• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

லவ் ஸ்டோரி 5

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
லவ் 5

"அர்விந்த் நாம எப்போ கல்யாணம் செஞ்சிக்கறது?"

கொஞ்சலா இல்லை கெஞ்சலா என பிரித்தறிய முடியா குரலில் அவந்திகா அர்விந்திடம் வினவினாள்… ஆனால் அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் படி படு சாதாரணமாக பதில் வந்தது அவனிடமிருந்து…

"இப்போ என்ன அவசரம் அவந்தி"

"அவசரம் இல்ல… அவசியம்… அப்பா தான் மாப்பிளை பாக்கட்டுமான்னு அடிக்கடி கேட்டுட்டே இருக்கார்.. என்ன சொல்றது? "

"ஹ்ம்ம் நானே மாப்பிளை பாத்துட்டேன்.. நீங்க பத்திரிகை மட்டும் அடிச்சா போதும்னு சொல்லு… " படு நக்கலாக வந்தது பதில்

"ஹ்ம்ம் போப்பா உனக்கு கொஞ்சம் கூட சீரியஸ்நஸே இல்ல.. " சலுகையாக சலித்து கொண்டாள்

"சரி சொல்லு என்ன செய்யணும்"

"எங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேளு… "

"கேட்கலாம் கேட்கலாம்… இன்னும் கொஞ்ச நாள் நிறைய நிறைய லவ் பண்ணிட்டு கேட்கலாம்… "

"கல்யாணம் செஞ்ச பிறகும் லவ் பண்ணுவோம்ல? " டவுட் கேட்டாள்

"இதுல என்ன சந்தேகம் உனக்கு"

"இல்ல இப்பவே இவ்ளோ லவ் பண்ணா கல்யாணம் ஆன பிறகு போர் அடிச்சிடாதா? " அவந்திகா அவனின் பதிலுக்காக ஆர்வமுடன் அவனை பார்த்து நின்றாள்…

"ஹாஹாஹா லவ்வுக்கு போர் அடிக்குமா என்ன? அடிச்சா மொதல்ல இருந்து லவ் பண்ணுவோம்… " அசால்ட்டாக குறும்பு குரலில் கூறினான்

"பண்லாம் பண்லாம்… மொதல்ல என் ரூம விட்டு உன் கேபின் போ அர்விந்த்…" சிறு பதட்டம் தொனித்தது அவளிடத்தில்

"ஹூஹூம் போமாட்டேனே…" மில்க் பிக்கிஸ் விளம்பரதில் வரும் சிறுவனை போல் நடித்து காட்டினான்

"ஐயோ பைரவி வருவா… என்னைய திட்டி தீத்துடுவா… "

"ஹாஹாஹா என்னை பாத்து கெட் அவுட் சொல்லு போறேன்.."

'டொக் டொக் டொக்… ' கதவு தட்டும் சத்தம் கேட்டது

"ஐயோ பைரவி வந்துட்டா கெட் அவுட் அர்விந்த்… கெட் அவுட், கெட் அவுட், கெட் அவுட்… " சத்தம் குறைவாக தொடங்கி கத்தலாக முடிந்தது

"ஹே என்னை பாத்தா நீ கெட் அவுட் சொன்ன? உன் பேச்சு கா டி…. அடிப்பாவி இன்னும் கண்ண கூட துரகலியா? என்னடி இன்னும் தூங்குற? அப்போ கணுவுல உலரினியா? "

பைரவி கேள்வி மேல் கேள்வி கேட்டும் அவந்திகாவிடம் எந்த மாறுதலும் இல்லாமல் உறங்கி கொண்டு இருந்தாள் அதனால் அவளை உலுக்கி மேலும் பேசினாள்

"ஹே அவந்தி எந்திரிடி மணி 10 ஆகுது… உனக்காக அங்கிள் ஆன்டி ரெண்டு பேரும் சாப்பிடாம வெயிட் பன்றாங்க… "

"ரவி சும்மா தான் டி பேசிட்டு இருந்தோம்.. திட்டாத பா.. " இன்னும் கனவில் இருந்து வெளி வராத அவந்திகா

"யார் கூட பேசிட்டு இருந்த? " சிபிஐ ஆபிசர் ஆக பைரவி

"அர்விந்த் கூட.. " உளறி கொட்டினாள்

"எப்போ? எங்க? "

"இப்போதான் இங்க தான்… ஹான்….. ஐயோ இது ஆபீஸ் மாதிரி இல்லியே… " தனக்குள் பேசிக்கொண்டாள் சத்தமாக.

"என்னது ஆபிஸ் ஹா? " ஆஆஆஆ வேண பார்த்து நின்றாள் பைரவி

"சாரி ரவி… கனவு போல டி… நீ என்ன இவ்ளோ காலையில இங்க வந்து இருக்க? " அனைத்தையும் மறந்த ஜென் நிலையில் அவந்திகா

"கேட்க மாட்ட பின்ன… என்னை எல்லாம் இனிமே உனக்கு நியாபகம் இருக்குமா.? "

"அப்டிலாம் இல்ல டி.. நைட் தூங்க கொஞ்சம் லேட் ஆகிடிச்சி அதான்.. "


கேட்காத கேள்விக்கு பதில் அளித்து அவள் காதலின் உயர் நிலையை எட்டி விட்டதை காட்டினாள் அவந்திகா… அதற்கு கோவப்படாமல் அவளை ஒரு தோழியாக வெட்க பட வைத்தாள் பைரவி…

"இனிமே தூக்கம்லாம் தூரம் தான் உனக்கு… "

"போதும் ரவி… என்ன பிளான் இன்னிக்கு…" நார்மல் மோடில் பெண்ணவள்

"ஹ்ம்ம்…. இன்னிக்கு தம்பிய ஷாப்பிங் கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருந்தேன்.. அத உன்கிட்டயும் சொல்லி... நீ நானும் வர்றேன்னு குதிச்சிட்டு.. இப்போ பிளான் என்னன்னு கேக்குற? " சிறு கோவம் எட்டி பார்த்தது

"அம்மாடி ஏன் இவ்ளோ பெரிய டைலாக்… "

"சீக்கிரம் ரெடி ஆகி கீழ வா வெயிட் பண்றோம்… "

சரி என அவளும் கிளம்பி கிழே வந்தாள்… பைரவியின் தம்பியை பாசத்துடன் அழைத்து அருகில் அமர்த்திக்கொண்டாள்…

வேலன்… அழகான அமைதியான பையன்… பொறியியல் 3 ஆம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கிறான்…

பைரவியின் 20 வது வயதில் தன் பெற்றோரை ஒரு விபத்தில் இழந்தாள்… அதில் இருந்து தன் தம்பியை தன் பிள்ளை போல பார்த்துக்கொள்வாள்… வேலன் இவளுக்கு மேல் சென்று தாய் தந்தை என இருவரையும் அவளுக்கு தன் மூலம் காட்டினான்…

படிப்பை நிறுத்தி வேலைக்கு செல்ல இருந்த பைரவியை அவந்திகா தான் மிரட்டி உருட்டி படிப்பை தொடர செய்தாள்…

அதனால் தான் வேலனுக்கு எந்த கஷ்டமும் இல்லாமல் படிப்பை தொடர முடிந்தது…. அவந்திகாவும் தன் உடன் பிறந்தவனை போல் பார்த்துக்கொள்வாள்…

இன்றும் அவனுக்கு காலேஜ் போக சில உடைகள் வாங்க தான் வெளியே செல்கிறார்கள்…

தாமரை தான் அனைவரையும் அமர வைத்து உணவு உண்ண செய்து அனுப்பி வைத்தார்…

அங்கு அர்விந்த் ரோஜாவனத்தில் ஐக்கியம் ஆகி இருந்தான்… சரியாக நண்பர்களை கூட சந்திக்க செல்வதில்லை… அன்று கார்த்திக் தங்களுடைய ஜோடி பொருத்தத்தை கூறியதில் இருந்து அவனை தவிர்த்து வருகிறான்…

அவனால் அதை லேசில் விடவும் முடியவில்லை ஏனென்றால் இனி அவந்திகாவிடம் தான்.. தான் பணி புரிய வேண்டும் அப்படி இருக்கையில் இப்படியாகப்பட்ட பேச்சுக்கள் இனி தொடரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்…

அதன் பொருட்டே நேற்றைய தினம் யாரையும் சந்திக்க செல்லாமல் ரோஜாவனத்துடன் செல்லம் கொஞ்சிக்கொண்டு இருந்தான்… ராம் தான் சற்று வயிறு எரிச்சலில் இருந்தார்…

அவருக்கு மகனை கட்டிப்பிடிக்க, அவனுடன் வண்டியில் செல்ல, முக்கியமாய் ரோஜாவுடன் செல்லம் கொஞ்சுவதை போல் தன்னிடமும் செல்லம் கொஞ்ச வேண்டும் என்பது அவரின் நீண்ட நெடிய வருடங்களின் ஆசை…. (ததாஸ்து...இது நா இல்லிங்க வானத்து வெள்ளை கவுன் அக்காக்கள் தான் )

இன்று சண்டே அதுவுமா பையன் வீட்லயே இருப்பது சற்று யோசனையாக இருந்தது ரோஜாவுக்கு…

அவனுடன் பேசிக்கொண்டு இருந்தவர் போனை எடுத்து வாட்ஸாப்ப் செய்தார்….

அந்த பக்கம் என்ன சொல்ல பட்டதோ..

இவர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என மெசேஜ் அனுப்பி விட்டு வேலையை தொடர்ந்தார்…

சிறிது நேரத்தில் கார்த்திக், ஷியாம், வருண் அனைவரும் வீடியோ காலில் வந்தனர்…

"டேய் மச்சி நா இனிமேல் அந்த மாதிரி பேச மாட்டேன் டா…. என் தப்ப நா உணர்ந்துட்டேன் டா…

அர்விந்த் முகம் கண்டதும் கார்த்திக் தான் பேசினான்.. அவனின் எண்ணத்தை புரிந்து கொண்டு அடுத்த பேச்சை பேசினான் அரவிந்த்

"விடு டா… நா ஒன்னும் நினச்சிக்கலை… இன்னிக்கு எங்கயாவது வெளிய போவோமா? "

"ஆமாண்டா அரவிந்தா எனக்கு டை, ஷூ எதுவும் இல்ல டா… வாங்குவோமா? " வருண்

"காசு உஷார் பண்ணிட்டியா டா வருண்" ஷியாம்

"அதெல்லாம் அம்மா குடுக்கும் டா… "

"அம்மா வா? அவங்களா? " ஏகத்துக்கும் சாக் ஆனான் அர்விந்த்

"ஷாக்க குறை டா…
வேலை கிடைக்க போகுதுன்னு சொல்லிட்டு அன்னைக்கு காலேஜ்ல நடந்ததையும் சொன்னேன் டா… "

"அப்புறம்.." கோரஸ்

"சேலைய வரிஞ்சி கட்டிக்கிட்டு நா போய் என்னனு கேட்டுட்டு வர்றேன்னு சண்டைக்கு கிளம்பிட்டாங்க டா… "

"அட்ரா அட்ரா…. சூப்பர் மாம் டா உன் அம்மா…" அர்விந்த் கை தட்டி ஆர்பரித்தான்

"எங்க அம்மக்களை விட உங்க அம்மா தான் மச்சி அல்டிமேட்… " ஷியாம்

"ஏன்டா உங்க கிட்ட ஏதாவது வம்பு பன்னங்களா? "

"ஹாஹாஹா அதெல்லாம் இல்ல டா…" கார்த்திக்

"அப்புறம் என்ன செஞ்சாங்க எங்க குலசாமி…" ரோஜாவை பார்த்துக்கொண்டே கேட்டான்…

"கொஞ்ச நேரம் முன்னாடி எங்க எல்லா மம்மிஸ்க்கும் வாட்ஸாப்ப்ல புள்ளைங்க ரெண்டு நாளா சரியா பேசிக்கல என்னனு பாருங்கன்னு ஆர்டர்…" ஷியாம்

"எங்க அம்மா என்கிட்ட வந்து உன் லைப்ல உருப்படியா செஞ்ச ஒரே விஷயம் உன் பிரண்ட்ஸ் தான் அதுலயும் என்ன சண்டைன்னு சாமி ஆடிட்டாங்க…. " வருண்

"எப்பிட்றா உன்ன மட்டும் எல்லா அம்மாக்கும் பிடிக்குது? " கார்த்திக்

"உங்கள லவ் பண்ண விடாம பாத்துக்கறேன்ல அதனாலயா இருக்கும்…. ஹாஹாஹா… " நீண்ட நாள் ரகசியம் வெளியிட்டான் வில்லன் ( காதல் வில்லன் )

"சரிடா இப்பவே மணி 10...11 மணிக்கு ரெடி ஆகி பொத்தேரி ஸ்டேஷன் வந்துடுங்க… போய்ட்டு வந்துடலாம்… " அர்விந்த்

"சரி டா…" ஷியாம்

"யே எல்லாம் சீக்கிரம் வந்துடனும்… "

"வர்றோம் டா…. பாய் " கோரஸாக கத்தினர் மற்றவர்கள்

(ஆமாங்க நீங்க கெஸ் பண்ணது சரியே தான்…. எல்லாரும் ஒரே கடைக்கு தான் போக போறாங்க…)

அவந்திகா, பைரவி, வேலன் மூவரும் தி-நகரில் உள்ள அந்த புகழ் பெற்ற துணிக்கடைக்கு சென்றனர்…

பாக், ஷூ, போர்மல் டிரஸ், கேஸுவல் வியர், ஸ்போர்ட்ஸ் வியர் என பெரிய லிஸ்ட் எடுத்து வந்து இருந்தான் வேலன்…

இருவரும் லிஸ்டை பார்த்து விட்டு இதழ் பிரிக்காமல் சிரித்துக்கொண்டனர்…

"சரி மொதல்ல என்ன வாங்கலாம் வேலா? " அவந்திகா

"அக்கா பார்மல் டிரஸ் வாங்கலாம்.. " வேலன்

"ஏன்டா? ஷூ தான் கடைசி ப்ளோர் ஒன்னு ஒன்னா வாங்கிட்டு கீழ வந்துடலாம் டா…" பைரவி

"இல்ல கா… இதான் மொதல்ல…"

"சரி வா உன்னிஷ்டம்… " அவந்திகா

"என்னடி ரவி இன்னைக்கு போய் இவ்ளோ கூட்டம்… ஏதாவது விஷேசம் வருதா என்ன? " அவந்திகா அங்கு இருந்த கூட்டத்தை பார்த்து கேட்டாள்

"விஷேசம் வச்சிக்கிட்டு ஜவுளிக்கடைக்கு போனதெல்லாம் அந்த காலம் அவந்தி… இப்போல்லாம் பொழுது போக்கவே ஷாப்பிங் செய்றாங்க… ஒரு குழந்தைக்கு பர்த்டேன்னா இன்னொரு குழந்தைக்கும் அத்தனையும் செய்றாங்க பேரெண்ட்ஸ்… " நிதர்சனம் உரைத்தாள் பைரவி

"அது சரி…. எது எப்படியோ 365 நாளும் இந்த கடைக்கு மட்டும் விஷேசம் தான் இல்லியா? …"

"ஹாஹாஹா ஆமா…
என்னடா பாத்துட்டியா? "

அவந்திகாவிற்கு பதில் கூறி தம்பியை கேள்வி கேட்டாள் பைரவி

"அக்கா எனக்கு கலர் காம்பினேஷன் செட் ஆகல கா…" சோக குரலில் வேலன்… பசங்க யாராவது கூட இருந்தா நல்லா இருக்கும் என எண்ணிக்கொண்டான்

"சரி இரு எல்லாத்தையும் வச்சி பாத்து வாங்குவோம்… " பைரவி…

"டேய் அங்க பாரு டா… அவந்திகா மேடம்… " கார்த்திக்

"ஆமாண்டா வா போய் பேசலாம்… " ஷியாம்

"ஹே அவங்க ஷாப்பிங் வந்து இருக்காங்க...போய் டிஸ்டர்ப் பண்ணுவியா? " அர்விந்த்

"போடா நல்லவனே… வாடா போய் ஒரு ஹலோ சொல்லிட்டு வந்த வேலையை பாப்போம்… " கார்த்திக்

"ஹ்ம்ம்…" மனமே இல்லாமல் நண்பர்களுடன் சென்றான்…

இவர்கள் அந்த தளத்தை அடைந்த உடனே அவந்திகா பார்த்துவிட்டாள்… என்னதான் செய்கிறார்கள் என ஓரவிழில் பார்த்த படி இருந்தாள்… அதனால் அர்விந்த் மறுத்தது இவர்கள் சமாதானம் என அனைத்தும் அறிந்து கொண்டாள்…

அவர்கள் நகரவும் இவள் சகஜமாக உடைகளை பார்வையிட தொடங்கினாள்… அது வரை அவளுடன் பேசிக்கொண்டு இருந்த பைரவி பெண்ணவளின் பதிலை எதிர் பார்த்து காத்திருக்க… அவளோ அவளின் நாயகனுக்காக காத்திருந்தாள்….

