Home Love - Family - Romanceமுத்தமழை – 46

முத்தமழை – 46

by Vathani S

முத்தமழை – 46

அடுத்த பத்து நிமிடத்தில் யாழினியின் ஆஃபிஸ் முன் நின்றது அந்த BMW. பாண்டியனைப் பார்க்காமலே ஒரு பெருமூச்சோடு காரை விட்டிறங்கினான் வெற்றி. நேரே அவன் ரிசப்ஷனில் போய் நிற்க,

“யெஸ் சார்?” என்று கேட்ட இளம்பெண்ணிடம் 

“யாழினி ஃப்ரெஷர்” என்றான் பொறுமையாக.

“ஒரு நிமிஷம் சார்.” என்ற பெண் கம்ப்யூட்டர் திரையில் யாழினியின் டிபார்ட்மென்டை தொடர்பு கொண்டது..

பின் “லாகவுட் டைமிங்க்தான் சார், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.” என்றவள் மீண்டும் போனில் யாரையோ அழைத்தாள்.

“யாழினி இன்னைக்கு பெர்மிசன் போட்டுருந்தாங்க. ஓவர் டைம் இருக்கான்னு செக் பண்ணிடுங்க.” என்றுவிட்டு போனை வைத்தாள். 

இவனைப் பார்த்து ஒரு சிரிப்பை சிந்தவும் தவறவில்லை. ஐந்து நிமிடங்கள் பத்தாகியது. இன்னும் அவள் வரவில்லை. வெற்றியின் பொறுமை மெல்ல கரையத் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் யாரோ நடந்துவரும் சத்தம் கேட்டது.

தன் கோபமெல்லாம் மறந்து ஆர்வமாக அந்தச் சத்தம் வந்த திசையை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினான் வெற்றி.

பிஸ்தா கிரீனில் டிசைனர் புடவை. அவள் உடல்வாகிற்கு அத்தனை பொறுத்தமாக இருந்தது அந்த புடவை. விழாவிற்கென்று உடுத்தியிருப்பாள் போல.

லேசாக களைத்திருந் தோற்றம். காதோரமாக ஒன்றிரண்டு மயிரிழைகள் பிரிந்து கிடந்தன. பார்க்கும் போதே தெரிந்தது மிகவும் சோர்வாக இருக்கிறாளென..! உடல் சற்று இளைத்திருக்கிறதோ? ஏன் இப்படி வருத்திக் கொள்கிறாள்? அத்தனை கோபத்திலும் அன்னமாய் நடந்து வரும் தன்னவளை இமைக்காமல் ரசித்திருந்தான் வெற்றி..

ஆனால் யாழினியின் மனநிலை வேறுவிதமாக இருந்தது. நேற்று முதல் அவள் அவளாக இல்லை. மனம் ஏதேதோ வேதனையில் தவித்தது. கோபத்தில் கொந்தளித்துத் தகித்தது. 

ஒரு கட்டத்தில் தன் மனதோடு போராட முடியாமல் தோற்றுப் போனாள். முதல் நாள் தான் கர்ணன் அவளிடம் பேசியிருந்தான். அது வேறு அவளை பலவீனப்படுத்தியிருந்தது.

வல்லியின் இத்தனை நாள் பாராமுகமும், இன்றைய அழுகையும் பெண்ணவளை மிகவும் வேதனைக்குள்ளாக்கியிருந்தது.

முதல்நாள் அழைத்து வரும் போதே, காரில் வைத்து கர்ணன் பேசியது, யாழினியின் மனதில் படமாய் ஓடியது. 

“யாழி ம்மா.. கொஞ்ச நாள் தனியா இருக்கியா.?” என்றான் எந்த முகாந்திரமும் இல்லாமல்.

முதலில் கர்ணன் பேசியது அவளுக்கு புரியவே இல்லை. பின் புரியும் போது “ண்ணா என்ன சொல்றீங்க?” என அதிர்வாக கேட்க,

“இல்ல டா.. நீ இவ்ளோ கஷ்டப்படுறதை என்னால பார்த்துட்டு இருக்க முடியல. எனக்குnஒரு நிமிசம் ஆகாது, உனக்கும் வெற்றிக்கும் மேரேஜ் பண்ணி வைக்க, ஆனா எல்லோரும் சம்மதிச்சு அப்புறம் உன்னோட கல்யாணம் நடக்கனும்னு நான் நினைக்கிறேன். அது தப்பில்லயே!”

“ஹான்.. ஆனா அதுக்கும் நான் அப்ராட் போறதுக்கும் என்ன சம்மந்தம்..?” புரியாமல் கேள்வி கேட்டாள் பெண்.

“இது உனக்கு மட்டுமில்ல யாழி, வெற்றிக்கும் இதுதான் டைம். அவனும் இப்போதான் ஒரு கேடர்ல போய் உட்காந்துருக்கான். எவ்ளோ வசதி வாய்ப்பிருந்தும் அவன் இஷ்டப்பட்டு படிச்சது இந்த ஐபிஎஸ்தான். மத்த பசங்க மாதிரி அப்பா பணத்தை வச்சு லைஃபை ஓட்டிடலாம்னு நினைக்காம தனக்கான ஒரு பாதையை தேர்ந்தெடுத்திருக்கான். அதுல அவனுக்கு நிறைய சாதிக்க வேண்டியது இருக்கும். ஸ்டார்ட்டிங்கல்யே அவனை நாம டென்சன் பண்ணக்கூடாது. அவனோட அச்சிவ்மென்ட் நோக்கி அவன் போகட்டும். அப்போதான் அவனோட பேரண்ட்ஸ்க்கு நிம்மதியா இருக்கும்.”

“எனக்கு இப்போ மேரேஜ் பண்ணிக்கிற ஐடியா எல்லாம் இல்ல ண்ணா.. ஆனா அம்மா இவ்ளோ தீவிரமா இருக்கும் போது எனக்கு பயமா இருக்கு.. அதோட நான் ஏன் வெற்றியை டிஸ்டர்ப் பண்ண போறேன்”

“நீ டிஸ்டர்ப் பண்ணுவேன்னு நான் சொல்லல, உன்னைச் சுத்தி நடக்கிற பிரச்சினைகள் அவனை டிஸ்டர்ப் பண்ணும்..”

“நான் எங்க போனாலும், அம்மா அமைதியா இருக்கமாட்டங்க ண்ணா… முதல்ல போக விடுவாங்களான்னே தெரியல..”

“பாப்பா.. அம்மாவையோ, இங்க நடக்கிற பிரச்சினையையோ நீ பெருசா யோசிக்காத.. அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். உன்னோட ஃபியூச்சர் எப்படி இருக்கனும், உன்னோட கோல் என்ன? இப்போ அதை மட்டும் யோசி.. இது உனக்கு பெட்டர் சான்ஸ்.. நீ ட்ரை பண்ணா கண்டிப்பா ஸ்கோர் பண்ணுவ..”

“ம்ம் அண்ணா.. இது வெற்றிக்கிட்ட கேட்க வேண்டாமா? அவர் என்ன சொல்லுவார்ன்னு தெரியலையே..”

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் யாழி.. நீ உனக்கு பிடிச்சா.. இன்ட்ரெஸ்ட் இருந்தா சொல்லு.. நான் அதுக்கான வேலையை பார்க்கிறேன்..”

“ஹ்ம்ம் ஓகே தான் அண்ணா.. ஆனா எங்க போக.. நீங்க ஆல்ரெடி எல்லாம் ஃபிக்ஸ் பண்ணிட்ட மாதிரி பேசுறீங்க..”

“ஆமாம் டா.. ஆஸ்ட்ரேலியா தான். அங்க ஆளிஸ் இருக்கா.. என்னோட ப்ராப்பர்டிஸ் அங்க இருக்கு. வீடும் இருக்கு. உனக்கு எந்த பிரச்சினையும் வராது. டூ யேர்ஸ் மட்டும் பிஜி பண்ணிட்டு வந்துடு.. அதுக்குள்ள இங்க எல்லாம் செட்டாகிடும் பாப்பா..”

“ஹான்.. ஆனா வல்லி.. வல்லிக்கிட்ட என்ன சொல்லுவீங்க? ஆளிஸ்கிட்ட நான் போறேன்னு சொன்னா சங்கடப்படுவாளா?”

“ஆளிஸ் பத்தி நானும் வல்லியும் ஏற்கனவே பேசி முடிச்சிட்டோம். நீ அவகூட பழகி தெரிஞ்சிக்கோ. இப்போதைக்கு இதை யாருக்கும் சொல்லாத. டைம் பார்த்து நான் சொல்றேன், ஓக்கேதான..”

“சரிங்க ண்ணா.. அப்பாவை யாரும் பார்த்துக்கமாட்டாங்க. அவரையும் நான் கூப்பிட்டு போகட்டுமா?”

“ஏன் யாழி நான் பார்த்துக்க மாட்டேனா? இப்போதான் எனக்கு அப்பா கூட இருக்குற சான்ஸ் கிடைச்சிருக்கு. அதையும் விடமாட்டியா?” என்ற போது கர்ணனின் பேச்சில் சற்று காரம் கூடியிருந்தது. 

“அண்ணா நான் அப்படி சொல்ல வரல.. வல்லியோட இப்போ நீங்க டைம் ஸ்பென்ட் பண்ணனும். அவளுக்கும், ஏன் உங்களுக்குமே இது பிரீசியஸ் டைம். கண்டிப்பா நீங்க பேபி கூட இருக்கனும் ண்ணா.. அப்போ உங்களால எப்படி அப்பாவை பார்த்துக்க முடியும்..?”

“இப்போதானே சொன்னேன்.. இப்படி தேவையில்லாம கண்டதையும் யோசிக்காதன்னு.. இந்த கவலையெல்லாம் உனக்குத் தேவையே இல்ல. அடுத்து என்னனு மட்டும் யோசி…”

“ஹ்ம்ம் சரிங்க ண்ணா…”

“எப்படியும் வெற்றி இன்னைக்கு வருவான். அவன்கிட்ட பொறுமையா பேசு. கண்டிப்பா கோபப்படுவான். அவனை சமாளிச்சு பேசி புரிய வை..”

“சரிங்க ண்ணா…” என்றவளுக்கு எப்படி வெற்றியை சமாளிப்பது என்றுதான் பெரிய கவலையே. இவற்றையெல்லாம் மனதில் அசை போட்டபடியே வந்தவளுக்கு, ரிசப்சன் அருகில் அமர்ந்து அவளையே விழியெடுக்காமல் பார்த்திருந்தவன் தரிசனம் தந்தான்.

எப்படி ஆரம்பிக்க என தெரியாமல் “ம்ம் இங்க என்ன..?” என பேச வந்த நேரம் ரிசப்சன் இருவரையும் குறுகுறுவென பார்க்க, அதே நேரம் யாழினிக்கு பின்னே வந்த அவளின் டீம் மெம்பர்சும் வெற்றியை பார்க்க, “போலாம்..” என்றான் இறுக்கமாக.

“யாழி.. சார்..” என ஒருவன் நின்று கேட்க,

“ஹாய் ப்ரோ.. ஐம் வெற்றிமாறன் ஐபிஎஸ்.” என கைகுழுக்க,

“ஹலோ சார் ஐம் விவேக்.. யாழினி டீம் மேட்..” என்றவன், அமைதியாக இருந்த யாழினியை கேள்வியாகப் பார்க்க,

“என்னோட வுட்பி,..” என்ற வெற்றி, யாழினியின் கைப் பிடித்து தன் பக்கம் இழுத்து, பிடியில் அழுத்தத்தைக் கூட்ட, யாழினிக்கு கையில் வலி எடுத்தது.

அதை முகத்தில் காட்டாமல் வெற்றியிடம் நெருங்கி நின்று மெல்ல புன்னகைத்தாள்.

“ஓகோ.. அதான் யாழி யாருக்குமே ஓக்கே சொல்லலயா? நாங்க எல்லாம் ஏன் எங்களை பிடிக்கலன்னு மண்டையை பிச்சிக்கிட்டோம்.” என அந்தக் கூட்டத்தில் ஒருவன் கூற, வெற்றியின் பிடியில் இறுக்கம் மேலும் கூடியது.

“ஓகே அப்போ.. இந்த வீக்கென்ட் பார்டி யாழி கொடுப்பா..” என்று ஒருவன் சொல்ல,

யாழினிக்கு வெற்றியின் பிடியில் வலி அதிகமாக, “சாரி ப்ரண்ட்ஸ்.. இன்னொரு நாள் கண்டிப்பா  ரெண்டு பேரும் உங்களுக்கு பார்டி கொடுக்குறோம். இப்போ லேட்டாகிடுச்சு.. இன்னொரு நாள் பார்க்கலாம்..” என யாழினி நடக்க, வெற்றியும் அவர்களுக்கு தலையை அசைத்துவிட்டு இறுக்கமாக நடந்தான்.

“இதுதான் நீ வேலைக்கு வர லட்சனமா?” என பல்லைக் கடித்து கேட்க,

“முதல்ல கையை விடுங்க வெற்றி.. இந்த கையைப் பிடிக்கிற ரைட்சை இன்னும் நான் உங்களுக்கு கொடுக்கல…” என கோபத்தில் கண்கள் கலங்க கூற, 

“யாழி!” என்ற வெற்றியின் குரலில் காரின் அருகே நின்றிருந்த பாண்டியன் அவசரமாக ஓடி வந்தார். யாழினியின் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது.

“வெற்றி என்னாச்சு? ஏன் பாப்பா அழுகுது?” என்ற பாண்டியனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் யாழினியை முறைத்தவன்,

“நீங்க கிளம்புங்க பாண்டியன் சார்” என்றான் கோபமாக.

“வெற்றி நீ இவ்ளோ கோபப்படுறது நல்லதில்ல. பொறுமையா சொன்னா பாப்பாவுக்கு புரியும். முதல்ல இப்படி பேசுறதை ரெண்டு பேரும் நிறுத்துங்க..” என்ற பாண்டியனின் பேச்சில் அவனைத் தாண்டி காரின் பின் இருக்கையில் சென்று அமர்ந்தாள் பெண்.

“வெற்றி நான்தான் பொறுமையா பேசுன்னு சொன்னேன்ல, ஏன் இவ்ளோ கோபம். ஏற்கனவே பாப்பா வருத்தத்துல இருக்கு..” என குற்றம் சாட்டும் பார்வையில் கூற, 

“ம்ச்.” என சலித்துவிட்டு, அவனும் சென்று அவளுக்கு அடுத்தப்பக்கம் அமர்ந்தான்.

இருவரையும் கவலையாக பார்த்தபடியே சென்று பாண்டியன் காரை எடுத்தார்.

“யார் அந்த விவேக்..” என இறுக்கமாக வந்து விழுந்தது வெற்றியின் குரல்.

“அங்கேயே சொன்னேனே, என்னோட கொலிக்..” என்றாள் யாழினியும் எரிச்சலாக.

“ஷட்டப் யாழி.. இப்படி எடுத்தெரிஞ்சு பேசுறதை முதல்ல நிறுத்து. எஸ்… என் மேலத்தான் தப்பு.. எல்லா தப்பும் என் மேலதான்.. இப்போ நான் என்ன செய்யனும்..”

“எதுக்கு இப்போ கத்துறீங்க? உங்களுக்கு விர்ப்பம் இருந்தா பேசுவீங்க? இல்லைன்னா என்னைப்பத்தி யோசிக்ககூட மாட்டீங்க. நான்னு வந்துட்டா உங்களுக்கு ரெண்டாம் பட்சம்தானே.. என்னோட ஃபீலிங்க்சும் புரியாது, என் கோபமும் உங்களுக்குப் புரியாது.. நான் தான் இங்க தப்பு.. அப்படித்தான் எல்லோரும் சொல்றாங்க. அதனால உங்களுக்கு என்ன பிரச்சினை. உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. என்னைப்பத்தி யார் என்ன சொன்னாலும், பேசினாலும் உங்களுக்கு அது தேவையே இல்லாத ஆணி. அதனலாதான் நான் தேடும் போது, எனக்குத் தேவைப்படும் போது நீங்க வரல. என் பக்கத்துல இல்ல..” என ஆங்காரமாக கத்தியவள் முகத்தை மூடிக்கொண்டு அழ, சட்டென வண்டியை  ஓரம் கட்டி நிறுத்திய பாண்டியன், வேகமாக வெளியேறிவிட்டார்.

ஆனால் வெற்றியோ யாழினியின் பேச்சில் அதிர்ந்து, அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையின் இருந்தது என்ன என்று யாராலும் கணிக்க முடியவில்லை.

You may also like

Leave a Comment

About Me

Featured