• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உடைந்துபோயிருக்கும் ஒரு பெண்ணை....

Saranya writes

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
24
12
3
Virudhunagar
-பகுதி 1
உடைந்து போயிருக்கும் ஒருபெண்ணை
சமாதானம் செய்ய முயற்சிக்காதீர்கள்...!
வாழ்க்கை முழுவதும் வெறுமை
உணர்ந்து,
யாருமற்ற ஓர் வனாந்திரத்தை சுதந்தரித்து
கொள்ளும் ஆவலிலும்,
தனக்கான நிம்மதியின் தேடலிலும்,
அவள் தொலைந்து போயிருப்பாள்...!!

எல்லா கஷ்டங்களையும்
ஒன்று சேர்க்க முடியாமல்....
எதிர்காலம் பற்றிய கடமைகளில்
இருந்து மீள முடியாமல்....
"எனக்கென்ன கவலை" என்பாள்.
அவள் எதிர்த்து நிற்கும் தைரியத்தை
விடவில்லை...!!
மாறாக பயனற்ற ஒன்றிற்காக அவள்
வருந்துவதை நிறுத்திவிட்டாள்..!!

உடைந்து போயிருக்கும்
ஒருபெண்ணை
சமாதானம் செய்ய முயற்சிக்காதீர்கள்...!
"பேசினால் சரியாகிவிடும்" என்று அவளிடம்
சொல்லாதீர்கள்...!
ஆம்...
நீங்கள் பேசினால் சரியாகிவிடும் என்று
அவளிடம் சொல்லாதீர்கள்...!
அது "அப்படித்தான்" என்கிற அளவிற்கு
அதனோடு போராடி அவள் ஓய்ந்துவிட்டாள்.
அதற்கு மாறாக ...
அதிலிருந்து வெளிவர அவளுக்கு உதவி
செய்யுங்கள்...!
"நாளை மாறிவிடும்" என்று சொல்லாமல்
அந்த நாளை மாற்றிப்பார்க்க
உதவுங்கள்..!!

அவளுக்கு யாரும் தேவையில்லை....
பொதுவாக அவளுக்கு யாருடைய
தேவையும் இருப்பதில்லை...
எனினும் அது குறித்து அவள்
கவலைகொள்வதில்லை...!!
உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணை
சமாதானம் செய்ய முயற்சிக்காதீர்கள்..!!
அவள் உடைந்து போயிருக்கலாம்...
எனினும் அவள் வலியோடு வாழும்
கலை அறிந்தவள்...!!

கடந்து போன காலங்கள் ....
காயங்களை கொடுத்தாலும்...
எப்படி மீள்வது என்றும்..
நிகழ்காலம் நித்திரையை தொலைத்துக்
கொடுத்தாலும்....
எப்படி வாழ்வது என்றும்...
அவள் கற்பிப்பாள்...!!
அவளின் கடந்த காலத்தையும்...
அவள் கருப்புப்பக்கத்தையும்...
புரட்ட நினைத்து காலத்தை தொலைக்காதீர்கள்...
ஆம்...உங்கள் நேரத்தை
வீணடிக்காதீர்கள்...!
அதை பற்றிய நினைதலும்,
புரிதலும்...
அவளுக்கே இல்லாத போது..
உங்களால் அதை எப்படி கண்டடைய முடியும்....!!

உடைந்துபோயிருக்கும் ஒருபெண்ணை
சமாதானம் செய்ய முயற்சிக்காதீர்கள்..!
அவளின் ஏமாற்றத்திலிருந்து
மாற்றங்களையும்...
நம்பிக்கை துரோகத்திலிருந்து
உண்மைகளையும்...
அவள் கண்டடைவாள்..!!
உங்களிடமிருந்து விலகி நிற்க அவள்
ஒருபோதும் முயற்சிக்கவில்லை...!
மாறாக தன்னை இந்த
உலகத்திடமிருந்து மறைத்துவாழும்
கலைகற்கிறாள்..!

கால்போன போக்கில் நடைபோடும்
நடைப்பாதை பயணி அவள்...!
சுக்கு நூறாய்....
நொறுங்கிப் போயிருக்கும்...
அவளின் இதயத்தை
ஒன்று சேர்க்க முயற்சித்து....
உங்கள் வாழ்வில் புதிதாய்...
சில வழிகள் காண்பீர்கள்..!
காயத்துடன் பேசிச்சிரிக்கும் கலையையும்
கற்பீர்கள்...!
எப்பொழுதும் படபடத்துக் கொண்டிருக்கும்
அவளின் இதயத்தின் சத்தத்தை உணர்வீர்கள்...!"
அவள் வார்த்தைகளில் வழிகள்
மட்டுமின்றி,
வலிகளையும் உணர்வீர்கள்...!
ஆம்...
உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணை
சமாதானம் செய்ய முயற்சித்து,
உங்கள் வாழ்வின் புதிய
பாதைகளைச் சுவைப்பீர்கள்...!!
-தொடரும்.
- எல்லாப் புகழும் இறைவனுக்கே!