப் பார்க்க அந்த வீட்டிற்கு வந்திருந்தாள் நித்யா.

“எப்படி இருக்கீங்க க்கா?” என்ற நித்யாவிடம்,

“நீ வரமாட்டன்னு நினைச்சேன்..” என்றார் மைதிலி.

“என்னக்கா நீங்க? குடும்பம்னா ஏதோ ஒரு கோபம் தாபம் வரும் போகும் தான். அதுக்காக இந்த மாதிரி நேரத்துலயுமா கோபத்தோட இருப்பாங்க?”

“இந்த வீட்டுல நான் மன்னிப்பு கேட்கனும்னா அது உங்கிட்ட மட்டும்தான் நித்தி. என்னையும், நான் செய்த தப்புகளையும் உன்னால மன்னிக்க முடிஞ்சா மன்னிச்சிடு ப்ளீஸ்..”

“அக்கா.. ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?”

“இல்ல முன்னாடியே நீ சொன்ன, நீ சொல்லி நான் கேட்கனுமான்னு ஒரு ஈகோ எல்லாம் சேர்ந்து என்னை இங்க கொண்டு வந்து நிறுத்திருக்கு.. ப்ச் விடு இனி எதைப்பத்தியும் பேச வேண்டாம்..” 

“அக்கா.. இப்பவும் நீங்க அவசரப்படுறீங்களோன்னு எனக்க்த் தோணுது..”

“நீ என்னை புரிஞ்சிப்பன்னு நினைச்சேன் நித்தி..”

“கண்டிப்பா உங்களை புரிஞ்சிக்கிட்டதுனாலத்தான் சொல்றேன். எப்பவும் உங்களைச் சுத்தி ஆட்கள் இருந்துட்டே இருப்பாங்க. நீங்களும் எங்களை சார்ந்தே இருந்துட்டீங்க, இப்போ உங்களால தனியா வாழ்ந்திட முடியுமா? இனி வரப்போற காலம் உங்களுக்கு தனிமையை மட்டும் தான் கொடுக்கும். அதை ரசிக்கிறவங்களுக்கு சொர்க்கம்தான், வெறுக்குறவங்களுக்கு நரகம். உங்களை பேயாட்டம் போட்டு  பைத்தியம் பிடிக்க வச்சிடும். இதெல்லாம் நடக்க வேண்டாம்னு தான், உங்களை யோசிக்க சொன்னேன்..”

“அங்கதான் என்னோட தப்பு ஆரம்பிச்சதுனு நினைக்கிறேன் நித்தி.. அதனால அங்க இருந்தே அதை சரி பண்ணவும் நினைக்கிறேன்..”

“உங்க முடிவுல எந்த மாற்றமும் இல்லன்னா, அப்படி எங்கதான் போகப் போறீங்க..?”

“இப்போ வரைக்கும் எங்கன்னு முடிவு பண்ணல, ஆனா இங்க இருந்து போகனும்னு மட்டும் உறுதியா இருக்கேன்..”

மைதிலியின் அந்த உறுதியை இனி மாற்ற முடியாது என நித்யாவிற்கும் புரிய, அமைதியாகிவிட்டாள்.

*

இங்கு சிங்கப்பூர் செல்வதற்கான வேலையில் தீவிரமாக இருந்தான் ஆரியன்.

மகிக்கு விசா கிடைப்பதில் எந்த பிரச்சினையும் வரவில்லை. ரஞ்சனியும், சங்கரும் மகளுக்கான ஷாப்பிங்கில் இறங்கிவிட்டனர்.

மஞ்சரிக்கு வேண்டியதை விஜயாவே பார்த்துக்கொள்ள, ஆரியனுக்கு சற்று நிம்மதியானது.

ஆனால் மஞ்சரி கிளம்பும் போது மீண்டும் வரமாட்டேன் என்று ஆரம்பிப்பாரோ என்ற பயம் எல்லோரிடமும் இருந்தது நிஜம்.

அதிலும் சுபாஷிற்கு இருப்பே கொள்ளவில்லை. என்னதான் மஞ்சரியை அப்போதைக்கு சமாதானம் செய்திருந்தாலும், அவர் எப்போது வேண்டுமானலும் மீண்டும் முடியாது என்று சொல்ல வாய்ப்பிருக்க, அப்படி நடந்துவிடக்கூடாது என கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தார்.

மஞ்சரியின் முடிவு என்னவாக இருக்கும்? உங்களைப் போல நானும் ஆவலோடு……..

You may also like

1 comment

M. Sarathi Rio May 20, 2026 - 9:03 pm

மஞ்சரி மறு கல்யாணம் பண்ணிக்கத்தான் மறுத்தாங்களே தவிர, சிங்கப்பூருக்கு ஜாலியா போக ஏன் மறுக்கப் போறாங்க..?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured