Home Love - Family - Romanceமுத்தமழை – 45

முத்தமழை – 45

by Vathani S

முத்தமழை – 45

தன்னுடைய பைக்கை எடுக்கலாம் என்றால், அப்போதுதான் உள்ளே நுழைந்ததுமே ஜோன்ஸ் சாவியை வாங்கிச் சென்றது நினைவில் வந்தது வெற்றிக்கு.

‘காரை எடுத்துட்டு போகலாம்’ என தந்தையிடம் சாவியை வாங்க நகர, “வாங்க வெற்றி.. நான் உங்களை ட்ராப் பண்றேன்..” என பாண்டியன் வந்து நிற்கவும் வெற்றியின் முகம் யோசனையானது.

அவர் முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

ஆனால் அவர் எதோ தன்னிடம் தனியாக பேச நினைக்கிறார் என்று மட்டும் புரிந்தது.

ஒன்றும் சொல்லாமல் காரின் அடுத்தப்பக்கம் சென்று அமர்ந்தான்.

“ஆல்ரெடி டயரடா இருப்பீங்கல்ல வெற்றி.. நைட் மறுபடியும் ட்ராவல் பண்ணனும். சோ இந்த கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க..”

“ஹ்ம்ம் தேங்க்ஸ் பாண்டியன் சார்..” என சீட்டில் நன்றாக சாய்ந்து கண்களை மூடிக்கொள்ள, பாண்டியனிடம் அமைதி.

அவர் பேசுவார் என எதிர்பார்த்த வெற்றி, பாண்டியனின் அமைதியில் “என்கிட்ட என்ன சொல்லனும் சார்..” என நிதானமாக கேட்க, 

“உங்ககிட்ட சொல்லனும்னு எதுவும் என்கிட்ட இல்ல வெற்றி, ஆனா பேசனும். சொல்றதும், பேசுறதும் ஒன்னு இல்லை..” என்றார் பாண்டியனும் நிதானமாக.

பாண்டியனின் நிதானமான பேச்சில்  வெற்றிக்கு தன்மேல சற்று கோபம் கூட வந்தது.

‘அவர் ஒரு டிடெக்டிவ், அவர் எத்தனையோ கேசை ரொம்பவே சாதாரணமா டீல் பண்ணிருப்பார், நீ இப்போதான் ஐபிஎஸ் ஆகிருக்க, ரொம்ப சீன் போடாம, அவர் என்ன பேச வந்தாருனு கவனி’ என மண்டையில் தட்டியபடி அமைதியாக அவரைப் பார்த்தான்.

“வெற்றி… யாழினியை எனக்கு ஐஞ்சு வருசமா தெரியும்.” என்றதுமே வெற்றியின் முகத்தில் அதிர்ச்சி, குழப்பம் என்ற உணர்வுகள் மாறி மாறி வது போனது.

“யெஸ் வெற்றி… என்னதான் லிங்கா சார் உங்களை நம்பி யாழினியை அனுப்பினாலும், கர்ணன் சாருக்கு கொஞ்சம் பயம் இருந்தது. அவங்க சென்னைக்கு படிக்க போனதுமே கர்ணன் சார் எங்க ஏஜென்சில கேட்டு, அவங்களுக்கு செகியூரிடி அரேஞ்ச் பண்ணார். அது யாழினிக்கு கூட இப்போ வரைக்கும் தெரியாது. உங்க கூட பழகுறதைப்பத்தி கர்ணன் சார்கிட்ட நான் சொன்னதும், உங்களை அப்பவே தூக்கிட சொன்னார். ஆனா நான்தான் கொஞ்சம் வெய்ட் பண்ணலாம், நல்ல பையன்னு சொன்னேன். அப்புறம் உங்க ஃபேமிலி டீடைல்ஸ், உங்க ஆக்டிவிடிஸ் எல்லாம் ரெகுலரா சாருக்கு அனுப்புவேன். உங்களுக்கு கர்ணன் சார் ஓக்கே சொல்ல சிக்ஸ் மந்த்ஸ் ஆச்சு. அதுக்குப் பிறகுதான் யாழினியை உங்க கூட வெளிய போகவே அலோவ் பண்ணார்..”

“அப்போ யாழினிக்கு முன்னாடியே..”

“நோ..நோ.. யாழினிக்கு எதுவும் தெரியாது. ஆனா எங்க போகனும்னாலும் கர்ணன் சார்கிட்ட பெர்மிசன் வாங்காம யாழினி போனதில்ல. சோ..”

“ம்ம் புரியுது..”

“எஸ்.. வெற்றி.. இப்போ உங்க கோபம் நியாயமானது தான். அன்னைக்கு உங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும் நடந்ததும் தப்புதான். ஆனா அதுக்காக நீங்க யாழினியை ஹர்ட் பண்றது எந்த வகையில சரி. இத்தனைக்கும் நடந்த பிரச்சினையில அவங்க எங்கேயும் இல்ல.. சொல்ல போனா உங்களுக்காக அவங்கதான் எல்லார்கிட்டயும் ஃபைட் பண்றாங்க. நீங்க விட்டுட்டு போயிட்டீங்க..”

“அது அப்படியில்ல பாண்டியன் சார்.. அங்க இருந்தா என்னோட கோபம் அதிகமாகியிருக்கும், அந்த கோபத்தையெல்லாம் யாழிக்கிட்டதான் காட்டிருப்பேன். அவளுக்கும் எனக்கும் பிரச்சினை வந்துருக்கும். இதைத்தான அவங்க அம்மாவும் அக்காவும் எதிர்பார்த்தாங்க. அதை எப்படி செய்ய முடியும்..” 

“ஆனா இதெல்லாம் நீங்க சொல்லாம யாழினிக்கு எப்படி தெரியும். அவங்களுக்கு இருக்குற ஸ்ட்ரெசுக்கு கண்டிப்பா புரிஞ்சிருக்காது..”

“ஹ்ம்ம்..” என்று மூச்சை இழுத்து விட்டவன் “யாழினியோட அம்மா எங்க பேரன்ஸை பேசினதை மறக்கவே முடியல..” என்றான் வெற்றி.

“அப்போ உங்க முடிவு என்ன வெற்றி.?”

“முடிவுன்னா என்ன சார்? எனக்கு புரியல?”

“இல்ல யாழினியை நீங்க என்ன செய்றதா இருக்கீங்க? அவங்க அம்மாவை விட்டு உங்களோட உறவு பலப்படாது. நல்லவங்களோ கெட்டவங்களோ யாழினிக்கு அம்மா முக்கியம். அவங்களை விட்டுட்டு வா ன்னு எல்லாம் சொல்ல முடியாது. யாழினியும் வர மாட்டாங்க. கர்ணன் சாரும் அனுப்ப மாட்டார்.” இப்போது பாண்டியனின் குரல் உறுதியாக வந்தது.

வெற்றிக்கு சுர்ரென்று கோபம் வந்தது.. “ஆனா என்னால அவங்களை ஏத்துக்க முடியல சார்.. எனக்கும் கொஞ்சம் டைம் வேனும்.. அதனால..” என எரிச்சலாக கூறிய வெற்றி பாண்டியனின் பார்வையில் அப்படியே நிறுத்திவிட்டு வேறு பக்கம் பார்வையை பதித்தான்.

“அதுவும் சரிதான் வெற்றி.. கண்டிப்பா உங்களுக்கு டைம் வேணும் தான். ரெண்டு வருசம் உங்களுக்கு கர்ணன் சார் டைம் கொடுத்துருக்கார், அதுக்குள்ள அவங்க ஃபேமிலியை அக்செப்ட் பண்ண முயற்சி செய்ங்க.”

“ரெண்டு வருசமா? என்ன சொல்றீங்க சார்? எங்களுக்கு எதுக்கு டைம்?” என வெற்றி பதட்டமாக கேட்க,

“ஹ்ம்ம் ஆமா வெற்றி.. யாழினியை கர்ணன் சார் ஆஸ்திரேலியா அனுப்புறார். இங்க இருந்தா தேவையில்லாத பிரச்சினை. அவங்க மென்டல் ஹெல்தும் ஸ்பாயில் ஆகுது, அவங்க வீட்டுலயும் சும்மா இருக்கமாட்டங்க. ஏற்கனவே யாழினியை எதிரி மாதிரி தான் பார்க்குறாங்க. இப்போ வல்லபி மேடமும் அங்க இல்ல.. சோ யாழினி அங்க இருந்தா அவங்களை பேசியே பைத்தியமாக்கிருவாங்க, இல்ல அவங்க வழிக்கு கொண்டு வந்துருவாங்க..”

“எல்லாம் சரி தான் சார்.. அதுக்கு ஏன் ஆஸ்திரேலியா? இங்கேயே..” என முடிக்கும் முன்னே,

“நோ வெற்றி… சார் ஆல்ரெடி எல்லாம் ப்ளான் பண்னிட்டார். ஆளிஸ் மேம் தான் அங்க யாழினி கூட இருக்கப் போறாங்க. அவங்க பத்திரமா பார்த்துப்பாங்க..”

“என்ன ஆளிஸா..?” என்ற வெற்றியின் முகத்தில் எரிச்சலும், கோபமும் போட்டிப் போட்டுக்கொண்டு வர, அவன் முகம் கடுமையாக மாறியது.

______ 

இங்கு “அத்த.. நானும் அம்மாவும் கோவிலுக்கு போறோம், அதனால என்னை அங்க வர சொன்னாங்க…” என்றபடியே வெளியில் நடக்க,

“வனியும் வரால்ல சுமி..” என்ற மாமியாரை திரும்பி பார்த்த சுமித்ரா,

“நானும் எங்க அம்மாவும் மட்டும்தான் போறோம் அத்த.. அண்ணி வராங்களான்னு தெரியல, நானும் கேட்கல..”

“என்ன சுமி? பேச்செல்லாம் ரொம்ப திமிரா வந்து விழுது. எல்லாம் அவ சொல்லிக் கொடுத்த பாடமா?”

“நான் என்ன சின்ன பொண்ணா? எனக்கு எதுவும் தெரியாதா?”

“இத்தனை நாள் அப்படித்தான இருந்த? அப்போ நான் என்ன நினைக்கட்டும்?”

“ஓ.. உங்களுக்கு மரியாதை கொடுத்து அமைதியா போனா, என்னை ஒன்னும் தெரியாத தத்தின்னே நினைச்சுப்பீங்களா? அப்படியே நினைச்சுக்கோங்க..” என இருவரும் மாறி மாறி வாய் பேசிக்கொண்டிருக்கும் போது,

“ரொம்ப நல்லா இருக்கு.. நீங்க இப்படி சண்டை போடனும்னு தான் வல்லபி நினைச்சா.. அதுதான் இப்போ நடந்துட்டு இருக்கு..” என சுந்தர் எரிச்சலாக கூற, இருவரும் கோபமாக அவனைப் பார்த்தனர்.

“என்ன லூசு மாதிரி பேசுறீங்க? இதுல வல்லி எங்க வந்தா?” என சுமித்ரா கணவனிடம் மல்லுக்கு நிற்க,

“இப்படியே பேசிட்டு இருந்தா, உன்னை நீ மட்டும் தான் அறிவாளின்னு சொல்லிக்க முடியும்..” என மேலும் எரிச்சலாக,

“ம்ச்.. தெளிவா சொன்னா சொல்லுங்க, இல்லைன்னா கிளம்புங்க?” என்ற மனைவியை முறைத்தவன், “ம்மா அவளுக்குத்தான் யோசிக்கத் தெரியல.. உங்களுக்கு என்னாச்சு. பொறுமையா யோசிச்சிருக்கலாம்ல. அப்படி யோசிச்சிருந்தா யாழினியை ஈசியா நம்ம வழிக்கு கொண்டு வந்துருக்கலாம். இப்போ நாம என்ன சொன்னாலும் அவ நம்பமாட்டா..” என்றான் கோபமாக.

“எல்லாம் உங்க தங்கச்சியோட திருவிளையாடல் தான். சும்மா இருக்காம யாழினியை தேவையில்லாம பேசி சீண்டிவிட்டாச்சு. யாழி தப்பே செஞ்சிருந்தாலும் அந்த வார்த்தையை ஒரு அக்கா எப்படி சொல்லலாம். யாழினியா இருக்கப்போய் அமைதியா போய்ட்டா, நானா இருந்திருந்தா உங்க தங்கச்சி கன்னம் பழுத்துருக்கும்..” என்றதும் ராஜலட்சுமியின் முகம் கேள்வியாக மகனைப் பார்த்தது.. 

சுந்தரும் அன்று வனிதா யாழினியிடம் பேசியதையும், அதற்கு யாழினியின் பதிலையும் கூற, மகளை நினைத்து அத்தனை கோபம் வந்தது அவருக்கு. 

