Home Love - Family - Romanceகாதல் கசக்குதைய்யா – 37

காதல் கசக்குதைய்யா – 37

by Vathani S

காதல் – 37 

இங்கு வீட்டிற்கு வந்தவர்களை உடனே சாந்தி முகூர்த்தத்திற்கு ரெடி செய்தனர். தாரணிக்கு மகள் மேல் இருந்து கண்களை எங்கும் அகற்ற முடியவில்லை. பெற்றத் தாய் கண்தான் பேய்க்கண் என்பார்கள் பெரியவர்கள். அதுபோலவே அவர் கண்களே மகளுக்கு பட்டுவிடும் போல. அத்தனை அழகாக இருந்தாள் நிகிதா.

இருவரையும் கிளப்பி பெரியவர்களிடம் அழைத்துச் செல்ல, தாரணியைப் பார்த்த குருவம்மா வேகமாக உப்பும் மிளகாயும் எடுத்து வந்து இருவருக்கும் சுற்றிவிட்டு “ரம்யா இதக் கொண்டு போய் கொல்லல எரியிற அடுப்புல போட்டுட்டு வா.. இன்னைக்கு ஊருல இருக்குற அத்தன கொல்லிக்கண்ணும் எம்பேத்திங்க மேலத்தான் இருந்திருக்கும்..” என்றவர், இருவரையும் ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைத்தார்.

அண்ணி முறையில் இருந்த பெண் ஒருவர் முதலில் ஆருவை அழைக்க, குருவம்மாவோ “நிக்கிய முதல்ல அழைச்சிட்டுப் போம்மா., இவக்கிட்ட கொஞ்சம் பேசனும்..” என நிறுத்தி வைக்க, “சரிங்க அப்பத்தா..” என்றவள் நிக்கியுடன் வெளியேற, தன்னை முறைத்துக் கொண்டே நின்ற ஆருவைப் பார்த்து “இப்படி உக்காரு உங்கூட பேசனும்..” என அழுத்தமாக சொல்ல, அந்த அழுத்தத்தில் வேறுவழியில்லாமல் பட்டென்று உட்கார்ந்து “சொல்லுங்க..” என்றாள் விரைப்பாக.

“உனக்கு என்ன பிரச்சினை.. ஏன் இப்படி இருக்க. உனக்குப் பிடிச்சுத்தானே ஆதியைக் கட்டின. இப்போ ஏன்..” என கேட்க,

“ம்ச்..” என சலிப்பாகத் தலையசைத்தவளை முறைத்தார் ரம்யா. “ஆரு ஒழுங்கா பதில் சொல்லு அப்பத்தாவுக்கு..” என அதட்டவும் செய்தார்.

“என்ன பதில் சொல்லனும் இவங்களுக்கு. எங்கிட்ட கேட்ட இதே கேள்வியை அவங்க பேரன்கிட்டயும் அவங்களைக் கேட்க சொல்லுங்க. அதைவிட்டுட்டு எப்போ பாரு என்னையவே சொன்னா..” என ஆரு கடுப்படிக்க,

“என்னாச்சு ஆரும்மா.. ஆதி உன்னை எதுவும், இல்ல இந்த கல்யாணத்தை எதுவும் சொல்லிட்டானா.?” எனப் பயந்து போய் கேட்டார் பவித்ரா. அவருக்குத்தான் தன் மகனைத் தெரியுமே. காதல் என்றால் காத தூரம் ஓடுவான் என்று.

“ம்ச்..” அதற்கும் ஒரு சலிப்புத்தான் அவளிடம். அந்த சலிப்பே அதுதான் உண்மை என்பதைக் காட்டிக் கொடுக்க,  பெண்கள் நால்வருக்கும் ஒருவித பயம் வந்துவிட்டது.

என்ன செய்ய என மூவரும் (பவி, ரம்யா, தாரணி) குருவம்மாவைப் பார்க்க, அவருக்கும் அதே யோசனைதான்.

“சரி இப்போ என்ன செய்யலாம்னு இருக்க, அவனைப்பத்தி தெரிஞ்சிதானே கல்யாணத்துக்கு சரி சொன்ன. இப்போ வந்து சலிச்சா ஆச்சா. அவன்கூடத்தான் உன் வாழ்க்கை. அதை யாராலயும் மாத்த முடியாது. அதுக்கு என்ன செய்யனுமோ அதை நீதான் செய்யனும். அவனை உன் வழிக்கு கொண்டு வருவியோ, அவன் வழிக்கு நீ போவியோ எதுவும் எங்களுக்குத் தெரியாது. ஆனா ஊரே மெச்சுற அளவுக்கு வாழ்ந்து காட்டனும்..” என முடித்துவிட, அமைதியாக அமர்ந்திருந்தாள் ஆரணி.

“ஆரும்மா.. ஆதி சீக்கிரம் எல்லாத்தையும் புரிஞ்சிக்குவான்டா. அந்த நம்பிக்கையை மட்டும் வை. உன்னைவிட அவன் உன்னை அதிகமா நேசிச்சு ஒரு வாழ்க்கையை உனக்கு கொடுப்பான். அதுக்கு முதல்ல நீ அவனை நம்பனும்..” என பவித்ராவும் தன் மகனைப் பற்றி சொல்ல, அதற்கும் அமைதிதான் அவளிடம்.

அடுத்து “ஆரும்மா..” எனத் தாரணி ஆரம்பிக்க, “வேண்டாம் நிக்கிம்மா.. அவளுக்கு எல்லாம் தெரியும்.  அவளே எல்லாம் சரி செய்யட்டும். எனக்கு இதுதான் வேனும்னு அடம்பிடிச்சா மட்டும் பத்தாது. அது கிடைச்சதும் பாதுகாக்கவும் தெரியனும். அவ வாழ்க்கையை வாழ்ந்து ஜெயிச்சுக் காட்டட்டும்” என ரம்யா மகளை அழுத்தமாகப் பார்த்துப் பேச, அப்போதும் ஆரணியிடம் அமைதிதான்.

ஆனால் யோசிக்கிறாள் என்று மட்டும் எல்லோருக்கும் புரிந்தது. அதுவே அனைத்தையும் சரி செய்யும் என்ற நம்பிக்கையைக் கொடுக்க மற்றவர்களும் அமைதியாகினர். 

அதற்குள் நிக்கியை அறையில் விட்டுவிட்டு அண்ணி முறைப்பெண் வந்து ஆருவை அழைத்துச் சென்றாள்.

“சரி.. சரி எல்லாரும் போய் தூங்குங்க. காலைல எல்லாரும் கோவிலுக்குப் போகனும். பொங்கல் வைக்க எல்லாம் எடுத்து வச்சிட்டேன். அதை மட்டும் மறக்காம பார்த்துடுங்க..” என்ற குருவம்மாவும் நகர்ந்துவிட, பெண்கள் மூவரும் அப்படியே அவரவர் அறைக்கு நகர்ந்தனர்.

இங்கு அறைக்குள் வந்த நிக்கியை ஆர்வமாகப் பார்த்திருந்தான் ஆதன். அவந்து பார்வையை உணர்ந்தவள் உடல் சூடாக, அங்கிருந்த மேஜையின் மேல் பால் சொம்பை வைத்துவிட்டு அங்கேயேத் தயங்கி நின்றாள்.

அவள் உடலில் ஏற்பட்ட சிறுநடுக்கமும், முகத்தில் தெரிந்த பதட்டமும் ஆதனுக்கு சிரிப்பை வரவைத்தது. திருமணம் முடிந்த இத்தனை நாட்களில் இருவரும் ஒரே அறையில் தான் இருக்கின்றனர். அனைப்பும் முத்தமும் அவர்களுக்குள் வழக்கமாக நடந்து கொண்டுதானிருந்தது. ஆனால் இன்று என்ன நடந்துவிடும் என இவ்வளவு பதட்டம் இவளுக்கு.

சிறு புன்னகையுடன் அவளை நோக்கி கையை நீட்டியவன், வா என தலையசைக்க, “ம்ம்..” என்றவளும் அவனருகில் அமர,

“என்னாச்சு..” என மெதுவாக கைகளை வருட,

“ம்ம்.. இல்ல ஒன்னுமில்ல.. அது சும்மா..” எனத் திணறியவளின் முகத்தை நிமிர்த்தி, “எங்கிட்ட என்ன பயம், இந்த ரூமும் நானும் உனக்குப் பழக்கம்தானே..” என்றவனின் குரல் குழைந்து அவளுக்கு கிறக்கமாக இறங்கியது.

“ம்ம்.. ஆனா இப்போ எல்லாம் புதுசா..” என்றவள் அவன் மேல் சாய்ந்துகொள்ள, 

“ஹ்ம்ம்ம் எதுவும் புதுசு இல்ல கண்ணம்மா.. உனக்கு பயமா இருக்கா என்ன..” என்றவன் அவளை அப்படியே அனைத்துக்கொண்டு, தோளை வருடி, காதோரம் மூக்கு நுணி உரசப் பேச அதில் சிலிர்த்தவள் மேலும் அவனுள் ஒடுங்க, அவனும் இறுக்க என அங்கே சத்தமில்லாமல் ஒரு மொட்டவிழ ஆரம்பித்தது.

இங்கு அறைக்குள் நுழைந்த ஆரணிக்கோ ஏதோ ஒரு தடுமாற்றம், எதையும் பட்டென்று செய்து விடுபவளுக்கு இந்த தடுமாற்றம் புதிது. அதோடு கணவனைப் பற்றிய மற்ற குழப்பங்களும். இதையெல்லாம் மண்டையில் ஏற்றிக்கொண்டு எப்படி அவனிடம் சகஜமாகப் பேச என்ற யோசனையோடு, கதவை தாழிட வேண்டும் என்றுகூடத் தோன்றாமல் பால் சொம்போடு உள்ளே வந்தாள்.

மனைவியின் முகத்தில் தெரிந்த தடுமாற்றத்தையும், யோசனையையும் பார்த்தவன் “என்னாச்சு உன் ஃபேஸ் இவ்ளோ டல்லடிக்குது.” என, “ம்ச்..” என்றவள் சொம்பை டேபிளில் வைத்துவிட்டு, அறையைச் சுற்றிலும் பார்த்தாள். 

“இந்த புதுப் பொண்ணுக்கே உரிய அச்சம் மடம் நாணம் எல்லாம் உனக்கு வராதா.” என்றான் சிறு சிரிப்புடன் அவளை சகஜமாக்கும் பொருட்டு.

“எங்கிட்ட ஸ்டாக் இல்ல, எந்தக் கடைல விக்கிதுன்னு சொன்னா நாளைக்கு வாங்கி வச்சுக்கிறேன்..” என்றாள் அவளும்.

“அதுசரி.. நீதான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டியே, நான்தான் யோசிக்காம கேட்டுட்டேன்..” என்றபடியே ஒரு கொட்டாவியை விட,

“இப்போ என்ன வேனும் உங்களுக்கு, நானே எரிச்சல்ல இருக்கேன். நீங்களும் கூடக் கொஞ்சம் எரிச்சல் பண்ணாதீங்க.” என்றவள் பார்வை மீண்டும் சலிப்புடன் அறையை சுற்றியது.

“என்ன தேடுற என்னாச்சு.. உன் திங்க்ஸ் எதுவும் காணோமா.. சொன்னாதானே தெரியும்..” என்றான் அவளது செயல்களை அவதானித்தபடி.

“இங்க இருந்த என்னோட சோஃபா, சேர் எதையும் காணோம்..” என்றாள் எரிச்சல் கொஞ்சமும் குறையாமல்.

