Home Antiheroதளிர் – 69

தளிர் 69

வீட்டிற்கு வந்து வெகு நேரமாகியும் உஷா, நரேனிடம் எதுவும் பேசவில்லை, அவனும் பேசவில்லை. மனைவி தன்னை அணைத்து அழுதது இப்போதும் அவனுக்கு நெஞ்சை வாள் கொண்டு அறுத்தது போல் வலித்தது.

‘பாஸ் சொல்றதுக்கு முன்னாடியே இவளை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துருக்கணும். எல்லோர் கூடவும் இருந்தா, இவளோட லோன்லினெஸ் போய் ஃப்ரீயா இருப்பா, அதுக்குள்ள நிசா பிரச்சனையும் முடிஞ்சிடும்னு நினைச்சது தப்பா போச்சு.

பிரிவு காதலை உணர்த்தும், தவறை யோசிக்க வைக்கும் என்று நினைத்து அவளைத் தனியே விட்டது எத்தனை தவறு. இந்த பிரிவுதான் அவளை முட்டாள்தனமாக யோசிக்க வைத்திருக்கிறது.

தனியா இருந்துதான் கண்டதையும் யோசிச்சு ரெண்டு டைம் சூசைட் அட்டென்ட் பண்ணிருக்கா. மறுபடியும் நான் தப்பு பண்ண இருந்தேன். நல்லவேளை இந்த டைம் அப்படி எந்த தப்பும் பண்ணல. அப்படி மட்டும் நடந்திருந்தா, என்னை என்னாலயே மன்னிச்சிருக்க முடியாது. நிசா ஒருவகையில பாதிக்கப்பட்டிருந்தா, தன் மனைவியும் ஒருவகையில் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.

நிசாவைப் பார்க்க வேண்டும் என்பது கடமை. ஆனால் மனைவியைப் பார்க்க வேண்டியது கடமை மட்டுமல்ல, பொறுப்பு மற்றும் உரிமை. இனியும் இப்படி தன் பொறுப்பில் இருந்து தவறக்கூடாது.’ என முடிவெடுத்து மனைவியைப் பார்க்க, அவளோ எதிரில் இருந்த அவர்களது திருமண புகைப்படத்தைத் தான் வெறித்துக் கொண்டிருந்தாள்.

அமைதியாக அவளையே பார்த்திருந்தவன் சில நிமிட நேரத்திற்குப் பிறகும் அவளிடம் அசைவில்லை என உணர்ந்ததும், அந்த அமைதியை கலைக்கும் பொருட்டு எழுந்து அவளுக்கு முன்னே வந்தான்.

அப்போதும் அவனவளின் தவம் கலையவில்லை. ஒரு பெருமூச்சோடு மனைவியின் தலையைத் தடவியபடி, “நீ ஃப்ரெஷாகிட்டு வா, நான் காஃபி வைக்கிறேன், பிறகு பேசலாம்.” என கிட்சனுக்குள் நகரப் போக, சட்டென்று கணவனின் இடையோடு அணைத்தவள்,

“ஸாரி… ஸாரிப்பா… எல்லாம் என்னாலத்தான். நான்தான்… என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ்…” எனக் கதறியழ ஆரம்பித்தாள்.

“ஹேய் என்னடி இது! லக்ஸ், லச்சும்மா… இங்க பாரு… பாருடி… நீ தப்பில்லடி, நான்தான் தப்பு. உன் பிரச்சனை தெரிஞ்சும் உன்னைத் தவிக்க வச்ச நான்தான் தப்பு. நீதான் முதல்ல என்னை மன்னிக்கணும். மன்னிச்சிடுடி ப்ளீஸ்… உன்னை ரொம்ப தவிக்க விட்டுட்டேன், என்னைத் தேட வச்சுட்டேன். நான் கல்லு மாதிரி இருந்தும், உனக்கு யாருமே இல்லன்னு உணர வச்சுட்டேன். இதுக்கெல்லாம் உங்கிட்ட மன்னிப்பு கேட்ககூட எனக்கு தகுதியில்ல.