“இவளை வச்சு என்ன தான் செய்றது?” என எரிச்சலாக கேட்க,

“ஹ்ம்ம் கூப்பிட்டு வந்து ரெண்டு பேரும் சேர்ந்து அப்பளம் சுடுங்க..” என சுமித்ரா கடுப்பாக கூற, ராஜலட்சுமி மருமகளை முறைத்தார்.

“ம்மா நல்லா கேட்டுக்கோங்க, நீங்க ரெண்டு பேரும் ஒன்னா இருந்தா தான் அந்த வல்லியை வீட்டை விட்டு அனுப்ப முடியும்..”

“அவளை என்னமும் பண்ணட்டும், ஆங்கா அந்த குழந்தையை அழிச்சிடுவேனு சொன்னாங்க.. அதுதான் எனக்கு கோபம்..”  என வேகமாக சொன்னாள் சுமித்ரா.

“ஆமா அதுங்களே இந்த வீட்டுக்கு தேவையில்லாத ஜென்மங்கதான். அதுக்கு பொறக்குறதும் அந்த லிஸ்ட்ல தானே போகும்..” என்ற ராஜலட்சுமி,

“இங்க பார் சுமி.. நீ என்னை எவ்ளோ மோசமான வில்லியா நினைக்கனுமோ நினைச்சுக்கோ, நான் இப்படித்தான். என் பிள்ளைங்களுக்கு தான் எல்லாம் கிடைக்கனும். கட்டிட்டு வந்த ரெண்டே வருசத்துல செத்து போயிட்டா என் அக்கா. அப்போ இருந்து இப்போ வரைக்கும் இந்த வீட்டுக்காக நான் நிறைய விட்டுக் கொடுத்துருக்கேன். அதெல்லாம் எதுக்காக? என் பிள்ளைங்க நல்லா இருக்கனும்.. என் பிள்ளைங்க மட்டும் தான் நல்லா இருக்கனும்… அதுக்காக மட்டும் தான் நான் இவ்வளவும் பண்றேன்..”

“வரவே மாட்டானு நினைச்ச ஒருத்தன் வந்தான். எனக்கு பிடிக்கவே பிடிக்காத ஒருத்தியை இந்த வீட்டுக்கு சட்டமா கொண்டு வந்தான். அதுங்களுக்கு ஒரு கருமமும் பிறக்காதுனு நினைச்சேன், இன்னைக்கு அதையும் வயித்துல சுமந்துட்டு, நான்தான் இந்த வீட்டுக்கு மூத்த மருமகன்னு ஜம்பமா சொல்லிட்டு திரியிறா.. இதெல்லாம் உனக்கு புரியுதா இல்லையா? அவளைப் பார்த்து கூட நீ திருந்தாமாட்டியா?” என சட்டென ராஜலட்சுமி ஆங்காரமாக கத்த,

“ம்மா.. நீங்க சொன்ன மாதிரி கொஞ்ச நாள் அமைதியாதான் இருப்போம். அவன் வந்ததுல இருந்து நாம குடைச்சல் கொடுத்துட்டே இருக்கோம், அதுவே நம்ம மேல கோபத்தையும் வெறுப்பையும் வர வைக்கும். அது நமக்கு சரியாகாது.. இப்போ வீட்டுல நீங்க சைலன்டா தான் இருக்கனும், அவனை வெளிய வச்சு நான் பார்த்துக்கிறேன்.”

“இந்த தொழிலை இத்தனை வருசம் கட்டிக் காப்பத்தினது நானு, நேத்து வந்த அவனுக்கு மொத்தத்தையும் வாரி கொடுப்பாரா அவர். அப்படி மட்டும் நடந்தா அப்பான்னு கூட நான் பார்க்கமாட்டேன்..” என சுந்தரின் இந்த கோபத்தை இதுவரை யாருமே அந்த வீட்டில் பார்த்ததில்லை.

மாமியாரும் மருமகளும் சுந்தரை அதிர்ச்சி விலகாமல் பார்க்க, சுந்தரின் விழிகளோ கர்ணனை மொத்தமாய் முடித்துவிடும் வெறியில் கனன்று கொண்டிருந்தது.

You may also like

1 comment

M. Sarathi Rio July 8, 2026 - 10:18 pm

அட ராமா..! ஒரு வில்லன் இருந்தாலே ரொம்ப குஷ்டம், இங்க ஒட்டுமொத்த குடும்பமே இல்ல வில்லங்கத்தனமா
இருக்குது.

☺☺☺
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured