வர வர காதல் கசக்குதைய்யா – 15
“பவிம்மா இப்படியே இருக்க வேணாம், கிளம்பு கோவிலுக்கு போயிட்டு வரலாம். இன்னைக்கு வெள்ளிக்கிழமை வேற, மாட்டேன்னு சொல்லாம கிளம்பு..” என மனைவியை கிளப்பியிருந்தார் முகுந்தன்.
ஆரணியிடம் அவளது திட்டத்தைக் கேட்ட ஆதித்யன் தந்தையிடம் சொல்லி, இப்போது குடும்பமாக இவர்களும் வீரபாண்டி போய் கொண்டிருந்தனர். இவர்கள் தேனிக்கு வந்த நாளே கேசவனிடம் சொல்லியிருக்க, அவர் இப்போது வரவில்லை என்றுவிட்டார். அன்று ரம்யா பாண்டியனைப் பத்தி பேசியபிறகு இவர்கள் குடும்ப விஷயத்தில் ஸ்டரு தள்ளியே இருப்பது நல்லது என தோன்ற, அதை மறைமுகமாக ஆதியிடம் சொல்லியிருந்தார்.
“பாண்டியன் வந்து அப்பாக்கிட்ட பேசி சமாதானம் ஆகட்டும் கண்ணா, அப்புறமா நான் வந்து பார்க்குறேன். அது தான் நல்லதுன்னு படுது” எனச் சொல்லிவிட, ஆதித்யனுக்கும் அதே சரியெனப்பட, அதன்பிறகு அவரைக் கட்டாயப்படுத்தவில்லை.
கோவிலுக்கு செல்லும் வழியில் ஒருவாரு தைரியத்தை வரவைத்து தன் அப்பத்தாவிடம் விசயத்தை சொல்லிவிட்டாள் ஆரணி. “அப்பத்தா உங்கிட்ட ஒன்னு சொல்லனும், என்ன அடிக்க மாட்டேன் சொல்லு அப்போதான் சொல்லுவேன்,” என பீடிகையுடன் ஆரம்பிக்க,
“என்னன்னு சொல்லாம எதுக்கு இந்த இழுவை. சொல்ல வந்தை சொல்லு, உங்காத்தாளுக்கு தெரியாம காச திருடிட்டியா.? அதுக்கு பணம் வேணுமா.?” என அவளைப் பத்தி தெரிந்து கேட்க,
“அப்பத்தாஆஆ..” எனப் பல்லைக் கடித்தவள், “நான் என்ன ஸ்கூல் புள்ளயா காச திருடி. எங்கம்மாவுக்கு பயப்பட. நீ எப்பத்தான் வளருவியோ” எனத் தலையில் அடிக்க,
“ஏண்டி கொழுப்பெடுத்தவளே, சிவனேன்னு வீட்டுலக் கிடந்தவள கோவிலுக்கு போலாம்னு அள்ளிப் போட்டுட்டு வந்துட்டு, கிண்டல் செஞ்சிட்டு இருக்க, எலேய் வண்டியத் திருப்புடா, வூட்டுக்கு போவோம்..” எனக் குருவம்மாச் சாமியாட
“அய்யோ கெழவி மொத்தப் ப்ளானயும் சொதப்பிச்சு.. எதாச்சும் பண்ணுடி..” என நிகிதா வாயில் ஆருவின் காதில் முணுமுணுக்க, “ப்ச் அப்பத்தா என்ன சொல்ல வர்ரேன்னே கேட்காம மண்ணு சட்டில அவுலு பொறிஞ்ச மாதிரி பொறியக்கூடாது.” என அவளும் சவுண்டைக் கூட்ட
பேத்தியின் சத்தம் கூடவும் யோசனையான குருவம்மா “என்னத்தா என்ன விஷயம், உன் அத்தான் எதுவும் சொல்லச் சொன்னானா.?” என ஒருவாறாக செய்தியின் நுணியைப் பிடித்து விட்டார்.