வெளியில் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் இருவருக்குள்ளும் ஏதோ ஒன்று சரியில்லை என உணர்ந்த குருவம்மாதான், அறைக்குள் இருந்த சோஃபா மற்றும் டேபிள் சேர் என்று எல்லாவற்றையும் அகற்றியிருந்தார். அதை ஆதித்யனும் உணர்ந்திருந்தான் தான், இதற்காகப் போய் பெரியவரிடம் வாதாட வேண்டுமா என்று விட்டுவிட்டான்.

அதை வெளிக்காட்டாமல் “நானும் உள்ள வந்ததும் ஷாக்கானேன் தான். உன் ரூமுல ஒன்னு கூட இல்லையே, என் மாமனார் அவ்ளோ கஞ்சத்தனம் உள்ளவரான்னு கூட நினைச்சேன். ஆனால் இப்போதான் புரியுது.” என்றவன் அவளது முகத்தில் கோபத்தின் சிவப்பு ஏறுவதைக் கண்டு அத்தோடு பேச்சை நிறுத்திக் கொள்ள,

“என்ன எங்கப்பா கஞ்சமா? உங்க பொண்டாட்டிக்கு நீங்க வாங்கி கொடுப்பீங்கன்னு நினைச்சிருப்பார். இப்ப அது பிரச்சினை இல்லை. உங்களுக்கு எதுவோ புரிஞ்சதுன்னு சொன்னீங்களே, அது என்ன?” இடுப்பில் கைவைத்து முறைத்தபடி கேட்க, 

மனைவியின் கோபத்தில் வசதியாக அமர்ந்து “நமக்கு டிஸ்டர்பா இருக்கக்கூடாதுன்னு நினைச்சிருக்கலாம், இல்லை தேவைப்படாதுன்னு நினைச்சு எடுத்துருக்கலாம், இப்போ அதுதான் பிரச்சினையா.?” என ரசனையாக பேச்சை ஆரம்பித்தான். 

ஆதித்யனின் ரசனை அவளை எதுவோ செய்ய, “கண்டிப்பா அதுவும் ஒரு பிரச்சினை தான்..” என்றவளுக்கு கோபம் மட்டும் குறையவில்லை. 

“மேடம் எதுக்கு இவ்வளவு கோபம். ஏன்னு கேட்டா சொல்லவும் மாட்டேங்குறீங்க, உங்க மூளைக்குள்ளயும், மனசுக்குள்ளயும் புகுந்து பார்த்துட்டு வந்து சால்வ் பன்ற அளவுக்கு இன்னும் எனக்கு திறமை வளரல போல. சோ கொஞ்சமே கொஞ்சம் என்மேலப் பரிதாபப்பட்டு என்ன கோபம்னு சொல்லுங்க..” என பாவமாய், பரிதாபமாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாலும் கண்கள் சிரிப்பில் துடித்தது.

அவன் பேச்சில் மனம் சற்று இலகுவாகி எரிச்சல் கூட குறைந்தது, அதில் அவளுக்கும் சிரிப்பு வரும் போல இருக்க, அதை மறைத்துக் கொண்டே “ம்ம்ம்.. சொல்லு சொல்லுன்னா என்ன சொல்ல, என்னமோ நான் உங்களை கொடுமைப்படுத்தப் போற மாதிரி, அதை செய்யாத இதை செய்யாத, அப்படி இப்படி இருன்னு அட்வைஸ் பண்றேன்னு கடுப்பைக் கிளப்பி அனுப்பினா கோபம் தானே வரும்..” என்றாள். 

“பொதுவா இதெல்லாம் ஃபர்ஸ்ட் நைட் ரூம்குள்ள போற பொண்ணுக்கிட்ட இப்படி சொல்றது தானே இதுக்கு ஏன் இவ்வளவு டென்சன். கூல் கூல்..” என அவள் கையைப் பிடித்து கட்டிலில் தனக்கு அருகே அமர வைத்தான்.

“பொதுவா சொல்றது தான். ஆனா இங்கதான் ஒன்னுமே நடக்காதே அப்புறம் அதைக் கேட்டா டென்சன் ஏறாதா.” அவன் கையைப் பிடித்ததில் இப்போது கோபம் கொஞ்சம் குறைந்திருந்தது அம்மனிக்கு.

“என்ன ஒன்னும் நடக்காதா.? ஏன் ஏன் அப்படி. அப்போ என் கன்னி தோசம் இன்னைக்கு கழிய வாய்ப்பில்லையா.?” என அதிர்ச்சியாகக் கேட்க

“அது எனக்கெப்படி தெரியும், தலீவர் பெர்ஃபார்மன்ஸ் பொருத்துதானே சொல்லமுடியும்..” என அவள் அவனைக் கிண்டலாகப் பேச, 

“அடிப்பாவி..” என அசந்து போனான் ஆதித்யன். அதில் ஆரணி பக்கென்று சிரித்து விட, தானும் சிரித்தவன் “இப்ப ஓக்கே வா..” எனக் கையை வருடியபடி கேட்க, 

“எஸ்.. இப்ப கூல்.. ரொம்ப டென்சன் பண்ணிட்டாங்க, ஓகே தூங்கலாம்.. எனக்கு கண்ணு சுழட்டுது..” எனக் கொட்டாவி விட, 

“எத.. தூங்க போறியா, அப்புறம் என் பெர்பாமன்ஸ் எப்படி மேடம் தெரிஞ்சிப்பீங்க..” என ஒற்றை புருவம் உயர்த்தி கண்களைச் சிமிட்ட, இப்போது அசந்து போய் விழிகளை விரிப்பது ஆரணியின் முறை.

“என்ன என்ன எதுக்கு இவ்ளோ அதிர்ச்சி.. நாம என்ன கடைசி வரைக்கும் இப்படி கையைப் பிடிச்சிக்கிட்டேவா இருக்கப் போறோம். எப்போவோ ஒருநாள் நடக்கப்போறது தானே, அது நம்ம பெரியவங்க சொல்ற இன்னைக்கு நடந்தா என்ன.? பயமா இருக்கோ..” என அவளை கூர்மையாகப் பார்க்க,

“அது அது எனக்கு என்ன பயம். இந்த ஆராவுக்கு பயம்னா என்னன்னே தெரியாது. அது உங்களுக்கும் தெரியும்ல. இது இது வந்து வேறமாதிரி எப்படி சொல்லன்னு தெரிலையே..” எனப் படபடவென ஆரம்பித்து, பாவமாகச் சொல்ல, 

“அதான ஆராவுக்கு பயமா.? அந்த பயமே பயந்து போற ஒரே ஆளு எங்க ஆராதான. அது எனக்கு நல்லாத் தெரியுமே. ஆனா இப்போ ஏன் இந்த ஆராக்குட்டி பேக் அடிக்குதுன்னு தெரியலயே” எனக் குறும்பாகச் சிரிக்க,

“நான் ஏன் பேக் அடிக்கப் போறேன், எனக்கு லவ்வே வரல, அந்த ஃபீலிங்கு எப்படி இருக்கும்னே எனக்குத் தெரியாது. என் பொண்டாட்டிக்கு நான் துரோகம் பண்ணீட்டேன்னு, என்னைக் கட்டின அப்பாவி புருசன் புலம்பினதால, அவருக்காக பாவம் பார்த்து, லுக் அவருக்காக மட்டும் தான் நான் யோசிச்சிட்டுருக்கேன்” எனக் கெத்தாக சொல்ல, 

அடிப்பாவி அப்படியே மாத்திட்டா, கில்லாடிதான். என மனைவியை மனதுக்குள் சிலாகித்தவன், “ஆஹான் அப்படியா.. நான்கூட என் பொண்டாட்டிக்கு என் மேல பயந்து வந்திருச்சோன்னு நினைச்சேன்..” எனச் சிரிக்காமல் சொல்ல,

“ஹெல்லோ, இந்த கிண்டலு, நக்கலு எல்லாம் எங்கிட்ட வேனாம். எனக்குத் தூக்கம் வருது. தூங்கனும்..” என ஸ்ட்ரிக்டாகச் சொல்ல,

“அப்போ நெசமாவே இன்னைக்கு ஒன்னும் இல்லையா..” என்ற ஆதியை ‘லூசாப்பா நீ’ என்ற பார்வையைக் கொடுக்க,

“என்ன லுக் இது, இந்த லுக் என்ன சொல்லுது..” என அவள் முகத்தை, தன் முகத்தருகில் பிடித்துக் கொண்டு கேட்க,

“ம்ம் அது நீங்கதான் சார் கண்டுபிடிக்கனும், கண்டுபிடிச்சிட்டு எழுப்புங்க, அதுவரை தூங்குறேன்..” என்றவள் அவன் எதிர்பாராத நேரம் பார்த்து, கையைத் தட்டிவிட்டு கட்டிலின் மறு ஓரம் சென்று விட்டாள். 

“ஹேய் இருடி..” என்றவன் அவளுக்குப் பின்னேத் தானும் உருண்டு சென்று முதுகோடு உரசியபடி அவளைப் பின்னிருந்து கட்டிக்கொண்டான்.

“என்ன பன்றீங்க…” என்றவள் அவன் அனைப்பில் திணற,

“ஃபர்ஸ்ட் நைட்ல எல்லாரும் என்ன பண்ணுவாங்களோ, அதைத்தான் பன்றேன்..” என அவளது வெற்று முதுகில் மீசை உரச பேச,

“கூசுது மாமா..” என நெளிந்தவள், “ஒரு மாசத்துல நான் போயிடுவேன்..” என

“ம்ம்.. அதுதான் தெரியுமே. அப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் வருவ, அதுவரைக்கும் எல்லாம் எனக்கு பொறுமை இல்ல.” என்றவன் கைகள் வெற்றிடையை அழுத்தமாக வருட,

“ம்ச்.. அது இல்ல.. மாமா ப்ளீஸ்.. ம்ம் பேபி பேபி வந்துட்டா.. அங்க கஷ்டம்..” என கணவனது செய்கையில் நெளிந்து, திணறியபடியே சொல்ல

“ம்ஹூம் அதெல்லாம் நான் பார்த்துக்குறேன், சேஃபாதான் எல்லாம், நீ என்னைப்பாரு..” என்றவனிடம், 

“நீங்க அது வாங்கிருக்கீங்களா..” என முணுமுணுத்தவளை, “அரிய கண்டுபிடிப்புத்தான், ஆனா இல்லை..” என்றவன் அவளை மொத்தமாக வாரிச் சுருட்டிக்கொண்டான் தனக்குள். அதற்குமேல் அவளாலும் மறுத்துப்பேச முடியவில்லை.

சின்ன சின்ன முத்தங்கள், அணைப்புகள் என அவ்வப்போது நடப்பதுதான், ஆனால் இன்று அவனின் முத்தத்திலும் ஒரு அழுத்தம். அனைப்பிலும் ஒரு வேகம், காதோரமாய் அவன் பேசிய பேச்சுக்கள் வேறு அவளிடம் வெட்கத்தை வானளவிற்கு கொண்டுவர, கொஞ்சம் கொஞ்சமாய் அந்த வெட்கத்தையும் அவளது ஆடையையும் துறந்து, தட்டுத்தடுமாறி தழுவித் தன் தேடலை மனைவியிடம் ஆரம்பித்திருந்தான் ஆதித்யன்.

கணவனின் வேகமும் அழுத்தமும் அவளுள் புதுவித உணர்வைக் கொடுக்க, அவனது தேடலில் தன்னைத் தொலைத்து அவனை மீட்டு என அழகாய் ஆரம்பமானது அவர்களது தாம்பத்யம்.

தங்களுக்குள் இருக்கும் குழப்பங்கள் எல்லாம் கண்டிப்பாக ஒருநாள் முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை இருவருக்கும் இருந்தது. அந்த நம்பிக்கையே இருவருக்குள்ளும், ஊடலையும் கூடலையும் உருவாக்கியது. 

You may also like

Leave a Comment

About Me

Featured