• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மகாபாரதமும் ஞான விளக்கமும்..

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
884
மகாபாரதமும்
ஞான விளக்கமும்...

பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல. கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய நம் ஐம்புலன்கள் தான்.

அந்த ஐம்புலன்களையும், தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள்தான் கெளரவர்கள்.

தீமைகள் பலவாறான எண்ணிக்கையில், படைபலம் மிகுந்த சக்தியோடு இருக்கும் என்பதைச் சொல்லவே, மகாபாரதம் கெளரவர்களின் எண்ணிக்கையை நூறாக காட்டியிருக்கிறது.

எண்ணிக்கையில் மிகுந்த கெளரவர்களை (தீமைகளை) எதிர்த்து, உன்னால் (ஐம்புலன்களால்) போரிட முடியுமா?’

முடியும்' அதற்கு கிருஷ்ண பரமாத்மா உன்னுடைய தேரை செலுத்த வேண்டும்.

இங்கே நான் கிருஷ்ணர் என்று சொன்னது, நம் மனசாட்சியை, நம் ஆத்மாவை.
நம் மனசாட்சிதான் நம்முடைய சிறந்த வழிகாட்டி'

சரி, கெளரவர்கள் தீயவர்கள் என்றால், பெரியவர்களும், தலைசிறந்தவர்களுமான துரோணாச்சாரியாரும், பீஷ்மரும் அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்காக போரிட்டது ஏன்?’

நாம் வளர வளர நமக்கு மூத்தவர்களாக இருப்பவர்களைப் பற்றிய நமது கண்ணோட்டம் மாறக்கூடும். நாம் வளரும் காலகட்டங்களில் யாரெல்லாம் குற்றமற்றவர்கள், அப்பழுக்கற்றவர்கள் என்று நினைத்தோமோ அவர்கள் உண்மையில் அப்படி இல்லாமல் இருக்கலாம்.

அவர்களிடமும் தவறுகள் இருக்கிறது என்பதை நாம் உணரலாம். அந்த நேரத்தில் அவர்கள் நமது நன்மைக்காக இருக்கிறார்களா?, அவர்கள் நமக்கு தேவையா, இல்லையா? என்பதை நாம் தான் தீர் மானிக்க வேண்டும்.

ஆனால் நம் நன்மைக்காக அவர்கள் போராட வேண்டும் என்று ஒரு கட்டத்தில் நாம் விரும்புலாம். இதுதான் வாழ்க்கையின் கடினமான பகுதி.

கீதை சொல்லும் பாடமும் இது தான்’.

அப்படியானால் கர்ணன்?’

நம்முடைய ஐம்புலன்களின் சகோதரனே, கர்ணன். இந்தக் கலியுகத்தில் அவனது பெயர் ஆசை, மோகம். அவன் நம் இந்திரியங்களின் ஒரு பகுதி. நம்முடன் பிறந்தவன்.

ஆனால் அவன் எப்போதுமே தீமைகளின் பக்கம் தான் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்கும் தெரியும்.

ஆனால் நமக்குள் எழும் ஆசைக்காக, விருப்பத்திற்காக அந்த தவறைச் சரியாக்கும் விதமாக சாக்குபோக்கு சொல்வான்.

நாம் யோசிக்க வேண்டும். நம் மனம் எப்போதும் ஆசைக்குத்தானே அடிமையாக நினைக்கிறது?’

நம் மனதை பண்படுத்த வேண்டுமானால், அதை நல்ல முறையில் வளப்படுத்த வேண்டும்.

மனதின் மாண்பே! மனிதனின் மாண்பு!!

தவமும் தற்சோதனையும் நம்மை காப்பதோடு, வாழ்வில் வெற்றி பெறச் செய்யும் அஸ்திரங்கள்.
 
Top