அப்பத்தாவேக் கேட்கவும், அதற்கு பிறகு அவளுக்கும் மறைக்கத் தோன்றவில்லை. நேற்றுதான் ஊரிலிருந்து வந்தார்கள் என்று மட்டும் சொல்லி நடந்ததை மேலோட்டமாக சொல்ல, நெஞ்சில் கைவைத்தபடி அப்படியே அமர்ந்துவிட்டார் குருவம்மா..
அதற்குள் ஆதித்யனுக்கு அழைத்து போனை ஸ்பீக்கரில் போட்டு விட்டாள். அவன் போனை எடுத்ததும், “அத்தான் அப்பத்தாக்கிட்ட சொல்லிட்டேன், கொஞ்சம் ஷாக்காகிட்டாங்க. நீங்க பேசுங்க..” எனவும்
“பாட்டி..” என அவன் அழைக்க,
“அப்பு.. எம்பொண்ணு வந்திருக்காளா.? என்னைப் பார்க்க வராளா.? எம்மேல கோவமெல்லாம் போயிடுச்சா அவளுக்கு.? எம்மேல வருத்தமா இருக்காளா.? இப்பத்தான் இந்த அம்மாளப் பார்க்க அவளுக்கு மனசு வந்துச்சா.?” என்றவரின் குரல் உடைய, இந்தப் பக்கமும் ஸ்பீக்கரில் கேட்ட பவித்ராவும் “அம்மா..” எனக அழத் தொடங்கியிருந்தார்.
“அப்பத்தா நீ அழுதா அத்தையும் அழறாங்க, நீ தான் தைரியம் சொல்லனும். நீயும் இப்படி செஞ்சா அவங்க என்ன பண்ணுவாங்க. அழாம வா.. கோவில்ல வச்சு அவங்க மனசு வருத்தப்படுற மாதிரி பேசாத அப்பத்தா, அப்புறம் மறுபடியும் போய்டுவாங்க.” என அதையும் இதையும் சொல்லி அவரை சமாதானம் செய்து வைத்திருந்தாள்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து பாய்ந்து, தேக்கடியில் தேங்கி அங்கிருந்து முல்லைப் பெரியாறு எனப் பெயர் கொண்டு வைகையில் இணையும் முல்லையாற்றின் கரையோரமாய் செல்வ செழிப்பாக அமர்ந்திருந்தாள் ஸ்ரீ கௌமாரியம்மன்.
(முதல் கதையிலேயே இந்தக் கோவில் பற்றிய செய்திகளைச் சொல்லியிருப்பதால் இப்போது அதை தவிர்த்துவிட்டேன்.)
வீரபாண்டிக்குள் நுழைந்தவர்கள் நேராக ஆற்றில் இறங்கி காலை நனைத்துவிட்டு கோவிலுக்குச் சென்றனர். ஆதித்யனும் மற்றவர்களும் முன்னமே வந்து வெளிமண்டபத்தில் காத்திருக்க, போனில் எங்கே எனக் கேட்டுக் கொண்டே இவர்களும் அங்கே வந்து சேர்ந்திருந்தனர்.
மகளையும், மருமகனையும் பார்த்ததும் குருவம்மாவிற்குள் ஒரு புது உணர்வு. அவரது உள்ளமெல்லாம் மகிழ்ச்சி பொங்க, கண்கள் தானாக ஆனந்தக் கண்ணீரைக் கொட்டியது. வந்ததும் நேராக முகுந்தனிடம் சென்று முறையாக “வாங்க மாப்பிள்ளை, நல்லா இருக்கீங்களா.?” என்றவர் மகளின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
முகுந்தனும் பதிலுக்கு தலையசைத்தாரே தவிர, வாய் திறக்கவில்லை. வார்த்தைகள் சிக்கிக் கொள்ள, அவரால் பேச முடியவில்லை. பெரியவர்களின் நிலையறிந்து, அவர்களுக்கு தனிமை கொடுக்கும் பொருட்டு, “ஆதன் தான் கோவிலைச் சுற்றலாம்” என அங்கிருந்து நகர, “தரிசனம் செய்யாம கோவில் சுத்தக்கூடாது..” என நிகிதா அவனுக்கு பதில் கொடுத்தாள்.