நாயகனும் வந்தான்…

"ஹல்லோ மேடம்…. " கார்த்திக் தான் அழைத்தான்

"ஹாய் கைஸ்… " புன்னகையுடன் அவந்திகா

"ஷாப்பிங் முடிஞ்சிதா மேடம்… " மீண்டும் கார்த்திக்

"இன்னும் இல்ல கார்த்திக்… இவனுக்கு மேட்சிங் சரியா அமையல…. அதான் ரொம்ப நேரமா போராடிட்டு இருக்கான்…" நண்பர்களிடம் பேசும் தோரணையில் அவந்திகா

"ஓ… யாரு இந்த தம்பி மேடம்? " ஷியாம் பேசினான்.. இடத்தை பில் செய்கிறானாம்

"எங்களோட தம்பி… காலேஜ் படிக்கிறான்… அவனுக்காக தான் வந்தோம்… " அவந்திகா வேலனை தோளோடு அனைத்து கூறினாள்

"அப்டியா நம்ம அர்விந்த் சூப்பரா டிரஸ் செலக்ட் பண்ணுவான்… " கார்த்திக் வாய் விட்டான்

"இஸ் இட் அர்விந்த்? "
நேரடியாக அர்விந்தை பார்த்து கேட்டாள் அவந்திகா…

"கண்டிப்பா மேடம்… நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க… நாங்க செலக்ட் பண்ணிட்டு கூப்பிடறோம்…"

வேறு வழி இன்றி பொறுப்பெடுத்தான் கூடவே பெண்களை அவ்விடம் விட்டு அகற்றினான்

சரி என இருவரும் நகர்ந்தனர்…
ஷியாம் வருண் உட்பட அனைவரும் கார்த்திக்கை முறைத்து பார்த்தனர்… அர்விந்த் ஒரு பார்வை பார்த்து விட்டு வேலனுடன் சகஜமாக பேசிய படி அவன் சைஸ் பிடித்த கலர், வீட்டில் உள்ள ட்ரெஸ்ஸின் கலர்கள் உட்பட அனைத்தையும் கேட்டு ஸ்டைலிஸ்ட்கள் செலக்ட் செய்வது போல் பக்காவாக தேர்ந்து எடுத்து கொடுத்தான்…

ஒரு செட் டிரஸ்ஸை ட்ரையல் செய்து வெளியே வந்தான் வேலன்… அதற்க்குள் வேலை முடிந்தது என வருண் சென்று பெண்களை அழைத்து வந்தான்…

அவர்கள் வரும் தருவாயில் தான் வேலனும் வெளியே வந்தான்… வந்தவனை ஆஆஆஆ என பெண்கள் இருவரும் வாய் பிளந்து பார்த்தனர்… அதில் வேலன் கொஞ்சம் வெட்கத்தில் நெளிந்தான்.. அதுவும் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை..

அர்விந்த் கூட வேலனை தான் பார்த்து இருந்தான்… அப்படியே பைரவியை உரித்து வைத்தால் போல் இருந்தான்…. விலையை பொருளின் தரத்தை என அனைத்தையும் அவன் கவனித்ததை இவனும் கவனித்தான்… அதனால் அவன் பால் தனி பாசம் வந்து இருந்தது…

அர்விந்த் வேலனை பார்க்கும் பாச பார்வையை அவந்திகாவும் கவனித்து பைரவியிடம் கண் காட்டினாள்… அவளும் இதென்ன ஒரு ஆண் மகன் இன்னொரு ஆண் மகனை பாச பார்வை பார்ப்பதெல்லாம் வேறு லெவல் என தான் எண்ணினாள்…

அடுத்தடுத்து ஒவ்வொருவராய் ஆடை எடுத்து கிளம்பினர்….

கிளம்பும் முன் அவந்திகாவிடம் ஷியாம் ஒன்றை கூறி அவளை திகில் அடைய செய்தே கிளம்பினான்….

நாரதர் கலகம் நன்மையில்… ஆனால் ஷியாமின் இச்செயல் எதற்காக? எதில் கொண்டு போய் முடியும்? அப்படி என்ன கூறி இருப்பான் அவளிடம்?
 
Top