ப்ளீஸ்டி… உனக்கு என்னை மன்னிக்க முடிஞ்சா மன்னிச்சிடு லச்சும்மா. மன்னிக்க முடியலன்னாலும் பரவால்ல, நீ இப்படி அழாதடி ப்ளீஸ்…” என கரகரப்பு குரலில் கூற, அப்படியே நிமிர்ந்து பார்த்தவளின் நெற்றியில், அவனின் கண்ணீர் துளி சொட்டாக விழ, இருவர் பார்வையும் ஒருவரை ஒருவர் ஆழமாகத் தழுவிச் சென்றது.

சில நொடி பார்வை பரிமாற்றத்திற்குப் பிறகு, “எனக்கு உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்…” என்றாள் தவிப்பாக.

“என்னம்மா…?” என்றவன், அவள் முகத்தில் இருந்த தவிப்பிலும் சோர்விலும் என்ன உணர்ந்தானோ, கைப்பிடித்து எழுப்பி தன்னோடு அணைத்துக் கொண்டு முதுகை வருடியவாறு, “என்கிட்ட நீ இப்படி தயங்கி தயங்கி பேசுறதே என்னோட குற்றவுணர்ச்சியை அதிகப்படுத்துது லச்சும்மா.

உரிமையா பேசுறளவுக்கு கூட உன் பொண்டாட்டிக்கு நீ சுதந்திரம் கொடுக்கலையா மடையானு, என்னோட மனசாட்சி என்னை கொல்லுது. உனக்கு என்ன சொல்லணுமோ சொல்லு. பண்ணணுமோ பண்ணு. இனியொருமுறை நீ இப்படி தயங்கி பேசவேக்கூடாது. அப்படி நடந்தா இன்னுமே உனக்கு நான் நியாயம் செய்யலனு அர்த்தம்.” என குழந்தைக்கு சொல்வது போல மிகவும் பொறுமையாகவும், அதே சமயம் அழுத்தமாகவும் சொல்ல, அவன் மார்பில் மேலும் மேலும் புதைந்து கொண்டாள் உஷாலட்சுமி.

இப்போதும், அவளுக்கும் அவனுக்குமான கருத்து வேறுபாடுகள் அப்படியேத்தான் இருக்கிறது. ஆனால் முடிந்ததைப் பற்றி பேசி, வருந்தி, வரப்போகும், வாழப்போகும் வாழ்க்கையை மேலும் சூனியமாக்கிக் கொள்ள அவள் தயாரில்லை.

முடிந்தது முடிந்ததுதான், கடந்ததும் கடந்ததுதான். போனதைப் பற்றி பேசி ஒருவரையொருவர் வருத்திக்கொள்ள வேண்டாம். இப்படித்தான் இவர்கள் வாழ்க்கை இருக்கும், இவ்வளவு நாட்கள் கஷ்டப்பட்டுதான் சேர வேண்டும் என்று இருந்தால், அதை யாரால் மாற்ற முடியும்?!

அவன் சட்டையிலேயே முகத்தை அழுந்த துடைத்தவள், “எனக்கு ஒரு பாப்பா வேணும்.” என்றாள் மெல்லியக் குரலில்.

“ம்ம்… சரி, ஈவ்னிங் டிநகர்ல போய் வாங்கிட்டு வரலாம்.” என்றான் அவனும் அதேக் குரலில். ஆனால் உடல் மெல்லிய சிரிப்பில் குலுங்கியது.

“ம்ச்! போங்க…” எனத் தன் தலையை அவன் மார்பில் முட்டியபடியே சிணுங்க,

“பின்ன, நீ கேட்டதும் கொடுக்க அதென்ன இன்ஸ்டன்டா கிடைக்குதா? நீயும் நானும் கடினமா உழைக்கணும். அதோட பிரதிபலன் பத்து மாசம் கழிச்சுத்தான் கிடைக்கும். நீ என்னன்னா உடனே வாங்கிக் கொடுங்கிற மாதிரி கேட்குற…” என மேலும் சிரிக்க,

“சிரிக்காதீங்கப்பா ப்ளீஸ்…” என சிணுங்கியவளின் முகத்தை, வலுக்கட்டாயமாக நிமிர்த்தி அழுதிருந்த முகத்தை அழுத்தமாகத் துடைத்து, நெற்றியில் அதைவிட அழுத்தமாய் முத்தமிட்டவன், “நானும் இப்படி யோசிச்சிருக்கேன்…” என்றான் அவளைக் கைகளில் அள்ளியபடி.

‘எப்படி?’ எனும் விதமாக அவன் கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்தபடி விழித்துப் பார்க்க, கிட்சனுக்குள் நுழைந்தவன், அங்கிருந்த மேடையில் அமர வைத்து காஃபிக்கு தண்ணீரை வைத்தான்.

“பால் இல்ல, பால் பவுடர்தான். இப்போ மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, ஆர்டர் போட்டுட்டேன் எல்லாம் திங்க்ஸும் வந்துடும். பொறுமையா எல்லாம் எடுத்து வச்சு அரேன்ஞ் செய்துக்கலாம்.” என்றதும், அவள் சரியென்றுத் தலையாட்டிவிட்டு மீண்டும் விழியெடுக்காமல் பார்க்க,

“நான் சொல்ல வர்றதை நீ எப்படி எடுத்துப்பனு எனக்குத் தெரியல லச்சு. நமக்குள்ள மறுபடியும் இப்படியொரு பிரச்சனை வர்றதை நான் விரும்பல. அதுக்காக இதை சொல்லாமலும் இருக்க முடியாது.” என ஆழமூச்செடுத்து, “ரித்தி…” என்றான் வலி நிறைந்த குரலில்.

“பாஸ்ட் எதுவும் பேச வேண்டாம் ப்ளீஸ். எனக்கு அது எதுவும் தெரிய வேண்டாம். அதோட நிசா எங்கிட்ட எல்லாமே சொல்லியிருக்கா.” என தவிப்பாக உஷா கூற,

“ம்ம்…” என்றவன், “அவளை நான் உண்மையா விரும்பினேன். என் உயிரா! ஆனா அவ அப்படி இல்ல போல. எங்க எப்படி சறுக்கினேன் தெரியல. எஸ், நிசாக்கூட என் டைம் போனதை அவளால் ஏத்துக்க முடியல, அங்க ஆரம்பிச்சது. அப்புறம் ஸ்வாதி வந்து மொத்தமா அவ மனசை கலைச்சிட்டுப் போயிட்டா. அந்த நேரம் நிசாவும் அப்பாவும் இல்லைனா, நான் ஒரு மனுஷனா உனக்கு முன்னாடி நின்னு பேசிட்டு இருந்திருக்க மாட்டேன்.

அப்பா, பெத்த மகன் போல பார்த்துக்கிட்டார். அவருக்காக நான் இன்னும் நிசாவை நல்லா பார்த்துக்கணும். என்னை நம்பிதான் அவளை விட்டுட்டுப் போயிருப்பார். நான் இருக்கேங்கிற தைரியம்தான் அவரோட ஆன்மாவை சாந்திப்படுத்திருக்கும். அந்த நேரம் அவங்க செய்த அந்த உதவிதான், நீயும் என் வாழ்க்கைக்குள்ள வந்த.

நீ வந்தபிறகு நான் மொத்தமா உனக்கு உண்மையா இருக்கணும் நினைச்சேன். அதுக்கான டைம் வேணும்னுதான் உன்னை காலேஜ் சேர்த்தேன். அவளை மறந்தேன்… உண்மை, என்னோட வாழ்க்கையில இப்போ அவ எங்கேயும் இல்ல. நீ இதை நம்பணும்.” எனத் தவிப்பாக அவளைப் பார்க்க, ‘தெரியும்’ என்பது போல் அவளும் தலையசைக்க, இழுத்து அணைத்துக் கொண்டவன் சில நொடி அமைதியாக இருந்தான்.

“நிசா, உனக்கு எல்லாமே சொல்லிருப்பா. அவ சொன்னது எல்லாமே உண்மை. நானும் ரித்தியும் காலேஜ் தாண்டி வெளியே போனது இல்ல. லிமிட் கிராஸ் பண்ணி பேசினது இல்ல. அவ என்னை விட்டு போன போது, எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருந்தது உண்மை. ஆனா நீ என்னைவிட்டு போன போது, செத்துடலாம் போல இருந்தது, இதுவும் உண்மை.

நீ செகன்ட் டைம் சூசைட் அட்டெம்ட் பண்ணப்போ தோனுச்சு, நமக்கு ஒரு குடும்ப வாழ்க்கை அமையவே அமையாது. அதுக்கு எனக்கு கொடுத்து வைக்கல போல, நம்ம ராசி அப்படின்னு நினைச்சேன். ஒரு குழந்தை இருந்தா, நாமளும் எல்லோரும் போல பிரச்சனை இருந்தாலும், அதை பெருசா நினைக்காம லைஃப் லீட் பண்ணிருப்போம்னு தோனுச்சு.” என்றவன், “நான் சொல்றதை நீ நம்புறியா?” என்றான் வருத்தமாக.

“உங்களை மட்டும்தான் நம்புறேன், இதை நீங்க நம்புறீங்களா?” என்றாள் சிறு சிரிப்புடன்.

அந்த சிரிப்பில் ஆசுவாசமானவன், அதுவரை இருந்த இறுக்கத்தைத் தொலைப்பது போல, ‘ஊப்ப்ஸ்’ என காற்றை ஊதி வெளியிட்டான்.

“நீங்க என்னை நம்புறீங்கதானே?” என அதே சிரிப்புடன் கேட்க, ‘கண்டிப்பா!’ எனும் விதமாக அவனும் தலையை ஆட்ட, அவன் கழுத்தை வளைத்து கன்னத்தில் முத்தமிட்டவள், “சாரி!” என்றாள்.

மனைவியின் முத்தத்தை ரசித்து உல்லாசமாக, ‘இது ஏன்?’ எனும் பார்வை பார்க்க,

“அது, நான் உங்களையும் நிசாவையும் தப்பா நினைச்சதுக்காக?” என்றாள் குற்றவுணர்வுடன்.

“தப்பா நினைச்சியா?” என்றான் மிகவும் சாதாரணமாக.

“தப்பான்னா அப்படி தப்பா இல்லை. நீங்க அவளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்குறீங்க, என்னை விட்டுட்டீங்க. இப்படிதான் நினைச்சேன், சாரி.” எனவும்,

“எனக்குத் தெரியும், நீ எங்களை தப்பா நினைக்கலன்னு, நிசாவுக்கும் தெரியும். நீ எதையோ மனசுல போட்டு உழட்டிட்டு இருக்கனு அவளுக்குத் தெரியும். அதனாலத்தான் அவ உன்கூட என்னை போ போன்னு சொல்லிட்டிருந்தா, நான்தான் கேட்கல. நம்ம வாழ்க்கை சரியான மாதிரி, அவ வாழ்க்கையும் சரியாகிடணும்.” என பெருமூச்சுவிட்டவன், காஃபியை இருவருக்கும் ஊற்ற காலிங் பெல் சத்தம் கேட்டது.

“காஃபியை எடுத்துட்டு வா, ஆர்டர் பண்ண திங்க்ஸ் வந்திருக்கும், நான் வாங்கி வைக்கிறேன்.” என்று கதவை நோக்கி நகர்ந்தான்.

அனைத்தும் பேசியதும் உஷாவிற்கு மனம் லேசாகிட, வாய் தானாக ஒரு பாடலை ஹம் செய்தது.

‘என்னோடு நீ, உன்னோடு நான்…’ என்ற பாடலை ஹம் செய்தபடியே வெளியில் வந்தவள், கணவனிடம் காஃபியை கொடுத்து தானும் குடிக்க ஆரம்பித்தவளின் முகம் அஷ்ட கோனலானது.

“நல்லாவே இல்லப்பா…” என முகத்தை சுழித்தவளைப் பார்த்து சிரித்தவன், “காஃபி பொடி தூக்கலா போட்டுட்டேன்.” என மேலும் சிரிக்க, “ம்ம்… கசப்பா இருக்கு.” என முகத்தை கோணியபடியே குடிக்க,

மனைவியின் முக பாவனைகளை ரசித்தபடியே தன் கப்பை வைத்தவன், அவளதையும் வாங்கி வைத்துவிட்டு முகத்தை இரு கைகளாலும் தாங்கியபடி அவள் விழிகளை மாறி மாறி பார்த்தான்.

“என்ன… என்ன பண்றீங்க?” எனத் திணறியபடியே முகத்தில் இருந்த பார்வையைத் திருப்ப, “காஃபி கசப்பா இருந்ததுல்ல, அதுதான் கொஞ்சம் சுகர் கொடுக்கலாம்னு…” என பெருவிரலால் இதழ்களை வருட,

“அது… அதெல்லாம் வேணாம்…” எனத் திணறியவளின் திணறலை ரசித்தபடியே முகத்தை முன்னே இழுக்க, கணவனின் மூச்சுக்காற்று முகத்தில் மோத, விழிகள் மயக்கத்தில் தானாக மூட, அவனின் இதழ்கள் இதமாக அதன் இணையை காந்தமாய் இழுத்துக்கொண்டது.

‘என்ன சொல்ல ஏது சொல்ல…’ என்ற பாடல் மனதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்க, நீண்ட நேரமாகியும் அவளின் இதழ்கள் வறட்சியை தழுவியதே அன்றி, அவனின் தாகங்கள் தீர்ந்தபாடில்லை.

“ம்ம்… ம்ம்…” என்று திமிறியவளைக் கைகளில் அள்ளிக்கொண்டு, அறையை நோக்கி நகர்ந்தவன் பெட்டில் விட்டு, “கடினமா உழைப்போமா?” எனக் கண்ணைச் சிமிட்ட, உஷாவின் மனமும் உடலும் அவன் வசம் உருகுவதை, உணர்ந்தவளின் விழிகள் கூசி சிவந்து போனது.

“லச்சும்மா… லச்சும்மா…” என்றவனின் உளறல்கள் அவளை மேலும் மேலும் சிவக்க வைக்க, பெரியவர்களின் கூற்றின்படி அச்சம், மடம், நாணத்துடன் ஆடை கலைவதே தாம்பத்தியத்தின் முதல்படி என உணர்ந்தவனின், இளமை உணர்வுகள் அரக்கனாய் வேகம் கொண்டெழ, அத்தனை வேகத்தையும் கட்டுப்படுத்த முடியாமல், “இன்னைக்கு, இப்போ, இங்க உனக்கு ஓகேதான?” என அவளின் மேனியில் முத்தமிட்டவாறே கேட்க,

கணவன் அனுமதி கேட்ட விதத்தில் அவளின் மேனி சிலிர்த்தடங்க, அதை உணர்ந்தவனின் உடலும் மனமும் இனி தாங்காது எனும் நிலைக்கு தள்ளப்பட, இதழ்களும் கைகளும் அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட, “த்தான்… த்தான்…” என பெண்ணவளது குரல் காற்றாக வெளிவந்து அவனுக்கு போதையேற்ற, மெல்ல மெல்ல அவள் மேனியில் முன்னேறினான்.

இரண்டு வருடங்களாக இருவருக்கும் இருந்த தீராத பிரச்சனைகள், பேசி தீர்த்ததில், மனதிற்கினியவளின் எல்லையற்ற காதலில் கரைந்து காணமல் போயிருந்தது.

சிறு மிஞ்சலும் இல்லாமல் கெஞ்சலில் ஆளவே, மனம் உருகிக் கரைந்த இருவர் மனங்களிலும் தேன் நிரம்பி சிந்த, சிறு அவஸ்தையுமின்றி கணவனுள் கரைந்தாள் பெண்ணவள்.

‘சொல்லாத

எண்ணங்கள்

பொல்லாத ஆசைகள்

உன்னாலே சேருதே

பாரம் கூடுதே

தேடாத தேடல்கள்

காணாதக் காட்சிகள்

உன்னோடு காண்பதில்

நேரம் போகுதே…’

***

You may also like

1 comment

M. Sarathi Rio April 26, 2026 - 5:42 pm

அப்பாடா..! ஒருழியா ஒரு பிரச்சினை தீர்ந்தது.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to M. Sarathi Rio Cancel Reply

About Me

Featured