“அப்போ வாங்க வெளியே சுத்திட்டு வரலாம், இவங்க பேசி முடிச்சதும் அப்பா கூப்பிடுவார்..” என் ஆதித்யன் வெளியில் நடக்க, “ஆமா ஆமா இங்க ஒரு ஹோட்டல் இருக்கு, அங்க பரோட்டா சால்னா செம்மையா இருக்கும். இவங்க ராசி ஆகுறதுக்குள்ள நாம சாப்பிட்டு வந்துடலாம்.” என ஆரணி இருவருக்கும் முன்னே நடக்க, அதுவரை ஆதனுடன் வந்து கொண்டிருந்த நிகிதாவும், அவனை அம்போவென விட்டுவிட்டு ஆரணியோடு நடக்க ஆரம்பித்து விட்டாள்.
இவர்கள் முன்னே நடக்க, பின்னே வந்த அந்த அப்பாவிகளோ இப்போது என்ன நடந்தது என திருதிருவென முழிக்க ஆரம்பித்தபடியே, அந்த ஹோட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
“ஆதி நம்ம வீட்டுக்கு மாசம் மளிகைச் சாமான் வாங்க எவ்வளவு செலவாகும்.” எனத் திடீரென்று ஆதன் கேட்க,
“என்னடா திடீர்னு.. எனக்குத் தெரியல. அம்மாக்கிட்ட தான் கேட்கனும். ஏன் இப்போ இந்த கொஸ்டீன். ஐடி ஃபீல்ட விட்டுட்டு சூப்பர் மார்க்கெட் ஸ்டார்ட் பண்ண போறியா.? என சந்தேகமாகக் கேட்க
“அட நீ வேற.. இதுவரைக்கும் ஆன செலவை விட இனி ரெண்டு மடங்கு செலவாகும்டா. இவங்களை மேரேஜ் பண்ணா. நம்ம பட்ஜட் தாங்குமா.? இல்ல பார்ட் டைம் ஜாப் எதுவும் போகனுமான்னு யோசிக்குறேன்..” என இளையவன் சீரியசாக சொல்ல, அவன் சொன்ன விதத்தில் பக்கென்று சிரித்துவிட்டான் ஆதி.
“டேய் ஏண்டா..” என அவன் முதுகில் அடித்தவன், “ஏதோ சீரியசாக சொல்ல வர்ரன்னு நானும் சீரியஸ் மோடுக்கு போயிட்டேன்.” என மேலும் சிரிக்க,
“அதுக்கு இல்ல ஆதி.. எப்படி ஒரு கஷ்டத்துல வந்துருக்கோம் இந்த ப்ராஜக்ட் சக்சஸ் ஆகுமா ஆகாதான்னு தெரியாம புரியாம நாம டென்சன்ல சுத்தினா இதுங்க திங்கிறது தான் முக்கியம்னு போகுதுங்க..” எனக் கடுப்பாகச் சொல்ல,
“ஆது.. இப்படி எந்தக் கவலையுமே இல்லாம இருக்குறது ஒரு வரம் தெரியுமா.? பொண்ணுங்களுக்கு மேரேஜ் ஆகுற வரை இருக்குற லைஃப் அவங்களுக்கு சொர்க்கம். அது நிறைய பேருக்கு தெரியறதே இல்ல. என்னோட ஸ்டூடண்ட்ஸ்க்கு நான் சொல்றது, நாளைக்கு என்ன வேணும்னாலும் நடக்கும். அதுக்காக இன்னைக்கு இப்போ இருக்குற இந்த சந்தோசத்தைக் கெடுத்துக்கக் கூடாது. லைஃபை ரொம்ப சேஃபா ஜாலியா எஞ்சாய் பண்ணுங்கன்னு சொல்லுவேன். அம்மா வீட்டுல இருக்கும் போதுதான் அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருக்க முடியும். மேரேஜ்க்கு அப்புறம் என்னதான் நல்ல பெர்ஃபெக்ட் கணவன் அமைஞ்சாலும் அதுக்கு வாய்ப்பே இருக்காது.” என ஆதித்யன் சொல்ல, ஆதனும் ஆமென்று தலையாட்டிக் கொண்டான்.
இவர்களுக்கு முன்னே உள்ளே சென்றவர்கள் ஒரு செட் பூரியை முடித்திருக்க, “என்ன இவ்வளவு நேரம்.? இங்க இருந்து இங்க வர இவ்வளவு லேட் பன்றீங்க.” என அடுத்த செட் பூரிக்காக வைட் செய்து கொண்டே ஆரணி சொல்ல,
‘எல்லாம் நேரம்’ எனத் தலையில் அடித்துக் கொண்ட ஆதி, அமைதியாக அவளுக்கு எதிரில் அமர, நிகிதாவிற்கு எதிரே அமர்ந்த ஆதன் தான் “என்னாச்சு உங்க ஃபேவரைட் பரோட்டா வரலையா.?” எனக் கேட்க, “இல்ல ஃபிஃப்டீன் மினிட்ஸ் லேட்டாகுமாம், அதான் அதுவரைக்கும் பூரி சாப்பிடலாம்னு டிசைட் செஞ்சோம்.” எனப் பூரியை பிய்த்து வாயில் வைக்க, “ஏன்டி பூரிக்கு பிறந்தவ மாதிரி, அந்த பூரியை இந்தப் பாடுபடுத்துற..” எனப் பற்களைக் கடிக்க, “சாப்பிடுற விசயத்துல என்னைக் கன்ட்ரோல் பண்ணக்கூடாதுன்னு சொல்லிருக்கேன் ஆது..” எனப் பதிலுக்கு அவளும் பல்லைக் கடிக்க,
“இப்படி சாப்பிட்டுட்டே இருந்தா உருளக்கெழங்காட்டாம் ஆக வேண்டியதுதான். அப்புறம் எப்படி உன்னைக் கட்டிப்பிடிக்க, கிஸ் பண்ண. கஷ்டமா இருக்காது..” என அவளுக்கு மட்டும் கேட்கும் படி சொல்லிவிட்டு, பின் சத்தமாக “வெயிட் லாஸ் பண்ணனும்னு ஜிம்முக்கு போகனும்னு சொல்லி டார்ச்சர் செய்யனும். எதுக்கு இந்த வேண்டாத வேலை.” என அவளைப் பார்த்துக் கண்ணடிக்க, அதற்குப் பிறகு ஒரு வாய் உணவு கூட நிக்கிக்கு இறங்கவில்லை.
ஆண்கள் இருவரும் காஃபி மட்டும் போதுமென்றுவிட, ஒருவழியாக புரோட்டாவை ஒரு கட்டு காடி வெளியில் வந்தவர்கள் ஆற்றோரமாய் நடக்க ஆரம்பித்திருந்தனர்.
கரையில் நிற்றுத் தன் பேன்ட்டை சுருட்டிவிட்டுக் கொண்டே “அத்தான் இதுக்கு முன்னாடி இங்க வந்துருக்கீங்களா.?” என ஆரணி ஆரம்பிக்க,
“ம்ஹ்ஹ்ம்ம் இல்ல.. தேனிக்கு வந்துருக்கேன், பட் இங்க எல்லாம் இல்ல. ஃப்ரண்ட்ஸ் கூட கும்பக்கரை, வைகை டேம் எல்லாம் போயிருக்கேன்..” என அவனும் பேன்ட்டை மடக்கி விட,
“ஏன்.. கோவிலுக்கெல்லாம் போக மாட்டீங்களோ..” என்றவள் “இங்க சுருளி அருவின்னு ஒரு ஃபால்ஸ் இருக்குத்தான். மேற்கு தொடர்ச்சி மலையில இருந்து வர தண்ணி. மலையில இருந்து செங்குத்தாக் கொட்டும். இந்த ஊர் மக்களுக்கு ஒரு குற்றாளம்னு வச்சுக்கோங்களேன். நாம ஒரு டைம் போகலாம்.” எனக் கேள்வியும் அவளேக் கேட்டு, பதிலும் அவளே சொல்ல, தன் மீசையை நீவிக் கொண்டே “ம்ம்ம்” என்றான்.
அவன் கையைப் பிடித்து தண்ணீருக்குள் இறங்கியவள் “ஏன் அத்தான் அவங்க லவ் ஸ்டோரி உங்களுக்கு முன்னமே தெரியுமா.?” என அடுத்தக் கேள்வியைக் கேட்க, நீருக்குள் கவனத்தை வைத்தபடியே “ம்ம் தெரியும்..” என அவனும் சொல்ல,
“எப்போ தெரியும்..” அடுத்தக் கேள்வி பட்டென வந்து விழ, சட்டென்று சுதாரித்து விட்டான். இவன் சொல்ல, உடனே நிக்கியிடம் போய் சண்டை போட ஆரம்பித்து விடுவாள். ஏற்கனவே சொல்லவில்லை என்ற சண்டையே இரண்டு நாட்களுக்கு முன்புதான் முடிவுக்கு வந்திருந்தது.
இப்போது அவன் வாயைத் திறந்தால் இந்த சண்டை எப்போது முடியுமோ என பயந்தவன், அவளிடம் அதற்கு பதில் சொல்லாமல் “ஆருக்குட்டி உனக்கு நம்மளைப் பத்தி பேசவே தோனாதா.? இன்னும் உங்க தாத்தா கோவமா இருக்கார். உங்கப்பா என் முகத்தைக் கூடா பார்த்து பேசல, எங்கம்மா அதுக்கு மேல பயந்துட்டே வாழ்க்கையை வீண் பன்றாங்க. நம்மள சுத்தி இவ்வளவு பிரச்சினை இருக்கு. அதைப்பத்திக் கவலைப்படாம இவங்க லவ் தெரியுமா.? அனக் போய் இருக்கீங்களான்னு தேவையில்லாததைப் பேசிட்டு இருக்க..” என அவன் சோர்வாக சொல்ல, அதற்குள் இருவரும் ஆற்றின் நடுவில் இருக்கும் ஆற்றுப்படுகைக்கு வந்துவிட, அங்கிருந்த பாறையில் அமர்ந்துவிட்டனர்.
“என்னத்தான் இப்படி சொல்றீங்க.. நீங்க எல்லாம் பார்த்துப்பீங்கன்னு தான் நான் சும்மா இருக்கேன். உங்களால் முடியலையா.? நான் எதுவும் செய்யட்டுமா..?” என அவன் கைகள் தன் கையைக் கோர்த்தபடி மிகவும் சீரியசாகக் கேட்டு வைத்தாள்.
அப்போது அவள் முகத்தில் தெரிந்த அந்த சோகமும் பயமும் அவனையும் சற்று ஆட்டம் காண வைத்தது. ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையா.? இதைக் கூட உன்னால் சமாளிக்க முடியவில்லை என்றால் நீ என்ன ஆம்பிளை, இப்படித்தான் உன்னை நம்பிய பெண்ணுக்கு நம்பிக்கை கொடுப்பாயா?’ என அவனுக்கு அவனேத் திட்டிக் கொண்டு அவள் கைகளை வருட ஆரம்பித்தான்.
“என்னத்தான்..” என அவள் மீண்டும் கேட்க, “ம்ச் அதைவிடு, அம்மா மார்னிங்க் கொஞ்சம் டென்சன் பண்ணிட்டாங்க. சின்னக் குழந்தைங்கன்னா மிரட்டலாம், திட்டலாம். இவங்களை என்ன செய்ய.? அவ்வளவு பிடிவாதம். அந்த இயலாமை தான் உன்கிட்ட அப்படிக் கேட்க வச்சது. இதெல்லாம் ஒன்னுமில்ல நான் பார்த்துக்குறேன். நீ எப்பவும் போல ஜாலியா சந்தோசமா இரு..” என அவள் கையை மேலும் வருடினான்.
“ம்ம்ம்.. அத்தையையும் தப்பு சொல்ல முடியாதே. அவங்க மனசுல இருக்குற அந்தக் குற்றவுணர்ச்சி போனாதான் நார்மல் ஆவாங்க. அதுக்குத்தான் இன்னைக்கு அப்பத்தாவ அள்ளிப் போட்டுட்டு வந்துருக்கோம். அப்பத்தா சரி பண்ணிடுவாங்க. நீங்க டென்சன் ஏத்திக்காதீங்க..” என அவனுக்கு ஆறுதல் சொல்ல
“அதுவும் சரிதான். இன்னைக்கு பாட்டி பேசினதுக்கு பிறகு அம்மா சரியாகிடுவாங்கனு தான் எனக்கும் தோனுது. அப்படி இல்லைன்னா இனி பொறுமையா சொல்றதுல அர்த்தம் இருக்காது. அதிரடிதான்” எனவும் அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க,
அதில் அவனுக்கு சிரிப்பும் வர, சிரித்துக் கொண்டே “ஆனா எனக்கு உங்கிட்ட வேற ஒன்னு கேட்கனும். தெரிஞ்சிக்கனும். கேட்கட்டா..” எனப் பீடிகையுடன் ஆரம்பிக்க
“என்னத்தான்..” என ஆரணியும் குழப்பமாகப் பார்க்க,
“இல்ல ராகுல் வந்தன்னைக்கு, எங்கிட்ட வந்து ‘என்னைக் கல்யானம் பன்றேன்னு காட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தியே’ன்னு சொன்னியே, கல்யாணம் பன்றேன்னு சொன்னேன். கட்டிப்பிடிச்சேன் எல்லாம் ஓகே.. ஆனா எப்போ முத்தம் கொடுத்தேன். எனக்கு அப்படி ஒன்னு நடந்த ஞாபகமே வரலையே, அதுதான் யோசனை” என சீண்டல் குரலில், அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்க,
“ம்ம்ச்ச் அத்தான்..” எனச் சினுங்கியவளீன் முகம் ரத்த நிறமேக் கொண்டுவிட, அவன் எவ்வளவு கெஞ்சியும் முகத்தை நிமிரத்தவே இல்லை. அவனை விட்டு ஓடிவிடலாம் என்றாலும் நடு ஆற்றில் இருந்தனர். அதனால் அதற்கும் வழியிருக்கவில்லை. ஆனால் அவனோ அவளை விடவே இல்லை. இடையைச் சுற்றி கைப் போட்டு தன்னோடு மேலும் இழுத்துக் கொண்டவன், காது மடலுக்குப் பின்னே உதடுரச, “சொல்லுடி பொண்டாட்டி, சொன்னாதான் இங்க இருந்து நகர முடியும்..” எனக் கிசுகிசுக்க,
அதில் நெளிந்தவளால் பேசத்தான் முடியவில்லை. வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள்ளே சிக்கிக்கொள்ள வெறும் காற்று மட்டும் தான் வந்தது.
“அப்போ நடக்காததை இப்போ நடத்திக்கட்டுமா.. ம்ம்..” என்றவன் காதோரத்தில் இருந்து தன் இதழை ஊர்வலமாக கன்னத்திற்கு கொண்டுவர பெண்ணவள் மொத்தமாக மயங்கிப் போயிருந்தாள் அவனுள்.
கன்னத்தில் கன்னம் வைக்க
ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும்
ஒத்திப்போ ஒத்திப்போ
இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ
பெண்ணெல்லாம் பெண்ணல்ல
இங்கு யாருமில்லை உன்னை வெல்ல